மஹா பரிநிப்பாண சூத்திரம் 6
குசிநகரம், உத்திர பிரதேசம், இந்தியா Kusinagar, Uttar Pradesh, India படம் ஆதாரம்
பகவரின் கடைசி உபதேசம்
The Blessed One's Final Exhortation
6.1. பின்னர் பகவர் போ. ஆனந்தரிடம், 'உங்களில் சிலர் எங்கள் ஆசிரியர் இப்போது எங்களோடு இல்லை. போதனைகளின் ஆசிரியரை இழந்து விட்டோம்;' என்று நினைக்கலாம். ஆனால் ஆனந்தா, அவ்வாறு நினைக்க வேண்டாம். நான் மறைந்த பின்னர் என்னால் உபதேசிக்கப்பட்ட தம்மமும், விதிக்கப்பட்ட விநயமும் உங்கள் ஆசிரியராய் இருக்க வேண்டும்.
Then the Blessed One said to Ven. Ānanda, “Now, if the thought occurs to any of you, ‘The teaching has lost its arbitrator; we are without a Teacher’ do not view it in that way. Whatever Dhamma and Vinaya I have pointed out and formulated for you, that will be your Teacher after my passing.
6.2. 'ஆனந்தா, இப்போது துறவிகள் ஒருவரை ஒருவர் நண்பரே (ஆவுஸோ) என்று அழைக்கின்றனர். நான் மறைந்த பின்னர் அவ்வாறு செய்யக் கூடாது. முதிய பிக்குவானவர், ஆனந்தா, இளைய பிக்குவை அவருடைய பெயரையும், குலப் பெயரை அல்லது நண்பன் என்ற சொல்லைச் சேர்த்து அழைக்கலாம். இளைய துறவிகள் முதிய துறவிகளைப் 'பந்தே' என்றோ 'ஆயுஸ்மான்' (ஆயஸ்மா) என்றோ அழைக்கலாம்.
“At present, the monks address one another as ‘friend,’ but after my passing they are not to address one another that way. The more senior monks are to address the newer monks by their name or clan or as ‘friend.’ The newer monks are to address the more senior monks as ‘venerable’ or ‘sir.’
6.3. 'சங்கத்துக்கு விருப்பமானால் ஆனந்தா, நான் மறைந்த பின்னர் விநயத்திலே சிறிய, முக்கியமல்லாத விதிகளை நீக்கி விடலாம். [1]
“After my passing, the Saṅgha, if it wants, may rescind the lesser and minor training rules.
6.4. நான் மறைந்த பின்னர் ஆனந்தா, சன்னர் [2] என்ற பிக்குவுக்கு பிரம்ம தண்டம் (அதாவது கடுமையான தண்டம்) விதிக்க வேண்டும்.
அன்ணலே, எந்த விதமான கடுந்தண்டனையை விதிப்பது?'
'ஆனந்தா, சன்னர் என்னதான் விரும்பியதைச் சொல்லட்டும். மற்ற துறவிகள் அவரோடு பேசவும் கூடாது, அவருக்கு ஆலோசனை கூறவும் கூடாது. அவருக்காகப் பரிந்து பேசவும் கூடாது.'
6.5. பின்னர் பகவான் துறவிகளை அழைத்து 'பிக்குகளே, புத்தரைப் பற்றியோ தம்மத்தைப் பற்றியோ சங்கத்தைப் பற்றியோ மார்க்கத்தைப் பற்றியோ, விநயத்தைப் பற்றியோ ஒரு பிக்குவிடமாவது ஐயமோ, குழப்பமோ இருக்கக் கூடும். பிக்குகளே, இப்பொழுதே கேளுங்கள். 'எங்கள் ஆசிரியருக்கு முன்னால் இருந்தோம், பகவர் முன்னிலையில் நேருக்கு நேர் இருந்த போதும் அவரைக் கேளாமல் இருந்து விட்டோம்' என்று பின்னர் உங்களை நொந்து கொள்ளக் கூடாது', என்று சொன்னார்.
இவ்வாறு பகவர் சொன்னபோது பிக்குகள் ஒன்றும் பேசாது இருந்தனர்.
இரண்டாம் முறையும், மூன்றாம் முறையும் பகவர் இவ்வாறு கேட்டார்.
மூன்றாம் முறையும் பிக்குகள் மௌனமாகவே இருந்தனர்.
பின்னர் பகவர் அவர்களிடம் 'உங்கள் ஆசிரியர் என்ற மரியாதையினால் கேள்வி கேட்க மறுக்கிறீர்கள் போலும். அப்படியானால் பிக்குகளே நண்பர் நண்பரோடு பேசலாம்' என்றார் [3]. அப்பொழுதும் பிக்குகள் ஒன்றும் பேசாதிருந்தனர்.
6.6. பின்னர் போ. ஆனந்தர் பகவரிடம் கூறினார், 'அண்ணலே, இது அற்புதம், இது ஆச்சரியம், அண்ணலே, இங்கே கூடியுள்ள பிக்குகளில் ஒருவருக்காவது, புத்தம், தம்மம், சங்கம், மார்க்கம், விநயம் என்பன பற்றி எவ்வித சந்தேகமோ விபரீதமோ கிடையாது என்பது என் நம்பிக்கை'.
'நீ நம்பிக்கையின் [4] பேரில் பேசுகிறாய், ஆனந்தா. ஆனால் இந்த விஷயத்தில் ததாகதர் அறிவார், நிச்சயமாக அறிந்துள்ளார், இங்குள்ள பிக்குகள் சங்கத்திலே புத்தம், தம்மம், சங்கம், மார்க்கம், விநயம் பற்றிச் சந்தேக விபரீதம் உள்ள ஒரு பிக்குவைக் கூடக் காணமுடியாது. இந்த ஐந்நூறு பிக்குகளுள் குறைந்த ஆன்மீக நிலையில் உள்ளவர்கூட சோதாபன்ன நிலையை (ஓடையில் நுழைந்தவர்) அடைந்துள்ளனர். அவர் கீழ் நிலையில் விழக்கூடியவரல்லர். மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு அருகதையுடையவர், அது நிச்சயம்.'
6.7. இவ்வாறு கூறிய பின் பகவர் துறவிகளிடம் 'இப்போது பிக்குகளே, உங்களுக்குக் கூறுகிறேன். காரணத்தில் தோன்றியவை எல்லாம் அழியும். உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற விழிப்புடன் இருங்கள்.'
ததாகதரின் கடைசிவார்த்தைகள் இவை.
Then Ven. Ānanda said to the Blessed One, “It’s amazing, lord. It’s astounding. I have confidence in this Saṅgha of monks that there is not even a single monk in this Saṅgha of monks who has any doubt or perplexity concerning the Buddha, Dhamma, or Saṅgha, the path or the practice.”
“You, Ānanda, speak out of confidence, while there is knowledge in the Tathāgata that there is not even a single monk in this Saṅgha of monks who has any doubt or perplexity concerning the Buddha, Dhamma, or Saṅgha, the path or the practice. Of these 500 monks, the most backward is a stream-winner, never again destined for the lower realms, certain, headed for self-awakening.”
Then the Blessed One addressed the monks, “Now, then, monks, I exhort you: All fabrications are subject to ending and decay. Reach consummation through heedfulness.” That was the Tathāgata’s last statement.
பகவர் பரிநிப்பாணம் அடைந்தது
How the Blessed One Passed into Nibbana
6.8. பின் பகவர் முதல் ஜான (ஆழ்தியான) நிலையில் நுழைந்தார். அதிலிருந்து வெளிவந்து இரண்டாம் ஜான நிலையில் நுழைந்தார். அதிலிருந்து வெளிவந்து மூன்றாம் ஜான நிலையில் நுழைந்தார... நான்காம் ஜான நிலை... அளவற்ற ஆகாசம்… அளவற்ற உணர்வு... சூன்யம்… குறிப்பும் இல்லாத குறிப்பற்ற நிலையும் அல்லாத நிலையில்... அதிலிருந்து வெளிவந்து குறிப்பும் நுகர்ச்சியும் முடிந்த நிலையில் இருந்தார்.
Then the Blessed One entered the first jhāna. Emerging from that he entered the second jhāna. Emerging from that, he entered the third… the fourth jhāna… the dimension of the infinitude of space… the dimension of the infinitude of consciousness… the dimension of nothingness… the dimension of neither perception nor non-perception. Emerging from that, he entered the cessation of perception and feeling.
பின் போ. ஆனந்தர் போ. அனுருத்தரிடம், "போ. அனுருத்தரே பகவர் முழுமையாகப் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்." [5]
"இல்லை நண்பர் ஆனந்தா. பகவர் முழுமையாக பரிநிப்பாணம் அடையவில்லை. அவர் குறிப்பும் நுகர்ச்சியும் முடிந்த நிலையில் இருக்கிறார்." [6]
Then Ven. Ānanda said to Ven. Anuruddha, “Ven. Anuruddha, the Blessed One is totally unbound.”
“No, friend Ānanda. The Blessed One isn’t totally unbound. He has entered the cessation of perception and feeling.”
6.9. பின் பகவர் குறிப்பும் நுகர்ச்சியும் முடிந்த நிலையிலிருந்து வெளிவந்து குறிப்பும் இல்லாத குறிப்பற்ற நிலையும் அல்லாத நிலையில் நுழைந்தார். அதிலிருந்து வெளிவந்து சூன்யம் என்ற நிலையில் நுழைந்தார்... அளவற்ற உணர்வு... அளவற்ற ஆகாசம்... நான்காம் ஜான நிலை... மூன்றாம்... இரண்டாம்... முதல் ஜான நிலை. முதல் ஜானத்திலிருந்து வெளிவந்து இரண்டாம் ஜான நிலையில் நுழைந்தார். அதிலிருந்து வெளிவந்து மூன்றாம் ஜான நிலையில் நுழைந்தார்... நான்காம் ஜான நிலை. நான்காம் ஜான நிலையிலிருந்து வெளிவந்து அவர் உடனே முழுமையாக வீடுபேறடைந்தார்.
Then the Blessed One, emerging from the cessation of perception and feeling, entered the dimension of neither perception nor non-perception. Emerging from that, he entered the dimension of nothingness… the dimension of the infinitude of consciousness… the dimension of the infinitude of space… the fourth jhāna… the third… the second… the first jhāna. Emerging from the first jhāna he entered the second… the third… the fourth jhāna. Emerging from the fourth jhāna, he immediately totally unbound.
உலக எதிரொலி
The World's Echo
6.10. பகவர் முழுமையாக வீடுபேறடைந்த அதே சமயம் மயிர் சிலிர்க்க வைத்த ஒரு பெரும் பூகம்பம் ஏற்பட்டது. தேவர்களின் பறையோசை (காற்றைப்) பிளந்தது (இடி முழங்கியது). [7]
பகவர் முழுமையாக வீடுபேறடைந்ததும், பரி நிப்பாணம் அடைந்ததும், பிரம்ம சஹம்பதி இந்த வார்த்தைகளைப் பா வடிவில் கூறினார்:
எல்லா உயிர்களும் - எல்லாம் - இந்த உலகில்
உடல் கூட்டினை எறிந்து விடுவார்கள்.
அது போலவே
இந்த உலகில் ஒப்புயர்வில்லா ஆசிரியர்
ததாகதர் வலிமைகளை அடைந்தவர்,
சரியாகச் சுயமாக விழிப்புற்றவர்,
அவரும் முழுமையாகப் பரிநிப்பாணம் அடைந்தார்.
When the Blessed One totally unbound, simultaneously with the total unbinding, Sahampati Brahmā uttered this verse:
All beings—all—in the world,
Will cast off the bodily heap
In the world
Where a Teacher like this
Without peer in the world
The Tathāgata, with strength attained,
The Rightly Self-Awakened One,
Has totally unbound.
பகவர் முழுமையாக வீடுபேறடைந்ததும், பரி நிப்பாணம் அடைந்ததும், சக்கர் [8] - தேவர்களின் தலைவர் - இந்த வார்த்தைகளைப் பா வடிவில் கூறினார்:
பாருங்கள், காரணங்களால் உண்டானவை எல்லாம்
எப்படி நிச்சயமற்றுள்ளன!
அவற்றின் இயற்கை: தோன்றுவதும் மறைவதும்.
அவை அழிந்து தோன்றுகின்றன.
அவற்றின் (பவத்தின்) அடக்கமே பேரின்பம்.
When the Blessed One totally unbound, simultaneously with the total unbinding,
Sakka, ruler of the gods, uttered this verse:
How inconstant are fabrications!
Their nature: to arise and pass away.
They disband as they are arising.
Their total stilling is bliss.
பகவர் முழுமையாக வீடுபேறடைந்ததும், பரி நிப்பாணம் அடைந்ததும்,
போ. அனுருத்தர் இந்த வார்த்தைகளை பா வடிவில் கூறினார்:
உள் மூச்சும் வெளி மூச்சும் நின்றுவிட்டது.
உறுதியான மனமுடயவருக்கு அப்பேர்ப்பட்டவருக்கு
அசைக்க முடியாதவர்
அமைதியை நாடுவதில் உறுதியாக இருந்தவர்:
வாழ்நாட்களை முடித்த முனி
உள்ளம் தளராமல்
வலியைப் பொறுத்துக் கொண்டார்.
நெருப்பு அணைவதுபோல
விழிப் போடிருந்ததால்
கிடைத்தது விடுதலை.
When the Blessed One totally unbound, simultaneously with the total unbinding,
Ven. Anuruddha uttered this verse:
He had no in- and -out breathing,
The firm-minded one,
The one who was such,
Imperturbable and intent on peace:
The sage completing his span.
With heart unbowed
He endured the pain.
Like a flame’s unbinding
Was the liberation of awareness.
பகவர் முழுமையாக வீடுபேறடைந்ததும், பரிநிப்பாணம் அடைந்ததும்,
போ. ஆனந்தர் இந்த வார்த்தைகளைப் பா வடிவில் கூறினார்:
கதி கலங்கியது
முடி சிலிர்த்தது
பூர்த்தியான
சரியாகச் சுய விழிப்புப் பெற்றவர்
முழுமையாக வீடுபேறடைந்ததும்.
When the Blessed One totally unbound, simultaneously with the total unbinding,
Ven. Ānanda uttered this verse:
It was awe-inspiring.
It was hair-raising
When, displaying the foremost
Accomplishment in all things,
The Rightly Self-Awakened One
Totally unbound.
பகவர் முழுமையாக வீடுபேறடைந்ததும், பரிநிப்பாணம் அடைந்ததும்
அங்கிருந்த சில துறவிகள் - அவர்கள் பாசமும், பற்றும் கொண்டவர்கள் -
தங்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு புலம்பினர். கைகளைத் தூக்கிக் கொண்டு அழுதனர். அவர்கள் கால்கள் வெட்டுண்டவர்கள் போல தரையில் விழுந்து புரண்டு கொண்டு கதறினர்,
'பகவர் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்! ததாகதர் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்! ஞானக் கண்ணுடையவர் உலகிலிருந்து மறைந்து விட்டார்!' ஆனால் பற்றிலிருந்து விடுபட்ட துறவிகள் உடன்பட்டுக் கவனத்துடன் தெளிவான மனத்துடன்: "காரணங்களால் தோன்றுபவை எல்லாம் நிலையற்றவை. வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?' என்றனர்.
When the Blessed One totally unbound, simultaneously with the total unbinding, some of the monks present who were not without passion wept, uplifting their arms. As if their feet were cut out from under them, they fell down and rolled back and forth, crying, “All too soon has the Blessed One totally unbound! All too soon has the One Well-Gone totally unbound! All too soon has the One with Eyes disappeared from the world!” But those monks who were free from passion acquiesced, mindful and alert: “Inconstant are fabrications. What else is there to expect?”
6.11. பின் போ. அனுருத்தர் துறவிகளிடம் "போதும் நண்பர்களே. வருந்தாதீர். புலம்பாதீர். பகவர் நமக்குக் கற்பித்துள்ளார் அல்லவா? நமக்குப் பிடித்த சுகம் தரும் பொருட்களெல்லாம், அப்படி அல்லாமல் ஒருநாள் மாறிப் போய்விடும். நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் என்று.
வேறு என்ன எதிர்பார்ப்பது? பிறந்தன இறக்கும், தோன்றின மறையும், உணர்ந்தன மறக்கும், அழியும் தன்மையுடையன அழியும். இவற்றைத் தடுக்க முடியாது. தேவர்கள் நண்பர்களே, குறை கூறுகின்றனர்."
[போ. ஆனந்தர்:] "ஆனால், பாந்தே, நீங்கள் அக்கறை கொள்ளும் அந்தத் தேவர்களின் நிலை எவ்வாறு உள்ளது?"
"நண்பர் ஆனந்தா, ஆகாச-தேவர்கள் - ஆனால் அவர்கள் மனம் பூமியோடு கட்டுப் பட்டுள்ளது (அதாவது பற்றுள்ளவர்கள்) - தங்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு புலம்புகின்றனர். கைகளைத் தூக்கிக் கொண்டு அழுகின்றனர். அவர்கள் கால்கள் வெட்டுண்டவர்கள் போல, தரையில் விழுந்து புரண்டு கொண்டு கதறுகின்றனர், 'அகாலமாகப் பகவர் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்! அகாலமாகத் ததாகதர் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்! அகாலமாக ஞானக் கண்ணுடையவர் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்!'
பின் பூமி-தேவர்கள் - அவர்கள் மனம் பூமியோடு கட்டுப்பட்டுள்ளது - அவர்களும் தங்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு புலம்புகின்றனர். கைகளைத் தூக்கிக் கொண்டு அழுகின்றனர். அவர்கள் கால்கள் வெட்டுண்டவர்கள் போல தரையில் விழுந்து, புரண்டு கதறுகின்றனர், 'அகாலமாகப் பகவர் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்! அகாலமாகத் ததாகதர் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்! அகாலமாக ஞானக் கண்ணுடையவர் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்!'
ஆனால் பற்றிலிருந்து விடுபட்ட தேவர்கள் [9] உடன்பட்டு பொறுமையாகக் கவனத்துடன் தெளிவான மனத்துடன்: "காரணங்களால் தோன்றுபவை எல்லாம் நிலையற்றவை. வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?' என்கின்றனர்.
6.12. பின் போ. அனுருத்தரும், போ. ஆனந்தரும் தம்மப் பேச்சில் ஈடுபட்டு இரவைக் கழித்தனர்.
பின் போ. அனுருத்தர் போ. ஆனந்தரிடம், "நண்பர் ஆனந்தரே, குசிநகரம் சென்று குசிநகர மல்லர்களிடம், 'வாசித்தர்களே, பகவர் முழுமையாகப் பரிநிப்பாணம் எய்தி விட்டார். இப்போது நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்ததைச் செய்யுங்கள்,' என்று கூறவும்
"அப்படியே செய்கிறேன், ஐயா," என்று போ. அனுருத்தரிடம் கூறிவிட்டு, போ. ஆனந்தர் அதி காலையில் தன் கீழாடையைச் சரிசெய்து தனது பிச்சா பாத்திரத்தையும், வெளியாடையையும் எடுத்துக் கொண்டு- துணைக்கு ஒருவருடன் குசிநகரம் புறப்பட்டார். அப்போது குசிநகர மல்லர்கள் இதுபற்றியே அவர்கள் வரவேற்புக் கூடத்தில் கலந்து பேசிக் கொண்டிருந்தார்கள். போ. ஆனந்தர் அந்த வரவேற்புக் கூடத்திற்குச் சென்று இவ்வாறு அறிவித்தார், "வாசித்தர்களே, பகவர் முழுமையாகப் பரிநிப்பாணம் எய்தி விட்டார். இப்போது நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்ததைச் செய்யுங்கள்."
போ. அனந்தர் கூறியதைக் கேட்ட மல்லர்களும் அவர்கள் மக்கள், மனைவியர் உட்பட அனைவரும் அதிர்ச்சியும், துக்கமும் அடைந்தனர். அவர்கள் மனம் சோகத்தில் ஆழ்ந்தது. அவர்களுள் சிலர் தங்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு புலம்பினர். கைகளைத் தூக்கிக் கொண்டு அழுதனர். அவர்கள் கால்கள் வெட்டுண்டவர்கள் போலத் தரையில் விழுந்து புரண்டு கதறினர், 'அகாலமாகப் பகவர் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்! அகாலமாகத் ததாகதர் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்! அகாலமாக ஞானக் கண்ணுடையவர் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்!'
உடலுக்கு மரியாதை
Homage to the Remains
6.13. பின் குசிநகர மல்லர்கள் அவர்கள் பணியாட்களுக்குக் கட்டளையிட்டனர், "அப்படியானால், நறுமணத் திரவியங்களையும், பூமாலைகளையும், குசிநகரத்திலுள்ள எல்லா இசைக் கருவிகளையும் சேகரியுங்கள்!" பின் நறுமணத் திரவியங்களையும், பூமாலைகளையும் குசிநகரத்திலுள்ள எல்லா இசைக் கருவிகளையும் அதனுடன் ஐநூறு ஜோடித் துணிகளையும் எடுத்துக் கொண்டு, குசிநகரின் அருகில் உள்ள மல்லர்களின் சால வனத்திற்குப் பகவரின் உடல் இருந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு நாள் முழுவதும் மல்லர்கள் அவரது உடலுக்கு ஆழ்ந்த மரியாதை செலுத்தும் வகையில் ஆடல், பாடல், இசை, பூமாலைகள், வாசனைத்திரவியம், துணியிலான பந்தல், நினைவிடங்களில் வைக்கப்படும் கொத்து மாலை எனப் பல வழிகளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
பின் அவர்களுக்கு இந்த எண்ணம் தோன்றியது, "இன்று பகவரின் உடலைத் தகனஞ்செய்வதற்கு கால தாமதமாகி விட்டது. எனவே பகவரின் உடலை நாளை தகனம் செய்வோம். "பின் இரண்டாம் நாள், மூன்றாம் நாள், நான்காம் நாள், ஐந்தாம் நாள்,ஆறாம் நாளென அவருக்குப் பூசித்து, மரியாதை செலுத்தி, போற்றி ஆடல், பாடல், இசை, பூமாலைகள், வாசனைத்திரவியம், துணியிலான பந்தல், நினைவிடங்களில் வைக்கப்படும் கொத்து மாலை எனப் பல வழிகளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
Then the Kusinārā Mallans ordered their men, “In that case, I say, gather scents, garlands, and all the musical instruments in Kusinārā!” Then, taking scents, garlands, and all the musical instruments in Kusinārā, along with 500 pairs of cloth, the Kusinārā Mallans went to the Blessed One’s body in Upavattana, the Mallans’ Sal Forest near Kusinārā. On arrival, they spent the entire day in worshipping, honoring, respecting, and venerating the Blessed One’s body with dances, songs, music, garlands, and scents, in making cloth canopies and arranging floral wreaths. Then the thought occurred to them, “It’s too late today to cremate the Blessed One’s body. We’ll cremate the Blessed One’s body tomorrow.” And so they spent the second day, the third day, the fourth day, the fifth day, the sixth day in worshipping, honoring, respecting, and venerating the Blessed One’s body with dances, songs, music, garlands, and scents, in making cloth canopies and arranging floral wreaths.
6.14. பின் ஏழாம் நாள் அவர்களுக்கு இந்த எண்ணம் தோன்றியது, "ஆடல், பாடல், இசை, பூமாலைகள், வாசனைத்திரவியம் எனப் பல வழிகளில் அவருக்கு அஞ்சலி செலுத்தி, கௌரவித்து, மரியாதை செலுத்தி, வணங்கி விட்டோம். இப்போது வெளிப்பக்கமாகச் சென்று நகரின் தென்புறத்தில் அவரைத் தகனம் செய்வோம்."
பின் எட்டு முதல் நிலை மல்லர்கள், தலை குளித்துவிட்டு, புதிய சணல் துணி அணிந்து, "நாம் பகவரின் உடலைத் தூக்குவோம்," என்று எண்ணித் தூக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தூக்க முடியவில்லை. குசிநகர மல்லர்கள் போ. அனுருத்தரிடம்,
"எதன் காரணமாக போ. அனுருத்தர் அவர்களே, எட்டு முதல் நிலை மல்லர்கள், தலை குளித்து விட்டு, புதிய சணல் துணி அணிந்து, 'நாம் பகவரின் உடலை தூக்குவோம்,' என்று எண்ணித் தூக்க முயன்றும் உடலைத் தூக்க முடியவில்லை.?"
"வாசித்தர்களே, உங்கள் விருப்பம் ஒன்று. தேவர்களின் விருப்பமோ வேறொன்று" என்றார்.
"ஆனால் போ. அனுருத்தர் அவர்களே, தேவர்களின் விருப்பம் என்ன?"
6.15. வாசித்தர்களே உங்கள் விருப்பம் என்னவென்றால், 'ஆடல், பாடல், இசை, பூமாலைகள், வாசனைத்திரவியம் எனப் பல வழிகளில் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கௌரவித்து, மரியாதை செலுத்தி, வணங்கிய பிறகு அவரை நகரின் வெளிப்புறமாகச் சென்று தென்பக்கமாக அவரைத் தகனம் செய்வோம்,' என்பது. தேவர்களின் விருப்பமோ, 'தெய்வீக ஆடல், பாடல், இசை, பூமாலைகள், வாசனைத்திரவியம் எனப் பல வழிகளில் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கௌரவித்து, மரியாதை செலுத்தி, வணங்கிய பிறகு, அவரை வடபுறமாக எடுத்துச் சென்று, வடக்கு வாயில் வழியே ஊருக்குள் நுழைந்து, ஊரின் மத்தியில் எடுத்துச்சென்று, பின்கிழக்கு வாயில் வழியே வெளியேறி, மல்லர்களின் ஆலயமான மகுத்த பந்தனைக்கு (Makuṭa-bandhana) எடுத்துச் சென்று அங்கு அவரைத் தகனம் செய்வோம்,' என்பது.
"அப்படியானால், போற்றுதற்குரிய ஐயா, நாங்கள் தேவர்கள் விரும்புவது போலவே செய்கிறோம்."
6.16. அப்போது குசிநகரத்தில் - அதன் குப்பைத் தொட்டிகளிலும், சாக்கடை நீர் தேங்கி நிற்கும் இடங்களிலும் கூட - முழங்கால் உயரத்திற்கு எரிமலர்கள் சிதறிக் கிடந்தன. பின் தேவர்களும், மல்லர்களும் தெய்வீக ஆடல், பாடல், இசை, பூமாலைகள், வாசனைத்திரவியம் எனப் பல வழிகளில் பகவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கௌரவித்து, மரியாதை செலுத்தி, வணங்கிய பின்னர் அவரை வடபுறமாக எடுத்துச்சென்று, வடக்கு வாயில் வழியே ஊருக்குள் நுழைந்து, ஊரின் வழியே சென்று, பின் கிழக்கு வாயில் வழியே வெளியேறி, மல்லர்களின் ஆலயமான மகுத்த பந்தனைக்கு எடுத்துச் சென்று அங்கு அவரை இறக்கி வைத்தனர்.
6.17. பின் குசிநகர மல்லர்கள் போ. ஆனந்தரிடம், "போற்றுதற்குரிய ஐயா, ததாகதரின் உடலைப் பொருத்தவரையில் நாங்கள் செய்ய வேண்டியது என்ன?"
"வாசித்தர்களே, ஒரு சக்கரவர்த்தியின் உடலுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதையே, ததாகதரின் உடலுக்கும் செய்ய வேண்டும்.
"போற்றுதற்குரிய ஐயா, சக்கரவர்த்தியின் உடலைப் பொருத்தவரையில் அவர்கள் செய்வது என்ன?"
"வாசித்தர்களே, சக்கரவர்த்தியின் உடலைச் சணல் துணியால் (linen) சுற்றுவார்கள். புதிய துணியால் சுற்றியபின், அதனைப் பரப்பப்பட்ட பருத்திப் பஞ்சினால் (teased cotton wool) சுற்றுவார்கள். பருத்திப் பஞ்சினால் சுற்றியபின் அதனைப் புதிய சணல் துணியால் சுற்றுவார்கள். இவ்வாறு ஐந்நூறு தடவை சுற்றியபின், உடலை ஒரு இரும்பாலான எண்ணை தாங்கியில் வைத்து, அதை இரும்பு மூடியால் மூடி முழுமையாக நறுமணமிக்க பொருட்களோடு தகனம் செய்வார்கள். பின் நான்கு பாதைகள் குறுக்கிடும் முக்கிய சந்திப்பில் சக்கரவர்த்திக்கு ஒரு சேதியம் கட்டுவார்கள். இப்படித்தான் சக்கரவர்த்தியின் உடலை அடக்கம் செய்வார்கள்.
சக்கரவர்த்தியின் உடலை அடக்கம் செய்யும் முறையிலேயே ததாகதரின் உடலையும் அடக்கம் செய்ய வேண்டும். ததாகதரின் சேதியமும் நான்கு வழிகள் சந்திக்கும் முக்கிய இடத்திலேயே கட்டவேண்டும். அவ்விடத்தில் பூ மாலை, அல்லது வாசனை திரவியம், நறுமணப் பொடி, வர்ணங்கள் போன்றவற்றை நம்பிக்கையோடு வைப்பவர் அல்லது அங்கு வணங்குபவர் அவர்கள் மனத்தைத் தெளிவாக்கிக் கொள்வார்கள். அது அவர்களின் நீண்ட நாள் நன்மைக்கும் மகிழ்ச்சிக்குமாகும்.
6.18. பின் குசிநகர மல்லர்கள் அவர்களது பணியாட்களுக்குக் கட்டளையிட்டனர், "அப்படியானால், தேவையான பருத்திப் பஞ்சை மல்லர்களிடமிருந்து சேகரித்து வாருங்கள்."
பின் பகவரின் உடலைப் புதிய சணல் துணியால் சுற்றினார்கள். பின், அதனைப் பருத்திப் பஞ்சினால் சுற்றினார்கள். பின் அதனைப் புதிய சணல் துணியால் சுற்றினார்கள். இவ்வாறு ஐந்நூறு (ஐந்நூறு என்றால் பலமுறை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்) தடவை சுற்றியபின், உடலை ஒரு இரும்பாலான எண்ணை தாங்கியில் வைத்து, அதனை இரும்பு மூடியால் மூடி முழுமையாக நறுமணமிக்க பொருட்களோடு எரி மேடையில் வைத்தனர்.
6.19. அச்சமயம் போ. மஹா கஸ்ஸப்பர் [10] பாவையிலிருந்து குசிநகரம் செல்லும் பெருஞ்சாலை வழியாக ஒரு பெருந் துறவி சங்கக் கூட்டத்துடன் - மொத்தம் சுமார் ஐநூறு பேர் - பயணம் செய்து கொண்டிருந்தார். சாலையை விட்டு விலகி ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு ஆஜீவிக சமயத் துறவி, ஒரு எரிமலரைக் கையில் எடுத்துக் கொண்டு குசிநகரத்திலிருந்து பாவை சென்று கொண்டிருந்தார். தூரத்திலிருந்து அவரைக் கண்ட போ. மஹா கஸ்ஸப்பர் அவர் அருகில் வந்ததும், "எங்களது ஆசிரியரைத் தெரியுமா நண்பரே?" என்று வினவினார்.
"தெரியும் நண்பரே. ஏழு நாட்களுக்கு முன்னர் கோதமர் என்ற தியானி முழுமையாக வீடுபேறடைந்தார். அப்போது தான் இந்த எரிமலர் எனக்குக் கிடைத்தது."
அதைக்கேட்டு அங்கிருந்த சில துறவிகள் - அவர்கள் பாசமும் பற்றும் கொண்டவர்கள் - தங்கள் முடியை பிய்த்துக் கொண்டு புலம்பினர். கைகளைத் தூக்கிக் கொண்டு அழுதனர். அவர்கள் கால்கள் வெட்டுண்டவர்கள் போலத் தரையில் விழுந்து, புரண்டு கொண்டு கதறினர், 'அகாலமாகப் பகவர் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்! அகாலமாகத் ததாகதர் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்! அகாலமாக ஞானக் கண்ணுடையவர் பரிநிப்பாணம் அடைந்து விட்டார்!'
ஆனால் பற்றிலிருந்து விடுபட்ட துறவிகள் உடன்பட்டு கவனத்துடன், தெளிவான மனத்துடன்: "காரணங்களால் தோன்றுபவை எல்லாம் நிலையற்றவை. வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?'" என்றனர்.
6.20. அச்சமயம் வயதானகாலத்தில் துறவறம் ஏற்றிருந்த சுபத்தர் [11] என்ற துறவி, அக்கூட்டதில் அமர்ந்திருந்தார். அவர் துறவிகளிடம், "போதும் நண்பர்களே, வருந்தாதீர். புலம்பாதீர். அந்தப் பெரும் தியானி போனது நல்லது. அவர் நம்மை உபத்திரவப் படுத்திக் கொண்டே இருந்தார், (இவ்வாறு கூறி) 'இதைச் செய்யலாம், அதைச் செய்யக்கூடாது' என்று. ஆனால் இப்போது நாம் விரும்பியதைச் செய்வோம், விரும்பாததைச் செய்ய வேண்டியதில்லை. [12]
Now at that time a monk named Subhadda,who had gone forth when old, was sitting among the group. He said to the monks, “Enough, friends. Don’t grieve. Don’t lament. We’re well rid of the Great Contemplative. We’ve been harassed by (his saying,) ‘This is allowable. This is not allowable.’ But now we will do what we want to do, and not do what we don’t want to do.”
பின் போ. மஹா கஸ்ஸப்பர் துறவிகளிடம் "போதும் நண்பர்களே. வருந்தாதீர். புலம்பாதீர். பகவர் நமக்குக் கற்பித்துள்ளார் அல்லவா? ‘நமக்குப் பிடித்த சுகம் தரும் பொருட்கள் எல்லாம், அப்படி அல்லாமல் ஒருநாள் மாறிப் போய்விடும். நம்மை விட்டுப் பிரிந்து செல்லும்’ என்று. வேறு என்ன எதிர்பார்பது? பிறந்தன இறக்கும், தோன்றின மறையும், உணர்ந்தன மறக்கும், அழியும் தன்மையுடையன அழியும். இவற்றைத் தடுக்க முடியாது. "
Then Ven. Mahā Kassapa addressed the monks, “Enough, friends. Don’t grieve. Don’t lament. Hasn’t the Blessed One already taught the state of growing different with regard to all things dear and appealing, the state of becoming separate, the state of becoming otherwise? What else is there to expect? It’s impossible that one could forbid anything born, existent, fabricated, and subject to disintegration from disintegrating.”
6.21. பின் நான்கு முதன்மை நிலை மல்லர்கள், தலை குளித்து விட்டு, புதிய சணல் துணி அணிந்து, "நாம் பகவரின் உடலைத் தகனஞ்செய்வோம்," என்று எண்ணியும் உடலைத் தகனஞ்செய்ய முடியவில்லை. குசிநகர மல்லர்கள் போ. அனுருத்தரிடம்,
"எதன் காரணமாக போ. அனுருத்தர் அவர்களே, இந்த நான்கு முதன்மை நிலை மல்லர்கள், தலை குளித்துவிட்டு, புதிய சணல் துணி அணிந்து, "நாம் பகவரின் உடலைத் தகனஞ்செய்வோம்," என்று எண்ணியும் தகனஞ்செய்ய முடியவில்லை.?"
"வாசித்தர்களே, உங்கள் விருப்பம் ஒன்று. தேவர்களின் விருப்பமோ வேறொன்று."
"ஆனால் போ. அனுருத்தர் அவர்களே, தேவர்களின் விருப்பம் என்ன?"
"வாசித்தர்களே இதுவே தேவர்கள் விருப்பம், 'போ. மஹா கஸ்ஸப்பர் பாவையிலிருந்து குசிநகரம் செல்லும் பெருஞ்சாலை வழியாக ஒரு பெரும் துறவி சங்கக் கூட்டத்துடன் - மொத்தம் சுமார் ஐநூறு பேர் - பயணம் செய்து கொண்டிருக்கிறார். பகவரின் பூதவுடல், போ. மஹா கஸ்ஸப்பர் பகவரின் பாதங்களைத் தலை குளித்து வணங்கிய பின்னர் தான் பற்றிக் கொள்ளும்."
"அப்படியானால், போற்றுதற்குரிய ஐயா, தேவர்கள் விரும்புவது போலவே நடக்கட்டும்."
6.22. பின் போ. மஹா கஸ்ஸப்பர் மகுத்த பந்தனை என்ற குசிநகரம் அருகில் மல்லரின் நினைவிடத்தில் பகவரின் எரிமேடைக்குச் சென்றார். பின், ஒரு தோள் மீது ஆடையைச் சரி செய்து கொண்டு, தன் கைகளை நெஞ்சருகே இணைத்து, எரிமேடையை மூன்று முறை வலம் வந்து பகவரின் கால்களைச் சுற்றியிருந்த மறைப்பை விலக்கி [13] தன் தலையால் தொட்டு அஞ்சலி செலுத்தினார். பின் ஐநூறு துறவிகளும் ஒரு தோள் மீது தங்கள் ஆடையைச் சீர் செய்து கொண்டு, தங்கள் கைகளை நெஞ்சருகே இணைத்து, எரிமேடையை மூன்று முறை வலம் வந்து பகவரின் கால்களைத் தங்கள் தலையால் தொட்டு அஞ்சலி செலுத்தினார்கள். போ. மஹா கஸ்ஸப்பரும் அந்த ஐநூறு துறவிகளும் அஞ்சலி செலுத்தியவுடனே பகவரின் பூதவுடல் தானாகவே பற்றிக் கொண்டது.
6.23. பகவரின் உடல் பற்றி எரியும்போது வெளித்தோலின், உள்தோலின், அசைவு கொடுக்கும் நரம்புகளும், மூட்டு எண்ணைகளும் முழுமையாக எரிந்து விட்டன. சாம்பலோ கனிந்து கொண்டிருக்கும் அழலோ தெரியவில்லை. எலும்பு மட்டுமே மிஞ்சியது. நெய்யோ, எண்ணையோ எரிந்தபின்னர் சாம்பலோ, அழலோ இல்லாதது போல வெளித்தோலின், உள்தோலின், அசைவு கொடுக்கும் நரம்புகளும், மூட்டு எண்ணைகளும், சாம்பலோ, கனிந்து கொண்டிருக்கும் அழலோ இல்லாமல் முழுமையாக எரிந்து விட்டன. மிஞ்சியது எலும்புகள் மட்டுமே [14]. ஐநூறு ஜோடியாகச் சுற்றப்பட்ட துணிகளில் இரண்டு சுற்று – உள்சுற்றும், வெளிச்சுற்றும் மட்டுமே எரிந்திருந்தன.
So Ven. Mahā Kassapa went to the Blessed One’s pyre at Makuṭa-bandhana, the Mallans’ memorial near Kusinārā. On arrival, arranging his robe over one shoulder, he placed his hands palm-to-palm over his heart, circumambulated the pyre three times, uncovered the Blessed One’s feet,56 and worshipped them with his head. And the 500 monks, arranging their robes over one shoulder, placed their hands palm-to-palm over their hearts, circumambulated the pyre three times, and worshipped the Blessed One’s feet with their heads. As soon as it had been worshipped by Ven. Mahā Kassapa and the 500 monks, the Blessed One’s pyre caught fire of its own accord. In the burning of the Blessed One’s body, no cinder or ash of the outer skin, inner skin, flesh, tendons, or oil of the joints could be discerned. Only the bone-relics57 remained. Just as in the burning of ghee or oil, no cinder or ash can be discerned; in the same way, in the burning of the Blessed One’s body, no cinder or ash of the outer skin, inner skin, flesh, tendons, or oil of the joints could be discerned. Only the bone-relics remained. And of the five hundred twin-wrappings, only two were burnt: the innermost and the outermost.
பகவரின் உடல் எரிந்தபின், ஆகாயத்திலிருந்து அருவி போல நீர் கொட்டிப் பகவரின் எரிமேடையில் விழுந்து நெருப்பை அணைத்தது. அருகிலிருந்த சாலமரத்திலிருந்து முளை விட்டுச் சுரந்த நீரும் பகவரின் ஈமநெருப்பை மேலும் அணைத்தது. குசிநகர மல்லர்கள் பலவிதமான வாசனை கலந்த நீரைக் கொண்டும் நெருப்பை அணைத்தனர். பின் ஏழு நாட்களுக்கு குசிநகர மல்லர்கள் மீந்த புனித எலும்புகளைத் தங்கள் வரவேற்புக் கூடத்தில் வைத்து - அதனைச் சுற்றி வேல்களை நட்டும் விற்களால் சுற்றப் பட்டும் - அவற்றை அவர்கள் பூசித்து, மரியாதை செலுத்தி, போற்றி ஆடல், பாடல், இசை, பூமாலைகள், வாசனைத் திரவியம், துணியிலான பந்தல், நினைவிடங்களில் வைக்கப்படும் கொத்து மாலை எனப் பல வழிகளில் அவற்றிற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
When the Blessed One’s body was consumed, a cascade of water falling from the sky extinguished [nibbāpesi] the Blessed One’s pyre. Water shooting up from a Sal tree as well extinguished the Blessed One’s pyre. The Kusinārā Mallans, with all kinds of scented water, extinguished the Blessed One’s pyre. Then for seven days the Kusinārā Mallans kept the bone-relics in their reception hall setting them round with a lattice of spears surrounded by ramparts of bows worshipping, honoring, respecting, and venerating them with dances, songs, music, garlands, and scents.
புனித எலும்புகளைப் பகிர்ந்து கொள்ளல்
Partition of the Relics
6.24. பின் மகத மன்னனான அஜாத சத்துரு வேதஹிபுத்திரன் இவ்வாறு கேள்வியுற்றான், "பகவர் குசிநகரத்தில் முழுமையாக வீடுபேறுற்றதாகக் கூறுகின்றனர்."
எனவே அவன் குசிநகர மல்லர்களுக்கு ஒரு தூதரை அனுப்பி: "பகவர் ஒரு க்ஷத்திரியர். நானும் ஒரு க்ஷத்திரியன். பகவரின் மீந்த புனித எலும்புகளில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. நானும் ஒரு சேதியம் கட்டி விழா நடத்துவேன்."
Then King Ajātasattu Vedehiputta of Magadha heard, “The Blessed One, they say, has totally unbound in Kusinārā.” So he sent an envoy to the Kusinārā Mallans: “The Blessed One was a noble warrior. I, too, am a noble warrior. I deserve a share of the Blessed One’s bone-relics. I, too, will build a burial mound and hold a ceremony for them.”
வைசாலி லிச்சவியர்களும் இவ்வாறு கேள்வியுற்றனர், "பகவர் குசிநகரத்தில் முழுமையாக வீடுபேறுற்றதாகக் கூறுகின்றனர்." எனவே அவர்கள் குசிநகர மல்லர்களுக்கு ஒரு தூதரை அனுப்பி: "பகவர் ஒரு க்ஷத்திரியர். நாங்களும் க்ஷத்திரியர்கள். பகவரின் மீந்த புனித எலும்புகளில் எங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. நாங்களும் ஒரு சேதியம் கட்டி விழா நடத்துவோம்."
கபிலவத்து சாக்கியர்களும் இவ்வாறு கேள்வியுற்றனர், "பகவர் குசிநகரத்தில் முழுமையாக வீடுபேறுற்றதாகக் கூறுகின்றனர்." எனவே அவர்கள் குசிநகர மல்லர்களுக்கு ஒரு தூதரை அனுப்பி: "பகவர் எங்கள் உறவினரில் மேன்மையானவர். பகவரின் மீந்த புனித எலும்புகளில் எங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. நாங்களும் ஒரு சேதியம் கட்டி விழா நடத்துவோம்."
அள்ளகப்ப துலாயர்களும் (Thulayans of Allakappa)... ராமகாம கோளியர்களும் (Koḷiyans of Rāmagāma) இவ்வாறு கேள்வியுற்றனர், "பகவர் குசிநகரத்தில் முழுமையாக வீடுபேறுற்றதாகக் கூறுகின்றனர்." எனவே அவர்கள் குசிநகர மல்லர்களுக்கு ஒரு தூதரை அனுப்பி: "பகவர் ஒரு க்ஷத்திரியர். நாங்களும் க்ஷத்திரியர்கள். பகவரின் மீந்த புனித எலும்புகளில் எங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. நாங்களும் ஒரு சேதியம் கட்டி விழா நடத்துவோம்."
வெத்த தீவின் (Veṭṭha Island) பிராமணர் இவ்வாறு கேள்வியுற்றார், "பகவர் குசிநகரத்தில் முழுமையாக வீடுபேறுற்றதாகக் கூறுகின்றனர்." எனவே அவர் குசிநகர மல்லர்களுக்கு ஒரு தூதரை அனுப்பி: "பகவர் ஒரு க்ஷத்திரியர். நான் ஒரு பிராமணன். பகவரின் மீந்த புனித எலும்புகளில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. நானும் ஒரு சேதியம் கட்டி விழா நடத்துவேன்."
பாவை மல்லர்கள் இவ்வாறு கேள்வியுற்றனர், "பகவர் குசிநகரத்தில் முழுமையாக வீடுபேறுற்றதாகக் கூறுகின்றனர்."
எனவே அவர்கள் குசிநகர மல்லர்களுக்கு ஒரு தூதரை அனுப்பி: "பகவர் ஒரு க்ஷத்திரியர். நாங்களும் க்ஷத்திரியர்கள். பகவரின் மீந்த புனித எலும்புகளில் எங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. நாங்களும் ஒரு சேதியம் கட்டி விழா நடத்துவோம்."
6.25. இவற்றைக் கேட்ட பின்னர் குசிநகர மல்லர்கள், அந்தந்தப் பிரிவினருக்கும், கூட்டத்தினருக்கும், "பகவர் எங்கள் நகர எல்லைக்குள் முழுமையாக வீடுபேறுற்றார். அதனால் பகவரின் மீந்த புனித எலும்புகளில் எங்கள் பங்கினை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்."
இவ்வாறு சொல்லப் பட்டதும், தோனர் என்ற பிராமணர் அந்தந்தப் பிரிவினருக்கும், கூட்டத்தினருக்கும், "நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள் அருமையான ஐயன்மீர்,
நமது விழிப்புற்றவர் ஒரு பொறுமை காத்த ஆசான்.
அப்பேர்ப்பட்ட உயர்ந்தவரின்
மீந்த புனித எலும்புகளுக்காக நாம்
சண்டையிட்டுக் கொள்வது பொருத்தமாகாது.
ஐயன்மீர் நாம் இங்கு ஒன்றுமையுடனும்
நட்புணர்வோடும் புனித எலும்புகளை
எட்டுப் பங்குகளாகப் பிரிப்போம்.
பின் பல திசைகளிலும் சேதியம் கட்டுவதால்
ஞானக்கண் உடையவரின்
மீது மக்கள் நம்பிக்கை பரவட்டும்."
When this was said, Doṇa the brahman
addressed the groups and factions:
“Listen, good sirs, to a word from me.
Our Awakened One was a teacher
Of forbearance.
It’s not good that there should be combat
Over the sharing of the relics
Of the highest person.
Let us, masters, unite in concord,
On friendly terms, and make eight shares.
Let there be burial mounds
In the various directions,
Many people made confident
In the One with Eyes.”
"அப்படியானால் பிராமணனே, நீரே பகவரின் புனித எலும்புகளை
எட்டு சம அளவாகப் பிரித்து விடும்."
"அப்படியே ஆகட்டும் ஐயன்மீர்," என்று அந்தந்தப் பிரிவினருக்கும், கூட்டத்தினருக்கும் பதிலுரைத்த தோனர் என்ற பிராமணர், பகவரின் புனித எலும்புகளை எட்டு சம அளவாகப் பிரித்து அந்தந்தப் பிரிவினரிடமும், கூட்டத்தினரிடமும், "நல்லது ஐயன்மீர், இந்த அஸ்தி பாத்திரத்தை எனக்குத் தாருங்கள். நான் ஒரு சேதியம் கட்டி அதற்கு ஒரு விழா நடத்துகிறேன்" என்று கேட்டார். அவர்கள் அந்த அஸ்தி பாத்திரத்தை அவரிடம் தந்தனர்.
Responding, “As you say, good sirs,” to the groups and factions, Doṇa the brahman divided the Blessed One’s bone-relics into eight equal shares and then said to the groups and factions, “Good sirs, give me this urn. I will build a burial mound and hold a ceremony for the urn.” They gave him the urn.
6.26. பின் பிப்ஹாலிவன மோரியர்கள் (Moriyans of Pipphalivana) இவ்வாறு கேள்வியுற்றனர், "பகவர் குசிநகரத்தில் முழுமையாக வீடுபேறுற்றதாகக் கூறுகின்றனர்."
எனவே அவர் குசிநகர மல்லர்களுக்கு ஒரு தூதரை அனுப்பி: "பகவர் ஒரு க்ஷத்திரியர். நாங்களும் க்ஷத்திரியர்கள். பகவரின் மீந்த புனித எலும்புகளில் எங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. நாங்களும் ஒரு சேதியம் கட்டி விழா நடத்துவோம்."
"பகவரின் புனித எலும்புகளைத் தருவதற்கு மீதம் எதுவும் இல்லை. அவற்றை ஏற்கனவே நாங்கள் பிரித்துக்கொண்டு விட்டோம். அதனால் நீங்கள் இங்குள்ள நெருப்புத் தணலை (embers) எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றனர். அவர்கள் அங்கிருந்த நெருப்புத்தணலை எடுத்துக் கொண்டு சென்றனர்.
6.27. பின் மகத மன்னனான அஜாதசத்துரு வேதஹிபுத்திரன், ராஜ கிருகத்தில் ஒரு சேதியம் கட்டி, பகவரின் அஸ்திக்கு ஒரு விழா நடத்தினான்.
வைசாலி லிச்சவியர்கள் வைசாலியில் ஒரு சேதியம் கட்டி, பகவரின் அஸ்திக்கு ஒரு விழா நடத்தினார்கள்.
கபிலவத்து சாக்கியர்களும், கபிலவத்துவில் ஒரு சேதியம் கட்டி, பகவரின் அஸ்திக்கு ஒரு விழா நடத்தினார்கள்.
அள்ளகப்ப துலாயர்களும் அள்ளகப்பையில் ஒரு சேதியம் கட்டி, பகவரின் அஸ்திக்கு ஒரு விழா நடத்தினார்கள்.
ராமகாம கோளியர்களும் ராமகாமத்தில் ஒரு சேதியம் கட்டி, பகவரின் அஸ்திக்கு ஒரு விழா நடத்தினார்கள்.
வெத்த தீவின் பிராமணர் வெத்த தீவில் ஒரு சேதியம் கட்டி, பகவரின் அஸ்திக்கு ஒரு விழா நடத்தினார்.
பாவை மல்லர்கள் பாவையில் ஒரு சேதியம் கட்டி, பகவரின் அஸ்திக்கு ஒரு விழா நடத்தினார்கள்.
குசிநகர மல்லர்கள் குசிநகரத்தில் ஒரு சேதியம் கட்டி, பகவரின் அஸ்திக்கு ஒரு விழா நடத்தினார்கள்.
தோனர் என்ற பிராமணர் ஒரு சேதியம் கட்டி பகவரின் அஸ்தி பாத்திரத்திற்கு ஒரு விழா நடத்தினார்.
பிப்ஹாலிவன மோரியர்கள் பிப்ஹாலிவனத்தில் ஒரு சேதியம் கட்டி நெருப்புத் தணலுக்கு ஒரு விழா நடத்தினார்.
ஆக புனித எலும்புகளுக்கு எட்டு சேதியங்களும், ஒன்பதாவது சேதியம் அஸ்தி பாத்திரத்திற்கும், பத்தாவது சேதியம் நெருப்புத் தணலுக்குமென பல திசைகளிலும் பத்து சேதியங்கள் கட்டப் பட்டன.
இப்படித்தான் பழங்காலத்தில் நடந்தது. [15]
Then King Ajātasattu Vedehiputta of Magadha built a burial mound and held a ceremony for the Blessed One’s relics in Rājagaha.
The Licchavis of Vesālī built a burial mound and held a ceremony for the Blessed One’s relics in Vesālī.
The Sakyans of Kapilavatthu built a burial mound and held a ceremony for the Blessed One’s relics in Kapilavatthu.
The Thulayans of Allakappa built a burial mound and held a ceremony for the Blessed One’s relics in Allakappa.
The Koliyans of Rāmagāma built a burial mound and held a ceremony for the Blessed One’s relics in Rāmagāma.
The brahman of Veṭṭha Island built a burial mound and held a ceremony for the Blessed One’s relics on Veṭṭha Island.
The Pāvā Mallans built a burial mound and held a ceremony for the Blessed One’s relics in Pāvā.
The Kusinārā Mallans built a burial mound and held a ceremony for the Blessed One’s relics in Kusinārā.
Doṇa the brahman built a burial mound and held a ceremony for the urn.
The Moriyans of Pipphalivana built a burial mound and held a ceremony for the embers in Pipphalivana.
Thus there were eight burial mounds for the bone-relics, a ninth for the urn, and a tenth for the embers.
That is how it was in the past.
6.28. மேன்மையானவரின், மனிதருள் முதன்மையானவரின்
ஞானக் கண்ணுடையவரின்
மீந்த புனித எலும்புகள்
எட்டுப் பாகமாகப் பிரிக்கப் பட்டன:
ஜம்புதீபத்தில் ஏழு சேதியங்கள் கட்டிக் கௌரவிக்கப்பட்டன.
ராமகாமத்தில் உள்ள ஒன்று
நாகர்களின் அரசர்களால் கௌரவிக்கப்பட்டது.
ஒரு பல் முப்பத்து மூன்று தேவர்கள் வணங்குவது;
ஒன்று கந்தாரபுரத்தில் கௌரவிக்கப்படுகிறது;
ஒன்று கலிங்க மன்னனின் இராஜ்ஜியத்தில்;
மற்றொன்று நாகர்களின் அரசர்களால் கௌரவிக்கப் பட்டது.
இவை அவற்றின் பிரகாசத்தால்
அவை அருமையான ‘பரிசு’ என்பதால்
இந்தச்செல்வம் தரும்
பூமியை அலங்கரிக்கின்றன.
ஆக ததாகதரின் புனித எலும்புகள்
கௌரவிக்கப் படுபவரால்
கௌரவிக்கப் படுகின்றன.
அவர் தேவர்களின் அரசர்களால்
நாகர்களின் அரசரால், மனிதரின் அரசரால்
வணங்கப்படுகிறார்.
அதுபோலச் சிறந்த மனிதர்களால்
வணங்கப்படுகிறார்.
எனவே நெஞ்சருகில்
கைகளைச் சேர்த்து
அவருக்கு மரியாதை செலுத்துங்கள்.
நூறு கப்பங்களிலும்
அப்படிப்பட்ட விழிப்புற்றவரைக்
காண்பது அரிது. [16]
Eight portions were the relics
Of the One with Eyes,
The highest, the foremost of men:
Seven honored in Jambudīpa,
And one in Rāmagāma
Honored by kings of the nāgas.
One tooth
The Devas of the Thirty-three worship;
One is honored in Gandhārapura;
One in the realm of the king of Kāliṅga;
Another is honored by kings of the nāgas.
These, with their splendor,
Their excellent gifts,
Embellish this wealth-bearing earth.
Thus the relics of the One with Vision
Are honored by those honored
By those who are honored.
He is worshiped by deva kings,
Nāga kings, human kings,
And likewise is worshiped
By the most excellent people.
So pay homage to him,
With hands palm-to-palm
Over the heart,
For the Awakened are rarely encountered
In the course of one hundred eons.
* * *
விளக்கம் ஆதாரங்கள் (Source for the Notes):
(BA) Bhante Anandajoti அனந்தஜோதி பிக்கு காணொளி
(MW) The long Discourses of the Buddha - A translaton of the Dhigha Nikaya by Maurice Walshe
(TB) Thanisarro Bhikku
(SV-FS) Sister Vajirra, Fransis Story Source
(WR) Ven. Walpola Rahula
[1] புத்தர் மறைந்த பின்னர் நடைபெற்ற முதல் சங்க ஆலோசனைச் சபையில் துறவிகளால் எந்த விதிகள் சிறியவை, எவை முக்கியமற்றவை என்பதை முடிவு செய்ய இயலவில்லை. போ. ஆனந்தரும் தான் இது பற்றிப் புத்தரிடம் விளக்கம் கேட்கவில்லை என்று ஒப்புக் கொண்டார். சபையில் ஒரு துறவி, பல விதிகளும் இல்லறத்தார் சம்பந்தப்பட்டதாக இருப்பதால், புத்தர் இறந்த பின் அவற்றை நீக்கினால் இல்லறத்தார், துறவிகளைக் கீழாகப் பார்ப்பார்கள் என்றும், அதனால் எந்த விதிகளையும் நீக்கக் கூடாது என்றும் வாதாடினார். இந்தக் கருத்து ஆலோசனைச் சபையில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
The Cullavagga (XI.9) tells of how the monks at the First Council could not agree on which rules should be classed as lesser and minor. Ven. Ānanda himself confessed that he neglected to ask the Buddha on this point. One of the monks made a motion that because many of the rules affect the laity, and the laity would look down on the monks for rescinding them after the Buddha’s death, none of the rules should be rescinded. This motion was adopted by the Council. (TB)
[2] சன்னர் என்ற துறவி விநயத்தில் பல இடங்களில் மற்ற துறவிகளைக் குறைகூறி, "புத்தர் என்னுடையவர், தம்மம் என்னுடையது, என்னுடைய இளைய எஜமான் அறத்தைப் புரிந்து கொண்டார்,"என்று கூறியதாகக் கூறிப்பிடப் பட்டுள்ளது. இது பின்னர் வந்த பௌத்த மரபின்படி சன்னன் என்ற குதிரை வண்டி சாரதி, சித்தார்த்தருடன் அவர் வீடு துறந்த போது உடன் சென்றதாகச் சொல்லும் நிகழ்ச்சிக்கு ஒத்துப் போகிறது. அவர் தவறான பாதையில் செல்வதாகவும், அறிவுரை சொன்னாலும் திருந்துவதில்லை என்றும் விநயத்தில் வருணிக்கப் படுகிறார். பரிநிப்பாணத்தின் பின் அவருக்குப் பிரம்ம தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்ததாகவும் பின்னர் திருந்தி சரியான வழியில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர் திருந்திய பின்னர் அரஹந்தரானார். போ. சன்னர் அரஹந்தரானதும் பிரம்ம தண்டனை தானாக நீக்கப்பட்டது. சங்யுத்த நிகாயம் 22:90ல் அவர் எப்படித் திருந்தினார் என்பதற்கும், எப்படி வீடுபேறு பெற்றார் என்பதற்கும் ஒரு மாற்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
A monk named Channa is depicted at several spots in the Vinaya as despising all other monks on the grounds that “The Buddha is mine, the Dhamma is mine, it was by my young master that the Dhamma was realized.” (Saṅghādisesa 12) This would fit in with the post-canonical tradition identifying Channa as the horseman who accompanied the young Prince Siddhartha on the night of the latter’s Great Renunciation. Two rules in the Vinaya Saṅghādisesa 12 and Pācittiya 12 depict him as devious and impossible to admonish. Cv.XI reports events after the Parinibbāna, telling of how news of the brahma-penalty shocked Channa to his senses. As a result, he changed his ways and eventually became an arahant. As Ven. Ānanda then explains in that passage, the brahma-penalty was automatically lifted at the moment of Ven. Channa’s final attainment. SN 22:90 tells a different version of how Ven. Channa changed his attitude and broke through to the Dhamma. (TB)
சித்தார்த்தர் புத்தர் நிலை அடைவதற்கு முன்னர் சன்னன் அவருடைய நெருங்கிய நண்பராகவும் தேரோட்டியாகவுமிருந்தார். பின்னர் சங்கத்தில் சேர்ந்து பிக்குவானார். தான் புத்தருடைய நெருங்கிய நண்பன் என்று அகங்காரங் கொண்டார். தான் நினைத்தபடி நடக்க முற்பட்டார். நற்குழுப் பண்பு அற்றவரானார். அடிக்கடி தவறான வழியில் நடக்க முற்பட்டார். புத்தர் பரிநிர்வாணமடைந்த பின்னர் ஆனந்ததேரர் அவரிடம் சென்று அவர் சமூகத்திலிருந்து முற்றாகப் பகிஷ்கரிக்கப் பட்டிருப்பதாக அறிவித்தார். அவருடைய அகங்காரம் மறைந்தது. அவர் விநய முடையவரானார். கண்கள் திறந்து விட்டன. பின்னர் நல்வழியிற் சென்று அருகத நிலையடைந்தார். அவர் மீது விதிக்கப்பட்ட தண்டனை தானாகவே செயலற்றுப் போயிற்று. (தமிழில் நவாலியூர் சோ. நடராசன்) (WR)
[3] மரியாதையின் காரணமாகப் பகவரிடம் கேள்விகளைக் கேட்க முடியாத நிலையிருப்பின் தமது நண்பரிடம் கேட்கலாம். நண்பர் அக்கேள்வியைப் பகவரிடம் கேட்பார்.
[4] பஸதா - மன பிரகாசம், அமைதி. பாதையில் பயிற்சி செய்தால் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை.
Pasada: 'brightness, serenity of mind'.
[5] பகவர் இறந்துவிட்டதாக நினைத்த போ.ஆனந்தர் அவருக்கு முன்பு துறவறம் ஏற்ற போ. அனுருத்தரை "போற்றுதற்குரிய அனுருத்தர்" என்று புத்தரின் அறிவுரைப்படி அழைத்தார். Ven. Ānanda, assuming that the Buddha has passed away, addresses Ven. Anuruddha, his senior, as “venerable sir,” in line with the Buddha’s instructions.
[6] போ. அனுருத்தர் போ. ஆனந்தரின் அண்ணன். அவர் மற்றவர் மனத்தை தெரிந்து கொள்ளக் கூடிய இத்தி சக்திகளைக் கொண்டிருந்தார். Anuruddha, the elder brother of Ananda, would have known this through the super-normal power of reading the minds of others, which he possessed. (SV-FS)
[7] இந்தச் சூத்திரத்தின் மூன்றாம் பாகத்தில் விளக்கப்பட்டிருக்கும் பூகம்பம் ஏற்படக் காரணங்களுள் இந்த நிகழ்வும் ஒன்று.
This is one of the earthquakes forecast in Part III. (TB)
[8] தவதிம்சை சொர்க்கத் தேவர்களின் தலைவர் சக்கர்.
Sakka is the king of the gods in the Tavatimsa heaven, and thus a lower figure in the cosmological hierarchy than Brahma Sahampati. (SV-FS)
[9] தூய வசிப்பிடங்கள் என்று அழைக்கப்படும் ஒரு தேவலோகத்தில் வாழும் தேவர்கள், அனாகாமி ஞான நிலையை அடைந்தவர்கள் என்பதால் அவர்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.
This apparently refers to the devas who are non-returners, living in the Pure Abodes.
[10] திரிபிடகத்தில் பல கஸ்ஸப்பர்கள் வந்தாலும் இந்த போ. கஸ்ஸப்பர் தான் புத்தரின் மேன்மையான சீடர்களில் முக்கியமான ஒருவர். இத்தி சக்திகளில் தேர்ந்தவர். அவர் 120 வருடங்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர் புத்தர் மறைந்த பின் நடைபெற்ற முதல் சங்க ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
One of the Buddha's most eminent disciples, not to be confused with the many other Kassapas. He had great psychic powers and is said to have lived to be more than 120. He presided at the first Council.
[11] இந்தச் சுபத்தர் வேறு. புத்தர் உயிருடன் இருந்த போது அவர் முன்னிலையில் கடைசியாகத் துறவறம் பூண்ட சுபத்தர் வேறு.
A different Subhadda from the Buddha’s last direct-witness disciple.[12]
[12] இந்த வரிகளைக் கேட்ட போ. மஹா கஸ்ஸப்பர் "தம்மமற்றது பிரகாசிப்பதற்கு முன்னர், தம்மம் மறைவதற்கு முன்னர்; ஒழுக்கமற்றது பிரகாசிப்பதற்கு முன்னர், ஒழுக்கம் மறைவதற்கு முன்னர்; தம்மமற்றதைப் பேசுபவர் வலிமையுறுவதற்கு முன்னர், தம்மம் பேசுபவர்கள் வலிமை குறைவதற்கு முன்னர்; ஒழுக்கமற்றதைப் பேசுபவர் வலிமையுறுவதற்கு முன்னர், ஒழுக்கம் பற்றிப் பேசுபவர்கள் வலிமை குறைவதற்கு முன்னர்" தம்ம விநயத்தை முறைமைப் படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார். ஆகவே விரைவிலேயே புத்தர் பரிநிப்பாணத்தின் பின்னர் வந்த மழைக்காலச் சங்கமத்தின் போது முதல் சங்க ஆலோசனைச் சபைக் கூட்டம் அமைக்கப் பட்டது.
In Cullavagga XI.1, Ven. Mahā Kassapa cites this statement as good reason to hold a council for standardizing the Dhamma and Vinaya, “before what is not-dhamma shines out and dhamma is obscured, before what is not-discipline shines out and discipline is obscured; before those who speak what is not-dhamma become strong and those who speak what is dhamma become weak; before those who speak what is not-discipline become strong and those who speak what is discipline become weak.” Thus the First Council was held during the Rains retreat following the Buddha’s Parinibbāna. (TB)
[13] உரைகள்: மஹா கஸ்ஸப்பர் நான்காம் ஜான நிலையில் தன் மனத்தை ஒருமுகப்படுத்தி அதன் அடிப்படையில் இத்தி சக்திகளைப் பயன்படுத்தி புத்தரின் கால் அதைச் சுற்றியிருந்த துணிகளுக்கு வெளியே வரச் செய்ததாகக் குறிப்பிடுகின்றன. (TB)
The commentary notes that Ven. Mahā Kassapa entered the fourth jhāna, which he used as the basis for a feat of psychic power so that the Buddha’s feet would appear out of their extensive wrappings.
[14] இது வரை புத்தரின் உடல் சரீரம் (ஒன்று) என்று அழைக்கப்பட்டு வந்தது. இங்கு துவங்கி இந்தச் சூத்திரத்தின் முடிவுவரை அந்த ஒன்று பன்மையானது – புனிதமான மிச்சங்கள் என்று பொருள் கொள்கிறது.
Up to this point in the narrative, the Buddha’s body is called a sarīra (singular). Here the noun becomes plural with the meaning of “relics” and remains plural for the remainder of the narrative. (TB)
[15] ஆரம்பத்தில் இதுவே சூத்திரத்தின் முடிவாக இருந்தது. (MW)
[16] புத்தகோஷரின் இந்த வரிகள்: "பிற்காலத்தில் தம்ப பண்ணி (இலங்கை) பெரியோர்களால் சேர்க்கப் பட்டது" என்று உரைகளில் குறிப்பிடப் படுகிறது.
Comy. ascribes these verses to the "Elders of Tambapanni Island (Sri Lanka)." (MW)
* * *
Source https://www.photodharma.net/