ஆசிய ஜோதி
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
5. சித்தார்த்தன் துறவு
(பள்ளியறையில் யசோதரை கனாக்கண்டு "காலம் வந்தது" என்று வாய் புலம்புகிறாள். சித்தார்த்தன் அதைக் கேட்டுக் கவலையிலிறங்கி, வானில் நட்சத்திரங்களைப் பார்க்கிறான். உரிய காலம் வந்தது என்றறிந்ததும் துறவு பூணத் துணிகிறான்.)
பள்ளி யறையில் பஞ்சணை மீதில்
அங்கையற் கண்ணி யசோதரை அயர்ந்து
கண்வளர் வேளைஓர் கனவு கண்டு,
'வந்தது காலம் வந்தது' எனவே
மயங்கிப் புலம்பினள்; வார்த்தை கேட்டு;
பள்ளியறை - படுக்கை அறை
அங்கையற் கண்ணி - (அம் - அழகிய + கயல் - மீன் + கண்ணி – கண் படைத்தவள்) – அழகிய மீன் போன்ற கண்களை உடையவள் (அன்னை மீனாட்சி போன்றவள்)
கண்வளர்தல் – தூங்குதல்
விரைவில் எழுந்து வெளியில் இறங்கி,
மன்னர் குமரன் வானை நோக்கினன்.
சந்திரன் கடகம் தங்கி யிருந்தனன்;
வானில்,
மற்றைக் கோள்களும் மற்றைய நிலைகளில்
சந்திரன் கடகம் தங்கி யிருந்தனன்;
விளக்கம்: சந்திரன் கடக ராசியில் தங்கி யிருந்தான். கடக ராசி சந்திரனுக்குச் சொந்த வீடு.
கடகம் சந்திரனுக்கு ஆட்சி வீடும் ஆகும். எனவே
சந்திரன் கடகராசியில் இருக்கும் நேரம் நல்ல நிமித்தமாகக் கருதப்படுகிறது.
கோள் – கிரகம், Planet
ஒத்து நின்றுஅங்கு உரிய காலம்
உதித்த தென்ன உணர்த்தின; அவைஎலாம்
அருள்வடி வாகிய அண்ணலை நோக்கி,
"இரவும் இதுவே; இரவும் இதுவே;
பெருமை பெறும்வழி பேணுகின் றனையோ?
பேணு-தல் – போற்றுதல், to cherish, foster, nurture, tend
நன்மை தரும்வழி நாடுகின் றனையோ?
மணிமுடி தாங்கி மன்னர் மன்னனாய்
நீள்நிலம் புரக்க நினைக்கின் றனையோ?
உலகி லுள்ள உயிரெலாம் உய்ய
நாடும் இழந்து நகரும் இழந்து
மணிமுடி – மணிமகுடம், Crown
நீள்நிலம் - பரந்த நிலம்
வீடும் குடியும் விட்டவ னாகி
தன்னந் தனியே தரணியின் மீதுஓர்
ஆண்டி யாக அலைந்து திரிய
எண்ணுகின் றனையோ? யாதுஉன் விருப்பம்?
தெரிந்துநீ உள்ளம் தேறு வாய்"எனக்
விளக்கம்: நீ எது நினைத்தாலும் நடக்கும் நேரம் வந்துள்ளது. நீ மன்னனாக விழைகிறாயா அல்லது துறவியாக விரும்புகிறாயா? சிந்தித்து நல்ல முடிவெடு.
கூறின; அவனும் குறிப்பின் உணர்ந்தனன்.
எங்கும் மூடி இருண்ட இருளில்
காற்றொடு முன்னம் கலந்து வந்த
தெய்வ கீதமும் செவியுறக் கேட்டனன்.
ஐயமில்லை, நம்ஐயன் தங்கிய
அரண்மனை யதனில் அந்நாள் இரவில்
தேவரும் நான்கு திசையும் சுற்றி
மறைந்து நின்று வாழ்த்தினர் அம்மா!
"இதுவே காலம்; இதுவே காலம்;
இமைப் பொழு தேனும் இனியான் இங்குஇரேன்"
யாதும் தடையில்லை; இறங்கிச் செல்வேன்,
'பிரியா நாம்இனிப் பிரிவோம். ஆயினும்,
குறையொன்று அதனால் கூறுதற்கு இல்லை.
இரு நிலமுழுதும் இன்பம் அடையும்
அறநெறி ஈதுஎன்று அறிந்து வா'என
இருநிலம் - பூமி. இருநில மாள்வோன் (சிலப். 28, 78) Wide world, vast expanse of earth
ஆணை யிடுவதை அழகின் செல்விநீ
நித்திரை செய்யினும் நின்முகம் நோக்கித்
தெளிவுற யானும் தெரிந்து கொண்டனன்;
இனியான் உலகில் இயற்றுதற் குரிய
அரும்பெருஞ் செயல்கள் அனைத்தும் அவ்வானில்
உடுக்க ளென்ன ஒளிவிடும் எழுத்தில்
எழுதி யிருப்பதை இன்றிங்கு என்இரு
கண்களால் கண்டு களிப்படை கின்றேன்!
இறுதி யாக என்னுளங் கொண்ட
உண்மையும் ஈதாம்; உறுதியும் ஈதாம்;
அவ்வானில் உடுக்க ளென்ன ஒளிவிடும் எழுத்தில்:
உடுக்கல் - நட்சத்திரம்
விளக்கம்: ‘மின்னும் நட்சத்திரம் போல், நான் இனி ஆற்ற வேண்டிய கடமைகள் அனைத்தும் ஒளிவிடும் எழுத்தில் வானில் எழுதியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். என் உள்ளம் விரும்பும் உண்மையும் இதுவேயாகும்’ எனச் சித்தார்த்தன் கூறுகிறான்.
பற்பல ஆண்டுகள் பகலும் இரவும்
ஆராய்ந் தாராய்ந்து அறிந்ததும் ஈதாம்;
படியில் எனக்குப் பரம்பரை யாய்வரும்
முடிமீது ஆசை முழுவதும் விட்டேன்.
வாழும் மன்னரை வாட்குஇரை யாக்கி,
படி – வமிசபரம்பரை, Family, lineage
நீள்நிலம் பற்றும் நினைப்பும் ஒழித்தேன்;
பூதல மெல்லாம் போர்க்களம் ஆக்கிய
பாதகன் என்றுஎனைப் பழித்துஎவ ருஞ்சொல,
ஓடி ஒழுகும் உதிரப் பெருக்கில்
தேர்க்கால் புதையத் திசைதொறும் சென்று
பாதகன் – பெரும்பாவஞ் செய்தோன்
வெற்றிமேல் வெற்றி வென்று, வீர
வெற்றி மாலை மிலைந்திட விருப்பம்
எள்ளள வேனும்என் உள்ளத்து இல்லை.
சிறுமை தந்திடும் தீவினை புரியேன்;
பொறுமை நிதமும் போற்றி ஒழுகுவேன்;
மிலைந்திட, மிலைதல் - சூடுதல் To put on, wear
எள்ளளவு - சிறு அளவு Size of a single grain of sesame;
புழுதி நிறைந்த பூமி எனக்குப்
பழுதி லாத பஞ்சணை யாகும்.
பாழிட மான பாலையை நல்ல
வாழிட மாக மதித்து வாழ்வேன்;
ஏழைப் பிராணி எதனொடும் அன்பாய்த்
பழுதிலாத – குறையற்ற,
பஞ்சணை - பஞ்சுமெத்தை Cushion stuffed with cotton;
பாலை – பாலை நிலம், Arid, desert tract;
தோழமை பூண்டு துணைசெய் திடுவேன்;
பணிசெய் பள்ளர் பறையர் அணியும்
துணியை அரையில் சுற்றித் திரிவேன்;
தெருத்தெரு வாகத் திரிந்து பெற்ற
பருக்கையை உண்டு பட்டினி போக்குவேன்;
அரை - இடுப்பு
குன்றும் குகையும் குத்துச் செடியும்
அன்றி வேறெதும் அண்டி ஒதுங்கேன்;
இரவும் பகலும் எவ்வெப் பொழுதும்
பாரில் உயிர்கள் படுந்துய ரெல்லாம்
புகுந்துஎன் உள்ளம் புண்படு கின்றது.
குத்துச்செடி - கொத்தாக வளரும் செடி
ஆதலின்,
இன்ப வாழ்வை இகழ்ந்து நீக்கினேன்;
துன்ப வாழ்வைத் துணிந்து போற்றினேன்.
சிறிய பெரிய தேவர் தம்முள்
எல்லாம் வல்லார் எவரும் உளரோ?
எல்லாம் வல்லார் எவரும் உளரோ? - அப்படி யாரும் இல்லை
இரக்கமுள்ளார் இருக்கின் றனரோ?
கண்ணால் அவரைக் கண்டவர் உண்டோ?
வணங்கி நித்தம் வழிபடு வோர்க்குஅவர்
செய்திடும் நன்மை சிறிதும் உளதோ?
எத்தனை எத்தனை எத்தனை மனிதர் -
காலை மாலை கண்கள் இரண்டும்
மூடி யிருந்து முணுமுணு வென்று
செபங்கள் நிதமும் செபித்திடு கின்றனர்?
கோபுரம் சிகரம் கொடிமர மெல்லாம்
வானுற ஓங்கி வளரும் ஆலயம்
அழகழ காக அமைத்திடு கின்றனர்?
மந்திரம் போனகம் வாடா விளக்கு இவை
நித்தம் நடைபெற நிலம் விடுகின்றனர்?
துடிக்கத் துடிக்கத் துள்ளும் மறிகளைப்
பகுத்தறி வின்றிப் பலியிடு கின்றனர்?
போனகம் – சோறு
வாடா விளக்கு - அணையா விளக்கு
மறி - ஆடு
அன்ன சாலையில் அந்தணர் நிதமும்
உண்டு களிக்க உணவிடு கின்றனர்?
அன்னியர்க்கு அல்ல அடியவர்க்கு எனினும்
இவ்வுல கதனில் யாதும் ஒருநலம்
செய்தறி யாத தேவரை நோக்கிக்
அன்ன சாலை - கோயிலில் அன்னசாலை Place where food is served free in a temple
அன்னம் - சோறு boiled rice
'கங்கா தரனே, கண்ண பிரானே!
காப்பாய் காப்பாய் காப்பாய்' என்ன
(அன்பின் மிகுதியோ? அச்சமோ அறியேம்)
தொழுது போற்றும் தோத்திரப் பாக்கள்
வானில் முழங்கும் வல்லிடி போல
கங்காதரன் – சிவபெருமான்.
வல்லிடி - வலிமையான இடி
என்றும் என்றும் எழுந்திடு கின்றன!
இவற்றால்,
வாழ்க்கையில் நித்தம் வளருந் துயரோ?
ஆசைப் பொருளை அடையாத் துயரோ?
இருந்த பொருளை இழந்த துயரோ?
நோய்வாய்ப் பட்டு நொந்திடு துயரோ?
நரைதிரை மூப்பால் நண்ணுந் துயரோ?
மாறாக் கொடிய மரணத் துயரோ?
சனன மரணச் சக்கரம் சுழன்று
பின்னும் பின்னும் பிறந்து பிறந்து
நண்ணுதல் – அடைதல், To approach, reach
சனனம் - பிறப்பு
உயிர்கள் அடையும் ஓயாத் துயரோ -
யாதும் ஒருதுயர் இம்மி யளவும்
நீங்கி, எவரும் நித்தியா னந்த
வாழ்வடைந்து இங்கு வாழ்வதும் உண்டோ?
அருமை மங்கையர் அன்பு நிறைந்து
இம்மி யளவும் - சிறு அளவு
இம்மி - அணு, Grain of red little- millet;
நோற்கும் பற்பல நோன்புக ளாலும்
பாடும் தோத்திரப் பாடல்க ளாலும்
எய்திய நன்மை யாதும் உண்டோ?
அவர்,
தூர்த்து மெழுகித் துப்புர வாக்கித்
தூர்த்து மெழுகித் துப்புர வாக்கி
தூர்த்து - பழுது பார்ப்பது
மெழுகு – மெழுகுதல்.
துப்புரவு – அலங்கரித்தல்.
துளசி மாடம் தொழுவத னாலும்,
பாலும் பழமும் பணிகா ரங்களும்
பக்தி யோடு படைப்பத னாலும்
பேறு காலம் பெறுநோக் காடு
கொஞ்ச மேனும் குறைந்தது உண்டோ?
பேறு காலம் பெறுநோக் காடு - இத்தனை நோன்புகள் செய்தும், குழந்தைப் பிறப்பின் போது துன்பம் குறைந்ததா? இல்லையே.
திருந்திய நல்ல தேவரும் உண்டு;
தீயரும் அவருள் சிற்சிலர் உண்டு;
உண்மை இதுவென்று உணர்வதும் அரிதாம்.
ஆயினும்,
யாவரும் செய்கையில் எளியவ ரேயாம்.
செய்கையில் எளியவ ரேயாம் – இருப்பினும் யார் நல்லவர் தீயவர் என்பதைக் கண்டு பிடிப்பது கடினம்.
முன்னைப் பிறப்பும் முடிவும் அப்பால்
பின்னைப் பிறக்கும் பிறப்பின் விளைவும்,
ஐயம் இன்றி அறிகுவ ரேனும்,
இவர்,
சனன மரணச் சக்கர மதனில்
அறிகுவ ரேனும் - அறிவார் என்றாலும்
சனன மரணச் சக்கர மதனில் - சம்சாரச் சக்கரத்தில்
சிக்கிச் சுழன்று திகைப்புறு வோரே,
உலகில் வாழும் உயிரின் பிறப்பிடம்
அறிவிற் கெட்டா தாயினும், அவ்வுயிர்,
படிப்படி யாய்இப் படியின் மீதுஓர்
அணுவாய்க் கொசுவாய் அரிக்கும் புழுவாய்
பாம்பாய் மீனாய்ப் பறவையாய் மிருகமாய்
மனிதனாய்ப் பூதமாய் வானுறை தேவனாய்த்
தெய்வமாய்த் தோன்றித் திரும்பவும் அவ்வழி
மண்ணாய் அணுவாய் மாறுதல் இயல்பாம்.
ஆதலின்,
அறிவிற் கெட்டா தாயினும் - எப்போது உயிரினம் தோன்றியது என்பது எவர்க்கும் தெரியாது.
படியின் மீது - பூமியின் மீது
புவிமீ துள்ள பொருள்கள் அனைத்தும்
சுற்றம் போலத் தொடர்புடை யனவே.
அஞ்ஞா னத்தில் அழுந்தி அழுந்தி
நைந்து நொந்து நடுங்கி நிதமும்
உழலும் மனிதர் உய்யும் வழியினைக்
சுற்றம் - உறவினர்
அஞ்ஞானம் – அறியாமை, spiritual ignorance
உழல்தல் – அசைதல், to be in motion
கண்டொரு மனிதன் காட்டிடின், அதனால்
இவ், வையகம் முழுவதும் வாழ்வது திண்ணம்.
கல்லில் முன்னம் கரந்து கிடந்த
எரியினைத் தட்டி எழுப்பி ஒருவன்
காட்டிய நாள்வரை, கடுங்கால் மாரி
கரத்தல் - மறைத்தல், To hide,
எரி - நெருப்பு
"கடுங்கால் மாரி வாடையில்"
கடுங்கால் - பெருங்காற்று; Violent wind, tempest
மாரி - மழை; வாடை - குளிர் காற்று; Chill wind
வாடையில் மக்கள் வருந்தி நைந்தனர்;
பருவ மறிந்து பயிர்செய் தொருவன்
தானியம் எடுத்துத் தருவதன் முன்னம்
உழுவை போல ஊனை உண்டு
மனிதனும் உலகில் வாழ்ந்து வந்தனன்.
உழுவை – புலி,
ஊன் - மாமிசம், Meat,
பாரிற் பேசிப் பழகும் மொழிதான்
ஒருவன் நாவில் உருப்பெறும் முன்னம்,
ஏட்டில் எழுதும் எழுத்தின் வடிவை
ஆராய்ந் தாராய்ந்து அமைப்பதன் முன்னம்,
மனிதர்,
ஊமைகள் போல உளறித் திரிந்தனர்.
கையால் சாடை காட்டி அலைந்தனர்.
ஆழ்ந்து கண்ட அறிவி னாலும்
ஓயா துழைக்கும் உழைப்பி னாலும்
தேர்ந்து செய்யும் தியானத் தாலும்
அன்றிஓர் நன்மைஇவ் அகில மீது
மனிதர்க்கு என்றும் வாய்த்ததும் உண்டோ?
ஆதலின்,
உடலின் உறுதியும் ஊக்கமும் உடையோன் -
பொருளும் புகழும் புத்தியும் உடையோன்,
காசினி யாளக் கருதுவ னேல்ஓர்
மன்னர் மன்னனாய் வாழுதற் குரியோன்,
குலத்திற் பிறந்த குணந்திகழ் கோமான்
வாழ்வில் ஓய்ந்து மனந்தள ராமல்
அதன்,
காசினி யாளக் கருதுவ னேல் – புவியாள விரும்பினால்.
காசினி - பூமி
கருதுவனேல் - கருதவான் எனில்
குணந்திகழ் - குணம் + திகழ்
கோ – அரசன்
கோமான் - பெருமையிற் சிறந்தோன். Person of eminence, Lord;
இன்பத் துறையில் இறங்கி நிற்போன்,
விஞ்சிய காதல் விருந்தை அருந்தி
அமையா தெங்கும் ஆசை யுடையான்,
நரையும் திரையும் மூப்பும் நண்ணி
வெறுப்பு மிகுந்த விரக்த னாகாது
துறை - வழி
விஞ்சுதல் - மேலாதல் To excel, surpass
நரையும் திரையும் மூப்பும் நண்ணி
நரை - வெளுத்த மயிர், Grey hairs
திரைதல் - வயதுமுதிர்ச்சியால் தோல் சுருங்குதல் To become wrinkled, as skin by age;
மூப்பு. – முதுமை, Old age;
நண்ணுதல் – அடைதல், approach, reach
விரக்தன் - பற்றற்றவன்
நன்மை தீமைஎந் நாளும் ஒன்றாய்க்
கலந்து தங்கும்இக் காசினி மீது
வாழ்வதில் மிக்க மகிழ்ச்சி யுடையோன்,
புவியில் அழகிய பொருளைத் தெரிந்து
சொந்த மாக்கிடச் சுதந்திர முடையோன்,
காசினி - பூமி
தனக்கென வாழாத் தரும சீலன் -
என்றும் மக்கள் ஏத்துதற் குரிய
மனிதன் ஒருவன் மண்ணில் தோன்றி
அருளால் அனைத்தும் அறவே யொழித்து, இவ்
வைய மீது மானிட ரெல்லாம்
தரும சீலன் - அறவாழ்வு வாழும் சிறந்த மனிதன்
ஏத்துதல் - போற்றுதல், துதித்தல், To praise,
உய்யும் வழியை உணர்த்தும் மந்திரம்
பாதலம் அதனில் பதுங்கிக் கிடப்பினும்
இவ்வுல கத்தினில் யாரும் இதுவரை
அஞ்ஞா னத்தால் அறியா திருப்பினும்
ஓய்வொழி வின்றி உழைத்திடு வானேல்,
பாதலம் – நரக லோகம், Nether world of serpents
ஓய்வொழி வின்றி - ஓய்வு + ஒழிவு + இன்றி
ஒழிவு – முடிவு
எந்நா ளாயினும் எவ்விடத் தாயினும்
வெளியாம்; நன்கு விளங்குதல் திண்ணம்,
தேடின கண்கள் தெரிசனம் செய்யும்;
நடந்த கால்கள் நன்னிலம் சேரும்;
பண்ணிய தியாகம் பழுதா காது;
வெளியாம் - வெளிப்படும் (பாதாலத்தில் மறைந்து கிடந்தாலும் வெளிப்படும் )
தெரிசனம், தரிசனம் - பார்வை. Auspicious sight, view
இவனே,
காலனை வென்ற காலனும் ஆவான்;
யான்இது செய்வேன்; யான்இது செய்வேன்;
தியாகம் செய்யத் தேசமொன் றுண்டு
அறிந்த மக்களே ஆயினு மாகுக;
காலனை வென்ற காலனும் ஆவான்;
காலன் - யமன், Yama.
எமனுக்கே எமனாவான்.
அறிந்த மக்களே ஆயினு மாகுக;
அறியா தவரே ஆயினு மாகுக;
செய்திடத் துணியும்இத் தியாக மதனால்
எண்ணிலா மக்கள் இன்பம் அடைவர்;
இந்நாட் டுள்ள யாவருளத்தும்
துடிக்கும் ஒவ்வொரு துடிப்பொடும் என்றன்
அறியா தவரே ஆயினு மாகுக;
தெரிந்த மக்களோ, தெரியாத மக்களோ அனைவரும் பயனடைவார்கள்
உள்ளமும் ஓயாது ஒத்துத் துடிக்கும்;
அழைத்து நிற்கும் அரிய சுடர்களே!
வருகின் றேன்இதோ! வருகின் றேன்இதோ!
அழுது புலம்பி அரற்றும் புவியே!
மகிழ்ந்து நீயும்உன் மக்களுக்கு வாழ,
சுடர்களே - நட்சத்திரங்கள்
அரற்று-தல் – புலம்புதல், To lament, cry, weep aloud,
என்குடி என்கிளை என்வாழ்வு என்சுகம்
என்இளம் பருவம் என்சிங் காதனம்
யான்வாழ் அரண்மனை யாவும் வெறுத்தேன்.
வெறுத்தற் கரிய விண்ணமு தே!என்
அன்பின் உருவே! அசோதரை நங்காய்!
கிளை - சுற்றம். Kindred, relations;
சிங்காதனம் - சிம்மாசனம் Throne;
வெறுத்தற் கரிய விண்ணமுதே - வெறுக்க முடியாத அமிழ்தம் போன்றவளே
விண் – மேலுலகம், Heaven;
உன்னையும்,
மறந்து செல்ல மனந்துணி கின்றேன்;
ஆயினும்,
நீள்நிலம் உய்ந்திட நீயும் உய்குவை;
காரிகை யே!நம் காதலில் மலர்ந்த
நீயும் உய்குவை - எனது தியாகம் எல்லோரையும் உய்விப்பதுபோல உன்னையும் உய்விக்கும்.
உய்த்தல் – உய்யச்செய்தல், To ensure salvation
மலரென உன்தன் வயிற்றினில் வளரும்
மகவினைக் கண்டு வாழ்த்துதற் குரிய
காலம் வரும்வரை காத்து நிற்பனேல்,
மனத்தில்,
கொண்ட உறுதி குலைந்து போய்விடும்.
உண்மை ஞானம்இவ் வுலகெலாம் ஒளிரச்
செய்வதென் கடனாம், சிறிது காலம்
பிரிகின் றேன், இதில் பிழையெதும் இல்லை,
வாய்த்த மனைவியே! வயிற்று மகவே!
தந்தையே! தமரே! தரணி மாந்தரே!
தமரே! தரணி மாந்தரே!
தமர் – சுற்றத்தார், Relations, kindred
மாந்தர் - மக்கள் Human beings
பொறுத்திட வேண்டும்; பொறுத்திட வேண்டும்.
பொறுத்துக் கொள்வது புண்ணிய மாகும்.
உள்ளம் தேறினேன்; உறுதியும் கொண்டேன்.
இனியொரு கணமும் இங்கு தங்கிடேன்.
யாதுந் தடையிலை; இறங்கிச் செல்வேன்.
நீள்நில மீது நித்தியா னந்த
வாழ்வை யடையும் வழிஇது வென்று
தீவிர மான தியாகத் தாலும்
ஓய்வில் லாத உழைப்பி னாலும்
அறியலா மென்னில் அறிந்து வருவேன்;
வாடி வருந்தி மன்னுயி ரெல்லாம்
அடையும் துன்பம் அனைத்தும் ஒழிப்பேன்"
என்று கூறி இரவில் இறங்கினன்,
நன்று நாடிய ஞானிசித் தார்த்தனே. 81
****
Then in her tears she slept, but sleeping sighed
As if that vision passed again
“The time! The time is come!” Whereat Siddhàrtha turned,
And, lo! the moon shone by the Crab! the stars
In that same silver order long foretold
Stood ranged to say: “This is the night!
choose thou
The way of greatness or the way of good:
To reign a King of kings, or wander lone,
Crownless and homeless, that the world be helped.”
Moreover, with the whispers of the gloom,
Came to his ears again that warning song,
As when the Devas spoke upon the wind:
And surely Gods were round about the place
Watching our Lord, who watched the shining stars.
“I will depart,” he spake; “the hour is come!
Thy tender lips, dear Sleeper, summon me
To that which save the earth but sunders us;
And in the silence of yon sky I read
My fated message flashing. Unto this
Came I, and unto this all nights and days
Have led me; for I will not have that crown
Which may be mine: I lay aside those realms
Which wait the gleaming of my naked sword:
My chariot shall not roll with bloody wheels
From victory to victory, till earth
Wears the red record of my name. I choose
To tread its paths with patient, stainless feet,
Making its dust my bed, its loneliest wastes
My dwelling, and its meanest things my mates:
Clad in no prouder garb than outcasts wear,
Fed with no meats save what the charitable
Give of their will, sheltered by no more pomp
Than the dim cave lends or the jungle-bush.
This will I do because the woful cry
Of life and all flesh living cometh up
Into my ears, and all my soul is full
Of pity for the sickness of this world;
Which I will heal, if healing may be found
By uttermost renouncing and strong strife.
For which of all the great and lesser gods
Have power or pity? Who hath seen them
who?
What have they wrought to help their worshippers?
How hath it steaded man to pray, and pay
Tithes of the corn and oil, to chant the charms,
To slay the shrieking sacrifice, to rear
The stately fane, to feed the priests, and call
On Vishnu, Shiva, Surya, who save None
not the worthiest
from the griefs that teach
Those litanies of flattery and fear
Ascending day by day, like wasted smoke?
Hath any of my brothers ’scaped thereby
The aches of life, the stings of love and loss,
The fiery fever and the ague-shake,
The slow, dull, sinking into withered age,
The horrible dark death
and what beyond
Waits
till the whirling wheel comes up again,
And new lives bring new sorrows to be borne,
New generations for the new desires
Which have their end in the old mockeries?
Hath any of my tender sisters found
Fruit of the fast or harvest of the hymn,
Or brought one pang the less at bearing-time
For white curds offered and trim tulsi-leaves?
Nay; it may be some of the Gods are good
And evil some, but all in action weak;
Both pitiful and pitiless, and both
As men are
bound upon this wheel of change,
Knowing the former and the after lives.
For so our scriptures truly seem to teach,
That once, and wheresoe’er, and whence begun
Life runs its rounds of living, climbing up
From mote, and gnat, and worm, reptile and fish,
Bird and shagged beast, man, demon, deva, God,
To clod and mote again; so are we kin
To all that is; and thus, if one might save
Man from his curse, the whole wide world should share
The lightened horror of this ignorance
Whose shadow is chill fear, and cruelty
Its bitter pastime. Yea, if one might save!
And means must be! There must be refuge! Men
Perished in winter-winds till one smote fire
From flint-stones coldly hiding what they held,
The red spark treasured from the kindling sun.
They gorged on flesh like wolves, till one sowed corn,
Which grew a weed, yet makes the life of man;
They mowed and babbled till some tongue struck speech,
And patient fingers framed the lettered sound.
What good gift have my brothers, but it came
From search and strife and loving sacrifice?
If one, then, being great and fortunate,
Rich, dowered with health and ease, from birth designed
To rule
if he would rule
a King of kings;
If one, not tired with life’s long day but glad
I’ the freshness of its morning, one not cloyed
With love’s delicious feasts, but hungry still;
If one not worn and wrinkled, sadly sage,
But joyous in the glory and the grace
That mix with evils here, and free to choose
Earth’s loveliest at his will; one even as I,
Who ache not, lack not, grieve not, save with griefs
Which are not mine, except as I am man;
If such a one, having so much to give,
Gave all, laying it down for love of men,
And thenceforth spent himself to search for truth,
Wringing the secret of deliverance forth,
Whether it lurk in hells or hide in heavens,
Or hover, unrevealed, nigh unto all:
Surely at last, far off, sometime, somewhere,
The veil would lift for his deep-searching eyes,
The road would open for his painful feet,
That should be won for which he lost the world,
And Death might find him conqueror of death.
This will I do, who have a realm to lose,
Because I love my realm, because my heart
Beats with each throb of all the hearts that ache,
Known and unknown, these that are mine and those
Which shall be mine, a thousand million more
Saved by this sacrifice I offer now,
Oh, summoning stars! I come! Oh, mournful earth.
For thee and thine I lay aside my youth,
My throne, my joys, my golden days, my nights,
My happy palace — and thine arms, sweet Queen!
Harder to put aside than all the rest!
Yet thee, too, I shall save, saving this earth;
And that which stirs within thy tender womb,
My child, the hidden blossom of our loves,
Whom if I wait to bless my mind will fail.
Wife! child! father! and people! ye must share
A little while the anguish of this hour
That light may break and all flesh learn the Law.
Now am I fixed, and now I will depart,
Never to come again till what I seek
Be found—if fervent search and strife avail.”
So, with his brow he touched her feet, and bent
The farewell of fond eyes, unutterable,
Upon her sleeping face, still wet with tears;
And thrice around the bed in reverence,
As though it were an altar, softly stepped
With clasped hands laid upon his beating heart,
“For never,” spake he, “lie I there again!”
And thrice he made to go, but thrice came back,
So strong her beauty was, so large his love:
Then, o’er his head drawing his cloth, he turned
And raised the purdah’s edge:
There drooped, close-hushed,
In such sealed sleep as water-lilies know,
The lovely garden of his Indian girls;
Those twin dark-petalled lotus-buds of all—
Gunga and Gotami—on either side,
And those, their silk-leaved sisterhood, beyond.
“Pleasant ye are to me, sweet friends!’’ he said,
“And dear to leave; yet, if I leave ye not,
What else will come to all of us save eld
Without assuage and death without avail?
Lo! as ye lie asleep so must ye lie
A-dead; and when the rose dies where are gone
Its scent and splendour? when the lamp is drained
Whither is fled the flame? Press heavy, Night!
Upon their down-dropped lids, and seal their lips,
That no tear stay me and no faithful voice.
For all the brighter that these made my life,
The bitterer it is that they and I,
And all, should live as trees do—so much spring,
Such and such rains and frosts, such winter-times,
And then dead leaves, with maybe spring again,
Or axe-stroke at the root. This will not I,
Whose life here was a God’s!—this would not I,
Though all my days were godlike, while men moan
Under their darkness. Therefore farewell, friends!
While life is good to give, I give, and go
To seek deliverance and that unknown Light!”
Then, lightly treading where those sleepers lay,
Into the night Siddhàrtha passed: its eyes,
The watchful stars, looked love on him: its breath,
The wandering wind, kissed his robe’s fluttered fringe;
The garden-blossoms, folded for the dawn,
Opened their velvet hearts to waft him scents
From pink and purple censers: o’er the land,
From Himalay unto the Indian Sea,
A tremor spread, as if earth’s soul beneath
Stirred with an unknown hope; and holy books
—Which tell the story of our Lord—say, too,
That rich celestial musics thrilled the air
From hosts on hosts of shining ones, who thronged
Eastward and westward, making bright the night—
Northward and southward, making glad the ground.
Also those four dread Regents of the Earth,
Descending at the doorway, two by two,—
With their bright legions of Invisibles
In arms of sapphire, silver, gold, and pearl—
Watched with joined hands the Indian Prince, who stood,
His tearful eyes raised to the stars, and lips
Close-set with purpose of prodigious love.
“Light of Asia”, by Sir Edwin Arnold - Book the Fourth