october
புத்தரின் வார்த்தைகள்
புனித பௌத்த இலக்கியத்திலிருந்து தினசரி படிக்க வேண்டியவை
ஆங்கிலத்தில் வணக்கத்துக்குரிய எஸ். தம்மிக்கா
தமிழில் திரு தி. சுகுணன், எம். ஏ.
THE WORDS OF THE BUDDHA
Daily Readings from the Buddhist Scriptures
By Bhante S. Dhammika
அக்டோபர் 274-304 October
274. மல்லாந்து கிடக்கும் எதுமறியாத ஒரு ஆண் குழந்தை, தன்னுடைய செவிலித்தாயின் கவனக் குறைவால் ஒரு குச்சியையோ அல்லது கல்லையோ தன் வாயில் போட்டுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். குழந்தையின் செவிலித்தாய் உடனே அதனை எடுப்பதற்கு ஏதேனும் முயற்சி செய்வாள். அவளால் அதை வெளியே எடுக்க முடியாவிட்டால் குழந்தையின் தலையைத் தனது இடதுகையால் தாங்கிப் பிடித்து, வலதுகை விரலை வாயினுள் விட்டு அதனை வெளியே எடுக்க முயற்சிப்பாள். அதனால் வாயில் இரத்தம் வந்தாலும் அவள் பொருட்படுத்த மாட்டாள். ஏன்? ஏனென்றால் கல்லை எடுக்காவிட்டால் அது குழந்தைக்குப் பேராபத்தை விளைவிக்கும். எவ்வழியில் கல்லை எடுத்தாலும் அதனால் பாதகமில்லை. மேலும் அந்தச் செவிலித்தாய் குழந்தையின் நன்மையைக் கருத்தில் கொண்டும், பாசத்தாலும், இரக்கத்தாலும், கருணையாலுமே அதனைச் செய்கிறாள். ஆனால் அக்குழந்தை சற்று அறிவு பெற்ற சிறுவனாக வளர்ந்த பிறகு அந்த செவிலித்தாய் அச்சிறுவனைக் கவனிக்கத் தேவையில்லை. 'அச்சிறுவனது அறியாமை அவனை விட்டு நீங்கி விட்டபடியால் அவனே தன்னைக் கவனித்துக் கொள்ள முடியும். ' என்று அவள் நினைப்பாள்.
அதைப்போலவே நம்பிக்கைக் குறைவாலும், சுய மரியாதைக் குறைவாலும், பழிக்கு அஞ்சியும், சக்தி மற்றும் மெய்யறிவுக் குறைவாலும் நல்லவைகளை ஒருவன் பழக்கப்படுத்திக் கொள்வதில்லையென்றால் அவன் என்னால் கவனிக்கப் படுகிறான். ஆனால் நல்லவைகளைப் பயிற்சிப் படுத்திக் கொள்பவர்களை நான் கவனிக்கத் தேவையில்லை. 'அவனிடமிருந்த அறியாமை ஒழிந்துவிட்டபடியால் அவன் இப்பொழுது தன்னைக் கவனித்துக் கொள்வான்,' என்று நினைத்துக் கொள்வேன்.
Suppose an innocent baby boy lying on his back were, because of the carelessness of his nurse, to put a stick or a stone into his mouth. His nurse would immediately do something to remove it. And if she could not get it out immediately, she would hold the child's head with her left hand, and with the finger of her right hand, get it out even if she had to draw blood. And why? Because such a thing is a danger to the child, by no means harmless. Also, the nurse would do such a thing out of love for the child's benefit, out of kindness and compassion. But when that boy is older and more wise, then the nurse no longer needs look after him, thinking: ‘The boy can look after himself, he is done with foolishness.’ In the same way, if, due to lack of faith, self-respect, fear of blame, energy and wisdom, good things are not practiced by one, then one must be watched over by me. But when good things are practiced, then I need not look after one, thinking: ‘He can now look after himself, he is done with foolishness.’
A.III,5
275. நீங்கள் இசைவுடனும், சச்சரவின்றியும் ஒன்றாக வாழும் பொழுது ஒருவன் வரம்பு மீறி ஒரு தவற்றைச் செய்யலாம். இது பற்றி நீங்கள் அவசரப்பட்டு அவனைக் கண்டிக்கத் தேவையில்லை. அவனைக் கவனித்து வரலாம். அவனைத் திருத்தும் பொழுது கீழ்கண்டவாறு நினைக்கலாம்: 'நான் கோபப்பட மாட்டேன். அவனும் கோபப்பட மாட்டான். ஏனென்றால், அவன் கோபமோ, சினமோ அற்றவன். அவன் விரைவாகச் செயல்படக் கூடியவன். அவனைச் சுலபமாகப் புரிய வைக்கலாம். இந்த மனிதனைத் திறனற்ற நிலையிலிருந்து திறன் மிக்க நிலைக்கு உயர்த்த என்னால் இயலும். எனக்கு அந்தச் சக்தி உண்டு.' இவ்வாறு நீங்கள் நினைத்தால் உங்களுக்குப் பேச உரிமை உண்டு.
நீங்கள் 'எனக்குக் கோபம் வராது. ஆனால் அவனுக்கு வரும். ஏனென்றால் அவன் சினமுடையவன், கோபக்காரன். மெதுவாகத்தான் செயற் படுவான். ஆனால் அவனை எளிதாக நம்ப வைக்க முடியும். இந்த மனிதனைத் திறனற்ற நிலையிலிருந்து திறன் மிக்க நிலைக்கு உயர்த்தி நிலை நிறுத்தும் சக்தி என்னிடமுள்ளது. அவனுடைய கோபம் மிகச் சிறியது. இதில் சிறப்பான செயல் நான் அவனைத் திறன் மிக்கவனாக நிலை நிறுத்த முடியும் என்பதே.' இப்படி நீங்கள் நினைத்தால் உங்களுக்குப் பேச உரிமை இருக்கிறது.
நீங்கள் 'எனக்குக் கோபம் வரும். ஆனால் அவனுக்கு வராது. ஏனென்றால் அவன் கோபமோ, சினமோ அற்றவன். விரைவாகப் புரிந்து கொள்வான். ஆனால் அவனை நம்ப வைப்பது கடினம். ஆனால் இந்த மனிதனைத் திறனற்ற நிலையிலிருந்து திறன் மிக்க நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தக் கூடிய சக்தி என்னிடமுள்ளது. என்னுடைய கோபம் மிகச்சிறியது. இதில் சிறப்பான செயல் அவனைத் திறன் மிக்கவனாக நான் நிலை நிறுத்த முடியும் என்பதே.' இப்படி நீங்கள் நினைத்தால் நீங்கள் பேசுவதற்கு உரிமை உடையவர்.
நீங்கள் 'எனக்குக் கோபம் வரும். அவனுக்கும் சினம் உண்டாகும். ஏனென்றால் அவன் சினமுடையவன். கோபம் உடையவன். மெதுவாகத் தான் புரிந்து கொள்வான். நம்ப வைப்பது சிரமம். அப்படியிருந்தும் இந்த மனிதனைத் திறனற்ற நிலையிலிருந்து திறன் மிக்கவனாக ஆக்கும் சக்தி என்னிடமுண்டு. என்னுடைய கோபம் மிகச் சிறியது. இதில் சிறப்பான செயல் அவனைத் திறன் மிக்கவனாக நான் நிலை நிறுத்த முடியும் என்பதே.' இப்படி நினைத்தால் உங்களுக்குப் பேச உரிமை இருக்கிறது.
ஆனால் நீங்கள் இவ்வாறு நினைத்தால்: 'எனக்குக் கோபம் வரும். அதைப்போல் அவனுக்கும் கோபம் வரும். ஏனென்றால் அவன் சினமுடையவன். கோபக்காரன். மெதுவாகத் தான் புரிந்து கொள்வான். அவனை நம்ப வைப்பது கடினம். இத்திறனற்ற மனிதனைத் திறன்மிக்க நிலைக்கு கொண்டு வரும் சக்தி என்னிடம் இல்லை. ' அப்படியானால் ஒருவன் மீது நிதானமான மன நிலையில் அமைதியாக இருப்பதே மேலாம்.
When you are living together, in harmony and without contention, a certain person might do something wrong or transgress. Concerning this, you should not hasten to reproof. The person should be examined. In correcting him you might think: ‘I won’t get annoyed, nor will he, for he is without irritation and anger, he is quick to see and easy to convince. I have the power to raise this person from the unskillful and establish him in the skillful.’ If you think this then it is right to speak. If you think: ‘I won’t get annoyed but he will, for he is irritable, angry, slow to see but easy to convince. I have the power to raise this person from the unskillful and establish him in the skillful. His annoyance is but a small thing, the great thing is that I will be able to establish him in the skilled.’ If you think this then it is right to speak. If you think: ‘I will get annoyed but he won’t, for he is not prone to irritability or anger, he is quick to see but difficult to convince. But I have the power to raise this person from the unskillful and establish him in the skillful. My annoyance is but a small thing, the great thing is that I will be able to establish him in the skilled.’ If you think this then it is right to speak. If you think: ‘I will get annoyed and so will he, for he is irritable, angry, slow to see and hard to convince. But still, I have the power to raise this person from the unskillful and establish him in the skillful. My annoyance is but a small thing, the great thing is that I will be able to establish him in the skilled.’ If you think this then it is right to speak. However, if you think: ‘I will get annoyed and so will he, for he is irritable, angry, slow to see and difficult to convince, and I don’t think I have the power to raise him from the unskillful and establish him in the skillful.’ Then in this case have equanimity towards that person.
M.II,241
276. உலகில் ஒளி வீசுபவை நான்கு,
ஐந்தாவதை உங்களால் காணவியலாது.
பகலில் சூரியன் ஒளி தருகிறான். இரவிலோ சந்திரன்.
இரவிலும் பகலிலும் நெருப்பு ஒளி கொடுக்கிறது,
இங்கும், அங்கும்.
ஆனால் எல்லா ஒளிரும் பொருள்களிலும்
புத்த பெருமானே சிறந்தவராம்.
Four things shine in the world,
You will not find a fifth.
The sun shines by day and the moon by night.
Fire gives light both day and night,
Both here and there.
But of all things that shine,
The Buddha is the best.
S.I,14
277. எப்படிப்பட்ட மனிதனைப் பின்பற்றக் கூடாது? இங்கு ஒருவன் மற்றவனைவிட ஒழுக்கத்திலும், செறிவான நிலையிலும், அறிவிலும் தாழ்ந்தவனாக இருந்தால் இரக்க சிந்தனையோடும், கருணையோடும் தவிர அவனைப் பின்பற்றவோ, சேவை செய்யவோ கௌரவப்படுத்தவோ கூடாது.
எப்படிப்பட்ட மனிதனைப் பின்பற்ற வேண்டும்? இங்கு ஒருவன் மற்றவனுக்கிணையாக ஒழுக்கத்திலும், செறிவான சிந்தனையிலும், அறிவிலும் சமமாக உள்ளவனைப் பின்பற்றலாம். சேவை செய்யலாம். கௌரவம் அளிக்கலாம். ஏனென்றால் நாம் இவ்வாறு நினைக்கலாம்: 'நாங்கள் இருவரும் ஒழுக்கத்திலும், செறிவான சிந்தனையிலும், அறிவிலும் கைதேர்ந்தவர்கள். எங்கள் உரையாடல் இவற்றைப் பற்றியே மையம் இட்டிருக்கும். இதனால் எங்களுக்குப் பயனும் வசதியும் கிடைக்கும்.'
எப்படிப்பட்ட மனிதனைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல் அவருக்குச் சேவை செய்து, கௌரவித்து வணங்கவும் வேண்டும்? இங்கு, ஒருவன் மற்றவனைவிட ஒழுக்கத்திலும், செறிவான சிந்தனையிலும், அறிவிலும் உயர்ந்தவனாக இருந்தால் அவனுக்கு மதிப்பளித்து வணங்கி அவனைப் பின்பற்றலாம்; சேவை செய்யலாம்; கௌரவம் அளிக்கலாம். 'இதுவரை முழுமை பெறாத நம் ஒழுக்கத்தையும், செறிவான சிந்தனையையும், அறிவையும் முழுமை பெறச் செய்யலாம். முழுமை பெறுவதோடு மேலும் சேர்த்துக் கொள்ளலாம்.' என்று நினைக்க வேண்டும்.
What sort of person should not be followed? In this case, a person who is inferior to oneself in morality, concentration and wisdom is not to be followed, served or honoured except out of consideration and compassion for him. And what sort of person should be followed? In this case, a person who is equal to oneself in morality, concentration and wisdom should be followed, served and honoured, thinking: ‘As we are both proficient in morality, concentration and wisdom, our conversation will center on these things and this will contribute to our profit and comfort.’ And what sort of person is to be followed, served, honoured, and worshipped with reverence? In this case, a person who is superior to oneself in morality, concentration and wisdom should first be reverently worshipped and then followed, served, and honoured, thinking: ‘In this way I shall complete the morality, concentration and wisdom which is not yet complete and supplement that which is.’
A.I,125
278. ஒரு கை நொடிப் பொழுதிற்கு ஒரு துறவி அன்பைப் பற்றிய எண்ணத்தை எண்ணி, வளர்த்துக் கவனம் செலுத்தினால் அப்படிப்பட்ட ஒருவரையே உண்மையான துறவியெனலாம். அவருடைய தியானம் வீண் போகாது, அவர் ஆசிரியரின் போதனைகளைப் பின்பற்றுகிறார், அவர் சிறந்த அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறார், நாட்டில் பிச்சை எடுக்கும் உணவை உண்பது நற்செயலுக்காகவே.
அவ்வளவு சிறந்த எண்ணங்கள் உடையவரைப் பற்றி நான் வேறு என்ன சொல்ல முடியும்?
If, for as long as it takes to snap a finger, a monk thinks, develops and gives attention to the thought of love, then he is called a true monk. His meditation is not barren, he lives by the Teacher’s instructions, he is one who takes good advice and eats the country’s alms-food to good purpose. What then could I say of one who makes much of such a thought?
A.I,10
279. ஒருவன் நடக்கும் போது, அவன் நடப்பதை உணர்ந்து 'நான் நடக்கிறேன்!' என்கிறான். அல்லது அவன் ஓர் இடத்தில் நிற்கும் போது அவன் தன்னை உணர்ந்து 'நான் ஓர் இடத்தில் நிற்கிறேன்' என்கிறான். அவன் கீழே அமர்ந்திருக்கும்போது அந்நிலையையுணர்ந்து, 'நான் கீழே அமர்ந்திருக்கிறேன்' என்கிறான். படுத்திருக்கும் போது 'நான் படுத்திருக்கிறேன்!' என்கிறான். ஆக ,அவனது உடல் எவ்வாறு செயலாட்சி செய்யப்படுகிறதோ அப்படியே அவன் அதனை உணர்கிறான். மேலும் அவன் செல்வதையோ அல்லது வருவதையோ அவன் உணர்ந்தே செயற்படுகிறான்; அவன் முன்னால் பார்த்தாலோ அல்லது பின்னால் பார்த்தாலோ, அவன் கையை மடக்கினாலோ அல்லது நீட்டினாலோ, அவன் மேலங்கியை, பிட்சை எடுக்கும் பாத்திரத்தை தன்னுடன் எடுத்துச் செல்லும்போதும், தன்னை உணர்ந்தே செயல்படுகிறான். அவன் சாப்பிடும் பொழுது, நீர் அருந்தும் பொழுது, மெல்லும் பொழுது, சுவைக்கும் பொழுது தன்னை உணர்கிறான். அவன் கழிப்பிடம் செல்லும் பொழுதும், நடக்கும் பொழுதும், நிற்கும் பொழுதும், அமர்ந்திருக்கும் பொழுதும், தூங்கும் பொழுதும் அல்லது விழித்திருக்கும் பொழுதும், பேசும் பொழுதும் அல்லது ஒருவன் மௌனமாக இருக்கும் பொழுதும் தன்னைத் தெளிவாக உணர்ந்தே செய்கிறான். அவன் இப்படி இவ்வழியில் விடாமுயற்சி, ஆர்வம், சுயஉறுதி ஆகியவையுடன் வாழும்பொழுது, உலகஞ் சார்ந்தவற்றை விலக்கி மனது தானாகவே தீர்வு செய்யப்பட்டு அமைதியடைகிறது. தெளிவான உருத்தோற்றத்துடன் ஒரு முகப்படுத்தப்படுகிறது. இவ்விதம்தான் ஒருவன் உடலை பற்றிய மனக் கவனத்தை வளர்ச்சியடையச் செய்து கொள்கிறான்.
When walking, he is aware: ‘I am walking,’ or when he is standing still, he is aware: ‘I am standing still,’ or when he is sitting down, he is aware: ‘I am sitting down,’ or when he is lying down, he is aware: ‘I am lying down.’ So however his body is disposed, he is aware that it is like that. Again, when he is going or coming, he acts in a clearly conscious way; when he is looking in front or behind, when he has bent or stretched out his arm, when he is carrying his cloak, robe and bowl, he is one who acts in a clearly conscious way. When he is eating, drinking, chewing and tasting, when he is going to the toilet, when he is walking, standing, sitting, asleep or awake, talking or silent, he is one who acts in a clearly conscious way. While he is in this way, diligent, ardent, self-resolute, those memories and plans that are worldly are got rid of, and so by itself the mind is inwardly settled, calmed, focused and concentrated. In this way does one develop mindfulness of the body.
M.III,89
280. அண்ணல் கூறினார்: "உதாரணமாக ஒரு பெருங் கூட்டம் ஒன்றாகக் கூடி: 'இந்த உலகிலேயே அழகான பெண், அழகான பெண்!' என்று சத்தம் போடுகிறார்கள். அப்பெண்ணும் தன் அழகையும் கவர்ச்சியையும் காட்டி, அவர்களுக்காக நாட்டியம் ஆடிப் பாட்டும் பாடுகிறாள். இன்னும் பெரும் கூட்டம் கூடுகிறது. அப்போது அங்கு ஒருவன் வருகிறான். அவனோ வாழ விரும்புபவன். சாவை விரும்பாதவன். மகிழ்ச்சியை விரும்புபவன். வேதனையை விரும்பாதவன். கூட்டத்தினர் அவனிடம் இப்படிக் கூறுகின்றனர்: 'இதோ பார் மனிதா! இங்கு ஒர் கிண்ணத்தில் தழும்பத் தழும்ப எண்ணெய் இருக்கிறது. நீ அதை இந்தக் கூட்டதிற்குள் எடுத்துச் செல்ல வேண்டும். உனக்குப் பின்னால் ஒருவன் ஓங்கிய வாளுடன் வருவான். ஒரு துளி எண்ணெய் கீழே சிந்தினாலும் உன் தலை வெட்டப்படும்.'
"இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அம்மனிதன் அந்த எண்ணெய்க் கிண்ணத்தைப் புறக்கணித்து விட்டு நடனம் ஆடும் பெண் மீது கவனத்தைத் திருப்பி விடுவானா?"
"கண்டிப்பாக இல்லை, அண்ணலே!"
"நன்று. இக்கதையை நான் கற்பனை செய்து, நீங்கள் விளங்கிக் கொள்வதற்காகக் கூறினேன். அதன் பொருளாவது: அந்த விளிம்பு வரை எண்ணெய் நிறைந்த கிண்ணம், உடலின் மீது விழிப்புடைய மனத்திற்கு ஈடு. இப்படித்தான் உங்களுக்கே நீங்கள் பயிற்சி அளித்துக் கொள்ள வேண்டும்: 'உடலின் மீதான மனக் கவனத்தை உருவாக்குவோம். இந்த மனக் கவனத்தைப் பெரிது படுத்துவோம். அதனை ஒரு வாகனமாக்குவோம் (கருவியாக்கிப் பயன்படுத்துவோம்), நிலை நாட்டுவோம், பயனுள்ளதாகச் செய்வோம். அந்த மனக் கவனம் நிரம்பி நல்ல முறையில் பயன் படுத்தப்படும்.' "
The Lord said: “Suppose people were to flock together, crying: ‘The fairest girl in all the land. The fairest in the land!’ That girl, displaying all her charms, would dance and sing for them and even more people would gather. Then suppose a man came along, fond of life, not liking death, fond of happiness, averse to pain, and they were to say to him: ‘Here’s a bowl full of oil. You must carry it through the crowd. A man will come behind you with an uplifted sword and if you spill a drop of oil he will chop off your head.’ Now, what do you think? Would that man become inattentive and pay attention to what was going on around him rather than to the bowl?’
“Surely not, Lord.”
“Well, this is an analogy I have made for your understanding and this is what it means. The bowl brimful of oil is a term for mindfulness of the body. So, this is how you should train yourself: ‘We shall cultivate mindfulness of the body, we shall make much of it, make it a vehicle, establish it, make it effective.It shall be increased and well applied’ ”
S.V,170
281. போற்றுதற்குரிய சாரிபுத்திரர் கூறினார்: "எப்பொழுது ஒருவர் போதிக்க விரும்புகிறாரோ, அவர் ஐந்து கருத்துக்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பிறகே போதிக்க வேண்டும். அவை எவை? அவர் நினைக்க வேண்டியவை: 'நான் சரியான நேரத்தில் போதிக்க வேண்டும்; தவறான நேரத்தில் அல்ல. நான் எதைப் பேச வேண்டுமோ, அதைப் பற்றியே பேசவேண்டும்; இல்லாததைப் பற்றி அல்ல. நான் சாந்தமாகப் பேசவேண்டும்; கடுமையாக அல்ல. நான் குறிக்கோள்களைப் பற்றிப் பேசவேண்டும்; குறிக்கோளற்றவைகளைப் பற்றி அல்ல. நான் அன்பு நிறைந்த மனத்துடன் பேசவேண்டும். தீமை நிறைந்த மனத்துடன் அல்ல.' ஒருவர் மற்றவருக்குப் போதிக்க விரும்பும் போது இவ்வைந்து நியதிகளையும் தகுந்த முறையில் நிலை நாட்ட வேண்டும்."
The Venerable Sariputta said: “When a teacher wishes to instruct another, let him arouse five things in himself and then instruct. What five? Let him think: ‘I will speak at the right time, not at the wrong time. I will speak about what is, not about what is not. I will speak with gentleness, not with harshness. I will speak about the goal, not about what is not the goal. I will speak with a mind filled with love, not with a mind filled with ill-will.’ When a teacher wishes to instruct another, let him first establish well these five things.”
A.III.196*
282. ரோகிதாசா என்ற கடவுளரின் மகன் ஒருவன், இரவு மறையும் நேரம் அண்ணலைக் காண வந்தான். அவனது பிரகாசமான உடல் ஜேதவனத்தையே ஒளிமயமாக்கியது. அண்ணலை வணங்கி ஒருபுறமாக நின்று கேட்டான்: "அண்ணலே, வெகுதூரம் பயணம் செய்து உலகத்தின் முடிவு எல்லையைக் காண முடியுமா? தெரிந்து கொள்ள முடியுமா? அதாவது பிறப்பு, மூப்பு, மரணம் இல்லாத, ஒரு பிறப்பிலிருந்து மற்றோர் பிறப்பென்று உலாவிக்கொண்டிருக்காத இடத்தைக் காண முடியுமா?"
"அப்படி ஓரிடம் செல்வதால் உலகின் முடிவை அறிந்து கொள்ளவோ, பார்க்கவோ முடியாது."
"அதிசயம்! அற்புதம்! அண்ணலே சரியாகச் சொன்னீர்கள். கடந்த பிறவியில் நான் போஜனின் மகன் ரோகிதாசா என்று அழைக்கப்பட்ட ஒரு முனிவராக இருந்தேன். என்னிடம் உளஞ்சார்ந்த பல சக்திகள் இருந்தன. என்னால் வானத்தில் நடக்க முடிந்தது. என்னுடைய வேகம் அம்பைவிடத் தீவிரமானதாக இருந்தது. என்னுடைய ஒரு அடியின் அகலம் கிழக்குக் கடலிலிருந்து மேற்கு கடலுக்கு இடைப்பட்ட தூரம் வரை இருந்தது. அப்பொழுது நான் இவ்வாறு எண்ணினேன்: 'இந்த உலகத்தின் முடிவை அடைந்து விடுவேன்.' ஆனால் சாப்பாட்டிற்கு, அருந்துவதற்கு மற்றும் இயற்கை அழைப்பிற்குச் செலவிட்ட நேரத்தைத் தவிர, தூக்கத்தையும், களைப்பையும் தவிர்ப்பதற்கு எடுத்த முயற்சிகளைத் தவிர, நான் நூறாண்டுகள் வாழ்ந்து பயணம் செய்தும், உலகின் முடிவைக் காணவே முடியவில்லை. முயற்சி செய்தே நான் இறந்து விட்டேன்."
அண்ணல் சொன்னார்: "உலகின் முடிவைக் காணாமல் துன்பத்தின் முடிவைக் காண முடியாது என்று நான் கூறுகிறேன். இந்த ஆறு அடி உயர உடலுக்குள்ளே, அதன் நினைவுகளிலும் எண்ணங்களிலும் தான் உலகமும், உலகின் மூலமும், உலகின் முடிவும், உலகத்தின் முடிவிற்கு அழைத்துச் செல்லும் செயலும் இருக்கிறது."
When the night was fading, Rohitassa, a son of the gods, came to see the Lord, lighting up all the Jeta Grove with a surpassing brilliance, and saluting him stood to one side and asked: “Lord, is it possible by going far to know, to see, to reach the end of the world, that is, where there is no more being born, growing old and dying, no more trudging on from one existence to another?”
“I say that the end of the world cannot be known, seen or reached by going.”
“Wonderful! Marvelous! This is well said by the Lord. In my last life I was a sage named Rohitassa, son of Bhoja. I had such psychic power that I could walk in the sky and my speed was such that I could go faster than an arrow. The extent of my stride was the distance between the east and west ocean. And I thought to myself: ‘I am going to reach the end of the world.’ Except for time spent eating, drinking and answering the call of nature, except for struggles to shake off sleep and weariness, though I lived and traveled for a hundred years, I never reached the end of the world. I died trying.”
Then the Lord said: “I say that the ending of suffering cannot be found without going to the end of the world. And within this fathom-high body with its perceptions and thoughts is the world, the origin of the world, the ending of the world and the practice leading to the end of the world.”
A.II,47-8
283. கபிலவாஸ்த்துவுக்கும் கோலியாவுக்கும் இடையே ஓடிய ரோகினி ஆற்றில் அணைகட்டி இருபுறமும் இருந்த நிலத்தைப் பண்படுத்திச் சாக்கியர்களும் கோலியர்களும் விவசாயம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஜீதாமூலா மாதத்தில் பயிர்கள் வாடத் தொடங்கின. இரண்டு நகரத்தாராலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிலாளர்கள் ஒன்று கூடினர். கோலியர்கள் கூறினார்கள்: "ஆற்றின் நீரை இரண்டு பக்கமும் திருப்பி விட்டால் இருவருக்குமே நீர் போதாது. எங்கள் பயிருக்கு ஒரு முறை நீர் பாய்ந்தாலே போதும் எங்கள் பயிர் நன்றாக விளைந்து விடும். ஆகையால் நாங்கள் நீரை எடுத்துக் கொள்கிறோம்." என்றனர். அதற்கு சாக்கியர்கள் "உங்கள் களஞ்சியங்கள் நிரம்பி விட்ட பிறகு, எங்கள் விலையுயர்ந்த பொருள்களையும், வாளிகளையும் பைகளையும் கையில் எடுத்துக் கொண்டு உங்களுடைய வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுக்க வேண்டியிருக்கும். அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் பயிர்களுக்கு ஒரே முறை நீர் பாய்ச்சினால் அவை நன்றாக விளைந்து விடும். ஆகையால் நாங்கள் நீரை எடுத்துக் கொள்கிறோம்."
"நாங்கள் அதை உங்களுக்குக் கொடுக்க மாட்டோம்!"
"நீங்கள் தண்ணீர் எடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்!"
பேச்சு முற்றியது. ஒருவன் மற்றவனை அடித்தான். அடி திருப்பிக் கொடுக்கப் பட்டது. இரு தரப்புக்கும் சண்டை மூண்டது. அவர்களின் இரண்டு அரச வம்சத்தைப் பற்றியும் அவதூறு கூறிக் கொண்டனர். கோலியத் தொழிலாளர்கள் கூறினர்: "உங்கள் கட்டுப்பாடற்ற குழந்தைகளை எல்லாம் கூட்டிக் கொண்டு நீங்கள் எந்த நாட்டுக்குச் சொந்தமோ அங்கு சென்று விடுங்கள். நாய்களையும் நரிகளையும் போன்று தன் சொந்தச் சகோதரிகளுடனேயே குடும்பம் நடத்தும் நீங்கள் யானைகளாலும், குதிரைகளாலும், கேடயங்களாலும் எங்களை எப்படித் தாக்க முடியும்?" அதற்குச் சாக்கியத் தொழிலாளர்கள்: "குஷ்ட நோயாளிகளே! உங்கள் சீர்கெட்ட குழந்தைகளை அழைத்துக் கொண்டு உங்களுக்குச் சொந்தமான இடத்திற்குச் சென்று விடுங்கள். மிருகங்களைப் போல இலந்தை மரங்களில் வாழும் நாடோடிகளின் யானைகளாலும், குதிரைகளாலும், கேடயங்களாலும் நாங்கள் எப்படித் தாக்கப்பட முடியும்?" என்றனர்.
இரண்டு குழுவினரும் அங்கு ஏற்பட்ட சச்சரவை அத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர்களிடம் கூறினர். அவ்வமைச்சர்கள் சம்பந்தப்பட்ட அரச குடும்பத்தினரிடம் இதைப்பற்றிக் கூறினர். சாக்கியர்கள் போருக்குத் தயாராகினர்: "சகோதரிகளுடன் தவறி வாழ்ந்தவர்களுடைய சக்தியும் பலமும் என்னவென்று காண்பிப்போம்." என்று அறை கூவினர். கோலியர்களும் "இலந்தை மரங்களின் மீது வாழ்ந்தவர்களின் சக்தியும் பலமும் என்னவென்று காண்பிப்போம்." என்று பதிலுக்கு அறை கூவினர்.
அக்காலை நேரத்தில் உலகைப் பார்வையிட்டு வந்த அண்ணல் தம் உறவினர்கள் சண்டையிட்டுக் கொள்வதைக் கண்டு இவ்வாறு எண்ணினார்: "இப்பொழுது நான் செல்லாவிட்டால் அவர்கள் ஒருவரையொருவர் அழித்துக் கொள்வர். அங்கு செல்வது என் கடமையாகும்." அண்ணல் காற்றில் மிதந்து ரோகினி ஆற்றின் மீது அந்தரத்தில் கால் மீது கால் போட்டுக் கொண்டு அமர்ந்தார். அண்ணலைப் பார்த்த அவரது உறவினர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு அவரை வணங்கினர்.
அண்ணல் அரசர்களைக் கேட்டார்: " பேரரசே! இந்தச் சச்சரவு எதற்காக?”
"எங்களுக்கு தெரியாது, போற்றுதலுக்குரிய அய்யா."
"பின் யாருக்குத் தெரியும்?"
"படைத் தளபதிகளுக்குத் தெரியும்."
படைத்தளபதிகளைக் கேட்டபொழுது அரசப் பிரதிநிதிகளுக்குக் காரணம் தெரியும் என்று கூறினர். இப்படியே அண்ணல் ஒவ்வொருவராகக் கேட்கக் கேட்க ,ஒருவருக்கும் சண்டைக்கான சரியான காரணம் தெரியவில்லை. இறுதியாகத் தொழிலாளர்களைக் கேட்டபோது அவர்கள் "சண்டைக்குக் காரணம் தண்ணீரே," என்று கூறினர்.
பிறகு அண்ணல் அரசரைப் பார்த்து: "பேரரசரே, தண்ணீரின் மதிப்பு என்ன?" என்று கேட்டார்.
"மிகச் சொற்பமே. போற்றுதலுக்குரிய ஐயா."
"ஒரு ராணுவ வீரரின் மதிப்பென்ன?"
"போற்றுதலுக்குரிய ஐயா! ஒரு ராணுவ வீரனின் மதிப்பு விலைமதிப்பற்றது."
அண்ணல் கூறினார்: "சிறிது நீருக்காக வேண்டி விலைமதிப்பற்ற ராணுவ வீரர்களைக் கொல்வது சரியான செயலாகுமா?"
அவர்கள் அமைதியாக இருந்தனர். அண்ணல் கூறினார்: "பேரரசர்களே! ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? நான் இங்கு இல்லையென்றால் நீங்கள் ஒரு இரத்த ஆற்றை அல்லவோ ஓடவைத்திருப்பீர்கள். உங்கள் செயல் மதிக்கத்தக்கதன்று. நீங்கள் ஐந்துவிதமான வெறுப்புகளோடு, வெறுப்பில் வாழ்கிறீர்கள். நான் முழு அன்புடன் வாழ்கிறேன். நீங்கள் உணர்ச்சிவயப்பட்டு நோயாளிகளாக வாழ்கிறீர்கள். நான் நோயிலிருந்து விடுபட்டு வாழ்கிறேன். நீங்கள் அந்த ஐந்து புலன் உணர்வுகளின் மகிழ்ச்சிகளை விரட்டிக் கொண்டு வாழ்கிறீர்கள். நானோ மனநிறைவுடன் வாழ்கிறேன்."
It is said that the Sakyans and the Koliyans dammed the waters of the Rohini River between Kapilavatthu and Koliya and cultivated the fields on both sides of the river. During the month of Jetthamula, the crops began to wilt, and the workers employed by both cities assembled. Those of Koliya said: “If the water is diverted to both sides of the river there will not be enough for both of us. As our crops will ripen with a single watering, let us have the water.” But the Sakyans replied: “After your granaries are full, we will not be able to face taking our valuables and with basket and bags in hand, go begging from your doors. Our crops will ripen with a single watering, so let us have the water.”
“We will not give it to you.”
“And we will not let you have it.”
Talk grew bitter, one person struck another, the blow was returned, fighting broke out, and as they fought they cast aspersions upon the origin of the each other’s royal families. The Koliyans workers said: “Take your brats and go where you belong. How can we be harmed by the elephants, horses, shields and weapons of those have slept with their own sisters like dogs and jackals?” The Sakyan workers replied: “You lepers, take your brats and go where you belong. How can we be harmed by the elephants, horses, shields and weapons of miserable outcasts who live up jujube trees like animals.” Both groups went and reported the quarrel to the ministers who were in charge of the work, who in turn reported it to the royal households. The Sakyans prepared for battle, saying: “We will show them the strength and power of those who have slept with their sisters.” The Koliyans prepared for battle, saying: "We will show them the strength and power of those who live up jujube trees.”
As the Lord surveyed the world at dawn he saw his kinsmen and thought: “If I do not go, these people will destroy each other. It is my duty to go to them.” He passed through the air to where his kinsmen were gathered, and seated himself cross-legged in the air in the middle of the Rohini River. When the Lord’s kinsmen saw him they put down their weapons and worshipped him. Then the Lord said: “What is this quarrel about, great king?”
“We know not, reverend sir.”
“Then who would know?”
“The commander-in-chief of the army will know.”
When asked, the commander-in-chief suggested the viceroy might know. Thus the Lord asked one after the other with none of them knowing the cause of the quarrel, until the workers were asked. They replied: “The quarrel is about the water.”
Then the Lord said to the king: “What is the value of water, great king?”
“Very little, reverend sir.”
“What is the value of a warrior?”
“A warrior, reverend sir, is beyond price.” Then the Lord said: “Then is it right that for a little water you should kill warriors who are beyond price?”
They were all silent. Then the Lord said: “Great kings, why do you act thus? Were I not here today, you would cause a river of blood to flow. Your actions are unworthy. You live in hatred, given to the five kinds of hatred. I live full of love. You live sick with passions. I live free from sickness. You live chasing after the five kinds of sense pleasures. I live in contentment.”
Dhp-a.254*
284. கோபத்தை அன்பாலும்,
தீமையை நன்மையாலும்,
குறுகிய மனப்பான்மையைத் தாராள மனத்துடனும்,
பொய்மையை வாய்மையாலும் வெற்றிகொள்ளுங்கள்.
Conquer anger with love,
Evil with good,
Meanness with generosity,
And lies with truth.
Dhp.223
285. "அவன் என்னைத் திட்டினான், என்னை அடித்தான்,
என்னைத் துன்புறுத்தினான், என் உடைமையைக் கவர்ந்து கொண்டான்."
என்று நினைக்கும் மனிதர்கள்
என்றும் வெறுப்பைத் தவிர்த்ததில்லை.
"அவன் என்னைத் திட்டினான், என்னை அடித்தான்
என்னைத் துன்புறுத்தினான், என் உடைமையைக் கவர்ந்து கொண்டான்."
இந்த எண்ணத்தை விட்டவர்கள்
துறந்து விடுதல் வெறுப்பினையே.
இவ்வுலகில் வெறுப்பு வெறுப்பால் தனிவதில்லை.
அன்பே வெறுப்பை வெற்றி கொள்ளும்.
இதுதான் தொன்றுதொட்டு நிலைத்த தர்மமாகும்.
“He abused me, he hit me,
He oppressed me, he robbed me.”
Those who hold on to such thoughts
Never still their hatred.
“He abused me, he hit me,
He oppressed me, he robbed me.”
Those who do not hold such thoughts
Soon still their hatred.
For in this world,
Hatred is never appeased by more hatred;
It is love that conquers hatred.
This is an eternal law.
Dhp.3-5
286. காசியில் நெய்யப்படும் துணிக்கு அழகான வண்ணம் உண்டு. அது தொடுவதற்கு இனிதாக வழவழப்பாக இருக்கும். அது மிகுந்த விலை மதிப்புடையது. காசியில் நெய்யப்பட்ட நடுத்தரத் துணிக்கும் அல்லது நீண்ட நாள் பயன் படுத்திய பழைய துணிக்கும் அதே இயல்புகள் தான். மக்கள் கிழிந்து போன காசித்துணியை வைரக்கற்களை மடித்து வைப்பதற்காக உபயோகிப்பர். அதை ஒரு வாசனைத் திரவியம் போடப்பட்ட பெட்டியில் அடுக்கி வைப்பர்.
அதைப்போலவே ஆரம்ப காலத் தொண்டன், ஒழுக்கமாகவும் விரும்புதற்குரிய குணநலன்களையும் கொண்டிருந்தால் அதனையே அவனுடைய அழகான வண்ணம் என்று நான் கூறுவேன்.
அவனைப் பின்பற்றி அவனுடன் இருப்பவர்கள் அவனுக்கு மரியாதை அளித்து, அவனுடைய நோக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது தங்கள் நீண்ட கால நலனுக்கும் மகிழ்ச்சிக்கும் அது நன்மை பயக்கும் என்பதை அறிவர். இதனையே நான் தொடுவதற்கு இனியதென்று கூறுகிறேன்.
அவனுக்குப் பரிசுகளை வழங்குபவர்கள் தங்களுக்கு அதனால் பயன் விளைவதைக் காண்பர். இதனையே நான் பெருமதிப்பு எனக் கருதுவேன்.
இதைப்போலவே ஒரு நடுத்தரத் தொண்டரைப் பற்றியும் ஒரு முதிர்ச்சி பெற்ற தொண்டரைப் பற்றியும் கூறலாம். உதாரணத்திற்கு ஒரு முதியவர் ஒரு அவையில் பேசுகிறார். அவர் பேசும் போழுது அவையிலுள்ளோர், 'சத்தம் போடாதீர்கள். இந்த முதியவர் அறத்தையும், கட்டுப்பாட்டையும் போதிக்கிறார்.'என்றுசொல்வார்கள்: ஆக அவருடைய வார்த்தைகள், மக்கள் காசித் துணியை வாசனைத் திரவியம் போடப்பட்ட பெட்டியில் அடுக்கி வைப்பது போலச் சேகரித்து வைப்பதற்குரிய கருவூலமாகக் கருதப்படுகிறது. நீங்களும் இதைப்போலவே பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும்: 'நாம் எல்லோரும் காசித்துணியைப்போல வாழ வேண்டும். மட்டமான துணியைப்போல வாழக் கூடாது.'
Kasi cloth has a beautiful colour, it is pleasant to touch and it is of great value. Even Kasi cloth of middling quality or worn out Kasi cloth is the same. People use worn out Kasi cloth to wrap gems in, or they lay it up in a scented chest. In the same way, if a beginner is virtuous and of lovely nature, this I call his beautiful colour. Those who follow him and keep his company, who pay deference to him and come to share his views find it to their welfare and happiness for a long time. This I call his being pleasant to touch. Also those who give him gifts find it to their advantage. This I call his being of great value. And it is the same for a disciple of middling standing and an elder. Now suppose an elder is speaking to an assembly. As he speaks, the audience would say: ‘Silence, this elder is teaching Dhamma and discipline.’ Thus, his words become a treasure to be laid up, just as people lay up Kasi cloth in a scented chest. So, this is how you should train yourselves: ‘We will be like Kasi cloth, not like coarse cloth.’
A.I,249
287. பேரறிவு பெற்ற ஒருவன் குருடனுக்கு வழிகாட்டியாகப் பயன்படுகிறான். அவனுக்குச் சரியான வழியைக் காட்டுகிறான். அவன் செவிடர்களுக்கு கைமூலமாகச் சைகைகள் காண்பித்து அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்க உதவுகிறான். அவன் ஊமைகளுக்கும் அதைப்போலவே உதவுகிறான். ஊனமுற்றவர்களுக்குச் சக்கர நாற்காலி அல்லது அவர்கள் போக்குவரத்துக்கான பிற உதவிகளும் செய்கிறான். அவன் நம்பிக்கையற்றவர்களிடம் நம்பிக்கையைப் போதிக்கிறான். சோம்பேறிகளிடம் உற்சாகத்தையும், மனக் குழப்பமுடையவர்களிடையே நல்ல மனக் கவனத்தையும், அலைபாயும் மனம் உடையவரிடம் மன ஒருமைப்பாட்டினையும், மனம் மழுங்கியவருக்கு அறிவையும் போதிக்கிறான்.
அவன் புலன் உணர்வு ஆசைகளையும், தீய எண்ணத்தையும், சோம்பலையும், சோம்பேரித் தனத்தையும், அமைதியற்ற தன்மையையும், கவலையையும், சந்தேகம் போன்ற மாசுகளையும் தீர்க்க உதவுகிறான்.
பேராசை, வெறுப்பு, வன்செயலையும், அதனால் அலைக்கழிக்கப்பட்ட எண்ணங்களையும் கொண்டோரிடமிருந்து அந்த எண்ணங்களை விரட்ட முயற்சிக்கிறான்.
நன்றியுணர்வின் காரணமாகத் தனக்கு உதவியவர்களுக்கு உதவுகிறான். மரியாதை அளிக்கிறான். தனக்கு உதவியவர்களின் உதவிக்குச் சமமாகவோ மேலாகவோ அவர்களுக்குத் திருப்பியளிக்கிறான். அவனுடைய சொற்கள் நட்புடையதாகவும் அன்புடையதாகவும் இருக்கும்.
The enlightened person serves as a guide to the blind, showing them the right path. He gives the deaf signals by hand gestures, and in that way benefits them with good. He does the same with the dumb. To cripples he gives a chair vehicle or other means of conveyance. He strives to develop faith in the faithless, zeal in the lazy, mindfulness in the distracted, concentration in those whose minds wander, and wisdom in the dull. He strives to dispel sense desire, ill-will, sloth and laziness, restlessness and worry, and doubt in those obsessed by these hindrances. He strives to dispel thoughts of sensuality, ill-will and violence in those oppressed by such thoughts. Out of gratitude to those who have helped him, he helps and respects them with the same or greater benefits in return. His speech is friendly and his words are endearing.
Cp-a.304*
288. ஒரு முறை ஆலாவி என்னும் இடத்திற்கருகில், சிம்சாப வனத்தில் தங்கியிருந்த அண்ணல், பசுக்கள் செல்லும் வழியில் தரையில் உதிர்ந்த இலைகளின் மேல் அமர்ந்திருந்தார். அப்பொழுது அந்தப் பக்கமாக நடந்து வந்த ஆலாவியைச் சார்ந்த அத்தா என்பவன், அண்ணல் இலைகளுக்கிடையே அமர்ந்திருப்பதைப் பார்த்து அண்ணலை நெருங்கி: "வணக்கம், அய்யா, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?" என்று கேட்டான்.
"ஆம், சிறுவனே. நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இவ்வுலகில் வாழும் எல்லா மனிதர்களிலும் நான் தான் மகிழ்ச்சி மிக்கவன்."
"ஆனால் அய்யா, இந்தப் பனிக்கால இரவுகள் குளிராக இருக்கின்றன. இந்தக் கருமை நிறைந்த மாதத்தின் பாதி நாட்கள் உறைபனிக்கு உரியதாம். தரை ஆடுமாடுகளால் மிதிபட்டுக் கடினமாக மாறி விட்டது. உதிர்ந்த இலைகள் விரித்த கம்பளம் அடர்த்தியில்லாமல் மெலிதாக இருக்கிறது. மரத்திலும் கொஞ்சம் இலைகளே உள்ளன. உங்கள் மஞ்சள் துவராடையும் மெல்லியதாக உள்ளது. காற்றோ குளிராக வீசுகிறது."
"அப்படியும் நான் மகிழ்ச்சியுடனேயே இருக்கிறேன். நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு உன் விருப்பம் போல் விடையளி. இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்? சான்றுக்கு ஒருவன் கூரை வேயப்பட்ட, உள்ளேயும் வெளியேயும் காரை பூசப்பட்ட, பொருத்தமான கதவுகளும், சன்னல்களும் அமைக்கப்பட்ட ஒரு வீட்டில் வாழ்கிறான். உள்ளே படுக்கை மீது பெரிய கம்பளி ஒன்று பரப்பப்பட்டுள்ளது. அதன் மேல் வெள்ளைநிறக் கம்பளிப் படுக்கை விரிப்பு ஒன்று விரிக்கப்பட்டுள்ளது. அதன் உறைகள் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விலையுயர்ந்த மான் தோல் விரிப்பும் மேலே போடப்பட்டுள்ளது. படுக்கைக்கு மேல்விதானம் இருக்கிறது. படுக்கையின் ஓரங்களில் சிவப்புத் தலையணைகள் வைக்கப் பட்டுள்ளன. விளக்கு ஒளி தருகிறது. மேலும் அவனது நான்கு மனைவிகளும் அவர்களுடைய கவர்ச்சிகரமான அழகுடன் அவனுக்காகக் காத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட மனிதன் மகிழ்ச்சியுடன் இருப்பானா, இருக்கமாட்டானா?"
"ஆம், அய்யா. அவன் மகிழ்ச்சியாகத்தான் இருப்பான்."
"சரி, இத்தனை சுகபோகங்களிருந்தும் பேராசை, வெறுப்பு, மாயை ஆகியவற்றால் அவன் உடலும் மனமும் துன்புற்றிருந்தால், அதனால் அவன் மகிழ்ச்சியற்றுப் போக முடியுமா? நீ என்ன நினைக்கிறாய்?"
"ஆம், அய்யா, அது சாத்தியமே."
"நன்று சிறுவனே. அந்தப் பேராசை, வெறுப்பு, மாயை ஆகியவைகளால் உடலிலும், உள்ளத்திலும் துன்பங்கள் ஏற்படும். அவற்றைத் ததாகதர் உதறிவிட்டார். வேரோடு வெட்டி விட்டார். அடியோடு வெட்டப்பட்ட பனை மரத்தின் அடிக்கட்டை எதிர் காலத்தில் வளர முடியாது. அதனால் தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்."
At one time, the Lord was staying near Alavi, at the cow path in the Simsapa Grove, lodging on the leaf-strewn ground. Now, Hatthaka of Alavi was walking about and he saw the Lord seated among the leaves so he approached him and asked: “Good sir, do you live happily?”
“Yes, my boy, I live happily. Of all the people in the world, I am the happiest.”
“But sir, these winter nights are cold, the dark half of the month is a time of frost. The ground has been trampled hard by the cattle’s hooves, the carpet of fallen leaves is thin, there are few leaves on the trees, your yellow robe is thin and the winds blow cold.”
“Despite this, I still live happily. I will ask you a question, answer as you wish. What do you think about this? Suppose a man has a house with a gabled roof, plastered inside and out and with well-fitting doors and windows. Inside is a couch spread with a fleecy woolen rug, a bedspread of white wool, a cover embroidered with flowers, spread with a costly antelope skin, with a canopy above and scarlet cushions at each end. The lamp is burning and four wives wait on him with all their charms. Would such a man be happy or not?”
“Yes, sir, he would be happy.”
“Well, what do you think about this? Is it possible that distress of body and mind due to greed, hatred or delusion could arise in him, causing him to feel unhappy?”
“Yes, sir, that is possible.”
“Well, my boy, that greed, hatred and delusion that could cause distress of body and mind has been abandoned by the Tathagata, cut off at the root, made like a palm tree stump that cannot grow again in the future. And that is why I live happily.”
A.I,136
289. மழை பெய்யும் போது ஒரு பெரிய குடை மழையிலிருந்து நம்மைக் காப்பதைப் போல, தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களைத் தர்மம் காக்கும்.
The Dhamma protects those who practice the Dhamma, as a great umbrella protects in time of rain.
Ja.IV,55
290. அண்ணல் விழிப்புற்றிருக்கிறார். அவர் மக்களை விழிப்புறுத்துவற்காக அறத்தைப் போதிக்கிறார். அண்ணல் பழகி இருக்கிறார். அவர் மக்களைப் பழக்குவதற்காக அறத்தைப் போதிக்கிறார். அண்ணல் அமைதியாக இருக்கிறார். அவர் மக்கள் அமைதியாக இருப்பதற்காக அறத்தைப் போதிக்கிறார்.
அண்ணல் எல்லாவற்றையும் கடந்து வந்து விட்டார். அவர் மக்கள் எல்லாவற்றையும் கடப்பதற்காக அறத்தைப் போதிக்கிறார். அண்ணல் நிருவாண நிலையை அடைந்து விட்டார். அவர் மக்கள் நிருவாண நிலையை அடைவதற்காக அறத்தைப் போதிக்கிறார்.
The Lord is awakened, he teaches the Dhamma for awakening. The Lord is tamed, he teaches the Dhamma for taming. The Lord is calmed, he teaches the Dhamma for calming.
The Lord has crossed over, he teaches the Dhamma for crossing over. The Lord has attained Nirvana, he teaches the Dhamma for the attaining of Nirvana.
M.I,235
291. ஒரு சமயம், ஒரு துறவி தன் சக துறவியிடம் சென்று: "நண்பரே, புரிந்து கொள்வது எப்படி முழுமையாகத் தூய்மைப் படுத்தப் படுகிறது?" என்று கேட்டார்.
"ஒருவன் உண்மையிலேயே ஆறு வகைப் புலன்களின் அடித்தளங்கள் (கண்ணும் உருவமும், காதும் ஒலியும், மூக்கும் வாசனையும், நாக்கும் சுவையும், உடலும் உணர்வும், மனமும் எண்ணங்களும்) எழுவதையும் மறைவதையும் தெரிந்து கொன்டால் புரிந்து கொள்வதை முழுமையாகத் தூய்மைப்படுத்தலாம்." என அவர் பதிலளித்தார்.
இவ்விடையால் திருப்தியடையாத அத்துறவி வேறொரு துறவியிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவர்:
"நண்பா, ஒருவன் தன் உடலோடும் மனத்தோடும் (உணர்ச்சி, நினைவு, எண்ணம், தெரிந்திருத்தல் உள்பட்ட) பற்று எழுவதையும், மறைவதையும் பார்த்தால் புரிந்து கொள்வதை முழுமையாகத் தூய்மைப்படுத்தி விடலாம்." என் அவர் பதிலிருத்தார்.
இந்த விடையாலும் நிறைவு கொள்ளாததால் மற்றொரு துறவியிடம் இதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவர்: “நண்பா, ஒருவன் நான்கு பெரிய பூதங்களையும் (மண், நீர், காற்று, தீ) அவை எழுவதையும், மறைவதையும் பார்த்து விட்டால் புரிந்து கொள்வது தூய்மையாக்கப் படுகிறது." எனக் கூறினார்.
ஆனால் இன்னும் நிறைவு கொள்ளாத துறவி வெறொரு துறவியிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவர்:
"நண்பா, ஒருவன் தோன்றுவதெல்லாம் மறைகிறது என்பதை பார்த்து விட்டால், புரிந்து கொள்வது முழுமையாகத் தூய்மைப் படுத்தப் படுகிறது," என்றார். இந்த விடைகளால் எல்லாம் மன நிறைவு கொள்ளாத அந்த துறவி அண்ணலிடம் வந்து அவர் கேட்ட வினாவையும் கிடைத்த விடைகளையும் அண்ணலிடம் கூறினார்.
"அண்ணலே, புரிந்து கொள்வது எப்படி முழுமையாகத் தூய்மைப் படுத்தப் படுகிறது?"
அதற்கு அண்ணல்: "சான்றாக ஒரு மனிதன், பூவரச மரத்தை பார்க்காதவன், அதைப் பார்த்திருக்கும் ஒருவனிடம் சென்று: 'பூவரச மரம் எப்படி இருக்கும்?' என்று கேட்டான். அதற்கு அம்மனிதன்: 'நண்பனே, பூவரச மரம் கருப்பான தோற்றத்தை உடையது. சுட்டுக் கரியாக்கப்பட்ட கட்டையைப் போன்று அடிமரத்தை உடையதாக இருக்கும்,' எனக் கூறினான். ஆகையால் தற்போதைக்கு அந்த மரத்தை அவன் பார்த்திராத படியால் அவனுக்கு மற்றவரின் பார்வையில் தான் அதைப் பார்க்க முடியும். இவ்விடையால் திருப்தியடையாத அவன் மரத்தைப் பார்த்த வேறு ஒருவனிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டான். அதற்கு அந்த மனிதன்: 'பூவரச மரம் சிவப்பான தோற்றமுடையது. ஒரு இறைச்சிக் குவியலைப் போலத் தோன்றும்.' என்றான். ஆக தற்போதைக்கு அந்த மரம் அவனுக்கு மற்றவரின் பார்வையில் தான் பார்க்க முடிகிறது. இவ்விடையாலும் திருப்தியடையாத அவன் வேறு ஒருவனிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டான். அதற்கு அவன்: 'பூவரச மரத்திற்குப் பட்டை கிடையாது. அதன் விதைகள் வேல மரத்தைப்போல வெடித்துச் சிதறும்.' என்றான். ஆக, அப்போதைக்கு அந்த மரம் அவனுக்கு மற்றவரின் பார்வையில் தான் பார்க்க முடிகிறது. இவ்விடையாலும் திருப்தியடையாத அவன் பூவரச மரத்தைப் பார்த்துள்ள வேறு ஒருவனிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டான். அதற்கு அவன்: 'பூவரச மரத்திற்குத் தடித்த இலைகள் உள. அவ்விலைகள் ஆல மரத்தைப் போன்று நெருங்கிய நிழல் தரும்' என்றான். அப்போதைக்கு அந்த மரம் அவனுக்கு மற்றவரின் பார்வையில் தான் பார்க்க முடிகிறது. இந்த எல்லா நல்ல மனிதர்களும் அவர்கள் விளங்கிக் கொண்ட தன்மைக்குத் தக்கவாறு தங்கள் விவரங்களைக் கொடுத்தனர். இதைப் போலத் துறவிகள் புரிந்து கொள்வது என்பதைத் தங்கள் அறிவுக்கும் விருப்பத்திற்கும் தகுந்தவாறு தூய்மைப் படுத்தியுள்ளனர். அதற்குத் தகுந்தார்ப்போல நீ கேட்ட கேள்விக்கு அவர்கள் தங்கள் விளக்கங்களைக் கூறியுள்ளனர்." எனப் பதில் கூறினார்.
At one time, a certain monk went to his fellow monk and asked: “Friend, how is understanding fully purified?” and the other replied: “When one sees as it really is the arising and ceasing of the six-fold sense base, then understanding is fully purified.” Dissatisfied with that answer, that monk went on to another monk and asked the same question, and he was told: “Friend, when one sees as it really is arising and ceasing of the clinging aggregates, then understanding is fully purified.” But again that monk was dissatisfied with that answer, so he went to another monk, asked the same question, and was told: “Friend, when one sees as it really is the arising and ceasing of the four great elements, then understanding is fully purified.” But still dissatisfied with that answer, he went to yet another monk, put his question again and that monk replied: “Friend, when one sees as it really is that everything that arises also passes away, then understanding is fully purified.” Dissatisfied with all these answers, that monk approached the Lord and told him of the question he had asked and the replies he had received.
Then he addressed the Lord and said: “Lord, how is understanding fully purified?” The Lord said: “Suppose a man has never seen a kimsuka tree so he goes to a man who has, and asks: ‘What is a kimsuka tree like?’ and that man replies: ‘Well, my man, a kimsuka tree is blackish, something like a charred stump.’ So for the time being, the tree is to him as the other man sees it. Not satisfied with this answer to his question he goes to another man who has seen one, and again puts his question. And the other man answers: ‘Well, my man, a kimsuka tree is reddish, something like a lump of meat.’ So, for the time being, the tree is to him as the other man sees it.
Still not satisfied, he goes to another man who has seen a kimsuka tree and puts his question to him. And the other man answers: ‘A kimsuka tree has no bark and its seed pods burst something like an acacia tree.’ So, for the time being, the tree is to him as the other man sees it. Still dissatisfied, he goes to another man who has seen a kimsuka tree and puts his question yet again. And that man answers: ‘Well, a kimsuka has thick leaves and gives close shade something like a banyan tree.’ So, for the time being, the tree is to him as the other man sees it. All these good folks have given their explanations according to the clarity of their understanding. In the same way, the understanding of the monks you have asked has been purified according to their individual inclinations and they have given their explanations accordingly.”
S.IV,192
292. அக்காலத்தில் மனிதர்களைக் கொல்லும் நாளாகிரி என்னும் பயங்கரமான ஒரு யானை ராச கிரகத்தில் இருந்தது. தேவதத்தன் என்பவன் ராச கிரகத்திற்கு வந்து அந்த யானைத் தொழுவத்திலுள்ள யானைப் பாகர்களைப் பார்த்து: "நான் அரசனின் உறவினன். தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒருவனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரும் சக்தி என்னிடம் உள்ளது. உணவையும் சம்பளத்தையும் அதிகப் படுத்தக் கூடிய தகுதியும் என்னிடம் இருக்கிறது. ஆகையால் என் நல்ல நண்பர்களே! அந்த துறவி கௌதமர் வண்டிச்சாலை வழியாக வருகிறார். அப்பொழுது நாளாகிரியை அவிழ்த்து விட்டு அந்தச் சாலையின் வழியே கீழ்த்திசை நோக்கி அனுப்புங்கள்," என்றான்.
"அப்படியே செய்கிறோம், மதிப்பிற்குரிய அய்யா," என்று தேவதத்தனிடம் யானைப்பாகர்கள் கூறினர்.
காலையில் அண்ணல் உடை உடுத்துத் துவராடையைக் எடுத்துக் கொண்டு பிச்சை எடுக்க மற்றத் துறவிகளுடன் நகரத்தில் நுழைந்தார். அவர்கள் சாலையின் வழியே கீழ்த்திசை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது யானைப் பாகர்கள் நாளாகிரியை அவிழ்த்து விட்டனர். அது அண்ணல் தூரத்தில் வருவதைப் பார்த்துத் தனது துதிக்கையைத் தூக்கியபடி தனது காதுகளையும் வாலையும் நிமிர்த்தி அண்ணலை நோக்கி விரைந்து வந்தது. துறவிகள் நாளாகிரி வருவதைக் கண்டு: 'அண்ணலே, இது பயங்கரமான ஆட்கொல்லி யானை. நாம் திரும்பி விடுவோம்,' என்று கூறினர்.
"அஞ்ச வேண்டாம் துறவிகளே. அது இயலாத காரியம். யாராலும் ததாகதரைக் கொல்ல இயலாது. ததாகதர் தனது இறுதி நிர்வாண நிலையை வன்முறையால் அடைய மாட்டார்," என்று அண்ணல் கூறினார்.
மீண்டும் இரண்டு மூன்று முறை அவர்கள் அண்ணலிடம் நினைவூட்டினர். மக்கள் வீடுகளின் கூறைகளின் மீது ஏறிக் கொண்டு காத்திருந்தனர். குறைந்த நம்பிக்கை உடையவர்கள் மற்றும் நம்பிக்கையற்றவர்கள்: 'இந்தப் பெருந்துறவி அழகாக இருக்கிறார், ஆனால் இவருக்கு அந்தப் பெரிய யானை தீங்கு விளைவித்து விடும்,' என்றனர். ஆனால் நம்பிக்கை உடையவர்கள், அண்ணலை நம்புபவர்கள்: 'பெரியவர்களே, இந்த பெரும் யானை விரைவில் ஒரு சிறந்தவரால் அடக்கப்பட்டுவிடும்,' என்று கூறினர். அப்பொழுது அண்ணல் மனம் நிறைந்த அன்புடன் யானையின் மனத்தை அன்பால் நிறைத்தார். யானையும் துதிக்கையைக் கீழே இறக்கி அன்ணலிடன் சென்று அவர் அருகில் நின்றது. அன்ணல் அதன் நெற்றியைத் தன் வலது கையால் தடவிக் கொடுத்துக் கீழ்கண்ட கவிதை வரிகளைக் கூறினார்:
"ஓ யானையே, சிறந்தவரைத் தாக்காதே,
அப்படிச் செய்வது வேதனை யாம்.
அப்படி ஒரு மா மனிதரைக் கொன்றால், ஓ யானையே,
உலகை விட்டுச் சென்றவுடன் நல்ல மறுபிறவி கிடைக்காது.
பெருமை அடையாதே, கண்மூடித் தனமாக நடக்காதே
அப்படிச் செய்தால் நல்ல மறுப்பிறப்புக் கிடையாது
நல்ல மறுப்பிறப்பு எடுப்பதற்கு ஏதுவாக நடந்து கொள்."
நாளாகிரி அண்ணலின் காலடி மண்ணைத் தனது துதிக்கையால் எடுத்துத் தனது தலையில் தெளித்துக் கொண்டது.பிறகு அது அண்ணலைப் பார்த்துக் கொண்டே குனிந்த நிலையில் பின் வாங்கியது. அது தன் தொழுவத்திற்குத் திரும்பித் தனது இடத்திலேயே நின்றது.
இப்படித்தான் அது இறுதியாகப் பழக்கப்படுத்தப் பட்டது. அப்பொழுது மக்கள் கீழ்கண்ட கவிதையைப் பாடினர்:
"சிலர் கம்பாலோ சவுக்காலோ தார்க் குச்சியாலோ பழக்குகின்றனர்
அந்த யானையோ தீர்க்கதரிசியால்,
குச்சி இன்றி ஆயுதம் இன்றி அடக்கப்பட்டது."
மக்கள் தேவதத்தனைப் பரவலாக இழிவுபடுத்தித் தாக்கிப் பேசினர். "இந்தத் தேவதத்தன் தீயவன், புனிதமற்றவன். அவன் சிறந்த உளஞ்சார்ந்த சக்தி வாய்ந்த மேன்மை தங்கிய துறவி கௌதமரைக் கொல்ல முயன்றான்." இப்படித் தேவதத்தனின் புகழ் குன்றியது. அண்ணலின் புகழ் வளர்ந்தது.
At that time there was a fierce elephant in Rajagaha, a man-killer called Nalagiri. Then Devadatta entered Rajagaha and went to the elephant stable and said to the mahouts: “I am a relative of the king. I am capable of putting one who is in low position into a high position, and arranging for an increase in food and wages. So, my good fellows, when the monk Gotama is coming along the carriage road, let loose Nagaliri and send him down the road.” “Very well, honoured sir,” those mahouts said to Devadatta. In the morning the Lord dressed, and taking his robe, entered the city for alms-food, together with several other monks. As they went down the road, the mahouts released Nalagiri. The elephant saw the Lord coming in the distance, and lifting up his trunk and making his ears and tail erect, he rushed towards him. The monks saw Nagaliri coming and said to the Lord: “Lord, this elephant is a fierce man-killer. Turn back!” The Lord replied: “Do not be afraid, monks, for it is impossible, it cannot happen that someone could kill the Tathagata. The Tathagata cannot attain final Nirvana due to violence.” A second and third time they spoke to the Lord. People climbed on to the roofs of the houses to see what would happen. Those with little faith, those who were not believers, said: “This great monk is beautiful indeed, but he will be harmed by that bull elephant.” But those with faith, those who were believers, said: “Good sirs, soon this great being will confront a truly great being.” Then the Lord suffused Nalagiri with a mind full of love, and the elephant lowered his trunk and went up to the Lord and stood beside him. The Lord stroked Nalagiri’s forehead with his right hand and addressed these verses to him:
“O elephant, do not strike a truly great being,
For to do so is painful indeed.
For one who slays a great being, O elephant,
There is no good rebirth, when one departs from here.
Be not proud, be not reckless,
Or there will be no good rebirth.
Act in such a way as to have a good rebirth.”
Then Nalagiri took dust from the Lord’s feet with his trunk, sprinkled it over his own head, and then backed away, bowing, and keeping his gaze on the Lord. He returned to the stable and stood in his own place, and in this way was finally tamed. Then people at that time sang this verse:
“Some are tamed by sticks, by goads or by whips.
The elephant was tamed by the great seer,
Without stick or weapon.”
People disparaged and criticized Devadatta widely, saying: “This Devadatta is evil and inauspicious in that he tried to murder the monk Gotama who is of such great psychic power and majesty.” And Devadatta's reputation declined while the Lord’s grew.
Vin.II,193-4
293. ஒரு மரத்தின் நிழலில் உட்கார்ந்தோ, படுத்தோ இருப்பவர், அந்த மரத்தின் ஒரு கிளையைக் கூட ஒடிக்கக் கூடாது. அவ்வாறு செய்பவர் ஒரு நண்பனுக்குத் துரோகம் செய்பவராகிறார். ஒரு தீயவராகிறார்.
Of the tree in whose shade one sits or lies, not a branch of it should he break, for if he did he would be a betrayer of a friend, an evil doer.
Ja.IV,352
294. படிப்புப் புதையல் என்றால் என்ன? ஒரு சிறந்த மாணவன் அதிகமாகப் படிப்பான். ஆரம்பத்தில் விருப்பத்திற்குரியதாக இருப்பதையும், நடுவிலும் விருப்பத்திற்குரியதாக இருப்பதையும், முடிவிலும் விரும்பக் கூடியதாக இருப்பதையும், புனித வாழ்க்கையின் பொருளையும் விவரத்தையும் நிலை நிறுத்துபவைகளையும் அவன் படிப்பான். படித்த படிப்பை நிலை நிறுத்திக் கொள்வான். எல்லாம் உள்ளத்தில் நிறுத்தி வைக்கப்படும். விவாதங்களால் அவை பழக்கப் படுத்தப்படும். சிந்தித்து நன்நோக்கத்தால் ஊடுருவிப் பார்க்கப்படும். இதுவே படிப்பு என்னும் புதையலாகும்.
What is the treasure of learning? Concerning this, a noble disciple has learnt much, there is a retaining and a storing up of things learnt, those things lovely in the beginning, lovely in the middle and lovely at the end, which set forth the letter and the spirit of the holy life, are all learnt by him, retained in mind, familiarized by discussion, pondered over and well penetrated with Perfect View. This is the treasure of learning.
A.IV,5
295. ஐந்து குணங்களைப் பெற்றிருந்தால் ஒரு நோயாளி தனக்கே மிகுந்த உதவியாக இருப்பான். அவை எவை? அவனுக்குத் தனக்கு எந்த மருந்து நல்லது என்பது தெரியும். அவனுக்குச் சரியான அளவும் சிகிச்சையும் தெரியும். அவன் அந்த மருந்தைச் சாப்பிடுவான். அவன் தனக்கு அன்புடன் பணிவிடை செய்பவரிடம் தன்னுடைய நோயைப் பற்றி விவரித்துக் கூறுவான்: 'நோய் இப்படி வருகிறது. அப்படிச் செல்கிறது. அங்கிருக்கும் போது இப்படி இருக்கிறது.' அவன் நோயின் பலவித வேதனைகளையும் பொறுமையுடன் பொறுத்துக் கொள்வான்.
Possessed of five qualities, a sick person is of much help to himself. What five? He knows what medicine is good for him, he knows the right measure in his treatment, he takes the medicine, he describes his illness to the nurse who cares for him out of kindness, saying: ‘It comes like this. It goes like this. When it is there it is like this,’ and he endures the various pains of the sickness.
A.III,144
296. உலகக் கவர்ச்சிகளையும், எதிர்ப்புகளையும் ஒரு புறம் தள்ளி விட்டு ஒருவன் மன நிலைகளை ஆர்வத் துடனும், தெளிவாகவும், கவனமாகவும் ஆழ்ந்து நினைக்கின்றான் என்று வைத்துக்கொள்வோம். அதை இவன் செய்யும் பொழுது அவன் உடலில் உணர்வுகள் உண்டாகின்றன. அல்லது உடலில் ஒரு நிம்மதியின்மை உண்டாகிறது. அல்லது சோம்பலின் காரணமாக அவன் எண்ணங்கள் வெளியுலகத்தில் சிதறி அடிக்கின்றன. அப்பொழுது இவனது கவனத்தைச் சில மகிழ்ச்சி தரக் கூடிய பொருள்கள் பக்கமோ அல்லது எண்ணங்கள் பக்கமோ திருப்ப வேண்டும். அதைச் செய்தவுடன் அவன் மனதில் இரம்மியம் உண்டாகிது. மனம் இரம்மியமானவுடன் மகிழ்ச்சி உண்டாகிறது. மகிழ்ச்சியின் காரணமாக உடல் அமைதியாகிறது. உடல் அமைதியாக இருந்தால் அவன் ஆனந்த மடைகிறான். அதனால் அவன் உள்ளம் ஒரு நிலைப்படுத்தப் படுகிறது. பின் அவன் நினைக்கிறான்: 'நான் எந்த நோக்கத்தில் என் மனதை செலுத்தினேனோ அதை அடைந்துவிட்டேன். இனி அந்த மகிழ்ச்சி தரக் கூடிய எண்ணத்திலிருந்து மனதை விலகிக் கொள்கிறேன்.' பின் அதிலிருந்து மனதை விலகிக் கொண்டு ஏற்கனவே உதித்த எண்ணங்களைத் தொடராமலும், புதிதாக எண்ண ஓட்டத்தை ஆரம்பிக்காமலும் இருக்கிறான். அதனால் அவன் மனக் கவனத்துடன் இருந்து, இவ்வாறு புரிந்து கொள்கிறான்: 'தர்க்கத்துக்குப் பொருத்தமான எண்ண ஓட்டங்களும், தாறுமாறான எண்ண ஓட்டங்களும் நின்றுவிட்டன. நான் உள்ளத்தில் கவனத்துடனும் மகிழ்வுடனும் இருக்கிறேன்.'
Say one dwells contemplating mental states; ardent, clearly conscious and mindful - having put aside the attraction and repulsion of the world. As he does this, either some bodily feeling arises, some bodily discomfort arises, or drowsiness scatters his thoughts to outward things. Then he should direct his attention to some pleasurable object or thought. Having done that, gladness arises, from gladness comes joy, because of joy the body is tranquil, with a tranquil body one is happy, and the mind of one who is happy becomes concentrated. Then he thinks: ‘The aim on which I set my mind is now attained. So let me withdraw my mind from that pleasant thought.’ Then he withdraws his mind from that, and neither starts nor carries on contemplating thought processes. Then he is mindful and knows, ‘Logical and wandering thoughts have stopped, I am inwardly mindful and happy.’
S.V,156
297. ஐந்து குணங்கள் நோயாளிகளைக் கவனிப்பவரிடையே இருந்தால் நோயாளிகளுக்குப் பணி விடை செய்யும் தகுதி அவர்களுக்கு இருக்கிறது. எந்த ஐந்து குணம்?
அவர் மருந்தைத் தயாரிக்கத் தெரிந்தவர்; நோயாளிக்கு எது நல்லது எது நல்லதல்ல என்பது அவருக்குத் தெரியும். எது நல்லதோ அதைத் தருகிறார். எது நல்லதில்லையோ அதைத் தருவதில்லை; அவர் நோயாளிகளை அன்புடன் அணுகிக் கவனிக்கிறார். ஆதாயம் வரும் என்று எதிர்பார்க்காமல் கவனிக்கிறார்; சிறுநீர், வாந்தி, எச்சில் முதலியவைகளால் அவர் பாதிக்கப்படுவதில்லை; அவ்வப்போது நோயாளிக்கு அறத்தைப் போதித்து உற்சாகப்டுத்தி மகிழ வைத்து ஆறுதலிக்கிறார்.
Possessing five qualities, one who nurses the sick is fit to nurse the sick. What five? He can prepare the medicine; he knows what is good and what is not. What is good he offers, and what is not he does not; he nurses the sick out of love, not out of hope for gain; he is unmoved by excrement, urine, vomit and spittle; and from time to time, he can instruct, inspire, gladden and comfort the sick with talk on Dhamma.
A.III,143
298. "போற்றுதற்குரிய கௌதமரே, உண்மைத் துறவியாக இருப்பது சிரமம். ஒரு உண்மையான அந்தணனாக இருப்பது சிரமம்" என்று ஆடையில்லாமல் வாழும் சந்நியாசி காசப்பர் கூறினார்.
அண்ணல் கூறினார்: "இப்படித்தான் உலகம் கூறுகிறது, காசப்பா. ஆனால் ஒரு ஆடையில்லாமல் வாழும் துறவி எல்லாவிதமான சுய துன்பங்களையும் (ஒற்றைக் காலில் நாட்கணக்கில் நிற்பது, நாட்கணக்கில் உண்ணாவிரதம் இருப்பது போன்றவற்றை) பழகினால், அதுவே துன்பங்களின் அளவு கோலாக இருந்தால், அந்த துன்பங்களின் காரணமாக உண்மையான துறவியாக இருப்பது சிரமம், ஒரு உண்மையான அந்தணனாக இருப்பது சிரமம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் யார் வேண்டுமென்றாலும், ஒரு குடும்பத்தலைவன், அவனுடைய மகன், தண்ணீர் இறைக்கும் ஒரு அடிமைப்பெண் ஆடையில்லாமல் வாழ்ந்து, சுய துன்பத்தைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒதுங்கிய துறவு வாழ்வு வாழும் வேறு ஒரு முறையும் இருக்கிறது. அந்த முறையில் உண்மையிலேயே துறவியாக இருப்பது கடினம், ஒரு உண்மையான அந்தணனாக இருப்பது சிரமம் என்று கூறலாம். எப்பொழுது ஒரு அறவண அடிகள் / துறவி தன் உள்ளத்தைத் தீய எண்ணம் இன்றி வளர்த்துக் கொள்கிறாரோ, நிறைந்த அன்புடன் மாசுகளை ஒழித்து உள்ளம் முழுவதும் சுதந்திரமாகத் தெளிவான பார்வையுடன் வைத்திருக்கிறாரோ, அவரே உண்மையான துறவியாம், உண்மையான அந்தணனாம்."
The naked ascetic Kassapa said to the Lord: “Reverend Gotama, it is hard to be a true monk, it is hard to be a true brahmin.”
The Lord said: “That is what the world says Kassapa. But if a naked ascetic was to practice all kinds of self- mortification, and if this was the measure of difficulty, then it would not be true to say that it is hard to be a true ascetic or a true brahmin. Because anyone, a householder, his son, even a slave girl who draws water, could go naked and practice self-mortification. But there is another type of asceticism about which it is true to say that it is hard to be a true ascetic, a true brahmin. When a monk develops a mind free from hatred or ill-will, full of love, and by the destruction of the defilements, dwells with a mind freed through insight, then that monk is a true ascetic, a true brahman.”
D.I,168
299. நீரில் இருந்து அறிந்து கொள்வீர்;
மலையில் பிளவுகளிலும் வெடிப்புகளிலும் மோதுண்டு,
மிகுந்த இரைச்சலுடன் புரண்டோடும் சிற்றோடைகள் உண்டு.
ஆனால் மாபெரும் நதிகளோ அமைதியாகவே தவழ்ந்து செல்லும்.
வெறுமைக் கலமே ஒலி செய்யும்,
நிறை குடம் தளும்பாது.
அறிவிலி அரை நிறை குடம்,
அறிஞனோ ஆழமான அமைதியான குளம்.
Learn this from the waters;
In mountain clefts and chasms,
Loud gushes the streamlets,
But great rivers flow silently.
Empty things make a noise,
The full is always quiet.
The fool is like a half-filled pot,
The wise one is like a deep still pool.
Sn.720-721
300. பணிவு என்றால் உள்ளத்தில் எளிமையாகவும், நடத்தையில் அடக்கமாகவும் இருக்க வேண்டும். அதனைக் கொண்டுள்ள ஒருவன் பெருமையையும் இறுமாப்பையும் விட்டுவிடுவான். அவன் ஒரு கால்துடைக்கும் துணிக்கு ஒப்பானவன். கொம்புகள் வெட்டப்பட்ட காளை மாட்டைப் போலவும், நச்சுப்பல் பிடுங்கப்பட்ட பாம்பைப் போலவும் இருப்பான். அவன் அன்பானவன், மகிழ்ச்சிக்குரியவன். அவனிடம் எளிதாகப் பேசலாம்.
Humility means being humble in mind and unassuming in manner. A person possessing it has put away pride and arrogance, he resembles a foot-wiping cloth, a bull with its horns cut off, a snake with its fangs removed. He is gentle, cheerful and easy to speak to.
Pmj.144*
301. தியானத்தைக் கடைப் பிடிக்கும் ஒருவனின் உள்ளத்தில் கீழ்கண்ட எண்ணம் எழலாம். 'என் உள்ளம் பற்றற்று மாசுகளிலிருந்து விடுதலை பெறட்டும்.' இருந்தாலும் அது நடக்காது. ஏன்?
ஏனென்றால் மனக்கவனத்தின் நான்கு அடிப்படைகளை அவன் இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை. நான்கு நன் முயற்சிகள், நான்கு உளஞ்சார்ந்த சக்திகள், ஐந்து செயல்திறன்கள், ஐந்து சமயம் சார்ந்த சக்திகள், அறிவைப் பெற வேண்டிய ஏழு காரணிகள், எட்டு தூய்மையான வழிகள் ஆகியவற்றை அவன் வளர்த்துக் கொள்ளவில்லை.
இவை கோழி இட்ட முட்டைகள் எனினும் சரியாக அணைக்கப்படாத முட்டைகள், முழுமையாக வெப்பம் பெறாத முட்டைகள், முழுமையாக அடைகாக்கப்படாத முட்டைகளைப் போன்றதாம். அந்தக் கோழி: 'ஓ, என்னுடைய குஞ்சுகள் அந்த முட்டை ஓட்டைத் தங்கள் கால் நகங்களாலும், மூக்காலும் உடைத்துக் கொண்டு பாதுகாப்பாக வெளியே வரவேண்டும்,' என்று நினைத்தாலும், அது நடக்கப் போவதில்லை. ஏன்? ஏனெனில் முட்டைகள் முழுமையாக அணைக்கப் படவில்லை, முழுமையாக வெப்பம் கொடுக்கப் படவில்லை. முழுமையாக அடைக்காக்கப் படவில்லை.
தியானத்தைக் கடை பிடிக்கும் ஒருவனது உள்ளத்தில் கீழ்கண்ட எண்ணம் எழாமல் இருக்கலாம்: 'என் உள்ளம் பற்றின்றி மாசுகளிலிருந்து விடுதலை பெறட்டும்.' ஆனால் அவன் மனக்கவனத்தின் நான்கு அடிப்படைகளை, நான்கு நன் முயற்சிகள், நான்கு உளஞ்சார்ந்த சக்திகள், ஐந்து செயல்திறன்கள், ஐந்து சமயம் சார்ந்த சக்திகள், அறிவைப் பெற வேண்டிய ஏழு காரணிகள், எட்டுத் தூய்மையான வழிகள் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டிருந்தால், அவன் மனம் விடுதலை பெற்றுவிடும். ஏன்? ஏனென்றால் அவன் இவைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறான். அது, முழுமையாக அணைக்கப்பட்ட, முழுமையாக வெப்பம் கொடுக்கப்பட்ட, முழுமையாக அடைகாக்கப்பட்ட கோழியின் முட்டைகள் வளர்ச்சியடைந்திருப்பதைப் போலத்தான். அக்கோழியும்: 'ஓ, என் குஞ்சுகள் வெளியே வரவேண்டும்,' என்று நினைக்காதிருந்தாலும் அக்குஞ்சுகள் பொறிக்கப்பட்டுவிடும். ஏன்? ஏனென்றால் அவை முழுமையாக வெப்பம் கொடுக்கப்பட்ட, வளர்ந்த முட்டைகள்.
Although this wish may arise in the heart of one who is meditating: ‘May my mind be free from the defilements and be without attachments,’ yet it will not happen. And why? Because he has not developed the four foundations of mindfulness, the four right efforts, the four psychic powers, the five faculties, the five spiritual powers, the seven factors of enlightenment and the Noble Eightfold Path. It is just as if a batch of hen’s eggs were not fully sat upon, not fully warmed, not fully brooded. Although that mother hen might wish: ‘Oh, that my chicks might break the shell with claw and beak and hatch out safely,’ it will not happen. And why? Because the eggs are not fully sat upon, not fully warmed, not fully developed.
Although the wish ‘May my mind be free from the defilements and be without attachments,’ does not arise in one who is developing the four foundations of mindfulness, the four right efforts, the four psychic powers, the five faculties, the spiritual powers, the seven factors of enlightenment and the Noble Eightfold Path, yet his mind will be freed. And why? Because he has fully developed these things. It is just as if a batch of hen’s eggs were fully sat upon, fully warmed, fully developed. That hen need not wish: ‘Oh, that my chicks might hatch,’ and yet her eggs will hatch anyway. And why? Because they are fully warmed, fully developed.
A.IV,125
302. சரியான காலத்தில் கொடுக்கப்படும் ஐந்து பரிசுகள் உள. அவை எவை?
புதிதாக வந்தவனுக்கு கொடுக்கப்படும் பரிசு, நம்மை விட்டுச் செல்பவனுக்குக் கொடுக்கப்படும் பரிசு, நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் பரிசு, உணவு கிடைப்பதற்கு அரிய காலத்தில் கொடுக்கப்படும் பரிசு, நிலத்திலிருந்தோ பண்ணையிலிருந்தோ முதன்முதலாகப் பறிக்கப்பட்ட பழங்களை ஒழுக்கமானவர்களுக்குக் கொடுக்கப்படும் பரிசு ஆகியவையாம்.
There are these five timely gifts. What five? One gives to the one who has just arrived, to one who is leaving, to the sick, when food is hard to get, and the first-fruits of field and orchard one gives to the virtuous.
A.III,41
303. அண்ணல் கேட்டார்: "துறவிகளே, கதிரவன் உதிக்கும் நேரத்தில் அந்தச் சொறி பிடித்த கிழ நரி ஊளையிடுவதைக் கேட்டீர்களா?"
"ஆம், கேட்டோம் அண்ணலே."
"அந்த வயதான நரியிடம் கொஞ்சம் செய்நன்றியும் நன்றியுணர்வும் இருப்பதாகத் தெரிகிறது. என்னுடைய சீடன் என்று சொல்லிக் கொள்ளும் இங்குள்ள ஒருவனிடம் அப்படி எதுவுமே இல்லை. எனவே நீங்கள் இவ்வாறு பயிற்சி செய்து கொள்ளுங்கள்: 'நாம் செய்நன்றியுடனும் நன்றியுணர்வுடனும் இருப்போம். நமக்குச் செய்த சிறு உதவியையும் மறக்கமாட்டோம்.' இப்படித்தான் நீங்கள் பயிற்சி செய்து கொள்ள வேண்டும்."
The Lord said: “Monks, did you hear that mangy old jackal howling as the sun came up?”
“We did, Lord.”
“Well, there may be at least some gratefulness and thankfulness in that old jackal, but there is none at all in a certain person here claiming to be my disciple. Therefore you should train yourselves like this: ‘We will be grateful and thankful. We will not forget even the smallest favor done for us.’ This is how you should train yourselves.”
S.II,272
304. எங்கு வேதனை உளதோ,
அங்கு மகிழ்ச்சி வேண்டிப் பாடுபட வேண்டும்.
அதைப் போல்
எங்கு மாற்றம் உளதோ,
அங்கு மாற்றம் இல்லாமையை விரும்ப வேண்டும்.
எங்கு வெப்பம் உளதோ,
குளுமையும் எங்காவது இருக்கும்.
அதைப் போல்,
எங்கு மூன்று நெருப்புகள் உளவோ
அங்கு கண்டிப்பாய் நிருவாணம் இருக்கும்.
எங்கு தீமை உளதோ,
அங்கு நன்மையும் உண்டு.
அதைப் போல்
எங்கு பிறப்பு உளதோ
அங்கு பிறப்பின்மையும் உண்டென உணரலாம்.
Where there is pain,
Pleasure is to be strived for.
In the same way,
Where there is becoming,
Non-becoming is to be desired.
Where there is heat,
There must be cool.
In the same way,
Where there are the three fires,
There must also be Nirvana.
Where there is evil,
There is also the good.
In the same way,
Where there is birth,
Non-birth can be inferred.
Ja.I,4