எளிமையாகச் சொல்வதென்றால் ..5

எளிமையாகச் சொல்வதென்றால்

In Simple Terms

108 அற உவமானங்கள்

போற்றுதற்குரிய அஜான் சா

108 Dhamma Similes by Ajahn Chah

73. The Hand Top

Those who study the texts and those who practice the Dhamma tend to misunderstand each other. Those who study the texts tend to say, "Monks who do nothing but practice simply speak in line with their views." They say that without any evidence of any kind.

There's actually a way in which both sides are the same thing, which helps us to understand things better. It's like the palm of your hand and the back of your hand. When you stick your hand out straight ahead of you, it's as if the palm has disappeared. But actually it hasn't disappeared anywhere. It's just hidden underneath. In the same way, when you turn your hand palm-up, the back of your hand disappears. But actually it hasn't disappeared anywhere. It's just underneath.

You should remember this when you contemplate practicing. If you think that your practice has dwindled away, you stop studying and set your hopes on getting results. But no matter how much you've studied the Dhamma, you won't understand because you don't yet know in line with the truth. Once you understand the true nature of the Dhamma, you begin to let go. This is a willingness to strip away attachments, where you don't hold on to anything anymore. Or if you do hold on, it'll gradually grow less and less.

This is the difference between study and practice.

கை

திரிபிடகத்தைக் கற்பவரும், தம்மத்தைப் பயில்வோரும் ஒருவருக்கொருவர் தவறாகப் புரிந்து கொள்ளுகின்றனர். திரிபிடகத்தைக் கற்பவர் இவ்வாறு கூறக்கூடும், "பயிற்சி மட்டுமே செய்யும் துறவிகள் தங்கள் கருத்துக்களுக்கேற்பவே பேசுகின்றனர்." இவ்வாறு அவர்கள் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆனால் இருதரப்பினரும் ஒன்றைப் பற்றியே பேசுகின்றனரென்பதை விளக்க ஒரு வழியுண்டு. இது ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள வழி வகுக்கிறது. இது உள்ளங்கையையும் புறங்கையையும் போல. உங்கள் கையை நேராக நீட்டினீர்களென்றால் உள்ளங்கை மறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் அது எங்கும் காணாமல் போய்விடவில்லை. அடியில் மறைந்திருக்கிறது. அதேபோல உள்ளங்கை மேலாக இருக்கக் கையை நீட்டினால் கையின் பின்புறம் மறைந்து விடுகிறது. ஆனால் அதுவும் காணாமல் போய்விடவில்லை. அடிப்பக்கத்திலிருக்கிறது. அவ்வளவுதான்.

பயிற்சி செய்யும் போது இதனைச் சிந்திக்க வேண்டும். உங்கள் பயிற்சி குறைவது போலத் தோன்றினால், கற்பதை நிறுத்திவிட்டுப் பலன் கிடைப்பதில் நம்பிக்கை வைக்கிறோம். ஆனால் எவ்வளவுதான் தம்மத்தைக் கற்றாலும், உங்களுக்குப் புரியப் போவதில்லை. ஏனென்றால் வாய்மைக்கு நிகராக நீங்கள் இன்னமும் அறிவு பெறவில்லை. தம்மத்தின் உண்மையான இயற்கையைப் புரிந்து கொண்டபின் கைவிடுவதைத் துவங்கு கின்றீர்கள். பற்றுகளை விட்டுவிட விட்டுவிட எதனோடும் பற்றில்லாமல் இருக்க விருப்பம் தோன்றும். அப்படியே சில பற்றுகள் இருந்தாலும் அவை சிறிது சிறிதாகக் குன்றும்.

இதுவே கற்பதற்கும், பயிற்சிக்குமான வேறுபாடு.

74. Written Words Top

Stop. Put your scholarly knowledge in a bundle or a trunk. Don't bring it out to speak. You can't bring that kind of knowledge into here. Here it's a new kind of knowledge. When things actually arise, it's not the same sort of thing.

It's like writing the word, "greed." When greed arises in the heart, it's not the same as the written word. The same when you're angry: When you write "anger" on the blackboard, it's one thing. It's letters. When it arises in the heart, it's too fast for you to read anything. It comes up in the heart all at once. This is important. Very important.

எழுதப்பட்ட வார்த்தைகள்

நிறுத்துங்கள். உங்கள் படிப்பறிவை மூட்டை கட்டி வையுங்கள் அல்லது ஒரு பெட்டியில் போட்டுப் பூட்டுங்கள். பேசுவதற்கு அவற்றை எடுத்துவர வேண்டாம். அப்படிப் பட்ட அறிவை இங்கு கொண்டுவர முடியாது. இங்கு அது ஒரு புதுமையான அறிவு. செயல்கள் உண்மையிலேயே தோன்றும் போது அது நீங்கள் நினைத்தபடி இருக்காது.

இது "பேராசை" என்ற வார்த்தையை எழுதுவதுபோல. பேராசை உள்ளத்தில் எழும் போது அது எழுதிய "பேராசையைப்" போல இருக்காது. நீங்கள் கோபமுறும் போதும் அப்படித்தான்: "கோபம்" என்று பலகையில் எழுதுவது ஒன்று. அது எழுத்துக்கள் மட்டுமே. ஆனால் அது உள்ளத்தில் தோன்றும் போது படிக்க நேரமில்லாத வேகத்தில் செயற் படுகிறது. உள்ளத்தில் ஒரே சமயத்தில் தோன்றுகிறது. இது முக்கியம். வெகு முக்கியம்.

75. Falling Out of a Tree Top

...It's the same with dependent co-arising. "Ignorance is the condition for fabrications. Fabrications are the condition for consciousness. Consciousness is the condition for name and form." We've studied this and memorized it, and it's true, the way the Buddha has divided things up like this for students to study. But when these things actually arise, they're too fast for you to count.

It's like falling from the top of a tree — thump! — to the ground. We don't know which branches we've passed. The moment the mind is struck by a good object, if it's something it likes, it goes straight to "good." It doesn't know the connecting steps in between. They follow in line with the texts, but they also go outside of the texts. They don't say, "Right here is ignorance. Right here is fabrication. Right here is consciousness. Right here is name and form." They don't have signs for you to read. It's like falling out of a tree. The Buddha talks about the mental moments in full detail, but I use the comparison with falling out of a tree. When you slip out of a tree — thump! — you don't measure how many feet and inches you've fallen. All you know is you've crashed to the ground and are already hurting.

மரத்திலிருந்து விழுவது

..சார்பில் தோற்றம் என்ற கோட்பாடும் அதுபோலத்தான். "பேதைமை சார்வாகச் செய்கை வரும். செய்கை சார்வாக உணர்ச்சி உண்டாகிறது. உணர்ச்சி சார்வாக வருவது அருவுரு ஆகும்...." இவற்றைக் கற்று மனப்பாடமும் செய்துள்ளோம். உண்மையும் கூட. புத்தர் மன நடவடிக்கைகளைப் பிரித்துத் தனது சீடர்கள் கற்பதற்கு இவ்வாறு விளக்கம் தந்துள்ளார். ஆனால் இவை தோன்றும் போது மிக வேகமாகச் செயல்படுவதால் உங்களால் அவற்றைப் படிப்படியாகப் பிரித்துப் பார்க்க நேரமிருப்பதில்லை.

இது ஒரு மரத்தின் உச்சியிலிருந்து கீழே விழுவது போல. – ‘தொப்!’ – அவ்வளவு தான். நிலத்தைச் சேர்ந்து விட்டோம். எத்தனை கிளைகளைத் கடந்து சென்றோம் என்பது தெரியாது. மனம் ஒரு பொருள் மீது பற்றுக் கொண்டால், அது, அதற்குப் பிடித்திருந்தால், நேரடியாக "நல்லது" என்ற எண்ணத்துக்குச் சென்று விடுகிறது. இணைக்கும் படிகளை அது தெரிந்து கொள்வதில்லை. (பொருள் கண்ணுக்குப் பட்டதிலிருந்து 'நல்லது' என்ற எண்ணம் தோன்றுவதற்கு இடையில் உள்ள மற்ற படிகள்) பௌத்த நூட்களுக்கு ஒப்பாகச் செல்கின்றன. ஆனால் நூட்களுக்கு அப்பாலும் செல்கின்றன. இப்படிச் சொல்வதில்லை, "இங்கே இருப்பது அறியாமை. இதோ சங்கற்பம். இங்கே தோன்றியது உணர்வு. இங்கே இருப்பது அருவுரு." இவ்வாறு படித்துச் சொல்வதற்குக் குறிப்பேதும் இல்லை. மரத்திலிருந்து விழுவது

போல. புத்தர் மன நிலைகளை விளக்கிக்

கூறியுள்ளார். ஆனால் நான் ‘மரத்திலிருந்து விழுவது போல’ என்கிற உவமானத்தைத் தருகிறேன். மரத்திலிருந்து தவறி விழும்போது - தொப்! - எத்தனை அடிகள் விழுந்தீர்கள் என்பதைக் கணக்கிடுவதில்லை. உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் தரையில் விழுந்து அடிபட்டது தான்.

76. The Knife Top

Exercising the body to strengthen it and exercising the mind to strengthen it are the same sort of thing, but the methods are different. In exercising the body, you have to move the different parts, but in exercising the mind you make it stop and rest, as when you do concentration. Try to get the mind to let go of everything. Don't let it think about this, that, or anything at all. Get it to stay with one object. It'll then gain strength. Discernment will arise. It's like having a knife that you've kept well sharpened. If you just keep on using it to cut stones, cut bricks, cut grass, cut without choosing, the knife will lose its edge.

கத்தி

உடலுக்குப் பயிற்சியளித்து அதனை வலுவூட்டுவதும், மனதுக்குப் பயிற்சி தந்து அதனை வலுவூட்டுவதும் ஒரே மாதிரியான செயல் என்றாலும், வழிமுறைகள் மாறுபடுகின்றன. உடலுக்குப் பயிற்சி தரும்போது, உடலுறுப்புகளை நகர்த்த வேண்டும். மனதுக்குப் பயிற்சி தரும்போது அதன் நடவடிக்கைகளை நிறுத்தி அதற்கு ஓய்வு தர வேண்டும். ஒருக்க தியானம் செய்யும் போது போல மனத்தை எல்லாவற்றையும் கைவிடவைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். மனத்தை இதையும், அதையும், எதையும் நினைத்துக் கொண்டிருக்க விடக் கூடாது. ஒரே பொருளோடு ஒன்றி இருக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அது வலுவடையும். விவேகம் பிறக்கும். இது கூர்மையான ஒரு கத்தியைப்போல. அதைத் தொடர்ந்து கருங்கல்லை வெட்டவும், செங்கல்லை வெட்டவும், தேவையற்றதை வெட்டிக் கொண்டிருக்கப் பயன்படுத்தினால் அதன் விளிம்பு மழுங்கிவிடும்.

77. Learning How to Write Top

Make sure you practice every day, every day. When you feel lazy, keep doing it. When you feel diligent, keep doing it. Practice the Dhamma whether it's day or night. When the mind is at peace, keep doing it. When it isn't at peace, keep doing it. It's like when you were a child learning how to write. At first the letters didn't look pretty. Their bodies were too long; their legs were too long. You wrote like a child. With time, though, the letters looked better because you practiced.

எழுதப் பழகுவது

தினசரி பயிற்சி செய்ய மறக்க வேண்டாம். தினசரி சோம்பலாக இருக்கும் போதும் பயிற்சி செய்ய வேண்டும். சுறுசுறுப்பாக இருக்கும் போதும் பயிற்சி செய்ய வேண்டும். பகலானாலும், இரவானாலும் தம்மத்தைப் பயிற்சி செய்ய வேண்டும். மனம் அமைதியாக இருக்கும்போது பயிற்சி செய்ய வேண்டும். மனம் கிளர்ச்சியான நிலையில் இருந்தாலும் செய்ய வேண்டும். குழந்தைப் பருவத்தில் எழுதக் கற்பது போல. முதலில் எழுத்துக்கள் அழகாகத் தெரிவதில்லை. உடல் நீண்டும் அல்லது கால்கள் நீண்டும் இருந்தன. குழந்தையைப்போல எழுதினோம். காலப் போக்கில் எழுத்து சீராகத் தோன்றியது, ஏனென்றால் நாம் தொடர்ந்து பயிற்சி செய்கிறோம்.

78. The Child and the Adult Top

Concentration and discernment have to go together. In the first stage, the mind will go into peace and quiet through the methods of concentration. The mind will be able to stay quiet only when you sit with your eyes closed. That's tranquility. You have to depend on concentration as a foundation to help give rise to discernment or insight in the end. Then the mind will stay quiet whether you're sitting with your eyes closed or walking in the middle of a frenzied city.

It's the same as this: Once you were a child. Now you're an adult. The child and the adult are the same person. In the same way, you could say that tranquility and insight are separate things. Or like food and excrement: You can say that they're the same thing, but looking from another angle you can say that they're different.

குழந்தையும் பெரியவரும்

மன ஒருக்கமும் (ஒருமுகப்படுத்தல்) விவேகமும் இணைந்தே செயல்படுகின்றன. முதல் நிலையில் ஒருக்க வழிகளில் மனம் அமைதி பெறுகிறது. மனம் நீங்கள் உட்கார்ந்து கண்களை மூடினால் மட்டுமே அமைதி பெறுகிறது. அதுவே சாந்தம். மன ஒருக்கத்தை நம்பித்தான் விவேகமும், உள்ளறிவும் இறுதியில் தோன்றும். அதன் பின்னர் மனம் நீங்கள் கண்களைமூடி உட்கார்ந்திருக்கும் போதும் அல்லது ஒரு பரப்பரப்பான நகரின் இரைச்சலுக்கு மத்தியிலும் அமைதியாக இருக்கும்.

அது இது போல: ஒரு சமயம் நீங்கள் குழந்தையாக இருந்தீர்கள். இப்போது வளர்ந்து பெரியவராகி விட்டீர்கள். குழந்தையும் பெரியவரும் ஒரே மனிதர் தான். அதுபோல மன சாந்தமும், உள்ளறிவும் வேவ்வேறு செயல்கள். அல்லது உணவும், மலமும் போல: உணவுதான் மலமாகிறது. எனவே இரண்டும் ஒன்று எனவும் சொல்லலாம், ஆனால் பிறிதொரு கோணத்திலிருந்து பார்க்கும் போது அவை வெவ்வேறானவை.

79. A Stick Top

Meditation is like a stick. Insight lies on this end of the stick. Tranquility lies on that end of the stick. If you lift this stick up, will one end of the stick come up with it, or will both ends come up? If you lift it up, both ends will come up with it. Whatever's insight, whatever's tranquility, it's all this mind.

தடி

தியானம் ஒரு தடியைப்போல. மெய்ஞ்ஞானம் அந்த தடியின் ஒரு நுனியில் உள்ளது. அமைதி தடியின் மறு நுனியில் உள்ளது. அந்த தடியைத் தூக்கினால் ஒரு நுனி மட்டும் தூக்கப்படுமா அல்லது இரண்டு நுனிகளும் தூக்கப்படுமா? அதைத் தூக்கினால் இரண்டு நுனிகளுமே தூக்கப்படும். மெய்ஞ்ஞானம், அமைதி இரண்டும் இந்த மனத்திலேயே இருக்கின்றன.

80. Painting a Picture Top

Success in the practice is connected with discernment: insight meditation, where discernment and the mind stay together. Some people don't have to do very much and yet these things come together on their own. People with discernment don't have to do much at all. Concentration is like being an artist. You look at something and you understand it. You understand it until it stays there in your heart. You can paint a picture out of what's in your heart. You don't have to sit right there in front of it and paint it from sight. The person who doesn't understand is the one who has to sit there sketching until it seeps into his heart. With discernment you don't have to sit there and sketch. You look and you understand. You can paint straight from your understanding. That's the way it is.

ஓவியம் வரைவது

பயிற்சியில் வெற்றி பெறுவது விவேகத்தைப் பொருத்து இருக்கிறது: மெய்ஞ்ஞானம், தியானம் – விவேகமும், மனமும் சேர்ந்திருப்பன. ஒரு சிலருக்கு அதிக முயற்சி செய்யாமலேயே இவை தானாக ஒன்று கூடுகின்றன. விவேகம் உள்ளவர் அதிகம் செய்ய வேண்டியது இல்லை. ஒருக்கம் ஒரு ஓவியரைப்போல. ஒன்றைப் பார்த்தவுடன் ஓவியர் அதைப் புரிந்து கொள்கின்றார். உள்ளத்தில் தொடர்ந்து நிலைக்குமளவு புரிந்து கொள்கின்றார். ஓவியம் உங்கள் உள்ளத்திலிருப்பதிலிருந்து தோன்றுகிறது. காட்சியைப் பார்த்துக் கொண்டே வரைய வேண்டியதில்லை. புரிந்து கொள்ளாதவர் தான் காட்சிக்கு முன்னால் உட்கார்ந்து உள்ளத்தை ஊடுருவும் வரை அதைப் பார்த்துக் கொண்டே வரைய வேண்டும். விவேகம் இருந்தால் அங்கு உட்கார்ந்து கொண்டு வரைய வேண்டியதில்லை. பார்த்தவுடன் புரிந்து கொள்வீர்கள். பின் நீங்கள் அறிந்ததிலிருந்து நேரடியாக வரையலாம். நடைமுறை அப்படித்தான்.

81. The Food You Like Top

The object of your tranquility meditation, if it's not in line with your character, won't give rise to dispassion or chastened dismay. The object in line with your character is the one you find yourself thinking about often. We don't usually notice this, but we should notice this to get some benefit out of it. It's like lots of different foods arranged on a tray. You taste the food from each bowl, each type of food, and you'll know for yourself which ones you like, which ones you don't. The ones you like you'll say are more delicious than the others. Here I'm speaking about the food. You can compare it to your meditation. Whichever object is in line with your character will feel comfortable.

உங்களுக்குப் பிடித்த உணவு

தியானம் செய்வதன் நோக்கம், அது உங்கள் பண்புகளுக்கு நிகராக இல்லாவிட்டால், அமைதிக்கு இடம் கொடுக்காது. உங்கள் பண்புகளுக்கு நிகரான செயல்களையே நீங்கள் அடிக்கடி சிந்தித்துப் பார்ப்பீர்கள். இதை நாம் பொதுவாகக் கவனிப்பதில்லை ஆனால் இதைக் கவனிப்பதால் பலன் கிடைக்கும். இது ஒரு தட்டில் பலவிதமான உணவு வகைகள் இருப்பது போல. நீங்கள் ஒவ்வொரு உணவையும் சுவைபார்த்த பின்பே உங்களுக்கு எது பிடித்தது எது பிடிக்காதது என்பது தெரியவரும். பிடித்ததைச் சுவையாக இருந்ததாகக் கூறுவீர்கள். இங்கு நான் உணவைப் பற்றிப் பேசுகிறேன். இதைத் தியானத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். உங்கள் பண்புக்கு நிகரான பொருட்களே உங்களுக்கு வசதியானதாகத் தோன்றும்.

82. Catching a Lizard Top

The way to focus your mind on an object, to catch hold of the object, is to acquaint yourself with your mind and to acquaint yourself with your objects. It's like the way men catch a lizard. The lizard lies inside the hollow of a termite's nest with six holes. The men close off five of the holes, leaving just one hole for the lizard to come out. Then they sit there watching that one hole. When the lizard comes out, they can catch it.

You focus on the mind in just the same way. Close off your eyes, close off your ears, close off your nose, close off your tongue, close off your body, and leave just the mind open. In other words, exercise restraint over your senses and focus just on the mind.

Meditation is like men catching a lizard. You focus your mind on the breath, being mindful and careful to be aware. Whatever you're doing, be alert to what you're doing. The feeling that arises in the mind at that moment is that you're alert to what you're doing. That feeling is what makes you aware.

பல்லியைப் பிடிப்பது

மனத்தைப் புரிந்து கொண்டால், மனத்தின் இலக்கைத் தெரிந்து கொண்டால் மனத்தை அதன் மீது கவனம் செலுத்த வைக்கலாம். இது மனிதர் பல்லியைப் பிடிப்பதுபோல. ஆறு துவாரங்கள் கொண்ட கரையான் புற்றில் பல்லி இருக்கிறது. அவர்கள் ஐந்து துவாரங்களை அடைத்து விட்டுப் பல்லி வெளியே வர ஒரு துவாரத்தை மட்டும் மூடாமல் விட்டு வைப்பார்கள். பின் அந்த ஒரு துவாரத்தை மட்டும் கவனித்துக் கொண்டு இருப்பர்கள். பல்லி வெளியே வரும் போது அதைப் பிடித்து விடுவார்கள்.

மனத்தின் மீதும் நீங்கள் அவ்வாறே கவனம் செலுத்த வேண்டும். கண்களை மூடி, காதுகளை மூடி, மூக்கை மூடி, நாக்கை மூடி, உடலை மூடி மனத்தை மட்டும் திறந்து வைத்திருங்கள். அதாவது புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து மனத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள்.

தியானம் மனிதர் பல்லியைப் பிடிப்பது போல. மனத்தை மூச்சின் மீது கவனம் செலுத்தச் செய்ய வேண்டும். நற்கடைப்பிடியும், அறிநிலையும் கொண்டிருக்க வேண்டும். எது செய்தாலும் செய்வதை மிகுந்த அக்கறையோடு செய்ய வேண்டும். செய்யும் போது மனத்தில் தோன்றும் உணர்ச்சிகளை நாம் கவனித்தவாறு இருக்கின்றோம். அந்த உணர்ச்சி தான் உங்களை அறிநிலையில் வைத்திருக்கிறது.

83. Water Drops, Water Streams Top

Start out by contemplating your own mind. Always be careful to look after your five precepts. If you make a mistake, stop, come back, and start over again. Maybe you'll go astray and make another mistake. When you realize it, come back, start over again, each and every time.

Your mindfulness will gain a higher frequency, like water poured from a kettle. If we tilt the kettle just a little, the water comes out in drops: glug... glug... glug. There are breaks in the flow. If we tilt the kettle a little bit more, the drops become more frequent: glug-glug-glug. If we tilt the kettle even further the glugs disappear and the water turns into a continuous stream. There are no more drops, but they didn't go anywhere. They're so frequent that they've turned into a continuous stream of water. They've become so frequent that they're beyond frequency. They meld into one another in a stream of water.

நீர்ச் சொட்டுகள், நீரோட்டம்

மனத்தைப் பிரதிபலிப்பதிலிருந்து துவங்குங்கள். ஐந்து ஒழுக்கங்களை அக்கறையோடு பேணுங்கள். தவறு செய்தால், நிறுத்தி விட்டு, திரும்ப ஆரம்பத்திலிருந்து துவங்குங்கள். மறுபடியும் வழிதவறித் தவறு செய்யலாம். ஒவ்வொரு முறையும் தவற்றை உணர்ந்தவுடன் திரும்பத் துவங்குங்கள்.

அப்போது உங்கள் கடைப்பிடி அதிகரிக்கும். இது செம்பிலிருந்து தண்ணீரை ஊற்றுவது போல. கொஞ்சமாகச் சாய்த்தால், தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழும். விட்டு விட்டு விழும். ஓட்டத்தில் இடைவெளி இருக்கும். அதிகம் சாய்க்கச் சாய்க்கச் சொட்டுக்கள் அடிக்கடி விழும். மேலும் சாய்த்தால் நீர் சொட்டுச் சொட்டாக விழாமல் நீரோட்டமாக ஊற்றும். இப்போது சொட்டுக்கள் மறைந்து விட்டன என்றாலும் அவை எங்கேயும் போய்விட வில்லை. அடிக்கடி விழுவதால் நீரோட்டமாகத் தெரிகிறது. ஒவ்வொரு சொட்டும் ஒன்றோடொன்று சேர்ந்து கொண்டதால் சீரான நீரோட்டமாகத் தெரிகிறது.

84. Herding Water Buffalo Top

...It's the same with the practice. When we keep watch over our mind, when awareness keeps watch over its own mind, whoever keeps track of the mind will escape from Mara's snares.

It's like keeping herd on a water buffalo:

one, rice plants;

two, buffalo;

three, buffalo's owner.

The buffalo wants to eat the rice plants. The rice plants are what the buffalo wants to eat. The mind is like the buffalo. Its objects are like the rice plants. Awareness is like the buffalo's owner. When we keep herd on a buffalo, we have to follow it to make sure it doesn't eat the rice plants. We let it loose, but we try to keep watch over it. If it gets near the rice plants, we yell at it. When the buffalo hears us, it'll back off. But we can't be complacent. At the very least, don't take a nap in the middle of the day. If you take a nap in the middle of the day, the rice plants will be all gone for sure.

எருமை மந்தையை மேய்ப்பது

..நம் பயிற்சியும் அது போலவே. மனத்தைக் கவனிக்கும் போது, அறிநிலை, மனத்தையே கவனிக்கும் போது, யாரெல்லாம் மனத்தைக் கவனித்துக் கொண்டார்களோ அவர்களெல்லாம் மாரனின் வலையில் சிக்குவதில்லை.

இது எருமைமாட்டு மந்தையைக் கவனிப்பது போல:

ஒன்று, நெல்வயல்;

இரண்டு, எருமை;

மூன்று, எருமையின் சொந்தக்காரன்.

எருமைக்கு நெற்பயிரைத் தின்ன விருப்பம். மனம் அந்த எருமையைப்போல. மனத்தில் அடங்கிய பொருட்கள் அந்த நெற்பயிர்களைப்போல. அறிநிலை எருமையின் சொந்தக்காரனைப்போல.

எருமையைக் கவனிக்கும் பொறுப்பிலிருக்கும் போது அது நெல்வயலுக்குள் புகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் கட்டை அவிழ்த்துவிட வேண்டும், ஆனால் அதே சமயம் அதன் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். நெல் வயலுக்கருகில் சென்றால் கூச்சலிட வேண்டும். எருமை கூச்சலைக் கேட்ட உடன் பின் வாங்கி விடும். ஆனால் நாம் எப்போதும் அக்கறையோடு இருக்க வேண்டும். குறைந்தது மதிய நேரம் ஓய்வெடுக்க எண்ணித் தூங்கி விடக் கூடாது. அவ்வாறு தூங்கி விட்டால் நெற்பயிரை எருமை மாடு தின்றுவிடும் என்பது உறுதி.

85. Beating the Buffalo Top

The mind is like the buffalo. Its objects are like the rice plants. Awareness is like the buffalo's owner. What do you do when you keep herd on a buffalo? You let the buffalo loose, but you try to keep watch over it. If it gets near the rice plants, you yell at it. When the buffalo hears you, it'll back off. But you can't be complacent. If it's stubborn and won't listen to you, you have to take a heavy stick and really beat it.

And then where do you think it'll go?

எருமையை அடிப்பது

மனம் ஒரு எருமையைப்போல. மனத்தின் பொருட்கள் நெற்பயிர்களைப்போல. அறிநிலை தான் எருமையின் சொந்தக்காரன். எருமையை மேய்க்கும்போது என்ன செய்ய வேண்டும்? எருமையை மேய விட வேண்டும் அதே சமயம் அதன் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். நெற்பயிருக்கு அருகில் சென்றால் கூச்சலிடவேண்டும். எருமை அதைக் கேட்டவுடன் பின்வாங்கிவிடும். ஆனாலும் ஏனோதானோ என்று இருந்துவிட முடியாது. கூச்சலிட்டும் அது கேட்கவில்லையென்றால் ஒரு தடியைக் கொண்டு அதை அடித்துத் துரத்த வேண்டும். பின் அந்த எருமை எங்கு போகும் என்று நினைகின்றீர்கள்?

86. Teaching a Child Top

...So in this practice we're told to sit. That's the practice of sitting. And then you keep watching. There will be good moods and bad moods all mixed together in line with their normal nature. Don't simply praise your mind; don't simply punish it. Have a sense of time and place with it. When the time comes to praise it, give it a little praise — just enough, don't spoil it. It's like teaching a child. Sometimes you have to spank it. Take a small switch and spank it. You can't not spank it. In other words, you have to punish it sometimes.

But you can't keep punishing it all the time. If you punish it all the time, it'll simply go astray. If you keep on giving it pleasure, keep on giving it rewards, it won't be able to get anywhere.

குழந்தைக்குக் கற்பிப்பது

..இந்தப் பயிற்சியில் நாம் உட்காரக் கற்பிக்கப் படுகிறோம். உட்கார்ந்து பயிற்சி செய்வது. பின் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். நல்ல மனநிலைகளும், மோசமான மன நிலைகளும் கலந்து அவற்றின் இயல்புக்குத் தகுந்தார்ப்போலத் தோன்றும். எடுத்தவுடன் மனத்தைப் பாராட்ட வேண்டாம்; அதைத் தண்டிக்கவும் வேண்டாம். அதற்குக் காலமும் இடமும் உள்ளன. பராட்ட வேண்டிய நேரத்தில் சிறிது பாராட்டலாம் – கொஞ்சம். மிகவும் பாராட்டிக் கெடுத்துவிட வேண்டாம்.

இது ஒரு குழந்தைக்குக் கற்பிப்பதுபோல. சில சமயம் அதற்குத் தண்டனை தர வேண்டும். ஒரு சிறு குச்சியால் மெல்ல அடிக்க வேண்டியிருக்கும். அடிக்காமலும் இருக்க முடியாது. அதாவது சில சமயம் அதற்குத் தண்டனை தந்தே தீர வேண்டியிருக்கும்.

அனால் அதை எந்நேரமும் தண்டித்துக் கொண்டிருக்கவும் முடியாது. அப்படிச் செய்தால் அது எதிர்த் திசையில் வழி தவறிப் போய் விடும். அதற்கு எப்போதும் மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருந்தாலும், எப்போதும் பரிசு தந்து கொண்டிருந்தாலும் முன்னேற்றமிருக்காது.

(மொ.ஆ.குறிப்பு: இக்காலத்தில் குழந்தைகளை அடிப்பது ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. எனவே அடிப்பது போன்ற தண்டனை தராமல் குழந்தைகளை வேறு முறையில் திருத்த முயற்சிக்கலாம்.)

87. Standard Form Top

The standard way to sit in concentration is to sit with your legs crossed, right leg on top of the left leg, right hand on top of the left hand. Sit up straight. Some people say you can do it walking, you can do it sitting, so can you do it kneeling? Sure — but you're beginning students. When you learn how to write, you have to practice making clear letters first, with all their parts. Once you understand your letters and you're writing just for yourself to read, you can write in a scrawl if you want. It's not wrong. But you have to learn the standard form first.

தியானத்தின் போது உடலின் நிலை

சாதாரணமாக மன ஒருக்கம் உண்டாகத் தியானம் செய்யும் போது கால்களை மடக்கி சம்மணமிட்டு - வலது கால் இடது கால் மீதும், வலது கை இடது கை மீதும் இருக்குமாறு அமர வேண்டும். நிமிர்ந்து உட்கார வேண்டும். சிலர் தியானத்தை நடந்தும் செய்யலாம், உட்கார்ந்தும் செய்யலாம் என்கின்றனர். முட்டி போட்டுக் கொண்டும் செய்யலாமா? கண்டிப்பாக - ஆனால் நீங்கள் ஆரம்ப நிலை மாணவர்கள். எழுதக் கற்கும் போது முதலில் தெளிவாக எழுத்துக்களை எழுதக் கற்கிறோம். நீங்கள் எழுதியவற்றைப் புரிந்து கொள்ளும் அளவு முன்னேறிய பின் உங்களுக்கென்று எழுதும் போது - அது ஒரு கோழி கிறுக்குவது போல இருந்தாலும் பரவாயில்லை - அதில் தவறில்லை. ஆனால் முதலில் சீராக எழுதக் கற்க வேண்டும்.

88. Sowing Rice Top

Sit watching your in-and-out breath. Stay relaxed and comfortable, but don't let yourself get distracted. If you're distracted, stop. Look to see where the mind went and why it isn't following the breath. Go looking for it and bring it back. Get it to keep running along with the breath, and one of these days you'll come across something good. But keep on doing what you're doing. Do it as if you're not expecting to get anything from it, nothing will happen, you don't know who's doing it — but you keep on doing it. It's like taking rice from the granary and sowing it on the ground. It looks like you're throwing it away. You scatter it all over the ground as if you're not interested in it. But it'll turn into sprouts and plants. You put the plants in the paddies, and in return you get to eat rice treats. That's just how it goes.

நெல் விதைப்பது

உள் மூச்சையும், வெளிமூச்சையும் கவனித்தபடி உட்காருங்கள். விரைப்பாக இல்லாமல் வசதியாக உட்காருங்கள். எக்காரணம் கொண்டும் கவனம் திசை திரும்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படித் திசை திருப்பப் பட்டால் நிறுத்துங்கள். எங்கு சென்றது மனம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஏன் மூச்சைத் தொடரவில்லை? அதைத் தேடிப் பிடித்துத் திரும்பக் கொண்டு வாருங்கள். மூச்சோடு சேர்ந்து அதை ஓட விடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்தால் ஒரு நாள் உங்களுக்கு நல்லது தென்படும். எதையும் எதிர்பார்த்துச் செய்ய வேண்டாம், எதுவும் நடக்காது, யார் செய்வது என்றும் தெரியவில்லை - ஆனால் தொடர்ந்து செய்து கொண்டிருங்கள். இது தானியக் களஞ்சியத்திலிருந்து நெல்லை எடுத்து விதைப்பதுபோல. நெல்லை எறிவதுபோலத் தோன்றலாம். அக்கறையில்லாதவாறு மண்ணில் வீசுவதுபோலத் தோன்றலாம். ஆனால் அது முளைத்து நாற்றாகி விடும். பின்னர் அதை வயலில் நட்டு, பிரதிபலனாக அரிசியால் செய்யப்பட்ட பதார்த்தங்களை உண்ணலாம். இப்போதைய நடைமுறை அதுதான்.

89. Teaching a Child Top

Sometimes the breath isn't right. It's too long, too short, and it puts you in a frenzy. That's because you're fixing your mind too strongly on it, you're squeezing it too much. It's like teaching a child how to sit. If you beat it every time, will it become intelligent? You're controlling it too much. It's the same here. Think about it: When you walk from your house to your orchard, or from your house to your workplace, why aren't you irritated by the breath? Because you don't grab hold of it. You leave it alone in line with its affairs. The parts of the body that hurt are because you focus and fix your mind on them too strongly.

குழந்தைக்குக் கற்பிப்பது

சில சமயம் நாம் எடுக்கும் மூச்சு சரியானதாகத் தோன்றுவதில்லை. மிக நீளமாக இருக்கும், அல்லது மிகக் குறுகியதாக இருக்கும் அல்லது பதட்டமானதாக இருக்கும். அதன் காரணம் உங்கள் மனத்தை மிகவும் உன்னிப்புடன் அதைக் கவனிக்கின்றீர்கள். அதன் மீது தேவைக்கு அதிகமாக அழுத்தம் தருகின்றீர்கள். ஒரு குழந்தைக்கு உட்காருவது எப்படி என்று சொல்லித்தருவது போல. ஒவ்வொரு முறையும் அதை அடித்தால் அது அறிவுடையதாகிவிடுமா? அதைத் தேவைக்கு அதிகமாகக் கண்டிக்கின்றீர்கள்.

இது அதுபோலத்தான். நினைத்துப் பாருங்கள்: வீட்டிலிருந்து தோட்டத்துக்கு நடந்து போகும்போது அல்லது வீட்டிலிருந்து வேலைக்கு நடந்து போகும்போது மூச்சு உங்களைப் பாதித்ததா? இல்லையே. அதற்குக் காரணம் அதை நீங்கள் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. அதன் வழியே நடந்து கொள்ள விட்டு விட்டீர்கள். உடலின் பகுதிகளில் வலி உண்டாவதற்குக் காரணம் உங்கள் மனக்கவனத்தை அவற்றின் மீது அதிகமாகச் செலுத்துவதுதான்.

90. Sending off a Relative Top

Watch the breath. Focus on the breath. Gather the mind at the breath. In other words, make it aware at the breath in the present. You don't have to be aware of a lot of things. Focus on inclining the mind, inclining the mind, to get more and more refined, more and more refined, continually, continually, until the feeling of the breath is very subtle, and the mind is extremely awake.

Any pains that arise in the body will gradually grow still, gradually grow still. Eventually you'll be watching the breath like a relative who's come to visit you. You go with him to send him off at the bus station or the boat dock. You accompany him to the bus, to the boat. Once they start up the motor, the bus or boat goes running off, and you stand there watching it go off into the distance. When your relative has gone, you go back home.

It's the same with watching the breath. When the breath is coarse, we know. When it's refined, we know. As it gets more and more refined, we keep watching, watching, following it, inclining the mind, inclining the mind, making the mind more and more awake, letting the breath grow more and more refined. Eventually the breath will grow so subtle that there's no more in-and-out breath. There's just a sense of "awake."

உறவினரை வழி அனுப்புவது

மூச்சைக் கவனியுங்கள். மூச்சின் மீது கவனத்தை மையப் படுத்துங்கள். மனம் மூச்சோடு ஒன்றி இருக்கட்டும். அதாவது மனம் நிகழ்காலத்தில் மூச்சோடு இருக்க வேண்டும். பலவற்றையும் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. மனத்தை மூச்சின் மீது கவனம் செலுத்த வையுங்கள். மூச்சு நுட்பமாக நுட்பமாக, தொடர்ந்து, மூச்சின் உணர்ச்சி மென்மையாகும் வரை, அதே சமயம் மனம் விழிப்புடன் இருக்கும் நிலையில் அதன்மீது கவனம் வையுங்கள்.

ஏதாவது உடலில் வேதனையான உணர்ச்சிகள் எழும் போது அவை படிப்படியாக மென்மையாகிக் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும். இறுதியில் மூச்சை உங்களைச் சந்திக்க வந்த உறவினரைப்போலக் காண்பீர்கள். அவர் செல்லும் போது வழி அனுப்ப அவருடன் பேருந்து நிலையம் வரையோ அல்லது பரிசல் துறை வரையோ செல்வீர்கள் அல்லவா? பேருந்தில் ஏறும் வரை அல்லது படகில் ஏறும் வரை காத்திருந்து அது புறப்பட்ட பின் வெகு தூரம் போகும்வரை பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உறவினரை வழி அனுப்பியபின் வீடு திரும்புவீர்கள்.

அது போலவே மூச்சையும் கவனிக்க வேண்டும். மூச்சு சுரசுரப்பாக இருக்கும் போது அப்படிச் சுரசுரப்பாக இருப்பதைக் கவனிப்பீர்கள். நுட்பமானதாக இருந்தால் நுட்பமானதாக இருப்பதைக் கவனிப்பீர்கள். மூச்சு மென்மையாக ஆக ஆக, அதைத் தொடர வேண்டும். அதே சமயம் மனத்தையும் விழிப்புறச் செய்ய வேண்டும். ஒரு காலக்கட்டத்தில் மூச்சே (மனத்துக்கு மூச்செடுப்பதே தெரியாத வண்ணம்) மறைந்து விடும். இருப்பதெல்லாம் அந்த விழிப்புடன் இருக்கும் நிலைதான்.