மூச்சு Breath
Breath
மூச்சு
14
There are people who are born and die and never once are aware of their breath going in and out of their body. That’s how far away they live from themselves.
பிறந்ததிலிருந்து இறக்கும் வரை தங்கள் மூச்சு உடலின் உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் அறியாமலே இருப்பவர்கள் இருக்கிறார்கள். அந்த அளவுக்குத் தங்களை மறந்து வெகு தூரத்தில் அவர்கள் வாழ்கிறார்கள்.
15
Time is our present breath.
நேரம் என்பது நம்முடைய நிகழ்கால மூச்சு.
16
You say that you are too busy to meditate. Do you have time to breathe? Meditation is your breath. Why do you have time to breathe but not to meditate? Breathing is something vital to people’s lives. If you see that Dhamma practice is vital to your life, then you will feel that breathing and practicing the Dhamma are equally important.
வேலையின் ஈடுபாடு காரணமாகத் தியானம் செய்ய நேரம் இல்லை என்று சொல்கிறீர்கள். மூச்சு எடுக்க நேரம் இருக்கிறதா? தியானம் தான் உங்கள் மூச்சு. ஏன் மூச்செடுக்க நேரம் இருக்கும் போது தியானம் செய்ய மட்டும் நேரம் இல்லை? மூச்சு எடுப்பது வாழ்வுக்கு முக்கியம். தரும வழிமுறைகள் வாழ்க்கைக்கு முக்கியம் என்று நீங்கள் கண்டு கொண்டால், மூச்செடுப்பதும் தரும வழிமுறையைத் தொடர்வதும் சம முக்கியத்தும் வாய்ந்தன என்பதை உணர்வீர்கள்.