அடை காக்கும் கோழி
Excerpts from a Dhamma talk by Bhikkuni Ajahn Vayama
English version follows the Tamil Translation
பிக்குனி அஜான் வயாமா அவர்களின் பேச்சிலிருந்து தொகுக்கப்பட்டது
பௌத்தத்தில் நாம் முதலில் உள்ளத்தைப் புரிந்து கொள்வதில் கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் நமது உள்ளத்தை, மனதைப் புரிந்துகொண்டால் வெளி உலகமும் புரியத் தொடங்கும். எப்படிக் காரியங்கள் நடைபெறுகின்றன என்றும் நமது செய்கையின் பயனாக என்ன நடக்கப் போகிறது என்பதையும் அறிகிறோம்.
பௌத்தம் ஈடுபாட்டோடு செய்ய வேண்டிய பயிற்சி. ஆனால் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஏன் என்றால் பெரும்பாலான நேரங்களில் நாம் செய்யும் செயல் மனதிற்குள்ளேயே நிகழ்கிறது.
புத்தர் இதற்கு ஒரு உவமானம் கூறுவார். அடைகாக்கும் கோழி தன் முட்டைகள் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறது. எதையும் செய்யாமல் முட்டைகளின்மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் எதையும் செய்யாமல் உட்கார்ந்திருந்தாலும், அப்படி உட்காரவில்லை என்றால், நீண்ட நேரம் உட்காரவில்லை என்றால், அடிக்கடி உட்காரவில்லை என்றால் குஞ்சு பொரிக்கப் போவதில்லை. கோழி தான் விரும்பினாலும் சரி, குஞ்சு பொரித்துவிடும் என்று நம்பினாலும் சரி, முட்டைகள் மீது உட்காரவில்லை என்றால் குஞ்சு பொரிக்கப் போவதில்லை. முட்டைக்குள் என்ன நடக்கிறது என்று தெரியவில்லையென்றாலும் கோழி உட்கார்ந்திருப்பதால் தான் அது நடக்கிறது என்பதில் நமக்கு ஐயமேதும் இல்லை.
நமது பயிற்சியும் அது போலத்தான். முதலில் வெளியில் காண முடியாத செயலான மனப்பயிற்சி செய்ய வேண்டும். பின் மற்ற வேலைகளை நாம் திறமையுடன் செய்ய முடியும். வெளிப்படையாக ஒன்றும் நடக்காதது போலத் தோன்றும். ஆனால் ஆழ் மனதைக் கவனிக்கும் போது எவ்வளவோ நடந்து கொண்டிருக்கிறது புரியும். நேராக உட்கார்ந்து மூச்சைக் கவனிக்கும் பயிற்சியில் ஈடுபடும்போது சாந்தமாக இருப்பதாக வெளிப் பார்வைக்குத் தோன்றுகிறது. ஆனால் மனமோ துறுதுறுப்போடு சுற்றிச் சுற்றி இங்கும் அங்கும் அலைந்து கொண்டல்லவா இருக்கிறது! வெறுமனே உட்கார்ந்து இருப்பதாகத் தெரிந்தாலும் மனதிற்குள் நிறைய நடந்து கொண்டிருக்கிறது. மனதைக் கவனிக்கும் போது, மனதில் நடப்பதைக் கவனிக்கும் போது, மனதின் செயல் முறையை அறிகிறோம். எதனால் நம் அனுபவங்கள் தோன்றுகின்றன என்பதையும், நாம் யார் என்பதையும், நாம் தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதையும் அறிகிறோம்.
புத்தர் நாம் செய்ய வேண்டிய பயிற்சியினைத் தெளிவாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
மனம் தருமத்தை நோக்கி ஆர்வத்துடன் செல்ல வேண்டும். இந்த ஆர்வம், இந்த மகிழ்ச்சி, இந்த அக்கறையின் காரணமாக நாம் தருமப் பயிற்சி செய்யும் போது நம் மனம் அமைதியுடன் இல்லை என்றாலும் நாம் மகிழ்வோடு வேலை செய்கிறோம்.
இந்தப் பேராசையான மனதை, கிளர்ச்சியான மனதை, பிடிவாதமான மனதை, சோம்பலான மனதைக் கையாளப் புத்தர் நமக்கு வழிமுறைகளைக் காண்பித்திருக்கிறார். நாம் பயிற்சி செய்வதனால் மனம் மாறக்கூடியது என்பதையும், உறுதியற்றது எனபதையும், துக்கம் தரக்கூடியது என்பதையும், நம் கட்டுப்பாட்டில் இல்லையென்பதையும் உணர்கிறோம். எனவே இருக்கும் சூழ்நிலையைச் சார்ந்து வேலை செய்கிறோம். இப்படித் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது மனம் சமாதானப்படுகிறது, அமைதி பெறுகிறது, தெளிவடைகிறது, உறுதிப்படுகிறது. இதனால் மன ஒருமைப்பாடு அதிகரிக்கிறது. தியானம் செய்வது நம் வாழ்வில் ஒரு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. தியானம் செய்ய விரும்புகிறோம். தியானம் செய்வதனால் புத்துணர்ச்சி பெறுகிறோம். இந்த நல்ல உணர்ச்சியோடு உலகையே நம்மால் மாற்றமுடியும். சங்கடமான சூழ்நிலைகளையும் பிரகாசமான மனதோடு மகிழ்வான மனதோடு ஊக்கமான மனதோடு எதிர்கொள்ளமுடிகிறது. முன்பு பெரும் பிரச்சனையாகத் தோன்றியதெல்லாம் இப்போது அதுதான் உலகின் நடைமுறை, அப்படித்தான் மக்கள் நடந்து கொள்வார்கள் என்று நினைத்துப் பெரும் பிரச்சனையாக்கிக் கொள்ளாமல் சாமாளிக்கிறோம். இப்படி உலகையே மாற்றி விடுகிறோம். இப்போது நமக்கு உலகம் வேறு விதமாகத் தோன்றுகிறது. நமக்கு எது முக்கியம் என்ற குறிக்கோளே மாறிவிடுகிறது. வாழ்க்கையில் சாதிக்க நினைத்ததே மாறிவிடுகிறது.
சமநிலையான மனதோடு வாழ்க்கையை வாழ்கின்றோம். வாழ்க்கையின் மேடு பள்ளங்களை அமைதியாகவும், சமாதானத்தோடும், சிக்கலில்லாமலும் சமாளிக்க முடிகிறது. இவையெல்லாம் நமதுவாழ்க்கை நிலையைப் பார்க்கும் போது அல்லது நாம் இருப்பதாக நினைக்கும் நிலையைக் காட்டிலும் வெகுதூரத்தில் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் பௌத்தப்பாதை அதை அடைய நமக்கு உறுதியளிக்கிறது.
அடை காக்கும் கோழி பற்றிய உவமானத்தில் புத்தர், கோழி தன் முட்டையின் மீது உட்கார்ந்தால் 'குஞ்சு செவ்வனே பொரிக்கட்டும்' என்று விரும்ப வேண்டிய தில்லை. கோழி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குஞ்சு பொரிப்பது உறுதி. அது போல மன அசுத்தங்களிடமிருந்து விடுதலை பெற விரும்புவோர், அமைதியோடும் சிக்கலற்றும் அறிவோடும் கருணையோடும் வாழ விரும்புவோர் , பௌத்த நெறிப்படி வாழ்ந்தால், ஞானம் பெறத் தேவையானவற்றைப் பின்பற்றினால் 'என் மனம் அமைதி காணட்டும்' என்றும், 'இச்சூழ்நிலையை நான் நன்றாகக் கையாள வேண்டும்' என்றெல்லாம் விரும்ப வேண்டியதில்லை. விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அது தானகவே நடக்கும். கோழி விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தன் முட்டை பொரிப்பதைப் பார்ப்பதைப் போலத்தான் இதுவும். இது புத்தரே நமக்கு வழங்கும் உறுதி மொழி. ஆனால் விரும்பினால் மட்டும் போதாது. பௌத்தம் ஈடுபாட்டோடு செய்ய வேண்டிய பயிற்சி என்பதை இப்போது நாம் புரிந்து கொள்கிறோம் அல்லவா? மனதிற்குள் நாம் செய்யும் வேலையையும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். மனம் தெளிவான பின் வெளி உலகில் செய்ய வேண்டியதை, செய்ய முடிந்ததை, செய்யத் தயாராகிறோம். வீட்டோடு மட்டும் இருந்து நம்மை மட்டுமே கவனிக்க வேண்டும் என்பதில்லை. உலகைக் கவனித்து நம்மால் செய்ய முடிந்ததை அமைதியாகவும் , அன்போடும், நட்புணர்வோடும் செய்யவேண்டும். அவ்வாறு செய்ய முடியவில்லையென்றால் எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பதைப் போலப் பிரச்சனைகள் அதிகரிக்கத்தான் செய்யும். எப்பேர்ப்பட்ட நல்ல காரியமாக இருந்தாலும் நாம் ஆணவத்தோடு உதவச் சென்றாலோ கோபத்தோடு செய்தாலோ அது பயன் தராது.
எனவே நான் உங்களது பயிற்சிக்கு ஊக்கமளிக்கிறேன். வீட்டுக்குள் உள்ள குப்பையை முதலில் பெருக்கிக் களைந்தபின் வெளி உலகில் திறமையுடன் எப்படிச் செயல் புரிவ தென்பதைத் தெரிந்துகொண்டு, எல்லாவிடத்திலும் இருக்கும் எல்லா உயிர்களுக்காவும் பணி புரிவோமாக.
இந்த தரும போதனையினால் உருவாகும் புண்ணியம் நம் எல்லோரையும் ஞானம் பெற உதவுமாக.
Excerpts from a Dhamma talk by Bhikkuni Ajahn Vayama
In Buddhism we start with understanding the inner world, because if we understand that that allows us to understand the bigger picture and to understand how things come to be and what is likely to happen as a result of what we do.
Buddhism is an active practice, but the action is invisible a lot of the time because it only goes on within our own mind.
The Buddha gave the simile that it is like the hen sitting on her eggs. She is just sitting there. What is she doing? She is not doing anything. She is just sitting there. But we know if the hen doesn't sit there, doesn't sit there long enough, often enough, even though she is not doing anything - just sitting there, those eggs won't hatch. Even if she wishes it, she hopes it, the eggs won't hatch unless she just sits there. We can't see what's happening inside the eggs but we know it is happening as a result of the hen sitting there.
Our practice is like that. We have to be prepared to do the invisible work first so we can do the active work more skillfully. It may seem nothing much is happening on the outside unless we are looking inside our own mind. When we sit and try to watch out breath we look calm from the outside. But the mind is very active and going very speedily from one thing to the other around and around. Even if it looks like we are just sitting there there is a lot going on. Observing the mind observing what goes on in the mind and starting t understand the process by which the mind comes into being. The process that creates our experience gives us the sense of who we are and what we are doing at this moment.
The Buddha has given us clear instructions on how to take up this practice.
The mind should leap towards our Dhamma practice. This interest, this enthusiasm, this joy means that when we sit down to meditate we enjoy our practice even if we are not calm, even if we are not blissful. We enjoy the work we are doing because we have the tools to work with the greedy mind, with the agitated mind, with the restless mind, with the sleepy mind. Since we have been practicing we know the mind is like this - changeable, uncertain, dhukka, suffering, not in my control. So we work with the conditions what ever they are and as we do this more and more our mind does become more peaceful, more tranquil, there is more clarity, more strength so we are able to experience moments of peacefulness moments of concentration and to continue to develop the practice to the point where our meditation becomes the source of joy and happiness in our lives . We actually love to meditate and when we meditate we feel great and we take that feeling with us into the world and we change the world. Even the most difficult circumstances are just difficult circumstances. The mind which deals with difficult circumstances is still bright, still joyful, still buoyant. Things that seemed problems before are just the way things are, just the way people are, just what happens in life. We changed the world. What the world is to us now is quiet different. What we think is important is quite different. How we want to spend our time is quite different. What we aspire to attain in this life is quiet different.
We live with a much more equanimity and balanced state of mind. We cope with the ups and we cope with the downs and we stay quite settled, quite peaceful, quiet at ease. This might seem very far away from where you feel you are at in your practice and in your own life right now. This is the promise of the path.
In the particular analogy that the Buddha gave of the hen sitting on her eggs, he said that if the hen sits on the eggs she doesn't have to wish 'may they hatch safely' . They will whether she wishes it or not. And the Buddha said that for one who wishes that their mind be free of defilement's and that they may be able to live at ease in the world with true wisdom and compassion, if they cultivate the path of practice, if they fulfill these 37 requisites of enlightenment, they don't have to wish 'oh, may my mind be peaceful, may I be able to handle this situation that I am in'. It will happen naturally whether you wish it or not. Just like the hen will find the eggs are hatching whether she wishes it or not. This is the promise given by the Buddha himself. But it doesn't happen just by wishing. This is how we finally twig to the fact that Buddhism is a very active practice. The internal work is active and once we have cleared up our own mind then we are in a much better position to go out into the world to do what we can for the world. It is not that we just stay at home and look after ourselves but we look into the world and see what can I do and can I do it in a way that is peaceful loving and kind. if I can't do it that way then I am adding to the angst of the world by going out and doing things with self righteousness, with anger, feeling that I am justified because it is a good cause. It doen't matter what the cause is.
So I encourage all of you continue to practice to clean up the inner household so that all of us can act skillfully in the world for the sake of all beings everywhere .
May the merit of this teaching tonight, help us all to attain Nibbana.