முகப்பு முன்னுரை I II III IV V VI
மஹா பரிநிப்பாண சூத்திரம்
அத்தியாயம் மூன்று - உயிர் வாழும் விருப்பத்தைக் கைவிட்டது
The Great Total Unbinding Discourse
Chapter 3 - Relinquishing the Will to Live
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் வண. தனிசாரோ பிக்கு
translated from the Pali by Thanissaro Bhikkhu
சீனா Shanghai Jade Temple China படம் ஆதாரம்
பகவர் நினைப்பூட்டுகிறார்
The Blessed One's Prompting
3.1. பின் பகவர், அதி காலையில், தனது கீழாடையைச் சரிசெய்தபின்னர் பிச்சா பாத்திரத்தையும் மேலாடையையும் எடுத்துக் கொண்டு வைசாலிக்கு உணவு சஞ்சரிக்கச் சென்றார். வைசாலிக்குச் சென்று சஞ்சரித்த உணவை உண்டபின், திரும்ப இருப்பிடம் வந்து போ. ஆனந்தரிடம், "உட்காருவதற்காக ஒரு பாயை எடுத்துவா, ஆனந்தா. ஓய்வெடுக்க சாபாலர் (Cāpāla) ஆலயத்துக்குச் செல்வோம்" என்றார்.
"அப்படியே ஆகட்டும், அண்ணலே," என்று பகவருக்குப் பதிலளித்த ஆனந்தர் விரிக்கப் பாயை எடுத்துக் கொண்டு பகவரைப் பின் தொடர்ந்தார்.
3.2. பின் பகவர் சாபாலர் ஆலயம் சென்றடைந்ததும், அங்கு விரிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார்.
பின் பகவர் ஆனந்தரிடம், "வைசாலி புத்துணர்ச்சி ஊட்டுகிறது, ஆனந்தா, உதேனர் ஆலயமும் (Udena shrine) புத்துணர்ச்சி ஊட்டுகிறது, கோதமாக (Gotamaka) ஆலயமும், சத்தம்பகர் (Sattambaka) ஆலயமும், [1] பாஹுபுத்திர (Bahuputta) [2] ஆலயமும், சாரந்த (Sāranda) ஆலயமும், சாபாலர் (Cāpāla) ஆலயமும் புத்துணர்ச்சி ஊட்டுகின்றன. [3]
3.3. "யாரெல்லாம் ஆனந்தா, சித்த சக்திகளுக்கான (psychic power) நான்கு பாதைகளை [4] வளர்த்துக் கொள்கின்றனரோ, அவற்றைத் தொடர்ந்து பயின்று, தமது வாகனமாக்கி, தமது அடித்தலமாக்கி, அவற்றை நன்கு அறிந்து, சரியாக ஏற்றுக் கொண்டுள்ளனரோ அவரால் - தான் வேண்டினால் - ஒரு வாழ்நாளைக்கும் அல்லது வாழ்நாளில் மிஞ்சியிருக்கும் நாட்களுக்கும் [5] தொடர்ந்து வாழலாம். ஆனந்தா, ததாகதரிடம் சித்த சக்திகளுக்கான நான்கு பாதைகள் வளர்க்கப் பட்டு, தொடர்ந்து பயிலப் பட்டு, தமது வாகனமாக்கப் பட்டு, தமது அடித்தலமாக்கப் பட்டு, அவை நன்கு அறியப் பட்டு, அவை சரியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன. அவர் - விரும்பினால் - ஒரு வாழ்நாளைக்கும் அல்லது வாழ்நாளில் மிஞ்சியிருக்கும் நாட்களுக்கும் தொடர்ந்து வாழலாம்.
3.4. ஆனால் போ. ஆனந்தர் - பகவர் தெளிவான ஒரு அறிகுறியைத் தந்தும், தெளிவான அடையாளம் காட்டியும் - பகவர் கூறியதன் பொருளை விளங்கிக் கொள்ளவில்லை. பகவரிடம் இவ்வாறு அவர் வேண்டிக் கொள்ளவில்லை, "அண்ணலே, பகவர் வாழ்நாள் நீடிக்கின்ற காலத்திற்கு இருக்க வேண்டும். ததாகதர் - பலரின் நன்மைக்காகவும், பலரின் மகிழ்ச்சிக்காகவும், உலகின் மீது கருணை கொண்டு, மனிதர்களின், தேவர்களின் முன்னேற்றத்திற்கும், நலனுக்கும், மகிழ்ச்சிக்காகவும் பகவர் வாழ்நாள் நீடிக்கின்ற காலத்திற்கு வாழ வேண்டும்." ஆனந்தரின் மனம் மாரனால் [6] பிடிகொண்டது போலத் தோன்றியது.
3.5. இரண்டாம் முறையும், மூன்றாம் முறையும் பகவர் ஆனந்தரிடம், "வைசாலி புத்துணர்ச்சி ஊட்டுகிறது, ஆனந்தா, உதேனர் ஆலயமும் (Udena shrine) புத்துணர்ச்சி ஊட்டுகிறது, கோதமாக (Gotamaka) ஆலயமும், சத்தம்பகர் (Sattambaka) ஆலயமும், பாஹுபுத்திர (Bahuputta) ஆலயமும், சாரந்த (Sāranda) ஆலயமும், சாபாலர் (Cāpāla) ஆலயமும் புத்துணர்ச்சி ஊட்டுகின்றன.
"யாரெல்லாம் ஆனந்தா, சித்த சக்திகளுக்கான (psychic power) நான்கு பாதைகளை வளர்த்துக் கொள்கின்றனரோ, அவற்றைத் தொடர்ந்து பயின்று, தமது வாகனமாக்கி, தமது அடித்தலமாக்கி, அவற்றை நன்கு அறிந்து, சரியாக ஏற்றுக் கொண்டுள்ளனரோ அவரால் - தான் வேண்டினால் - ஒரு வாழ்நாளைக்கும் அல்லது வாழ்நாளில் மிஞ்சியிருக்கும் நாட்களுக்கும் தொடர்ந்து வாழலாம். ஆனந்தா, ததாகதரிடம் சித்த சக்திகளுக்கான நான்கு பாதைகள் வளர்க்கப்பட்டு, தொடர்ந்து பயிலப்பட்டு, தமது வாகனமாக்கப்பட்டு, தமது அடித்தலமாக்கப்பட்டு, அவை நன்கு அறியப்பட்டு, அவை சரியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவர் விரும்பினால் ஒரு வாழ்நாளைக்கும் அல்லது வாழ்நாளில் மிஞ்சியிருக்கும் நாட்களுக்கும் தொடர்ந்து வாழலாம்.
ஆனால் போ. ஆனந்தர், பகவர் தெளிவான ஒரு அறிகுறியைத் தந்தும், தெளிவான அடையாளம் காட்டியும் பகவர் கூறியதன் பொருளை விளங்கிக் கொள்ளவில்லை. பகவரிடம் இவ்வாறு அவர் வேண்டிக் கொள்ளவில்லை, "அண்ணலே, பகவர் வாழ்நாள் நீடிக்கின்ற காலத்திற்கும் வாழ வேண்டும். ததாகதர் பலரின் நன்மைக்காகவும், பலரின் மகிழ்ச்சிக்காகவும், உலகின் மீது கருணை கொண்டு, மனிதர்களின், தேவர்களின் முன்னேற்றதிற்கும், நலனுக்கும், மகிழ்ச்சிக் காகவும் பகவர் வாழ்நாள் நீடிக்கின்ற காலத்திற்கும் வாழ வேண்டும்." ஆனந்தரின் மனம் மாரனால் பிடிகொண்டது போலத் தோன்றியது.
3.6. பின் பகவர் ஆனந்தரிடம், "போ ஆனந்தா, நீ இப்போது செய்யவேண்டியதைச் செய்," என்றார்.
"ஆகட்டும் அண்ணலே," என்று பகவருக்குப் பதிலுரைத்த ஆனந்தர் தனது இருக்கையிலிருந்து எழுந்து, பகவரை வணங்கி, அவரை வலம் சுற்றி வந்து பகவருக்குச் சற்று அருகிலிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.
மாரனின் வேண்டுகோள்
Mara's Appeal
3.7. ஆனந்தர் சென்ற சற்று நேரத்தில், மாரன் என்ற தீயவன் பகவரிடம் சென்று, பின் ஒரு புறமாக நின்றான். அப்போது அவன் பகவரிடம், "அண்ணலே, பகவர் இப்போதே பரிநிப்பாணம் அடைவாராக. அண்ணலே, ததாகதர் இப்போதே பரிநிப்பாணம் அடைவாராக. பரிநிப்பாணத்திற்கு இதுவே சரியான தருணம், அண்ணலே. பகவர், தாங்களே இவ்வாறு கூறியுள்ளீர்: 'தீயவனே, எனது ஆண் துறவி சீடர்கள் அனுபவம் பெறாதவரை, பயிற்சி பெறாத வரை, நம்பிக்கை கொள்ளாதவரை, நுகத்தடியிலிருந்து ஓய்வு கொள்ள விருப்பங் கொள்ளாதவரை, அறிவுடையோராகாதவரை, தம்மத்தைப் பராமரிக்காதவரை, தம்மத்தைத் தம்ம வழியில் பின்தொடராதவரை, அருமையாகப் பயின்று, தம்ம வழியில் நடந்து கொண்டு, தம்மத்தைத் தங்கள் ஆசியர்களிடமிருந்து கற்றபின் அறிவித்து, விவரித்து, வெளிப்படுத்தி, விளக்கி, எளிமையாக்கி, தம்மத்திற்கு மாறான போதனைகள் ஏதேனும் எழுந்தால் அவற்றைத் தம்ம வழியில் சரியாக நிராகரித்து, அதிசயமான விளைவுகளைக் கொண்ட தம்மத்தைப் போதிக்கும் வரை நான் பரிநிப்பாணம் அடைய மாட்டேன்.' [7]
"ஆனால் இப்போது பகவரின் ஆண் துறவி சீடர்கள் அனுபவம் பெற்றவர்கள், பயிற்சி பெற்றவர்கள், நம்பிக்கை கொண்டவர்கள், நுகத்தடியிலிருந்து ஓய்வு கொள்ள விருப்பம் கொண்டுள்ளவர்கள், அறிவுடையவர்கள், தம்மத்தைப் பராமரிப்பவர்கள், தம்மத்தைத் தம்ம வழியில் பின்தொடருபவர்கள், அருமையாகப் பயின்று, தம்ம வழியில் நடந்து கொண்டு, தம்மத்தை - தங்கள் ஆசியர்களிடமிருந்து கற்றபின் - அறிவித்து, விவரித்து, வெளிப்படுத்தி, விளக்கி, எளிமையாக்கி, தம்மத்திற்கு மாறான போதனைகள் எதேனும் எழுந்தால் அவற்றைத் தம்ம வழியில் சரியாக நிராகரித்து, அதிசயமான விளைவுகளைக் கொண்ட தம்மத்தைப் போதிக்கின்றனர்."
"அண்ணலே, பகவர் இப்போதே பரிநிப்பாணம் அடைவாராக. அண்ணலே, ததாகதர் இப்போதே பரிநிப்பாணம் அடைவாராக. பரிநிப்பாணத்திற்கு இதுவே சரியான நேரம், அண்ணலே. பகவர் தாங்களே இவ்வாறு கூறியுள்ளீர்: 'தீயவனே, எனது பெண் துறவி சீடர்கள், ஆண் இல்லற சீடர்கள் (உபாசிகர்கள்), பெண் இல்லற சீடர்கள் (உபாசிகைகள்) அனுபவம் பெறாதவரை, பயிற்சி பெறாத வரை, நம்பிக்கை கொள்ளாத வரை, நுகத்தடியிலிருந்து ஓய்வு கொள்ள விருப்பங்கொள்ளாத வரை, அறிவுடையோராகாத வரை, தம்மத்தைப் பராமரிக்காத வரை, தம்மத்தைத் தம்ம வழியில் பின்தொடராத வரை, அருமையாகப் பயின்று, தம்ம வழியில் நடந்து கொண்டு, தம்மத்தைத் தங்கள் ஆசியர்களிடமிருந்து கற்றபின் - அறிவித்து, விவரித்து, வெளிபடுத்தி, விளக்கி, எளிமையாக்கி, தம்மத்திற்கு மாறான போதனைகள் எதேனும் எழுந்தால் அவற்றைத் தம்ம வழியில் சரியாக நிராகரித்து, அதிசயமான விளைவுகளைக் கொண்ட தம்மத்தைப் போதிக்கும் வரை நான் பரிநிப்பாணம் அடைய மாட்டேன்.'
3.8. "ஆனால் இப்போது பகவரின் பெண் துறவி சீடர்கள், ஆண் இல்லற சீடர்கள் (உபாசிகர்கள்), பெண் இல்லற சீடர்கள் (உபாசிகைகள்) அனுபவம் பெற்றவர்கள், பயிற்சி பெற்றவர்கள், முற்றாக வளர்ச்சி பெற்றவர்கள், நுகத் தடியிலிருந்து ஓய்வு கொள்ள விருப்பங் கொண்டுள்ளவர்கள், அறிவுடையவர்கள், தம்மத்தைப் பராமரிப்பவர்கள், தம்மத்தைத் தம்ம வழியில் பின்தொடருபவர்கள், அருமையாகப் பயின்று, தம்ம வழியில் நடந்து கொண்டு, தம்மத்தை - தங்கள் ஆசியர்களிடமிருந்து கற்றபின் - அறிவித்து , விவரித்து, வெளிப்படுத்தி, விளக்கி, எளிமையாக்கி, தம்மத்திற்கு மாறான போதனைகள் எதேனும் எழுந்தால் அவற்றைத் தம்ம வழியில் சரியாக நிராகரித்து, ஆச்சரியமான விஷயங்களைக் கொண்ட தம்மத்தைப் போதிக்கின்றனர்.'
"அண்ணலே, பகவர் இப்போதே பரிநிப்பாணம் அடைவாராக. அண்ணலே, ததாகதர் இப்போதே பரிநிப்பாணம் அடைவாராக. பரிநிப்பாணத்திற்கு இதுவே சரியான நேரம், அண்ணலே. பகவர் தாங்களே இவ்வாறு கூறியுள்ளீர்: 'தீயவனே, எனது புனித வாழ்வு வளம்பெறாதவரை, செழிப்புறாதவரை, பரவலாகக் காணப்படும் வரை, பல மக்களிடமும் விதைக்கப்படும் வரை, மனிதர்களும் தேவர்களும் உள்ள இடங்களில் எல்லாம் தெளிவாக விளக்கப்படும் வரை நான் பரிநிப்பாணம் அடைய மாட்டேன்.' ஆனால் இப்போது பகவரின் புனித வாழ்வு வளம் பெற்றுள்ளது, செழிப்புற்றிருக்கிறது, பரவலாகக் காணப்படுகிறது, பல மக்களிடமும் விதைக்கப் பட்டிருக்கிறது, மனிதர்களும், தேவர்களும் உள்ள இடங்களிலெல்லாம் தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது.
"அண்ணலே, பகவர் இப்போதே பரிநிப்பாணம் அடைவாராக. அண்ணலே, ததாகதர் இப்போதே பரிநிப்பாணம் அடைவாராக. பரிநிப்பாணத்திற்கு இதுவே சரியான தருணம், அண்ணலே."
பகவர் உயிர் வாழும் விருப்பத்தைக் கைவிட்டது
The Blessed One Relinquishes His Will to Live
3.9. இதைக் கேட்டபிறகு பகவர் மாரனென்ற அந்தப் பெருந்தீயவனிடம்: "அமைதியாயிரு, தீயவனே. ததாகதரின் பரிநிப்பாணம் நீண்ட காலம் தாமதிக்கப்படாது. இன்றிலிருந்து மூன்று மாதங்களில் ததாகதர் இறுதி நிப்பாணம் எடுப்பார்."
3.10. இவ்வாறு அந்தச் சாபாலர் ஆலயத்தில் - கவனத்தோடும் இடையறா விழிப்போடும் - பகவர் உயிர் செயற்றொடரினைக் கைவிட்டார் [8]. உயிர் தொடர்வதன் காரணிகளைக் கைவிட்ட போது மயிர் சிலிர்க்க வைத்த ஒரு பெரும் பூகம்பம் ஏற்பட்டது. தேவர்களின் பறையோசை காற்றைப் பிளந்தது (இடி முழங்கியது).
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பகவர் பாவடிவில் கூறினார்:
கட்டுப்பட்ட மற்றும் கட்டுப்படாத தோற்றம் [9]
உண்டாவதற்கான காரணிகளை [10]
முனிவர் கைவிட்டார்.
உள்ளத்தில் சாந்தியுடனும்
ஒருமுகப்பட்ட மனத்துடனும்
தனது பவத்தொடர்ச்சியை
ஒரு கவசத்தை உடைப்பது போல
உடைத்து விட்டார். [11]
Comparing the incomparable with coming-into-being,
the sage relinquished the fabrication of becoming.
Inwardly joyful, centered,
he split his own coming-into-being
like a coat of mail.
3.11. பின் இந்த எண்ணம் போ. ஆனந்தருக்குத் தோன்றியது: "என்ன ஆச்சரியம்! என்ன அதிசயம்! எப்பேர்ப்பட்ட பூகம்பம்! மெய்சிலிர்க்க வைத்த மாபெரும் பூகம்பமும், தேவலோகப் பறையோசையும் காற்றைப் பிளக்கின்றனவே! என்ன நோக்கமோ, என்ன காரணமோ இப்பேர்ப்பட்ட பூகம்பம் தோன்றுவதற்கு?"
பூகம்பம் தோன்றுவதற்கு எட்டுக் காரணங்கள்
Eight Causes of Earthquakes
3.12. எனவே போ. ஆனந்தர் பகவரிடம் சென்று, அவரை வணங்கிய பின் ஒரு புறமாக அமர்ந்தார். அமர்ந்திருக்கையில் அவர் பகவரிடம், "என்ன ஆச்சரியம்! என்ன அதிசயம்! எப்பேர்பட்ட பூகம்பம்! மெய்சிலிர்க்க வைத்த மாபெரும் பூகம்பமும், தேவலோகப் பறையோசையும் காற்றைப் பிளக்கின்றனவே! பகவரே, என்ன நோக்கத்தினால், என்ன காரணத்தினால் இப்பேர்பட்ட பூகம்பம் தோன்றியது?"
3.13. "ஆனந்தா, மாபெரும் பூகம்பம் தோன்ற எட்டுக் காரணங்கள், எட்டுக் காரணிகள் உள்ளன. எந்த எட்டு?
"இந்தப் பெரும் பூமி ஆனந்தா, நீரின் மீது நிலைநாட்டப் பட்டிருக்கிறது. நீர் காற்றினால் நிலைநாட்டப் பட்டிருக்கிறது. காற்று ஆகாசத்தில் நிலைநாட்டப் பட்டிருக்கிறது. சூறாவளிக் காற்று சில சமயம் உண்டாகிறது. காற்றடிப்பதன் காரணமாக நீர் அசைகிறது. நீரின் அசைவு பூமியை நடுங்க வைக்கிறது. இதுவே மாபெரும் பூகம்பம் தோன்ற முதல் காரணம், முதல் காரணி.
3.14. "இரண்டாவதாக ஒரு துறவியோ அல்லது பிராமணரோ தன் இருத்தி சக்திகளை (psychic powers) வளர்த்துக் கொண்டவர் அல்லது
சக்தியும் வலிமையுமுள்ள தேவர் ஆனால் அவர் பூமி - உணர்வைச் (earth-consciousness) சரியாக வளர்த்துக் கொள்ளாதவர், மற்றும் நீர்-உணர்வை அளவு கடந்து வளர்த்துக் கொண்டவர்: அப்படிப் பட்டவர் ஒருவர் பூமியை அசைக்கவும், நடுங்கவும், அதிர்வுறவும் வைக்க முடிகிறது. இதுவே மாபெரும் பூகம்பம் தோன்ற இரண்டாம் காரணம், இரண்டாம் காரணி. [12]
3.15. "பின் ஆனந்தா, போதிசத்துவர் துசித்த லோகத்திலிருந்து கவனத்துடனும், விழிப்புடனும் விழுந்து தாயின் கருப்பத்தில் இறங்கும்போது, அதன் காரணமாகப் பூமி அசைந்து, நடுங்கி, அதிர்கிறது. இதுவே மாபெரும் பூகம்பம் தோன்ற மூன்றாம் காரணம், மூன்றாம் காரணி.
3.16. "பின் ஆனந்தா, போதிசத்துவர் தாயின் கருப்பத்திலிருந்து கவனத்துடனும், விழிப்புடனும் வெளிவரும்போது, அதன் காரணமாகப் பூமி அசைந்து, நடுங்கி, அதிர்கிறது. இதுவே மாபெரும் பூகம்பம் தோன்ற நான்காம் காரணம், நான்காம் காரணி.
3.17. "பின் ஆனந்தா, ததாகதர் ஒப்புயர்வில்லா சுய முயற்சியால் உண்டான வீடு பேற்றினை அடையும்போது, அதன் காரணமாகப் பூமி அசைந்து, நடுங்கி, அதிர்கிறது. இதுவே மாபெரும் பூகம்பம் தோன்ற ஐந்தாம் காரணம், ஐந்தாம் காரணி.
3.18. "பின் ஆனந்தா, ததாகதர் தம்மச் சக்கரத்தைச் சுழலத் துவங்கும்போது (அறத்தைப் போதிக்கத் துவங்கும்போது), அதன் காரணமாகப் பூமி அசைந்து, நடுங்கி, அதிர்கிறது. இதுவே மாபெரும் பூகம்பம் தோன்ற ஆறாம் காரணம், ஆறாம் காரணி.
3.19. "பின் ஆனந்தா, ததாகதர் கவனத்துடனும், விழிப்புடனும் உயிர் செயற்றொடரைக் கைவிடும்போது, அதன் காரணமாகப் பூமி அசைந்து, நடுங்கி, அதிர்கிறது. இதுவே மாபெரும் பூகம்பம் தோன்ற ஏழாம் காரணம், ஏழாம் காரணி.
3.20. "பின் ஆனந்தா, ததாகதர் எரிபொருள் மிச்சமில்லாத வகையில் முழுமையாக உடல் வீடு பேறு அடையும்போது (பரிநிப்பாணம் அடையும்போது), அதன் காரணமாகப் பூமி அசைந்து, நடுங்கி, அதிர்கிறது. இதுவே மாபெரும் பூகம்பம் தோன்ற எட்டாம் காரணம், எட்டாம் காரணி.
"ஆனந்தா, இவையே மாபெரும் பூகம்பம் தோன்ற எட்டுக் காரணங்கள், எட்டுக் காரணிகள்.
எட்டுச் சங்கங்கள்
Eight Assemblies
3.21. "ஆனந்தா, இந்த எட்டுச் சங்கங்கள் உள்ளன. எந்த எட்டு?
க்ஷத்திரியர் சங்கம், பிராமணர் சங்கம், இல்லறத்தார் சங்கம், துறவிகள் சங்கம், நான்கு பெரும் மன்னர்கள் சங்கம் (காமலோகத்தைச் சேர்ந்த தேவர்), முப்பத்தின்மூன்றார் சங்கம்(காமலோகத்தைச் சேர்ந்த தேவர்), மாரர் சங்கம் (காமலோகத்தை சேர்ந்த தேவர்), பிரம்மர் சங்கம் (ரூபலோகத்தை சேர்ந்த தேவர்).
3.22. "பல நூற்றுக் கணக்கான க்ஷத்திரிய சங்கங்களை அணுகிய நினைவு எனக்கு இருக்கிறது. அங்கு அமரும் முன், பேசுமுன், உரையாடலில் ஈடுபடுமுன் - அவர்கள் எப்படிப்பட்ட தோற்றம் கொண்டிருந்தனரோ அதே தோற்றத்தைத் தான் நானும் கொண்டிருந்தேன்; அவர்கள் எப்படிப் பேசினார்களோ அதே - உச்சரிப்போடும் அசையோடும் நானும் பேசினேன். தம்ம போதனை தந்து அவர்களுக்குக் கற்பித்து, அவர்களை ஈர்த்து, விழித்தெழச் செய்து, ஊக்குவித்து, மகிழ்வித்தேன். நான் பேசும் போது அவர்களுக்கு என்னைத் தெரியவில்லை: “யாரிது பேசுவது? தேவரா? மனிதரா?”
அவர்களுக்குக் கற்பித்து, அவர்களை ஈர்த்து, விழித்தெழச் செய்து, ஊக்குவித்து, மகிழ்வித்த பின் நான் மறைந்து விடுவேன். நான் மறைந்த பின்பும் அவர்களுக்கு நான் யாரென்று தெரியாது: “யாரிது மறைந்தது? தேவரா? மனிதரா?”
3.23. "பல நூற்றுக் கணக்கான பிராமணர் சங்கங்களையும்... பல நூற்றுக் கணக்கான இல்லறத்தார் சங்கங்களையும்... பல நூற்றுக் கணக்கான துறவிகள் சங்கங்களையும்... பல நூற்றுக் கணக்கான நான்கு பெரும் மன்னர் சங்கங்களையும்... பல நூற்றுக் கணக்கான முப்பத்தின் மூன்றார் சங்கங்களையும்... பல நூற்றுக் கணக்கான மாரர் சங்கங்களையும்...
"பல நூற்றுக் கணக்கான பிரம்மர் சங்கங்களையும் அணுகிய நினைவு எனக்கு இருக்கிறது. அங்கு-அமருமுன், பேசுமுன், உரையாடலில் ஈடுபடுமுன் - அவர்கள் எப்படிப்பட்ட தோற்றம் கொண்டிருந்தனரோ அதே தோற்றத்தைத் தான் நானும் கொண்டிருந்தேன்; அவர்கள் எப்படிப் பேசினார்களோ அதே உச்சரிப்போடும், அசையோடும் நானும் பேசினேன். தம்ம போதனை தந்து அவர்களுக்குக் கற்பித்து, அவர்களை ஈர்த்து, விழித்தெழச் செய்து, ஊக்குவித்து, மகிழ்வித்தேன். நான் பேசும் போது அவர்களுக்கு என்னைத் தெரியவில்லை: 'யாரிது பேசுவது? தேவரா? மனிதரா?'
அவர்களுக்குக் கற்பித்து, அவர்களை ஈர்த்து, விழித்தெழச் செய்து, ஊக்குவித்து, மகிழ்வித்த பின் நான் மறைந்து விடுவேன். நான் மறைந்த பின்பும் அவர்களுக்கு நான் யாரென்று தெரியாது: 'யாரிது மறைந்தது? தேவரா? மனிதரா?'
"இவையே ஆனந்தா, எட்டுச் சங்கங்களாகும்."
மன வல்லமை பெறுவதற்கு எட்டுக் கட்டங்கள்
Eight Fields of Mastery
3.24. "ஆனந்தா, மன வல்லமை பெறுவதற்கு எட்டுக் கட்டங்கள் உள்ளன. எந்த எட்டு?
3.25. தன் உடலை அவதானித்து மனத்தை ஒருமுகப்படுத்தியவர், புற உருவங்களை அளவானதாகவும், அழகானது அல்லது அருவருக்கத்தக்கதெனவும் பார்க்கின்றார். இதில் வல்லமை அடைந்தவருக்கு, 'எனக்குத் தெரியும்; நான் காண்கிறேன்,' என்ற மனக்குறிப்பு தோன்றுகிறது. இதுவே மன வல்லமை பெறுவதன் முதல் கட்டம்.
“Having a single perception of form internally, one sees forms externally as limited, beautiful and ugly. Mastering them, one has the perception, ‘I know; I see.’ This is the first dimension of (mental) mastery.
3.26. தன் உடலை அவதானித்து மனத்தை ஒருமுகப்படுத்தியவர், புற உருவங்களை அளவற்றதெனவும், அழகானது அல்லது அருவருக்கத்தக்கதெனவும் பார்க்கின்றார். இதில் வல்லமை அடைந்தவருக்கு, 'எனக்குத் தெரியும்; நான் காண்கிறேன்,' என்ற மனக்குறிப்பு தோன்றுகிறது. இதுவே மன வல்லமை பெறுவதன் இரண்டாம் கட்டம்.
“Having a single perception of form internally, one sees forms externally as immeasurable, beautiful and ugly. Mastering them, one has the perception, ‘I know; I see.’ This is the second dimension of (mental) mastery.
3.27. தன் உடலுக்குப் புறத்திலுள்ளவற்றை அவதானித்து மனத்தை ஒருமுகப்படுத்தியவர், புற உருவங்களை அளவானதாகவும், அழகானது அல்லது அருவருக்கத்தக்கதெனவும் பார்க்கின்றார். இதில் வல்லமை அடைந்தவருக்கு, 'எனக்குத் தெரியும்; நான் காண்கிறேன்,' என்ற மனக்குறிப்பு தோன்றுகிறது. இதுவே மன வல்லமை பெறுவதன் மூன்றாம் கட்டம்.
“Having a single formless perception internally, one sees forms externally as limited, beautiful and ugly. Mastering them, one has the perception, ‘I know; I see.’
This is the third dimension of (mental) mastery.
3.28. தன் உடலுக்குப் புறத்திலுள்ளவற்றை அவதானித்து மனத்தை ஒருமுகப்படுத்தியவர், புற உருவங்களை அளவற்றதெனவும், அழகானது அல்லது அருவருக்கத்தக்கதெனவும் பார்க்கின்றார். இதில் வல்லமை அடைந்தவருக்கு, 'எனக்குத் தெரியும்; நான் காண்கிறேன்,' என்ற மனக்குறிப்பு தோன்றுகிறது. இதுவே மன வல்லமை பெறுவதன் நான்காம் கட்டம்.
“Having a single formless perception internally, one sees forms externally as immeasurable, beautiful and ugly. Mastering them, one has the perception, ‘I know; I see.’ This is the fourth dimension of (mental) mastery.
3.29. தன் உடலுக்குப் புறத்திலுள்ளவற்றை அவதானித்து மனத்தை ஒருமுகப்படுத்தியவர், புற உருவங்களை நீல மெனவும், நீல நிறம் கொண்டதெனவும், அவற்றின் இயல்புகள் நீல நிறமானதென்றும், நீல நிறத்தில் பிரகாசிப்பதாகவும் தோன்றுகின்றது.
ஆளிச் செடியின் பூ (Linseed, flax) எப்படி நீல மாக இருக்கின்றதோ, நீல நிறம்கொண்டுள்ளதோ, அவற்றின் இயல்புகள் நீல நிறமானதாக இருக்கின்றதோ, நீல நிறத்தில் பிரகாசிப்பதாகத் தெரிகின்றதோ அல்லது
காசி மஸ்லீன் துணி, இரு பக்கமும் மென்மையாக நீல மாக இருக்கின்றதோ, நீலநிறம் கொண்டுள்ளதோ, அவற்றின் இயல்புகள் நீல நிறமானதாக இருக்கின்றதோ, நீல நிறத்தில் பிரகாசிப்பதாகத் தெரிகின்றதோ;
தன் உடலுக்குப் புறத்திலுள்ளவற்றை அவதானித்து மனத்தை ஒருமுகப்படுத்தியவர், புற உருவங்களை நீல மெனவும், நீலநிறம்கொண்டதெனவும், அவற்றின் இயல்புகள் நீல நிறமானதென்றும், நீல நிறத்தில் பிரகாசிப்பதாகவும் தோன்றுகின்றது.
இதில் வல்லமை அடைந்தவருக்கு, 'எனக்குத் தெரியும்; நான் காண்கிறேன்,' என்ற மனக்குறிப்பு தோன்றுகிறது. இதுவே மன வல்லமை பெறுவதன் ஐந்தாம் கட்டம்.
“Having a single formless perception internally, one sees forms externally as blue, blue in their color, blue in their features, blue in their glow. Just as a flax-flower is blue, blue in its color, blue in its features, blue in its glow, or just as Bārāṇasī muslin, smooth on both sides, is blue, blue in its color, blue in its features, blue in its glow; in the same way, having a single formless perception internally, one sees forms externally as blue, blue in their color, blue in their features, blue in their glow. Mastering them, one has the perception, ‘I know; I see.’ This is the fifth dimension of (mental) mastery.
3.30. தன் உடலுக்குப் புறத்திலுள்ளவற்றை அவதானித்து மனத்தை ஒருமுகப்படுத்தியவர், புற உருவங்களை மஞ்சல் எனவும், மஞ்சல் நிறம் கொண்டதெனவும், அவற்றின் இயல்புகள் மஞ்சல் நிறமானதென்றும், மஞ்சல் நிறத்தில் பிரகாசிப்பதாகவும் தோன்றுகின்றது.
கணிகார மரப்பூ (karṇikāra) எப்படி மஞ்சலாக இருக்கின்றதோ, மஞ்சல் நிறம் கொண்டுள்ளதோ, அவற்றின் இயல்புகள் மஞ்சல் நிறமானதாக இருக்கின்றதோ, மஞ்சல் நிறத்தில் பிரகாசிப்பதாகத் தெரிகின்றதோ அல்லது
காசி மஸ்லீன் துணி, இரு பக்கமும் மென்மையாக மஞ்சலாக இருக்கின்றதோ, மஞ்சல் நிறம் கொண்டுள்ளதோ, அவற்றின் இயல்புகள் மஞ்சல் நிறமானதாக இருக்கின்றதோ, மஞ்சல் நிறத்தில் பிரகாசிப்பதாகத் தெரிகின்றதோ;
தன் உடலுக்குப் புறத்திலுள்ளவற்றை அவதானித்து மனத்தை ஒருமுகப்படுத்தியவர், புற உருவங்களை மஞ்சலெனவும், மஞ்சல் நிறம் கொண்டதெனவும், அவற்றின் இயல்புகள் மஞ்சல் நிறமானதென்றும், மஞ்சல் நிறத்தில் பிரகாசிப்பதாகவும் தோன்றுகின்றது.
இதில் வல்லமை அடைந்தவருக்கு, 'எனக்குத் தெரியும்; நான் காண்கிறேன்,' என்ற மனக்குறிப்பு தோன்றுகிறது. இதுவே மன வல்லமை பெறுவதன் ஆறாம் கட்டம்.
“Having a single formless perception internally, one sees forms externally as yellow, yellow in their color, yellow in their features, yellow in their glow. Just as a kaṇṇikāra flower is yellow, yellow in its color, yellow in its features, yellow in its glow, or just as Bārāṇasī muslin, smooth on both sides, is yellow, yellow in its color, yellow in its features, yellow in its glow; in the same way, having a single formless perception internally, one sees forms externally as yellow, yellow in their color, yellow in their features, yellow in their glow. Mastering them, one has the perception, ‘I know; I see.’ This is the sixth dimension of (mental) mastery.
3.31. தன் உடலுக்குப் புறத்திலுள்ளவற்றை அவதானித்து மனத்தை ஒருமுகப்படுத்தியவர், புற உருவங்களைச் சிவப்பு எனவும், சிவப்பு நிறம் கொண்டதெனவும், அவற்றின் இயல்புகள் சிவப்பு நிறமானதென்றும், சிவப்பு நிறத்தில் பிரகாசிப்பதாகவும் தோன்றுகின்றது.
பந்துஜீவிகா மரப் பூ (bandhu-jīvaka, hibiscus) எப்படி சிவப்பாக இருக்கின்றதோ, சிவப்பு நிறம் கொண்டுள்ளதோ, அவற்றின் இயல்புகள் சிவப்பு நிறமானதாக இருக்கின்றதோ, சிவப்பு நிறத்தில் பிரகாசிப்பதாகத் தெரிகின்றதோ அல்லது
காசி மஸ்லீன் துணி, இரு பக்கமும் மென்மையாக சிவப்பாக இருக்கின்றதோ, சிவப்பு நிறம் கொண்டுள்ளதோ, அவற்றின் இயல்புகள் சிவப்பு நிறமானதாக இருக்கின்றதோ, சிவப்பு நிறத்தில் பிரகாசிப்பதாகத் தெரிகின்றதோ;
தன் உடலுக்குப் புறத்திலுள்ளவற்றை அவதானித்து மனத்தை ஒருமுகப்படுத்தியவர், புற உருவங்களைச் சிவப்பெனவும், சிவப்பு நிறம் கொண்டதெனவும், அவற்றின் இயல்புகள் சிவப்பு நிறமானதென்றும், சிவப்பு நிறத்தில் பிரகாசிப்பதாகவும் தோன்றுகின்றது.
இதில் வல்லமை அடைந்தவருக்கு, 'எனக்குத் தெரியும்; நான் காண்கிறேன்,' என்ற மனக்குறிப்பு தோன்றுகின்றது. இதுவே மன வல்லமை பெறுவதன் ஏழாம் கட்டம்.
“Having a single formless perception internally, one sees forms externally as red, red in their color, red in their features, red in their glow. Just as a bandhu-jīvaka flower is red, red in its color, red in its features, red in its glow, or just as Bārāṇasī muslin, smooth on both sides, is red, red in its color, red in its features, red in its glow; in the same way, having a single formless perception internally, one sees forms externally as red, red in their color, red in their features, red in their glow. Mastering them, one has the perception, ‘I know; I see.’ This is the seventh dimension of (mental) mastery.
3.32. தன் உடலுக்குப் புறத்திலுள்ளவற்றை அவதானித்து மனத்தை ஒருமுகப்படுத்தியவர், புற உருவங்களை வெண்மை எனவும், வெண்மை நிறம் கொண்டதெனவும், அவற்றின் இயல்புகள் வெண்மை நிறமானதென்றும், வெண்மை நிறத்தில் பிரகாசிப்பதாகவும் தோன்றுகின்றது.
காலை விடிவெள்ளி (விடியற்காலத்தில் உதிக்கும் சுக்கிரன், Venus) எப்படி வெண்மையாக இருக்கின்றதோ, வெண்மை நிறம் கொண்டுள்ளதோ, அவற்றின் இயல்புகள் வெண்மை நிறமானதாக இருக்கின்றதோ, வெண்மை நிறத்தில் பிரகாசிப்பதாகத் தெரிகின்றதோ அல்லது
காசி மஸ்லீன் துணி, இரு பக்கமும் மென்மையாக வெண்மையாக இருக்கின்றதோ, வெண்மை நிறம் கொண்டுள்ளதோ, அவற்றின் இயல்புகள் வெண்மை நிறமானதாக இருக்கின்றதோ, வெண்மை நிறத்தில் பிரகாசிப்பதாகத் தெரிகின்றதோ;
தன் உடலுக்குப் புறத்திலுள்ளவற்றை அவதானித்து மனத்தை ஒருமுகப்படுத்தியவர், புற உருவங்களை வெண்மையெனவும், வெண்மை நிறம் கொண்டதெனவும், அவற்றின் இயல்புகள் வெண்மை நிறமானதென்றும், வெண்மை நிறத்தில் பிரகாசிப்பதாகவும் தோன்றுகின்றது.
இதில் வல்லமை அடைந்தவருக்கு, 'எனக்குத் தெரியும்; நான் காண்கிறேன்,' என்ற மனக்குறிப்பு தோன்றுகிறது. இதுவே மன வல்லமை பெறுவதன் எட்டாம் கட்டம்.
“Having a single formless perception internally, one sees forms externally as white, white in their color, white in their features, white in their glow. Just as the morning star is white, white in its color, white in its features, white in its glow, or just as Bārāṇasī muslin, smooth on both sides, is white, white in its color, white in its features, white in its glow; in the same way, having a single formless perception internally, one sees forms externally as white, white in their color, white in their features, white in their glow. Mastering them, one has the perception, ‘I know; I see.’ This is the eighth dimension of (mental) mastery.
"ஆனந்தா, இவையே மன வல்லமை பெறுவதற்கான எட்டுக் கட்டங்களாகும்."
“These, Ānanda, are the eight dimensions of (mental) mastery.
எட்டு விடுதலைகள்
Eight Liberations
3.33. "ஆனந்தா, இந்த எட்டு விடுதலைகள் உள்ளன. எந்த எட்டு?
"உருவம் கொண்டவர்கள், உருவங்களைக் காண்கின்றனர். இதுவே முதல் விடுதலை.
"தம் உருவத்தை அறியாதோர், பிறர் உருவத்தைக் காண்கின்றனர். இதுவே இரண்டாம் விடுதலை.
"அது அழகானது,' என்று எண்ணி அழகை நாடுவோர். இதுவே மூன்றாம் விடுதலை.
"பொருள் (matter) பற்றிய குறிப்புகளுக்கு அப்பால் சென்றவர், புலன் தொடர்பினை அறியாமல் இருப்பவர், 'அளவற்ற ஆகாசம்,' என்று நினைத்து, ஒருவர் அளவற்ற ஆகாசத்தில் நுழைந்து அங்கேயே இருக்கிறார். (ஆழ் மன ஒருமைபாட்டுத் தியானத்தினால்). இதுவே நான்காம் விடுதலை.
"அளவில்லா ஆகாசத்தைப் பற்றிய குறிப்புகளுக்கு அப்பால் சென்றவர், 'அளவற்ற உணர்வு,' என்று நினைத்து, ஒருவர் அளவற்ற உணர்விலேயே இருக்கிறார். (ஆழ் மன ஒருமைபாட்டுத் தியானத்தினால்). இதுவே ஐந்தாம் விடுதலை.
"அளவில்லா உணர்வு பற்றிய குறிப்புகளுக்கு அப்பால் சென்றவர், 'சூனியம்,' என்று நினைத்து, ஒருவர் சூனியத்தில் இருக்கிறார். (ஆழ் மன ஒருமைபாட்டுத் தியானத்தினால்). இதுவே ஆறாம் விடுதலை.
"அளவில்லா சூண்யம் பற்றிய குறிப்புகளுக்கு அப்பால் சென்றவர், குறிப்பும் இல்லாத குறிப்பற்ற நிலையும் அல்லாத நிலையில் இருக்கிறார். (ஆழ் மன ஒருமைபாட்டுத் தியானத்தினால்). இதுவே ஏழாம் விடுதலை.
"குறிப்பும் இல்லாத குறிப்பற்ற நிலையும் அல்லாத நிலைக்கு அப்பால் சென்றவர், குறிப்பும் நுகர்ச்சியும் முடிந்த நிலையில் இருக்கிறார். (ஆழ் மன ஒருமைபாட்டுத் தியானத்தினால்). இதுவே எட்டாம் விடுதலை.
"ஆனந்தா, இவையே எட்டு விடுதலைகளாகும்.
“Ānanda, there are these eight emancipations. Which eight?
“Possessed of form, one sees forms. This is the first emancipation.
“Not percipient of form internally, one sees forms externally. This is the second emancipation.
“One is intent only on the beautiful. This is the third emancipation.
“With the complete transcending of perceptions of (physical) form, with the disappearance of perceptions of resistance, and not heeding perceptions of multiplicity, (perceiving,) ‘Infinite space,’ one enters and remains in the dimension of the infinitude of space. This is the fourth emancipation.
“With the complete transcending of the dimension of the infinitude of space, (perceiving,) ‘Infinite consciousness,’ one enters and remains in the dimension of the infinitude of consciousness. This is the fifth emancipation.
“With the complete transcending of the dimension of the infinitude of consciousness, (perceiving,) ‘There is nothing,’ one enters and remains in the dimension of nothingness. This is the sixth emancipation.
“With the complete transcending of the dimension of nothingness, one enters and remains in the dimension of neither perception nor non-perception. This is the seventh emancipation.
“With the complete transcending of the dimension of neither perception nor non-perception, one enters and remains in the cessation of perception and feeling. This is the eighth emancipation.
“These, Ānanda, are the eight emancipations.
மாரன் முன்னர் செய்த தூண்டுதல்
Mara's Former Temptation
3.34. "ஒரு முறை ஆனந்தா, நெரஞ்சரா நதிக் கரையிலுள்ள உருவெலா [13] இடையர் ஆலமரத்தில் தங்கியிருந்தேன். அப்போது புதிதாக ஞானம் பெற்ற சமயம். அப்போது தீயவனான மாரன் என்னை அணுகினான். வந்து ஒருபுறமாக நின்று என்னிடம், 'அண்ணலே, பகவர் இப்போதே பரிநிப்பாணம் அடைவாராக. அண்ணலே, ததாகதர் இப்போதே பரிநிப்பாணம் அடைவாராக. பரிநிப்பாணத்திற்கு இதுவே சரியான நேரம், அண்ணலே,' என்றான்.
3.35. "இதைக் கேட்டவுடன் நான் தீயவனான மாரனிடம், 'தீயவனே, எனது ஆண் துறவி சீடர்கள் அனுபவம் பெறாதவரை, பயிற்சி பெறாதவரை, நம்பிக்கை கொள்ளாதவரை, நுகத்தடியிலிருந்து ஓய்வு கொள்ள விருப்பங் கொள்ளாதவரை, அறிவுடையோராகாதவரை, தம்மத்தைப் பராமரிக்காத வரை, தம்மத்தைத் தம்ம வழியில் பின்தொடராதவரை, அருமையாகப் பயின்று, தம்ம வழியில் நடந்து கொண்டு, தம்மத்தை - தங்கள் ஆசியர் களிடமிருந்து கற்றபின் - அறிவித்து, விவரித்து, வெளிப்படுத்தி, விளக்கி, எளிமையாக்கி, தம்மத்திற்கு மாறான போதனைகள் எதேனும் எழுந்தால் அவற்றைத் தம்ம வழியில் சரியாக நிராகரித்து, அதிசயமான விளைவுகளைக் கொண்ட தம்மத்தைப் போதிக்கும் வரை நான் பரிநிப்பாணம் அடைய மாட்டேன்.'
'தீயவனே, எனது பெண் துறவி சீடர்கள், ஆண் இல்லற சீடர்கள் (உபாசிகர்கள்), பெண் இல்லற சீடர்கள் (உபாசிகைகள்) அனுபவம் பெறாத வரை, பயிற்சி பெறாத வரை, நம்பிக்கை கொள்ளாத வரை, நுகத்தடியிலிருந்து ஓய்வு கொள்ள விருப்பம் கொள்ளாதவரை, அறிவுடையோராகாதவரை, தம்மத்தைப் பராமரிக்காதவரை, தம்மத்தைத் தம்ம வழியில் பின்தொடராதவரை, அருமையாகப் பயின்று, தம்ம வழியில் நடந்து கொண்டு, தம்மத்தை - தங்கள் ஆசியர்களிடமிருந்து கற்றபின் - அறிவித்து, விவரித்து, வெளிப்படுத்தி, விளக்கி, எளிமையாக்கி, தம்மத்திற்கு மாறான போதனைகள் எதேனும் எழுந்தால் அவற்றைத் தம்ம வழியில் சரியாக நிராகரித்து, அதிசயமான விளைவுகளைக் கொண்ட தம்மத்தைப் போதிக்கும் வரை நான் பரிநிப்பாணம் அடைய மாட்டேன்."
'தீயவனே, எனது புனித வாழ்வு வளம் பெறாத வரை, செழிப்புறாத வரை, பரவலாகக் காணப்படும் வரை, பல மக்களிடமும் விதைக்கப்படும் வரை, மனிதர்களும் தேவர்களும் உள்ள இடங்களிலெல்லாம் தெளிவாக விளக்கப்படும் வரை நான் பரிநிப்பாணம் அடைய மாட்டேன்.'
3.36. "இப்போது தான் ஆனந்தா (இங்கு) சாபால ஆலயத்தில் மாரன் என்னை அணுகி ஒருபுறமாக நின்று என்னிடம்,
"அண்ணலே, பகவர் இப்போதே பரி நிப்பாணம் அடைவாராக. அண்ணலே, ததாகதர் இப்போதே பரி நிப்பாணம் அடைவாராக. பரிநிப்பாணத்திற்கு இதுவே சரியான தருணம் அண்ணலே. பகவர் தாங்களே இவ்வாறு கூறியுள்ளீர்: 'தீயவனே, எனது ஆண் சீடர்கள், எனது பெண் துறவி சீடர்கள், ஆண் இல்லற சீடர்கள் (உபாசிகர்கள்), பெண் இல்லற சீடர்கள் (உபாசிகைகள்) அனுபவம் பெறாதவரை எனது புனித வாழ்வு வளம் பெறாதவரை, செழிப்புறாதவரை, பரவலாகக் காணப்படும் வரை, பல மக்களிடமும் விதைக்கப்படும் வரை, மனிதரும் தேவர்களும் உள்ள இடங்களில் எல்லாம் தெளிவாக விளக்கப்படும் வரை நான் பரிநிப்பாணம் அடைய மாட்டேன்.'
ஆனால் இப்போது பகவரின் புனித வாழ்வு வளம் பெற்றுள்ளது, செழிப்புற்றிருக்கிறது, பரவலாகக் காணப்படுகிறது, பல மக்களிடமும் விதைக்கப் பட்டிருக்கிறது, மனிதர்களும் தேவர்களும் உள்ள இடங்களிலெல்லாம் தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது. அண்ணலே, பகவர் இப்போதே பரிநிப்பாணம் பெறுவாராக. அண்ணலே, ததாகதர் இப்போதே பரிநிப்பாணம் பெறுவாராக. பரிநிப்பாணத்திற்கு இதுவே சரியான தருணம், அண்ணலே."
3.37. "இதைக் கேட்ட பிறகு மாரனிடம், அந்தப் பெருந்தீயவனிடம்: 'அமைதியாயிரு, தீயவனே. ததாகதரின் பரிநிப்பாணத்திற்கு வெகு காலம் இல்லை. இன்றிலிருந்து மூன்றாம் மாதத்தில் ததாகதர் பரிநிப்பாணம் அடைவார்,' என்றேன்."
இப்போது தான் ஆனந்தா அந்த சாபாலர் ஆலயத்தில் - கவனத்தோடும் இடையறா விழிப்போடும் - நான் உயிர் செயற்றொடரினைக் கைவிட்டு விட்டேன்.
ஆனந்தரின் வேண்டுகோள்
Ananda's Appeal
3.38. இதைக் கேட்டவுடன் ஆனந்தர் பகவரிடம், "அண்ணலே, பகவர் ஒரு வாழ்நாளைக்கு இருப்பீர்களாக. ததாகதர் ஒரு வாழ்நாளைக்கு இருப்பீர்களாக - பலரின் நன்மைக்காகவும், பலரின் மகிழ்ச்சிக்காகவும், உலகின் மீது கருணையின் காரணமாகவும், மனிதர்களின், தேவர்களின் முன்னேற்றத்திற்காக, நன்மைக்காக, மகிழ்ச்சிக்காகப் பகவர் ஒரு வாழ்நாளைக்கு இருப்பீர்களாக."
"போதும் ஆனந்தா. ததாகதரைக் கெஞ்ச வேண்டாம். ததாகதரிடம் கெஞ்சுவதற்கு இது சரியான நேரம் இல்லை."
3.39. இரண்டாம் தடவை, மூன்றாம் தடவை போ. ஆனந்தர் பகவரிடம், "அண்ணலே, பகவர் ஒரு வாழ்நாளைக்கு இருப்பீர்களாக. ததாகதர் ஒரு வாழ்நாளைக்கு இருப்பீர்களாக - பலரின் நன்மைகாகவும், பலரின் மகிழ்ச்சிக்காகவும், உலகின் மீது கருணையின் காரணமாகவும், மனிதர்களின், தேவர்களின் முன்னேற்றதிற்காக, நன்மைக்காக, மகிச்சிக்காகப் பகவர் ஒரு வாழ்நாளைக்கு இருப்பீர்களாக."
"ஆனந்தா பகவரின் வீடுபேற்றில் உனக்கு நம்பிக்கை உள்ளதா?"
"ஆம், அண்ணலே."
"பின் ஏன் ஆனந்தா, ததாகதரை மூன்று முறை தொல்லை செய்கிறாய்?"
3.40. "ஆனால், அண்ணலே, அண்ணல் சொன்னதை நானே கேட்டிருக்கின்றேன், நான் புரிந்து கொண்டிருக்கின்றேன்: 'யாரெல்லாம் ஆனந்தா, நான்கு செல்வாக்கிற்கான பாதைகளை வளர்க்கின்றனரோ அவர் - விரும்பினால் - ஒரு வாழ்நாளைக்கும் அல்லது வாழ்நாளில் மிஞ்சியிருக்கும் நாட்களுக்கும் தொடர்ந்து வாழலாம்."
"ஆனந்தா பகவரின் வீடுபேற்றில் உனக்கு நம்பிக்கை உள்ளதா?"
"ஆம், அண்ணலே."
"அப்படியென்றால் தவறு உன்னுடையது, ஆனந்தா. ஏனென்றால், பகவர் தெளிவான அறிகுறியைத் தந்தும், தெளிவான அடையாளம் காட்டியும் - பகவர் கூறியதன் பொருளை நீ விளங்கிக் கொள்ள வில்லை. பகவரிடம் இவ்வாறு கெஞ்சவில்லை, "அண்ணலே, பகவர் வாழ்நாள் நீடிக்கின்ற காலத்திற்கு இருக்க வேண்டும். ததாகதர் - பலரின் நன்மைக்காகவும், பலரின் மகிழ்ச்சிக்காகவும், உலகின் மீது கருணை கொண்டு, மனிதர்களின், தேவர்களின் முன்னேற்றத்திற்கும், நலனுக்கும், மகிழ்ச்சிக்காகவும் பகவர் வாழ்நாள் நீடிக்கின்ற காலத்திற்கு இருக்க வேண்டும்." இரண்டு முறை ததாகதரிடம் கெஞ்சியிருந்தால் ததாகதர் மறுத்திருப்பார். ஆனால் மூன்றாம் முறை உடன்பட்டிருப்பார். தவறு உன்னுடையது, ஆனந்தா. தவறு உனது.
3.41. "ஒரு முறை ஆனந்தா இராஜகிருகம் அருகில் கழுகு மலையில் தங்கியிருந்தேன். அப்போது உன்னிடம், "கழுகு மலை உற்சாகமளிக்கிறது ஆனந்தா, 'யாரெல்லாம் ஆனந்தா, நான்கு செல்வாக்கிற்கான பாதைகளை வளர்க்கின்றனரோ அவர் - விரும்பினால் - ஒரு வாழ்நாளைக்கும் அல்லது வாழ்நாளில் எஞ்சியிருக்கும் நாட்களுக்கும் தொடர்ந்து வாழலாம்.
பகவர் தெளிவான அறிகுறியைத் தந்தும், தெளிவான அடையாளம் காட்டியும் - பகவர் கூறியதன் பொருளை நீ விளங்கிக் கொள்ள வில்லை. பகவரிடம் இவ்வாறு கெஞ்சவில்லை, "அண்ணலே, பகவர் வாழ்நாள் நீடிக்கின்ற காலத்திற்கு இருக்க வேண்டும். ததாகதர் - பலரின் நன்மைக்காகவும், பலரின் மகிழ்ச்சிக்காகவும், உலகின் மீது கருணை கொண்டு, மனிதர்களின், தேவர்களின் முன்னேற்றத்திற்கும், நலனுக்கும், மகிழ்ச்சிக்காகவும் பகவர் வாழ்நாள் நீடிக்கின்ற காலத்திற்கு வாழ வேண்டும்." இரண்டு முறை ததாகதரிடம் கெஞ்சியிருந்தால் ததாகதர் மறுத்திருப்பார். ஆனால் மூன்றாம் முறை உடன்பட்டிருப்பார். தவறு உன்னுடையது, ஆனந்தா. தவறு உனது.
3.42. "ஒரு முறை ஆனந்தா, நான் இராஜகிருகத்தின் அருகில் கோதமர் ஆலமரத்தில் தங்கியிருந்தேன்... இராஜகிருகத்தின் அருகில் திருடர் செங்குத்துப் பாறையில்... இராஜகிருகத்தின் அருகில் சத்தபஞ்ஞா குகையில்... இராஜகிருகத்தின் அருகில் இஸிகிளி மலை கரும் பாறையில்... இராஜகிருகத்தின் அருகில் குளுமையான வனத்திலுள்ள பாம்பு நீர்க்குளத்தில் பாறை சாய்ந்து நிற்குமிடத்தில்… இராஜகிருகத்தின் அருகில் தபொடா பூங்காவில்… இராஜகிருகத்தின் அருகில் மூங்கில் வனத்தில்… அணில் உண்ணும் இடத்தில்… இராஜகிருகத்தின் அருகில் ஜீவிகர் மாந்தோப்பில்… இராஜகிருகத்தின் அருகில் மட்டகுச்சி மான் பூங்காவில்…
3.43. அங்கெல்லாம் நான் உன்னிடம், இராஜகிருகம் உணர்ச்சியூட்டுகிறது, கழுகு மலை உணர்ச்சியூட்டுகிறது, கோதமர் ஆலமரம், திருடர் செங்குத்தான பாறை, சத்தபஞ்ஞா குகை, இஸிகிளி மலை கரும் பாறை, இராஜகிருகத்தின் அருகில் மட்டகுச்சி மான் பூங்கா அனைத்தும் உணர்ச்சியூட்டுகின்றன எனக் கூறினேன்.
3.44. யாரெல்லாம் ஆனந்தா, நான்கு செல்வாக்கிற்கான பாதைகளை வளர்க்கின்றனரோ, அவற்றைப் பின்பற்றி, பெரிது படுத்தி, நிலைநாட்டி, தொடர்ந்து, பெரிதாக்கித் தூண்டுகின்றனரோ அவரால் - தான் வேண்டினால் - ஒரு வாழ்நாளைக்கும் அல்லது வாழ்நாளில் மிஞ்சியிருக்கும் நாட்களுக்கும் தொடர்ந்து வாழலாம். ஆனந்தா, ததாகதரால் நான்கு செல்வாக்கிற்கான பாதைகள் வளர்த்து, பின்பற்றி, பெரிது படுத்தி, நிலைநாட்டி, தொடர்ந்து, பெரிதாக்கி, தூண்டப் பட்டிருக்கின்றன. அவர் - விரும்பினால் - ஒரு வாழ்நாளைக்கும் அல்லது வாழ்நாளில் மிஞ்சியிருக்கும் நாட்களுக்கும் தொடர்ந்து வாழலாம்.
பகவர் தெளிவான அறிகுறியைத் தந்தும், தெளிவான அடையாளம் காட்டியும் - பகவர் கூறியதன் பொருளை விளங்கிக் கொள்ள வில்லை. பகவரிடம் இவ்வாறு கெஞ்ச வில்லை, "அண்ணலே, பகவர் வாழ்நாள் நீடிக்கின்ற காலத்திற்கு இருக்க வேண்டும். ததாகதர் - பலரின் நன்மைக்காகவும், பலரின் மகிழ்ச்சிக்காகவும், உலகின் மீது கருணை கொண்டு, மனிதர்களின், தேவர்களின் முன்னேற்றத்திற்கும், நலனுக்கும், மகிழ்ச்சிக்காகவும் பகவர் வாழ்நாள் நீடிக்கின்ற காலத்திற்கு இருக்க வேண்டும்." இரண்டு முறை ததாகதரிடம் கெஞ்சியிருந்தால் ததாகதர் மறுத்திருப்பார். ஆனால் மூன்றாம் முறை உடன்பட்டிருப்பார். தவறு உன்னுடையது, ஆனந்தா. தவறு உனது.
3.45, 46. "ஒரு சமயம், ஆனந்தா நான் வைசாலியில் உதேனர் ஆலயத்தில்... கோதமக ஆலயத்தில்... சதம்பர் ஆலயத்தில்... பாஹுபுத்திரர் ஆலயத்தில்... சாரண்டர் ஆலயத்தில்…
3.47. "பின் இப்போதும் கூட (இங்கே) சாபாலர் ஆலயத்தில் உன்னிடம்:
"வைசாலி புத்துணர்ச்சி ஊட்டுகிறது, ஆனந்தா, உதேனர் ஆலயமும் புத்துணர்ச்சியூட்டுகிறது, கோதமக ஆலயமும், சத்தம்பர் ஆலயமும், சத்தம்பர் ஆலயமும், பாஹுபுத்திரர் ஆலயமும், பாவாலர் ஆலயமும் புத்துணர்ச்சியூட்டுகின்றன.
"ஆனந்தா. 'யாரெல்லாம் ஆனந்தா, நான்கு செல்வாக்கிற்கான பாதைகளை வளர்க்கின்றனரோ, அவற்றைப் பின்பற்றி, பெரிது படுத்தி, நிலைநாட்டி, தொடர்ந்து, பெரிதாக்கி தூண்டுகின்றனரோ அவரால் - தான் வேண்டினால் - ஒரு வாழ்நாளைக்கும் அல்லது வாழ்நாளில் மிஞ்சியிருக்கும் நாட்களுக்கும் தொடர்ந்து வாழலாம். ஆனந்தா ததாகதரால் நான்கு செல்வாக்கிற்கான பாதைகள் வளர்த்து, பின்பற்றி, பெரிது படுத்தி, நிலைநாட்டி, தொடர்ந்து, பெரிதாக்கி, தூண்டப் பட்டிருக்கின்றன. அவர் விரும்பினால் ஒரு வாழ்நாளைக்கும் அல்லது வாழ்நாளில் மிஞ்சியிருக்கும் நாட்களுக்கும் தொடர்ந்து வாழலாம்.
பகவர் தெளிவான அறிகுறியைத் தந்தும், தெளிவான அடையாளம் காட்டியும் - பகவர் கூறியதன் பொருளை விளங்கிக் கொள்ள வில்லை. பகவரிடம் இவ்வாறு கெஞ்சவில்லை, "அண்ணலே, பகவர் வாழ்நாள் நீடிக்கின்ற காலத்திற்கு இருக்க வேண்டும். ததாகதர் - பலரின் நன்மைக்காகவும், பலரின் மகிழ்ச்சிக்காகவும், உலகின் மீது கருணை கொண்டு, மனிதர்களின், தேவர்களின் முன்னேற்றதிற்கும், நலனுக்கும், மகிழ்ச்சிக்காகவும் பகவர் வாழ்நாள் நீடிக்கின்ற காலத்திற்கு வாழ வேண்டும்." இரண்டு முறை ததாகதரிடம் கெஞ்சியிருந்தால் ததாகதர் மறுத்திருப்பார். ஆனால் மூன்றாம் முறை உடன்பட்டிருப்பார். தவறு உன்னுடையது, ஆனந்தா. தவறு உனது.
3.48. "ஆனால் ஆனந்தா நமக்குப் பிடித்த சுகம் தரும் நமது பொருட்களெல்லாம், அப்படி அல்லாமல் ஒருநாள் மாறிப் போய்விடும், நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் என்று எச்சரித்திருக்கின்றேன் அல்லவா? வேறு என்ன எதிர்பார்க்க வேண்டும்? பிறந்தன எல்லாம், தோன்றின எல்லாம் மறையத்தான் வேண்டும். நீ, "ஓ, மறையாமல் இருக்க வேண்டும்,” எனலாம். அப்படிப்பட்ட நிலை இருக்க முடியாது. அதைத்தானே (பிறப்பதை, தோன்றுவதை) ததாகதர் கைவிட்டார், கக்கி விட்டார், வாழ்வைத் தோற்றுவிக்கும் காரணிகளைக் கைவிட்டபின்னர் இந்த உறுதியான வார்தைகளைக் கூறினேன்: ' ததாகதரின் பரிநிப்பாணத்திற்கு வெகு காலம் இல்லை. இன்றிலிருந்து மூன்றாம் மாதத்தில் ததாகதர் பரிநிப்பாணம் அடைவார்." ததாகதர் தொடர்ந்து வாழ்வதற்கென்று, கூறிய வார்த்தைகளைப் பின்வாங்குவதற்குச் சந்தர்ப்பமே இல்லை.
"வா ஆனந்தா நாம் பெரும் வனத்திலுள்ள குறுமாடிச் சபைக்குச் செல்வோம் (Gabled Hall)."
"சரி அண்ணலே," என்று போ. ஆனந்தர் பகவருக்குப் பதிலுரைத்தார்.
கடைசி போதனை
The Last Admonition
3.49. பின் பகவர் ஆனந்தருடன் பெரும் வனத்திலுள்ள குறுமாடிச் சபைக்குச் சென்று ஆனந்தரிடம்: "ஆனந்தா, வைசாலியை நம்பி வாழும் துறவிகளை அழைத்துச் சபையில் கூடச் சொல்."
"ஆகட்டும் அண்ணலே," என்று பதிலுரைத்த ஆனந்தர் - வைசாலியை நம்பி வாழும் துறவிகளை அழைத்துச் சபையில் கூடச்செய்த பின் - பகவரிடம் சென்று, அவரை வணங்கி, பின் ஒரு பக்கமாக நின்றார். அவ்வாறு நிற்கையில் அவர் பகவரிடம், "பிக்கு சங்கம் கூடிற்று, அண்ணலே. பகவர் இப்போது செய்ய நினைத்ததைச் செய்யட்டும்."
3.50. பின் பகவர் தன் ஆசனத்திலிருந்து எழுந்து, சபைக்குச் சென்று அங்கு அவருக்கு ஒதுக்கப் பட்டிருந்த இடத்தில் அமர்ந்தார். பின், கூடியிருந்த துறவிகளிடம்: "துறவிகளே, நான் நேரடியாக உணர்ந்த பண்புகளை உங்களுக்குக் கற்பித்துள்ளேன்: அவற்றை நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும், வளர்க்க வேண்டும், தொடர வேண்டும். ஏனென்றால் அப்போது தான் இந்தப் புனித வாழ்க்கை ஸ்திரமாக, உறுதியாக, நீண்ட நாள் நீடிக்கும் - இது பலரின் நன்மைகாகவும், பலரின் மகிழ்ச்சிக்காகவும், உலகின் மீது கருணையின் காரணமாகவும், மனிதர்களின் தேவர்களின் முன்னேற்றதிற்காகவும், நன்மைக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் கற்பித்தவை.
நான் மனிதர்களின், தேவர்களின் முன்னேற்றத் திற்காகவும், நன்மைக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் கற்பித்த பண்புகள் என்ன?
கவனத்தின் (நற்கடைப்பிடியின்) நான்கு அடித்தளங்கள், நான்கு சரியான முயற்சிகள், வலிமைக்கான நான்கு பாதைகள், ஐந்து (ஆன்மீகம் வளர்க்கும்) இந்திரியங்கள் [14], ஐந்து திடத்தன்மைகள், எழு போதி அங்கங்கள், எண்வகைப் பாதை (அட்டாங்க மார்க்கம்) [15]. இப்பண்புகளை நேரடியாக உணர்ந்த பின் உங்களுக்குக் கற்பித்துள்ளேன். இவற்றை நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும், வளர்க்க வேண்டும், தொடர வேண்டும். ஏனென்றால் அப்போது தான் இந்தப் புனித வாழ்க்கை ஸ்திரமாக, உறுதியாக, நீண்ட நாள் நீடிக்கும் - இது பலரின் நன்மைக்காகவும், பலரின் மகிழ்ச்சிக்காகவும், உலகின் மீது கருணையின் காரணமாகவும், மனிதர்களின் தேவர்களின் முன்னேற்றதிற்காகவும், நன்மைக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் கற்பித்தவை. "
3.51. மேலும் துறவிகளிடம் பகவர்: 'உங்களை ஊக்குவிக்கிறேன் துறவிகளே: தோன்றியதெல்லாம் மறையும் தன்மையுடையன. விவேகத்துடன் இருந்து விடுதலை பெறுங்கள். [16] ததாகதரின் பரிநிப்பாணத்திற்கு நீண்ட காலம் இல்லை. இன்றிலிருந்து மூன்றாம் மாதத்தில் ததாகதர் பரிநிப்பாணம் அடைவார்."
இதைப் பகவர் கூறினார். அதைக் கூறிய பிறகு ததாகதர் மேலும் கூறியது:
இளையோரும், முதியோரும்
அறிவுடையோரும், அறிவிலிகளும்
செல்வந்தர்களும், ஏழைகளும்:
எல்லோரும் மரணம் எய்துகின்றனர்.
குயவர் செய்த மண்பாண்டங்கள்
பெரியதோ, சிறியதோ
நெருப்பிலிடப்பட்டவையோ, இடப்படாதவையோ
அனைத்தும் ஒரு நாள் உடைந்து விடுவது போலவே
வாழ்க்கையும்
மரணத்திலே முடிகிறது.
Young and old
Wise and foolish
Rich and poor:
All end up dying.
As a potter’s clay vessels
Large and small
Fired and unfired
All end up broken,
So too life
Heads to death.
மேலும் ஆசான் கூறியது:
எனக்கு வயதாகி விட்டது
சிறிதே வாழ்வு மிஞ்சியுள்ளது.
எனக்கு நானே அடைக்கலம்
செய்து கொண்டுவிட்ட பின்
உங்களை விட்டு நான் செல்லவிருக்கிறேன்.
விவேகத்துடன் இருங்கள் துறவிகளே!
மனக்கவனத்துடனும், பண்புடனும் இருங்கள்.
தெளிவான தீர்மானங்களுடன்
மனத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
இந்த தம்ம விநயத்தில்
விவேகத்துடன் இருப்பவர்கள்
சம்ஸார சுழலை விட்டு விட்டு
துக்கத்தின் முடிவை
எட்டுவார்கள்.
Then the Teacher said further:
Ripe my age, little the life
Remaining to me.
Leaving you, I will go,
Having made my refuge
For myself.
Be heedful, monks,
Mindful, virtuous.
With your resolves well-concentrated,
Look after your minds.
He who, in this
Dhamma and Vinaya,
Remains heedful,
Leaving the wandering-on
Through birth,
Will make an end
Of stress.
* * *
விளக்கம் ஆதாரங்கள் (Source for the Notes):
(BA) Bhante Anandajoti அனந்தஜோதி பிக்கு காணொளி
(MW) The long Discourses of the Buddha - A translaton of the Dhigha Nikaya by Maurice Walshe
(TB) Thanisarro Bhikku
(SV-FS) Sister Vajirra, Fransis Story Source
[1] சத்தம்பகர் ஏழு (சத்) மாம்பழ (அம்பக) ஆலயம். Sattambaka shrine: The 'Seven Mangoes' Shrine. (MW)
[2] பாஹுபுத்திர (Bahuputta):"Many Son" பல (பாஹு) ஆண்மகன் (putta) வேண்டுதலுக்கு செல்லும் ஆலயம். (MW)
[3] பின் வரும் பகுதிகளில் தெளிவாக்கப்படுவது போல, இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ள இடங்களுக்கு முன்பு சென்றிருந்த போது, புத்தர் போ. ஆனந்தரிடம் அவ்விடங்கள் எவ்வாறு புத்துணர்ச்சியூட்டின என்பதைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து வாழ்வது ஒரு பாரமாக இருக்காது என்றும், அவர் விரும்பினால் வாழ்நாளை நீடிக்க முடியும் என்றும் மறைமுகமாகக் கூறுகிறார். இந்த இடங்களைக் குறிப்பிடக் காரணம் அவை ஆனந்தருக்குப் பகவர் கூறியதை நினைவுக்குக் கொண்டு வருவதற்காகவே.
As the text will make clear, these are some of the locations where, in the past, the Buddha had commented to Ven. Ānanda on how refreshing the location was, implying that living on would not be a burden, and that he could, if he so desired, extend his life. The reference to these locations was apparently to remind Ānanda of what he had said there. (TB)
[4] சித்த சக்திகளுக்கான (psychic power) நான்கு பாதைகள்: நான்கு விதங்களில் மனத்தை ஒருமுகப்படுத்துவதை அடித்தலமாகக் கொண்ட பாதைகள் - மிகுந்த உற்சாகம், விடா முயற்சி, மனத் தூய்மை, விசாரணை. The four constituents of psychic power (iddhipada) are concentration due to zeal, energy, purity of mind, and investigation. (SV-FS)
[5] பாலியில் 'கப்பம்' என்பது சமஸ்கிருதத்தில் 'கற்பம்' - அதாவது காலம் - இது பல கோடி ஆண்டுகளைக் குறிக்கும். புத்தகோஸர் அவர் உரையில் கப்பம் என்பதற்கு ஆயு-கப்பம் - முழு வாழ்நாள் என்று பொருள் கூறுகிறார். புத்தர் காலத்தில் ஆயுள் - ஒரு முழு வாழ்நாள் என்பது - 100 ஆண்டுகளெனக் கொள்ளப் பட்டது. பகவருக்குத் தற்போது எண்பது வயதென்பதால் அவர் "வாழ்நாளில் மிஞ்சியிருக்கும் நாட்கள் " என்று கூறுவது மேலும் 20 ஆண்டுகள் தான் விருப்பப் பட்டால் வாழலாம் என்று கூறுவதாகப் பொருள் கொள்ளலாம். (MW)
[6] மாரன் (- மரணம்) புலன் இன்பங்களில் நம்மைச் சிக்க வைப்பவன். தேவன், ஆனால் தீயவன். மாரன் என்பது ஒரு பதவி. அந்தப் பதவியில் இருப்பவரும், பிறந்து இறப்பவர் தான். (MW)
மாரன் ஒரு பயங்கரமான காட்சியைப் போ. ஆனந்தர் மனத்தில் தோற்றுவித்ததால் புத்தர் சொன்னதை அவர் புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டதாக உரைகள் கூறுகின்றன. (SV-FS)
[7] போதனையில் உள்ள அதிசயம் என்பது மனத்திற்கு வேண்டிய அளவு பயிற்சி அளித்தால் அது முழுமையாகத் துக்கத்திடமிருந்தும், அழுத்தங்களிலிருந்தும் விடுவிக்கப்படும் என்பதே.
DN 11 defines the miracle of instruction as instruction in training the mind to the point of where it gains release from all suffering and stress. (TB)
[8] அதாவது, பகவர் தொடர்ந்து வாழ வேண்டும் என்ற விருப்பத்தைக் கைவிட்டார். இவ்வாறு கைவிட்டதன் காரணமாகவே மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவர் பரிநிப்பாணம் எடுத்தார்.
In other words, the Buddha relinquished the will to live longer. It was this relinquishment that led to his total unbinding three months later. (TB)
[9] தோற்றம் பார்க்கின் மூன்று வகையாம் (மணிமேகலை காதை 30- வரி 27)
தோற்றம் மூன்றாவன: அருவம் (formless), உருவம் (form), காமம் (sensual) என்பன.
Three kinds of becoming are formless, form and sensual becoming.
உருவ, அருவ தோற்றங்கள் கட்டுப்படாதவை (மேலான தியான நிலைகள் அடைந்தோர் பிறக்கும் உலகங்கள்)
காமத் தோற்றம் கட்டுப் பட்டது.
(BA) Source
பௌத்த உலகங்கள் முப்பத்தியொன்றில் (31)
காமலோகங்கள் 11. (அவை கீழ் லோகங்கள் - 4 (அசுர, பூத, மிருக, நரக), மனித உலகம் 1, தேவலோகங்கள் 6 )
உருவ லோகங்கள் 16
அருவ உலகங்கள் 4.
இந்த ஓவ்வொரு உலகமும், ஒரு மன நிலைக்குச் சமமானவை.
இந்த மனநிலைகளை இந்த உலகிலேயே மக்கள் மத்தியில் காணலாம்.
உதாரணமாக:
எப்போதும் வெகுளியும் (கோபமும்), பொறாமையும் கொண்டுள்ளவர்கள் அசுர உலகில் மறுபிறப்பெடுப்பார்கள்.
எப்போதும் காமம் (புலனின்பங்களுக்கு ஆசைப் படுவோர்) கொண்டுள்ளவர்கள் பூத உலகில் மறுபிறப் பெடுப்பார்கள்.
(இதைச் சித்தரிக்கும் போது பெரிய வயிறும் மிகச்சிறிய வாயும் உடையதாகச் சித்தரிப்பார்கள். அதாவது எவ்வளவு உண்டாலும் பசியைதீர்கமுடியாதோர். விரும்பியது கிடைத்தாலும் திருப்தியடையாதோர்.)
எப்போதும் மயக்கத்தில் (அறியாமை, குழப்பம்) கொண்டுள்ளவர்கள் மிருக உலகில் மறுபிறப்பெடுப்பார்கள்.
காமம், வெகுளி, மயக்கம் மூன்றையும் எப்பொழுதும் கொண்டுள்ளவர் நரகத்தில் மறுபிறப்பெடுபார்கள்.
காமம், வெகுளி, மயக்கம் மூன்றையும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி, வரையறையோடு வாழ்பவர்கள் மனிதராக மறுபிறப் பெடுப்பார்கள்.
[10] பவசங்காரம் Bhavasankhara: the formative force of becoming, in the sense of what forms existence. (SV-FS)
[11] போரில் சங்கிலிகளால் ஆன கவசத்தை மாவீரன் துளைத்து நொறுக்குவதைப்போல
ஒருவரை வலை போலச் சூழ்ந்திருக்கும் மனமாசுகளை அவர் உடைத்தெரிந்தார்.
[12] அதாவது அந்த வலிமையான தேவரால் தன் சக்திகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தேவரும் பிறந்து இறப்பவர் தான், அவர் ஞானமுறாதவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
[13] உருவெலா - இன்றைய போத்-கயா (Uruvelā is today Bodh-Gaya) (MW)
[14] ஐந்து (ஆன்மீகம் வளர்க்கும்) இந்திரியங்கள் - நம்பிக்கை (ஸத்தா), வீரியம், கவனம் (சதி), மன ஒருமைப்பாடு (சமாதி) மற்றும் மெய்யறிவு (பஞ்ஞா)
The five (spiritual) faculties are: faith (or confidence: saddha), energy (viriya), mindfulness (sati), concentration (samadhi), and wisdom (panna) (MW)
[15] இவையே 37 போதி-பாக்கிய-தம்மங்கள். These are the 37 bodhi-pakkhiya-dhammas. For a full account, see The Wings to awakening. (TB)
[16] இந்த இரண்டு வரிகளை பகவர் இறுதி பரிநிப்பாணத்தின் முன்பும் கூறுகிறார். The Buddha will repeat these two statements as his last exhortation before his total unbinding. (TB)
* * *