அறிந்துகொள்வதும், நுண்ணறிவும் Wisdom

Understanding and Wisdom

அறிந்துகொள்வதும், நுண்ணறிவும்

136

No one and nothing can free you but your own understanding.

உங்களுடைய புரிந்து கொள்ளும் ஆற்றலைத் தவிர வேறு யாரும், எதுவும் உங்களை விடுவிக்க முடியாது.

137

A madman and an arahant both smile, but the arahant knows why while the madman doesn’t.

பைத்தியக்காரனும், ஞானியும் (அரஹந்தரும்) புன்னகை செய்கிறார்கள். ஆனால் ஞானி எதற்காகச் சிரிக்கிறோம் என்று தெரிந்து சிரிக்கிறார். பைத்தியக்காரன் காரணமில்லாமலே சிரிக்கிறான்.

138

A clever person watches others, but he watches with wisdom, not with ignorance. If one watches with wisdom, once can learn much. But if one watches with ignorance, one can only find faults.

அறிவாளி மற்றவர்களை நுண்ணறிவோடு கவனிக்கிறார்; பேதமையோடு அல்ல. நுண்ணறிவோடு கவனித்தால் நிரம்பக் கற்றுக் கொள்ள முடியும். ஒருவர் பேதமையோடு கவனித்தால் குறை காண மட்டும்தான் முடியும்.

139

The real problem with people nowadays is that they know but still don’t do. It’s another matter if they don’t do because they don’t know, but if they already know and still don’t do, then what’s the problem?

மக்களிடம் உள்ள இன்றைய பிரச்சனை அவர்கள் தெரிந்தும் பயிற்சி செய்யாமல் இருப்பதுதான். அவர்களுக்குத் தெரியாததால் பயிற்சி செய்யாமல் இருந்தால் அது வேறு விஷயம். ஆனால் அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் பயற்சி செய்வதில்லை. அதற்கு என்ன காரணமோ?

140

Outward scriptural study is not important. Of course, the Dhamma books are correct, but they are not right. They cannot give you right understanding. To see the word "anger" in print is not the same as experiencing anger. Only experiencing for yourself can give you true faith.

வேதாகம நூட்களை மட்டும் படிப்பது முக்கியமல்ல. தரும நூல்கள் சரியானவைதான்; ஆனால் அவை நியாயமானவை அல்ல. நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள அவை உதவாது. "கோபம்" என்ற வார்த்தையை அச்சில் பார்ப்பது கோபத்தை அனுபவிப்பதற்குச் சமம் அல்ல. அனுபவத்தில் நீங்களே புரிந்து கொள்வதுதான் உண்மையான நம்பிக்கையை ஏற்படுத்தும்.

141

If you see things with real insight, then there is no stickiness in your relationship to them. They come - pleasant and unpleasant - you see them and there is no attachment. They come and they pass. Even if the worse kinds of defilements come up, such as greed and anger, there’s enough wisdom to see their impermanent nature and allow them to just fade away. If you react to them, however, by liking or disliking, that isn’t wisdom. You’re only creating more suffering for yourself.

உண்மையான உள்ளார்ந்த அறிவோடு நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது அவைகளிடம் உங்களுக்குள்ள உறவில் பிசுபிசுப்பு இருப்பதில்லை. மனதிற்கினிய நிகழ்வுகளானாலும் சரி, மனதிற்குப் பிடிக்காத நிகழ்வுகளானாலும் சரி- அவைகளை ஒட்டுதல் இல்லாமல் பார்க்க முடிகிறது. அவைகள் வந்ததுபோல் சென்று மறைகின்றன. மிக மோசமான, தூய்மையைக் கெடுக்கும் பேராசை, கோபம் போன்றவை வந்தாலும், போதுமான நுண்ணறிவு உள்ளதால் அவைகளின் நிரந்தரமற்ற தன்மையைப் புரிந்து கொண்டு அவை தானாக மங்கி மறையட்டும் என விட்டு விடுகிறோம். எனினும் அவைகளை விரும்பினாலோ அல்லது வெறுத்தாலோ அது நுண்ணறிவுக்கு ஏற்புடையதல்ல. அப்படிச் செய்தால் உங்களுக்கு அதிக துயரத்தைத்தான் உருவாக்கிக் கொள்வீர்கள்.

142

When we know the truth, we become people who don’t have to think much, we become people with wisdom. If we don’t know, we have more thinking than wisdom or no wisdom at all. A lot of thinking without wisdom is extreme suffering.

உண்மையைப் புரிந்து கொண்டால் நாம் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை; நுண்ணறிவு மிக்கவர்களாக நாம் இருப்போம். நமக்கு உண்மை புரியாவிட்டால் நுண்ணறிவை விடச் சிந்தனைகள் தான் மிகுதியாக இருக்கும் அல்லது நமக்கு நுண்ணறிவே இல்லாமலும் இருக்கலாம். நுண்ணறிவே இல்லாமல் நீண்டு சிந்திப்பது மிகப் பெரும் துயரமாகும்.

143

These days people don’t search for the Truth. People study simply in order to find the knowledge necessary to make a living, raise their families and look after themselves, that’s all. To them being smart is more important than being wise.

இப்போதெல்லாம் மக்கள் உண்மையைத் தேடுவதில்லை. மக்கள் கல்வி கற்பதற்குக் காரணம் பிழைப்பதற்கும், குடும்பத்தைக் காப்பாற்றவும், தங்களைக் கவனித்துக் கொள்வதற்கும் தேவையான அறிவைப் பெறுவதற்குத்தான். அவர்களைப் பொருத்தவரை நுண்ணறிவோடு இருப்பதைக் காட்டிலும் கவர்ச்சிகரமாக இருப்பதே முக்கியம் எனக் கருதுகிறார்கள்.