முனி சூத்திரம் Muni Sutta

சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home

Sn 1.12

முனி சூத்திரம்: முனிவர்

Muni Sutta: The Sage

Translated from the Pali by: Thanissaro Bhikkhu

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: தணிசாரோ பிக்கு

* * *

Danger is born from intimacy,[1]

society gives birth to dust.[2]

Free from intimacy,

free from society:

such is the vision of the sage.

நெருங்கிய நட்பிலிருந்து பிறப்பது அபாயம், [1]

சமுதாயத்திலிருந்து பிறப்பது குப்பை. [2]

நெருங்கிய நட்புகளிலிருந்து விடுபடுதல்,

சமுதாயத்திலிருந்து விடுபடுதல்,

இதுவே முனிவர் ஞானத்தால் உணர்வது.

Who, destroying what's born

wouldn't plant again

or nourish what will arise:

They call him the wandering, singular sage.

He has seen the state of peace.

அவர், வளர்ந்ததை வெட்டி விடுவார்

திரும்ப விளைவிக்க மாட்டார்

வளர்வதற்கும் ஊக்கமளிக்க மாட்டார்:

அவரை தனித்து நடமாடும்

முனிவர் என்பார்.

அமைதியைக் கண்டவர் அவர்.

Considering the ground,

crushing the seed,

he wouldn't nourish the sap[3]

— truly a sage —

seer of the ending of birth,

abandoning conjecture,

he cannot be classified

நிலத்தைக் கவனித்து,

விதையை நொறுக்கி,

மேலும் ஜீவசத்துக்கு ஊக்கமளிக்காதவர் [3]

- உண்மையான முனிவர் -

பிறப்பின் முடிவறிந்தவர் -

கருத்துக்களைக் கைவிட்டவர்

அவரை அளவிட முடியாது.

. Knowing all dwellings,[4]

not longing for any one anywhere

— truly a sage —

with no coveting, without greed,

he does not build,[5]

for he has gone beyond

எல்லா இருப்பிடங்களையும் தெரிந்தவர், [4]

யாருக்கும் எங்கேயும் அவர் ஏங்குவதில்லை,

- உண்மையான முனிவர் -

வேட்கையில்லாமல், அவா இல்லாமல்.

அவர் கட்டுவதில்லை, [5]

ஏனென்றால் அவர் அக்கரை சேர்ந்து விட்டார்.

. Overcoming all

knowing all,

wise.

With regard to all things:

unsmeared. Abandoning all,

in the ending of craving,

released:

The enlightened call him a sage.

எல்லாம் வென்றவர்

எல்லாம் தெரிந்தவர்,

மெய்ஞ்ஞானம் உடையவர்.

எந்த விதத்திலும் கறைபடியாதவர்,

எல்லாம் துறந்தவர்

வேட்கையை முடித்ததனால்,

விடுபட்டவர்:

ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

Strong in discernment,

virtuous in his practices,

centered,

delighting in jhana,

mindful,

freed from attachments,

no constraints :: no fermentations:[6]

The enlightened call him a sage.

விவேகத்தில் வலுவானவர்,

நடத்தையில் ஒழுக்கம்,

நிலையானவர்,

ஆழ் தியானத்தில் மகிழ்பவர்,

கடைப்பிடியுடையவர்,

பற்றுகளிடமிருந்து விடுபட்டவர்,

அவரைத் தடுப்பதற்கு ஒன்றும் இல்லை : மாசுகள் இல்லை. [6]

ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

The wandering solitary sage,

uncomplacent, unshaken by praise or blame.

Unstartled, like a lion at sounds.

Unsnared, like the wind in a net.

Unsmeared, like a lotus in water.

Leader of others, by others unled:

The enlightened call him a sage.

தனித்து நடமாடும் முனிவர்,

தற்பெருமை கொள்ளாதவர்,

புகழ்ச்சியும் இகழ்ச்சியும்

அவரைப் பாதிப்பதில்லை.

எதற்கும் அதிர்ச்சி அடையாமல்,

சத்தம் கேட்ட சிங்கத்தைப்போல.

எதற்கும் பிடிபடாமல், வலையில் சிக்காத காற்றைப்போல.

கறைபடாமல், [சேற்று] நீரில் உள்ள தாமரையைப்போல

மற்றவருக்குத் தலைவர்,

மற்றவர் தலைமையில் நடப்பவரல்ல:

ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

Like the pillar at a bathing ford,[7]

when others speak in extremes.

He, without passion,

his senses well-centered:

The enlightened call him a sage.

குளிப்பிடத்தில் உள்ள தூணைப்போல, [7]

மற்றவர் இரு எல்லைகளில் பேசும் போது

புலன் ஆசை இல்லாத அவர்,

அவர் புலன்களை அடக்கியவர்:

ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

Truly poised, straight as a shuttle,[8]

he loathes evil actions.

Pondering what is on-pitch and off:[9]

The enlightened call him a sage.

நெசவுநாடா நேராகச் செல்வதுபோல நேர்மையுள்ளவர், [8]

தீய செயல்களை அவர் செய்வதில்லை.

சமசுருதி உடையது எது, அல்லாதது எது என்று பிரதிபலிப்பார்: [9]

ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

Self-restrained, he does no evil.

Young and middle-aged,

the sage self-controlled,

never angered, he angers none:

The enlightened call him a sage.

தன் மனத்தை அடக்கியவர்,

அவர் தீமை செய்வதில்லை.

இளமையும் நடுத்தரமானவரும்,

கட்டுப்பாடுள்ள முனிவர்,

கோபிப்பதும் இல்லை, மற்றவரைக் கோபமூட்டுவதும் இல்லை:

ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

From the best

the middling

the leftovers

he receives alms.

Sustaining himself on what others give,

neither flattering

nor speaking disparagement:

The enlightened call him a sage.

சிறந்த, நடுத்தரமான, மிஞ்சிய

உணவை ஏற்றுக் கொள்வார்.

மற்றவர் கொடுத்ததைப் பெற்று உயிர் வாழ்கிறார்,

போற்றாமலும்,

இகழாமலும்;

ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

The wandering sage

abstaining from sex,

in youth bound by no one,

abstaining from intoxication[10]

complacency

totally apart:

The enlightened call him a sage.

நாடோடி முனிவர்

பிரமச்சரிய வாழ்வு வாழ்கிறார்,

இளமையிலும் ஒருவரிடமும் கட்டுப்படாமல்,

போதையைத் தவிர்த்து [10]

தற்பெருமை கொள்ளாமல்

முழுமையாக விலகியவர்:

ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

Knowing the world,

seeing the highest goal,

crossing the ocean,[11] the flood,[12]

— Such — [13]

his chains broken,

unattached

without fermentation:

The enlightened call him a sage.

உலகைத் தெரிந்தவர்,

மேலான நோக்கத்தைப் பார்த்தவர்,

கடலைக் [11] கடந்து, வெள்ளத்தைக் [12] கடந்து,

- அவ்வாறு - [13]

சங்கிலிகளை உடைத்தவர்,

பற்றில்லாதவர்,

மாசுகள் படியாதவர்:

ஞானிகள் அவரை முனிவர் என்பார்.

These two are different,

they dwell far apart:

the householder supporting a wife

and the unselfish one, of good practices.

Slaying other beings, the householder

is unrestrained.

Constantly the sage protects other beings,

is controlled.

இவை இரண்டும் வேறுபட்டவை,

வேவ்வேறு இடங்களில் வாழ்பவை:

மனைவிக்கு ஆதரவளிக்கும் இல்லறத்தார்

நல்ல பழக்கங்கள் கொண்ட சுயநலமில்லாதவர்.

உயிர்களைக் கொல்லும் இல்லறத்தாருக்குக்

கட்டுப்பாடுகள் இல்லை.

மற்ற உயிர்களைத்

தொடர்ந்து பாதுகாக்கும் முனிவரோ

கட்டுப்பாட்டோடு இருப்பவர்.

As the crested,

blue-necked peacock,

when flying,

never matches

the wild goose

in speed:

Even so the householder

never keeps up with the monk,

the sage secluded,

doing jhana

in the forest.

கிரீடம் கொண்ட

நீலக் கழுத்துள்ள மயில்,

பறக்கும்போது

காட்டு வாத்துக்கு

வேகத்தில் இணையாகாது:

அதே போல இல்லறத்தார்

முனிவருடன் தொடர முடியாது,

தனித்திருக்கும் முனிவர், வனத்தில்

ஆழ் தியானத்தில் திகழ்கிறார்.

* * *

Notes

விளக்கம்:

1. Dangers in intimacy: Craving and views.

நெருங்கிய நட்பில் உள்ள ஆபத்து: வேட்கையும் கருத்துக்களும்.

2. Dust: Passion, aversion, and delusion.

குப்பை: அவா, வெறுப்பு மற்றும் அறியாமை.

3. Ground, seed, and sap: The khandhas (body, feelings, perceptions, thought formations, and consciousness), sense spheres, and elements form the ground in which grows the seed of constructive consciousness — the consciousness that develops into states of being and birth. The sap of this seed is craving and views.

நிலம், விதை, ஜீவசத்து: கந்தங்கள் (உருவம், வேதனை, குறிப்பு, சங்காரங்கள், விஞ்ஞானம் என்ற ஐவகைக் கந்தங்கள் ), புலன் பிராந்தியங்கள், பூதங்கள் (பூமி, திரவம், வெப்பம், காற்று) நிலத்தைக் குறிக்கும்.

உணர்வு விதையையும்

ஜீவசத்து என்பது வேட்கையையும், கருத்துக்களையும் குறிக்கும்.

4. Dwellings: States of becoming and birth.

இருப்பிடங்கள்: பவத்தோற்றம் மற்றும் பிறப்பு.

5. He does not build: He performs none of the good or bad deeds that give rise to further states of becoming and birth.

அவர் கட்டுவதில்லை: மேலும் தோற்றமெடுப்பதற்கும் பிறப்புக்கும் ஏதுவான தீய, நல்ல வினைகளை அவர் செய்வதில்லை.

6. No fermentations (asava): He has none of the forms of defilement — sensual desire, views, states of becoming, or ignorance — that "flow out" of the mind and give rise to the flood of the cycle of death and rebirth.

மாசுகள் இல்லை: புலன் ஆசைகள், கருத்துக்கள், பவத்தோற்றங்கள், அறியாமை இல்லாதவர். - மனத்திலிருந்து "வெளி ஓடும்" இவை இறப்பு, மறுபிறப்பு என்ற வெள்ளத்துக்கு இடம் தருகின்றன.

7. The pillar at a bathing ford: The Cullavagga (V.l) describes this as an immovable pillar, standing quite tall and buried deep in the ground near a bathing place, against which young villagers and boxers would rub their bodies while bathing so as to toughen them. The "extremes" in which others speak, according to the Commentary, are extremes of praise and criticism: These leave the sage, like the pillar, unmoved.

ஆற்றில் குளிக்குமிடத்தில் உள்ள தூண்: குளவக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் குளிக்கும் இடங்களில் ஆழமாகப் பதிக்கப்பட்ட தூண் இருக்குமாம். இளைஞர்களும் மல்லுச்சண்டை போடப் பயில்பவர்களும் தங்கள் உடலை இந்தத் தூண் மீது தேய்த்துக் கடுமையாக்குவார்களாம். எல்லைகள் என்று மற்றவர் சொல்வது புகழ்ச்சி இகழ்ச்சி என்ற எல்லைகள். இவை முனிவரைப் பாதிப்பதில்லை குளிப்பிடத்தில் உள்ள தூண் அசையாது இருப்பதைப் போல.

8. Straight as a shuttle: Having a mind unprejudiced by favoritism, dislike, delusion, or fear.

நெசவு நாடாவைப்போல நேரான: பட்சபாதம், வெறுப்பு, அறியாமை அல்லது பயம் போன்றவற்றால் பாதிக்கப்படாத மனம்.

9. On-pitch and off (sama and visama): Throughout ancient cultures, the terminology of music was used to describe the moral quality of people and acts. Discordant intervals or poorly-tuned musical instruments were metaphors for evil; harmonious intervals and well-tuned instruments were metaphors for good. In Pali, the term sama — "even" — described an instrument tuned on-pitch: There is a famous passage where the Buddha reminds Sona Kolivisa — who had been over-exerting himself in the practice — that a lute sounds appealing only if the strings are neither too taut or too lax, but 'evenly' tuned. This image would have special resonances with the Buddha's teaching on the middle way. It also adds meaning to the term samana — monk or contemplative — which the texts frequently mention as being derived from sama. The word samañña — "evenness," the quality of being in tune — also means the quality of being a contemplative. This concept plays an important role in the Instructions to Rahula, below. The true contemplative is always in tune with what is proper and good.

வலிவு/மெலிவான சுருதி - Off-pitch (தவறான ஒழுகல்)

சமனான சுருதி - On-pitch (நல்லது சரியானது ஆகியவற்றை அறிந்து அதன் படி நடப்பவர்)

புத்தர் சோணா என்கிற துறவி தியானத்தில் சோர்வடைந்ததை உணர்ந்து அவருக்குத் தந்த அறிவுரையும் இது போன்று இசைக்கருவிகளின் சுருதியை உவமானமாகக் கொண்டது:

சோணாவின் மன நிலையைப் புரிந்து கொண்ட அண்ணல், சோணாவின் எதிரே தோன்றி: "சோணா, நீ வீட்டிலிருந்த போது தந்தி இசைக்கருவி மீட்டுவதில் வல்லவனாய் இருந்தாய் அல்லவா?"

"ஆம், அண்ணலே."

"அத்தந்திகள் மிக இறுக்கமாக இருந்தபோது எளிதாக இசை எழுப்ப முடிந்ததா? இசை இனிமையாக இருந்ததா?"

"இல்லை, அண்ணலே."

"அத்தந்திகள் தொய்வுற்று இருந்தபோது, அது இனிமையான இசை தந்ததா? சுலபமாக மீட்ட முடிந்ததா?"

"இல்லை, அண்ணலே."

"அதே தந்திகள் தொய்வுற்றும் இல்லாமல், மிக இறுக்கமாகவும் இல்லாமல் சரியான நிலையில் சுருதி சேர்க்கப்பட்ட போது அதில் இசையை மீட்ட முடிந்ததா? அக்கருவியும் இனிமையான இசையைத் தந்ததா?"

"ஆம், அண்ணலே."

"அதைப்போலத் தான் சோணா, முயற்சி மிகக் கடுமையாக இருந்தால் அது கிளர்ச்சியில் முடியும். அதுவே தொய்வுற்றிருந்தால் சோம்பலில் முடியும். ஆகையால் மனோசக்தியை நடுநிலையிலிருந்து வளர்த்துக் கொள். பிறகு மதிப்புடையதை அறிந்து கொள்வாய்."

10. Intoxication: The three intoxications are intoxication with youth, with good health, and with life.

மூன்று வகை போதையானவை: இளமை, நல்ல உடல் நலம், வாழ்க்கை

11. Ocean: The way defilement splashes into undesirable destinations (so says the Commentary).

பெருங்கடல்: மாசுகள் காரணமாக மறுமையில் கீழான பிறப்பெடுப்பது.

12. Flood: The flow of defilement: sensual desires, views, states of becoming, and ignorance.

வெள்ளம்: மாசுகளின் ஓட்டம்: புலன் இன்பங்கள், கருத்துக்கள், பவத்தோற்றம், அறியாமை.

13. Such: Unchanging; unaffected by anything.

அவ்வாறு: மாற்றமில்லாத, எதனாலும் பாதிக்கப்படாத

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

©1996 Thanissaro Bhikkhu. See details English Source

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.