எளிமையாகச் சொல்வதென்றால் ..3
எளிமையாகச் சொல்வதென்றால்
In Simple Terms
108 அற உவமானங்கள்
போற்றுதற்குரிய அஜான் சா
108 Dhamma Similes by Ajahn Chah
37. Peels and Husks Top
I'll give you a simple comparison. Suppose you've bought a banana or a coconut in the market and you walk along carrying it. Someone asks you, "Why did you buy the banana?"
"I bought it to eat it."
"But do you have to eat the peel, too?"
"No."
"I don't believe you. If you're not going to eat the peel, why are you carrying it too?"
Or suppose you're carrying a coconut:
"Why are you carrying the coconut?"
"I'm carrying it home to make a curry."
"And you're going to curry the husk too?"
"No."
"Then why are you carrying it?"
So. How are you going to answer his question?
Through desire. If there's no desire, you can't give rise to ingenuity, to discernment.
That's the way it is as we make an effort in our meditation. Even though we do this through letting go, it's like the banana or the coconut: Why are you carrying the peel or the husk? Because the time hasn't come yet to throw it away. It's still protecting the inner flesh. The time hasn't come yet to throw it away, so you hold onto it for the time being.
The same with our practice: Suppositions and release have to be mixed together, just as the coconut has a husk mixed together with a shell and the flesh, so you carry them all together. If they accuse us of eating the coconut husk, so what? We know what we're doing.
பழத்தோலும் தேங்காய்மட்டையும்
உங்களுக்கு ஒரு எளிய உவமானம் தருகிறேன். சந்தைக்குச் சென்று ஒரு வாழைப்பழத்தையோ, தேங்காயையோ வாங்கிக் கொண்டு வருகின்றீர்கள். உங்களிடம் ஒருவர், "வாழைப்பழத்தை எதற்கு வாங்கினீர்?" என்று கேட்கிறார்.
"சாப்பிடுவதற்காக வாங்கினேன்."
"ஆனால் தோலையும் சாப்பிட வேண்டுமா?"
"இல்லை"
"உங்களை நான் நம்ப வில்லை. தோலை சாப்பிடப் போவதில்லையென்றால், அதை ஏன் சுமந்து கொண்டு போக வேண்டும்?"
அல்லது நீங்கள் ஒரு தேங்காயை எடுத்து வருகிறீர்கள்:
"தேங்காயை ஏன் எடுத்து வருகிறீர்கள்?"
"சமையல் செய்ய வீட்டுக்கு எடுத்துச் செல்கிறேன்."
"மட்டையையும் சேர்த்துச் சமைக்கப் போகின்றீர்களா?"
"இல்லை"
"பின் அதை ஏன் சுமந்து கொண்டு போக வேண்டும்?"
சரி. அவர் கேள்விக்கு எப்படிப் பதில் கூறுவது?
ஆசையைக் கொண்டு. ஆசை இல்லாவிட்டால் சாமர்த்தியத்தை எழுப்ப முடியாது. விவேகம் இருக்காது.
இது போலத்தான் நாம் தியானத்திலும் முயற்சி செய்ய வேண்டும். இந்த முயற்சியில் கைவிடுதல் இருந்தாலும், இது அந்த வாழைப்பழத்தையும், தேங்காயையும் போல: ஏன் தோலையும், மட்டையையும் தூக்கிச் செல்கின்றோம்? ஏனென்றால் அதை வீசி விடும் நேரம் இன்னும் வரவில்லை. அது இருப்பதால் தான் உள்ளே உள்ள சதை பாதுகாக்கப் படுகிறது. அதை வீசும் நேரம் வராதபடியால் தற்காலிகமாக அதையும் தூக்கிக் கொண்டு செல்கிறோம்.
நமது பயிற்சியும் அது போலவே: உலக வழக்கமும், விடுதலையும் கலந்துள்ளது. தேங்காய் மட்டையும், ஓடும், சதையும் ஒன்றாக இணைந்திருப்பதால் அவை அனைத்தையும் தூக்கிச் செல்வதுபோல. அவர்கள் நம்மைத் தேங்காய் மட்டையைச் சாப்பிடுவதாகக் குறைகூறினால் என்ன? நாம் என்ன செய்கிறோம் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.
மொ.ஆ.குறிப்பு: "ஆசையை அறுக்க வேண்டும் என்பதே ஒரு ஆசை தான்." என்ற கூற்றுக்கு இந்த உவமானம் ஒரு விளக்கம். தீய ஆசைகளை விலக்கச் சில விவேகமுள்ள நல்ல ஆசைகள் தேவை. அத்தீய ஆசைகளை முடித்த பின் எந்த ஆசையும் தேவையில்லை. ஒரு ஊருக்குப் போக வேண்டுமானால் முதலில் அங்கு போக வேண்டுமென்ற ஆசை தேவை. ஆனால் அந்த ஊரை அடைந்தபின் அந்த ஊருக்குப் போக வேண்டுமென்ற ஆசையும் தேவைப் படுவதில்லை.
38. Doing the Math Top
The Dhamma is like doing math. There's multiplication, division, addition, and subtraction. If we can think in this way, we'll be intelligent. We know the right time and place for things. We subtract when we should subtract, multiply when we should multiply, divide when we should divide, add together when we should add together. If we multiply every time, our hearts will die from the burden. In other words, we have no sense of enough. No sense of enough means no sense that we're growing old.
Anyone with a sense of growing old is a person with a sense of enough. When there's enough, the words, "Okay, that's plenty," can make their way up. If there's not enough, that "okay" can't make its way up because we keep on wanting to take. We've never thrown anything away, let anything go, put anything down. We're always taking. If we can "okay," we're at ease. That's enough.
கணக்குப் போடுவது
தம்மம் கணக்குப் போடுவது போல. அதில் பெருக்கல், வகுத்தல், கூட்டல், கழித்தல் ஆகியவை அடங்கும். இவ்வாறு நினைக்க முடிந்தால் நாம் அறிவாளிகளாகலாம். செய்ய வேண்டிய நேரமும், இடமும் நமக்குத் தெரிகிறது. கழிக்க வேண்டிய நேரத்தில் கழிக்கின்றோம், பெருக்க வேண்டிய நேரத்தில் பெருக்குகின்றோம், வகுக்க வேண்டிய நேரத்தில் வகுக்கின்றோம், கூட்ட வேண்டிய நேரத்தில் கூட்டுகின்றோம். எப்போதும் பெருக்கலே செய்தால் அந்தச் சுமையினால் உள்ளம் உடைந்து இறந்து விடுவோம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘போதும்’ என்ற உணர்வே இருக்காது. ‘போதும்’ என்ற உணர்வு இல்லையென்றால் நாம் வயதாகிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வும் இருக்காது.
தான் வயதாவதை உணர்ந்து வாழ்பவர், போதும் என்ற உணர்வோடு வாழ்பவர். போதுமான அளவு இருக்கும் போது, "சரி, அது அதிகம்," என்ற வார்த்தைகளும் தோன்ற வழியுண்டு. போதுமென்ற உணர்வு இல்லையென்றால், "சரி, போதும்," என்ற வார்த்தைகள் வெளிவராது. ஏனென்றால் மேலும் எடுக்கத்தான் தோன்றும். எதையும் நாம் எறிந்ததில்லை, கைவிட்டதில்லை, கீழே வைத்ததில்லை. எப்போதும் எடுத்துக் கொண்டே இருக்கின்றோம். "போதும்," என்று சொல்ல முடிந்தால் நாம் அமைதியாக இருக்கலாம். அது போதும்.
39. The Broken Glass Top
You may say, "Don't break my glass!" But you can't prevent something breakable from breaking. If it doesn't break now, it'll break later on. If you don't break it, someone else will. If someone else doesn't break it, one of the chickens will! The Buddha says to accept this. He penetrated all the way to seeing that this glass is already broken. This glass that isn't broken, he has us know as already broken. Whenever you pick up the glass, put water in it, drink from it, and put it down, he tells you to see that it's already broken. Understand? The Buddha's understanding was like this. He saw the broken glass in the unbroken one. Whenever its conditions run out, it'll break. Develop this attitude. Use the glass; look after it. Then one day it slips out of your hand: "Smash!" No problem. Why no problem? Because you saw it as broken before it broke. See?
But usually people say, "I've taken such good care of this glass. Don't ever let it break." Later on the dog breaks it, and you hate the dog. If your child breaks it, you hate him, too. You hate whoever breaks it — because you've dammed yourself up so that the water can't flow. You've made a dam without a spillway. The only thing the dam can do is burst, right? When you make a dam, you have to make a spillway, too. When the water rises up to a certain level, it can flow off safely to the side. When it's full to the brim, it can flow out the spillway. You need to have a spillway like this. Seeing inconstancy is the Buddha's spillway. When you see things this way, you can be at peace. That's the practice of the Dhamma.
உடைந்த கண்ணாடிக் கோப்பை
"என் கண்ணாடிக் கோப்பையை உடைத்துவிட வேண்டாம்!" என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் உடையக் கூடிய எதையும் உடையாமல் தடுக்க முடியாது. இப்போது உடையவில்லை யென்றால் இன்னொரு நாள் அது உடையத்தான் போகிறது. நீங்கள் உடைக்கவில்லையென்றால் வேறு யாராவது அதை உடைத்து விடுவார்கள். வேறு யாராவது உடைக்கவில்லையென்றால் இங்குள்ள ஒரு கோழி உடைத்து விடும்! புத்தர் இதை ஏற்றுக் கொள்ளச் சொன்னார். அவருடைய ஆழமான அறிவினால் இந்தக் கண்ணாடிக் கோப்பை ஏற்கனவே உடைந்து விட்டதை அறிந்திருந்தார். உடையாத கண்ணாடிக் கோப்பை ஏற்கனவே உடைந்து விட்டதை நமக்குத் தெரியப் படுத்தினார். எப்போதாவது கண்ணாடிக் கோப்பையை எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றிக் குடித்த பின் கீழே வைத்தாலும், அவர் உங்களிடம் அது ஏற்கனவே உடைந்து விட்டதாக நினைக்கச் சொன்னார். புரிகிறதா? புத்தர் அறிவு அப்படிப் பட்டதாக இருந்தது. உடையாத கண்ணடிக் கோப்பையில் உடைந்ததைக் கண்டார். அதன் (உடையாத நிலையில் வைத்திருக்கும்) காரணங்கள் முடிந்த விட்ட நிலையில் அது உடைந்து விடும். இந்த எண்ணப்போக்கை வளர்த்துக் கொள்ளுங்கள்; அதைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு நாள் உங்கள் கையிலிருந்து கோப்பை நழுவி விழுகிறது: "டமார்!" பிரச்சனை ஏதும் இல்லை. ஏன் பிரச்சனை இல்லை? ஏனென்றால் முன்னரே அது உடைந்து விட்டதை நீங்கள் தெரிந்திருந்தீர்கள். தெரிகிறதா?
40. Salt Top
If you do merit for the sake of putting an end to suffering, you have to make merit and develop skillful qualities in the mind at the same time. If you don't develop skillful qualities, no discernment will arise. Merit on its own is like raw meat or raw fish. If you just let it sit out like that, it goes rotten. But if you salt it, it'll last for a long time. Or the same if you put it in the refrigerator.
உப்பு
துக்கத்தை முடிப்பதற்கென்று புண்ணியம் செய்தீர்களென்றால், நீங்கள் புண்ணியம் செய்வதுமன்றி அத்துடன் திறமையான பண்புகளையும் மனத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படித் திறமையான பண்புகளை வளர்த்துக் கொள்ளவில்லையென்றால், விவேகம் பிறக்காது. புண்ணியத்தை மட்டும் பார்த்தோமானால் அது சமைக்கப்படாத மாமிசம் அல்லது மீனைப்போல. அப்படியே வெளியில் வைத்திருந்தால் அவை அழுகிக் கெட்டுப்போய் விடும். ஆனால் அதில் உப்பைத் தடவி வைத்திருந்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். அல்லது குளிர் சாதனப் பெட்டியில் (ஃபிரிட்ஜ்) வைத்திருந்தாலும் கெடாமல் இருக்கும்.
41. An Upside-down Basin Top
Once we've abandoned doing evil, then even when we make merit only a bit at a time, there's still hope that our perfections will grow full. Like a basin set upright out in the open: Even if rain falls only a drop at a time, there's a chance that the basin will get full.
But if we make merit without abandoning evil, it's like putting a basin upside-down out in the open. When the rain falls it still lands on the bottom of the basin, but on the outside bottom, not on the inside. There's no way the water will fill the basin.
கவிழ்த்து வைக்கப்பட்ட தாம்பாளம்
தீயது செய்வதை நிறுத்தியபின், அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் புண்ணியம் செய்தாலும், நமது நற்பண்புகள் முழுமையடையும் என்று நம்பலாம். இது வெளியில் நேராக வைக்கப் பட்டிருக்கும் தாம்பாளத்தைப்போல: மழை சொட்டுச் சொட்டாகப் பெய்தாலும், அந்தத் தாம்பாளம் நிரம்பிவிட வாய்ப்பு உள்ளது.
ஆனால் தீமையைக் கைவிடாமல் புண்ணியச் செயல்கள் செய்வது, அந்தத் தாம்பாளத்தைக் கவிழ்த்து வைப்பது போல. ஆம். மழை பெய்தால் அந்தத் தாம்பாளத்தின் மேல் விழுகிறது ஆனால் அதனுள் அல்ல. அந்தத் தாம்பாளத்தின் வெளிப்புறம் விழுகிறது. தாம்பாளம் நிரம்புவதற்கு வழியே இல்லை.
42. A Leaky Basin Top
If we do evil and then try to plug the leak by doing good, it's like plugging a leak in the bottom of a pot and pouring water in. Or like plugging a leak in the bottom of a basin and pouring water in. The bottom of the pot, the bottom of the basin, isn't in good shape. Our abandoning of evil isn't yet in good shape. If you pour water in, it all still seeps out and the basin goes dry. Even if you pour water in all day, it still seeps out bit by bit, and eventually there's no water left. You don't gain the benefits from it that you wanted.
ஒழுகும் குடம்
தீமை செய்த பின் அந்தத் தீவினைப்பயனைத் தடுக்கப் புண்ணியம் செய்வது, ஒரு குடத்தின் அடியில் உள்ள விரிசலுக்கு ஒட்டுப் போடுவது போல. அந்தக் குடத்தின் அடிப்பகுதி நல்ல நிலையில் இல்லை. நாம் தீமையைக் கைவிடுவது இன்னமும் முழுமை பெற வில்லை. அந்தக் குடத்தில் தண்ணீர் ஊற்றினால், அந்த நீர் கசிந்து ஒழுகிக் குடம் காலியாகி விடும். நாள் முழுதும் அதில் நீரை ஊற்றினாலும், அது சிறிது சிறிதாக ஒழுகிக் கடைசியில் அந்தக் குடத்தில் தண்ணீர் இல்லாமல் போய்விடும். புண்ணியம் செய்தும் நீங்கள் எதிர்பார்த்த பலனைப் பெறமாட்டீர்கள்.
43. Water in a Jar Top
When no forms of evil are in our hearts, all our troubles disappear. A sense of coolness arises because we look after ourselves. The mind becomes virtuous. When it grows still, it becomes concentrated. When it's still, it starts to bloom into discernment. We know how to make the mind clear and bright. Whatever's evil, we let go. Whatever's wrong, we put aside. We contemplate and put things aside, let them go.
It's kind of like water in a jar. We take out a dipperful and then throw it away. Take out a second dipperful and throw it away — keep on taking out water and throwing it away. The water in the jar will eventually go dry. The mind that enters into the practice is like that.
But if we don't see things in this way, it's like adding water to the jar and then taking it out, adding water and then taking it out. Merit, evil, merit, evil; wrong, right, wrong, right; good, bad, good, bad: at ease for a moment, and then we suffer.
கூஜாவிலுள்ள நீர்
நமது உள்ளத்தில் எந்தவிதத் தீமையும் இல்லாதபோது, நமது துன்பங்களெல்லாம் மறைகின்றன. நம்மை நாமே கவனித்துக் கொண்டிருப்பதால் ஒரு குளுமையான உணர்வு தோன்றுகிறது. மனம் ஒழுக்கம் அடைகிறது. அது அமைதியாகும் போது ஒருமுகப்படுகிறது. அமைதியடையும் போது விவேகம் மலர்கிறது. மனத்தைத் தெளிவாக்கவும் பிரகாசிக்க வைக்கவும் நம்மால் முடிகிறது. எந்தத் தீமை தோன்றினாலும் அதை நாம் கைவிடுகிறோம். தவறானவற்றை ஒதுக்கி விடுகிறோம். நாம் பிரதிபலித்து ஒதுக்க வேண்டியவற்றை ஒதுக்கிக் கைவிடுகிறோம்.
இது ஒரு கூஜாவிலுள்ள தண்ணீரைப்போல. ஒரு கரண்டி தண்ணீரை எடுத்து வீசுகிறோம். பின் மற்றொரு கரண்டி தண்ணீரை எடுத்து வீசுகிறோம் - இப்படித் தண்ணீரை எடுத்து எடுத்து பலமுறை வீசுகிறோம். கூஜாவில் உள்ள தண்ணீர் இறுதியில் வற்றிப் போய்விடும். பயிற்சியில் ஈடுபடும் மனமும் அப்படித்தான்.
ஆனால் இவ்வாறு நாம் அறிந்து கொள்ளவில்லை யென்றால், அது கூஜாவில் நீரை ஊற்றிப் பின் அதிலிருந்து எடுப்பதுபோல. புண்ணியம், தீமை; புண்ணியம், தீமை; தவறானது, சரியானது; தவறானது, சரியானது; கெட்டது, நல்லது; கெட்டது, நல்லது: ஒரு கனம் அமைதி, மறு கனம் துக்கம்.
44. A Mold Top
You school teachers are a mold for forming people, so you should turn toward the direction of the Dhamma and practice the Dhamma. Behave yourselves in a way that can be an example for others. You're like a mold for making Buddha amulets. Have you ever seen one? Just a single mold: They carve it well, carving the face, the eyebrows, the chin so that they aren't crooked or missing anything, so that the Buddha amulets they stamp out of it will come out beautiful. And when they come out they really are beautiful because of that one good mold.
It's the same with school teachers, who are molds for their students and for people at large. You have to make yourselves beautiful in terms of the personal qualities of a good teacher. You always have to behave in line with your ethical discipline and the pattern of a leader and guide. Abandon all forms of intoxication and unskillful behavior. Try to restore high standards of morality. You have to be a good example to the children.
அச்சு
பள்ளி ஆசிரியர்கள் மனிதர்களை உருவாக்கும் அச்சுப் போல. எனவே நீங்கள் தம்ம திசை நோக்கித் தம்மத்தைப் பயில வேண்டும். மற்றவருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் புத்தர் உருவம் கொண்ட காப்புகளைச் செய்யும் அச்சுகளைப்போல. அவற்றை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? ஒரே அச்சு: நன்றாகச் செதுக்கப் பட்டது, முகம், கண் புருவங்கள், கன்னம் - அனத்தும் பிழையில்லாமலும் எதுவும் விடுபடாமலும் அமைந்துள்ளது. இவ்வாறு நன்றாகச் செதுக்கப்பட்ட அச்சில் புத்தர் உருவக் காப்புகளை பிரதி எடுத்தால் அவை அழகாக உருவாக்கப்படும். அந்தக் காப்புகள் எல்லாம் அழகாகத் தோன்றக் காரணம் முதலில் செய்யப் பட்ட அந்த ஒரு நல்ல அச்சுதான்.
ஆசியர்களும் அதேபோலத்தான். மாணவ மாணவியர்களையும், பொதுமக்களையும் உருவாக்கும் அச்சுகள் அவர்கள். ஒரு நல்ல ஆசிரியருக்கான நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு உங்களை நீங்களே அழகு படுத்திக் கொள்ள வேண்டும். ஒழுக்கத்துடனும், ஒரு தலைவர், தலைவிக்கான, வழிகாட்டுவோருக்கான பண்புகளைக் கொண்டவர்களாக நடந்து கொள்ள வேண்டும். எந்தவிதக் கெட்ட குடி, போதைப் பழக்கத்தையும், திறமையற்ற நடத்தையையும் கைவிட்டு விடுங்கள். மேன்மையான நன்நெறியைக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். குழந்தைகளுக்கு நல்ல உதாரணமாகத் திகழுங்கள்.
45. Vines Top
Children are like vines. Wherever a vine sprouts up, it has to look for a tree to climb up. If one tree is 15 centimeters away and another 10 meters away, which tree do you think the vine will climb up? It'll climb up the nearest tree. It's probably not going to climb up the tree 10 meters away because that one is too far off.
In the same way, school teachers are the people closest to their students. They're the people who children are most likely to take as examples. So it's essential that you school teachers have good manners and standards of behavior — in terms of what you should do and should abandon — for children to see. Don't teach them just with your mouths. The way you stand, the way you walk, the way you sit — your every movement, your every word — you have to make into a teaching for the children. They'll follow your example because children are quick to pick things up. They're quicker than adults.
கொடிகள்
குழந்தைகள் கொடிகளைப்போல. ஒரு கொடி துளிர்விடும் போது அது பற்றியேற ஒரு மரத்தைத் தேடுகிறது. ஒரு மரம் 15 சென்டிமீட்டர் தூரத்திலும், மற்றொன்று 10 மீட்டர் தூரத்திலும் இருக்குமானால் அந்தக் கொடி எந்த மரத்தைப் பற்ற முயலும் என்று நினைக்கின்றீர்கள்? அது அருகிலுள்ள மரத்தைத்தான் பற்றி ஏறும். 10 மீட்டர் தூரத்தில் உள்ள மரம் வெகு தொலைவில் இருப்பதால் அதைப் பற்றப் போவதில்லை.
அதுபோலவே, பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு அருகில் உள்ளவர்கள். அவர்களைத்தான் குழந்தைகள் ஒரு உதாரணமாகக் கருதப் போகின்றனர். எனவே ஆசிரியர்களான நீங்கள் நற்குணமும் நன்னடத்தையும் கொண்டிருப்பது அவசியம் - எதைச் செய்ய வேண்டும், எதைக் கைவிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் உங்களைக் கண்டு கற்கின்றனர். வாயால் மட்டும் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டாம். நீங்கள் நிற்பது, நடப்பது, உட்காருவது - உங்கள் ஒவ்வொரு நடவடிக்கையும், உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் - குழந்தைகளுக்கு ஒரு கற்பிக்கும் பாடமாக இருக்க வேண்டும். உங்கள் உதாரணத்தை அவர்கள் கற்றுக் கொள்வார்கள், ஏனென்றால் குழந்தைகள் மிக எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியவர்கள். பெரியவர்களைவிட வேகமாக கற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அவர்கள்.
46. A Cup of Dirty Water Top
Lots of people come here with a high position in society and views about things: about themselves, about the practice of meditation, about the Buddha's teachings. Some of them are wealthy merchants, some have degrees, some are teachers or government officials. Their brains are full of views about all kinds of things. They're too clever to listen to other people. It's like water in a cup. If the cup is full of dirty water, it can't be used for anything. Only when you pour out the water can the cup be put to use. You have to empty your mind of views before you can learn.
Our practice steps beyond both cleverness and stupidity. If you think, "I'm smart. I'm rich. I'm important. I understand all the Buddha's teachings clearly," you'll never see the truth of anatta, or not-self. You'll have nothing but self — me and mine. But the Buddha's teachings are the abandoning of self. Emptiness. Freedom from suffering. Total disbanding. That's nibbana.
ஒரு செம்பு அழுக்கு நீர்
சமூகத்தில் மேன்மையான அந்தஸ்து கொண்டவர்கள் பலரும் இங்கு வருகின்றனர். தங்களைப் பற்றி, தியானப் பயிற்சியைப் பற்றி, புத்தரின் போதனைகளைப் பற்றிப் பல கருத்துடையவர்கள் இங்கு வருகின்றனர். சிலர் மிகுந்த செல்வம் படைத்த வியாபாரிகள். சிலர் பல பட்டங்கள் பெற்ற படித்தவர்கள். சிலர் ஆசிரியர்கள் அல்லது அரசாங்க அதிகாரிகள். அவர்கள் பல செய்திகளைப் பற்றிப் பல கருத்துக்கள் கொண்ட கூர்த்த மதி படைத்தவர்கள். அவர்கள் அதிபுத்திசாலி களென்பதால் மற்றவர்கள் பேசுவதைக் கேட்க விரும்புவதில்லை. இது ஒரு செம்பில் நீர் இருப்பதைப்போல. அழுக்கு நீரால் அச்செம்பு நிரம்பியிருந்தால் அதை எதற்கும் பயன் படுத்த முடியாது. அந்த அழுக்கு நீரைக் கீழே கொட்டிய பின்னரே அந்தச் செம்பை மீண்டும் பயன்படுத்த முடியும். அதுபோலவே மனத்தில் உள்ள கருத்துக்களை வெளியேற்றிய பின்தான் புதிய கருத்துக்களைக் கற்க முடியும்.
நமது பயிற்சி புத்திசாலித்தனத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் அப்பால் செல்கிறது. நீங்கள், "நான் புத்திசாலி, நான் பணக்காரன், நான் முக்கியமானவன், புத்தரின் போதனைகளைத் தெளிவாக அறிந்தவன்." என்று நினைத்தால் ‘அணத்த’ அல்லது ‘தான்-இன்மை’ என்ற உண்மையைக் காணவே முடியாது. ஏனென்றால் 'தான்' - நான், எனது – என்ற எண்ணங்கள் நிரம்பி இருக்கையில் ‘தான்-இன்மைக்கு’ இடமே இல்லை. ஆனால் புத்தரின் போதனை 'தான்' என்ற கருத்தைக் கைவிடுவது பற்றியதாகும். வெறுமை, துக்கத்திலிருந்து விடுதலை, முழுமையான கைவிடல். அதுவே நிப்பாணம்.
47. Picking Mangoes Top
If a mango is five meters off the ground and we want it, we can't use a ten-meter picking pole to pick it, because it's too long. We can't use a two-meter picking pole either, because it's too short.
Don't go thinking that a person with a PhD. has an easy time practicing the Dhamma because he knows so much. Don't go thinking that way. Sometimes people with a PhD. are too long.
மாம்பழம் பறிப்பது
ஒரு மாமரத்தில் ஐந்து மீட்டர் உயரத்தில் உள்ள மாம்பழத்தைப் பறிக்க 10 மீட்டர் உயரம் கொண்ட கம்பைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் கம்பு மிகவும் நீளமானது. மாறாக இரண்டு மீட்டர் உயரமுள்ள கம்பும் சரிவராது. ஏனென்றால் அது மிகவும் சிறியது.
முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் நிறையக் கருத்துக்கள் தெரிந்திருப்பதால் தம்மத்தை அவரால் எளிதாகப் பயில முடியும் என்று எண்ணிவிட வேண்டாம். அப்படி நினைக்க வேண்டாம். சில நேரங்களில், முனைவர் பட்டம் பெற்றவர்கள் மிகவும் நெடியவர்கள்.
48. Your Inner Tape Recorder Top
The teachings, I've given you today: If listening to this Dhamma has made your mind empty and still, that's good enough. You don't have to memorize anything. Some of you may not believe this. If you make your mind still and then allow whatever you hear to pass by, pass by, but you keep on contemplating, you're like a tape recorder. Whenever it's open like this, turned on like this, it's all right here. Don't be afraid that there won't be anything. Every time you open your recorder, turn on your recorder, everything's right there.
External recorders can run down. After you've bought them, they can run down. But your inner recorder, when things go straight to the heart: Oh, it's really good. It's there all the time, and it doesn't use up your batteries.
உள்ளம் என்ற பதிவுக் கருவி
இன்று உங்களுக்கு நான் போதித்தது: இந்தத் தம்மத்தைக் கேட்டதனால் உங்கள் மனம் வெறுமையோடும் (தேவையற்ற எதையெதையோ நினைத்துக் கொண்டிராமல்) அமைதியாகவும் ஆகியிருந்தால், அதுவே போதும். எதையும் மனனம் செய்திருக்கத் தேவையில்லை. உங்களுள் சிலர் இதை நம்பத் தயாராக இருக்க மாட்டீர்கள். உங்கள் மனத்தை அமைதியாக்கிப் பின் தோன்றுவன அனைத்தையும் போக விட்டு விட்டு, பிரதிபலித்துக் கொண்டே இருந்தால் நீங்கள் பதிவுக் கருவி போல எனலாம். இவ்வாறு திறந்திருந்து, பதிவாக்கிக் கொண்டிருக்கையில் (பிரதிபலித்துக் கொண்டிருக்கையில்) எல்லாம் உள்ளடங்கியிருக்கும். எதுமே இருக்காது என்று அச்சப்பட வேண்டாம். எப்போதெல்லாம் உங்கள் பதிவுக்கருவி திறந்திருந்து, பதிவாக்கிக் கொண்டிருக்கிறதோ அவை அனைத்தும் அங்கேயே நிலைத்து இருக்கும்.
புறப்பதிவுக் கருவிகள் பழுதாகிப் போய் விடலாம். வாங்கியபின் அவை வேலை செய்யாமல் போய் விடலாம். ஆனால் உங்கள் அகத்திலுள்ள பதிவுக் கருவி, நேரடியாக உள்ளதுக்குப் போகும் போது: ஆ, உண்மையிலேயே அருமை. எப்போதும் அங்கேயே நிரந்தரமாக இருக்கும். மேலும் அதற்குப் பேட்டரிக்களும் தேவையில்லை.
49. Balloons Top
In the Buddha's time, there were those who broke through to the highest level of Dhamma while sitting and listening to the Dhamma. They were fast. Like a balloon: The air in the balloon has the force to push itself out. As soon as you prick it just a little bit with a needle, it all comes gushing out at once.
It's the same here. When you hear Dhamma in line with your propensities, it turns your views upside down, from this to that, and you can break through to the genuine Dhamma.
பலூன்கள்
புத்தரின் காலத்தில், தம்மத்தை அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும்போதே தம்மத்தின் மேன்மையான நிலைகளையும் துளைத்துச் சென்ற மேதைகள் இருந்தனர். அவர்கள் மிக வேகமானவர்கள். ஒரு பலூனைப்போல: பலூனில் உள்ள காற்றுக்குத் தானாக உந்தித் தள்ளிக் கொண்டு வெளியே வரும் சக்தி உள்ளது. ஒரு ஊசியைக் கொண்டு ஒரு சிறு துளை செய்தாலும், அடைபட்ட காற்று அனைத்தும் மிகவேகமாக வெளியேறி விடும்.
இங்கும் அது போலவே. தம்மத்தின் பால் மனம் சார்ந்திருக்கும் போது, தம்மத்தைக் கேட்டால், உங்கள் கருத்துக்களை இதிலிருந்து அதுவாகத் தலைகீழாக மாற்றி விடுகிறது. பின்னர் உண்மையான தம்மத்தைக் காண அதுவே வழி அமைக்கிறது.
50. No Match for an Ox Top
An ox that's been pulling a loaded wagon a long way — the closer the sun lowers to the horizon and evening comes on, the faster it walks, because it wants to reach its destination quickly. It misses its home.
We human beings, the older we get, the sicker we get, the closer we are to dying: That's the time when you have to practice. You can't make old age and illness an excuse not to practice, or else you'll just be worse than an ox.
ஒரு காளைக்கு நிகரில்லை
சுமை ஏற்றப்பட்ட வண்டியை நீண்ட தூரம் இழுத்துச் சென்றுள்ள காளை - மாலைப் பொழுதில் கதிரவன் மறைய மறைய மேலும் வேகமாக நடக்கும். ஏனென்றால் அது செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவில் போய்ச் சேர வேண்டுமென்பதே அதன் விருப்பம். தன் இருப்பிடம் சேர வேன்டும் என்ற துடிப்பு அதற்கு.
மனிதராகிய நாம், வயதாக, நோய்வாய்ப்பட, மரணத்தை நெருங்க: நன்கு பயிற்சி செய்ய வேண்டிய காலம் அது. வயோதிகத்தையும், நோயையும் காரணம் காட்டிப் பயிற்சி செய்வதைத் தவிர்க்கக் கூடாது. தவிர்க்க நினைத்தால் நீங்கள் அந்தக் காளையை விட மட்டமானவராகி விடுவீர்கள்.
51. The Heart Its Own Teacher Top
Each of us here is the same. We're no different from one another. We have no teacher at present - for if you're going to awaken to the Dhamma, the heart has to teach itself. If it doesn't teach itself, then no matter how much you have other people teach you, it won't listen, it won't understand. The heart itself has to be the teacher.
It's not easy for us to see ourselves. It's hard. So think about this a little bit. We've all done evil. Now that we're old, we should stop. Make it lighter. Make it less. There's really nothing else. This is all there is. Turn your minds in the direction of virtue.
உள்ளமே ஒரு ஆசான்
இங்குள்ள அனைவருமே ஒரே மாதிரி தான். நாம் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்கள் அல்ல. இப்போது நமக்கு எந்த ஆசிரியரும் இல்லை - ஏனென்றால் தம்மத்துக்கு விழிப்புற வேண்டு மென்றால், உள்ளம் தனக்குத்தானே கற்பித்துக் கொள்ள வேண்டும். அப்படித் தனக்குத்தானே கற்பிக்க வில்லையென்றால், மற்றவர் எவ்வளவுதான் உங்களுக்குப் போதித்தாலும், அது கேட்கப் போவதில்லை, அது புரிந்து கொள்ளப் போவதில்லை. உள்ளம் தனக்கே ஆசானாக வேண்டும்.
நம்மை நாமே கவனிப்பது எளிதல்ல. அது கடினம். எனவே இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நாம் அனைவருமே தீமை செய்துள்ளோம். இப்போது, வயதான பிறகாவது, தீமை செய்வதை நிறுத்த வேண்டும். அதை இலேசாக்குங்கள். குறையுங்கள். வேறு எதுவும் இல்லை. இவ்வளவே. உங்கள் மனங்களை நற்பண்புகளின் திசையில் திருப்புங்கள்.
52. Water and Oil Top
Water is different from oil, just as smart people are different from stupid people. The Buddha lived with sights, sounds, smells, tastes, tactile sensations, and ideas, but he was an arahant, so he saw these things as "just that," that's all. He kept on letting go, ever since he saw that the heart was just that — the heart, that's all; thoughts were just that — thoughts, that's all. He didn't mix them together.
If you can think in this way, if you can feel in this way, you can keep these things separate. Thoughts and feelings are on one side, the heart is on another side, just as water and oil in the same bottle stay separate.
நீரும் எண்ணையும்
தண்ணீர் எண்ணையிலிருந்து வேறுபட்டது, புத்திசாலிகளும், முட்டாள்களும் வேறுபடுவது போல. புத்தரும் காட்சிகள், சப்தங்கள், நுகர்வுகள், சுவைகள், பரிசங்கள் மற்றும் எண்ணங்களோடு வாழ்ந்தார், ஆனால் அவர் ஒரு ஞானி (அருகர்/அரஹந்தர்) என்பதால் இவற்றை எல்லாம் "உள்ளது உள்ளபடி" கண்டார். அவ்வளவுதான். உள்ளம், உள்ளம் மட்டுமே என்பதை அவர் அறிந்தததிலிருந்து அவர் தொடர்ந்து கைவிட்டார் (இவற்றுக்கான பற்றினை); எண்ணங்கள் எண்ணங்கள் மட்டுமே, வேறு ஒன்றும் இல்லை. புத்தர் இவற்றை ஒன்றோடொன்று கலந்து விடவில்லை.
இவ்வாறு நினைக்கக் கற்றுக் கொண்டீர்களென்றால், இவ்வாறு உணரக் கற்றுக் கொண்டீர்களென்றால், இவற்றைப் பிரித்தே வைத்திருக்கலாம். எண்ணங்களும் உணர்ச்சிகளும் ஒருபக்கம், உள்ளம் மறு பக்கம். எண்ணெயும், தண்ணீரும் ஒரு பாட்டிலில் இருக்கும் போதே பிரிந்து இருப்பதைப்போல.
53. Supposed Monks, Genuine Monks Top
Once you've been ordained in the Buddha's teachings, you've been supposed into being a monk. But you're not yet a genuine monk, you know. You're a monk as far as your body: the shaved head, the yellow robes. You're a monk on the level of supposition.
It's the same as when they carve wood, sculpt cement, or mold bronze to be a Buddha on the level of supposition. It's not the genuine Buddha.
Those who are still monks just on the level of supposition — in other words, they still have greed, anger, and delusion in their hearts: These things keep us fenced into states of becoming and birth. The reason we can't reach peace is because of greed, anger, and delusion. If you take the greed, anger, and delusion out of your heart, you'll reach purity. You'll reach genuine monk-ness — which means being a monk in your heart.
வழக்கப்படியான துறவிகளும், முழுமையான துறவிகளும்
புத்தரின் போதனைகளைக் கற்றதால் துறவறம் பூண்டால் நீங்கள் ஒரு வழக்கப்படியான துறவி. ஆனால் இன்னமும் நீங்கள் முழுமையான துறவியாகவில்லை. தெரியுமா உங்களுக்கு? உடலைப் பொருத்தவரை நீங்கள் ஒரு துறவி: மழித்த தலை, மஞ்சல் நிற ஆடைகள். உலக வழக்கப்படி நீங்கள் ஒரு துறவி.
ஒரு மரத்தைச் செதுக்குவதும், சிமெண்ட் கலவையை ஒரு உருவமாக மாற்றுவதும், ஒரு வெண்கலப் புத்தர் சிலையைப் பிரதி எடுப்பதும் இது போன்றதே. அவை உண்மையான புத்தர் இல்லை.
வழக்கப்படி மட்டுமே துறவிகளாகத் தொடர்ந்து இருப்போர் - அதாவது அவர்கள் உள்ளத்தில் இன்னமும் பேராசையும், வெறுப்பும், அறியாமையும் இருக்கும் போது: இவை எல்லாம் நம்மைப் பவம் எடுக்கவும், பிறப்பெடுக்கவும் வைக்கின்றன. நாம் அமைதியை எட்ட முடியாமைக்குக் காரணம் பேராசையும், வெறுப்பும், அறியாமையும் தான். பேராசையையும், வெறுப்பையும், அறியாமையையும் உங்கள் உள்ளத்திலிருந்து வெளியேற்றினால் நீங்கள் தூய்மையாகி விடலாம். பின்னர் நீங்கள் முழுமையான துறவியாகி விடுவீர்கள் - அதாவது உங்கள் உள்ளத்தாலும் நீங்கள் ஒரு துறவியாகி விடுவீர்கள்.
54. Making Tables and Chairs Top
It's good to make the mind pure and at peace, but it's hard. You have to start with the externals — your bodily actions and words - and work your way in. The path that leads to purity, to being a contemplative, is a path that can wash away greed, anger, and delusion. You have to exercise restraint and self-control, which is why it's hard — but so what if it's hard?
It's like taking wood to make a table or make a chair. It's hard, but so what if it's hard? The wood has to go through that process. Before it can become a table or a chair, we have to go through the coarse and heavy stages.
It's the same with us. We have to become skillful where we aren't yet skillful, admirable where we aren't yet admirable, competent where we aren't yet competent.
மேஜைகளையும் நாற்காலிகளையும் உருவாக்குவது
மனத்தைத் தூய்மையாக்குவதும், அமைதியாக்குவதும் நல்லது. ஆனால் அது கடினமான காரியம். புறத்திலிருந்து துவங்கி - உடல் செய்கைகளிலிருந்தும் வார்த்தை களிலிருந்தும் - அகம் நோக்கிச் செல்ல வேண்டும். தூய்மைக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம், ஒரு தியானியாகும் மார்க்கம். அப்படிப்பட்ட மார்க்கம் பேராசையையும், வெறுப்பையும், அறியாமையையும் விலக்கி விடும் மார்க்கமாகும். அதற்குக் கட்டுப்பாடும் தன்னடக்கமும் தேவை. அதனால் தான் இது கடினமான காரியம் – ஆனால் அது கடினமாக இருந்தால் தான் என்ன?
இது ஒரு மேஜையோ நாற்காலியோ செய்வதற்கு மரப்பலகையை எடுத்துச் செல்வது போல. இது கஷ்டமான காரியம் - ஆனால் கஷ்டமாக இருந்தால் என்ன? மரம் செதுக்க வேண்டிய வகையில் செதுக்கப்பட வேண்டும். அந்த மரம் மேஜையாகவோ நாற்காலியாகவோ ஆவதற்கு முன், கடினமான வேலையைச் செய்தாக வேண்டுமல்லவா?
நாமும் அது போலத்தான். திறமைசாலி களாவதற்கு முன் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், போற்றத் தக்கவராவதற்கு முன் போற்றுவதற்கான பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், தகுதியானவராவதற்கு முன் அந்தத் தகுதிகளைப் பெறுவதற்கான காரணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.