தம்மிக சூத்திரம் Dhammika Sutta

சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home

Sn 2.14

தம்மிக சூத்திரம் - தம்மிகருக்கு - செவிமடுத்துக் கேட்பவர் நடத்தை

Dhammika Sutta - To Dhammika: the Pure Hearkeners’ Conduct

Translated from the Pali by: Laurence Khantipalo Mills

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: லாரண்ஸ் காந்திபாலோ மில்ஸ்

* * *

இவ்வாறு நான் கேள்வியுற்றேன்.

ஒரு சமயம் புத்தபகவான் சாவத்தியிலுள்ள ஜேதவனத்தில், அநாத பிண்டிகர் ஆசிரமத்தில் எழுந்தருளியிருந்தார். அங்கு வந்த உபாசகர் தம்மிகரும், ஐநூறு உபாசகர்களும் பகவரை வணங்கி ஒருபுறமாக அமர்ந்தனர். பின் உபாசகர் தம்மிகர் பகவரிடம் பா வடிவில் இவ்வாறு கேட்டார்.

Thus have I heard:

At one time the Lord dwelt at Sāvatthī, in the Jeta Grove, Anāthapiṇḍika’s Park. There the upāsaka Dhammika accompanied by five hundred upasakas went up to the Radiant One and sat to one side. Having done so and saluted the Radiant One, the upasaka Dhammika addressed him with verses.

Dhammika

I ask of Gotama—one profoundly wise:

Behaving in which way a hearkener is good—

whether from home to homelessness gone

or upasakas living the householder’s life.

தம்மிகர்:

மேன்மையான மெய்ஞ்ஞானம் கொண்ட கோதமரைக் கேட்கிறேன்:

எந்த வழியில் நடந்து கொள்வது செவிமடுத்துக் கேட்பவருக்கு (சீடருக்கு) நல்லது

இல்லறத்தைத் துறந்து துறவியாவதா?

அல்லது இல்லறவாழ்வு வாழ்ந்து உபாசகராக இருப்பதா?

The birthplaces of this world together with devas

and final Release, you clearly understand,

none compare with you in seeing this profundity

for, as they say, you are Buddha supreme.

இந்த உலகத்தில் தோன்றியவர்களையும், தேவர்களையும்,

இறுதி வீடுபேற்றையும் நீங்கள் தெளிவாக அறிவீர்கள்.

இந்த ஆழமான அறிவை வேறு எவரோடும் ஒப்பிட முடியாது,

ஏனென்றால், அவர்கள் சொல்வது போல நீங்கள் மேன்மையான புத்தர்.

All knowledge is yours, you have perfectly revealed

Dharma, out of your compassion for beings all,

remover of the veil, one with the All-round Eye

and stainless do you illuminate the world.

எல்லா அறிவையும் எட்டியவர் நீங்கள், உயிர்கள் மேல் உள்ள கருணையின் காரணமாக

அறத்தைத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்,

(அறியாமையின்) திரையை விளக்கியவர் நீங்கள், அனைத்தையும் காணும் கண் உடையவர், [1]

தூய்மையான நீங்கள் உலகுக்கு ஒளியேற்றியுள்ளீர்கள்.

Then came to your presence a nāga renowned,

Erāvaṇa by name, having heard you were a conqueror,

he had secluded talk with you and then attained—

“Sādhu” he exclaimed, and departed, pleased.

பின் நீங்கள் வெற்றிபெற்றவர் என்று கேள்விப் பட்டு

இராவணன் என்ற பெயர் கொண்ட நாகர் வந்தார்,

உங்களிடம் தனிமையில் பேசியபின் மிக மகிழ்ந்து

"அருமையிலும் அருமை!" என்று பாராட்டிவிட்டுத் திருப்தியுடன் புறப்பட்டார்.

Then were there kings, Vessavaṇa, Kuvera,

who came to ask questions on Dharma from you,

so you, O Wise One, being asked then replied,

and they being pleased departed from there.

பின் வேஸாவன, குவேரா போன்ற

மன்னர்களும் உங்களிடம் அறம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்க வந்தனர்.

ஓ ஞானியே, நீங்கள் கேட்கப் பட்ட வினாக்களுக்கு உரிய பதிலளித்தீர்.

அதைச் செவிமடுத்து அவர்களும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.

These theorist sectarians used to dispute—

Ājīvakas and Nigaṇṭhas, all of that kind—

unable in wisdom they go not beyond you,

as a man standing still passes not one running swiftly.

இந்தச் சித்தாந்தம் பேசும் சமயவாதிகள்

ஆஜிவகர்களும், நிகந்தகர்களும் உங்களோடு வாதிட்டும்

ஞானத்தில் உங்களை வெல்ல முடியவில்லை,

நின்று கொண்டிருப்பவர் வேகமாக ஓடுபவரை மீற முடியாதது போல.

Then there are Brahmins who’re used to dispute—

even old Brahmins are found among them;

or other disputants proud of themselves:

all, for the meaning, depend on you.

பின் பிராமணர்களும் உங்களோடு வாதிட்டனர் -

சில அறிஞர்களும் அவர்கள் மத்தியில் இருந்தனர்;

மற்றவர்கள் தற்பெருமை கொண்டு விவாதஞ் செய்வோர்:

அவர்களும் விளக்கம் கேட்க உங்களையே நாடினர்.

This Dharma indeed is blissful, profound,

by you well-proclaimed, O Radiant One,

so wishing to listen are all of us here,

now when we asked, speak to us, Buddha the best.

இந்த அறம் பேரின்பமூட்டுவது, ஆழமானது,

உங்களால் நன்கு போதிக்கப்பட்டது.

ஓ! பிராகாசமானவரே, நாங்கள் கேட்கக் காத்துக் கொண்டிருக்கின்றோம்,

எங்கள் வினாக்களுக்குப் பதில் கூறுங்கள், சிறந்த புத்தரே.

So let all these bhikkhus well-seated here,

upāsakas too, who likewise wish to listen,

listen to the dharma by the stainless won,

as devas to Vāsava’s well-spoken words. [2]

இங்கு அமர்ந்திருக்கும் பிக்குகளும்,

கேட்க விரும்பும் உபாசகர்களும்,

கறைபடியாத உங்கள் வார்த்தைகளால் அறத்தைக் கேட்கட்டும், தேவர்கள்

வாசவரின் நன்கு மொழியப்பட்ட வார்த்தைகளைக் கேட்டது போல. [2]

Buddha

Listen, O bhikkhus, I give you chance to hear—

to the Dharma that’s strict—all of you remember it,

let the intelligent seeing the benefit

practise the deportment of one who’s left home.

புத்தர்

கேளுங்கள் பிக்குகளே! பிக்குகளுக்கான நடத்தையைப் பற்றிக் கூறுகிறேன் -

திட்டவட்டமான அறத்தைக் கேளுங்கள் - நினைவில் வைத்திருந்து அறிவுடையோர்

அதன் பலனை அறிந்து துறவு பூண்டவருக்கான

சுபாவத்துடன் அதன் படி ஒழுகுங்கள்.

A bhikkhu in the times proscribed should wander not

but seek for alms timely going round a town;

who goes at times proscribed, temptations do tempt,

so the awakened go not within the wrong time.

ஒரு பிக்கு தடைசெய்யப்பட்ட நேரங்களில் உணவுக்காக அலைந்து கொண்டிருக்கக் கூடாது

சரியான நேரங்களிலேயே யாசிக்க (உணவு பிச்சை கேட்க) நகர்வழி செல்ல வேண்டும்;

தவிர்க்க வேண்டிய நேரத்தில் சென்றால் தவறு செய்யத் தூண்டப் படலாம்.

எனவே விழிப்புற்றோர் தவறான நேரங்களில் செல்வதில்லை.

Sights with sounds and tastes, smells and touches too—

all these with which beings are completely drunk,

for all of these dharmas let go desire,

and at the right time walk for the morning meal.

காட்சிகளும், ஒலிகளும், சுவைகளும், நுகர்வுகளும், ஸ்பரிசங்களும் கூட-

இவை மனிதருக்குப் போதை தருவன,

இந்தப் பற்றுகளை விட்டபின்

சரியான நேரத்தில் காலை உணவு கேட்கச் செல்ல வேண்டும்.

A bhikkhu with timely almsfood gained

returns by himself, then seated alone,

contemplative within, not distracted without,

not externalizing, since oneself’s restrained.

சரியான நேரத்தில் உணவு பெற்ற பிக்கு

தானாகத் திரும்பி வந்து, தனியாக அமர்ந்து,

மனத்தில் பிரதிபலித்தவாறு, அமைதியுடன்

புறப்பொருட்களால் கவனம் திசை திரும்பாதவாறு உணவு உண்ண வேண்டும்.

Should he with other hearkeners converse,

with bhikkhus, or anyone else at all,

of the Dharma let him speak refined,

not utter slander or another’s blame.

மற்ற செவிகொடுத்துக் கேட்பவருடன் (பௌத்த சீடருடன்) பேச நேர்ந்தால்,

அது மற்ற பிக்குகளாகவோ வேறு யாராக இருப்பினும்,

உன்னதமான அறத்தைப் பற்றியே பேசவேண்டும்,

பிறரை இகழவோ, குறை கூறவோ கூடாது.

Some, disputatious, offer warfare with words,

but we do not praise them, those of little wit,

bound by attachment to talking this and that,

so certainly they send their minds far away.

சிலர் சர்ச்சையைத் தோற்று வித்து வார்த்தைப் போர் நடத்துவார்கள்,

ஆனால் நாம் அதைப் போற்றுவதில்லை. அறிவிலிகள் இப்படிப்பட்ட பேச்சுக்களோடு

பற்றுக் கொள்வதால் அதனால் உண்டாகும்

மனவெழுச்சி அவர்களை இழுத்துக் கொண்டு செல்கிறது.

The truly wise disciple having listened to the Dharma

pointed out by the Well-farer, should carefully use

food-offerings, a sitting and a sleeping place,

with water for washing the principal robes.

உண்மையான மெய்ஞ்ஞானம் உள்ள சீடர்

பகவரால் போதிக்கப்பட்ட அறத்தைக் கேட்ட பின்:

கொடுக்கப்பட்ட உணவையும், உட்காரும் இடத்தையும், உறங்கும் இடத்தையும்,

நீரையும் அக்கறையுடன் பயன்படுத்த வேண்டும். ஆடைகளையும் கவனமாகத் துவைக்க வேண்டும்.

Let a bhikkhu, therefore, with almsfood and hut

for sitting and sleeping, for his robes washing,

be unsullied, quite unattached,

as water-drop spreads not upon a lotus-leaf.

எனவே ஒரு பிக்கு யாசித்த உணவுடனும்,

உட்காரவும்,படுக்கவும் உள்ள குடிலுடனும்,

ஆடைகளைத் துவைக்கும் நீரோடும்

தாமரை இலைமீது நீர்த்துளி ஒட்டாதது போல கறைபடியாமலும்,

அவற்றின் மேல் பற்றுக் கொள்ளாமலும், இருக்க வேண்டும்.

Now I shall tell you the household’s rule,

by practising which one’s a good hearkener,

for by one with possessions it cannot be got—

that dharma complete by a bhikkhu attained.

நான் இப்போது இல்லற மக்களுக்கான விதிமுறைகளைக் கூறுகிறேன்,

இதன் படி ஒழுகினால் அவர்கள் ஒழுக்கமானவராவார்கள்.

ஏனென்றால் பொருட்செல்வம் உள்ள ஒருவர்

ஒரு பிக்கு பயிலும் பயிற்சியை மேற்கொள்ள முடியாது.

Kill not any beings nor cause them to be killed,

and do not approve of them having been killed,

put by the rod for all that lives—

whether they are weak, or strong in the world.

உயிர்களைக் கொல்லாதீர்கள். அவற்றை கொல்வதற்குக் காரணமாகவும் இருக்காதீர்கள்,

உயிர்க்கொலை செய்வதைப் போற்றாதீர்கள்,

எந்த உயிரையும் - அது பலவீனமாக இருப்பினும்

அல்லது பலமுள்ளதாக இருப்பினும் - துன்புறுத்தாதீர்கள்.

What is “ungiven”—anything, anywhere,

that’s known to be others’, its theft one should avoid.

Neither order things taken,

nor others’ removal approve—

all of this “ungiven” let the hearkener avoid.

மற்றவருடையது என்று தெரிந்த பின் - எதுவானாலும், எங்கும் -

கொடுக்கப் படாதவற்றைத் திருடாதீர்கள்.

அப்படித் திருடவும் மற்றவரைத் தூண்டாதீர்கள்,

திருடுதலைப் போற்றாதீர்கள் - இந்தக் கொடுக்கப் படாதவை எதனையும்

'செவிகொடுத்துக் கேட்பவர்' (நற்சீடர்கள்) விட்டு விலக வேண்டும்.

Let the intelligent person live a celibate life,

as one would avoid a pit of glowing coals;

but being unable to live the celibate life,

go not beyond the bounds with others’ partners.

எரியும் நிலக்கரித் துண்டுகள் கொண்ட குழியைத் தவிர்ப்பது போல,

அறிவுள்ளவர் பிரமச்சரிய வாழ்வு வாழட்டும்;

அப்படிப் பிரமச்சரிய வாழ்வை மேற்கொள்ள முடியா விட்டால்

மற்றவர் துணையோடு எல்லை தாண்டி தவறான பாலியல் உறவுகள் கொள்ள வேண்டாம்.

In government assembly, or artisans’ guild,

or one to another, speak not what is false,

not others compel, nor approve of their lies,

all kinds of untruthfulness you should avoid.

ஒரு அரச சபையிலும், தொழிலாளர்கள் சங்கத்திலும் அல்லது

ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் போதும், பொய் பேச வேண்டாம்,

மற்றவரைப் பொய் பேச வற்புறுத்தவும் வேண்டாம்,

அப்படி அவர்கள் பொய் பேசினால் அதனைப் போற்றவும் வேண்டாம்,

எல்லாவிதப் பொய்களையும் தவிர்க்க வேண்டும்.

Whatever householder this Dharma approves,

in maddening drink should never indulge,

nor make others drink, nor approve if they do,

knowing it leads to a mind that’s disturbed.

இந்த அறத்தைப் பயில்கின்ற இல்லறத்தார்

ஒருபோதும் போதை தரும் பானங்களை அருந்த வேண்டாம்.

மற்றவரை மது அருந்தக் கட்டாயப் படுத்த வேண்டாம், அருந்தியவரைப் போற்ற வேண்டாம்.

ஏனென்றால் போதை மனத்தைக் குழப்பிவிடும்.

Fools do many evils because they are drunk,

while causing other people to be negligent.

This basis of demerit should be avoided,

but fools are delighted, confused with mind upset.

மது அருந்தியமையால் முட்டாள்கள் பல தீமைகளைச் செய்கின்றனர்,

விவேகமற்று மற்றவரையும் அக்கறையின்றிச் செயல்படச் செய்கின்றனர்.

எனவே இல்லறத்தார் மனத்தைக் கெடுக்கும் இத்தகாத செய்கையைத் தவிர்க்க வேண்டும்,

ஆனால் குழம்பிய மனத்தையும் பொருட்படுத்தாமல் முட்டாள்கள் குதூகலமடைகின்றனர்.

Kill not any being, what’s not given do not take,

neither be a liar nor addicted to drink,

and, let go of sex and the non-celibate life,

in the “wrong-time” for food, eat not in the night.

உயிர் கொலை செய்யாதே, கொடுக்காததை எடுக்காதே,

பொய் பேசாதே, போதைக்கு அடிமையாகாதே,

பாலியல் உறவைத் தவிர்த்து பிரமச்சரிய வாழ்வை மேற்கொள்,

தவறான நேரத்தில் உணவு யாசிக்கச் செல்லாதே, இரவில் உண்ணாதே.

Neither necklaces display nor perfumes employ,

use the ground as a bed or sleep upon a mat:

these are the uposatha eight-factored vows

made known by the Buddha gone to dukkha’s end.

ஆபரணங்களை அணியாதே, நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தாதே,

தரையைப் படுக்கையாக்கு அல்லது ஒரு பாயில் படு:

இதுவே உபோசத தினங்களில் எடுக்கும் எட்டு நேர்த்திக்கடன்கள் [3]

இவை துக்க முடிவுக்குச் சென்ற புத்தர் போதித்த அறிவுரை.

With devotion at heart the uposathas kept,

completely perfected in its eight parts,

on the fourteenth, the fifteenth, and the eighth days,

as well the days special in the moon’s half months.

உள்ளத்தில் பக்தியுடன் அந்த உபோசதர்கள்

பதினான்காம், பதினைந்தாம், எட்டாம் நாட்களிலும், மற்றும்

நிலவின் அரை மாதச் சிறப்பு நாட்களிலும் [4]

இந்த எட்டு ஒழுக்கங்களை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

Let that one intelligent with devoted heart,

having kept uposatha, early next morning,

distribute food and drink—whatever’s suitable—

to the bhikkhusaṅgha, rejoicing in this act.

பக்தியுள்ளம் கொண்ட உபோசதம் கடைபிடித்த அந்த அறிவாளி,

மறுநாள் அதிகாலை,

- அவர்களால் முடிந்த - உணவையும் பானங்களையும்

பிக்கு சங்கத்திற்கு வழங்கி அச்செயலால் ஆனந்தப் படட்டும்.

Support mother and father according to Dharma,

do business as merchant to honesty adhering,

diligently practising this householder’s rule—

then to the self-radiant devas one will arrive.

அறம்கூறும் வழியில் தாயையும் தந்தையையும் தாங்கி நிற்க வேண்டும்,

வணிகர்கள் தங்கள் தொழிலை நேர்மையோடு செய்ய வேண்டும்,

இந்த இல்லறமக்களுக்கான விதிமுறையை ஊக்கத்துடன் கடைப்பிடிக்க வேண்டும் -

பின் அவர்கள் அந்தச் சுயமாகப் பிராகாசிக்கும் தேவர்களிடம் வந்து சேர்வார்கள். [5]

* * *

விளக்கம்:

[1] 5 kinds of 'eyes' are mentioned: 1. the physical eye (mamsa cakkhu), 2. the divine eye (dibba-cakkhu), 3. the eye of wisdom (paññá-cakkhu), 4 the eye of a Buddha (Buddha-c.), 5. the eye of all-round knowledge (samanta-c.; a frequent appellation of the Buddha).

ஐந்துவகைக் கண்கள் குறிப்பிடப் படுகிறது. அவை: 1. சாதாரணக்கண், 2. ஆன்மீகக் கண், 3. ஞானக்கண், 4. புத்தரின் கண் மற்றும் 5. அனைத்தும் உணர்ந்த அறிவுக் கண்

[2] Vāsava வாசவர்: தேவர்களின் தலைவர். Chief of the devas.

[3] உபாசகர் - பௌத்த இல்லறத்தார் (ஆண் பால்), உபாசகி - பெண் பால். பொதுவாக ஐந்து சீலங்களைக் கடைப்பிடிப்பவர்கள் (கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்). ஆனால் விகாரைக்குச் செல்லும் போதும் சிறப்பு நாட்களிலும் இல்லறமக்கள் எட்டு சீலங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

[4] உபோசத தினம் - புத்தர் காலத்திலிருந்தே துவங்கிய வழக்கம். இந்நாட்களில் மேலும் உறுதியுடன் மனத்தைத் தூய்மையாக்குவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இந்நாட்களில் எட்டு சீலங்கள் கடைபிடிப்பது வழக்கம். உபோசத தினங்களாவன: பௌர்ணமி, அமாவாசை, மற்றும் இவற்றிற்கு இடையில் உள்ள இரண்டு அர்த்தசந்திர நாட்கள்.

[5] இவ்வாறு ஒழுகும் இல்லறமக்கள் அடுத்த பிறப்பில் தேவலோகத்தில் மறுபிறப்பெடுப்பார்கள்.

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

© Details from English Source With gratitude to https://suttacentral.net for English source.

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.