நிலையாமை Impermanence

Impermanence

நிலையாமை

45

Conditions exist through change. You can’t prevent it. Just think, could you exhale without inhaling? Would it feel good? Or could you just inhale? We want things to be permanent, but that can’t be. It’s impossible.

நிலைமைகள் மாற்றங்களால் நிலைபெறுகின்றன. உங்களால் அதைத் தடுக்க முடியாது. நினைத்துப் பாருங்கள், உள்மூச்சில்லாமல் வெளிமூச்செடுக்க முடியுமா? அல்லது உள்மூச்சு மட்டுமே எடுக்க முடியுமா? நாம் எல்லாவற்றிலும் நிலையாக இருக்க விரும்புகிறோம். ஆனால் அப்படி இருக்க முடியாது. அது சாத்தியமல்ல.

46

If you know that all things are impermanent, all your thinking will gradually unwind and you won’t need to think too much. Whenever anything arises, all you need to say is "Oh, another one!" Just that!

எல்லாமே நிலையற்றவை என்பதை அறிந்துகொண்டீர்களென்றால், உங்கள் எண்ணங்கள் படிப்படியாகக் குறைந்து நீங்கள் சிந்திக்க வேண்டிய அவசியமும் குறையும். எப்பொழுதாவது மனத்தில் எண்ணங்கள் தோன்றினால் நீங்கள் சொல்ல வேண்டியதெல்லாம் இதுதான்."ஓ! இன்னொன்று தோன்றுகிறதா!" அவ்வளவு தான்!

47

Any speech which ignores uncertainty is not the speech of a sage.

நிலையாமையை அலட்சியஞ் செய்த எந்தப் பேச்சும் ஒரு ஞானியின் பேச்சாகாது.

48

If you really see uncertainty clearly, you will see that which is certain. The certainty is that things must inevitably be uncertain and that they cannot be otherwise. Do you understand? Knowing just this much, you can know the Buddha, you can rightly do reverence to him.

நிலையாமையைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் நிலையானது எது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எது நிலையானதென்றால், எல்லாமே நிலையற்றவை என்பதைத் தவிர்க்க முடியாது என்பதும், வேறு எப்படியும் இருக்க முடியாது என்பதும் தான். புரிகிறதா உங்களுக்கு? இது மட்டும் தெரிந்தால் போதும். நீங்கள் புத்தரைத் தெரிந்து கொள்வீர்கள். அவரைச் சரியான முறையில் போற்றுவீர்கள்.

49

If your mind tries to tell you it has already attained the level of sotapanna, go and bow to a sotapanna. He’ll tell you himself it’s all uncertain. If you meet a sakadagami, go and pay respects to him. When he sees you, he’ll simply say, "Not a sure thing!" If there’s an anagami, go and bow to him. He’ll tell you only one thing, "Uncertain!" If you meet even an arahant, go and bow to him. He’ll tell you even more firmly, "It’s all even more uncertain!" You’ll hear the words of the Noble Ones: "Everything is uncertain. Don’t cling to anything!"

உங்கள் மனம் நீங்கள் சோதபன்னா நிலையை ஏற்கனவே அடைந்து விட்டதாகச் சொல்லுமானால், ஒரு சோதபண்ணா விடம் சென்று வணங்குங்கள். "எல்லாமே நிலையற்றவை" என்று அவரே சொல்வார். ஒரு சகாதாகாமியைச் சந்தித்தால் அவரிடம் மரியாதை செலுத்துங்கள். அவர் உங்களைப் பார்த்து "உறுதியாகக் கூற முடியாது" என்று தெளிவாகச் சொல்வார். ஒரு அனாகாமி இருந்தால் அவரிடம் சென்று தலை குனிந்து வணங்குங்கள். அவர் ஒன்று மட்டுமே சொல்வார், "நிச்சய மில்லை!" ஒரு ஞானியைச் சந்திக்க நேர்ந்தால் அவரிடம் சென்று தலை தாழ்த்தி வணங்குங்கள். அவர் "எல்லாமே நிச்சயமற்றது! " என்று இன்னும் அழுத்தமாகச் சொல்வார். மேன்மையானவர்களின் வார்த்தைகள் இவையே: "எல்லாமே நிலையற்றவை. எதனுடனும் பற்று வைக்காதீர்கள்!"

(சோதபண்ணா, சகாதாகாமி, அனாகாமி, அரஹந்தர் (ஞானி) என்று படிப்படியாக ஞானியின் நிலை அடையளாம் என்பது தெராவாத பௌத்த மதக் கொள்கை)

50

Sometimes I’d go to see old religious sites with ancient temples. In some places they would be cracked. Maybe one of my friends would remark, "Such a shame, isn’t it? It’s cracked." I’d answer, "If they weren’t cracked there’d be no such thing as the Buddha. There’d be no Dhamma. It’s cracked like this because it’s perfectly in line with the Buddha’s teaching."

சில நேரங்களில் சமயம் சார்ந்த புராதனக் கோவில்கள் உள்ள இடங்களுக்கு நான் செல்வதுண்டு. சில சுவர்களில் வெடிப்பு இருக்கும். ஏதாவது ஒரு நண்பர் அதைப் பார்த்து "சுவர் வெடித்திருக்கிறதே!" என்று வருத்தத்துடன் சொல்வார். நான் சொல்லும் பதில் "வெடிப்பு இல்லை யென்றால் புத்தரென்று ஒன்றும் இருக்காது. தருமமும் இருக்காது. புத்தரின் போதனைகளை முழுமையாகச் சார்ந்து இருப்பதால் தான் இது வெடித்திருக்கிறது."

51

Conditions all go their own natural way. Whether we laugh or cry over them, they just go their own way. And there is no knowledge of science, which can prevent this natural course of things. You may get a dentist to look at your teeth, but even if he can fix them, they still finally go their natural way. Eventually even the dentist will have the same trouble. Everything falls apart in the end.

நிலைமைகள் அவைகளின் இயல்பான வழியில் செல்கின்றன. நாம் சிரித்தாலும் அழுதாலும் அவைகள் பொருட்படுத்தாமல் தங்கள் இயல்பான வழியிலேயே செல்கின்றன. இப்படிப்பட்ட இயல்பான செயல் முறைகளை எந்த விஞ்ஞான அறிவும் தடுக்க முடியாது. ஒரு பல் வைத்தியரிடம் உங்கள் பற்களைக் காண்பிக்கலாம். ஆனால் அவரும் கூட உங்கள் பற்களை அப்போதைக்குச் சரி செய்தாலும், முடிவில் அவைகள் தங்கள் இயல்பான வழியிலிலேயே செல்லும். கடைசியில் பல் வைத்தியரும் அதே தொல்லையை அனுபவிப்பார். எல்லாமே இறுதியில் தனித்தனியாக விழுந்து விடும்.

52

What can we take for certain? Nothing! There’s nothing but feelings. Suffering arises, stays, then passes away. Then happiness replaces suffering - only this. Outside of this, there is nothing. But we are lost people running and grabbing at feelings continuously. Feelings are not real, only changes.

எதை நாம் நிலையாகக் கருத முடியும்? எதையுமே அல்ல! உணர்ச்சிகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. துக்கம் எழும், தங்கி இருக்கும், பிறகு போய் விடும். பின் மகிழ்ச்சி துக்கத்திற்குப் பதிலாக வரும் - இது மட்டுமே. இதற்கு அப்பால் எதுவும் இல்லை. ஆனால் நாம் தொலைந்த மனிதர்களாக உணர்ச்சிகளைப் பிடிக்கத் தொடர்ந்து ஓடுகிறோம். உணர்ச்சிகள் உண்மையானவை இல்லை, மாற்றங்கள் மட்டுமே உண்மை.