பற்றுக் கொள்பவனிடம் அசைவு இருக்கும்..

பற்றுக் கொள்பவனிடம் அசைவு இருக்கும்..

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

For one who clings, motion exists..

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

இது புத்தரின் வாக்கு: "பற்றுக் கொள்பவனிடம் அசைவு இருக்கும்; ஆனால் பற்றுக் கொள்ளாதவனிடம் அசைவு இருக்காது. அசைவு இல்லையென்றால் அமைதி இருக்கும். அமைதி இருக்கும் போது அவா இருக்காது. அவா இல்லையென்றால் வருதலும், போதலும் இருக்காது. வருவதும், போவதும் இல்லாவிட்டால், தோன்றலும் இல்லை, மறைதலும் இல்லை. தோன்றலும், மறைதலும் இல்லாவிட்டால், இவ்வுலகமும் இல்லை, அவ்வுலகமும் இல்லை, இரண்டுக்கும் இடையேயும் எந்த நிலையும் இல்லை. இதுவே துக்கத்தின் முடிவு." - உதானா 8:3

இதற்குத் தாங்கள் விளக்கம் கூற முடியுமா?

இது எளிதில் புரியக் கூடியது என்பதால் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன். அடுத்த கேள்விக்குப் போகலாம் (சிரிப்பு).

இது போன்ற வார்த்தைகள் கொஞ்ச நாட்களில் பழக்கமாகிவிடும். ஒரே செய்தியைப் பல வழிகளில் குறிப்பிட முடியும்.

"பற்றுக் கொள்பவனிடம் அசைவு இருக்கும்;"

பற்று என்பது உயிர்வாழ்தல் சம்பந்தபட்டது. புலன் இன்பங்கள் மீதான பற்று. உறவுகள் மீதுள்ள பற்று போன்றவை. பற்றுக்கு முன்னால் தோன்றுவது பிடித்தல். பிடிப்பதற்குக் கையை நீட்டுகிறோம், ஆசைபட்டு ஒன்றைப் பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அப்படிப் பல முறை கை நீட்டிப் பழகும் போது பிடிப்பு உண்டாகிவிடுகிறது. நமது மன அமைப்பின் ஒரு இயல்பு இது. இதைத் தான் நாம் திரும்ப திரும்பச் செய்கிறோம். மனிதர்கள் இதைத்தான் செய்கின்றனர். நமக்கு இதையும், அதையும் பிடிக்கத் தோன்றுகிறது, பின் அதனோடு பற்று உண்டாகி விடுகிறது. ஆனால் பற்று இருக்கும் இடத்தில் அபாயமும் இருக்கும். பற்றின் பின் உண்டாவது ஆகுதல். உங்கள் அடிப்படைத் தனித்தன்மை (பர்ஸணாளிடி) இந்தச் செயல்களினால் உருவாகிறது. இந்த நோக்கத்துடன் செய்யப்படுவதுதான் பிடித்தல், பற்றுக் கொள்ளல் ஆகிய செயல்கள். வாழ்க்கையில் திறமையான ஆகுதல்களும் உண்டு. முயற்சி செய்து கல்வியைப் பெற வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். அல்லது தொழிற்பயிற்சி எடுக்கவும், வேலை தேடவும், உறவு தேடவும் நமக்கு ஊக்கமளிக்கப் படுகிறது. இவற்றைப் பெற முயல்வது ஏறத்தாழ நல்லது தான். புத்தரும் இது போன்ற பற்றுக்களைப் பற்றித் தவறேதும் சொல்லமாட்டார். ஆனால் இவற்றிலும் ஆபத்துக்கள் உள்ளன. இவற்றை நம்பி இருந்து விட்டு ஒரு நாள் அவை மறைந்து விட்டால் பிரச்சனை. முன்னேற வேண்டும் என்ற பேராவல் இருந்து, அந்த முன்னேற்றத்துக்கு ஏதாவது முட்டுக்கட்டை உண்டானாலோ அல்லது தோல்வியைத் தழுவினாலோ நீங்கள் துன்புறுவீர்கள்.

இதுவும் பற்று அல்லது கவ்வுதலின் ஒரு இயல்பு தான். நீங்கள் ஒருவருடன் அன்பான உறவில் இருக்கின்றீர்கள். நீங்கள் உறவுகொண்டவர் இறந்துவிடுகிறார். பின் நீங்கள் துன்புறுகின்றீர்கள். அவர் இறக்கவில்லையென்றாலும் உங்களைச் சுற்றி இருப்பதெல்லாம் நிலையற்றதாக இருக்கிறது. அதனால் நிலையற்ற தன்மையின் காரணமாக உங்களுக்கு மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. உங்கள் மகிழ்ச்சி நிலையற்றதன் மீது நம்பி இருக்கும் வரை உங்களுக்கு மனத்தில் கவலை இருந்து கொண்டே இருக்கப் போகிறது. உலகில் இருப்பதெல்லாம் நிலையற்றதென்பதால் இந்த மூலாதாரக் கவலை தொடர்கிறது.

"பற்றுக் கொள்பவனிடம் அசைவு இருக்கும்;" இங்கு அசைவு என்பது ஒரு சூழ்நிலையை அல்லது ஒரு பொருளை நோக்கிச் செல்வது அல்லது அதை விட்டுச் செல்வதைக் குறிக்கும். தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறோம். பிடிக்காததைத் தவிர்க்கப் பார்க்கிறோம் அல்லது பிடித்ததை அணைக்கப் பார்க்கிறோம். தோல்வியைத் தவிர்க்க முயல்கிறோம் அல்லது வெற்றியை நாடப் பார்க்கிறோம். பிடித்தவை, வெறுக்கத் தக்கவை. டென்னிஸ் பந்தைப் போல இங்கும் அங்கும் வந்து போய்க் கொண்டிருக்கிறோம். ஆகப் பற்றில்லாதவருக்கு அசைவு இல்லை. முடிவில்லா வாழ்க்கை நடத்தைகள். இதைத் தவிர்ப்பது, அதை விரும்பிச் செல்வது. விரும்பியது கிடைத்தவுடன் அதை இறுகப் பிடித்துக் கொள்வது. வைத்துக் கொள்வது. நாம் விரும்பியதைத் தொலைத்து விடாமல் இருக்க முயல்வது. பிடிக்காததைச் சந்திக்காமல் இருக்கப் பார்ப்பது.

அசைவு இல்லையென்றால் அமைதி இருக்கும்.

அசைவு இல்லாததும், அமைதியும் ஒன்றே தான் இல்லையா? அமைதியில் இங்கேயும் அங்கேயும் போகும் நடமாட்டம் இல்லை. அப்படியென்றால் நீங்கள் மறைந்து போய் விடுவீர்கள் என்பதில்லை. நீங்கள் பலவீனனாகவோ, அக்கறை இல்லாமலோ இருக்கப் போவதில்லை. ஊக்கமின்மை, அக்கறை இன்மை போன்ற சில எதிர்மறையான மன நிலைகளோடு ஆன்மீக அமைதியை ஒப்பிட வேண்டாம். கிழக்கு ஹேஸ்டிங்ஸ் தெருவில் (வான்கூவர் மாநகரின் ஒரு பகுதி. இங்கு குடி போதையிலும் மற்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் தெருவில் வீழ்ந்து கிடப்பவர்கள் பலரைக் காணலாம்) வாழும் சிலருக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணமே இருப்பதில்லை. சாலையில் கிடப்பது, என்ன நடக்கிறதென்றே தெரியாமல் போதையில் மயங்கிக் கிடப்பது. அவர்கள் அங்கு அப்படி இருப்பதும் பற்றின் காரணமாகத்தான். அவர்கள் பற்று எதிர்மறையான திசையில் உள்ள பற்று. அவர்கள் மனத்தில் வெறுப்பு உண்டாகி விட்டது, வாழ்க்கையில் எதோ துரதிர்ஷ்டவசமான சம்பவம், ஏதோ துன்பம். அந்த வேதனையைச் சமாளிக்கத் 'தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் தாகம்' அவர்களுக்குத் தோன்றி விட்டது. அவர்களை ஆட்டிப் படைக்கும் எண்ணப் போக்கு இது தான். வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களைச் சமாளிக்கத் தங்களையே அழித்துக் கொள்வதுதான் ஒரே வழி என்று நினைக்கின்றனர்.

மாற்றுத் தீர்வு ‘ஆகுதல்’ ஆகும். வேறு ஏதாவதாக மாற வேண்டும் என்ற தாகம். தற்போதைய நிலைமை பிடிக்க வில்லை. அசௌகரியமாக இருக்கிறது. எனவே வேறு ஏதாவதாக ஆக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. எப்போதும் அதைப் பெற வேண்டும், இதை அடைய வேண்டும் என்ற தாகம். இதற்கு முடிவே இல்லை.

புத்தர் இவ்விரண்டு வழிகளும் திருப்தியற்றவை என்றார். இரண்டுமே இறுதியில் பிரச்சனைகளை உருவாக்குபவைகளே ஆகும்.

உலோகத்தால் செய்யப்பட்ட நாணயம் ஒன்றை ஒரு காந்தத்தின் நடுவே போடும் போது அது காந்த சக்தியால் நேர்மறையான பக்கத்திலோ (positive) அல்லது எதிர்மறையான (negative) பக்கத்திலோ ஈர்க்கப் படுவதைப் போல நாமும் 'ஆக வேண்டும் என்ற தாகத்தாலோ' அல்லது 'அழிய வேண்டும் என்ற தாகத்தாலோ' ஈர்க்கப் படுகிறோம். அந்த நாணயம் காந்தத்தின் நடுவே நுழைய முடிவதில்லை. ஆனால் காந்த இயல்பு இல்லாத ஒரு பொருளாக இருந்தால் அதை அந்தக் காந்தத்தின் நடுவே வைத்தாலும் ஈர்க்கப் படுவதில்லை. விருப்பு, வெறுப்பு, ஆக வேண்டும் என்ற தாகம் அல்லது அழிய வேண்டும் என்ற தாகம் இவ்விரண்டுக்கும் அப்பால் போவதுதான் அமைதி. இப்படி நடுநிலையில் உள்ளவர்கள் தங்கள் மனநிலையை 'அமைதி' என்றே விவரிப்பார்கள். இது கண்டிப்பாக அழிவு இல்லை. மாறாக இது முற்றாக உணர்ந்துள்ள அமைதி.

ஆக பற்று இல்லையென்றால் வருதலும் இல்லை போதலும் இல்லை. வருவது போவதெல்லாம் நாமே உண்டாக்கிக் கொண்ட செயல். எதை உண்டாக்குகிறோம்? 'நான்' என்ற கருத்தை உண்டாக்குகிறோம். 'நான்' என்பது வந்து போகும் எண்ணம் தானே? பெரும்பாலானோர் இதைக் கவனிப்பதில்லை. அவர்கள் இப்படி ஆவார்கள், அப்படி ஆவார்கள் (வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு அடையாளங்கள் - ஆண். ஆசிரியர், தந்தை. தலைவன்) அதை பற்றி நினைக்கவில்லையென்றால் அடையாளம் இருப்பதில்லை. தங்களைப் பற்றி நினைக்கத் துவங்கியவுடன் அந்த 'நான்' என்ற அடையாளம் உண்டாகிவிடுகிறது.

இந்தச் செயற்கையான 'நான்' என்ற கருத்து உருவாவது நமது கற்பனையில் தான். அது மட்டுமல்ல. அதை உருவாக்காமல் இருக்க முயற்சி செய்து பாருங்களேன்? அது சுலபமாக இருக்காது. நமது பழக்கமான செயல்களையும், மனத்தின் செயற்றொடர்களின் வலுவையும் குறைத்தால் மட்டுமே அது முடியும். முறுக்கை அகற்றுதல், கட்டியதைக் கழற்றுதல். மனத்தின் அறிநிலையை அதிகரித்தல், நடைபெறும் வேலைக்கிரமங்களை உன்னிப்பாகக் கவனித்தல், தோன்றி மறைவதைக் கவனித்தல். இவற்றால் தான் 'நான்' என்ற கட்டிடத்தைக் கட்டுவதைத் தடுக்க முடியும். சரியாகவும், தொடர்ந்தும் பயிற்சி செய்தால் அந்தப் பழக்கங்களின் வலுவைக் குறைக்க முடியும்.

பொதுவாக ஆணவம் இவற்றைக் கண்டு சற்றுத் தடுமாற்றம் அடைகிறது. இப்படிச் செய்வது தன் இருத்தலுக்குச் சவாலாக இருப்பதாக நினைக்கிறது. ஆணவம் என்பது மனத்தின் ஒரு பிரதிபலிப்பே. மாற்றத்தினால் அது அச்சம் கொள்கிறது. எப்போதும் தன்னைப் பாதுகாக்கவே நினைக்கிறது. அதனாலேயே சிலர் மோசமான சூழ்நிலைகளையும் விட்டு விட்டுப் போவதில்லை. ஏனென்றால் ஆணவம், 'இங்கு இருக்கிறேன், மோசமான உறவானாலும் நான் இங்கேயே இருக்கிறேன், விட்டுச் சென்றால் நான் இல்லாமல் போய்விடுவேன்.' என்று நினைக்கிறது. அதனால் மாற்றம் உண்டாக்கத் தயங்கி நாம் சில சூழ்நிலைகளை விட்டுச் செல்லாமல் தொடர்ந்து அங்கேயே இருந்து விடுகிறோம். ஆணவம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முற்படுகிறது. ஆனால் மோசமான சூழ்நிலைகளை விட்டு நீங்கள் விலகியாக வேண்டும். ஆனால் 'இல்லாத' இடத்திற்கு நாம் போகப் போவது இல்லை. மனத்தின் திறனற்ற பழக்கங்களை அழித்து விடத்தான் போகிறோம்.

இறுதியாக, 'இவ்வுலகமும் இல்லை, அவ்வுலகமும் இல்லை, இரண்டுக்கும் இடையேயும் எந்த நிலையும் இல்லை..'

அவர் நிப்பாண நிலையைப் பற்றிப் பேசுகிறார். மக்கள் சொர்க்கம் என்ற அப்பால் உள்ள உலகத்தையும் அல்லது இந்த உலகத்தையும் அல்லது இரண்டுக்கும் இடையே கூட எதாவது உலகம் இருப்பதைப் பற்றியும் எண்ணிப் பார்ப்பது வழக்கம். ஆனால் நிப்பாணமோ சொர்க்கமும் இல்லை, இவ்வுலகமும் இல்லை அல்லது இரண்டுக்கு இடையிலும் எதுவும் இல்லை. மனதில் கட்டிய உலகங்கள் கலைக்கப் படுகின்றன. புத்தர் உலகத்தைப் பற்றிப் பேசும் போது உலகம் என்றால் என்ன என்பதை விவரிக்கின்றார். 'நான் உலகம் என்று சொல்வது எதை? கண்ணையும் உருவங்களையும், காதையும் ஒலியையும், மூக்கையும் நுகர்வுகளையும், நாக்கையும் சுவைகளையும், மனத்தையும் மனத்தில் தோன்றும் எண்ணங்களையும் - இவற்றைத்தான் நான் உலகம் என்கிறேன்.' ஆகவே உலகம் இந்த உடலிலேயே உள்ளது. ஆறடி நீளமுள்ள உடலிலேயே உள்ளது. தொடர்ந்து ஒரு உலகத்தை விட்டு அடுத்த உலகம் மனத்தில் உருவாகிறது.

* * * * * *

The Buddha said: "For one who clings, motion exists; but for one who clings not, there is no motion. Where no motion is, there is stillness. Where stillness is, there is no craving. Where no craving is, there is neither coming nor going. Where no coming nor going is, there is neither arising nor passing away. Where neither arising nor passing away is, there is neither this world nor a world beyond, nor a state between. This, indeed, is the end of suffering." — Udana 8:3

Could you explain this?

Well, I think it is pretty obvious. Going to the next question (laughter).

You get used to this kind of language after a while. Basically a million ways of saying the same thing.

"For one who clings, motion exists;"

Clinging means existential clinging. Clinging to your dependencies in life. Clinging to pleasures of the sense. Clinging to relationships and so forth. First steps before clinging is grasping. The hand reaches out, the emotion, the interest reaches out. When you practice that move enough you grab hold. That is just part of your psychic structure. That is what we do. That is what humans do. We spread out our grasp at things and we cling to things. Of course there is danger to clinging. What follows clinging is becoming. You shape your core personality structure by these actions. These volitional actions of reaching and grasping and then you become. And so we have various, in a relative way sort of healthy becomings. People tell you to reach and grasp towards an education or training or reach out and grasp for a job or a relationship. Those would be more or less considered wholesome reach and grasping. The Buddha would also say that it is wholesome but it also has dangers. If you are dependent on any of these things and then they disappear on you. If you have ambition and it is thwared or if you fail then you suffer.

And that is part of clinging or grasping. You have a lovely relationship and then the person dies and then you suffer. Even if they don't, everything is unstable around you, so there is a level of anxiety around instability. You can never be free of that anxiety as long as your happiness is dependent upon instable situations and everything in this world is unstable. So fundamental anxiety is there. It is always there.

So for one who clings, motion exists. Motion meaning movement. You either move towards a situation or an object or you move away from it. You are continuously in motion. Either avoiding the unpleasent or grasping for the pleasent. Avoiding failure or seeking success. Attraction and repulsion. Back and forth like a tennis ball. So for one who clings not, there is no motion. That endless existential activity. Avoiding this and going for that. Once you get that, holding that. Keeping it etc. Trying not to lose what one loves. Not to meet with what that one does not like.

"Where no motion is, there is stillness. "

That's almost a tautology isn't it? There is no motion in stillness, right? You don't disappear, you don't become inert or become apathetic. You know some of those negative mental states like depression and apathy are not to be confused with spiritual stillness. Some people on East Hastings Street (in Vancouver city, some blocks of which are run down, with many drunks and addicts) seem to not be very ambitious. Lying on he side of the sidewalks, in a kind of a coma. They are these because of clinging as well. Grasping and clinging usually in the negative direction. Aversion has arisen, some sort of trauma, so sort of pain. And they are trying to avoid that pain but they are using an attempt to what we call 'the thirst for anhilation'. It is their dominant mode. To anhilate is their soulution to difficulties and pain.

And the other solution is becoming. The thirst and grasping after becoming, to become something else, to move yourself out of that uncomfortable situation. Always aspiring, always pushing on. That is the endless process of becoming. Neither of these are satisfactory according to the Buddha. They are ultimately problematic.

Like a little coin, a type of metal that can be attracted by a magnet. One side is positive and the other side is negative. It can't go straight down there. It gets sucked in. but if it is a object that has no magnetic properties it goes down right down the middle unaffected by the magnetic pulls in either way. To be free from that magnetic polarity. Negative and positive. Attraction and repulsion. Seeking relief in anhilation or seeking relief in aspiration and becoming. This is what stillness means. The person will begin to describe their mental states as stillness, as very very still but not anhilation in any way but very alive stillness.

So there is no craving. Neither coming or going. Coming and going is just manifest in creating yourself. Thinking about creating a sense of self. 'I' is coming and going. Your sense of self comes and goes doesn't it? For most people it is never brought into question. They become this. They become that. They arise. When they are not thinking about it they are not there. Only when they start thinking about themseves their self appears.

This cessation of self creating, creating this artificial self is just images and product of the imagination. But not just that. Just try not doing that. Just try not creating a self. This is impossible until you weaken the habit patterns and cognitive processes that make that or keep doing that. That is the process of undoing, unwinding, increasing your mindfulness, paying attention to the processes. seeing it rise and pass away. The more you do that the more practice you get the more you can weaken those habits and undercut those tendencies and then the process stops.

Typically the ego is a little bit concerned about what is going on. Seems to be threatening ones own actual existence. Ego is just the reflective part of the mind. It is threatened by change. It always wants to sustain itself. That is why people stay in bad situations as the ego says at least I exist here. I exist in abusive relationships. Atleast I exist. I might not exist if I step out of this. So we stay in these kind of situations because of this kind of inertia. The ego wants to sustain itself . This is exactly where you have to go. You have to go in to the unknown. But the ego doesn't want to go there becasue it could threaten one's identity, sense of existence. But it is not going towards non-existence. it's going towards deconstruction of some bad habits of mind.

Then ".. there is neither this world nor a world beyond, nor a state between."

He is talking about Nibbana (or Nirvana in Sanskrit) there. Remember people would envision a world beyond like heaven or this very world or maybe even something in between. So Nibbana is neither heaven or this world or something in between. It is a deconstruction of worlds. When he talks about world he sometimes defines what he means by the world. 'When I say the world what do I mean? I mean the eye and its objects, the ear and sounds, the nose and smells, tongue and tastes, touch and objects, mind and mental contents. That's what I mean by the world.' So the world is found in this very body. One fathom in length. One world after another.

* * * * * *