ஆண் மற்றும் பெண் துறவிகள்

பௌத்தம்: சிறந்த வினா - சிறந்த விடை

10. ஆண் மற்றும் பெண் துறவிகள்

Monks and Nuns

வினா: துறவிகள் சங்கம் பௌத்தத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. ஆண் மற்றும் பெண் துறவிகளின் நோக்கம் என்ன? அவர்கள் என்ன செய்கின்றனர்?

விடை: ஆன்மீக வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே துறவிகள் சங்கத்தினைப் புத்தர் உருவாக்கினார். இல்லற மக்கள் துறவிகளின் அடிப்படைத் தேவைகளை - உணவு, உடை, இருப்பிடம், மருந்து ஆகியவற்றை - பூர்த்தி செய்கின்றனர். இதனால் துறவிகளால் ‘தம்ம’ நெறிகளைக் கற்பதிலும், பயிற்சி செய்வதிலும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள முடிகிறது. சங்கத்திலுள்ள நெறிப்படுத்தப்பட்ட எளிமையான வாழ்க்கை முறை மன அமைதிக்கும் தியானம் செய்யவும் ஏற்றதாயுள்ளது. பதிலுக்குத் துறவிகளும் தாங்கள் பெற்ற நுண்ணறிவைச் சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் ஒரு நேர்மையான பௌத்தர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்கின்றனர். ஆனால் இன்றைய நடைமுறையில் புத்தர் நினைத்த இந்த அடிப்படைச் சேவையோடு நில்லாமல், துறவிகள் பள்ளி ஆசிரியர்களாகவும், சமூக சேவையாளர்களாகவும், கலைஞர்களாகவும், மருத்துவர்களாகவும், ஏன் அரசியல்வாதிகளாகவும் கூட இருக்கின்றனர். ஒருசாரார் இத்தகைய செயல்கள் பௌத்தத்தை வளர்க்க உதவுமேயானால் அதில் ஒன்றும் தவறில்லை என்று வாதிடுகின்றனர். வேறு சிலரோ துறவிகள் இவ்வாறு செய்வதால் உலக நடைமுறைப் பிரச்சனைகளில் ஆழமாகச் சிக்கிச் சுழல நேரிட்டுத் துறவறம் பூண்டதன் நோக்கத்தினையே மறந்து விடக் கூடும் எனச் சுட்டிக் காட்டுகின்றனர்.

QUESTION: The monastic institution is an important one in Buddhism. What is the purpose of monks and nuns and what are they supposed to do?

ANSWER:

The Buddha’s purpose in founding an order of monks and nuns was to provide an environment in which spiritual development would be easier. The lay community provides monks and nuns with their basic needs – food, clothing, shelter, and medicine – so they can devote their time to the study and practice of the Dhamma. The ordered and simple lifestyle of the monastery is conducive to inner peace and meditation. In return, monks and nuns are expected to share what they know with the community and act as examples of how the good Buddhist should live. In actual practice, this basic mission has sometimes been extended far beyond what the Buddha originally intended and today monks and nuns sometimes act as school teachers, social workers, artists, doctors and even politicians. Some have argued that taking such roles is alright if it helps to promote Buddhism. Others point out that by doing such things monks and nuns too easily get entangled in worldly problems and forget the purpose for which they went to the monastery in the first place.

* * * * * * * *

வினா: எத்தகைய இயல்புகொண்ட ஒருவர் துறவி ஆகிறார்?

விடை: ஒவ்வொரு மனிதருக்கும் பல்வேறு துறைகளில் பற்றிருந்தாலும் - குடும்பம், தொழில், பொழுது போக்குதல், அரசியல் போன்றவை - இவற்றுள் ஏதேனும் ஒன்றில் மட்டுமே சிறப்பான ஈடுபாடு இருக்கும். பொதுவாக இது குடும்பம் அல்லது தொழில் மீதான பற்றாக இருக்கும். மற்றவை முக்கிய மற்றவையாக இருக்கும். புத்தரின் போதனைகளைப் படிப்பதும் பயிற்சி செய்வதும் மிக முக்கியம் வாய்ந்ததாகவும், மற்ற எல்லாவற்றையும் விட முதன்மையானதாகவும் ஒருவர் வாழ்வில் அமைந்தால்,அத்தகைய ஒருவர் துறவியாக விருப்பப்படலாம்.

QUESTION: What kind of person becomes a monk or a nun?

ANSWER:

Most people have a variety of interests in their lives - family, career, hobbies, politics, religion, etc. Of these interests one will be primary, usually family or career, while the others will be less important to them. When the study and practice of the Buddha's teachings becomes the most important thing in a person's life, when that takes precedence over all other things, then that person will probably be interested in becoming a monk or a nun.

* * * * * * * *

வினா: ஞானம் பெறத் துறவியாகத்தான் இருந்தாக வேண்டுமா?

விடை: இல்லை, கண்டிப்பாக இல்லை. புத்தரின் மேன்மையான சீடர்களில் பலர் இல்லற வாழ்வு நடத்திய ஆண்களும், பெண்களுமே ஆவர். சில இல்லறவாசிகள் துறவிகளுக்குக் கற்றுத்தரத்தக்க அளவிற்கு மிகச் சிறந்த ஆன்மிக அறிவு முதிர்ச்சி பெற்றிருந்தனர். பௌத்தத்தில் புத்தரின் போதனைகளைப் புரிந்து கொள்ளும் தரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதே முக்கியம். மஞ்சல் ஆடை அணிந்திருக்கிறோமா அல்லது நீல நிற ஜீன்ஸ் அணிந்திருக்கிறோமா என்பதோ, விகாரையில் தங்கியிருக்கிறோமா அல்லது வீட்டில் தங்கியிருக்கிறோமா என்பதோ முக்கியமில்லை. சிலருக்கு விகாரையில் உள்ள வசதிகளும் வாய்ப்புகளும் ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்த இடமாகத் தோன்றலாம். வேறு சிலருக்கோ இல்லர வாழ்வின் சுக துக்கங்களோடு வீட்டில் வாழ்வதே உகந்ததாகத் தெரியும். எல்லோரும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவர்கள் தான்.

QUESTION: Do you have to be a monk or a nun to be enlightened?

ANSWER: Of course not. Some of the Buddha’s most accomplished disciples were lay men and women. Some were spiritually developed enough to instruct the monks. In Buddhism, the level of one’s understanding is the most important thing and that has nothing to do with whether one wears a yellow robe or blue jeans, or whether one lives in a monastery or a home. Some might find the monastery, with all its advantages and disadvantages, to be the best environment in which to grow spiritually. Others may find the home, with all its joys and sorrows, to be best. Everyone is different.

* * * * * * * *

வினா: பௌத்த துறவிகள் மஞ்சல் ஆடை அணிவதேன்?

விடை: பண்டைக் காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் காட்டில் உள்ள மரங்களைக் கவனிக்கும்போது எந்த இலைகள் விழும் நிலையில் இருக்கின்றன என்பதை இலையின் நிறத்தை வைத்தே கூறி விடுவர். ஏனெனில், அவை மஞ்சல், செம்மஞ்சல் அல்லது பழுப்பு நிற இலைகளாகவே இருக்கும். அதன் விளைவாக இந்தியாவில் பற்றறுத்த துறவிகளின் உடை மஞ்சல் நிறத்தில் அமைந்தது. துறவிகளின் ஆடைகள் மஞ்சல் நிறத்தில் இருப்பதால் அவர்களுக்கு அது எந்நேரமும் பற்றற்றிருக்கவும், (மனச் சஞ்சலங்களைக்) கைவிடவும், (ஆசைகளை) விட்டு விடவும் நினைவு படுத்தும் சின்னமாக இருக்கிறது.

QUESTION: Why do Buddhist monks and nuns wear a yellow robe?

ANSWER: When the ancient Indians looked into the jungle they could always tell which leaves were about to drop from the tree, because they were either yellow, orange or brown. Consequently, in India, yellow became the color of renunciation. Monks’ and nuns’ robes are yellow so they can act as a constant reminder of the importance of not clinging, of letting go, of giving up.

* * * * * * * *

வினா: துறவிகள் தலை முடியை மழித்துக் கொள்வது ஏன்?

விடை: பொதுவாக நாம் நமது தோற்றத்தில், குறிப்பாக நம் தலை முடியின் தோற்றத்தில் மிகவும் அக்கறை உள்ளவராக இருக்கின்றோம். பெண்கள் நல்ல தலைஅலங்காரம் செய்து கொள்வது மிக முக்கியமெனக் கருதுகின்றனர். ஆண்களும் தங்களுக்கு எங்கே வழுக்கை விழுந்து விடுமோ என்று மிகவும் கவலைப் படுகின்றனர். தலை முடியை அலங்கரிப்பதற்கே அதிக நேரத்தைச் செலவு செய்கிறோம். எனவே துறவிகள் தங்கள் முடியை மழித்துக் கொள்வதன் மூலம் முக்கியத்துவம் மிக்க செயல்களில் ஈடுபட அதிக நேரத்தை ஒதுக்க முடிகிறது. மேலும் தங்கள் கவனத்தைப் புறத் தோற்றத்தின்பால் திருப்பாமல், உள் நோக்கி 'அகத்தூய்மை செம்மையுறச் செலுத்த வேண்டும்' என்ற கருத்துக்கு மழித்த தலை ஒரு அடையாளச் சின்னமாகவும் விளங்குகிறது.

QUESTION: What is the purpose of monks and nuns shaving their heads?

ANSWER: Normally we are very concerned about our appearance, especially our hair. Women consider a good hairdo to be very important and men are quite concerned about going bald. Keeping our hair looking good takes up a good deal of time. In shaving their heads, monks and nuns give themselves more time for the things that really matter. Also, a shaved head symbolized the idea of paying more attention to inward change than outward appearance.

* * * * * * * *

வினா: துறவறம் பூணுவதெல்லாம் சரி தான். ஆனால் அனைவரும் துறவிகளாய் விட்டால் உலகம் என்னாவது?

விடை: எந்தத் தொழிலைப் பற்றியும் இதே கேள்வியைக் கேட்கலாம் அல்லவா? 'பல் மருத்துவர் ஆவதெல்லாம் சரி தான். ஆனால் அனைவரும் பல் மருத்துவரானால் என்னாவது? ஆசிரியர்கள், சமையற்காரர், டேக்ஸி ஓட்டுனர் எவரும் இருக்க மாட்டார்கள்.' 'ஆசிரியர் ஆவதெல்லாம் சரி தான். ஆனால் அனைவரும் ஆசிரியரானால் என்னாவது? பல் மருத்துவர் போன்றவர்களெல்லாம் இருக்க மாட்டார்களே?' இப்படி எந்தத் தொழிலைப்பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். புத்தர் அனைவரும் துறவிகளாக வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி நடக்கப் போவதும் இல்லை. அதே சமயம் ஒரு சிலர் எளிய வாழ்க்கையை விரும்புகின்றனர். அவர்களுக்குப் பொருள் சேர்க்கும் ஆசையும் இல்லை. புத்தரின் போதனைகள் மற்ற எல்லாவற்றையும் விட அவர்களுக்குப் பெருமகிழ்ச்சியூட்டுகிறது. பல் வைத்தியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருப்பதைப் போல அவர்களுக்கும் தனித் திறமையும் அறிவும் இருப்பதால் அவர்கள் வாழும் சமூகத்திற்கு உதவி செய்ய முடிகிறது.

QUESTION: Becoming a monk is all very well but what would happen if everyone became a monk?

ANSWER: One could ask the same thing about any vocation. ‘Becoming a dentist is all very well but what would happen if everyone became a dentist? There’d be no teachers, no cooks, no taxi drivers.’ ‘Becoming a teacher is all very well but what would happen if everyone became a teacher? There’d be no dentists, etc. etc.’ The Buddha did not suggest that everyone should become a monk or a nun and indeed that is never going to happen. However, there will always be people who are attracted to life of simplicity and renunciation and who take delight in the Buddha’s teaching above all else. And like dentists and teachers they have special skills and knowledge that can be helpful to the community in which they live.

* * * * * * * *

வினா: தரும போதனை தந்து, புத்தகங்களை எழுதி, சமூக சேவை செய்யும் துறவிகள் சமூகத்திற்கு உதவுபவர்களாக இருக்கலாம். ஆனால் தியானம் மட்டுமே செய்து, வேறு எதுவும் செய்யாத துறவிகளால் சமுதாயத்திற்கு என்ன பயன்?

விடை: தியானம் செய்யும் துறவியை ஒரு ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியோடு ஒப்பிடலாம். ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிக்கு சமுதாயம் உதவிபுரிகிறது. அத்தகைய விஞ்ஞானி ஆய்வுக் கூடத்தில் அமர்ந்து ஆய்வு செய்கிறார். என்றாவது ஒரு நாள் புதிதாக ஒன்றைக் கண்டு பிடித்தால் அது சமுதாயத்திற்கு பயனளிக்கும் கண்டுப்பிடிப்பாக இருக்கக்கூடும் எனச் சமுதாயம் உதவி செய்கிறது. அதைப்போலவே பௌத்த சமூகமும் தியானிக்கும் துறவியின் தேவையை (அவர்களின் தேவைகள் மிகக் குறைவே) பூர்த்தி செய்கிறது. அவரும் ஒரு நாள் மெய்யறிவும் நுண்ணறிவும் பெற்று அனைவருக்கும் அதைப் போதித்து நன்மை புரிவார் என்று நம்புகிறது. மேலும் அந்த மெய்யறிவை அவர் பெறும் முன்னரே, அல்லது பெறாவிட்டாலும் கூட அவரால் மற்றவர்களுக்கு நன்மை புரிய முடிகிறது. எப்படி? நவ நாகரிகமிக்க இக்காலத்தில் 'செல்வந்தர்களின் அல்லது புகழ் வாய்ந்தவர்களின் நடத்தையும் போக்கும்' நமக்கு எடுத்துக்காட்டாகத் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் சித்தரிக்கப் படுகிறது. 'நடிக நடகையரின் திருமண வரவேற்பு' என்ற தலைப்பில் தொலைக்காட்சியில் தொடர் காட்சிகளைப் பார்க்கிறோம். ஊதாரித்தனமான வாழ்க்கை, எல்லை மீறிச் செலவு செய்வது, விருப்பம் போலச் செயற்படுவது, டாம்பீக ஆடம்பர வாழ்க்கை - இவை தான் நாம் மிகச் சிறந்ததாகக் கருத வேண்டும் என்று நினைக்கத் தோன்றும். தியானம் செய்யும் துறவி நமக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கின்றார். மகிழ்ச்சியான, மன நிறைவான வாழ்க்கைக்கு ஒருவர் செல்வச் செழிப்போடு இருக்க வேண்டு மென்பதில்லை என்பதை அவர் நினைவூட்டுகிறார். அமைதியான, அன்பான, எளிமையான வாழ்க்கை முறையிலும் பயன் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்கிறோம்..

QUESTION: That might be so with those who teach, write books or do social work. But what about the monks and nuns who do nothing but meditate. What good are they to the community?

ANSWER: You might compare the meditating monk to the research scientist. Society supports the research scientist as he sits in his laboratory conducting experiments because it hopes that he will eventually discover or invent something that will be for the general good. Likewise, the Buddhist community supports the meditating monk (and his needs are very meager) because it hopes that he will attain wisdom and insights that will be for the general good. But even before this happens, or even if it doesn’t, the meditating monk can still benefit others. In some modern societies it is ‘The Lifestyles of the Rich and Famous’ with its extravagance, its conspicuous consumption and its self-indulgence which is held up as the ideal to follow, or at least to envy. The example that the meditating monk sets reminds us that one doesn’t have to be rich to be content. It shows us that a gentle and simple lifestyle has its advantages too.

* * * * * * * *

வினா: பௌத்தப் பெண் துறவிகள் இக்காலத்தில் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா?

விடை: புத்தர் அவர் வாழ்நாளிலேயே பெண் துறவிகளுக்கான சங்கத்தினை உருவாக்கினார். அதன் பின் ஐந்தாறு நூற்றாண்டுகளுக்குப் பெண் துறவிகளும் பௌத்தம் பரவ முக்கியக் காரணிகளாக இருந்தார்கள். ஆனால், ஏன் என்று தெளிவாகத் தெரியவில்லை, பெண் துறவிகளுக்கு ஆண் துறவிகளுக்குக் கிடைத்தது போன்ற கௌரவமோ உதவியோ கிடைக்க வில்லை. இந்தியாவிலும், இலங்கையிலும், திபெத்திலும், தென் கிழக்கு ஆசியாவிலும் பெண் துறவிகள் சங்கம் பின்னர் அழிந்துபோய் விட்டது. எனினும் தாய்வானிலும், கொரியாவிலும், ஜப்பானிலும் பெண் துறவிகள் சங்கம் சிறப்பாகத் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. இன்று இலங்கையில் பெண் சங்கத்தை மீண்டும் நிலை நாட்டத் தாய்வானில் உள்ள பெண் துறவிகள் மூலம் முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. இதைச் சில சம்பிரதாயப்படி நடப்பவர்கள் விரும்ப வில்லை. ஆனால், புத்தரின் எண்ணப்படி, பெண் துறவிகளும் ஆண் துறவிகள் பெறும் துறவறம் புகும் வாய்ப்பைப் பெற்று, அதன் பலனை அனுபவிப்பது தான் சரி.

QUESTION: I have heard that there are no more Buddhist nuns. Is this true?

ANSWER: The Buddha founded the order of nuns during his lifetime and for five or six hundred years, nuns played an important role in the spread and development of Buddhism. But for reasons that are not clear nuns never commanded the same esteem, or got the same support, as monks and in India, Sri Lanka, Tibet and South-east Asia the order died out. However, in Taiwan, Korea and Japan the order of nuns has continued to flourish. Today in Sri Lanka steps are being taken to reintroduce the order of nuns from Taiwan although some traditionalists are not very enthusiastic about this. However, in keeping with the Buddha’s original intention, it is only right that women as well as men have the opportunity to live the monastic life and benefit from it.

* * * * * * * *