துறவிக்கு ஒரு கேள்வி 5
துறவிக்கு ஒரு கேள்வி
Question for the monk
அஜான் சோணா
Ajahn Sona
* * * * * *
தமிழில் / Translation:
பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading
திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
41. உணர்ச்சிகள் நாம் அல்ல Top
நம்மைப் பற்றிய நமது கருத்தையும் நாம் என்ன செய்கின்றோம் அல்லது நாம் என்ன உணர்கின்றோம் என்பதற்கும் உள்ள தொடர்பைத் துண்டிக்க வேண்டும். குறிப்பாக நமது உடலை உணரும் போது அது தான் நாம் என்று நினைப்பது தவறு. இதைப் பற்றித்தான் புத்தர் பேசுகிறார். உலகில் நீங்கள் புரிந்த சாதனைகள், தினசரி தொழிலில் செய்யும் காரியங்கள் இவையெல்லாம் வேறு, உங்கள் நலன் பற்றிய கருத்து வேறு. உடல் துன்பப் பட்டாலும், துன்பப் படாமல் இருந்தாலும் அதனால் உண்டாகும் உணர்ச்சிகள் தான் நாம் என்று நினைக்க வேண்டாம். இந்தப் பிரிவு இருக்க வேண்டியது அவசியம். இவற்றைப் பிரிக்கவில்லையென்றால் நாம் நலமாக இருக்க வழியே இல்லை. நமது தொழில் வேலை, தாய் தந்தையராக நாம் செய்யும் வேலை, கணவன் மனைவி என்கிற பாத்திரங்களில் செய்யும் வேலைகள் இவை வேறு. நமது நலம் என்பது வேறு. மனத்தைக் கெடுக்காமல் அதன் இயற்கையான பிராகாசிக்கும் தன்மை வெளிப்பட வேண்டுமானால் இவற்றோடு ஒரு தொடர்பினை உண்டாக்கக் கூடாது.
சிலர் சில காரியங்களில் திறமை மிகுந்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் வேறு விஷயங்களில் திறமைசாலிகளாக இருப்பார்கள். காலப்போக்கில் நாம் பலதரப்பட்ட திறமைகளைக் கற்றுக் கொள்கிறோம் - தச்சு வேலை, கழிவறைகள் கட்டுவது போன்றவை. இந்த உலகில் இவற்றை வைத்தே உங்களை அடையாளம் காண்கின்றார்கள். துறவிகளைப் பொருத்தவரை, அல்லது ஆன்மீகப் பாதையில் செல்பவர்களைப் பொருத்தவரை இந்த விஷயங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. அதேசமயம், அக்கறை இல்லாமலும் இருக்கக் கூடாது. உண்மையில் முக்கியமான செயல்களைப் பற்றி நினைக்கும் போது உலகத்தில் நாம் செய்யும் காரியங்கள், அந்தப் பட்டியலில் சேராது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மேற்கத்திய நாடுகளில் இது போன்ற உலக காரியங்களுக்குத் தான் மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றனர் – அதாவது, ஆகாயத்தில் கிரகங்களை விடுவது போன்ற சாதனைகள். அது போன்ற செயல்களைச் செய்தோர்களுக்கு, அறமும் அறிமுகமாகியிருந்தால் அவை பெரிய விஷயமாகத் தோன்றாது. அது போன்ற வேலைகளெல்லாம் நல்லதுதான். ஆனால் நம்முடைய உண்மையான வேலையோடு ஒப்பிடும் போது அவை பெரிய விஷயமாகவே தெரியாது.
உங்கள் உண்மையான வேலை அதுவல்ல, அது உங்கள் தொழில். பிழைப்புக்காகச் செய்யும் தொழில். மக்கள் அதுவே மகத்தான செயல் என்று நினைக்கின்றனர். மிகவும் பெருமைப் படுகின்றனர். ஆனால் தம்மத்துடன் தொடர்பு கொண்ட பிறகு அவை எல்லாம் பெரிய செயலாகத் தெரியாது. அது போன்ற திறமையுடன் செய்யும் உலக விஷயங்களை வைத்து வாழ்க்கைக்குப் பொருள் காணலாம் என்று நினைப்பது மடமை. நாம் மிகவும் அறிவாளியாகவும் அதேசமயம் முட்டாளாகவும் இருக்கின்றோம். மாறாக அறத்தைச் சற்றுப் புரிந்திருந்தால் வேறெதுவும் நமக்கு முக்கியமாகத் தோன்றாது. மற்ற விஷயங்களில் எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும் அவை முக்கியமானதாகத் தோன்றாது. அதே சமயம் ஆன்மிக அறிவு இருப்பதன் காரணமாக, உலக விஷயங்களில் நாம் தகுதியற்றவர்களாக இருப்போம் என்றோ, உலகோடு நம்மால் இணைந்து செயல்பட முடியாது என்றோ எண்ணிவிட வேண்டாம்.
இந்தச் செயல்ளையும் உங்களது சுய மதிப்பையும் பிரித்தே வைத்திருக்க வேண்டும். இரண்டுக்கும் ஒரு தொடர்பை உண்டாக்குவது தவறு. உண்மையான மதிப்பு எங்கு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
You are not how you feel
Disconnect your central sense of who you are from what you do and how you feel. How you feel specially in the sense of the physical body. This is what the Buddha is talking about. Not identifying with what you do. i.e. your accomplishments or even the type of functions that you perform in the world and your essential sense of well being. And also disconnect from the physical body whether it is painful or not, whether it is ill or not. The importance of disconnecting. Because if you rely on that there is no way we can possibly get through and be well. So if we are going to be well on a substantially higher percentage of time it has got to be.. we got to make the disconnect between the stuff we do out there, our jobs and that can even be our job as a parent, job as a husband or wife. These can be disconnected from your central primary sensible obligation to just let the mind be unmolested and return to its essential shining nature.
Some of us are good at some things; Some of us are good at other things. We end up learning skills along the way - carpentry, how toilets work etc.. In the world this is kind of your identity, that is what you are and so forth. From the monks’ point of view and lay spiritual persons point of view you are not to take these things seriously. You are not to do them badly. That is not anything about what is important. Unfortunately most of our western structure thinks it is so wonderful that we can do these things - we can put satellites and so forth. One who has done that and has had exposure to that area but has had exposure to the Dhamma and to meditation just shakes his head. Yes that is alright but pales in comparison with what your real work is.
Your real work in this life is not that. That is just your livelihood, that is just to get along. People think everything of it. They are very proud of what they do. But when you contact Dhamma it all just becomes so small, trivial by comparison. To think you can make meaning in life by those means of your skill in the world by arranging of things in the world is so stupid. You can be very clever and be stupid at the same time. On the other hand if you have a grasp of the Dhamma nothing else matters, whether you are any good at this stuff. At the same time just because you have spiritual realization does not make you inept or not functional or anything like that.
Disconnect your sense of worth from these matters. To tie up your sense of worth with your competence is folly. It is a matter of understanding where the values lie.
42. உங்களை வசப்படுத்தியுள்ளது எது? Top
ஒரு விதத்தில் இவை புத்தர் கூறிய எட்டு உலக நிலைமைகள் சம்பந்தப்பட்டது:
புகழ்ச்சி மற்றும் இகழ்ச்சி; கீர்த்தியும், அறியப்படாததும்; வெற்றி, தோல்வி; இன்பம், துன்பம் ஆகிய எட்டு உலக நிலைகளை நாம் எப்படிச் சமாளிக்கின்றோம்? அறம், இந்த எட்டு நிலைகளாலும் ஈர்க்கப் படாமல் இவற்றைத் தாண்டிச் செல்வதே ஆகும். இவை எட்டும் தூண்டில்கள் போல. அவற்றில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதே அறமாகும்.
திபெத்திய பௌத்தத் தலைவர் தலாய் இலாமா (Dalai Lama) அவர்களின் தம்பியைச் சந்திக்கச் சமீபத்தில் எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இந்த எட்டு உலக நிலைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார், 'எனக்குப் புகழ் பற்றி அக்கறை இல்லை. மக்களுக்கு நான் யார் என்பது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் எனக்குக் கவலை இல்லை. அது பற்றி எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் என்னை மக்கள் குறைகூறினால் எனக்குப் பிடிப்பதில்லை. அந்தக் கொக்கியில் நான் இன்னமும் மாட்டிக் கொண்டுள்ளேன்.' என்றார்.
சில அரசியல்வாதிகள் இருக்கின்றனர். அவர்களை சாகும் அளவுக்குக் குறைகூறினாலும் அது அவர்களைப் பாதிப்பதில்லை. காண்டாமிருகத்தின் தோல் போன்று கடினமானது அவர்கள் தோல். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கீர்த்தி தான். எல்லோருக்கும் அவர்களைத் தெரிந்திருக்க வேண்டும். வேறு சிலர் குறைகூறப்படுவதைத் தவிர்க்கப் பார்ப்பார்கள். அவர்கள் அதை விரும்புவதில்லை. அவர்களைக் குறைகூறினால் எளிதில் புண்படுவார்கள்.
இதனைப் பிரதிபலித்துப் பாருங்கள். நீங்கள் எந்தக் கொக்கியில் சிக்கியுள்ளீர்கள்? மற்றவர்கள் புகழ்கின்றனரா, இல்லையா என்பது உங்களுக்கு முக்கிய மற்றதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் செய்யும் காரியம் உங்களுக்கு முழுநிறைவு தரும் சரியான செயலாக இருக்க வேண்டும்.
நீங்கள் எந்த கொக்கியில் சிக்கியுள்ளீர்களோ, அதன் படியே வாழ்வில் துன்பம் அனுபவிப்பீர்கள். நீங்கள் அதனோடு இணைக்கப்பட்டு விட்டீர்கள். நான் என்ன செய்தாலும் மக்கள் என்னைப் புகழவேண்டும். மக்கள் என்னைப் புகழாவிட்டாலும், என்னை அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். வேறு சிலர் குற்றங்களைச் செய்வார்கள், பயங்கரமான குற்றங்களைச் செய்வார்கள். பாராட்டப் படுவதற்காக அல்ல. எல்லோருக்கும் தாங்கள் இந்த உலகில் இருப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு. 'நான் இருக்கின்றேன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.' இப்படிப் பல காரணங்கள். நமது வாழ்வை நாம் உன்னிப்பாக ஆராய்ந்து பார்த்து, நாம் சிக்கியுள்ள கொக்கிகள் எவை என்று அறிந்து, அவற்றைக் களைய வேண்டும். அவற்றோடு பற்றற்றிருக்க வேண்டும்.
What are you hooked to?
In some sense it has to do with what the Buddha called the eight worldly conditions:
How do we handle praise and blame, obscurity and recognition, success and failure, coming in contact with what we don't like and coming in contact with what we like.
The Dhamma is the way through that without getting hooked into these polarities.
'I don't care really about fame, I don't care if people know about who I am or what I do. That is not one of my things. But I don't like it when people blame me. I am still hooked into that.'
Some politicians, you blame them to death but it doesn't matter. They have skin like a rhinoceros. They just want to be famous. Other people would rather avoid that. It is not what they want. But they may be sensitive to blame.
Reflect about this. What are you hooked into?
Maybe you don't care if anybody praises you but what you do, you want to do right. To your satisfaction.
Whatever you are hooked into that is how you suffer. You are attached to it. Whatever I do people have to praise me for it. Or I don't care if people praise me I just want to be well known. Some people commit crimes, they do spectacular crimes. not to be praised but to confirm their existence on earth. 'So people at least know I existed.' Various motivations. We have to scan our life to areas where we are hooked. And we have to unhook. And to let those things go.
43. பற்றின்மையும் உறுதி எடுப்பதும் Top
பௌத்தத் துறவிகள் எக்காரணத்தைக் கொண்டும், உயிரே போவதானாலும் தங்களுக்கான முக்கிய சீலங்களை முறித்துக் கொள்ளக் கூடாது என்று புத்தர் கூறினார். சீலங்களுக்கு உயிரைக் காட்டிலும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றைக் கடைப்பிடிக்க உறுதி எடுத்துக் கொள்ளச் சொன்னார். அதே சமயம் அவற்றோடு பற்றற்றிருக்குமாறும் வலியுறுத்தினார்.
சில சமயம் இது தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது. 'சீலங்களுக்கு முக்கியத்தும் தரவேண்டியதில்லை. அவை வாழ்க்கைக்குப் பயனளிக்கும் சில நெறிமுறைகள் மட்டுமே. இடையூறாக இருந்தால் அவற்றைக் கடைப்பிடிக்கத் தேவை இல்லை. அவற்றோடு பற்றுக் கொள்ள வேண்டாம்,' என்று சிலர் நினைக்கின்றனர். இந்த எண்ணம் தவறானது. புத்தர் இந்தக் கருத்தில் இதைப் போதிக்கவில்லை. அவர் மிகத் தெளிவாகவே கூறினார்.
‘பற்றற்றிருங்கள்’ என்றால் சீலங்களைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று பொருள் அல்ல. அவற்றைப் பிடித்துக் கொள்ள வேண்டாம். சீலங்களைக் கடைப்பிடித்து வெற்றி கொண்டாடப் பார்க்கிறோம். அதனால் நாம் பாராட்டப் படவேண்டும் என்று நினைக்கின்றோம். அதை இவ்வாறு பிடித்துக் கொள்வது, கவலைப் படுவது, தன்னுணர்வோடு கடைப்பிடிப்பது, இப்படி நாம் பற்றுக் கொள்ளாது விட்டு விட வேண்டும்.
ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்பதில் உங்களுக்கு உள்ள தகுதி, அவற்றைக் கடைப்பிடிக்க நீங்கள் எடுத்த உறுதிமொழி பாதிக்கப் படுவதில்லை. சீலங்களைக் கடைப்பிடிப்பதில் அக்கறை இல்லாமல் இருக்கக் கூடாது. ஆகவே பற்றின்மையும், ஒன்றைச் செய்வது என்று உறுதிஎடுத்துக் கொள்வதும் எதிர்மறையான சொற்களே இல்லை. உண்மையிலேயே ஒன்றைக் கடைப்பிடிக்க முழுமூச்சாக இறங்கும் போது அதனோடு பற்றில்லாமலே இருக்க வேண்டும். ஒன்றைக் கடைப்பிடித்தால் நான் உயர்வேன், இல்லையேல் தாழ்வேன் என்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
புத்தரின் பார்வையில், நற்காட்சியும் பற்றில்லாத நற்காட்சியாக இருக்க வேண்டும். ஆகவே நற்காட்சியையும் - அட்டாங்க மார்க்கத்தின் முதல் கூறு இது – அறிந்து கொள்ள வேண்டும். அதைப் பயில வேண்டும், அதன்படி நடக்க உறுதி கொள்ள வேண்டும். ஆனாலும் நற்காட்சியின் ஒரு பகுதி கருத்துக்களோடு பற்றுக் கொள்ளாமல் இருப்பது எனக் கூறப்படுகிறது. அதாவது நற்காட்சி இருக்க வேண்டும். ஆனால் காட்சிகளோடு பற்றிருக்கக் கூடாது. இது முழுதும் சாத்தியமானதே. நற்காட்சியும் இருந்து அதனோடு பற்றில்லாமல் இருப்பது முரண்பட்டது அல்ல.
தெளிவாக எது சரி, எது தவறு என்பது தெரிந்திருக்க வேண்டும். நல்லெண்ணத்தைச் சில சமயம் பெரும் முயற்சி செய்து ஏற்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் அதனோடு பற்றுக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் அந்தப் பற்றினால் தான் துக்கம் உண்டாகிறது. பிடிப்பு, அதனோடு அடையாளம் காண்பது. அதனால் தான் பிரச்சனை. முதலில் இந்தக் கருத்து மக்களைக் குழப்புகிறது. ஆனால் இதன் மீது திரும்பத் திரும்பப் பிரதிபலிக்க வேண்டும். இதுவே போதனைகளின் சாரம் எனலாம்.
புத்தர் தனது துறவறச் சீடர்களைக் கேட்கிறார்: 'யாராவது இங்கு வந்து எனது போதனைகளைப் பற்றிக் குறைகூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?'
இந்த விஷயத்தில் அவர்களைக் கோபிப்பதா? அது விசித்திரமாக இருக்கும் அல்லவா? ஏனென்றால் போதனைகள் கோபப்படாமல் இருப்பதனையே வலியுறுத்துகின்றன. கோபப்படாமல் இருக்க வேண்டும் என்ற போதனைகளைப் போற்றக் கோபத்தோடு வாதாடுவதா? அது முரண்பட்ட செயலாகுமே! உங்களுக்கென்று தனிப்பட்ட சில கருத்துக்கள் உள்ளன. ஆனால் அவை மற்ற கருத்துக்களுக்குச் செவி மடுப்பதைத் தடை செய்வதில்லை. அவர்கள் சொல்வதையும் கேளுங்கள். அவர்கள் சொல்வதில் பயனுள்ளது ஏதேனும் இருந்தால் உங்களுக்குத்தான் இலாபம். அவர்கள் சொல்வதில் பயனுள்ளது எதுவும் இல்லாவிட்டால் நீங்கள் அதைக் கேட்டதால் எதையும் இழந்துவிடப் போவதில்லை.
Detachment and Commitment
Buddha says his monks should not violate their virtue - their primary precepts even for the sake of life. Commitment to hold that above the value of your own life. At the same time he says you should be detached from it.
Sometimes this is misunderstood. 'You don't take these things seriously, they are a sort of guideline for life. If it is inconvenient then don't be set by it... don't get attached to it.'
That is not what is meant. It is clear what is meant.
Don't be attached has nothing to do with not following the precepts. It has to do with your grasping at it. Your trying to make a success out of the matter. Thinking you are praise worthy. You are grasping, worrying, self consciousness about it. That should be let go.
But your competence in the matter, your undertaking to do it well is not affected by this. You do not take it casually at all. So detachment and commitment are not opposites at all. If you really want to commit your full energies to some truthful endeavor, one of the ways you must do it, is to be detached from it. Not to bring your sense of self worth to the matter.
Right view from the point of view of the Buddha entails its own detachment from itself. So even right view - the first step of the noble eight fold path is right view - it must be understood, it must be practiced, it must be committed to and yet one of the aspects of right view is not to cling to views. You must have right view but you must not cling to it. And that is entirely possible. They are not mutually exclusive at all.
We must have a clear sense of ethics. We must generate sometimes with great effort goodwill but we must not cling to it, because it is the clinging where the suffering arises. The grasping, the clinging, the identification with these things. First it is bewildering to people. But you have to reflect on it again and again. It is the essence of the teaching.
The Buddha asks his monk disciples, if somebody comes and criticize my teachings how do you react? Should you get angry about the matter? That would be strange, wouldn't it? Because the teachings invoke non-anger. To defend non anger in an angry way is self contradictory. You have your view of things. But it allows you to listen. Listen what they have to say. If they have anything of use to say then you just gained something. If they don't have anything of use to say then you lost nothing.
44. தெப்பம் Top
புத்தரின் பிரபலமான உவமானங்களில் இதுவும் ஒன்று. போதனைகள் ஆற்றைக் கடக்க உதவும் தெப்பத்தைப் போல. இக்கரையில் ஆபத்துள்ளது. அக்கரையோ பாதுகாப்பானது. இது அழகாகப் பல நாட்களாகக் கட்டப்பட்ட தோணி அல்ல. விரைவாகக் குச்சிகளையும் கட்டைகளையும் சேர்த்துக் கட்டப்பட்ட கட்டுமரம். உடல் பாரத்தைத் தாங்கக் கூடிய ஒரு மிதவை. அதில் படுத்தவாறு கையையும், காலையும் அவசரமாக நீரில் அடித்துக் கொண்டு மறுகரை சேர்வது தான் நம் குறிக்கோள். அவர் துறவிகளைக் கேட்கிறார், 'அக்கரை சேர்ந்தபின் அந்தத் தெப்பத்தைத் தலையில் தூக்கிக் கொண்டு போவது சரியா?"
துறவிகள், "இல்லை ஐயா. அது புத்திசாலித்தனமாகத் தோன்றவில்லை. கரையிலேயே விட்டு விட்டுச் செல்ல வேண்டும். இனி அது நமக்குத் தேவை இல்லை. ஆற்றைக் கடக்கும் வேலை முடிந்து விட்டது," என்று பதில் கூறுகின்றனர். போதனைகளின் ஒரு பொட்டணம் என்று இந்தத் தெப்பம் விவரிக்கப் படுகிறது. அட்டாங்க மார்க்கம் போன்ற சில போதனைகளை எடுத்துக் கொள்கிறோம். அவற்றைச் சேர்த்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்குகின்றோம். மாபெரும் கப்பல் கட்டத் தேவை இல்லை. மிக வேகமாகச் செல்லும் படகைக் கட்ட வேண்டியதில்லை. திரிபிடகத்தை முழுமையாகவோ, அபிதம்மத்தின் விவரங்களையெல்லாம் படித்து முடிக்க வேண்டியதில்லை. ஒரு சிலவற்றை எடுத்துக் கொண்டு நீந்த ஆரம்பிக்க வேண்டும். இந்தத் தெப்பம் உங்களை நனையாமல் கூட வைத்திருக்காது. அவசர அவசரமாக நீரை அடித்துக் கொண்டு அக்கரை சேரும்வரை உங்கள் பாரத்தைத் தாங்கக் கூடியது மட்டுமே.
தெப்பத்தை விட்டு விடுவது அக்கரையில் சேர்ந்த பின்னர் தான். சரியான பார்வை உங்களைப் பாதையின் இறுதிக்கே அழைத்துச் செல்லும். அதன் பின் அதுவும் தேவையில்லை. அதனோடு பற்றுக் கொள்ளத் தேவையில்லை. சிலசமயம் போதனைகள் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகின்றன. மக்கள் தெப்பத்தை அக்கரைக்குச் செல்லும் முன்னரே விட்டு விடுகின்றனர். அவர்கள் நினைப்பது, 'ஓ, பற்றின்மை. எல்லாவற்றிலிருந்தும் பற்றின்மை. ஆகவே நன்முயற்சி தேவையில்லை. சீலங்கள் தேவையில்லை. நன்நடத்தை தேவையில்லை. மனஒருமுகப் படுத்தலும் தேவையில்லை."
இல்லை. இல்லை. இல்லை. முதலில் ஆற்றைக் கடக்க வேண்டும். அதன் பின்னர் தான் தெப்பம் தேவைப் படாது. அப்போதுதான் நாம் அதை விட்டு விடுகிறோம். தலையில் தூக்கிக் கொண்டு போக வேண்டியதில்லை. அதுவரை உங்களை மிதக்க வைத்துக் கொண்டிருப்பது அந்தத் தெப்பம் தான்.
ஆகவே திறமையாக இவற்றைப் பயன்படுத்தி நாம் போக வேண்டிய இடத்துக்குப் போக வேண்டும். அதேசமயம் நமக்கு அவற்றைப் பாரமாகவும் ஆக்கிக் கொள்ளக் கூடாது. தேவைக்குத் தகுந்தார்ப் போல் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - அதாவது விடுதலை பெறுவதற்கு அழைத்துச் செல்ல அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறிக்கோளை அடையச் சக்தியைஎவ்வாறு பயன்படுத்துவது என்று புரிந்து கொள்வதோடு புதிதாகச் சுமையேதும் ஏற்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆகவே வாழ்க்கையில் கார்களையும், வானொலிகளையும் பழுது பார்த்து மற்றவர்களுக்கு உதவலாம். கருவிகளெல்லாம் எப்படி வேலை செய்கின்றன என்பதைப் புன்னகையுடன் விளக்கிச் சொல்லலாம். ஆனால் இவை எல்லாம் முக்கியமானவை அல்ல என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஆன்மீக விடுதலை பெறுவதற்கு இவை எல்லாம் இணையானவை அல்ல. உங்கள் அறம், அதுவே உண்மையான விடுதலை. உங்கள் ஆன்மீக விடுதலை. அதுதான் உண்மையில் அனைத்தினும் முதன்மையானதாகும். அதனால் நீங்கள் உலக விஷயங்களுக்குத் தகுதியற்றவர் என்பதில்லை. அறிவியல், தொழில்நுட்பம் அடங்கிய இன்றைய நவீன உலகில் செய்ய வேண்டியதைக் குழப்பமடையாமல் செய்து கொண்டிருங்கள். அதே சமயம் உண்மையான மதிப்பு எங்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உண்மையான அறிவு எங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். பின் நிதானமான, நல்ல வாழ்க்கையை நடத்துங்கள்.
The Raft
The Buddha says this famous simile of a raft. The teachings are a raft to get you across the river. And this is just a throw together raft, not a very elaborately made raft. It is just a bundle of sticks that supports your chest as you paddle with your hands and your legs to cross the river. He asks, 'And when you get to cross the river should you now carry the raft on your head?' So do you pick it up and put it on your head and walk away?
So the monks say, No that doesn't sound very sensible. You just abandon the raft. Leave it. You don't need it. The task is accomplished. So it is described as a kind of bundle of teachings. You just grab the eight fold path, a few teachings like that. Stick it together and start crossing. Don't build Noah's Ark. Don't build the finest speed boat. You don't have to learn the whole Tripitaka and the fine points of Abidhamma or anything like that. Just bundle it up and start swimming. It is not a raft you can even fully stay dry on. It is a kind of a thing that keeps you up while you paddle like hell to get across.
That abandoning of the raft is after it is used. Right view leads you to the end of the path. And then you don't need it any more. You don't cling to it anymore. Sometimes the teaching is misunderstood. People abandon the raft before they cross the river. So they think, 'Oh detachment. So detachment from everything. I don't need right effort. I don't need Sila. I don't need right conduct. I don't even need concentration.'
No. No. No. You have to use that to cross the river first. Then you don't need the raft after that. That’s when you let go. You don't carry it then. Until that time that is what is keeping you afloat.
So we have to somehow skillfully use these things to get us where we want to go without them bogging us down too. Making a burden out of them. Using them for the purpose they are intended to - leading us to liberation.
We have to understand how to put commitment and energy into this without at the same time forming a new preoccupation and a binding.
So you can go about and fix cars and radios, help people out and describe how satellites work and so forth and at the same time in a smiling way. Understand that these are not important. They really don't come anywhere near the importance to the level of your freedom. Your dhamma. True freedom. Your spiritual freedom. That is the thing that really matters. But it does not make you incompetent either. You go about and do your thing in this sophisticated technological world and not get confused. Understand where the real value is. Where real intelligence lies. Then you will live in a collected, dignified fashion and lead a good life.
45. கட்டுப்பாடும் கட்டுப்பாடின்மையும் Top
மூச்சைப் பொருத்தவரை, அதன் ஒருபகுதி விருப்பப்படி (voluntary) நடைபெறும் நடவடிக்கை. மறுபகுதி தானாக (involuntary or autonomic) நடைபெறும் நடவடிக்கையாகும். அதைத் தன்னுணர்வுடன் கவனிக்கும் போது, அதன் நடவடிக்கையில் நாம் குறுக்கிடுவதால், மூச்சு திணறுவதைப் பார்க்கிறோம். நீண்டநாள் தியானம் செய்யப் பயிற்சி எடுத்துக் கொண்ட பின், மூச்சைக் கவனிப்பதில் நாம் திறமை பெறுகிறோம். அதனாலேயே புத்தர் மூச்சை ஒரு தியானப் பொருளாகத் தேர்ந்தெடுத்தார். அது கட்டுப் பாட்டுக்கும், கட்டுப்பாடின்மைக்கும் இடையில் இருக்கிறது.
உங்களைச் சுற்றியுள்ள உலகிடம் உங்களுக்கு உள்ள உறவும் அதுபோலத்தான் உள்ளது. கட்டுப்பாடில்லாத உலகைக் கட்டுப்படுத்த முயலும் போது மூச்சைக் கட்டுப்படுத்த முயலும் போது மூச்சு எப்படித் திணறுகிறதோ அதே உணர்ச்சி தான் உண்டாகிறது. சுற்றியுள்ள மனிதர்கள் என்ன செய்கின்றனர், எப்படி யோசிகின்றனர், என்ன பேசுகின்றனர், இன்றைய காலநிலை (weather) போன்றவையெல்லாம் நாம் கட்டுப்படுத்தக் கூடியவை அல்ல. அதேசமயம் அதைத்தான் நாம் செய்ய முயல்வதாகத் தோன்றுகிறது. புத்தர் இது மடமை என்றார். உலகை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பது இயலாத காரியம்.
விமானம் தரை இறங்கும்போது பயணம் செய்யும் உங்களுக்குப் பயம் இருக்கலாம். விமான நிலையத்தை நோக்கி இறங்குவதற்காக விமானம் சென்று கொண்டிருக்கிறது. வெளியே பார்த்தால் இன்னமும் தண்ணீர் தான் தெரிகிறது (கடல் ஓரத்திலுள்ள விமான நிலையம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.) 'இங்கு விமானம் இறங்கிவிடக் கூடாது. இன்னமும் நீரின் மேல் இருக்கிறோம்,' என்று பயந்து கொண்டே நாற்காலியின் கையை இருக்கிப் பிடித்துத் தூக்க முயல்கிறோம். ஏதோ, அப்படிச் செய்வதால் விமானம் தண்ணிரில் இறங்காமல் விமான நிலையத்தைச் சேர்ந்து விடும் என்ற நினைப்பு.
சிலசமயம் விமானம் புறப்படும் போதும் அது நிகழ்கிறது. விமானம் மேலே ஏறுவதற்கும் உங்கள் உதவி தேவைப்படுகிறது (சிரிப்பு). மேலே.. மேலே.. மேலே.. தூக்கு.. தூக்கு.. நாற்காலியில் கையை இறுக்கப் பிடித்துத் தூக்குவதால் விமானம் மேலே சென்று விடுகிறது!
நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இறுக்கப் பிடித்துத் தூக்கியதால் விமானம் மேலே செல்லவில்லை. அந்த நாற்காலியின் கையை நீங்கள் விட்டு விட்டால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. (சற்றுப் பயத்தின் காரணமாக இதைச் செய்தாலும், இது உலகைக் கட்டுப்படுத்துகிற முயற்சியாகத் தோன்றுகிறது. உண்மையில் நாம் உலகைக் கட்டுப்படுத்தி விடவில்லை.) சாந்தமாக இருங்கள்.
கவலையை விடுங்கள். இது போன்ற மன அழுத்தம் - 'அவன் பேசுவதை நிறுத்தமாட்டானா!' போன்ற விருப்பங்கள், தேவைகள், நம்பிக்கைகள்.. இவை எல்லாம் மடமை. இவற்றைக் கவனிக்கப்பதோடு விட்டுவிட வேண்டும். இவை நமது கட்டுப்பாட்டில் இல்லை. உங்களுடையதும் இல்லை. அவற்றை நீங்கள் செயற்படுத்தவில்லை. கட்டுப்படுத்தும் முயற்சியை விட்டு விட்டு அப்பால் நகருங்கள்.
பின் நாம் என்னதான் செய்ய முடியும்? உங்களால் செய்ய முடிபவை உண்டு. உங்கள் மூச்சை சுவாரஸ்யமாகப, பட்சபாதமில்லாமல் கவனிக்கும் போது அதன் வேகம் குறைந்து விடுகிறது. நாம் அதைக் கவனிப்பதே அதைப் பாதிக்கிறது. அதன் சுயமான செயற்றொடர் பாதிக்கப் படுகிறது. ஆனால் மூச்சைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யும் போது நம்மால் அது முடிவதில்லை. அமைதியாக அதைக் கவனிப்பதனாலேயே அதன் வேகத்தைக் குறைக்க முடிந்தது. ஆகவே மக்களின் மத்தியில் நீங்கள் அமைதியாக இருப்பதால் மட்டுமே அவர்கள் மீது உங்கள் பாதிப்பு உண்டாகிறது. கட்டுப்படுத்த முயன்றால் நம்மால் எதுவும் செய்ய முடிவதில்லை. சுற்றுப்புறத்தைக் கட்டுப்படுத்த நினைக்காவிட்டால் சுற்றுப்புறத்தைப் பாதிக்க முடிகிறது. உங்கள் பாதிப்பு அமைதியானதாக இருக்கும். மெதுவானதாக நிதானமானதாக இருக்கும். எனவே கட்டுப்படுத்த நினைக்க வேண்டாம்.
இது விசித்திரமாகத் தோன்றுகிறது. உங்கள் கட்டுப் பாட்டில் உள்ளதும், இல்லாததும் எது, எப்படி என்பதைத் தெரிந்திருப்பது. எங்கே உங்கள் முயற்சி பலன் கொடுக்கும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.
Control and out of control
The breath is a partially voluntary and partially autonomic process. If you become conscious of it, you start to interfere with its functioning and you can't get your breath. Once you meditate a lot you become used to being conscious of your breath. That is the reason why the Buddha chose the breath. It is half way between control and out of control.
That is kind of your relationship to the world around you. If you try to control the world it is the same kind of feeling like you can't get the breath because you are trying to interfere with the process that is really not voluntary. What people do in the room, how people think, what they say and what the weather is.. stuff like that is not yours to control. But at the same time there is a feeling like you are trying to. The Buddha is saying that is stupid. You can't do it.
If you are nervous in a plane, it is coming in for the landing, it is coming down. 'Hope it does not set down here. We are still above water,' and you are kind of pulling up on the arms of the chair to make sure it stays up until it gets to the runway.
Sometimes take offs too. Sometimes take offs they need your assistance (laughter). Up.. Up.. Up.. lifting lifting. This lifting of the airplane (by pulling up the arm rest). I got to tell you something. It doesn't affect the airplane at all. It is not you that is lifting the airplance. And if you let go of the armrest nothing will happen.
Just relax.
This inner kind of stress 'will they shut up 'etc wishing, wanting, hoping - all that is foolishness. Just watch it. It is out of control. It is not yours. You are not running it. Let go. Walk away.
Then what can you do? You can do something. Interestingly when you watch your breath in a dispassionate sort of way, it slows down. Just watching it affects it. It affects the autonomic structure that you can't access with effort. Only by just watching in a detached way it will slow down. So if you are very peaceful amongst people without trying to control them you will have an effect on them. Without trying to control your environment you will effect your environment in a ..your influence will be peaceful. Slowing down, calming down.
That is that strange back and forth between what is out of your control and what is in your control. Just knowing which is which, Knowing where to place your efforts.
46. வெறுமை Top
எது இல்லாமல் இருக்கிறது? துக்கம் இல்லாமல் இருக்கிறது. அதுதான் வெறுமை என்பதன் பொருள்.
‘ஆத்மன்’ இல்லாமல் இருப்பது என்று சொன்னால் உடனே, 'ஆத்மா இல்லாமல் இருப்பதில் எனக்கு விருப்பமில்லை,' என்று நீங்கள் கூறலாம். (சிரிப்பு) ஆனால் துக்கம் இல்லாமல் இருப்பது என்று சொன்னால், 'ஆ, துக்கம் இல்லாமல் இருக்க விரும்புகிறேன்,' என்று நினைக்கின்றோம்.
ஆனால் இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையே. துக்கம் நீங்க வேண்டுமென்றால் ஆத்மனும் (கெட்டியான, துக்கத்தை அனுபவிக்கும் நிலையான 'நான்' என்று ஒன்று இருப்பதாக உள்ள எண்ணமும்) நீங்க வேண்டும். சிகரெட் பிடிக்கும் ஒருவர் மறைந்தபின் தான் சிகரெட் பிடிக்காத ஒருவரை உருவாக்க முடியும்.
நான் என்ற நமது அடையாளம் இது போன்றவற்றினால் (மாற்றமில்லாச் சில இயல்புகள் நம்மிடம் நிலையாக இருப்பதாக நினைப்பது ) உருவாகிறது. ஆனால் இவை தான் துக்கத்தை உருவாக்குகின்றன. அதானால் தான், 'ஓ அப்படிபட்டவன் நான். என்னால் ஒன்றும் செய்ய முடியாது,' என்று நினைக்கின்றோம்.
இல்லை; இல்லை. உங்களால் செய்ய முடியும்.
Emptiness
Empty of what? Empty of suffering. That is what empty means. Empty of suffering. When I say empty of self you may think 'I don't want to be empty of self' (laughter). But if I say Empty of suffering you think, 'I want to be Empty of suffering.' Well the two go together. You got to go if suffering is gone. The person who is addicted to cigarette has got to go if you are going to have a person who is not addicted to cigarettes. Your identity is formed around all of these stuffs but the stuff is intrinsically part of your suffering. So the sense of self is built around this so well, 'This is the way I am. There is nothing I can do about that.' Well yes, there is.
47. மன்னித்தல் Top
உட்பகையை மனத்தில் வைத்திருப்பது ஒரு அசௌகரியமான உணர்ச்சி. ஆகவே மன்னிக்காமல் இருப்பது யாருக்கு அசௌகரியமாக இருக்கப் போகிறது? உங்களுக்குத்தான்.
நல்லெணத்தைப் பரப்பத் தியானம் செய்யும்போது முதலில் உங்களுக்கே நீங்கள் நல்லெண்ணத்தை விரும்புகின்றீர்கள். நீங்கள் நலமாக இருக்க வேண்டுமென்றால் மன்னிப்பது நல்லது. மனத்தில் வெறுப்பை வைத்திருக்க வேண்டாம். போகட்டும், விடுங்கள். இல்லாவிட்டால் யார் உங்களை அசௌகரியப் படுத்துவது? யார் உங்களை அசௌகரியப் படுத்தியது? நீங்கள் தான்!
மற்றவர் செய்த தவறுகளைத் தொடர்ந்து, உங்களுக்கு நீங்களே விளைவித்துக் கொண்ட அசௌகரியத்தை விட்டு விடுவதுதான் மன்னித்தல் என்பது. இல்லையா? இதற்கு ஏன் முக்கியத்துவம் தரவேண்டும்? மக்கள் எப்போதும் குற்றங்களைச் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். ஏன் அப்படிச் செய்கின்றனர் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். அதைப் பெரிது படுத்தத் தேவையில்லை. அவற்றைக் கவனித்துப் பாருங்கள். அவற்றில் உங்களுக்குச் சம்பந்தமேதும் இல்லை. அவர்கள் என்ன செய்தாலும் நீங்கள் அதில் சம்பந்தப்பட வேண்டியதில்லை. அவர்கள் செய்வதைச் செய்துகொண்டிருக்கட்டும். அது மனிதர்களின் விசித்திரமான இயல்பு. மிருகங்களும் அப்படித்தான். ஆனால் வெறுப்புக் கொள்வது அறிவான செயல் அல்ல என்பதை உணர வேண்டும். அதைத் தீண்ட வேண்டாம். அருகில் செல்ல வேண்டாம். போகட்டும், விடுங்கள்.
இதை வேறுவிதமாகவும் பார்க்கலாம். உங்களிடம் ஒருவர் மன்னிப்புக் கேட்கிறார். நீங்கள் மன்னித்து விடுகின்றீர்கள். 'நான் உன்னை மன்னித்து விட்டேன்.' தங்களை மன்னித்துக் கொள்ள வேண்டியது அவர்கள் பிரச்சனை. உங்களை மன்னிக்க வேண்டியதும் அவர்கள் பிரச்சனை தான்.
சில சமயம் நான் மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்பேன். அதன் முடிவைப் பற்றி நான் கவலைப் படுவதில்லை. இங்கே நான் குறிப்பிட விரும்புவது, அவர்கள் நம்மிடம் அன்பு பாராட்ட வேண்டும். என்னுடைய நடத்தையின் காரணமாக அவர்கள் தொந்தரவுபடக் கூடாது. எனவே, 'என்னை மன்னிக்கவும்' என்று நான் கூறும் போது சுமை என்னிடம் இல்லை. என்னிடமிருந்து விலகி விடுகிறது. இப்போது சுமை அவர்களிடம் போய் விட்டது. அவர்கள் என்னை மன்னித்து விட்டால் அவர்களிடமும் சுமை இனி இருக்காது. என் மீது மனச்சஞ்சலம் உண்டானதால் ஏற்பட்ட அசௌகரியமான உணர்ச்சியிலிருந்து அவர்கள் விடு பட்டால் அது என்னை மகிழ்விக்கும். ஆகவே என்னை மன்னித்து விட்டால் அவர்கள் சுமை விடுபட்டு விடும். போகட்டும் விடுங்கள்.
மக்கள் சிலசமயம் குழம்பிப்போய் விடுகின்றனர். “நான் உன்னை மன்னிக்க மாட்டேன்! நீ இதைச் செய்தாய்.. அதைச் செய்தாய்!.” போகட்டும். மன்னித்து விடுங்கள். உங்கள் செய்கையினால் நான் கஷ்டப்பட வேண்டியதில்லை. நீங்களும் நான் முன்பு செய்த செயல்களால் பாதிக்கப் படாமல் இருக்கலாம்.
அதுவே மன்னிப்பதன் இலக்கணம். மற்றவர் செய்த பாவங்களை நீங்கள் துடைத்துவிடப் போவதில்லை. கிருத்துவ நெறியை பார்த்துச் சிலர் குழப்பிக் கொள்கின்றனர். உங்களுடைய கன்ம விளைவுகளை நீக்கி விடுவதாக நினைப்பது. புத்தர் தன்னால்கூட கன்ம விளைவுகளை நீக்கி விட முடியும் என்று ஒருபோதும் கூறவில்லை. ஒரு தவறு செய்திருந்தால் ஒரு மேன்மையானவரின் அடையாளம், 'உனக்குப் பிரச்சனை உண்டு செய்து விட்டேன். என்னை மன்னிக்கவும்.' என்று சொல்வதுதான்.
உன்னை மன்னித்து விட்டேன் என்று சொல்வதும் ஒரு மேன்மையானவரின் அடையாளம். 'இத்தகைய தவற்றை மீண்டும் செய்யாதே. நீ நலமாக இரு' என்று வாழ்த்துவது. ஆனால் அப்படி அவர் சொல்வதால் உங்களுடைய கன்மத்தை அவர் துடைத்து விட்டார் என்று எண்ணிவிட வேண்டாம். எவராலும் அதைச் செய்ய முடியாது.
Forgiveness
Holding a grudge is always an uncomfortable feeling. So with lack of forgiveness guess who experiences the discomfort? You!
In regards to metta practice if you do have kindness for yourself, if you do want yourself to be well, it would be well to forgive. Not hold a grudge. Let it go. Otherwise guess who is making you uncomfortable? Guess who is doing it to you? You!
So forgiveness is letting go of your own self imposed discomfort over the various shenanigans of other beings. Right? Why do you care? People are up to shenanigans all the time. And they have got their own shenaniganed idea why (laughter). You don't have to make anything of it. You can just watch it. It is nothing to you. No matter what they do, it is nothing to you. Let them do it. It is the peculiar behaviour of humans, animals whatever. Whatever you are taking umbrage against. And realize that it is not a wise idea. Don't touch it. Don't go there. Let it go.
And then there is the other element. Somebody asks you for forgiveness. So then you forgive them. I forgive you. It is their problem to forgive themselves. Their problem to forgive you.
I sometimes ask people for forgiveness. I am not worried. But I am suggesting that they be kind to themselves and not disturb themselves about me and my behaviour. So if I say, 'Forgive me,' it is not me that has the burden, it is them. If you forgive me you won't be burdened anymore. I will be happy if you are free of that unhappy experience of judging me. So the burden is gone. Let it go.
People sometimes are confused by that. I am not forgiving you! You did this, you did that. Out of compassion for that person. Whatever! Let it go. And Be free. I will try to be the same. Let it go and be free. I am not weighted down by your behaviour. And you are not weighted down by my past behaviour.
That is the logic of forgiveness. It is not that you are relieving anybody of their sins. May be confused with Christianity. Some how I will lift your karma by forgiving you. The Buddha never said he could do that even. It is a mark of a noble person if somebody has done anything wrong to get over it. It is a mark of a noble person to ask for forgiveness. Forgive me I wronged you.
It is a mark of a noble person to say you are forgiven. May you not do anything like that in future. May you be well. But it doesn't mean that he has somehow lifted your sins from you or absolved you of your karma. None can do that.
48. தன் வாலையே துறத்தும் நாய் Top
கேள்வி: மன்னித்தல், சங்காரங்களை எரித்துவிடும் என்று கேள்விப்பட்டேன்.
பதில்: சங்காரங்கள் என்பது பாலி வார்த்தை. 'சா' என்பது 'சேர்ந்து' என்றும், 'காரா' என்பது செய்கை என்றும் பொருள் படும். கன்மச் செயல்கள். சேர்த்துச் செய்வது, உருவாக்குவது, மனத்தில் முடிவெடுக்கும் செயற்றொடரை விவரிக்கிறது. புத்தர், 'கன்மம் என்பதை ஒரே வார்த்தையால் விவரிக்கிறேன். அதுதான் -சேத்தனா - அதாவது தெரிந்து செய்யும் செய்கை’ என்றார். அதுதான் கன்மம்.
ஆகவே சங்காரம் என்பது தெரிந்து செய்யும் செய்கை என்றால், மன்னிப்பதால் மனத்தில் எடுக்கப்படும் சில முடிவுகள் தவிர்க்கப் படுகின்றன. மனக்கசப்பு, வருத்தம், கோபம், எரிச்சல், சோகம் போன்ற பயன்தராத மனநிலைகள், மன்னிக்காததால் உருவாகின்றன. துடிதுடிப்பு, வெறுப்பு சலிப்படைவது, ஊக்கமின்மை போன்றவையெல்லாம் இதிலிருந்து தோன்றுபவையே. அதன் விளைவாக உயிருடன் இருப்பதால் உள்ள துன்பமான இத்தகைய அனுபவங்களைத் தவிர்க்கப் பார்க்கிறோம். தற்போதைய மனநிலை எரிச்சலூட்டுவதாக உள்ளது. அதனால் வேறு ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்று தேடுகிறோம். சரி, எதையாவது சாப்பிடலாமா என்று தோன்றுகிறது. மனநிலை காய்ந்தும், எரிச்சலான நிலையிலும் இருப்பதால் ஏதாவது இசை கேட்கலாம் என்று நினைக்கின்றோம். ஆனால் அதிலும் நிவாரணம் கிடைக்கவில்லை. பின் வேறு எதையாவது செய்வதற்கு முற்படுகிறோம். ஒரு சங்கிலித் தொடராக ஒன்றன் பின் ஒன்றாகப் பலவழிகளில் தப்பிக்கப் பார்க்கிறோம். எதிலிருந்து? மனம் எரிச்சல் மற்றும் வெறுப்பின் காரணமாகத் தன்னைத்தானே திணரச் செய்து கொண்டிருக்கிறது. அது மிகவும் அசௌகரியமான அனுபவம்.
ஆகவே தீர்வு அதை நிறுத்துவதே. அதை நிறுத்தி விட்டால் இனிப்பைத் தேடிப் போகவேண்டியடில்லை. இனிப்பு அதிகம் சாப்பிட்டதால் வயிறு தொல்லை தருகிறது. எடை அதிகரிக்கிறது. குறைக்கப் பார்க்கிறோம். முடிவதில்லை. நம்மீது நமக்கு மேலும் கோபமும், எரிச்சலும் உண்டாகிறது, அதை மறக்க என்ன செய்வது? சரி மது அருந்தலாம் என்று முடிவெடுக்கிறோம். அதன் காரணமாக அடுத்தநாள் காலையில் தலைவலி. பணமும் வீணாகிவிட்டது. படிப்படியாக நிலமை மோசமாகிறது. 'சை! என்ன வாழ்க்கை? என்ன செய்வது என்றே தெரியவில்லை.'
இங்கு என்ன தான் நடக்கிறது? நாய் தன் வாலையே துரத்திக் கொண்டிருக்கிறது. வெறியுடன்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? எனக்குச் சுகமாக இல்லை. ஏன் இல்லை? அந்த மோசக்காரர்கள் என்னை வஞ்சித்து விட்டார்கள். என்னைப் பைத்தியக்காரனாகச் செய்து விட்டார்கள். மனதில் வெறுப்பு இருக்கும் போது நான் நலமாக இல்லை.
பின் தீர்வு என்ன? மோசம் செய்தவர்களைக் கொன்று குவிப்பதா? இல்லை. இல்லை (சிரிப்பு).
தீர்வு என்ன வென்றால் மோசம் செய்தவர்கள் மீது கோபம் கொள்ளாதிருப்பது தான். அப்படி மோசம் செய்பவர்கள் உலகில் என்றைக்கும் இருக்கத்தான் போகிறார்கள். மறக்கக் கூடிய ஒரே விஷயம் அவர்கள் மீது நமக்கு உள்ள வெறுப்புத்தான். அது நம்மால் செய்யக் கூடிய செயலே. இதுவே சிறந்த யோசனையாகத் தோன்றுகிறது.
உலகை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மனத்தைக் கட்டுப் படுத்த வாய்ப்பு உள்ளது. மனம் தனது பழக்க வழக்கங்களோடு செயலாற்றப் பயிற்சி பெற்றுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.
அதை ஏவி விடப் பழக்கப் படுத்தப்பட்ட ஒரு நாயைப் போலப் பழக்கி இருக்கிறோம். நம்மை யாராவது ஒரு விதமாகப் பார்த்தாலே, மனத்திடம் 'தாக்கு, மனமே தாக்கு..' என்று சொல்லிச் சொல்லிப் பழக்கப் படுத்தியிருக்கிறோம். (அதாவது எதிர்ச்செயல் செய்யப் பழக்கப் படுத்தியிருக்கின்றோம்) அந்தப் பழக்கத்தைச் சற்று மாற்ற வேண்டும். தாக்கும் வெறி நாயாக பழக்கப் படுத்தப் பட்டுள்ள மனத்தை, வாலாட்டும் நாயாக மாற்ற வேண்டும்.
Dog chasing its tail
Q: I read that the act of forgiveness can burn up sankharas.
A: Sankhara in Pali means the first part Sa means 'together' khara means doings. Karma doings.
Putting things together, fabricating, creating things. This is the essence of the decision making process. Volition. The Buddha says let me define karma for you in one word - chetana - meaning intentional action. That is karma.
So if Sankhara is a form of volition, forgiveness certainly can prevent certain volitions from arising. Resentment, regret, anger, irritability depression all kinds of negative things that come out of lack of forgiveness. Everything comes out of that. Restlessness, ill-will that proliferate into boredom and depression. You are avoiding the unpleasant experience of being alive. Because your consciousness is irritable. So keep seeking something else. That can trigger off some relief for you. Maybe you can distract yourself with greed. Focus on eating. I feel so dried out and irritable I think I will turn on some music. But it could be a little bit heavier than that. Music is not doing it for me. So I will damn near try anything. It sets off this whole chain of attempts to get away from this very uncomfortable experience which is - your mind is strangling itself with irritability and ill will.
So the solution is stop that. Quit that and then you don't have to go and have too much chocolate cake which is now making you sick and irritated at yourself afterwards and you get a sugar rush. And you are gaining weight and you are trying to lose weight. Damn it. I did it again. You get more irritated with yourself. So you take booze to forget that. And the next day you have a headache and you lose some money and you are one step downwards..Christ! I don't even want to face this..
And it goes on and on. What is going on there? The dog that is chasing its own tail. Furiously.
What is the root of all this? I don't feel well. Why not? Because all those nasty people out there who did bad nasty things to me. Makes me mad. When I am mad I don't feel good.
So the solution? Kill all the nasty people? No, No. (laughter)
The solution is don't get mad at nasty people. Nasty people will never go away. Nasty people will always be there. The only thing that can ever go away is being mad at them. The only thing you can get rid off. That would be a good idea.
You cannot control the world but you do have a chance of controlling your own mind. Remember it is habituated it is deeply convinced and it is trained.
It is trained as an attack dog. One glance and.. attack boy.. attack. And it goes for it. You have to work that out. Undo that conditioning. Retrain that Rotweiler into a golden lab.
49. மாநகரங்களில் உள்ள தனிமை உணர்ச்சி Top
கேள்வி: பெரிய ஊர்களில் தனிமையான உணர்ச்சி தோன்றுகிறதே? அறிமுகமில்லாதவர்களைக் கண்டு அச்சப்படுவது இதற்குக் காரணமோ?
தவறான எண்ணங்களால் தோன்றுவதே இந்தத் தனிமை உணர்வு. தவரான எண்ணங்கள் பழக்க வழங்களினாலும் இயற்கையாக உள்ள 'நான்' என்ற கருத்தினாலும் உண்டாவதே. இந்த 'நான்' என்ற கருத்தை, நாம் கேள்வி கேட்பதே இல்லை. உண்மையில் நிலையான ஒரு 'நான்' இருப்பதாகவே எண்ணுகிறோம். உங்களுடைய எல்லா எண்ணங்களிலும் இது ஊடுருவியிருக்கிறது. இந்த 'நான்' என்ற ஒரு தனிமனிதன் இருப்பதாக நினைப்ப தாலேயே தனிமை என்கின்ற உணர்ச்சி உண்டாகிறது. ஏனென்றால் தனித்து இருக்க ஒருவர் இருக்கிறார். உங்களையே மறந்து விட்டால் தனிமை இருப்பதில்லை. சில சமயம் தனிமையான உணர்ச்சி இருப்பதையும் சில சமயம் அந்த உணர்ச்சி இல்லாததையும் கவனித்தீர்களா? உண்மையாகவே நீங்கள் தனித்து இருப்பவராக இருந்தால், அந்த உணர்ச்சி எப்போதுமே இருக்கவேண்டும். ஆனால் தன்னை மறந்தவன் தனிமையில் இருப்பதில்லை. எனவே தனிமை என்ற உணர்ச்சியும் ஒரு எண்ணம் தான். இந்த எண்ணம், இல்லாத ஒருவரைப் பற்றிய எண்ணம். இந்த இல்லாத ஒருவர் இருப்பதாக நினைப்பது எண்ண ஓட்டங்களின் கட்டுமாணம். கற்பனையான கட்டுமாணம். இந்தத் தனிமை உணர்ச்சியை அகற்ற வேண்டுமானால், எண்ணமிடுவதை நிறுத்த வேண்டும்.
அல்லது, எண்ணங்கள் இருக்கும் போதே தனிமை உணர்ச்சிகளை அகற்ற வேண்டுமென்றால், உள்ளத்தை அன்பால் நிரப்பிக் கொள்ளுங்கள். மற்றவரிடத்தில் அன்பு செலுத்துவதென்பது மற்றவரின் தனித் தன்மையை ஏற்றுக் கொள்வது, மற்றவரோடு ஒன்றாக இருப்பது, நம்மை மற்றவரிடத்திலும் காண்பது. இப்படித்தான் நாம் 'யாரையும் நம்பி இல்லாத தனி மனிதன்' என்ற உணர்ச்சிக்கு அப்பால் போக முடிகிறது. நாம் நடந்து கொண்டிருக்கும் உப்புத் தண்ணீர் நிரம்பிய பை. அதிலிருந்து நம்மால் தப்பிக்க முடியவில்லை. பிரச்சனை இல்லாத சமயங்களை நினைத்துப் பாருங்கள். இந்தத் தனி மனிதன் என்ற எண்ணம் இருக்கும் போது தான் பிரச்சனை. அப்போது தான் நாம் இரண்டாகப் பிளவுபட்டு ஒரு மாயக் கருத்து உண்டாகிறது.
உண்மையான தனிமை மனத்தின் தனிமையே. மனத்தில் பேச்சு இருப்பதில்லை. மனம் தன்னிடமே பேசிக் கொண்டிருப்பதில்லை. அதுவே ஆன்மீக முன்னேற்றத்தின் அறிகுறி.
சில சமயம் மக்கள் சிலர், கூட்டத்தோடு இருக்கும்போது தனிமை உணர்ச்சியை அதிகமாக உணர்வார்கள். குறிப்பாகத் தங்களுக்கு அறிமுக மாகாத கூட்டமாக இருந்தால், தாங்கள் தனிமையாக இருப்பதாக உணர்வார்கள். ஆனால் நண்பர்கள் மத்தியில் இருக்கும் போதும், சிரித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கும் போதும் உங்களையே நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். அப்போது அந்தத் தனிமையை உணர்வதில்லை. பிரச்சனை மறைந்து விடுகிறது. இது ஒரு துப்பு (clue). என்ன நடந்தது இங்கு? நான் என்னையே மறந்து விட்டேன். நண்பர்கள் மத்தியில் இணைந்து, ஒன்றோடு ஒன்றாகக் கலந்து இருக்கும் போது 'நான் என்ற எண்ணம் மறைந்து விடுகிறது.
ஆனால் தனிமை இல்லாமல் இருக்க நாம் எப்போதும் நண்பர்களை நாடவேண்டும் என்று சொல்ல வரவில்லை. எப்போதும் நண்பர்களை நம்பி இருக்க முடியாது. நமக்கு வயதாக, வயதாக நண்பர்கள் வேறு ஊருக்குச் சென்று விடலாம் அல்லது இறந்து விடலாம். இப்படிப் புறத்தில் பிரச்சனையைத் தீர்க்கப் பார்ப்பது பிரச்சனைக்குத் தீர்வாகாது. நண்பர்களைச் சந்திக்க விரும்பியபோது, அது முடியாவிட்டால் மனத்தில் ஆதங்கம் உண்டாகிறது. எனவே பிரச்சனையை நேருக்கு நேர் சந்தித்தித்துத் தீர்த்துக் கொள்வதே நல்லது. தனிமையில் பிரச்சனையைத் தீர்ப்பதே சிறந்தது. ஓர் இடத்தில் உட்கார்ந்து உங்களிடமே சொல்லிக் கொள்ளுங்கள், 'பிரச்சனை மனத்திலேயே உள்ளது. புறத்தில் இல்லை...'
நம்பிக்கை, தெளிவான பாதை. பாதையில் செல்வோரிடம் பழகும்போது அவர்கள் உங்களைப் பாதையில் தொடர்ந்து செல்வதற்கு ஊக்கு விப்பார்கள். வலது பக்கம் திரும்பாதே. இடது பக்கம் திரும்பாதே. பிரச்சனையைத் தீர்க்க முடியும். போகவேண்டிய இடத்திற்குப் போய்ச்சேர்ந்து விடுவாய்.
எப்போதும் மோசமான சூழ்நிலையிலிருந்து பயிற்சி செய்வதால் திடீரென்று பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடும் என்றும் நினைக்கக் கூடாது. சில சமயம் நம்பிக்கை குறையலாம். ஆனால் அதை ஒதுக்கி விடுங்கள். பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருங்கள். படிப்படியாக மனம் இலேசாவதை உணர்வீர்கள். பிரச்சனை குறைவதை, தனிமை குறைவதை உணர்வீர்கள்.
Sense of separation in Big cities
Q. In a big city there is a sense of separation. Is it resulting from some kind of fear (of the unknown)?
Separation is resulting from false imaginings. False imaginings are based on habit and the natural concept of the self which is taken for granted. It permeates your view. If you do have a sense of self you will experience loneliness because there is somebody to be alone. When you forget yourself, you are not alone. Have you noticed that sometimes you are lonely and sometimes you are not? Well if there was a real alone you, you will always feel alone. But when you forget about it actually it turns out loneliness is just a thought. It is a thought about somebody who doesn't exist. The somebody is a fabrication of thought patterns. Imaginary construct. If you want to get over loneliness, stop thinking.
Or if you want to get over loneliness with thought then think of love. So love is the recognition of self in others. To be one with others. To see one self in others. Overcomes the sense of being a little self contained cylinder. A little bag of salt water that walks around and cannot get out of itself. You are stuck in a bag of salt water. Notice the time when it is not a problem. It is when you think about it you split into two and the whole illusion starts.
That is the nature of spiritual progress that you never less alone than when alone. Actually to some degree more people tend to be more alone in a crowd. Particularly in a crowd of strangers. You can really feel your aloneness. Your alienation from it all. When you are with friends and you are laughing and you have forgotten yourself it all disappears. The whole problem disappears. This is a clue. What happened there? I forgot about myself. I am so able to relax with these people, feel unjudged and integrated and one with them that I disappeared.
What we are seeking is not to rely on being with your friends.. as you get older maybe your friends start dying off.. it is so problematic to rely on these things for that well being and there is anxiety when you cannot get to them and you need and want ... So it is just best to face it and cure that problem. And it is best cured in solitude. You sit down by yourself and you say, 'it is my mind it is not out there...'
The confidence, the clear direction, also the association with people who are in this path and that will say keep going in this direction. Don't look right, don't look left. You will get out of it. You will get there. It won't be just all bad and suddenly all good. There will be moments of lack of confidence lack of faith. But put it aside. Keep going.
You start to lighten up by degree. You begin to feel it. Less trouble, less lonely.
50. ஹெர்குலஸ் கதை Top
முதல் கேள்வி நல்ல கேள்வி. விசித்திரமான கேள்வி என்றாலும் இது ஒரு நல்ல கேள்வி. முன்பு ஒரு ஹெர்குலஸ் கதை சொன்னபடியால், இந்த விசித்திரத்தை நான் தான் துவக்கினேன். இதுவே கேள்வி:
மற்றொரு ஹெர்குலஸ் கதை சொல்லமுடியுமா?
சரி. சொல்கிறேன்.
சாதாரணமாக மனிதர்கள் ஹெர்குலஸ் என்ற பெயரைக் கேட்டவுடன், 'அந்தப் பலசாலி ஆள் தானே ஹெர்குலஸ்,' என்று நினைப்பார்கள். எல்லோரும் கேள்விப் பட்ட பெயர்தான் அது. சிறுவர்களுக்கான சித்திரக் கதைகளில் வரும் கதாபாத்திரம் போலத் தோன்றுகிறார் ஹெர்குலஸ். ஆனால் உண்மையில் ஹெர்குலஸ் கதைகள் ஆன்மீகம் பற்றிச் சொல்லும் யுவணர் காலத்துப் புராணக் கதைகள். ஹெர்குலஸ் தெய்வத்துக்கும் மனிதருக்கும் பிறந்தவன். ஏசு கிருஸ்துவைப் போல. தந்தை கடவுள், தாய் மனித இனம். அதனாலேயே ஹெர்குலஸுக்கு மிகுந்த பலம் இருந்தது. இப்படித்தான் அக்காலங்களில் நம்பினார்கள் - புராணக்கதைகள் (mythology).
ஒவ்வொரு கதையும் ஹெர்குலஸ் செய்யவேண்டிய ஒரு கடைமை சம்பந்தப் பட்டது. இவை பெரியவர் களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற கதைகள். ஆனால் ஒவ்வொரு கதையும் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய ஆன்மீகக் கடைமைகளைக் குறிக்கும். நாம் ஒவ்வொருவரும் ஹெர்குலஸ். நாம் ஒவ்வொருவரும் மிகக் கடினமான செயலைச் செய்து தொலைந்து போன ஒன்றைத் திரும்பப் பெற வேண்டும்.
ஹெர்குலஸ் இந்தக்கடமைகளை ஏன் செய்ய வேண்டியிருந்தது? ஹெர்குலஸுக்குப் பெரும் பலம் இருந்தாலும், அவன் மிகக் கோபக்காரனும் கூட. மேலும் அவன் கோபம் கொஞ்சமும் குறைந்த பாடில்லை. மேலும் மேலும் வளர்ந்து மோசமான கோபக்காரனாகிக் கொண்டிருந்தான். ஒரு நாள் கவனக் குறைவின் காரணமாக எல்லை மீறிய கோபம் உண்டாயிற்று. அந்தக் கோபத்தில் அவனுடைய இரண்டு குழந்தைகளையும் கொன்று விடுகிறான். ஹெர்குலஸ் பற்றிய இந்தத் தகவல் பலருக்கும் தெரியாது. நீங்கள் கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? இப்படித்தான் துவங்கியது. சற்றுத் தெளிந்தபின் நடந்ததை உணரும்போது அவன் இவ்வாறு நினைக்கின்றான், 'என் கதை முடிந்து விட்டது. இதிலிருந்து மீள வழியே இல்லை. இப்படிப்பட்ட பெரும்பாவத்திலிருந்து யாராலும் மீள முடியாது. நான் முடிந்தேன்.'
ஹெர்குலஸ் ஒரு கோயிலுக்குச் செல்கிறான் (அல்லது ஒரு விகாரை என்றும் வைத்துக் கொள்ளலாம்). கோவில் பூசாரியிடம் (அல்லது ஒரு துறவியிடம்) நடந்ததைக் கூறுகிறான். கோபத்தில் தன் குழந்தைகளைக் கொன்று விட்டதாகவும், தன்னால் இந்தப் பாவத்திலிருந்து மீள முடியாது என்று நினைப்பதாகவும், என்ன செய்வதென்று புரியவில்லை என்றும் கூறுகிறான்.
துறவி அவனிடம்: 'ஆம். மிக மோசமான நிலமைதான். ஆனால்...'
'என்ன, ஆனால் என்ன?'
'இந்த நிலையிலும் உன்னை மீட்டெடுக்க ஒரு வழி உள்ளது. ஆனால் அது சுலபமான வழியன்று. இங்கு பத்துக் கடமைகள் இருக்கின்றன. உன்னை மீட்டெடுக்க, இந்தப் பாவத்திலிருந்து மீள, நீ இவற்றை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டும்.'
உங்களுக்கு இவற்றுள் ஒரு கதையைக் கூறுகிறேன்:
ஹெர்குலஸுக்கு ஏஜியன் கூடத்தைச் (Agean Stables) சுத்தம் செய்யும் வேலை கொடுக்கப் பட்டது. இந்தக் கூடத்தில் முன்னூறு எருதுகள் முப்பது வருடங்களாக வாழ்ந்து வருகின்றன. இதுநாள்வரை இந்தக் கூடம் கழுவப் பட்டதே இல்லை. கூடத்தில் மலை போலக் குவிந்திருந்தது என்னவென்று நினைக்கின்றீர்கள்? (சிரிப்பு)
ஆம். மாட்டுச் சாணம் தான். அக்காலத்தில் இந்தக் கதையைச் சுவாரஸியமாக உருவாக்கி இருக்கின்றனர். ஹெர்குலஸின் வேலை முப்பது வருடங்களாகச் சுத்தம் செய்யப்படாத அந்த மாட்டுத் தொழுவத்தைச் சுத்தம் செய்வதுதான். முப்பது வருடங்களாகச் சேர்ந்த மாட்டுச் சாணம் மலை போலக் குவிந்திருக்கும் இடம்.
இது என்ன முப்பது வருடங்களாகச் சேர்க்கப்பட்ட சாணக் கூடம்? சுமார் முப்பது வயதில் தான் நாம் அதுவரை எந்த நோக்கமுமில்லாமல் அலைந்து திரிந்து, பயனற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்கிறோம். மனத்தில் எவ்வளவு குப்பை கூளங்கள் சேர்ந்துள்ளன என்பதை உணர்கிறோம். முப்பது வருடங்களாக அக்கரை இல்லாமல், கவனம் இல்லாமல் மனத்தைச் சுத்தப் படுத்தாமல் காலம் ஓடி விட்டது. சூழ்நிலையைச் சமாளிக்க ஒரே வழி, நமது பலத்தையும், மெய்ஞ்ஞானத்தையும் பயன்படுத்தி அதைத் தூய்மையாக்குவதுதான்.
ஹெர்குலஸ் வேலையைத் துவங்கினான். முதலில் மண்வெட்டியுடன் சாணத்தை அள்ளத் துவங்கினான். ஆனால் அத்தனை சாணத்தை அள்ளி முடிக்கும் வாய்ப்பே இல்லை என்பதை விரைவில் உணர்கிறான். ஆரம்பத்தில் மக்களும் இப்படித்தான் முயற்சி செய்கின்றனர். ஆனால் முடிவில் வெற்றி பெறாமல், பெரும் குழப்பமான நிலையிலேயே அது முடிகிறது. மலை போலக் குப்பை. நாற்றம் சகிக்க முடியவில்லை. யாருக்கும் பிடிக்கவில்லை.
மண்வெட்டியோடு வேலையைத் துவங்கிய பின் நாம் இதனை இப்படிச் செய்து முடிக்க வாய்ப்பே இல்லை என்று உணர்கிறோம்.
ஹெர்குலஸுக்கு, மெய்ஞ்ஞானமும் இருந்தது. அருகில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. கூடத்திலிருந்த எருதுகளைப் ஓட்டிக் கொண்டு ஆற்றுக்குப் போகிறான். எருதுகளைப் பயன்படுத்தி ஆற்றிலிருந்து கூடத்துக்கு ஒரு கால்வாய் வெட்டுகிறான். பின் ஆற்று நீரைக் கால்வாயில் திருப்பி விட்டுச் சாணக் கூடத்தின் மத்தியில் நீரைப் பாயச் செய்கிறான். மலை போல இருந்த சாணத்தை ஆற்று நீர் கரைத்து அடித்துச் செல்கிறது. காலியான கூடத்தைத் தூய்மையாகக் கழுவித் தன் கடமையை முடிக்கிறான். மெய்ஞ்ஞானத்தைப் பயன்படுத்தி எளிதாக வேலையை நிறைவு செய்கிறான். உடல் வலிமையால் அல்ல. எருதுகளைப் பயன்படுத்துவ தென்பது மனத்தின் நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்திப் பயனுள்ள வழியில் இதுவரை செய்த தவறான செயல் முறைகளை நேர்ப் படுத்துவதாகும். மனத்தை ஒழுங்கு படுத்தினால் ஒழுக்கமில்லா மனம் உருவாக்கிய குழப்ப நிலைகளைச் சீர்ப்படுத்தலாம். தெளிவான ஆற்று நீர் தான் மாசற்ற எண்ணங்களைக் குறிக்கிறது. மனத்தூய்மையும் தெளிவும், மன உறுதியும், எருதுகளைப் பூட்டி ஒழுக்கமான முறையில் பயன்படுத்தப் பட்டதற்கு ஒப்பாகும்.
இது நமது வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதாகத் தோன்றுகிறது அல்லவா? நாமும் மனத்தில் குப்பை கூளங்களைக் கொண்டுள்ளோம். அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும். நாமும் மெய்ஞ்ஞானத்தைப் பயன்படுத்த வேண்டும்.
இது ஒரு ஹெர்குலஸ் கதை. இது போலப் பல கலாச்சாரங்களிலும் ஆன்மீகப் பாதையைக் குறிக்கும் சுவாரஸ்யமான பழங்கதைகள் ஏராளமாக உள்ளன.
இன்னொரு நாள் உங்களுக்கு ஆர்தர் மன்னனின் அவைக்களம் (King Arthur's court) பற்றிய கதையைக் கூறுகிறேன். அந்தக் கதையில் மன்னன் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கிறான். அந்தச் சிக்கலிலிருந்து தப்பிக்க ஒரு புதிருக்கு அவன் சரியான பதிலை ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கண்டு பிடித்தாக வேண்டும். அந்தப் புதிர் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
மிகவும் சிக்கலான விஷயம்....
"ஒரு பெண் உண்மையியே விரும்புவது எதை?" (சிரிப்பு)
Story of Hercules
The first question is a good one. Strange but good. I guess I started the strangeness myself by telling a story about Hercules. So here you have it:
Could you please tell another Hercules story?
So I will.
The ordinary person when they think about Hercules think - that strong guy right? Everyone has heard of him. It is like children's cartoon. But actually stories of Hercules are ancient Roman stories about the spiritual odyssey. Hercules was the product of divinity and humanity. Very similar to another character in our history named Jesus Christ whose father was God and mother was human. Hercules was a product of God and human. That was why he was super naturally strong. This is the way they thought those days - mythology.
Each of the stories is about a task that Hercules has to do. They are great stories for kids and adults. But actually they are all spiritual stories about the universal tasks that each of us has to do. Each of us is Hercules. And we have to do some incredibly difficult task to get back to something we lost.
Why would Hercules have to do these tasks? Apparently he had great strength but he had a hell of a temper as well. And it was getting worse and worse. And one day he wasn't paying attention and he really went of the deep end. And he killed both of his kids. You don't hear this about Hercules, do you? This is how it all started. In a fit of rage he killed both of his children. When he came out the other side of this he realized what he had done and then he thought, ' I am finished. There is no recovery from this. This is it. You don't get over that, do you? I am finished.'
He went over to a temple (or you could say a monastery) and he talked the priest of the temple (or you could say some monks). He told the monks what he had done. I killed both my kids in a fit of rage. I think I am finished. I don't know what to do.
The monk said: Well yeah. It is pretty damn bad. However ...
What?
However there is a possibility with even this you can redeem yourself. But it is not going to be easy. There are ten tasks you have to do to get back.. to restore yourself, to overcome this tragedy.
I will describe one of the ten stories.
Hercules was given the task of cleaning the Augean stables.
This is a barn where 300 bulls had been kept for 30 years and it had never been cleaned. So what do you think it was full of? (laughter) It was full of bull shit. The story itself is very funny and they were comedians in the designing of it. He has got to clean a barn that has been collecting bull shit for 30 years.
What is this barn that has been collecting bull shit for 30 years? Well about 30 years old is often the time when you realize you have been wandering around and it has been a complete mess. Often 30 years of being mindless and careless and negligent and not cleaning up after yourself accumulates a mindful of bull shit. And the only way you can bear the situation is you got to use the wisdom and strength to clean this up.
He did. He tried to shovel it first. But there is no way you can shovel that much. People try that. They end up in a hell of a mess. It is just a mountain of overwhelming crap and it smells bad. And nobody likes it. It seems overwhelming.
To begin this task you start shoveling and then you realize there is no way. I am never going to get through this shoveling. It is not going to happen.
Hercules had wisdom as well. There was a nearby river. He harnessed all the bulls and he went there and he cut a channel from the river to the barn using the bulls themselves. And then he let the river run right through the middle of the barn and wash it all up. And that is how he accomplished that task. Through wisdom rather than brute effort. Using the bulls is the activity of the mind itself in an orderly way, can undo all its negligence. If you harness the power of the mind you can undo the messiness it makes when you don't train it. The stream of clear water. The power of clear water of purifying thought power of clarity, power of determination and the power of orderliness with the bulls. And the clearness of getting all this arranged.
Starts to sound like our own life. We also are full of stuff that we got to deal with. We have to use wisdom.
So that is one more story about Hercules. When you go back over mythology in any culture it is all very interesting things, about spirituality.
I have to tell you sometime the story about King Arthur's court. Great story. The theme of the story is the only possible way out of a great dilemma is to figure out the answer to this puzzle. Do you know what the puzzle is? Very difficult..
"What does a woman really want?" (laughter)
Great stuff.
51. அவலட்சணமான வாத்துக் குஞ்சு Top
அவலட்சணமான வாத்துக் குஞ்சு பற்றிய கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.(ஆசிரியர்: ஹான்ஸ் கிரிஸ்டியன் என்டர்ஸன் Hans Christian Andersen, 1805 – 1875) 'நான் (நாம்) தான் அந்த அவலட்சணமான வாத்துக் குஞ்சு. உண்மையில் நான் ஒரு அன்னப் பறவை. ஆனால் வாத்துக்களோடு வாழ்ந்ததால் நான் அவலட்சணமான வாத்து என்று நினைத்துக் கொண்டேன்.'
இந்தக் கதை தன்னைச் சுற்றி உள்ளவர்களைக் காட்டிலும் வேறுபட்டு வாழ்வதாகத் தோன்றும் ஒருவரின் மனநிலையை விளக்குகிறது. பொருத்தமற்ற இடத்தில் தான் இருப்பதாகவும், தவறு செய்வதாகவும் அவர்களுக்குத் தோன்றுகிறது. தான் முட்டாளாகவும், அவலட்சணமாகவும் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்கின்றனர். இதன் காரணமாகத் தங்களிடம் எதோ குறை இருப்பதாகக் கருதுகின்றனர்.
ஆனால் சில சமயம் இது அவர்கள் சரியான பாதையில் செல்வதையே குறிக்கும். அவர்கள் அன்னப்பறவையாகப் போகிறவர்கள்; வாத்தாக மாறப் போகிறவர்கள் அல்ல. சில சமயம், பிரச்சனை சுற்றியுள்ளவர்களிடத்தில் தான் இருக்கும். ஆன்மீகப் பாதையில் வளர்ச்சி பெறுவதின் ஒரு இயல்பு இது. ஆட்டு மந்தையோடு சேர்ந்து செல்லாமல் நாம் தனிப்பட்டுத் திகழ்கிறோம். சற்று வேறுபட்டு இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த உணர்ச்சி உங்களுக்கு ஏற்பட்டால் உங்கள் ஆன்மீகப் பாதையில் சரியான திசையில் முன்னேறுகின்றீர்கள் என்று உறுதி கொள்ளலாம்.
பௌத்தத்தில் வெள்ளை நிற அன்னப் பறவை ஞானம் பெற்றவரைக் குறிக்கும் ஒரு அடையாளமாகும்.
The Ugly Duckling
Remember the story of the ugly duckling. I am the ugly duckling. I was a swan and that is why I thought I was a very bad duck. That is the illustration of when a person feels estranged from the people around them. They feel out of place. they look wrong. They feel stupid, awkward and they take it as a sign of something wrong with them.
But actually sometimes it is something right with them. They are going to be a swan not a duck. Sometimes it is everybody else that is the problem. So that is the characteristic of spiritual growth as well. One begins to feel not in the same wavelength as everybody, as the herd and then you start to emerge and then you feel somewhat separated, somewhat different. That is the characteristic you can be sure you are on the spiritual path.
In Buddhism the enlightened person is represented as a white swan.
52. ஏற்றத்துக்கு முன் தாழ்வு Top
கேள்வி: அன்புள்ள அஜான் சோணா அவர்களே! மனத்தைத் தூய்மையாக்கும் நமது பயிற்சியை மேற்கொள்ளும்போது, முன்பு இல்லாத சில மாசுகள் சில காலத்துக்குத் தோன்றுவது இயல்பா?
பதில்: மனிதர்கள் பழக்கமான வழகங்களைத் தொடர்ந்து செய்வதில் கைதேர்ந்தவர்கள். செய்ததைத் திரும்பத் திரும்பச் செய்வது நமது இயல்பு. தீய பழக்கங்களை விட்டு விடவும், நல்ல பழக்கங்களைப் நிலை நிறுத்தவும் நாம் முயற்சி செய்யும் போது, இந்த இயல்பு (பழைய பழக்க வழக்கங்களைத் தொடரும் இயல்பு) முட்டுக் கட்டையாக இருக்கிறது. ஒரு சக்கரம் மலையின் மேலிருந்து உருண்டு கொண்டிருக்கிறது. அதை அப்படியே நிறுத்திவிட முடியாது. அதன் வேகத்தைக் குறைக்கப் பல வழிகளிள் நாம் ஈடுபட வேண்டியிருக்கும். எதிர்ப்பு இருக்கத்தான் இருக்கும்.
இதுவரை ஏன் பிரச்சனை இல்லாமல் இருந்தது?
ஏனென்றால் நாம் தீயபழக்கங்களை நிறுத்த முயற்சிக்கவே இல்லை. சக்கரம் ஓடுவதை நிறுத்த முயற்சிக்கவில்லை. அதனால் எதிர்ப்பைச் சந்திக்க வில்லை. இப்போது நிறுத்தப் பார்க்கிறோம். அதனால் எதிர்ப்பு இருப்பதை உணர்கிறோம். மேலும் இது வெறும் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது அல்லது உடற் பயிற்சி செய்வதைத் துவங்குவது போன்ற விஷயம் இல்லை. தியானத்தில் மனத்தைத் தூய்மையாக்குவது என்பது நற்கடைப்பிடியை அதிகரிக்கப் பார்ப்பதாகும். மன ஓட்டங்களின் மீது ஈடுபாடு அதிகரிக்க வேண்டும். அதனால் அதிகம் கவனம் செலுத்துகிறோம். அதனால் தான் நாம் பின் வாங்குவது போலத் தோன்றுகிறது. ஆரம்பத்தைவிட நிலமை மோசமாகத் தோன்றுகிறது. நீங்கள் முன்னேறு கின்றீர்கள் என்பதற்கு அருமையான அறிகுறி இது! முந்தையதைவிட மாசுகள் அதிகமாகத் தெரிந்தால் நீங்கள் முயற்சிக்கின்றீர்கள், முன்னேறுகின்றீர்கள் என்று அர்த்தம்! ஏன்?
ஏனென்றால் அழுக்கும், புழுதியும் நிறைந்த ஒரு அறைக்குள் நுழைகிறோம். சிலந்திக்கூடுகளும், ஒட்டடையும் நிரம்பிய அறை அது. ஆனால் இருள் படிந்த அறை. அதனால் அழுக்கும், புழுதியும், ஒட்டடையும் தெரிவதில்லை. விளக்கை ஏற்றுகிறோம். பின் நமக்குத் திடீரென்று அறை அழுக்காகத் தெரிகிறது (சிரிப்பு). இல்லை, இல்லை! அறை முதலிலேயே அழுக்காகத்தான் இருந்தது. இருட்டாக இருந்ததால் அழுக்குத் தெரியவில்லை. விளக்கை ஏற்றியவுடன், நற் கவனமென்ற விளக்கை ஏற்றியவுடன், அறையில் வெளிச்சம் பரவுகிறது. உள்ளதைத் தெரிந்திருப்பது மட்டுமல்லாமல் தீய பண்புகளை விட்டு விடவும் முயற்சிக்கின்றோம். அப்போதுதான் என் வெறுப்பு, என் கோபம், என் சலிப்பு, என் அவா, என் குழப்பம், என் தடுமாற்றம், என் சோம்பல் எதுவும் என் மகிழ்ச்சிக்கு உகந்தவை இல்லை என்பதை அறிய வருகிறோம். பிற இயல்புகளான புத்துணர்ச்சி, நல்லெண்ணம், தயாளகுணம், தெளிவு போன்றவையே என்னை மகிழ்ச்சிக்கு எடுத்துச் செல்வன என்பதை உணர்கிறோம்.
முன் நாம் இதையெல்லாம் கவனிக்கவில்லையோ என்னவோ? நல்லது, தீயது எல்லாம் ஒரு கலவையாகக் குவிந்து கிடந்தன. அதைப் பற்றி நாம் நினைக்கக் கூட இல்லை. இப்போது எது நல்லது எது தீயது என்பதைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்து கொண்டோம். ஒரு கூரை எரிய வேண்டும். மற்றதைக் காத்துக் கொள்ள வேண்டும். இப்பொது தான் இவற்றின் மீது கவனம் செலுத்துகிறோம்.
நாம் உண்மையிலேயே கவனம் செலுத்துகிறோம் என்பதால் இந்தச் செயற்றொடர், பிரச்சனைகளைத் தெளிவாக்குகிறது. அதனால் சூழ்நிலை மோசமாக இருப்பதை உணர்கிறோம். கவனம் செலுத்தியதால், குப்பை இருப்பதைக் கவனித்ததால் மனத்தின் திறனற்ற செய்கைகளைத் தெரிந்து கொண்டோம்.
முதலில் இது நம்மைச் சற்று நிலைகுலையச் செய்கிறது.
சில சமயம் இதற்கு எதிர்மறையான எண்ணப்போக்கும் இருக்கலாம். ஆகா! தியானம் நன்றாகச் செல்கிறது. நான் மலையைத் தாண்டிவிட்டேன். இனிமேல் பிரச்சனை ஏதும் இருக்காது. மிகுந்த தன்னம்பிக்கை வந்துவிட்டது. ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீரென்று ஒரு நாள் கோபம் வந்து விடுகிறது. நாம் இதை எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் ஏமாற்றம் அடைகிறோம். ஏனென்றால் நீங்கள் இப்போது மிகவும் மென்மையாக மாற்றங்களைக் கவனிக்கும் நிலையில் உள்ளீர்கள். இது செவிடாக இருக்கும் ஒருவருக்குக் காது கேட்க ஆரம்பிப்பது போல. சிறு சத்தங்களும் அவருக்கு அதிர்ச்சி அளிக்கிறது. உங்கள் கோபமே உங்களை ஆச்சரியப்பட வைக்கும். இதை எல்லாம் தாண்டி விட்டதாக நினைத்தோம். அதனால் ஏமாற்றம். உங்களுக்குச் சற்று அதிர்ச்சி அளிக்கிறது.
ஆனால் இது போன்ற அனுபவங்களெல்லாம் பயிற்சி செய்யும் போது தோன்றும் சம்பவங்கள். உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இப்படி நடக்கும் என்று சொன்னார்கள். எனக்குத்தெரியும். பிரச்சனை ஏதும் இல்லை. கவலை கொள்ள வேண்டாம். முன்னேற்றம் அடைகிறோம். அவ்வப்போது செயல்குலைவதற்குக் காரணம் நமக்குப் பிரச்சனைகளே இருக்கக் கூடாது என்று நினைப்பது தான். அவ்வப்போது பின் வாங்க நேரிடும் என்பதைத் தெரிந்து கொண்டு பயிற்சி செய்தால் விரைவாக முன்னேற்றம் காணலாம். ஆனால் முந்தையதைவிடப் பிரச்சனைக்கள் குறைந்து கொண்டே இருக்கும். அதைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.
Gets worse before it gets better?
Q: Dear Ajahn Sona, As we do the purification of the mind, is it common for certain defilements to surface or become more pronounced for a period of time?
We are a deeply habitual creature and we condition ourselves. When you try to decondition yourself by trying to give up bad habits and cultivate good habits, you are going to feel a lot of inertia behind old habit patterns. The wheel is rolling down the hill. You don't just stop it. You can expect to be using a lot of strategies to slow this thing down and you are going to have resistance.
Why didn't we have trouble before? Because we weren't even trying to quit. We weren't even trying to stop it. We didn't feel the friction. Now when we try to stop then we feel the friction. The other thing is it is not simply like giving something up - quitting smoking or starting to exercise or something like that. What we are doing in the meditation practice and purifying the mind requires increase in self awareness - your mindfulness. Mindfulness of what is going on in my head. So you are paying attention to it more. So it seems like you may be going backwards. Seems worse than what it was before you started this. That is a classical sign that you are making progress. When it seems worse than before, then it means you are going ahead! Why?
Because when you go into a big messy dirty room, there are spider webs and everything and there is no light on in there, it doesn't seem to be so dirty and messy at all. Then you turn the light on. Then you think it suddenly got messy (laughter). No. It was messy before and dark. When it is dark you don't see the mess. When you turn the light on, you shine mindfulness in there and not just being aware but you are shining mindfulness attention in there in the context of the attempt to let go of the unwholesome tendencies. You start to recognize OK, my ill-will, my anger, my depression, my greed, my confusion, my bewilderment, my laziness etc. those I understand now are not conducive to happiness. And other factors, my energy, my good will, my generosity, my clarity these things are conducive to my happiness. Maybe before you never really worked it out. It was just a big jumble. Didn't even begin to think about it. Now you think there are two things. One, stuff I want to get rid of. The other stuff I want to keep. Now you are actually paying attention to that.
This whole process reveals the difficulties the problems. You are really paying attention to it. That is why the impression grows that I didn't even think this was this bad before. It’s not that. It is the increase in attention, the awareness to the messiness and the unskillfulness of the mind. It is a little disorienting for a while.
You can also have the opposite for a while. Geez I am really flowing along now, going good. I think I am over it. That sets you up. This stuff works well and it works fast. And then when you are feeling confident, 'I am leaving a trail of dust behind me. I am gone. I am out of here. I am finished.'
And then it catches you. Anger caught off guard. Something set you off you will respond and it will be shocking and also be very disappointing. Shocking because you are much more sensitive now. It is like somebody who got back their hearing and loud sounds can startle them. Your own anger can startle you. And also you are disappointed. You thought you were over it. That shakes you up.
But these are just classic events in the path and you got to know that. No problem, no problem. I know. They told me this would happen. Not to worry. This is classical. It is all about..you are moving ahead. You will be shaken up a little bit by any kind of failure. Because you want all go smoothly and never have any problems. You want to be finished with it. It is over and I am on with my happiness and everything. You will progress very much more quickly if you are tolerant to the fact that you probably not over it yet. You will have difficulties from time to time but a lot less than the old days. Take that into consideration. .
53. சோம்பல் Top
சோம்பலைக் கவனமாக ஆராய வேண்டும். உண்மையிலேயே சோம்பல் தானா? சிலர் தங்களைத் தாங்களே கடுமையாக விமர்சித்துக் கொள்கின்றனர். சோம்பல் அவர்களது பிரச்சனையாக இருக்காது. உங்களுக்கு உங்கள் மீதே கோபம். உங்களை நீங்களே சோம்பேறி என்று சொல்லிக் கொள்கின்றீர்கள். உண்மையான பிரச்சனை, உங்களுக்கு உங்கள் மீதே உள்ள வெறுப்புத் தான். அத்தகைய சமயங்களில், 'விடு! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு. கொஞ்சம் காப்பி குடி, சற்று ஓய்வெடுத்துக் கொள்' என்று அந்த வெறுப்பைச் சாந்தப் படுத்த வேண்டும். நம்மைத் நாமே தாழ்த்திக் கொள்வது, சோம்பலை விட ஆபத்தானது. அதனை மேலும் அதிகரிக்கச் செய்ய வேண்டாம். உங்களை நீங்கள் எப்போதும் உயர்வாகவே எண்ணிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நீங்களே நல்லெண்ணத்தைப் பரப்பிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும் போது நீங்களே உங்களைத் தாழ்வு படுத்திக் கொள்ள மாட்டீர்கள்.
மிகைப் படுத்திச் செய்வது, சோம்பல் கொள்வது, எதுவுமே செய்யாதிருப்பது போன்றவை உங்களை மிகவும் பாதிக்கும். ஆனால் உங்களுக்கு உங்கள் மீதே நல்லெண்ணம் இருக்குமாயின் அப்படிச் செய்ய மாட்டீர்கள். ஏனென்றால் உங்களுக்கு நீங்களே நண்பன். உங்கள் நண்பனுக்குத் தீங்கு விளைவிக்க மாட்டீர்கள் அல்லவா? எனவே உங்களுக்கே நீங்கள் தீங்கு செய்து கொள்ள மாட்டீர்கள். எனவே செய்ய வேண்டியதைச் சோம்பலில்லாமல் செய்ய முற்படுவீர்கள். உங்கள் மீது நட்புணர்வு இருக்கும் போது தியானம் செய்வதில், நல்ல திறமைகளை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் பிறக்கும்.
வாழ்க்கை அனுபவங்களை நினைத்துப் பாருங்கள். மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றிய செயல்கள்… முயற்சி செய்யத் தேவைப்பட வில்லை. ஒவ்வொரு முறை வாய்ப்புக் கிடைக்கும் போதும் அச்செயலைச் செய்தீர்கள். எனவே அதை சுவாரஸ்யப் படுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த செயலாகத் தேர்ந்து கொள்ளுங்கள். தண்டனை தருவதைவிடச் சன்மானம் அளிப்பதே ஊக்குவிக்க நல்ல வழி.
நமக்கு நாமே ஊக்கம் அளித்துக் கொள்வதைவிட உயர்ந்த செயல் வேறெதுவும் இல்லை. நமக்கு நல்லெண்ணம் பரப்புவதே உயர்ந்தது. அப்படி சொல்லிக் கொள்வதும் நல்லது.
கடினமான வார்த்தைகள் சில கலாச்சாரங்களில் உதவும். அத்தகைய கலாச்சாரத்தைச் சார்ந்த மக்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். அவர்களுக்குக் கடுமையான வார்த்தைகள் ஊக்கம் தரும். அதைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதை எதிர்மறையாக எடுத்துக் கொள்வதில்லை. கடுமையான வார்த்தைகளைக் கேட்டு விட்டுத் தங்களைத் தாங்களே குறை கூறிக் கொள்வதில்லை. அவர்கள் கடுமையான அற போதனையை - 'சோம்பேறிகளே! பன்றிகளைப் போலப் படுத்துக் கிடக்க வேண்டாம்.' என்பது போன்ற கடுஞ் சொற்களைக் கேட்டு விட்டுச் சிரித்துக் கொண்டே உற்சாகத்தோடு போவார்கள் (சிரிப்பு). (ஆசிரியர் மீது அவர்களுக்கு நம்பிக்கை. கடுமையாகப் பேசினாலும் கருணையோடு பேசுகிறார் என்பதில் அவர்களுக்கு ஐயம் இல்லை) இப்படிப் பட்ட போதனை மேற்கத்திய நாட்டவருக்குப் பயன்தராது. ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே தங்களைத் தாங்களே குறைகூறிக் கொண்டிருப்பவர்கள்.
எனவே காலையில் படுக்கையிலிருந்து எழும்போது உங்களிடம் அன்பாகப் பேசிக் கொண்டு எழ வேண்டும். அப்படித்தான் செயற்படப் பழக வேண்டும். வெறுப்போடு எழ வேண்டாம். போர்வையை உதறி விட்டு, 'எழுந்திரு. டேய் சோம்பேறி' என்று சொல்லிக் கொண்டு எழ வேண்டாம்! (சிரிப்பு)
Laziness
Laziness has to be examined carefully. Is it laziness? For people who are hard on themselves... may be, it actually not laziness. It is anger at yourself and you will accuse yourself to be lazy. The real problem is ill-will towards for oneself. Sometimes, the best thing for it to say, 'Sleep in. Have a coffee. Relax. Just sooth that'. Far worse than laziness is self ill-will. Don't want to aggravate that. You want to treat yourself well. Smooth it over. Don't start accusing yourself. A little laziness is better than ill-will. When you start feeling concern for your self, good will for yourself you will naturally not do things to injure your self.
Excess, laziness never doing anything etc. is self injurious to your self. But because you have good will to yourself you won't do that. Because you are your friend, you won't do anything bad to your friend. So you won't do anything bad to yourself. So you will do what you have to do to get up and go about your business and so forth and sit down to meditate much more when you are motivated by friendliness, interest, moving towards something positive.
Just think back in your life and anything you found interesting... you don't even have to try. Just every time you get an opportunity you go for it. So make it interesting. Make it something that you like. The carrot is lot easier than the stick. This is the classic element in the western psyche - the notorious imbalance towards the stick, towards excess ill-will especially towards oneself. This is part of our entire cultural imbalance. Needs to be rebalanced.
At the same time we tend to be hard working busy types. So we need to relax a little bit ease up on that strain. Almost nothing is as important as just being kindly to myself, give myself words of positive encouragement. That will do it.
Actually hard words: Strong kind of encouragements works for certain cultures who love themselves, are confident. They are motivated by that. They don't turn it into negativity. They don't turn it into self loathing. They can turn a hard kind of Dhamma talk... 'You lazy bunch of pigs ..' and they are just smiling They walk away feeling very good about themselves but a little bit pumped up (laughter). This doesn't work well in the west. They are already too hard on themselves. So love yourself out of bed in the morning. That is the way to do it. Don't hate yourself out of bed. Throw off the covers and think, 'Hope that hurts you lazy fellow.' No No. No. Don't do that.
54. உங்களை நேசியுங்கள் Top
பேராசை கொண்டவன், கோபக்காரனைவிடக் குறைந்த ஆபத்தானவன். ஒரு வெறுக்கத்தக்க கோபக்காரன் சமூகத்தில் படிந்த பெரும் கறை. ஆபத்தான அவனை யாருக்கும் பிடிக்காது. அவா உடையவன் அவ்வளவு பிரச்சனையானவன் அல்ல. சொல்லப் போனால் பலருக்கு அவனைப் பிடிக்கும். சமுதாயத்தில் அப்படிபட்ட பேராசைகளைக் கொண்டாடவும் செய்கிறோம். மக்கள் ஒன்றுகூடும் போது மல்கோவா மாம்பழத்தின் சுவை பற்றியும், பங்கனபள்ளி மாம்பழத்தின் மாறுபட்ட சுவை பற்றியும் ஒப்பிட்டுப் பேசும் உரையாடலைக் கேட்டிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு சுவை பிடிக்கும். திருநெல்வேலி அல்வாவுக்கும், ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி வாதிப்பது போன்ற பேச்சுக்கள் சமூகத்தில் கண்டிக்கப் படுவதில்லை.
இறுதியில் நீங்கள் ஞானி ஆகவேண்டுமென்றால் இந்தப் பேராசையிலிருந்தும் விடுபட்டே ஆக வேண்டும். ஆனால் மனிதனாக இருக்க விரும்பினால் வெறுப்பை அவசியம் களைய வேண்டும்.
என்னைப் பொருத்தவரையில் சாக்லேட் கேக்கை (chocolate cake) முழுவதும் சாப்பிட்டு விடுவேன் என்று மிரட்டும் பேராசை கொண்டவன் அருகில் இருப்பது, அதே கேக்கை என்முகத்தில் வீசப் போவதாக மிரட்டுபவன் அருகில் இருப்பதை விட மேலானது. (சிரிப்பு). பேராசை கொண்டவன் அருகில் இருப்பது வெறுப்புக் கொண்டவன் அருகில் இருப்பதைவிட எளிதானது.
இறுதியில் நமக்கு நாமே அன்பாகப் பேசிக் கொள்வதும், நமக்கு நாமே நல்லெண்ணம் செலுத்துவதும் தான், பேராசையையும், வெறுப்பையும் நீக்கும் வழிகள். மிகுதியான ஆசை கொள்ளாமலே திருப்தியுடன் வாழ முடியும் என்பதை உணர்ந்தால், பேராசைப் படுவதும் தானாகவே குறைந்து விடும்.
Love yourself
It is far less dangerous to be a greedy person than an angry person. It is less dangerous. A hateful angry person is a great stain and dangerous and nobody likes him. A greedy person is far less problematic and some people even like him. It is even celebrated in some ways. Everybody has a club, the gourmet club. We all get together and celebrate each others’ taste preferences. Wine clubs, connoisseurs of liver pate. The more you spend on it the more you congratulate each other on this orgy of greed. The best lover of this and that. It is not socially condemned. Ultimately if you want to be a saint, you have to get over it. You have to get over that greed. But if you just want to be a human you have to get over that hate.
I'd far rather be with somebody who is threatening to overeat chocolate cake than somebody who is threatening to smash your face in with it (laughter). It is much easier.
Sometimes you have to bribe yourself out of it. It is not ultimately a solution but it is better than wallowing in ill-will. So cheer yourself up sometimes and then of course, obesity and excess weight is a way to work on those feelings sometimes. The root of it all is keep making friends with yourself, keeping loving yourself and then then your basic desire to excess will be cut at the root. You won't be motivated (to excess) because you are feeling content and happy. Your unwholesome other things that come out of that will tend to fade by themselves.