உடல் மீதுள்ள பற்றினை விடுவது

உடல் மீதுள்ள பற்றினை விடுவது

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது

Letting go of attachment to the body

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

'நான்' என்ற எண்ணம் உண்டாவதற்கு உடல் ஒரு காரணம். இப்படி நான் என்ற ஒரே தன்மை இருப்பதாக உள்ள கருத்துக்கு உடல் காரணமாக இருப்பதை குறைக்க வேண்டும். இந்த உடல் நான்கு பூதங்களாள் ஆனது. அது நீர், காற்று, மன் மற்றும் வெப்பம். இங்கு உள்ள தேணீர் (அருகில் உள்ள தேணீர் கொண்ட கோப்பயை சுட்டி காடுகிறார்), அது 'நான்' இல்லை. எனக்கு சொந்தம் இல்லை. அதை ஒரு வாய் பருகியபின் .. வாயில் உள்ள போதே துப்பிவிட்டால் அது 'நான்' ஆகாது. ஆனால் முழுங்கிய உடனே .. அது 'நான்' ஆகிவிட்டது. எப்போது அது 'நான்' ஆனது? அங்கு இருக்கும் போது அது ஏன் 'நான்' ஆக இருக்கவில்லை? இப்போது ஏன் 'நான்' ஆகியது? நமது உடல் பெரும்பாலும் நீரினால் ஆனதே. யாராவது வந்து அந்த (அருகில் உள்ள) தேனீரில் விரலைவிட்டால் அது என்னை அதிகம் பாதிப்பதில்லை. ஆனால் அதே நீரை எனக்குள் உள்ள போது தொட்டால் (எனது உடலை தொட்டால்) எனக்கு சட்டென்று கோபம் வந்துவிடும், 'ஏய், அது என் உடல். அதைத்தொடாதே,' என்கிறோம். ஆனால் ஒரு வினாடிக்கு முன் அது வெறும் நீராகத்தான் இருந்தது. உடலுக்குள் சென்ற நீரை மிகவும் சொந்தம் கொண்டாடுகிறோம். எனக்கு அது சொந்தம், அது தான் நான். ஆனால் அதை சிறுநீராக கழித்துவிட்டால் பின் அது நமக்கு சொந்தம் இல்லாமல் போய்விடுகிறது . பின் யார் வேண்டுமானாலும் அதைத் தொடலாம். அது இனி என்னுடையது இல்லை. அந்த கோப்பையில் தேனீர் இருந்த போது அது என்னுடையதில்லை. முழுங்கிய பின் என்னுடையதானது. சிறுநீர் கழித்த பின் என்னுடையதில்லை.

உங்களுக்கும் காற்றுக்கும், உங்களுக்கும் நீருக்கும், உங்களுக்கும் மண்ணுக்கும் இடையில் எங்கிருந்து வந்தது இந்த செயர்கையான பிரிவு? அதோ தோட்டத்தில் கீரை செடியிருப்பதை பார்க்கிறோம். மண் தான் கீரையானது. அந்த கீரையை உணவருந்தும் மேசை மீது வைத்த பின் அதை வாயில் போடுகிறோம். கீரையாக மாறிவிட்ட மண் இப்போது 'நான்' ஆகிவிட்டது. பின் மறுபடியும் மண்ணுக்கே திரும்பிவிடுகிறது.

இந்த உடலுக்கும் அடிப்படை பூதங்களான - மண், காற்று, நீர், வெப்பம் ஆகியவற்றுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பது தெளிவாகிறது இல்லையா? ஆனால் இந்த விசித்திரமான - அவை தான் நான் என்ற மாய கருத்து நமக்குள் உண்டாயிருக்கிறது. இப்படி நினைத்துத்தான் உடல் மீதுள்ள பற்றினை விடவேண்டும்.

அஜான் சா, "இந்த உடலை நண்பரிடம் கடன் வாங்கிய வாகனத்தைப் போல நடத்த வேண்டும்," என்று சொல்வார். நண்பனிடம் கடண் வாங்கிய வாகனம். நண்பரிடம் கடண் வாங்கிய வாகனம் உங்களுடையதில்லை என்று தெரியும். ஆனால் அது உங்களை வேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்லும். ஆனால் யாராவது, 'நல்ல வண்டி,' என்று சொன்னால், நீங்கள், 'அது என்னுடையதல்ல, என் நண்பனுக்கு சொந்தமானது' என்போம். இந்த உடலை யாரிடமிருந்து கடன் பெற்றோம்? இயற்கையிடமிருந்து. இயற்கை இந்த உடலுக்கு சொந்தக்காரர். அது உங்களுடையதில்லை. இயற்கையிடமிருந்து கடன் வாங்கியியுள்ளோம். ஆனால் அதை பழுதாக்கக்கூடாதள்ளவா? அதற்கு பெற்றோல் போட வேண்டும், எண்ணை மாற்றி சுத்தம் செய்ய வேண்டும். அதை மோசமாக நடத்தக்கூடாது. நட்புணர்வுடன் கொடுக்கப்பட்டது. பயனுள்ளது. யாராவது, 'உங்களுக்கு அழகான உடல்,' என்று உங்களிடம் சொன்னால், 'அது என்னுடையதில்லை. இயற்கை வளர்த்தியது. எப்படி செய்ததென்று தெரியவில்லை. ஆனால் அது இந்த உடலை வளர்த்தியது.' என்று கூறவெண்டும். அல்லது, 'தடித்திருக்கிறது. சற்று எடை குறைக்கப் பார்,' என்றால் நீங்கள், 'அட! இது என்னுடையதில்லை. கடன் தான் வாங்கியிருக்கிறேன். தானாகவே வளர்ந்தது. நான் என்ன சொல்ல. இயற்கை எப்படி இந்த உடலை செய்தது என்று எனக்கு தெரியவில்லை!,' எனச் சொல்ல வேண்டும்.

இது ஒரு முக்கியமான மனப் பாவனை. தொடர்ந்து இந்த உடல் தான் நாம் என்ற எண்ணத்தை விட வேண்டும். இது நான் இல்லை. நான் இந்த உடல் இல்லை. இதன் சொந்தக்காரர், இதை வளர்த்தியது, இதை உருவாக்கியது எல்லாம் இயற்கையே. எனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை.

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

* * * * * *

Transcribed from an audio tape available at birken.ca

To some degree the body is part of a sense of identity. We have to reduce that. This body is made of four elements. It is water. It is air. It is earth. It is heat. This tea when it is there (pointing to a cup of tea near by) I don't think it is me. As soon as I take a sip .. I could still spit it out and it won't be me.The moment I swallow .. now it is me. When did it become me? Why was it not me when it ws over there? Why is it me now? Most of your body is water. When somebody comes along and puts their finger in the water besides you you don't feel too threatened. But if they touch the water inside you (by poking your body) then you go, 'Hey that's me. It's my body. Don't touch it.' But the moment before it was just water. You take the water very personally. But the moment after you take a pee they can touch it all they want. Go ahead. It's not me anymore. Somehow it's not me now. Out there in a cup it's not me. Then its me. Once we pee it is not me.

Where is this artificial division between you and the air, you and the water, you and the earth. You can see the lettuce growing in the garden. Dirt turns into lettuce. Put it right at the table. Then you put it in your mouth. its you now and then it goes back into the earth.

It's so obvious that there is no distinction between the body and these basic elements - earth, air, water and heat. We have this strange delusion that its me.

That's getting over this attachment to the body.

Ajanh Chah used to say, 'Treat your body as if it is a car borrowed from a friend.' A car borrowed from a friend. You know when you borrow a car from a friend it is not your car. But it gets you around. It is useful. But when somebody says, 'Nice car,' you say, 'Its not mine. I borrowed it from a friend.' Who is the friend you borrowed this body from. It is nature. Nature owns your body. Its not yours. You borrowed it from nature. But you don't ding it up right? You have to put the gas and oil in it. Clean it. You don't mistreat it. It is a friendly offer. Useful. That's all. When somebody says, 'Your body is beautiful,' you say, 'Its not mine. Nature grew it. I have no idea how it did it but it just grew this thing.' Or if they say, 'You can stand to lose a few pounds,' you say, 'But it's not mine! I just borrowed it. It grew by itself. What can I say. I have no idea how nature does this.'

And that is a very important meditation. Continuously making this less personal. It is NOT personal. Owned, grown and produced by nature. Nothing to do with you.

* * * * * *