பத்திரவுதா-மாணவ-பூச்சா Bhadravudha-manava-puccha

சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home

Sn 5.12

பத்திரவுதா-மாணவ-பூச்சா: பத்திரவுதாரின் கேள்விகள்

Bhadravudha-manava-puccha: Bhadravudha's Questions

Translated from the Pali by: Thanissaro Bhikkhu

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: தணிசாரோ பிக்கு

* * *

[பத்திரவுதார்:]

அறிவுள்ள, விடுபட்ட, சஞ்சமில்லாதவரை

வீடு துறந்தவர்,

கூதூகலம் துறந்தவர்,

ஊகிப்பதைத் துறந்தவர்,

வேட்கையை வெட்டியவர்,

வெள்ளத்தைத் தாண்டியவரை

மன்றாடிக் கேட்கிறேன்:

பல நாடுகளிலிருந்து பலரும் உங்கள்

கருத்தை எதிர்பார்த்திருக்கின்றனர், தலைவரே.

எனவே அவர்களுக்காக இந்தத் தம்மத்தை

விளக்கிக் கூறுங்கள்.

[Bhadravudha:]

I entreat the one

who is very intelligent,

released, unperturbed —

who has abandoned home,

abandoned delight,

abandoned resemblances,

cut through craving,

crossed over the flood.

Having heard the Great One, they will leave —

the many gathered

from many lands, hero,

in hope of your words.

So tell them, please,

how this Dhamma has

been known to you.

[புத்தர்:]

வேட்கையையும், பற்றையும் அடக்குங்கள் - எல்லாவற்றையும் -

மேல், கீழ்,

எதிர்ப்புறம் மற்றும் நடுவில். [1]

இந்த உலகில் எவரெல்லாம்

எவற்றோடு பற்றுக் கொண்டுள்ளனரோ

அவற்றை வைத்தே மாரன்

அவர்களைத் துரத்துகிறான்.

எனவே ஒரு துறவி, கடைப்பிடியுடன்,

இந்த மனிதரின்

பற்றுகளைக் கண்டு அவர்கள்

மரணப் பிரதேசத்தில் சிக்கியிருப்பதை அறிந்து,

இந்த உலகிலும் மற்றும்

எந்த உலகிலும்

எதனோடும் பற்றுக் கொள்ளக் கூடாது.

[The Buddha:]

Subdue craving and clinging — all —

above, below,

across, in between. [1]

For whatever people cling to in the world,

it's through that

that Mara pursues them.

So a monk, mindful,

seeing these people

clinging to entanglement

as entangled in Death's realm,

should cling to nothing

in all the world,

every world.

* * *

விளக்கம்:

Note:

1. For Nd.II's discussion of the various meanings of the objects of craving "above, below, across, in between," see Note 2 to Sn.V.4 (Mettagu's Question).

Nd.II gives six different valid interpretations for "above, below, across, in between":

above - the future; below - the past; across and in between - the present.

above - the deva world; below - hell; across and in between - the human world.

above - skillfulness; below - unskillfulness; across and in between - indeterminate mental qualities.

above - the property of formlessness; below - the property of sensuality; across and in between - the property of form.

above - feelings of pleasure; below - feelings of pain; across and in between - feelings of neither pleasure nor pain.

above - the body from the feet on up; below - the body from the crown of the head on down; across and in between - the middle of the body.

"மேல், கீழ், எதிர்ப்புறம், நடுவில்" என்ற வாசகத்திற்கு ஆறு விதமான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன:

மேல் - எதிர்காலம்; கீழ் - கடந்த காலம்; எதிரில் மற்றும் நடுவில் - நிகழ் காலம்.

மேல் - தேவர் உலகம்; கீழ் - நரகம்; எதிரில் மற்றும் நடுவில் - இந்தப் பூவுலகம்.

மேல் - திறமையான; கீழ் - திறமையற்ற; எதிரில் மற்றும் நடுவில் - குறிப்பிட முடியாத மனத்தின் பண்புகள்.

மேல் - அருவம் (உருவம் இல்லாத தன்மை); கீழ் - புலன் இன்பங்கள் உள்ள தன்மை; எதிரில் மற்றும் நடுவில் – உருவத்தன்மை.

மேல் - இன்ப நுகர்ச்சி; கீழ் - துன்ப நுகர்ச்சி; எதிரில் மற்றும் நடுவில் – இன்பமும், துன்பமும் இல்லாத நொதுமலான நுகர்ச்சி.

மேல் – உடல் - பாதங்களுக்கு மேல்; கீழ் – உடல் - உச்சந்தலைக்குக் கீழ்; எதிரில் மற்றும் நடுவில் உடலின் மத்தியப் பகுதி.

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

©1994 Thanissaro Bhikkhu. See details English Source

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.