உரக சூத்திரம் Uraga Sutta

சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home

Sn 1.1

உரக சூத்திரம் – அரவம் / பாம்பு [1]

Uraga Sutta — The Serpent/The Snake [1]

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: ஞானபொணிகா தேரர்.

Translated from the Pali by: Nyanaponika Thera

One who advances far along the path sheds unwholesome states of mind, as a snake sheds its dried up old skin.

பாம்பு தன் தேய்ந்த தோல் சட்டையை உதறி விடுவதைப் போல ஆன்மீகப்பாதையில் முன்னேறுகிறவர் திறமையற்ற பண்புகளை விட்டு விடுகிறார்.

Photo Courtesy: ericasodos.wordpress.com

* * *

He who can curb his wrath

as soon as it arises,

as a timely antidote will check

snake's venom that so quickly spreads,

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

எவனொருவனால் தன் கோபத்தை

அது தோன்றியவுடனே கட்டுப்படுத்த முடிகிறதோ,

வேகமாகப் பரவும் பாம்பின் விஷத்தைத்

தக்க நேரத்தில் கட்டுப்படுத்தும் மாற்று மருந்தைப் போல

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல. [2]

He who entirely cuts off his lust

as entering a pond one uproots lotus plants,

- such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

குளத்தில் நுழையும் போது தாமரைச் செடிகள் களைந்தெறியப் படுவதுபோல,

எவனொருவன் தன் காமத்தை முற்றிலும் துண்டித்து விடுகின்றானோ

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

He who entirely cuts off his craving

by drying up its fierce and rapid flow,

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

எவனொருவன் தன் வேட்கையை, [3]

அதன் கொடிய வேகமான ஓட்டத்தை வற்ற வைப்பதால், முற்றிலும் துண்டிக்கின்றானோ

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

He who entirely blots out conceit

as the wind demolishes a fragile bamboo bridge,

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

எவனொருவன் தன் அகம்பாவத்தை, [4]

பெரும் காற்றில் வலுவில்லாத மூங்கில் பாலம் நொறுக்கப்படுவது போல, முற்றிலும் அழித்து விடுகின்றானோ

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

He who does not find core or substance

in any of the realms of being,

like flowers which are vainly sought

in fig trees that bear none,

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

எந்த விதமான பிறவித் தளங்களிலும் (தோற்றத்திலும்),

அதில் சாரமில்லாததை உணரும் ஒரு துறவி

பூக்காத அத்திமரத்தில்

பூக்களைப் வீணாகத் தேடுவதைப்போல

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

He who bears no grudges in his heart,

transcending all this "thus" and "otherwise,"

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

எவனொருவன் தன் உள்ளத்தில் பொறாமையும், வெறுப்பும் இல்லாமல் உள்ளானோ,

'இப்படி இருக்க வேண்டும்’, இல்லாவிட்டால் 'அப்படி ஆக வேண்டும்’ என்ற விருப்பு வெறுப்பையெல்லாம் கடந்து செல்கின்றானோ

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

He who has burned out his evil thoughts,

entirely cut them off within his heart,

— such a monk gives up the here and the beyond,

just as the serpent sheds its worn-out skin.

எவனொருவன் தீய எண்ணங்களையெல்லாம் எரித்து விடுகிறானோ,

தன் உள்ளத்திலிருந்து அவற்றை முழுவதும் துண்டித்து விடுகின்றானோ

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

He who neither goes too far nor lags behind, [5]

entirely transcending the diffuseness of the world,

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

ஆற்றலுக்கு மீறிய முயற்சி செய்து சோர்ந்து விடாமலும் அதேசமயம் போதிய முயற்சி செய்யாமல் பின்தங்கிவிடாமலும் [5]

சிக்கலான உலக விஷயங்களைப் புரிந்துகொண்டு தாண்டிச்சென்றவர் (உலக விஷயங்களில் சிக்கிக் கொள்ளாதவர்)

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

He who neither goes too far nor lags behind

and knows about the world: "This is all unreal,"

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

ஆற்றலுக்கு மீறிய முயற்சி செய்து சோர்ந்து விடாமலும் அதேசமயம் போதிய முயற்சி செய்யாமல் பின்தங்கிவிடாமலும்

"இவை எல்லாம் மாயை (சாரமற்றவை)," என்று உலகைப் புரிந்தவர்

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

He who neither goes too far nor lags behind,

greedless he knows: "This is all unreal,"

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

ஆற்றலுக்கு மீறிய முயற்சி செய்து சோர்ந்து விடாமலும் அதேசமயம் போதிய முயற்சி செய்யாமல் பின்தங்கிவிடாமலும்

"இவை எல்லாம் மாயை (சாரமற்றவை)," என்று அவா இல்லாமல் வாழத் தெரிந்தவர்

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

He who neither goes too far nor lags behind,

lust-free he knows: "This is all unreal,"

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

ஆற்றலுக்கு மீறிய முயற்சி செய்து சோர்ந்து விடாமலும் அதேசமயம் போதிய முயற்சி செய்யாமல் பின்தங்கிவிடாமலும்

"இவை எல்லாம் மாயை (சாரமற்றவை)," என்று காமம் இல்லாமல் வாழத் தெரிந்தவர்

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

He who neither goes too far nor lags behind,

hate-free he knows: "This is all unreal,"

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

ஆற்றலுக்கு மீறிய முயற்சி செய்து சோர்ந்து விடாமலும் அதேசமயம் போதிய முயற்சி செய்யாமல் பின்தங்கிவிடாமலும்

"இவை எல்லாம் மாயை (சாரமற்றவை)," என்று வெறுப்பு இல்லாமல் வாழத் தெரிந்தவர்

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

He who neither goes too far nor lags behind,

delusion-free he knows: "This is all unreal,"

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

ஆற்றலுக்கு மீறிய முயற்சி செய்து சோர்ந்து விடாமலும் அதேசமயம் போதிய முயற்சி செய்யாமல் பின்தங்கிவிடாமலும்

"இவை எல்லாம் மாயை (சாரமற்றவை)," என்று அறியாமை இல்லாமல் வாழத் தெரிந்தவர்

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

He who has no dormant tendencies whatever,

whose unwholesome roots have been expunged,

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

தற்போது செயலற்று இருந்தாலும் எளிதில் தூண்டப்படக் கூடிய மாசுகள் இல்லாதவன்

அவன் திறனற்ற பண்புகள் வேறோடு பிடுங்கப் பட்டிருப்பவன்

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

States born of anxiety he harbors none

which may condition his return to earth,

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

கவலையினால் உண்டான மன நிலைகள் இல்லாததால்

மீண்டும் புவியில் பிறக்க காரணம் இல்லாதவர்,

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

States born of attachment he harbors none

which cause his bondage to existence,

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

பற்றினால் உண்டான மன நிலைகள் இல்லாததால்

பிறவிச் சுற்றில் பிணைக்க காரணம் இல்லாதவர் [6]

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

He who has the five hindrances discarded,

doubt-free and serene, and free of inner barbs,

— such a monk gives up the here and the beyond,

just as a serpent sheds its worn-out skin.

ஐந்து கிலேசங்களையும் கைவிட்ட ஒருவன் [7]

சந்தேகங்கள் இல்லாமல் நிதானத்தோடும், உள்ளத்தில் எந்தத் தீமையும் இல்லாமல் இருப்பவன்

- அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறார், மறுமையையும் கைவிடுகிறார்,

அரவம் தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

* * *

[1]

The Simile of the Serpent Source

The shedding of the serpent's old skin is done in four ways:

(1) in following the law of its own species,

(2) through disgust,

(3) with the help of a support, and

(4) with effort.

(1) "Its own species" is that of those long-bodied animals, the snakes. Snakes do not transgress these five characteristics of their species: in regard to their birth, their death, their surrendering to (a long and deep) sleep, their mating with their own kind only, and the shedding of the old, worn- out skin. Hence, in shedding the skin, a snake follows the law of its own kind.

(2) But in doing so, it sheds the old skin out of disgust. When only half of the body has been freed of the old skin and the other half is still attached, the snake will feel disgust.

(3) In such disgust, the snake will support its body on a piece of wood, a root or a stone, and

(4) making an effort, using all its strength, it will wind its tail around the supporting object, exhale forcefully and expand its hood, and shed the old skin fully. Then it will go freely wherever it likes.

It is similar with a monk. The "law of his own species" is virtue (sila). Standing firm in his own law of virtue, and seeing the misery involved, he becomes disgusted with the "old worn-out skin" of the "here and the beyond," comprising (such pairs of opposites) as his own and others' personalized existence, etc., which are productive of suffering. Thus he becomes disgusted and, seeking the support of a noble friend, (a wise teacher and meditation master), he summons his utmost strength by way of the path factor, right effort. Dividing day and night into six periods, during daytime, while walking up and down or sitting, he purifies his mind from obstructive things; doing so also in the first and the last watch of the night, he lies down for rest only in the night's middle watch. Thus he strives and struggles. Just as the serpent bends its tail, so he bends his legs to a cross-legged posture. As the serpent exhales forcefully, so the monk musters all his unremitting strength. As the serpent expands its hood, so the monk works for an expansion of his insight. And just as the serpent sheds its old skin, so the monk abandons the here and the beyond, and being now freed of the burden, he goes forth to the Nibbana-element that is without a residue of the groups of existence

அரவம் உவமானம்

நான்கு வழிகளில் பாம்பு தன் சட்டையைக் கைவிடும்:

1. தன் இனத்தின் இயற்கை நீதிக்கு ஒப்ப (பாம்பிற்கு ஐந்து இயல்புகள் உண்டு: பிறப்பு, இறப்பு, நீண்ட தூக்கம், தன் இனத்தோடு இனப் பெருக்கம் செய்தல், தேய்ந்த தோலைக் கைவிடுதல். ஆக பாம்பு தன் சட்டையை உதறிவிடுவது அதன் இயற்கை இயல்புக்கு ஒத்த செயலே).

2. வெறுப்பு உண்டாகி (ஆனால் அவ்வாறு செய்கையில் பாதி தோல் உறிந்தும் மீதி உறியாமல் இருக்கும் நிலையில் பாம்பிற்கு வெறுப்பு உண்டாகிறது.)

3, உதவியோடு (அந்த வெறுப்பின் காரணமாக பாம்பு தன் உடலை ஒரு மறக்கட்டையின் அல்லது ஒரு வேரின் அல்லது ஒரு பாறையின் உதவியோடு)

4. முயற்சி செய்து (தன் முயற்சியோடு தன் வாலை உதவிபுரியும் பொருளில் சுற்றிக்கொண்டு வேகமாக வெளிமூச்சு விட்ட வாறு பழைய தோலினை முழுவதும் உதறித் தள்ளுகிறது. பின் அது சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.)

அதே போல ஒரு துறவியும் விடுதலை பெருகிறார். துறவியின் இயற்கை நியதியானது சீலம் அல்லது ஒழுக்கம். ஒழுக்கத்தில் நிலைத்தவாறு இருக்கையில் தன் நிலையைக் கண்டு வெறுப்பு உண்டாகிறது. சம்சார சக்கரத்தின் இந்தப் பிறப்பிலும் அடுத்த பிறப்புகளிலும் உள்ள துக்கங்களைக் கண்டு வெறுப்பு உண்டாகிறது. ஆக ஒரு ஆன்மீக நண்பரின் உதவியோடு (ஒரு மெய்ஞ்ஞானம் உள்ள ஆசிரியராகவோ தியான ஆசியராகவோ இருக்கலாம்) தன் சக்திகள் அனைத்தையும் பயன்படுத்தி நன்முயற்சி செய்து நிப்பாண நிலை என்ற வீடுபேற்றினை அடைகிறார்.

[2]

மாற்றுமருந்து - விஷத்தை முறிக்கும் மருந்து antidote

அரவம் - பாம்பு

இம்மை (here) - இந்தப் பிறப்பு, மறுமை (beyond) - அடுத்த பிறப்பு

[3] வேட்கை (craving) – வேண்டும், இன்னும் வேண்டும் என்கிற தாகம்

[4] அகம்பாவம் (conceit) - போலித் தற்பெருமை

[5] 'மிகத் தூரம் செல்லாமலும் அதேசமயம் பின்வாங்காமலும்' என்பதன் பொருள்:

அதீத ஆசையின் காரணமாகத் தடுமாறாமலும், அதே சமயம் முயற்சியே எடுக்காமல் இருந்து பின் வாங்காமலும் இருப்பவர்

From the commentaries:

These are two extremes — going too far (struggling) and lagging behind (tarrying):

"How, Lord, did you cross the flood (of samsara)?"

"Without tarrying, friend, and without struggling did I cross the flood."

"But how could you do so, O Lord?"

"When tarrying, friend, I sank, and when struggling I was swept away. So, friend, it is by not tarrying and not struggling that I have crossed the flood."

உரைகளிலிருந்து:

இவை இரண்டு எல்லைகள் – அதிக தூரம் செல்வது (தடுமாறுவது) மற்றும் பின் வாங்குவது (முயற்சி எடுக்காதது)

"அண்ணலே, நீங்கள் எவ்வாறு வெள்ளத்தைக் (சம்சாரச் சுழலை) கடந்து சென்றீர்கள்?"

"தாமதிக்காமலும் தடுமாறாமலும் வெள்ளத்தைக் கடந்தேன்."

"ஆனால் அதை எப்படிச் செய்தீர்கள், அண்ணலே?"

"தாமதித்தபோது மூழ்கிப்போகக்கூடிய ஆபத்தை உணர்ந்தேன், அளவுக்கு மீறி முயற்சி செய்தபோது (சோர்த்து போய்) அடித்துச் செல்லப் படக்கூடிய ஆபத்தை உணர்ந்தேன்,. எனவே நண்பரே, தாமதிக்காமலும், தடுமாறாமலும் இருந்து வெள்ளத்தைக் கடந்தேன்."

[6] கட்டு - பிறவி எடுக்க வைக்கும் கட்டு

[7] ஐந்து கிலேசங்கள்/இடையூறுகள் - கோபம், பேராசை, அலைக்கழிப்பு, சோம்பல் மற்றும் சந்தேகம்

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

©1989 Buddhist Publication Society See details English Source

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.