எளிமையாகச் சொல்வதென்றால்...6
எளிமையாகச் சொல்வதென்றால்
In Simple Terms
108 அற உவமானங்கள்
போற்றுதற்குரிய அஜான் சா
108 Dhamma Similes by Ajahn Chah
91. Keeping Watch Top
If you're forgetful for a minute, you're crazy for a minute. If your mindfulness lapses two minutes, you're crazy for two minutes. If it lapses for half a day, you're crazy for half a day. That's how it is.
Mindfulness means keeping something in mind. When you do or say anything, you have to remember to be alert. When you're doing something, you're alert to what you're doing. Keeping this in mind is like having things for sale in your house. You keep watch over your things, over the people coming to buy your things, and over the thieves coming to steal your things. If you always keep track of these things, you'll know what each person is coming for. When you keep your weapon in your hands like this — in other words, you keep watching — then when thieves see you, they won't dare do anything to you.
It's the same with the objects of the mind. If you're mindful and alert, they won't be able to do anything to you. You know: A good object like this won't put you in a good mood forever. It's not for sure. It can disappear at any time. So why should you hold onto it? "I don't like this": It's not for sure. When this is the case, objects are simply null and void, that's all. We keep teaching ourselves this way, we keep being mindful, we keep looking after ourselves continually: by day, by night, whatever the time.
எச்சரிக்கையுடன் இருப்பது
ஒரு நிமிடம் நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அந்த ஒரு நிமிடம் நீங்கள் பைத்தியக்காரராக இருப்பது போல. உங்கள் கடைப்பிடி இரண்டு நிமிடம் விட்டுப் போனால் நீங்கள் இரண்டு நிமிடம் பைத்தியக்காரராக இருப்பது போல. அரை-நாள் கடைப்பிடி இல்லாமல் போனால் அரை-நாள் பைத்தியக்காரராக இருப்பது போல. நடைமுறை அப்படித்தான்.
கடைப்பிடி என்பது ஒன்றை மனத்தில் வைத்திருப்பது. எதையேனும் செய்துகொண்டோ பேசிக் கொண்டோ இருந்தால் கவனத்துடன் இருக்க நினைவு கொள்ள வேண்டும். செய்யும் காரியத்தைக் கடைப்பிடித்தல். இப்படிக் கவனத்தில் வைத்திருப்பது வீட்டில் விலைக்கு விற்கும் பொருட்களை வைத்திருப்பது போல. அவற்றை வாங்க வரும் மக்களையும், விற்க வைக்கப்பட்டிருக்கும் பொருட்களையும், அப்பொருட்களைத் திருட வரும் திருடர்கள் மீதும் ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி அக்கறையோடு இருந்தால் வரும் ஒவ்வொருவரும் எதற்காக வருகின்றனர் என்பதை அறிந்திருப்போம். இப்படிப்பட்ட ஆயுதத்தை வைத்திருக்கும் போது - அதாவது நீங்கள் கவனித்துக் கொண்டே இருக்கும்போது – திருடன் கூட நீங்கள் எச்சரிக்கையோடு இருப்பதைப் பார்த்து, திருட நினைக்க மாட்டான்.
மனத்தின் பொருட்களும் அது போலவே. அக்கறையோடும் கவனத்தோடும் இருந்தால் அவை உங்களை எதுவும் செய்துவிட முடியாது. உங்களுக்கே தெரியும்: இது போன்ற இன்பம் தரும் பொருள் உங்களை என்றென்றும் நல்ல மனநிலையில் வைத்திருக்காது. அது உறுதியற்றது. எந்த நேரமும் மறைந்துவிடக் கூடியது. எனவே அதனுடன் ஏன் பற்றுக் கொள்ள வேண்டும்? "எனக்கு இது பிடிக்கவில்லை": இதுவும் நிலையற்றது. இப்படி இருக்கும்போது பொருட்களுக்கு மதிப்பேதும் இல்லை. அவ்வளவு தான். இவ்வாறு நமக்கு நாமே கற்பித்துக் கொள்ள வேண்டும், கடைப்பிடியோடு இருக்க வேண்டும். நம்மை நாமே தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு இருக்க வேண்டும்: பகலிலும், இரவிலும், எந்நேரமும்.
92. Receiving Visitors Top
Make your mind aware and awake. Keep looking after it. If anyone comes to visit, wave them away. There's no place for them to sit, for there's only one seat. Try to sit here receiving visitors all day long. This is what's meant by "buddho." Stay firmly right here. Keep this awareness going so that it can look after the mind. As you sit right here, all the visitors that have been coming to visit since way back when — when you were born little and tiny — will come right here where you "buddho" all by yourself.
As for the guests, the visitors that come wandering by, fabricating all kinds of different things, you let them go along in line with their own issues. The act of the mind's going along with them is called a cetasika. Whatever it is, wherever it's going, who cares? Just acquaint yourself with the visitors who want to come and stay. You have only one seat to receive them, so you put one person there all the time. The others will have no place to sit. Now when they come here and talk to you, they don't get to sit down anymore. The next time they come, whenever they come, they keep finding the person sitting here who never goes away. How many more times will they keep on coming if all they get to do is talk to you? You'll get to know them all, all those who've been coming since way back when you were first aware of things. They'll all come to visit.
விருந்தினர்களை வரவேற்பது
மனத்தை விழிப்புடனும் அறிநிலையிலும் வைத்திருங்கள். தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருங்கள். யாராவது வந்தால், கைகாட்டிப் போய்விடச் சொல்லுங்கள். அவர்கள் உட்காருவதற்கு இடம் இல்லை, ஏனென்றால் இங்கு ஒரு ஆசனம் மட்டுமே உள்ளது. அதில் உட்கார்ந்து நாள்முழுதும் வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருங்கள். "புத்தோ" என்ற வார்த்தைக்கு இதுவே பொருள். உறுதியுடன் அங்கேயே இருங்கள். அறிநிலை தொடர்ந்து இருக்கட்டும். அறிநிலை மனத்தைக் கவனித்துக் கொண்டே இருக்கட்டும். அங்கு நீங்கள் உட்கார்ந்திருக்கும்போது - நீங்கள் சிறுவராக இருந்த காலத்திலிருந்து - நீங்கள் "புத்தோ" என்று சொல்லிக் கொண்டு தனிமையில் உட்கார்ந்திருக்கும் வரை பழகிய பல விருந்தினர்கள் வருவார்கள்.
சுற்றி அலைந்து வரும் விருந்தினர்கள், பல செய்திகளை அலசிக் கொண்டு வருவார்கள் - அவரவர் பிரச்சனைகளுக்கு ஒப்ப அவர்களைப் போக விடுங்கள். அவர்களோடு சேர்ந்து போகும் மன நடவடிக்கையைச் சேதசிகா என்பார்கள். எதுவாக இருந்தாலும், எங்கு போனாலும் உங்களுக்கு அதில் என்ன அக்கறை? வந்து தங்க விரும்பும் விருந்தினரைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களை வரவேற்க ஒரு ஆசனம் தான் இருக்கிறது எனவே ஒருவரை மட்டும் அதில் உட்கார வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர் உட்கார இடம் இல்லை. இனி அவர்கள் வந்து உங்களிடம் பேச விரும்பினால் அவர்கள் உட்காருவதற்கு இடம் இல்லை. அடுத்தமுறை அவர்கள் வரும்போது, எப்போது வந்தாலும், அவர்கள் ஒருவரே அந்த ஆசனத்தில் இருப்பதை அறிவார்கள். அவர் எங்கேயும் நகருவதாகவும் தெரியவில்லை. உங்களிடம் பேசுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாததால் இன்னமும் எத்தனை முறைதான் அவர்கள் வருவார்கள்? அவர்கள் அனைவரையும் நீங்கள் அறிவீர்கள். முதல் முதல் உங்களுக்கு விஷயம் தெரிய ஆரம்பித்ததலிருந்து வந்து கொண்டிருக்கும் அவர்கள் அனைவரும் பார்த்து விட்டுச் செல்பவர்கள் தான்.
93. Chicken in a Cage Top
When mindfulness and the mind in charge come together, there's a kind of feeling. If the mind is ready to be at peace, it'll be caged in a peaceful place, like a chicken we've put into a cage. The chicken doesn't leave the cage but it can walk back and forth in the cage. Its walking back and forth is no problem, for it's walking back and forth in the cage. The feelings of the mind when we use mindfulness to keep it at peace, the feelings in that peaceful place, aren't anything that will stir us up. In other words, when it feels, when it thinks, let it feel within the peace. It's no problem.
கூண்டிலுள்ள கோழி
கடைப்பிடியும், அக்கறையுடன் இருக்கும் மனமும் ஒன்று சேரும் போது, அங்கு ஒரு நுகர்ச்சி இருக்கும். மனம் அமைதியாக இருக்க விரும்பும் போது, அது அமைதியான கூண்டிலடைக்கப்படும் ஒரு கோழி போல. கோழி கூண்டைவிட்டுப் போவதில்லை யென்றாலும் கூண்டுக்குள் முன்னும் பின்னும் அதனால் நடக்க முடியும். அது முன்னும் பின்னும் நடப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை, ஏனென்றால் அது கூண்டுக்குள் தான் முன்னும் பின்னும் நடக்கிறது. கடைப்பிடியைக் கொண்டு மனத்தை அமைதியாக்கும் போது உள்ள நுகர்ச்சிகள், அந்த அமைதியான இடத்தில் உள்ள நுகர்ச்சிகள், நம்மைக் கிளர்ச்சியடையச் செய்பவையல்ல. அதாவது அது நுகரும் போது, நினைக்கும் போது அந்த அமைதியினுள் நுகரட்டும். பிரச்சனை ஏதும் இல்லை.
94. A Mischievous Child Top
It's as if a mischievous child is having some fun, irritating us until we have to yell at it and spank it. We have to understand that that's simply the nature of the child. When you understand this, you can let the child go ahead and play. Your sense of bother and irritation will disappear because you're willing to accept the nature of the child. That's how your feelings about the matter change.
When we accept the nature of things, we can let them go, leave them alone. Our mind can be peaceful and cool. This means that we understand correctly. We have right view. That's the end of the problems we have to solve.
ஒரு குறும்புக்காரக் குழந்தை
இது ஒரு குறும்பு செய்யும் குழந்தை. அது விளையாட்டாகச் செய்யும் குறும்பு, நமக்குக் கோபத்தை உண்டாக்கி குழந்தையைப் பார்த்து சத்தமிடுவதும், அதை அடிப்பதும் போல. குழந்தை தனது இயல்புக்கு ஏற்றார்ப்போல் நடந்து கொள்கிறது என்பதை நாம் அறிய வேண்டும். இதை அறிந்தால், அந்தக் குழந்தையை நாம் விளையாட விடலாம். நமது கோபமும் கிளர்ச்சியும் மறைந்து விடும், ஏனென்றால் நாம் குழந்தையின் இயல்பை ஏற்றுக் கொள்கிறோம். அந்தச் செய்கையைப் பற்றி நமது கருத்துக்கள் இப்படித்தான் மாறுகின்றன.
பொருட்களின் இயற்கை இயல்பை நாம் ஏற்றுக் கொண்டபின், நாம் அவற்றைப் போக விடலாம். அவற்றைத் தனியாக விட்டு விடலாம். நமது மனமும் சாந்தமாகவும், குளுமையாகவும் இருக்கும். அதற்கு நாம் சரியாகப் புரிந்து கொண்டோம் என்று பொருள். நமக்கு நற்காட்சி உள்ளது. நாம் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் முடிவுறுகின்றன.
95. Living with a Cobra Top
Remember this: All the objects of the mind, regardless of whether they're things you like or things you don't like, are like poisonous cobras. If they attack and bite you, you can die. Objects are like cobras whose poison is fierce. The objects we like have lots of poison. The objects we don't like have lots of poison. They can keep the mind from being free. They can make it go astray from the principles of the Buddha's Dhamma.
நல்ல பாம்போடு வாழ்தல்
இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: மன ஓட்டங்கள், அவை நமக்குப் பிடித்தவையானாலும் சரி, பிடிக்காதவை யானாலும் சரி அவை விஷமுள்ள நல்ல பாம்பைப்போல. அவை உங்களைத் தாக்கிக் கடித்து விட்டால் நீங்கள் இறந்துவிட நேரிடலாம். பொருட்கள் நல்ல பாம்பைப்போல - அதன் விஷம் கடுமையானது. நமக்குப் பிடித்த பொருட்களிலும் நிறைய விஷம் உண்டு. நமக்குப் பிடிக்காத பொருட்களிலும் நிறைய விஷம் உண்டு இவை மனம் விடுதலையோடு இருப்பதைத் தடுக்கின்றன. புத்தரின் தம்ம மார்க்கத்துக்கு வெகுதூரம் நம்மை விலக்கிச் செல்லக் கூடியவை அவை.
96. Leaving the Cobra Alone Top
Objects and moods of the mind are like cobras whose poison is fierce. If nothing gets in the way of the cobra, it slithers along in line with its nature. Even though it contains poison, it doesn't show it. It doesn't cause us any danger because we don't get near it. The cobra just goes along in line with its cobra affairs. It keeps going that way.
If you're intelligent, you leave everything alone. You leave good things alone; you leave bad things alone; you leave the things you like alone, in the same way you leave a poisonous cobra alone. You let it slither along on its way. It slithers along even though it contains poison.
நல்ல பாம்பைத் தனியே விடுதல்
எனவே மனத்தின் ஓட்டங்கள் நல்ல பாம்பைப் போல என்கிறோம். பாம்பின் வழியில் நாம் குறுக்கிடா விட்டால் அது தன் வழியில் சென்று விடும். அது விஷம் உள்ளதென்றாலும் அது நம்மைப் பாதிப்பதில்லை. நாம் அதன் அருகில் செல்லாமல் இருந்தால், நாம் அதைப் பிடிக்க முயலாமல் இருந்தால், அது நம்மைக் கடிப்பதில்லை. நல்ல பாம்பு தன் இயற்கை இயல்பின்படி நடந்து கொள்கிறது. அதுதான் அதன் வழி. நீங்கள் அறிவாளியாக இருந்தால் அதன் வழியில் குறுக்கிட மாட்டீர்கள். ஆக நல்லதை அதன் இயற்கை இயல்புக்குத் தகுந்தார்ப்போல இருக்க விட்டு விடுங்கள். கெட்டதையும் அதன் இயற்கை இயல்புக்குத் தகுந்தார்ப் போல இருக்க விட்டு விடுங்கள். நல்ல பாம்பை அதன் வழியில் விட்டு விடுவதைப்போல, உங்களுக்குப் பிடித்தவைகளையும் விட்டு விடுங்கள்; பிடிக்காதவைகளையும் விட்டுவிடுங்கள்.
97. A Kiln Top
Try to see these things clearly in yourself: That's called paccattam. Whatever outside object comes in and makes contact, it'll always be paccattam without stop. To put it in simple terms, it's like firing charcoal or bricks. Have you ever seen a kiln for firing charcoal or bricks? They build a fire about a meter outside the mouth of the kiln, and the kiln draws the smoke and the fire inside itself. Look at it in that way. It's clear in that way. This is a comparison. If you build your kiln for firing charcoal or bricks in the right way, to the right specifications, you build a fire about a meter or a meter and a half outside the mouth of the kiln. When the smoke starts coming up, it'll all get drawn into the kiln, without any left outside. The heat goes in, builds up in the kiln, and doesn't escape outside. The heat goes in and burns things very quickly. That's the way it is.
The same with the feelings of a person who practices: There's a feeling that everything gets drawn into being right view. The eye sees forms, the ear hears sounds, the nose smells aromas, the tongue tastes flavors, and all of them get drawn into being right view. There will be a contact that gives rise to discernment that way continually at all times.
சூளை
இவற்றை உங்களுக்குள் நீங்களே தெளிவாகப் பார்த்துக் கொள்ளுங்கள்: இதைப் பச்சத்தம் என்பார்கள். வெளிப்பொருள் எதுவாயினும் அது மனத்தில் தொடர்பு கொண்டால் அங்கு தொடர்ந்து பச்சத்தம் இருக்கும். எளிமையாகச் சொல்வதென்றால் இது நிலக்கரி அல்லது செங்கல்லுக்குத் தீமூட்டுவதுபோல. நிலக்கரி அல்லது செங்கல்லுக்குத் தீமூட்டும் சூளையைப் பார்த்திருக்கின்றீர்களா? சூளையின் வாயிலிருந்து ஒரு மீட்டர் தூரத்தில் நெருப்பை வளர்ப்பார்கள். சூளை அந்தப் புகையையும், நெருப்பையும் தனக்குள் இழுத்துக் கொள்ளும். இப்படிப் பார்க்க வேண்டும். இப்படிப் பார்த்தால் தெளிவாகும். இது ஒரு உவமானம். சூளையைச் சரியாகக் கட்டியிருந்தால், விவரக் குறிப்புப்படி அது கட்டப்பட்டிருந்தால், சூளையின் வாயிலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை மீட்டர் தூரத்தில் நெருப்பை வளர்க்க வேண்டும். புகை உண்டாகும் போது அது சூளையினுள் இழுக்கப்படும். எதையும் வீணாக வெளியில் விடக் கூடாது. சூடு உள்ளே செல்கிறது. சூளையைச் சூடாக்குகிறது. சூடு வீணாக்கப் படுவதில்லை. சூடு உள்ளே சென்றபின் எரிக்க வேண்டியது விரைவில் எரிக்கப்படுகிறது.
பயிற்சி செய்யும் ஒருவரின் நுகர்வுகளும் அப்படித்தான்: மனத்துள் இழுக்கப்படும் எல்லாம் நற்காட்சியாகிறது. கண்கள் உருவங்களை காண்கின்றன, காது சப்தங்களையும், மூக்கு நுகர்வுகளையும், நாக்கு சுவைகளையும்: இவை எல்லாம் நற்காட்சிகளாக்கப் படுகின்றன. இவ்வாறு வெளித் தொடர்பினால் எல்லா நேரத்திலும் விவேகம் தொடர்ந்து தோன்றும்.
paccattaṃ பச்சத்தம் = individually, தனித்தன்மை
98. Fallen Mangoes Top
Use your stillness to contemplate sights, sounds, smells, tastes, tactile sensations, and ideas that make contact, regardless of whether they're good or bad, happy or sad. It's as if a person has climbed a mango tree and is shaking it so that the mangoes fall to the ground. We're under the tree, gathering up the mangoes. We don't take the ones that are rotten. We take only the ones that are good. It doesn't waste our strength because we haven't climbed the mango tree. We just pick up what's on the ground.
விழுந்த மாம்பழங்கள்
தியானத்தில் தோன்றும் அமைதியைப் பயன் படுத்தி மனத்தில் ஒரு தொடர்பை உண்டாக்கும் காட்சிகள், சப்தங்கள், நுகர்வுகள், சுவைகள், பரிசங்கள், எண்ணங்கள் ஆகியவற்றை - அவை நல்லதோ, தீயதோ; மகிழ்விப்பனவோ, சோகமானவையோ - அவற்றை நாம் பிரதிபலிக்க வேண்டும். இது ஒரு மனிதன் மாமரத்தின் மேல் ஏறி அதன் கிளைகளை அசைத்து மாம்பழங்களைக் கீழே விழச் செய்வது போல. நாம் மரத்தின் அடியில் நின்று பழங்களைப் பொறுக்கி எடுக்கிறோம். அழுகிய பழங்களை எடுப்பதில்லை. நல்லவைகளை மட்டுமே எடுக்கிறோம். மரத்தின் மீது ஏறாததால் நாம் நமது சக்தியை வீணாக்குவதில்லை. கிழே விழுந்ததைப் பொறுக்கிக் கொள்கிறோம், அவ்வளவுதான்.
99. The Spider Top
I got a good example from watching spiders. A spider makes a web like a net. It weaves its web and spreads it at different openings. I once sat and contemplated one. It hung up its web like a movie screen, and when it was done it curled itself up quietly right in the middle of the web. It didn't run around. As soon as a fly or another insect flew into its web, the web would vibrate. As soon as the web vibrated, the spider came running out of its place and caught the insect for food. When it was finished, it curled itself up in the middle of the web as before. It didn't matter what kind of insect got caught in its web, a bee or whatever: As soon as the web vibrated, the spider ran out to catch it. Then it would go back and hold on, quiet in the middle of the web where no one could see it, every time.
Seeing the spider act in this way, I came to an understanding. The six sense spheres are the eye, ear, nose, tongue, body, and mind. The mind stays in the middle. The eye, ear, nose, tongue, and body are spread out like a net. Sense objects are like insects. As soon as a sight comes to the eye, or a sound to the ear, an aroma to the nose, a taste to the tongue, or a tactile sensation to the body, the mind is what knows. Things vibrate right to the mind. Just this is enough to give rise to an understanding.
We can live by curling up inside, just as the spider curls up on its web. We don't have to go anywhere. When insects run into the net and it vibrates to the heart, then as soon as we're aware we go out and catch the insects. Then we return to our original place
After watching the spider, you can apply what you've learned to your mind. It's the same sort of thing. If the mind sees inconstancy, stress, and not-self, it's spread wide open. It's no longer the owner of happiness, no longer the owner of suffering, for it sees clearly in this way. It gets the point. Whatever you do, you're at ease. You don't want anything else anymore. Your meditation can do nothing but progress.
சிலந்திகள்
சிலந்திகளைப் பார்த்து நான் ஒரு நல்ல உதாரணத்தை கற்றுக் கொண்டேன். கவனத்தோடு இருக்கும் போது, நாம் ஒரு வலை பின்னும் சிலந்தியைப் போல. சிலந்தி வலையை வெளியில் அகலமாக விரித்துப் பின் தன்னை அதன் மத்தியில் இருத்திக் கொள்கிறது. ஆடாமல், அசையாமல், அமைதியாக, கவனத்தோடு அமர்ந்திருக்கிறது. ஒரு ஈயோ, தேனீயோ பறந்து வந்து அந்த வலையைத் தொட்டால், சிலந்திக்கு அது தெரிகிறது. உடனே எழுந்து, ஓடி அந்தப் பூச்சியைப் பிடித்துத் தனக்கு உணவாக்கிக் கொள்கிறது. உணவைப் பிடித்த பின் வேகமாக இருந்த இடத்துக்கே, கூட்டின் மத்திக்குச் சென்று விடுகிறது. மீண்டும் அது அமைதியாகவும், கவனத்துடனும் இருக்கிறது. ஏதாவது பூச்சி வலையைத் தொட வரும் நிலையிலேயே அது தெரிந்து கொள்கிறது. எதாவது வலையைத் தொட்டால், சிலந்தி ஏற்கனவே விழித்திருப்பதால் - அது கவனத்தோடு தெரிந்த நிலையில் இருப்பதால் உடனே அதைப் பிடித்துக் கொள்கிறது.
அந்தச் சிலந்தி நம் மனத்தைப் போல. மனம் புலன் உணர்வுகளின் மத்தியில் இருக்கிறது: கண்கள், காது, மூக்கு, நாக்கு, உடல் மற்றும் மனம். பயிற்சி செய்வோரின் நிலை அப்படித்தான் இருக்கும். கண்கள், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகியவை ஒரு வலையைப் போல விரிக்கப் பட்டிருக்கின்றன. புலன் பொருட்கள் பூச்சிகளைப்போல. கண்ணுக்கு ஒரு காட்சி தோன்றும் போது, அல்லது காதுக்கு சப்தம் கேட்கும் போது, மூக்குக்கு வாசனை, நாக்குக்குச் சுவை, உடலுக்குப் பரிசம் தோன்றும் போது அதை அறிவது மனம். சிலந்தி வலை, பூச்சி அதில் சிக்கும் போது அசைவதுபோல புலன் பொருட்கள் தோன்றும் போது அவை நமது மனதுக்குத் தெரியப் படுத்தப் படுகின்றன. இது மட்டுமே ஒரு அறிவு எழுவதற்குக் காரணமாக இருக்கிறது.
சிலந்தியைப்போல நாம் சுறுசுறுப்புடனும், இடையறா விழிப்புடனும், கட்டுப்பாட்டோடும் இருந்தால், நாம் நம்மையே தெரிந்து கொள்ளலாம். நம் மனம் என்ன செய்கிறது, எப்படிச் செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எங்கேயும் செல்ல வேண்டியதில்லை. பூச்சிகள் வலையைத் தொடும் போது அது உள்ளத்திற்குச் செய்தி அனுப்புகிறது, பின் அதை அறிந்தவுடன் நாம் சென்று அந்தப் பூச்சிகளைப் பிடித்துக் கொள்கிறோம். பின் மீண்டும் நாம் இருந்த மத்திய இடத்திற்கே திரும்பி விடுகிறோம்.
சிலந்தியைக் கவனித்தபின் அதிலிருந்து கற்றதை மனத்தினிடமும் பயன் படுத்தலாம். அதுபோலவே இதுவும். மனம் நிலையாமை, துக்கம், தான் இன்மை ஆகியவற்றைக் காணும் போது அது பரந்து விரிந்திருக்கும். அது மகிழ்ச்சிக்கும் சொந்தக்காரனில்லை, துன்பத்துக்கும் சொந்தக்காரனில்லை. அது தெளிவாகத் தெரிந்திருக்கிறது. புரிந்து விட்டது அதற்கு. நீங்கள் என்ன செய்தாலும் அமைதியாக இருப்பீர்கள். வேறு எதுவும் தேவை இல்லை. அப்போது உங்கள் தியானமும் முன்னேறுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
100. Wild Chickens Top
I'll give you a simple example. It's like wild chickens. We all know what wild chickens are like. There's no animal in the world more wary of human beings. When I first came to this forest, I taught the wild chickens. I observed them and learned many lessons from them.
At first only one of them would come past me while I was doing walking meditation. When it came close, I didn't look in its direction. Whatever it did, I didn't look in its direction. I didn't make any movement that would startle it. After a while I tried stopping still and looking at it. As soon as my eyes hit it, it ran right off. When I stopped looking at it, it would start scratching in the dirt, looking for food as before. But every time I looked at it, it would run right away.
After a little while it probably came to notice how quiet I was, so it let down its guard. But as soon as I tossed some rice in its direction, it ran right off. But I didn't care. I just kept tossing some rice out for it. After a while it would come back, but it didn't dare eat the rice. It didn't know what it was. It thought I was planning to kill it and curry it. But I didn't care whether it ate or not.
After a while it started scratching around in the dirt right there. It probably began to get a sense of what the rice was. The next day it came back to the same place and got to eat rice again. When the rice was gone, I tossed out some more for it. It ran off again. But when I kept doing this again and again, it got so that it would walk off only a little way and then come right back and eat the rice. That's when it understood.
At first the chicken saw the rice as an enemy because it wasn't acquainted with it. It didn't see it clearly. That's why it kept running off. But as it grew more tame, it came back to see what the rice actually was. That's when it knew, "This is rice. This isn't an enemy. It's not dangerous." That's how the wild chickens here came to eat rice from that day up to the present.
In this way I learned a lesson from the wild chickens. We're just like them. Sights, sounds, smells, tastes, tactile sensations, and ideas are means for giving us knowledge of the Dhamma. They give lessons to anyone who practices. If we see them clearly in line with the truth, we'll see that that's how they are. If we don't see them clearly, they'll always be our enemies, and we'll keep running away from them all the time.
காட்டுக் கோழிகள்
உங்களுக்கு ஒரு எளிய உதாரணம் தருகிறேன். இது காட்டுக் கோழிகளைப் போல. காட்டுக் கோழிகள் எப்படிப்பட்டவை என்பது நமக்குத் தெரியும். அவற்றைப்போல மனிதர் மீது ஐயப்பாடு கொண்டுள்ள மிருகங்கள் வேறு எதுவுமில்லை. இந்த வனத்திற்கு முதல் முதலில் நான் வந்த போது, நான் காட்டுக் கோழிகளைப் பழக்கினேன். அவற்றைக் கவனித்துப் பல பாடங்களைக் கற்றுக் கொண்டேன்.
முதலில் நான் நடை தியானம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு காட்டுக் கோழி மட்டும் என் அருகில் வரும். அது வரும் போது நான் அதனை நோக்கவில்லை. அது என்ன செய்தாலும், நான் அதன் திசையில் பார்க்கவில்லை. அதற்கு அதிர்ச்சியோ அச்சமோ உண்டாகும் வழியில் நான் நடந்து கொள்ள வில்லை. சற்று நேரத்திற்குப் பின் நான் நின்று அதன் திசையில் நோக்கினேன். ஆனால் எனது கண்கள் அதைக் கண்டவுடன் அது உடனே ஓடி விடும். நான் அதைப் பார்ப்பதைத் தவிர்த்தவுடன் அது மீண்டும் புழுதியில் முன்போலவே உணவு தேடத் துவங்கும். ஆனால் ஒவ்வொரு முறை நான் அதைப் பார்க்கும் போதும் அது உடனே ஓடி விடும்.
பின் அது நான் மிகவும் அமைதியாக இருப்பதைக் கண்டு எச்சரிக்கையாக இருப்பதைக் குறைத்துக் கொண்டது. ஆனால் நான் அதன் திசையில் கொஞ்சம் அரிசியை வீசியவுடன், அது ஓடி விட்டது. ஆனால் நான் கண்டு கொள்ளவில்லை. அவ்வப்போது கொஞ்சம் அரிசியை அதன் திசையை நோக்கி வீசினேன். கொஞ்ச நேரத்திற்குப் பின் அது மீண்டும் திரும்பி வந்தது. ஆனால் அந்த அரிசியைத் தின்னவில்லை. அது என்ன என்பது அதற்குத் தெரியவில்லை. நான் அதைக் கொன்று கறி சமைத்து விடுவேன் என்று அது நினைத்திருக்கலாம். ஆனால் நான் அது அந்த அரிசியைச் சாப்பிடுமா இல்லையா என்பது பற்றிக் கவலைப் படவில்லை.
கொஞ்ச நேரத்துக்குப் பின் அதே இடத்தில் மண்ணில் உணவைத் தேடியது. அரிசி என்ன என்பதைச் சற்றுத் தெரிந்து கொண்டது. பின் அடுத்த நாளும் அதே இடத்திற்கு வந்து மேலும் அரிசியை உண்டது. அரிசி தீர்ந்தபின் நான் மேலும் கொஞ்சம் அரிசியை அதற்கு வீசினேன். அது மீண்டும் ஓடி விட்டது. ஆனால் நான் திரும்பத் திரும்ப அரிசி வீசியதைக் கண்டு அது கொஞ்ச தூரம் ஓடியபின் திரும்பி வந்து அரிசியைத் தின்றது. அப்போது தான் அதற்கு அரிசி ஒரு உண்ணும் பொருள் என்பது விளங்கியது.
முதலில் அந்தக் கோழி அரிசியை எதிரியாகக் கண்டது, ஏனென்றால் அதனை அதற்குத் தெரியவில்லை. தெளிவாகத் தெரியவில்லை. அதனால் தான் அது ஓடிக் கொண்டே இருந்தது. அது பழக்கப் படப்பட அது அரிசி என்ன என்பதைப் பார்க்கத் திரும்பி வந்தது. அப்போதுதான் அதற்கு விளங்கியது, "இது அரிசி. இது ஒரு எதிரி இல்லை. இதில் ஆபத்து இல்லை." இப்படித்தான் காட்டு கோழிகள் அன்றிலிருந்து இன்று வரை இங்கு வந்து அரிசி சாப்பிடத் துவங்கின.
இவ்வாறு காட்டு கோழிகளிடமிருந்து நான் பாடம் கற்றுக் கொண்டேன். நாமும் அவற்றைப் போலவே. காட்சிகளும், ஓசைகளும், நுகர்வுகளும், சுவைகளும், பரிசங்களும், கருத்துக்களும் தம்மத்தை நாம் புரிந்து கொள்ள உதவுவன. பயிற்சி செய்யும் எவருக்கும் அவை பாடம் கற்பிக்கின்றன. வாய்மைக்கு நிகராக நாம் தெளிவாகப் பார்த்தோமென்றால், அவற்றின் இயல்பை நாம் தெரிந்து கொள்ளலாம். அவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ளா விட்டால் அவை நமக்கு எதிரிகளாகவே தோன்றும். பின் நாம் அவற்றிடமிருந்து எந்நேரமும் ஓடிக்கொண்டே இருப்போம்.
101. Monkeys Top
Let me give you an example. Suppose you have a pet monkey at home. It doesn't sit still. It likes to jump around and grab hold of this and that — all kinds of things. That's how monkeys are. Now you come to the monastery. We have a monkey here too, and this monkey doesn't stay still either. It jumps around and grabs things just the same, but it doesn't irritate you, does it? Why? Because you've had a monkey. You know what monkeys are like. "The one at my home is just like your monkey here at the monastery. Your monkey is just like my monkey. They're the same monkey." If you know just one monkey, no matter how many provinces you go to, no matter how many monkeys you see, they don't irritate you, right? That's someone who understands monkeys.
If we understand monkeys then we won't become monkeys. If you don't understand monkeys, then as soon as you see a monkey, you become a monkey yourself, right? When you see it grabbing this and that, you think, "Grrr!" You get angry and irritated. "That damned monkey!" That's someone who doesn't understand monkeys.
Someone who understands monkeys sees that the monkey at home and the monkey at Wat Tham Saeng Phet are the same monkey, so why should they irritate you? When you see that that's what monkeys are like, that's enough. You can be at peace. If the monkey runs around, it's only the monkey running. You don't become a monkey too. You're at peace. If it jumps in front of you and behind you, you don't get irritated by the monkey. Why? Because you understand monkeys, and so you don't become a monkey. If you don't understand monkeys, you get irritated. When you get irritated, you become a monkey — understand? This is how things grow calm.
When we know sense objects, observe sense objects: Some are likable, some are not, but so what? That's their business. That's what they're like. Just like monkeys. All monkeys are the same monkey. We understand sense objects. Sometimes they're likable, sometimes they're not. That's what they're like. We have to get acquainted with them. When we're acquainted with them, we let them go. Sense objects aren't for sure. They're all inconstant, stressful, and not-self. We keep looking at them in that way. When the eye, ear, nose, tongue, body, and mind receive objects coming in, we know them, just like seeing monkeys. This monkey is just like the monkey at home. Then we can be at peace.
குரங்குகள்
உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். உங்கள் வீட்டில் செல்லமாக வளர்க்கும் குரங்கு ஒன்று இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அது ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்காது. அது எந்நேரமும் குதித்துக் கொண்டும் தாவிக் கொண்டும் இருக்கும். இதையும் அதையும் - பல விதமான பொருட்களையும் - பிடித்தவாறு விளையாடும். அப்படித்தான் குரங்குகள் நடந்து கொள்ளும். நீங்கள் விகாரைக்கு வருகின்றீர்கள். நாங்களும் ஒரு குரங்கு வைத்திருக்கிறோம். இந்தக் குரங்கும் ஓர் இடத்தில் இருப்பதில்லை. இதுவும் குதித்துக் கொண்டு இதையும் அதையும் பிடித்துக் கொண்டிருக்கும். ஆனால் அது உங்களுக்கு எரிச்சலூட்டுவதில்லை அல்லவா? ஏன்? ஏனென்றால் நீங்களும் குரங்கு வைத்திருக்கின்றீர்கள். குரங்குகள் எப்படி நடந்து கொள்ளும் என்பதைத் தெரிந்திருக்கின்றீர்கள். "எனது வீட்டில் உள்ள குரங்கும் விகாரையிலுள்ள உங்கள் குரங்கு போலவே. இரண்டும் ஒரே குரங்குக் குணம் உடையவை தான்." இப்படி ஒரு குரங்கைப் பற்றித் தெரிந்து கொண்டால், எத்தனை மாகாணங்கள் சென்றாலும், எத்தனை குரங்குகளைப் பார்த்தாலும், அவை உங்களுக்கு எரிச்சலூட்டுவதில்லை, இல்லையா? அப்படிப் பட்ட ஒருவர் குரங்கைப் பற்றித் தெரிந்திருப்பவர்.
குரங்குகளை அறிந்து கொண்டால் நாம் குரங்குகள் ஆக மாட்டோம். குரங்குகளை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையென்றால், குரங்கைப் பார்த்தவுடன், நீங்களும் ஒரு குரங்காகி விடுவீர்கள், இல்லையா? இதையும் அதையும் பிடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தவுடன், நீங்கள் நினைப்பது, "ஆ!" உங்களுக்குக் கோபமும், எரிச்சலும் உண்டாகிறது. "பாழாய்ப் போன குரங்கு!" அப்படிக் கூறுபவர் குரங்குகளை அறியாதவர்.
குரங்குகளை அறிந்த ஒருவர் வீட்டில் பார்த்த குரங்கும் வாட் தாம் சாயிங் ஃபெட்டிலுள்ள (விகாரையின் பெயர்) குரங்கும் ஒன்று போலவே நடக்கின்றன என்பதை அறிந்தவர், அது ஏன் அவரை எரிச்சலூட்ட வேண்டும்? குரங்குகள் அப்படித்தான் நடந்து கொள்ளும் என்பது தெரிந்திருப்பதே போதுமானது. நீங்கள் அமைதியாக இருக்கலாம். குரங்கு இங்கும் அங்கும் ஓடினால், அது ஒரு ஓடும் குரங்கு மட்டுமே. நீங்களும் ஒரு குரங்காகி விடுவதில்லை. அமைதியாக இருக்கின்றீர்கள். உங்கள் முன்னால் குதித்தாலும் பின்னால் குதித்தாலும் அந்தக் குரங்கு உங்களுக்கு எரிச்சலூட்டுவதில்லை. ஏன்? ஏனென்றால் நீங்கள் குரங்குகளை அறிவீர்கள். அதனால் நீங்களும் ஒரு குரங்காகி விடுவதில்லை. குரங்குகளை அறியவில்லையென்றால், நீங்கள் எரிச்சலடைவீர்கள். எரிச்சலைடைந்தால், நீங்களும் ஒரு குரங்காகி விடுவீர்கள் - புரிகிறதா? இப்படித்தான் விஷயங்கள் சாந்தமடைகின்றன.
புலன் பொருட்களை அறிந்து, அவற்றைக் கவனித்தால்: சில நமக்குப் பிடிக்கும், மற்றவை பிடிப்பதில்லை, அதனால் என்ன? அது அவற்றின் இயல்பு. அவை அப்படித்தான். குரங்குகளைப்போல. எல்லாக் குரங்குகளும் ஒன்று போலவே. ஒரே குணமுடையவை தான். புலன்களைத் தூண்டும் பொருட்களை நாம் அறிவோம். சில சமயம் அவற்றை நமக்குப் பிடிக்கும், சில சமயம் பிடிப்பதில்லை. அவை அப்படித்தான். அவற்றை நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அவற்றை அறிந்தபின் அவற்றை விட்டுவிட வேன்டும். புலன் பொருட்கள் உறுதியானவை அல்ல. அவற்றை இவ்வாறு கவனிக்க வேண்டும்: அவை நிலையற்றவை, துக்கமுண்டாக்குபவை, அவை 'நாம்' இல்லை (நமக்குச் சொந்தமானவை இல்லை). கண், காது, மூக்கு, நாக்கு, உடல், மனம் ஆகிய புலன்கள் பொருட்களை உணரும் போது, அவற்றை நாம் அறிவோம், குரங்குகளைப் பார்ப்பது போல. இந்தக் குரங்கும் வீட்டிலிள்ள குரங்கைப் போலவே. பின் நாம் அமைதியாக இருக்கலாம்.
102. The Tree Pulls Itself Down Top
Craving and desire lead us to suffering. But if we contemplate, our contemplation leans out from craving. It contemplates craving, and it pulls on the craving, shakes it up, so that it goes away or lessens on its own.
It's like a tree. Does anyone tell it what to do? Does anyone give it hints? You can't tell it what to do. You can't make it do anything. But it leans over and pulls itself down. When you look at things in this way, that's Dhamma.
தன்னைத்தானே இழுத்துக் கொள்ளும் மரம்
வேட்கையும், பேராசையும் நம்மைத் துக்கத்தின் வழி எடுத்துச் செல்லும். ஆனால் நாம் பிரதிபலித்தால், நமது சிந்தனை வேட்கையை விட்டுச் செல்கிறது. அது வேட்கையைப் பிரதிபலிப்பதால் மட்டுமே வேட்கை களைந்து விடுகிறது அல்லது வேட்கையின் சக்தியைக் குறைத்து விடுகிறது.
இது ஒரு மரத்தைப்போல. அதனிடம் அது என்ன செய்யவேண்டும் என்று யாராவது கூறுகின்றனரா? அல்லது அதற்கு சாடையாக எதாவது சொல்லப்படுகிறதா? அதனிடம் ஒன்றும் சொல்ல முடியாது. எதையும் செய்ய வைக்கவும் முடியாது. ஆனாலும் தானே சாய்ந்து தன்னைத் தானே இழுத்துக் கொள்கிறது. விஷயங்களை இவ்வாறு நோக்கினால், அது தம்மமாகிறது.
103. Heavy Lifting Top
Mindfulness and alertness are like two people lifting a heavy log. A third person is watching and when he sees that the log is heavy, he comes to help. When it's heavy like that, he can't not help. He has to help. The person helping here is discernment. It can't stay still. When there's mindfulness and alertness, discernment has to run in and join them.
பாரமான சுமையைத் தூக்குவது
நற்கடைப்பிடியுடனும் அக்கறையுடனும் இருப்பது, இருவர் ஒரு பாரமான மரக்கட்டையைத் தூக்குவது போல. அந்தச் சுமையைக் கண்ட மூன்றாமவர் உதவ வருகிறார். அவ்வளவு பாரமாக இருப்பதால் அவர் உதவி செய்யாமல் இருக்க முடியாது. உதவி செய்தே ஆக வேண்டும். இப்படி உதவிக்கு வருபவர் தான் விவேகம். நற்கடைப்பிடியும் அக்கறையும் உள்ளபோது, விவேகமும் தானாக ஓடி வந்து உதவி செய்யும்.
104. Bottled Water, Spring Water Top
It's like putting water in a bottle and giving it to someone to drink. Once he's finished drinking it, he'll have to come back and ask for more — for the water isn't water in a spring. It's water in a bottle. But if you show the spring to the person and tell him to get water there, he can sit there and keep on drinking water and won't ask you for any more, for the water never runs out.
It's the same when we see inconstancy, stress, and not-self. It goes deep, for we really know, we know all the way in. Ordinary knowledge doesn't know all the way in. If we know all the way in, it never grows stale. Whatever arises, we know it correctly — and things disband. We know correctly without stop.
செம்பு நீரும், ஊற்று நீரும்
இது ஒருவர் ஒரு செம்பில் நீரை நிரப்பி எடுத்துச் செல்வது போல. அதை அவர் குடித்தபின் மீண்டும் நீர் கேட்க வருவார் - ஏனென்றால் அந்த நீர், ஓடை நீர் அல்ல. அது ஒரு செம்பில் உள்ள நீர். ஆனால் அவரிடம் ஓடையைக் காட்டி அங்கு சென்று நீர் அருந்தச் சொன்னால், அவர் ஓடையருகில் உட்கார்ந்து போதுமான அளவு நீரைக் குடிக்கலாம். மீண்டும் உங்களிடம் வந்து நீரைக் கேட்க மாட்டார். ஏனென்றால் ஓடைநீர் தீர்ந்து போவதே இல்லை.
அது போலவே நாம் நிலையாமை, துக்கம், தான்-இன்மை ஆகியவற்றை அறிந்து கொள்வதும். ஆழமாகச் செல்கிறது இந்த அறிவு. உள்ளப் பூர்வமாகத் தெரிந்து கொண்டோம். சாதாரண அறிவு ஆழமாகச் செல்வதில்லை. உள்ளப் பூர்வமாகத் தெரிந்து கொண்டால் அது சலித்துப் போகாது. தோன்றுவன எல்லாம் - நமக்கு அவற்றின் இயல்பு தெரிந்திருப்பதால் - அவை மறைந்து விடுகின்றன. ஒரு தடையும் இன்றி எப்போதும் தெரிந்திருக்கின்றோம்.
105. Still, Flowing Water Top
Have you ever seen flowing water? Have you ever seen still water? If your mind is peaceful, it's like still, flowing water. Have you ever seen still, flowing water? There! You've only seen flowing water and still water. You've never seen still, flowing water. Right there, right where your thinking can't take you: where the mind is still but can develop discernment. When you look at your mind, it'll be like flowing water, and yet still. It looks like it's still, it looks like it's flowing, so it's called still, flowing water. That's what it's like. That's where discernment can arise.
அசையாத, நீரோட்டம்
நீரோட்டத்தைப் பார்த்திருக்கின்றீர்களா? நிலையான நீரைப் பார்த்திருக்கின்றீர்களா? உங்கள் மனம் அமைதியாக இருந்தால் அது நிலையான நீரோட்டத்தைப் போல. நிலையான நீரோட்டத்தைப் பார்த்திருக்கின்றீர்களா? ஆமாம்! நீங்கள் ஓடும் நீரையும், நிலையான நீரையும் மட்டுமே பார்த்திருக்கின்றீர்கள். நீங்கள் நிலையான நீரோட்டத்தைப் பார்த்ததில்லை. இங்கேயே, உங்கள் எண்ணங்களால் கொண்டு செல்ல முடியாத இடத்தில்: எங்கு மனம் நிலையாக இருந்து உன்னிப்பை வளர்க்க முடிகிற இடத்தில், உங்கள் மனத்தைப் பார்க்கும் போது அது நீரோட்டமாகத் தெரியும், அதே சமயம் அது நிலையாகவும் இருக்கும். அது நிலையாக இருப்பதாகத் தோன்றும். அது ஓடுவதாகவும் தெரியும். எனவே அதை நிலையான நீரோட்டம் என்கிறோம். அப்படித்தான் இருக்கும். அங்குதான் உன்னிப்பு எழ முடியும்.
106. The Log in the Canal Top
It's like cutting a log, throwing it into a canal, and letting it flow along with the water in the canal. If it doesn't get worm-eaten, doesn't rot, doesn't get smashed, doesn't get snagged on this bank or that bank, it'll keep flowing down the canal. I'm convinced that it'll ultimately reach the ocean.
It's the same with us. If we practice in line with the Lord Buddha's way, if we follow the path he taught, if we correctly follow the current, we have to avoid two things. Which two? The two extremes that the Buddha said contemplatives shouldn't get seriously involved with. The first is sensual indulgence. The second is self-torment. These are the two banks of the canal, of the river. The log flowing down the river, following the current of the water, is our mind.
கால்வாயில் உள்ள மரக்கட்டை
இது ஒரு மரக்கட்டையை வெட்டி ஓடும் கால்வாய் நீரில் வீசுவது போல. கட்டை அழுகிப் போகாதவரை, அக்கரையிலோ, இக்கரையிலோ சிக்கிக் கொள்ளாதவரை அது நீரின் ஓட்டத்தோடு மிதந்து சென்று கொண்டே இருக்கும். இறுதியில் அது கடலைச் சென்றடையும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.
நாமும் அது போலவே. அனைவரும் புத்தரின் அறநெறியின்படி சரியாக நடந்து கொண்டால், அவர் கற்பித்த மார்க்கத்தைத் தொடர்ந்தால், நீரோட்டத்தைச் சரியாகத் தொடர்ந்து சென்றால் இரண்டு செயல்களைத் தவிர்க்கலாம். எந்த இரண்டு? தியானிப்போர் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாத இரண்டு செயல்களைப் பற்றிப் புத்தர் கூறினார். முதலாவது புலன் இன்பங்கள். இரண்டாவது சுய-வேதனை. கால்வாயின் ஒரு கரை இன்பம். மறு கரை துன்பம், நீரோட்டத்தோடு சேர்ந்து ஓடும் மரக்கட்டை தான் மனம்.
107. Waves Coming Ashore Top
Suffering and mental stress aren't for sure. They're inconstant. Keep this point in mind. When these things arise, we know them right now and we let them go. This strength of mind will gradually see more and more. When it's grown more resilient, it can suppress defilements extremely fast. As time passes, whatever arises right here disbands right here, like waves on the sea coming ashore. As soon as they reach the shore they simply dissolve. A new wave comes and it dissolves too. It can't go beyond the shore. Inconstancy, stress, and not-self are the shore of the sea. As for the sense objects that come passing in, that's all there is to them.
கரையை வந்தடையும் அலைகள்
துக்கமும் மன அழுத்தமும் உறுதியற்றவை. அவை நிலையற்றவை. இதனை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மனத்தில் ஒரு விஷயம் தோன்றும் போது, அவற்றைத் தெரிந்து கொண்டு பின் விட்டுவிட வேண்டும். இத்தகைய மனவலிமை படிப்படியாக வளரும். பின் இவ்வாறு உறுதி பெற்ற மனத்தால், மாசுகளை மிக வேகமாக அடக்க முடியும். காலம் போகப் போக, எவையெல்லாம் மனத்தில் தோன்றுகிறதோ, அவை அங்கேயே மறைந்து விடும், கரையைச் சேரும் கடல் அலைகளைப்போல. கரையைச் சேர்ந்தவுடன் அவை உடனே மறைந்து விடுகின்றன. ஒரு புதிய அலை தோன்றுகிறது, அதுவும் மறைந்து விடுகிறது. கரையைத் தாண்டிச் செல்வதில்லை. நிலையாமை, துக்கம் மற்றும் தான்-இன்மை தான் கடலின் கரை. மனத்தில் தோன்றும் புலன் பொருட்கள் - அவை தோன்றி மறைகின்றன. அவ்வளவுதான்.
108. The Saw Top
...But when the mind sees and knows everything, it doesn't carry the Dhamma along with it. Like this saw: They're going to use it to cut wood. When all the wood is cut and everything is done, they put the saw away. They don't need to use it anymore. The saw is the Dhamma. We have to use the Dhamma to practice the paths leading to the fruitions. When the job is done, we put the Dhamma that's there away. Like a saw used to cut wood: They cut this piece, cut that piece. When they're finished cutting, they put the saw away here. When that's the case, the saw has to be the saw; the wood has to be the wood.
This is called reaching the point of stopping, the point that's really important. That's the end of cutting wood. We don't have to cut wood, for we've cut enough. We take the saw and put it away.
இரம்பம்
.. ஆனால் மனம் எல்லாவற்றையும் பார்த்து அறிந்து கொண்ட பிறகு அது தம்மத்தைச் சுமந்து கொண்டிருக்காது. இந்த இரம்பத்தைப்போல: மரத்தை அறுக்க இதனைப் பயன்படுத்து கின்றனர். மரம் வெட்டப் பட்டு வேலை அனைத்தும் முடிந்தபின் ஒரு புறமாக இரம்பத்தை வைத்து விடுவார்கள். அது இனித் தேவைப் படுவதில்லை. இரம்பம் தம்மத்தைப்போல. மார்க்கத்தைத் தொடர்ந்து பலனைப் பெற நாம் தம்மத்தைப் பயன் படுத்துகிறோம். வேலை முடிந்தபின் இந்தத் தம்மத்தை ஒருபுறம் வைத்து விடுகிறோம். மரம் வெட்டும் இரம்பத்தைப்போல: இந்தத் துண்டை வெட்டுகின்றனர், அந்தத் துண்டை வெட்டுகின்றனர். வெட்டி முடித்தபின் அதை இங்கே வைத்து விடுகின்றனர். அப்படி இருக்கும்போது இரம்பம் ஒரு இரம்பமாக இருக்கும்; மரம் மரமாக இருக்கும்.
இதுவே நிறுத்தும் இடத்தை அடைந்து விட்டோம் என்பது. முக்கியமான கட்டம். மரம் வெட்டும் வேலை முடிந்தது. நாம் மேலும் வெட்ட வேண்டியதில்லை. ஏனென்றால் போதுமான அளவு வெட்டி விட்டோம். இரம்பத்தை எடுத்து ஒருபுறமாக வைத்து விடலாம். இனி அது தேவையில்லை.