சமய நம்பிக்கையும், ஒளிமயமான எதிர்காலமும்

சமய நம்பிக்கையும், ஒளிமயமான எதிர்காலமும்

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Faith and Hope

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

கேள்வி (பெண்): நான் கிருத்துவ மரபில் வளர்ந்தமையால் சமய நம்பிக்கையென்ற கருத்துடன் ஒளிமயமான எதிர்காலமும் இருக்கும் என்ற எண்ணமும் என்னுள் தோன்றுகிறது. கடவுளுடன் ஒன்று கூடுதல் என்றால் ஒளிமயமான எதிர்காலமும் இருக்கும் என்ற நம்பிக்கை உண்டாவது தான். நம்பிக்கை வைத்தால் எதிர்காலம் விரும்பிய வண்ணம் அமையும். நாம் வாழ்க்கையில் நல்லதையே எதிர்பார்க்கலாம். எதிர்காலம் இன்றைய சூழ்நிலையோடு நல்லதாக இருக்கும் என்ற கருத்து. எனது மனத்தில் இப்படித்தான் தோன்றுகிறது. நான் பௌத்தத்தைப் பயிலத் துவங்கியபின், தொடர்ந்து தியானம் செய்து வருகையில் இந்தச் சமய நம்பிக்கையிருந்தால் தானாகவே எதிர்காலம் விரும்பும் வண்ணம் அமையும் என்ற இதுவரை நான் ஏற்ற கருத்து எனக்குச் சரியானதெனப் படவில்லை. அதே சமயம் இந்த எண்ணப் போக்கை விட்டு விடவும் அச்சமாக உள்ளது. வேறு என்ன செய்வது என்பது சரியாகப் புரியவில்லை... வேறு எப்படிச் சமய நம்பிக்கையைப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லையே?

சோனா பிக்கு:

வேறு ஒருவர் தயையால் எதிர்காலம் பிரகாசிக்கும் என்று நினைப்பது, இன்று நடப்பது நல்லதுக்கே என்று நினைப்பது - பௌத்தர்கள் இவ்வாறு உணர்வதில்லை. அவர்கள் எதிர்காலம் வேறு ஒருவரால் சிறப்புடையதாக ஆக்கப்படாது என்றும் இன்று நடப்பது நல்லதுக்கே என்று சொல்வதற்கில்லை என்றும் கூறுவர்.

ஆனால் பௌத்தர்களுக்கு இதில் நம்பிக்கை உண்டு: தெரிந்தே செய்யப்படும் திறமையான செயல் ஒரு போதும் விரும்பத்தகாத முடிவிற்கு எடுத்துச் செல்லாது. அதே போலத் தெரிந்தே செய்யபடும் திறமையற்ற செயல் ஒருபோதும் விரும்பிய முடிவிற்கும் எடுத்துச் செல்லாது. இதில் எமக்கு நம்பிக்கை உள்ளது.

எதிர்காலம் நல்லதாக இருக்கவேண்டுமானால், பிரகாசமாக இருக்க வேண்டுமானால் நாம் தொடர்ந்து திறமையற்ற எண்ணங்களில், பேச்சில் நடத்தையில் ஈடுபடக் கூடாது. மேலும் தொடர்ந்து தெரிந்தே திறமையான எண்ணங்களையும், பேச்சிலும் நடத்தையிலும் ஈடுபட்டால் போதும். அதுவே நமது உரிமைச் சொத்து. நமது சொத்தான இந்த விளைவுகள் நமது எண்ணங்கள், பேச்சு மற்றும் நடத்தையிலிருந்து பிரிந்தவை அல்ல. பிரிந்திருந்தால் நாம் என்ன செய்தாலும் சரியென்றாகி விடும். எப்படியோ எதிர்காலம் சிறப்பாக இருந்துவிடும் என்று நினைப்பதாக ஆகிவிடும். ஆக அப்படி நினைப்பது வினைப்பயன் என்ற கருத்தின் தொடர்போடு பிரிந்து விடுவதாகும்.

புதிய ஏற்பாட்டை (The New Testament; விவிலிய நூலின் பிற்பகுதி) படிக்கும் போது எனக்கு வினைப்பயன் கருத்தோடு வேறு பட்டு இருப்பதாகத் தெரியவில்லை. மற்ற சில அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரலாம், ஆனால் திரும்பத் திரும்ப வினைப்பயனைப் பற்றியே பேசுகின்றனர். கிருத்து '“தினை விதைத்தவன் தினை அறுப்பான்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்கிறார். இதுவே கன்மக்கோட்பாடு. அன்பாக இருங்கள், நட்புணர்வோடு இருங்கள். இவற்றை எல்லாம் ஏன் கூறுகிறார்? இப்படிச் செய்ய முடியா விட்டால் கூறியிருப்பாரா? புத்தரும், "துறவிகளே, முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்யமுடியாவிட்டால் நான் முயற்சி செய்யக் கூறமாட்டேன். முயற்சி செய்ய முடியும் என்பதாலேயே முயற்சி செய்யத் தூண்டுகிறேன்," என்றார். செய்ய முடியாது என்றில்லை, நாம் செய்ய மறுக்கிறோம்.

விளைவுகளைப் பற்றியெல்லாம் நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது. மறுபிறப்பு இருக்குமா என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் நல்லது செய்வது நிகழ்காலத்திலேயே நல்ல விளைவுகளைத் தரும் என்பது நமக்குத் தெரியும். மேலும் இப்பிறப்பிற்கும் அடுத்த பிறப்பிற்கும் எதாவது தொடர்பு இருக்குமேயானால் அது நல்ல காரியங்களை செய்வதாலேயே இருக்கும். இல்லையா? நல்லது செய்வதை ஒரு போதும் நினைத்து விசனப்பட மாட்டீர்கள்.

உங்கள் நுண்ணறிவு, 'நல்ல விளைவுகள் திறமையான செயல்களிலிருந்தே வருவன' என்பதைத் தெரிவிக்கவில்லையென்றால் குறைந்தது இந்தக் கருத்தைப் பிரதிபலித்துப் பார்க்க வேண்டும். சூதாடுவது என்று முடிவு செய்துவிட்டால் இப்படிச் செய்வதே நல்லது. ஒரு கடவுள் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நல்லது செய்வதை அவர் ஒருபோதும் குறைகூற மாட்டார் என்றே நினைக்கின்றேன்.

ஒரு சில சமய நம்பிக்கைகளில் நல்லது செய்வதே தவறாகக் கருதப்படுகிறது. சில கிருத்துவப் பிரிவுகள் தவறு செய்யாமல் இருக்க முயல்வதை நம்பிக்கையற்ற செயல் என்று கருதுகின்றனர்! (நாம் பாவம் செய்தவர்கள் என்று கிருத்துவம் கருதுகிற படியால்) எனவே நல்லது செய்யும் செயலை நம்பிக்கையற்றவர் செய்வதாக அப்பிரிவினர் கருதுவர். அவர்கள் நம்பிக்கை இருந்தால் போதும், நல்லதெல்லாம் செய்ய வேண்டியதில்லை என்பர். அது ஒரு கருத்து.

அதற்கு நேர் எதிர்மறையான கருத்து என்னவென்றால், 'சரி நம்பிக்கை நல்லது தான். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் நினைக்க வேண்டிய தெல்லாம் உங்களுக்கு நீங்களே எப்படி உதவ முடியும் என்பதைப் பற்றித்தான். கடவுள் என்ன செய்யப் போகிறார் என்று நினைத்துக்கொண்டிருக்க வேண்டாம். அவர் வேலையை அவர் செய்யட்டும். அது உங்கள் பிரச்சனை அல்ல.' இப்படிப் பட்ட கருத்து பௌத்தப் பார்வைக்கு அருகில் வருவதாகக் கூறலாம்.

ஆக அறிவான திறமையான முயற்சி வேண்டும். அதுவே பௌத்தத்தின் தலையாய எண்ணப்போக்கு. முயற்சியும் விவேகமும் மட்டும். எப்படிப்பட்ட முயற்சியானாலும் போதாது. உங்களால் முடிந்த அளவு முயற்சித்தீர்கள், அந்த முயற்சியும் திறமையுள்ளதாக இருந்தது. முட்டாள் தனமான முயற்சி வேண்டாம். அந்த முயற்சியோடு ஞானமும் கலந்திருக்க வேண்டும். திறமையான முயற்சி வேண்டும்.

புத்தர் கூறிய சுவாரஸியமான பொன்மொழி ஒன்று உண்டு. அவருக்குத் துணையாயிருந்த ஆனந்தர் சில காலமாகப் பயிற்சி செய்து வருவதாகவும் சில நல்ல விளைவுகளைக் கண்டதாகவும் கூறி, அந்த விளைவுகளின் காரணமாகத் தான் புத்தரின் போதனைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ந்ததாகவும் அது எப்போதும் முயற்சி செய்வதைப் பற்றியதெனவும் கூறினார். மேலும் ஒரு நாள் புத்தரிடம், 'உங்கள் போதனைகள் என்னைக் கவர்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம் பாதையில் பாதிப் பங்கு ஆசிரியருக்குரியதே என்பதால் தான். ஆன்மீகப் பாதையின் பாதி ஆசியர் தான்.' என்று கூறினார். அதற்குப் புத்தர், 'இல்லை, ஆன்மீக வாழ்க்கையில் நூறு சதவீதமும் ஆசியர் தான்,' என்றார். இது சற்று ஆச்சரியமாக இருக்கலாம். ஏனென்றல் பல முறையும், 'உங்களுக்கு நீங்களே தீவாக இருக்க வேண்டும், உங்களுக்கு நீங்களே விளக்காக இருக்க வேண்டும். உங்களைத் தவிர வேறு யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது.' என்றும் கூறியிருக்கிறார். புத்தர் என்ன சொல்ல வருகிறார் என்றால் ஆன்மீகப் பாதையைப் பொருத்தவரையில் சரியான திசையைக் காட்டுவதில் ஆசிரியர் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறார் என்பதைத்தான். தட்டுத் தடுமாறி நீங்களே திசையைக் கண்டு பிடிக்க நேரத்தை வீண் செய்ய வேண்டியதில்லை. ஆனால் அது மட்டும் போதாது. ஆசிரியர் காட்டும் பாதை நமக்கு நம்பிக்கையை உண்டாக்கலாம். ஆசிரியர் மீது உங்களுக்கு மிகவும் மதிப்பும் நம்பிக்கையும் உண்டு. ஆனால் புத்தர் அது மட்டும் போதாது என்கிறார். உங்களுக்கு நம்பிக்கை இருப்பது நல்லது. ஆனால் பயற்சியைத் தொடர்வது உங்கள் கையில் தான் உள்ளது. இப்போதே துவங்குங்கள் என்கிறார்.

ஆகத் தவிற்க முடியாத இரண்டு தன்மைகள் உண்டு. அவை நம்பிக்கையும் ஞானமும் ஆகும். நம்பிக்கை என்பது நிதானமாகப் பிரதிபலித்து உண்டாகும் கொள்கை. கண்மூடித்தனமான நம்பிக்கை இல்லை. காரணத்தை அடிப்படையாகக் கொண்டு உண்டாகும் நம்பிக்கை. ஆனால் இந்த நம்பிக்கையில் சற்று பிரதிபலிப்பு, யோசனை, உள்ளறிவு இருக்க வேண்டும். எனது முயற்சிகளை எந்தத் திசை நோக்கிச் செலுத்துவது?

நம்பிக்கையும் ஞானமும் (விவேகமும்) சம நிலையில் இல்லாவிட்டால் விசித்திரமான நிலைகள் உண்டாகி விடும்.

விவேகம் மட்டும் வலுவாக இருந்தால் எதிலும் சந்தேகம் கொண்டவராகி விடுவோம். பல வழிகளைப் பற்றி யோசித்து, யோசித்துக் கடைசியில் எதிலும் முயற்சி செய்யாமல் நிலை குலைந்து விடுவோம். இது ஒரு கஷ்டமான நிலை. இது பள்ளிக்கூடத்தை விட்டுப் போக முடியாத மாணவரைப் போல. படித்துக் கொண்டே இருக்கிறார் ஆனால் தேர்வில் வெற்றி பெற முடிய வில்லை.

மறு முனையில் அதாவது விவேகம் இல்லாமல் நம்பிக்கை மட்டும் வைத்திருப்போர் சுலபமாக ஏமாற்றப்படுகிறார். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏன் என்று தெரியவில்லை ஆனால் என் ஆசிரியர் சொல்லிவிட்டார் எனவே எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் மிகவும் ஆர்வமாகவும் செயற்படுத்துவதில் மும்முரமாகவும் இருக்கின்றீர்கள் ஆனால் பிரதிபலிக்கவே இல்லை.

ஆக இரண்டு தன்மைகளும் சமமாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு முழுமையான நல்ல உணர்ச்சி உண்டானால் பிரபஞ்சம் உங்களிடம், 'நீ சரியான பாதையில் செல்கிறாய்,' என்கிறது. நிலை குலைந்த நிலையில் இருப்பதாக உணர்ந்தால் தவறான பாதையில் செல்வதாக அர்த்தம். எனவே தான் இந்த உணர்ச்சிகள் தோன்றுகின்றன. (அந்த உணர்ச்சிகளை நம்புங்கள்.)

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

* * * * * *

Transcribed from an audio tape available at birken.ca

Q (Woman) From my Christian background this idea of faith is putting in this idea of hope. Part of this communion with God is the idea of faith and faith in the future. Have faith and things will unfold as they should. Hope for the best. The idea that 'there' is better than 'here'. At least that is the belief in my psyche. As I study Buddhism more and more and I start practicing meditation more and more it (the idea of faith and hope) is not making a lot of sense and yet it is a little frightening thing to let go becuase I don't know what else... I don't know another way to define faith.

The optimism, the hope that things will be made better by somebody else and that whatever is happening is for the best - Buddhists don't really feel that way. They say that it is not going to be made better by anybody else and what is happening now may not be for the best. However what we have faith in is this: an intentional wholesome act will never have a bad result or an un wished for result. And that intentional unwholesome act will never have a wished for result. That we have faith in. If we want to have a good future, one that is bright all we have to do is continuously not generate an intentional unwholesome thought, speech and action and to (continuously) generate intentional wholesome thought, speech and action. And that will be our inheritance. And not disconnected from what we have thought what we have said and what we have done. If you are disconnected from this this then it does not matter what you do, you just hope that it all works out well. So that is disconnect from causality.

When I read the New Testament I don't see that there is a disconnect from causality, maybe some emphasis on some other aspect but they keep talking about causality. Christ keeps talking about, 'as you sow so shall you reap,' etc. That is Karma. Be loving, be kind. Why would he say these things? Would he say something like that if he couldn't do it? The Buddha also says this, "Monks, make effort. If you couldn't make effort I wouldn't tell you to make effort. But since you can make effort that's why I tell you make effort." You can do these things,. Not that you can't. Just that you don't. We can't know a lot of theses things. We can't know much about the after life and so forth. We can know that there is great benefit from these things right now. And that if there is any connection between this life and the next it will be based on having done wholesome things. If there is no connection between this life and the next life it won't be a bad thing to do wholesome things, would it? You won't regret having done wholesome things.

So if it is not plain and apparent to you by your own wisdom and insight that good results are from having put in the causes then at least you should examine the argument that makes sense at least I would be tempted to gamble on it. Say there is a God. I don't think he would disapprove of you trying to be good. In some extreme forms of faith it almost becomes bad trying to be good. Certain types of Christianity it may be regarded as a lack o faith to really try not to sin. The actual activity (of doing good) means that you don't have faith. It is all by faith it is not by your efforts at all. That's the polar opposite. Then you have all kinds of belief structures within in. You go to the other end, 'Yes faith in aid or assistance to this is necessary but never mind. You don't have to think about it. What you have to think about is all the things you can do to help yourself. All the things you should do to help yourself. And never mind what God is going to do. Let him take care of that. That is not your business.' That is coming much closer to a Buddhist attitude. So it is about wise effort. That is the predominant characteristic of Buddhism. Effort and you got to be wise about this. It is not any effort. You tried your best and your best was smart. Instead of just dumb plodding effort. No, try to mix wisdom with that. Skilled effort.

There is an interesting quote from the Buddha. His attendant Ananda said he had been working at this for a while and he had got some good results. He was very happy with the teaching of the Buddha and the Buddha's teaching is always about effort. He said tot he Buddha one day, "You know what I am so appreciative of your teaching is that the teacher is half the path. Half the holy life is the teacher." The Buddha replied, 'No, Hundred percent of the holy life is the teacher.' That is strange because often he would say, 'You are an island unto yourself. Be a lamp unto yourself. No one can save you but yourself.' So he is trying to emphasize the fact that you can't unappreciate the value of a good direction. Good wise direction. It can save you an enormous amount of fumbling around. But that is not enough. That is mere confidence or faith. You have great faith in the teachers. The Buddha says that is not enough. I am glad you are confident but you must do it. Now you do it.

So the two are indispensable faculties. Faith and wisdom. Faith is a form of conviction. reasoned conviction. Not blind faith but reasoned conviction. We have some reason for your conviction but you must balance it with some sort of reflection, thinking, insight. How should I direct my efforts here. When either of these goes out of balance things get strange. Wisdom gets out of balance becomes skepticism. You just process infinite number of possibilities endlessly and never can move. That is a terrible plight. It is like never getting put of graduate school for ever and ever. The other aspect is gullibility. you just believe something, you don't know why but my teacher said it. You are very active, committed, but you never reflected on it. It has to be the balance of the two. Wisdom disconnected from conviction. The moment you have the wholesome feeling the universe is telling you, 'hey, you are on the right path.' I feel good. I must be on the right path. When you don't feel good that the universe is telling you you are on the wrong path. You are not doing it right. That is why you have these feelings. You are not doing it right. (So trust your feelings.)