ஆறாம் அறிவு - மறுபிறப்பெடுப்பது எப்படி?
ஆறாம் அறிவு - மறுபிறப்பெடுப்பது எப்படி?
பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.
The sixth sense - Rebirth
Adapted from a Dhamma talk by Ajahn Sona
English version follows the Tamil translation.
மனம் இருப்பதை எப்படி அறிவது?
மனம் இருக்கிறது. தன்னைத்தானே அறிந்து கொள்ளும் இயல்பு மனத்திற்கு உண்டு. அது மறைவதில்லை. மனம் ஒரு (முகம் பார்க்கும்) கண்ணாடியைப் போல. தன்னைத்தானே பிரதிபலித்துக் கொள்கிறது. மனதில் உள்ளதை நாம் பார்க்க முடியும். அதனால் தான் அதை ஆறாம் அறிவு என்கிறோம். மனத்தைக் கவனிப்பது எது? ஒரு கண்ணாடி தன்னையே பார்த்துக் கொள்வது போல,மனமே மனத்தைக் கவனிக்கிறது. நீங்கள் ஞானம் பெற்றிருந்தாலும், நிப்பாண நிலையை அடைந்திருந்தாலும் மனத்தின் நடவடிக்கைகளை சாதாரணமான மனிதர் ஒருவர் பார்ப்பதைப் போலவே தான் பார்ப்பீர்கள். ஆனால் சாதாரணமான மனிதர் மனத்தில் உள்ளதை அரை குறையாகவே அறிகிறார். தங்கள் மனத்தை ஞானம் பெற்றவரை விடக் குறைவாகவே அறிகிறார். சாதாரணமான மனிதர் மனத்தை நம்பி விடுகிறார். மனத்தைத் தொடர்ந்து செல்கிறார். சற்று ஒதுங்கி இருந்து மனத்தில் உள்ளதைப் பார்ப்பதில்லை.
'ஆ! நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்,' என்பதில் 'நான்; என்ற வார்த்தையைச் சேர்த்து விட்டபடியால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. உண்மையில் நடைபெறுவது 'நினைத்தல்' அல்லது 'சிந்தித்தல்' மட்டுமே. 'நான் நினைக்கிறேன்' என்பது தவறு. நினைத்தல் மட்டுமே நிகழ்கிறது. எண்ணங்களைக் கவனிக்கும் போது நாம் கவனிப்பது எண்ணங்களை மாத்திரமே. நான் நினைக்கிறேன் என்று 'நினைக்கும் ஒருவரை'க் கவனிப்பதில்லை. பார்ப்பதெல்லாம் எண்ணங்களை மட்டுமே. எண்ணுபவரைப் பார்ப்பதில்லை, எண்ணங்களை மட்டுமே பார்க்கிறோம். எண்ணங்களுக்குப் பின்னால் யாரும் இல்லை. அதற்கு முன்னாலும், அடியிலும், மேலேயும் கூட யாரும் இல்லை. இருப்பது எண்ணங்கள் மட்டுமே.
ஆகவே கவனித்ததைச் சரிவரக் கூறவேண்டு மென்றால், கவனித்ததோடு எதையும் சேர்க்காமல் கூறுவதென்றால் நாம் நினைத்தலை மட்டுமே கவனிக்கிறோம். அதை மட்டுமே கவனிக்கிறோம். மழை பெய்யும் போது, 'மழை பெய்கிறது' என்கிறோம். மேகங்களில் மழையைப் பெய்ய வைக்கும் ஏதோ ஒன்றிருப்பதாக நாம் நினைப்பதில்லை. மழை பெய்கிறது அவ்வளவு தான். மழையைப் பெய்ய வைக்கும் கருவி ஏதும் இல்லை. செயற்தொடர்களே உள்ளன. அது போல எண்ணங்களும். எண்ணுபவர் என்று யாரும் இல்லை.
* * * * * *
ஆத்மா இல்லையென்றால் மறுபிறப்பெடுப்பது எப்படி?
நாம் இதை வேறு மாதிரியாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனக்குள் ஆத்மா என்ற ஒரு சிறு பந்து இருப்பதாகவும், அதுவே மாற்றமடையாத, மாற்ற இயலாத, நிலையான நான் என்றும் நினைக்க வேண்டாம். பின் இந்த உடல் சிதையும் போது அந்தப் பந்து மற்றோர் உடலுக்குத் தாவி விடுவதாக நினைக்க வேண்டாம். 'எனது நிலையான, மாற்றமடையாத உண்மையான ஆத்மா இந்த உடலிலிருந்து தாவி வேறு உடலுக்குச் செல்கிறது,' என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால் புத்தர் இக்கருத்தை மறுக்கிறார். புத்தர், 'இல்லை. அப்படி மாற்றமில்லா, என்றென்றும் நிலைத்திருக்கும் தன்மையுடையதென்று ஒன்றும் இல்லை,' என்கிறார். பின் எப்படி மறுபிறப் பெடுக்க முடியும்? புத்தர், ஒரு ஆறு ஓடி வந்து இந்த ஏரியில் கலக்கிறது, பின் இந்த ஏரியின் மறு கரையிலிருந்து வெளியேறி வேறு ஓர் ஆறாக ஓடுவதைப் போலத்தான் இதுவும் என்கிறார். நிலையான ஒரு பொருள் இல்லை. இருப்பது ஓர் ஓட்டம். ஒரு கணத்தில் உள்ள எண்ணம் அடுத்த எண்ணத்தை இயக்குகிறது. இதற்கு ஒரு சிறிய உவமானம்: கொஞ்சம் இடைவெளி விட்டு அடுத்தடுத்து நேராக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் செங்கற்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு செங்கல்லைத் தட்டி விட்டால் அது அருகில் உள்ள செங்கல் மீது மோதி அதனைச் சாய்க்கிறது. பின் மூன்றாவது செங்கல் சாய்கிறது. இது போலவே ஒரு எண்ணம் அடுத்த எண்ணம் உருவாவதற்குக் காரணமாக இருக்கிறது. ஆயிரம் செங்கற்களைத் தொடர்ந்து அடுக்கி வைத்திருந்தால் முதல் செங்கல் அதன் அருகில் இருக்கும் செங்கல்லைப் பாதிக்கிறது. அது அதற்கடுத்துள்ள செங்கல்லைப் பாதிக்கிறது. இந்தத் தொடர் நிகழ்ச்சி கடைசியில் ஆயிரமாவது செங்கல்லையும் பாதிக்கச் செய்கிறது. முதல் செங்கல் ஆயிரமாவது செங்கல்லுக்கு அருகிலேயே இல்லை. இரண்டுக்கும் தொடற்பே இல்லை. அது கடைசிச் செங்கல்லாக மாறவில்லை. ஒரு செங்கல் சாயும் போது அந்த ஊட்டம், சக்தி, சாய்வதற்கான காரணிகள் அதற்கு முன் உள்ள செங்கல்லிலிருந்து வந்தது. அதே சமயம் அடுத்த செங்கல் சாய்வதற்கான காரணிகளும் தோன்றிவிட்டன. ஆக இது ஒரு வரைமுறையின்றி நடை பெறுவதில்லை. இது ஒரு முறையான தொடர் நிகழ்ச்சி. ஓர் ஓடை ஓடுவது போல. அதில் ஏற்படும் நீர்ச்சுழிகள் காரணத்தோடு தான் உண்டாகின்றன. ஓடை ஓடும் வழியில் ஒரு பாறை இருந்தால் அந்தப் பாறையைச் சுற்றிவரும் நீர் ஒரு நீர்ச்சுழியை ஏற்படுத்துகிறது. நீர்ச்சுழிகளும் ஒரு ஓட்டம் தான். அவை ஒரு நிலையான பொருள் இல்லை. நாமும் அது போலத் திரவத்தன்மை கொண்டுள்ளவர்கள் தான். நாம் காரண காரியத் தொடர்பினால் செயல் படுகிறோம். ஒரு உடலிருந்து மற்றொன்றுக்குக் காரண காரியத் தொடர்பினால் தான் செல்கிறோம். இந்த உடலும் ஒரு ஓட்டம் தான். இதுவும் திரவ சித்தாந்தம் சம்பத்தப் பட்டதே. தொடர்ந்து மாற்றம் கொள்ளும் தன்மை கொண்டுள்ளது.
இந்த உயிரின் கடைசிக் கணம் அடுத்த உயிரின் முதல் கணம் உண்டாவதற்கான காரணியாக உள்ளது. காரண காரியத் தொடர்புகள் கொண்டது இது. இங்கிருந்து ஏதும் அங்கு செல்வதில்லை. ஆனால் அது உருவாக இதுவே காரணமாக இருக்கிறது. ஆக மாற்றமில்லா ஒரு பொருள் இங்கிருந்து அங்கு செல்வதில்லை. இந்தக் காரண காரிய மாற்றத்தையே நாம் 'நான்' என்று நினைக்கிறோம். இது மர்மமான செய்தியே இல்லை. இந்த வாழ்விலும் நாம் இதைக் கவனிக்கலாம். இந்த வாழ்வும் காரண காரியத் தொடர் மாற்றம் கொண்ட ஓட்டம் தான். நிலையான அடையாளம் ஒன்று பிறப்பிலிருந்து இறக்கும் வரை இழுத்துச் செல்லப் படுவதில்லை. இதெல்லாம் சித்தம் சம்பந்தமான பேச்சுத் தான். இதை உள்ளப் பூர்வமாக அறிய வேண்டுமானால் உங்களுக்குக் கோபம் தோன்றும்போது, பேராசை தோன்றும்போது, குழப்பம் தோன்றும்போது உங்களையே கவனித்துப் பாருங்கள். இவையெல்லாம் தோன்றுவது நாம் தவறான கருத்தில் நிலையான 'நான்' என்ற ஒன்று இருப்பதாக நினைப்பதால் தான். நிலையான ‘நான்’ இருந்தால் தானே பொருட்களுக்குச் சொந்தக்காரன் இருக்க முடியும், அவற்றைக் கட்டுப் படுத்த முடியும்? நாம் விரும்புமாறு நிலைமைகள் அமையா விட்டால் நாம் நிலைகுலைந்து விடுவதற்குக் காரணம் நாம் தவறான எண்ணத்தில் 'நான்' என்று நிலையான ஒன்று இருப்பதாக நினைப்பதால்தான். இந்தத் தவறான கருத்தை மாற்ற அதைப் பற்றிச் சிந்தித்தால் மட்டும் போதாது. உங்கள் மனதைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். எப்போதெல்லாம் அது சொந்தம் கொண்டாடப் பார்க்கிறதோ, எப்போதெல்லாம் அது கட்டுப் படுத்தப் பார்க்கிறதோ அப்போதெல்லாம் கவனித்து இது செயல்படுத்த முடியாத காரியம் என்பதை உங்களுக்கே நினைவூட்டிக் கொள்ள வேண்டும். திரும்பத் திரும்ப உங்களுக்கே நினைவூட்டும் போது ஒரு மாற்றம் உண்டாகும். பின் நாம் முன் இருந்த மனிதராக இருப்பதில்லை. 'நான் முன்னால் இருந்ததைப் போல இல்லை. உண்மையில் நிலையான ‘நான்’ என்று ஒன்றும் இருப்பதாகத் தெரிய வில்லையே?' என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம். இதுவே உண்மை. உண்மையில் நிலையான, மாற்றமடையமுடியாத ‘நான்’ என்று ஒன்றும் இல்லை. அதனால் தான் நம்பிக்கை பிறக்கிறது!தமிழில் / Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading
திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
* * * * * *
Transcribed from an audio tape available at birken.ca
How do I know there is mind?
There is mind. How do I know there is mind? Mind is self aware. It doesn't vanish. Mind is like a mirror. It sees it self, doesn't it? You can see mental contents. That is why we call it the sixth sense. You can see the contents of your mind. What's seeing your mind? Mind is seeing the mind at the same time. Like a mirror seeing itself. If you are enlightened attained nibbana you see the mental processes just like ordinary person does. The ordinary person is less aware of the mental contents. Less aware of their own mind. they tend to be just believing their own mind. following it. rather than sitting aside and seeing it as mental contents. 'Ah, I am thinking.' Just because you put the word 'I' in that sentence don't take it seriously. Actually what is going on is thinking, not necessarily, 'I am thinking'. Just thinking. When you observe thoughts that is all you observe. You don't observe your self thinking. All you see is thought. You don't see anyone thinking, you just see thoughts. No one behind them, no one in front, no one underneath, no one above. Just thoughts.
So if you are truly reporting the experience directly without adding anything to it we see thinking and that's all we see. As I sometimes say when it rains we say 'it's raining' but we don't think there is an 'it' in the cloud. There is just rain. There is no 'it' in the cloud. But we say in language it's raining. It is just rain. just processes.
* * * * * *
How does rebirth occur if there is no soul?
It is just a different model. Don't think of it as a little billiard ball which is my essential self - unchanging, unchangeable, eternal me. And when the body drops away the little billiard ball jumps to another body. That is the kind of the model that people have. That is the only way they can think of it. Well my eternal, unchanging, true identitity jumps out of the body and goes in to another body. The Buddha says, 'No, there is no unchanging eternal identity.' So how could rebirth occur? He says it just like this river runs down here into this lake and then runs down the other side and into another lake. It is not a thing. It is a flow. One thought moment influences another. Like a series of dominoes, one thought moment knocks into the next, but this domino does not go into the head of the line. It hits and falls and the energies, the conditions are from the previous conditions, the possibilities of the next set of conditions are arranged or influenced. So it is not random. It is a lawful flux, like a stream flowing down. What we call fluid mechanics. Whirlpools that result are causal. It is a causal flux. So if you use a model of a bunch of billiard balls for fluid mechanics it does not work. But you have to use the model of fluidity. Causal fluidity. Little whirlpools happen for a reason, but it is fluid, not a thing. You are a fluid that moves by causality and it flows from one body to another. The body itself though is also a fluid. So it is a fluid kind of theory, always flux.
The last moment of this life provides the causal matrix for the first moment of the arising of consciousness of the next life. It comprises of causal conditions. It doesn't go from here to the next one. It provides the causes for the arising of the next one. So it is not a little identity that jumps from one thing. It is a causal flux that we call identity. It is not mysterious at all. It is what happens in this life. This is also a causal flux. Not a frozen identity being pulled along from birth to death. Of course, that is just an intellectual explanation. If you want a realize this you simply encounter your own anger, you encounter your own greed, you encounter your own confusion. Whenever you see that, it is based around the wrong model, it is based around frozen identitiy and identity can own things, ownership, control. When events don't go your way you are frustrated because you habitually got the wrong model. Undoing this is not about thinking about this. It is about watching your reactive mode and then undercutting again and again and again. Finding yourself transforming. You are not the person you were. That says, 'I am not the person I was, maybe there isn't a underlying real kind of me. ' And that's true. And that is why you have hope. There is no real frozen me.
* * * * * *