சுத்தத் தக்க சூத்திரம் Suddhatthaka Sutta

சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home

Sn 4.4

சுத்தத் தக்க சூத்திரம்: தூய்மை பற்றி

Suddhatthaka Sutta: Pure

Translated from the Pali by: John D. Ireland

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: ஜான் D. அயர்லாந்

* * *

"'இங்கே ஒரு தூய்மையானவரைப் பார்க்கிறேன். முழுமையாக நோயற்றவர். அவரைப் பார்த்த மனிதன் தூய்மையைப் பெறட்டும்!'

இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு இதையே 'மேன்மையான' தென நினைத்து இதனை அறிவு என்று நம்பித் 'தூய்மையானவரைப்' பிரதிபலிக்கின்றார். [1] ஒருவரைப் பார்த்ததாலேயே ஒருவர் தூய்மையாக முடியுமென்றால் அல்லது அப்படிபட்ட அறிவின் காரணமாக ஒருவர் துக்கத்தை விடமுடியு மென்றால், பற்றுகளைக் கொண்ட ஒருவர் மற்றொருவரால் தூய்மை பெற முடியும் [2]. ஆனால் இது இப்படிப்பட்ட கோட்பாட்டைத் தெரிவிப்போரின் கருத்து மட்டுமே.

"'Here I see one who is pure, entirely free of sickness. By seeing him a man may attain to purity!'

"Convinced of that and thinking it 'the highest,' he believes it to be knowledge when he contemplates 'the pure one.'[1] But if by sights man can gain purification or if through such knowledge he could leave suffering behind, then, one who still has attachments could be purified by another.[2] However, this is merely the opinion of those who so assert.

"உண்மையான பிராமணன் [3] ஒருவன் மற்றவரால் தூய்மையாக முடியாது என்றும், பார்த்ததை வைத்தும், கேட்டதாலும் மற்ற இந்திரியங்களால் ஊகிக்கப் பட்டதாலும், அல்லது சடங்குகள் செய்வதாலும் ஒருவர் தூய்மையாக முடியாது என்றும் கூறுகிறார். அவர் (உண்மையான பிராமணன்) புண்ணியத்தாலும், பாவச் செயல்களாலும் பாதிக்கப்படுவதில்லை. (முன்) வேட்கை கொண்டிருந்தவற்றை விட்டு விட்டபடியால் அவர் மேலும் கன்மச் செயல்களைச் (பலன் உள்ள வினைகளைச்) செய்வதில்லை.

"The (true) brahmana[3] has said one is not purified by another, nor by what is seen, heard or perceived (by the other senses), nor, by the performance of ritual observances. He (the true brahmana) is not defiled by merit or demerit. Having given up what he had (previously) grasped at, he no longer engages in producing (any kamma).

முன்பு பிடித்திருந்த பிடியைக் (பொருளைக்) கைவிட்டபின் அவர்கள் மற்ற பொருள்களோடு பற்றுக் கொள்கின்றனர். [4] வேட்கைக்குக் கட்டுப்பட்டிருப்பதால் அவர்கள் பற்றிற்கு அப்பால் செல்வதில்லை ஒன்றை நிராகரிப்பதும், மற்றதைப் பிடித்துக் கொள்வதும், ஒரு குரங்கு ஒருகிளையை விட்டு விட்டு வேறு கிளையைப் பிடிப்பது போலத்தான்.

Having left a former (object) they attach themselves to another [4], dominated by craving they do not go beyond attachment. They reject and seize, like a monkey letting go of a branch to take hold of another.

சாங்கியச் சடங்குகளைச் செய்துவருபவர் புலன்களுக்குக் கட்டுப்பட்டவராதலால் இப்படியும், அப்படியும் மாறுபட்டுச் செயற்படலாம். ஆனால் விரிந்த மெய்ஞ்ஞானம் கொண்டவர் தனது அனுபவித்தின் காரணமாகத் தன்மவழி சென்றவர் இப்படியும், அப்படியும் அலைவதில்லை. எல்லா நிலைகளிலும், பார்த்ததாலும், கேட்டதாலும், அறிந்ததாலும் நடுநிலையில் (நன்மை, தீமை பாராமல்) இருப்பவர், உள்ளதை உள்ளபடி பார்ப்பவர் (மனத்) தெளிவுடன் வாழ்கிறார். யாரால் எதனால் உலகோடு அவரை அடையாளம் காண்பது? (இப்படிப் பட்டவர், அப்படிப் பட்டவர் என்று அவரைப் பாகுபடுத்த முடியாது)

"A person having undertaken a ritual act goes this way and that, fettered by his senses. But one with a wide wisdom, having understood and gone into the Dhamma with his experience, does not go this way and that. For a person indifferent towards all conditions, whatever is seen, heard or cognized, he is one who sees it as it really is and lives with clarity (of mind). With what could he be identified in the world?

அவர்கள் எதையும் ஊகிப்பதில்லை அல்லது எந்தக் கருத்தையும் பின்தொடர்வதுமில்லை. தங்களை முழுமையாகத் தூய்மையானவர்கள் என்று சொல்லிக் கொள்வதுமில்லை. அவர்கள் (வேட்கையின்) கட்டுகளை அவிழ்க்கின்றனர். அவர்களுக்கு உலகில் எந்த ஏக்கமும் இல்லை. வரையறைகளுக்கு அப்பால் சென்ற உண்மையான பிராமணன் தன்னுள் எந்த ஊகமும் இல்லை என்பதைப் கண்டு, தெளிந்தவர். அவர் காமத்தினால் தொந்தரவு செய்யப்படுவதுமில்லை, வெறுப்பினால் பாதிக்கப்படுவதுமில்லை. அவருக்கு 'உண்மையில் இதுதான் மேன்மையானது' என்ற கருத்தும் இருப்பதில்லை. (ஒருவரைப் பார்ப்பது தான் உண்மையில் மேன்மையானது போன்ற கருத்துக்கள் அவரிடம் இல்லை.)

"They do not speculate nor pursue (any notion), they do not claim perfect purity. Loosening the knot (of clinging) with which they are bound, they do not have longing anywhere in the world. The (true) brahmana who has gone beyond limitations, having understood and seen there is no longer any assumption for him, he is neither disturbed by lust nor agitated by revulsion. For him there is nothing upheld as 'the highest.'"

* * *

விளக்கம்

Notes

1. This refers to the old Indian belief in "auspicious sights" (dittha-mangala), the belief that by merely beholding something or someone regarded as a holy object or person, purity, or whatever else is desired, may be gained.

வேத மரபிலிருந்து வந்த பழைய இந்திய நம்பிக்கையில் "புனிதப் பார்வைகள்" என்ற கருத்து இருந்தது. அதாவது ஒன்றைப் புனிதப் பொருள் என்றோ அல்லது ஒருவரைப் புனிதர் என்றோ நினைத்தோமானால் அதைப் பார்த்தாலே புண்ணியம் கிடைக்கும் அல்லது தூய்மையானோர் ஆகி விடலாம் என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கை இன்றும் இந்தியாவில் தொடர்கிறது: இது 'தர்ஷன்' என்று கூறப்படும்.

2. By another method, other than that of the Noble Eightfold Path (Comy.); but it could also mean, "by the sight of another person."

வேறு வழியில், அட்டாங்கமார்க்கம் அல்லாத வழியில். அல்லது 'வேறு ஒருவரைக் கண்டதனால்' என்றும் பொருள் படலாம்.

3. "Brahman" in the Buddhist sense, i.e., a person born in any caste who has become an arahant. [Thanissaro Bhikku]

"பிராமணன்" என்பவர் பௌத்த மரபின்படி எந்த ஜாதியிலும் பிறந்து அருகரானவர் (ஞானியானவர்). அவ்வளவே.

4. Leaving one teacher and going to another; leaving one teaching and going to another. This phrase may also refer to the mind's tendency to leave one craving to go to another. [Thanissaro Bhikku]

ஒரு ஆசிரியரை விட்டு இன்னொருவரிடம் சேர்வது, ஒரு போதனையை விட்டு மற்றொன்றிற்குச் செல்வதுதான். அல்லது மனம் ஒரு பொருளை விட்டு மற்றொன்றுடன் பற்றுக் கொள்ளும் சுபாவத்தையும் குறிக்கலாம்.

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

©1983 Buddhist Publication Society. See details English Source

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.