மதுரைக் காஞ்சி

மாங்குடி மருதனார் இயற்றிய

பத்துப்பாட்டில் ஆறாவதான

மதுரைக் காஞ்சி

வரிகள் 461-467 Lines

Maduraik Kanchi

பௌத்தப் பள்ளி

Buddha Vihara

நச்சினார்க்கினியருரையுடன் (14 ஆம் நூற்றாண்டு)

includes commentary by Nachi-Naark-iniyar (14th Century)

These lines describe a scene outside a Buddha Vihara in Madurai (or somewhere in Pandiyan kingdom) sometime around 100 BC-100 AD (this poem belongs to this period)

பௌத்தப் பள்ளி

திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை

ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்

தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்

தாமு மவரும் ஓராங்கு விளங்கக்

காமர் கவினிய பேரிளம் பெண்டிர்

பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்

சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும்

Translation:

Buddha Vihara

Affectionate beautiful women in their thirties

wearing ornaments with bright shiny pendents

holding on to their slim children as if they were holding on to pollen laden Lotus buds.

along with their cohabiting husbands;

The women and their families together in virtue -

the worshipers carrying flowers and incense extolling (the lord Buddha)

(going) to the Buddha vihara that protects well.

* * * * *

English translation with Tamil words from original poem in brackets:

Affectionate (காமர்) beautiful (கவினிய) women in their thirties (பேரிளம் பெண்டிர் literally: 32-40 year old women)

wearing ornaments with bright (திண்கதிர் ) shiny pendents (மதாணி)

holding on to their slim (ஒள்) children (குறு மாக்களை literally: little people)

as if they were holding on to pollen (தாது) laden (அணி literally: embellished) Lotus (தாமரை) buds (போது).

along with their cohabiting (முயங்கி புணர்ந்து literally: embrace and join) husbands (ஓம்பினர் literally: protectors);

The women (தாமும் literally: they) and their families (அவரும் literally: them) together in virtue (ஓராங்கு விளங்க) -

the worshipers (தொழுவனர்) carrying flowers (பூவினர் literally: people carrying flowers) and incense (புகையினர்) extolling (பழிச்சி) (the lord Buddha)

(going) to the Buddha vihara (கடவுட் பள்ளி) that protects (புறங்காக்குங்) well (சிறந்து).

Original Tamil poem with English meaning in brackets:

திண் (Bright literally: Strong) கதிர் (shiny) மதாணி (pendent) ஒண்குறு மாக்களை (children)

ஓம்பினர்த் (husbands) தழீஇத் (going with) தாம் புணர்ந்து முயங்கித் (cohabit with)

தாதணி (laden with pollen) தாமரைப் (Lotus) போது (bud) பிடித் தாங்குத் (holding)

தாமு (they - refers to the women) மவரும் (and them - refers to the husbands and children) ஓராங்கு விளங்கக் (together in virtue)

காமர் (like - refers to the women who have affection for their children and husbands) கவினிய (Beautiful) பேரிளம் பெண்டிர் (women in their thirties)

பூவினர் (people carrying flowers) புகையினர் (people carrying incense) தொழுவனர்

(worshipers) பழிச்சி (extolling, singing the praise of)

சிறந்து (well) புறங்காக்குங் (protecting) கடவுட் பள்ளியுஞ் (Buddha Vihara)

* * * * *

உரை: நச்சினார்க்கினியர் (Nachi-Naark-iniyar: a 14th Century Commentary)

வரிகள் 461-467 பற்றிய உரை ஆசிரியரின் சில குறிப்புகள்:

461-3. குழந்தைகளுக்குத் தாமரைப்போது : "போதவிழ் தாமரை யன்னநின், காதலம் புதல்வன்" (ஐங். 424) ; "நீரு, ளடைமறை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட, குடைநிழற் றோன்றுநின் செம்மலை" (கலித். 84:10-11) ; "பொய்கையுண் மலரென வளர்ந்து" (சீவக. 2756)

466. "பூவும் புகையும் சாவகர் பழிச்ச" (மதுரைக். 476)

வரிகள் 461-467 உரை:

461-5. [திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை, யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித், தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத், தாமு மவரு மோராங்கு விளங்கக், காமர் கவினிய பேரிளம்பெண்டிர் :]

திண் கதிர் மதாணி (461) காமர் கவினிய பெரு இள பெண்டிர் (465) - திண்ணிய ஒளியினையுடைய பேரணிகலங்களையுடையராய் விருப்பும் அழகும் பெற்ற பெரிய இளமையினையுடைய பெண்டிர்.

திண் – வலிமை, உறுதி

கதிர் – ஒளி பொருந்திய

மதாணி –அணிகலன், ஆபரணம், பதக்கம்

காமர் – விருப்புடையவர்

கவினிய – அழகுடைய

பேரிளம் பெண் – பெண்பாற் பருவங்களுள் ஒன்று

பெண்பாற் பருவங்கள் 7

1. பேதை (5 – 7)

2. பெதும்பை (8 -11)

3. மங்கை (12 – 13)

4. மடந்தை (14 – 19)

5. அரிவை (20 – 25)

6. தெரிவை (26 – 31)

7. பேரிளம் பெண் (32 – 40)

"காமர்" என்றால் விருப்புடையவர். அப்பெண்கள் எதன் மீது விருப்புகொண்டுள்ளனர்? திரு. பா. கா. இளங்கோ விளக்கம்:

பொதுவாகச் சங்க இலக்கியங்களில் பாடல் வரிகள், கூறப்படுகின்ற கருத்துக்களுக்கேற்பத் தொடராக அமைக்கப் பட்டிராது. எங்கோ இருக்கின்ற வரிகளைப் பொருத்தமான இடத்திற்கு இழுத்துவந்து பொருள் கூற வேண்டியிருக்கும். இந்தப் பாடல் கூட அதற்கான உதாரணம் எனக் கூறலாம். திண் கதிர் மதாணி காமர் கவினிய பேரிளம் பெண் என கூட்டிப் பொருள் உரைக்கப் படுகிறது. பொருள் கூறும் போதும் சில கருத்துக்களை வலிந்து கூட்டிப் பொருள் கூற வேண்டியிருக்கும்.

அந்த வகையில் இங்கும் திண்கதிர் மதாணி காமர் கவினிய பேரிளம் பெண்டிர் என்பதற்குத் திண்ணிய ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த (தங்கள் கணவர் மற்றும் குழந்தைகள் பால்) விருப்பும் கொண்ட அழகிய பேரிளம் பெண்கள் எனப் பொருள் கொள்ளலாம். அது தவறாகாது.

அதேபோல் திண்ணிய ஒளி பொருந்திய அணிகலன்கள்மேல் விருப்புக்கொண்ட அழகிய பேரிளம் பெண்கள் எனப் பொருள் கொள்ளலாமெனினும் காலமும் இடமும் கருதும்போது அது

பொருந்தாது எனக் கொள்ளலாம்.

தாம் முயங்கி புணர்ந்து ஓம்பினர் தழீஇ-(462) - தாம் முயங்கு தலைச்செய்து கூடிப் பாதுகாக்குங் கணவரையுங் கூட்டிக்கொண்டு,

முயங்கி – தழுவி

புணர்ந்து – கூடி

ஓம்பினர் – தம்மைப் பாதுகாக்கும் கணவர்

தழீஇ – அழைத்துக் கொண்டு

தாது அணி தாமரை போது பிடித்தாங்கு (463) ஒள் குறு மாக்களை (461) தழீஇ (462) - தாதுசேர்ந்த செவ்வித்தாமரைப்பூவைப் பிடித்தாற் போல் ஒள்ளிய சிறுபிள்ளைகளையும் எடுத்துக்கொண்டு,

தாது அணி தாமரை – தாது சேர்ந்த செந்தாமரை

(தாது - மகரந்தப்பொடி)

போது பிடித்தாங்கு – மலரைப் பிடித்தாற் போல்

போது – மலரும் பருவத்து அரும்பு, மலர்

ஒள் குறு – ஒள்ளிய சிறு

மாக்களைத் தழீஇ – பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு

புணர்ச்சி விதியின்படி "ஒள் குறு மாக்களை" என்பது "ஒண்குறு மாக்களை" என மருவியது.

தாமும் அவரும் ஓராங்கு விளங்க (464) - தாமும் கணவரும் பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே விளங்கும்படியாக,

அவரும் – கணவரும், பிள்ளைகளும்

466-7. [பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச், சிறந்து :] பூவினர் புகையினர் தொழுவனர் சிறந்து பழிச்சி - பூசைக்குவேண்டும் பூவினையுடையராய்த் தூபங்களையுடையராய் வணங்கினராய் மிகுத்துத் துதித்து,

பழிச்சி – போற்றுதல், வணங்குதல், துதித்தல்

467. புறங்காக்கும் கடவுள் பள்ளியும் - பாதுகாத்து நடத்தும் பௌத்தப் பள்ளியும்,

புறங்காத்தல் – பாதுகாத்தல்

* * * * *

தொகுப்பு

திண்ணிய ஒளியினையுடைய பேரணிகலங்களை அணிந்தவராய் விருப்பும், அழகும் கொண்ட நடுத்தர வயதடைந்த பெண்டிர் (பேரிளம்பெண் – 32 முதல் 40 அகவையினரான பெண்)

தாம் தழுவுதலைச் செய்து கூடுபவரும், தம்மைப் பாதுகாப்பவருமான கணவரையுங் கூட்டிக் கொண்டு,

தாது சேர்ந்த செந்தாமரை மலர் போன்ற ஒள்ளிய சிறு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு

தாமும் கணவரும் பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே விளங்கும்படியாகப் பூசைனை செய்தற்கு வேண்டிய பூவினையுடையவராய், தூபங்களையுடையவராய், வணங்கினவராய் மிகுந்த பக்தி கொண்டு துதித்து

மக்களைப் பாதுகாத்து நடத்தும் பௌத்தப் பள்ளியும்

* * * * *

Gratitude:

Source and commentary extracted from Project Madurai based on Etext preparation by

Staff & Students of K.A.P. Viswanatham Higher Secondary School, Tiruchirappalli, Tamilnadu, India

Proof Reading and additional comments:

Thiru. P. K. Ilango M.A Erode