சரியான அறிநிலை

அஜான் ஃபுவாங் முகப்பு

The teachings of Ajaan Fuang Jothiko

அஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்

தொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

தணிசாரோ பிக்கு

Compiled and Translated by

Thanissaro Bhikkhu

Right at Awareness

சரியான அறிநிலை

§ "Whatever you experience, simply be aware of it. You don't have to take after it. The primal heart has no characteristics. It's aware of everything. But as soon as things make contact, within or without, they cause a lapse in mindfulness, so that we let go of awareness, forget awareness in and of itself, and take on all the characteristics of the things that come later. Then we act out in line with them — becoming happy, sad or whatever. The reason we're this way is because we take conventional truths and latch on to them tight. If we don't want to be under their influence, we'll have to stay with primal awareness at all times. This requires a great deal of mindfulness."

"அனுபவம் எதுவாயினும் அதை உணர்ந்திருங்கள். ஆனால் அதைப் பின் தொடர வேண்டாம். அடிப்படையான உள்ளத்திற்கு இயல்புகள் எதுவும் இல்லை. அது அனைத்தையும் அறிந்துள்ளது. ஆனால் அகத்திலும் புறத்திலும் புலன் பொருட்களுடனான தொடர்பு உண்டான பின், மனக் கவனத்தில் ஒரு பிளவு ஏற்படுகிறது. அறி நிலையை மறந்து விடுகிறோம். அதன் பின் தொடர்ந்துவரும் பொருட்களின் இயல்புகளோடு பற்றுக் கொள்கிறோம். பின் அவற்றினால் - மகிழ்கிறோம், வருந்துகிறோம்... இப்படி நாம் இருப்பதற்குக் காரணம் வழக்கங்களின் வாய்மைகளோடு பற்றுக் கொள்வதால் தான். அவற்றினால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் நாம் அடிப்படை அறி நிலையோடு எப்போதும் இருக்க வேண்டும். இதற்கு மேலோங்கிய அறி நிலை இருப்பது அவசியம்."

§ One of Ajaan Fuang's students was feeling mistreated by the world, and so went to him for consolation. He told her, "What's there to feel mistreated about? You're the one that's swayed under the events that have hit you, that's all. Contemplate what's happening and you'll see that the mind is something separate. Events come passing in and then go passing by. So why be influenced by them? Keep your mind right at the simple awareness that these things come and soon they'll be gone, so why follow them?"

அஜான் ஃபுவாங்கின் மாணவி ஒருவர் இந்த உலகம் தன்னைச் சரியாக நடத்த வில்லையென்று அவரிடம் முறையிட்டார். மாணவியைத் தேற்றும் வகையில், "நீ துன்புறுத்தப் படுவதாக நினைக்க என்ன இருக்கிறது? எதிர்கொள்ளும் சூழ்நிலைகளால் நீயாகவே தான் பாதிக்கப் படுகிறாய். அவ்வளவு தான். நடப்பதைச் சிந்தித்துப் பார்த்தால் மனம் வேறுபட்டது என்பதை அறிவாய். சந்தர்ப்ப சூழ்நிலைகள் வந்து போகும். அவற்றால் நீ ஏன் பாதிக்கப்பட வேண்டும்? மனத்தின் மேல் சாதாரண அறி நிலையில் கவனம் செலுத்து: இந்த விஷயங்களெல்லாம் வந்த சிறிது நேரத்தில் போய்விடும். அவற்றை ஏன் நீ பின் தொடர வேண்டும்?"

§ "What, really, is yours? When you die, you won't be able to take any of these things with you, so why waste time wanting anything? There's nothing you have to want at all. Make your mind quiet. Make it one. You don't have to concern yourself with your own attainments or those of other people. Simply be aware. That's enough."

"உண்மையில் உங்களுடையது என்று எதைச் சொல்வது? இறக்கும் போது எதையும் எடுத்துச் செல்ல முடியாது. அதனால் இதையும், அதையும் விரும்பிச் சேர்த்து ஏன் நேரத்தை வீண் செய்ய வேண்டும்? எதையுமே விரும்ப வேண்டியதில்லை. மனதை அமைதியாக்குங்கள். அதனை ஒன்று படுத்துங்கள். நீங்கள் அடைந்த பேறுகளைப் பற்றியோ மற்றவர்கள் பெற்ற பேறுகளைப் பற்றியோ கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் எப்போதும் அறி நிலையில் இருக்க வேண்டும். அது போதும். "

§ "Whenever anything hits you, let it go only as far as 'aware'. Don't let it go all the way into the heart."

"எப்போதாவது, எதுவாவது உங்களைத் தாக்கினால், 'தாக்குதலை அறியும்வரை' மட்டுமே நுழைய விடுங்கள். உள்ளத்தைத் துளைக்கும் வரை அதை வளர விட வேண்டாம்."

§ "All you need to do is keep your sense of simple awareness solid and strong, and nothing will be able to overwhelm you."

"எளிமையான அறி நிலையை, உறுதியாக, வலுவுடன் வைத்திருந்தால் போதும், உங்களை யாரும் வெற்றி கொள்ள முடியாது."

§ "Stay with awareness itself at all times — except when you sleep. The minute you wake up, stay right at awareness, and it won't be long before discernment arises."

"தூங்கும் நேரத்தைத் தவிர, மற்ற எல்லா நேரமும் அறி நிலையோடு இருக்க வேண்டும். விழித்தவுடன் அறி நிலையோடு இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் பின் விவேகம் பிறக்க நீண்ட நாள் ஆகாது."

§ One woman who practiced meditation with Ajaan Fuang came to feel that she had split into two people: one person acting, and one watching. She felt this way both while sitting in meditation and while she wasn't — to the point where she didn't feel like sitting in meditation at all, because she felt that sitting and not sitting were in no way different. She asked him about this, and he told her, "If you don't want to, you don't have to sit. Just keep this sense of 'the watcher' going at all times. Sitting with your eyes closed is simply an external convention. Just keep watching. When the mind and the body become separate like this, the body can't press on the mind. If the body presses on the mind, the mind will have to be under the influence of what goes on in the body."

அஜான் ஃபுவாங்கிடம் பயிற்சி செய்து வந்த ஒரு பெண், தான் இருவராகப் பிரிவுபட்டு விட்டதாக உணர்ந்தார்: அதாவது செய்பவர் ஒருவர், கவனிப்பவர் ஒருவர் என்று இருவர். இதுபோன்ற எண்ணம் தியானத்தில் உட்காரும் போது மட்டுமல்லாமல் பிற நேரங்களிலும் எழுந்தது. அதனால் அவருக்குத் தியானம் செய்வதில் விருப்பமற்றுப் போனது. ஏனென்றால் தியானம் செய்தாலும், செய்யா விட்டாலும் வேறுபாடெதுவும் தெரியவில்லை. இதைப் பற்றி அந்தப் பெண் அஜான் ஃபுவாங்கிடம் கேட்ட போது அவர், "தியானம் செய்ய விருப்பமில்லையென்றால் உட்கார வேண்டியதில்லை. இந்தக் 'கவனிப்பவர்' என்ற உணர்வை மட்டும் தொடர்ந்து வைத்திருங்கள். உட்கார்ந்து தியானம் செய்வது ஒரு புற வழக்கம் தான். கவனித்துக் கொண்டே இருங்கள். மனமும் உடலும் இதுபோலப் பிரிந்திருப்பதாகத் தோன்றும் போது, உடல் மனத்தின் மீது அழுத்தம் தர முடியாது. உடல் மனத்தின் மீது அழுத்தம் தந்தால் உடலின் செயற்பாடுகளினால் மனம் வசப்பட வேண்டியிருக்கும்."

§ "Right awareness has to be paired with the breath."

"சரியான அறி நிலை, மூச்சோடு இணைந்து இருக்க வேண்டும்."

§ "To be aware means to be aware as soon as defilement arises, to see defilement and not act under its power."

"அறி நிலையில் இருப்பதென்றால் மாசுகள் தோன்றிய உடனேயே அதைத் தெரிந்து கொள்வதாகும். மாசுகள் இருப்பதை அறிந்த பின், அதற்கு அடிமைப் படாமல் இருப்பதாகும்."

§ "There's no past here, and no future, only the present. No man, no woman, no sign of any kind at all. There's nothing, not even self. What self there is, is only in a conventional sense."

"இங்கு இறந்த காலமும் இல்லை, எதிர்காலமும் இல்லை. இருப்பது நிகழ் காலமே. ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை, வேறு எந்த அடையாளங்களும் இல்லை. எதுவுமே இல்லை, 'நான்' என்றும் ஒன்று இல்லை. 'நான்' என்று எதேனும் இருந்தால் அது நடைமுறைப் பழக்கத்தில் வந்தது தான்."

§"Once awareness is solid you have to get above and beyond it."

"அறி நிலை வலுவான பின் அதற்கு மேலும், அப்பாலும் சென்றுவிட வேண்டும்."

§ In 1978, one of Ajaan Fuang's students had to move to Hong Kong, and so he set up a small meditation center there. In one of his letters he asked Ajaan Fuang to write out a short outline of the main points of the practice, and this was the answer he received:

"Focus on all six of the elements: earth, water, wind, fire, space, and consciousness. When you're acquainted with each of them, meld them into one, and focus on them until they grow stable and strong. Your energy will gather together until both the body and the mind feel full. When the physical elements are balanced and in harmony, they'll grow full, and the mind will let go of them on its own and turn to oneness. The elements will be one, the mind will be one. So now you turn your attention to the mind. Focus on the mind until you become fully aware of it. Then let go of that awareness, together with whatever knowledge you've gained, and there won't be anything left. Let go even of the events in the present that you're aware of. That's when intuitive discernment will arise, and meditation comes to an end."

1978 ஆம் ஆண்டு அஜான் ஃபுவாங்கின் மாணவர் ஒருவர் ஹாங் காங் (Hong Kong) நகருக்கு இடம் மாற வேண்டியிருந்தது. அங்கு அவர் சிறு தியான மண்டபம் ஒன்றைத் துவங்கினார். அஜான் ஃபுவாங்கிற்கு அனுப்பிய கடிதமொன்றில் பயிற்சியின் முக்கியக் கருத்துக்களைச் சுருக்கமாக வரையுமாறு கேட்டுக் கொண்டார். அவருக்குக் கிடைத்த பதில்:

"ஆறு பூதங்களின் மீதும் கவனம் செலுத்தவும்: மண், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் மற்றும் பிரக்ஞை. ஒவ்வொன்றையும் தெரிந்து கொண்ட பின் அவற்றை ஒன்று கூட்டி, நிலையாக, வலுவாக ஆகும் வரை அவற்றின் மீது கவனம் செலுத்தவும். உங்கள் உடலும், மனமும் நிறைவடைந்ததை உணரும்வரை உங்கள் சக்தி அவற்றை ஒன்றிணைக்கும். அப்பூதங்கள் சமாதானமாகவும், இணக்கத்தோடும் இருக்கும்போது அவை முழுமையாக வளர்ந்து, மனம் அவற்றைத் தானாகவே விட்டுவிட்டு ஒன்றுபடும். பூதங்களும் ஒன்றாகும், மனமும் ஒன்றாகும். அடுத்து மனத்தின் மீது கவனம் செலுத்தவும். மனத்தை நன்கு அறியும் வரை அதன் மீது கவனம் செலுத்தவும். பின் அந்த அறிந்திருப்பதையும், பெற்ற அறிவையும் ஒருசேர விட்டுவிட்டால் வேறெதுவும் மிஞ்சி இருக்காது. நிகழ்காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சி எதையாவது அறிந்திருந்தால் அதனையும் விட்டு விடுங்கள். அப்போதுதான் இயற்கையாக விவேகம் பிறக்கும். அதுவே தியானத்தின் முடிவு."

§ One night Ajaan Fuang took a group of his students up to sit in meditation at the chedi on top of the hill in Wat Dhammasathit. Looking out to the south, in the inky darkness, they could see the bright lights of the fishing boats far out at sea. He commented, "When you're up on a high place like this, you can see everything." For one woman listening, this had special meaning, because she knew he wasn't referring just to the view from the hill.

ஒரு நாள் இரவு அஜான் ஃபுவாங் சில மாணவர்களை வாட் தம்மசாதிட் (Wat Dhammasathit) விகாரையில் மலை உச்சியில் இருந்த சேதியத்திற்குத் தியானம் செய்ய அழைத்துச் சென்றார். தென் திசை நோக்கிப் பார்க்கும் போது அந்தக் காரிருளிலும் மீனவர்களின் படகுகளிலிருந்த விளக்குகளின் பிரகாசமான ஒளி தொலைதூரக் கடலில் தெரிந்தது. அவர் சொன்னார், "இது போல உயரமான இடங்களிலிருக்கும் போது, உங்களால் எல்லாவற்றையும் பார்க்க முடியும்." இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெண், அவர் கண்ணெதிரே தெரியும் வெறும் காட்சிகளைப் பற்றிக் குறிப்பிடவில்லையென்பதையும், அவர் சொன்னதில் விசேடமான உட்கருத்து இருப்பதையும் உணர்ந்தார்.

* * * * * * *