தியானம்

அஜான் ஃபுவாங் முகப்பு

The teachings of Ajaan Fuang Jothiko

அஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்

தொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

தணிசாரோ பிக்கு

Compiled and Translated by

Thanissaro Bhikkhu

Meditation

தியானம்

§ Many were the times when people would tell Ajaan Fuang that — with all the work and responsibilities in their lives — they had no time to meditate. And many were the times he'd respond, "And you think you'll have time after you're dead?"

அஜான் ஃபுவாங்கிடம் மக்கள் அடிக்கடி - தங்கள் வேலையின் காரணமாகவும் குடும்பப் பொறுப்புகளாலும் - தங்களுக்குத் தியானம் செய்ய நேரமே கிடைப்பதில்லை என்று கூறுவார்கள். ஒவ்வொரு முறையும் அஜான் ஃபுவாங் அவர்களுக்கு இவ்வாறு பதிலளிப்பார்: " நீங்கள் இறந்தபின் நேரம் கிடைக்கும் என்று நினைக்கின்றீர்களா?"

§ "All you have to study is the meditation-word, buddho. As for any other fields you might study, they never come to an end, and can't take you beyond suffering. But once you're come to the end of buddho, that's when you'll come to true happiness."

"தியான வார்த்தையான 'புத்தோ' என்பதை நீங்கள் கற்றுக் கொண்டால் போதும். மற்ற துறைகளை யெல்லாம் நீங்கள் படித்தாலும், அவை ஒரு முடிவுக்கும் வராது, துக்கத்திற்கு அப்பாலும் எடுத்துச் செல்லாது. ஆனால் 'புத்தோ'வின் முடிவை எட்டும் போது தான் நீங்கள் உண்மையான மகிழ்ச்சியைக் காண்பீர்கள்."

§ "When the mind's not quiet — that's when its poor and burdened with difficulties. It takes molehills and turns them into mountains. But when the mind is quiet, there's no suffering, because there's nothing at all. No mountains at all. When there's a lot to the mind, it's simply a lot of defilement, making it suffer."

"மனம் அமைதியாக இல்லாதபோது - அதாவது அது வறுமையாலும், பிரச்சனைகளாலும் துன்பப்படும் போது - கறையான் புற்றுகளையும் (சிறிய பிரச்சனைகளையும்) மலை போல ஊதிப் பெரிதாக்கி விடுகிறது. ஆனால் மனம் அமைதியாக இருக்கும் போது, அங்கு துன்பம் ஏதும் இல்லை. ஏனென்றால் அங்கு பிரச்சனை ஒன்றுமே இல்லை. மலைகளும் இல்லை. மனத்தில் சுமை இருக்கும் போது அங்கு மாசுகள் அதிகம் இருக்கின்றதென்பதால் அது துன்புறுகிறது."

§ "If you're single-minded about whatever you think of doing, you're sure to succeed."

"நீங்கள் எதைச் செய்ய விரும்பினாலும் முழுமனத்தோடு செய்தால், அதில் வெற்றி காண்பது உறுதி."

§ "When you're thinking buddho you don't have to wonder about whether or not you'll do well in your meditation. If you put your mind to it, you're sure to do well. The things that come to disturb you are simply the forces of temptation, come to put on a play. Whatever the play, all you have to do is watch — you don't have to get on stage with them."

"நீங்கள் புத்-தோ (விழிப்புடன் இருத்தல்) என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது தியானம் நன்றாகச் செய்வோமா இல்லையா என்பதைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செய்தால், அதைச் சிறப்பாகச் செய்வீர்கள் என்பது உறுதி. உங்களைத் தொந்தரவு செய்யும் சக்திகள், உங்களைத் தீமை செய்யத் தூண்டி நாடகமாட வந்திருக்கும் சக்திகளே. நாடகம் எதுவாக இருந்தாலும், அதை நீங்கள் கவனித்தால் போதும் - நீங்களும் மேடையேறி நாடகத்தில் பங்கு கொள்ள வேண்டியதில்லை."

§ "What's really essential is that you bring your views in line with the truth. Once your views are right, the mind will immediately come to rest. If your views are wrong, everything is immediately wrong. All the things you need for the practice — the breath, the mind — are already there. So try to bring your views in line with the breath, and you won't have to use a lot of force in your meditation. The mind will settle down and come to rest right away."

"நீங்கள் குறிப்பாகச் செய்ய வேண்டியது, உங்கள் நோக்கத்தை வாய்மைக்கு நிகராகக் கொண்டு வருவது தான். நோக்கம் சரியாக இருந்தால், மன அசைவு உடனே நின்றுவிடும். நோக்கம் சரியாக இல்லையெனில், உடனே எல்லாமே தவறாகத் தோன்றும். பயிற்சிக்குத் தேவையானது அனைத்தும் - மூச்சு, மனம் - ஏற்கனவே உங்களிடம் உள்ளன. ஆகவே உங்கள் நோக்கத்தை வாய்மைக்கு நிகராகக் கொண்டு வாருங்கள். பின் உங்கள் தியானத்தில் அதிக சக்தியைப் பயன்படுத்தத் தேவை இருக்காது. மனம் அமைதி பெற்று அசைவதை நிறுத்திவிடும்."

§ "The mind is like a king. Its moods are like his ministers. Don't be a king who's easily swayed by his court."

"மனம் ஒரு அரசனைப்போல. அதன் மனோபாவங்கள் அரச சபையிலுள்ள அமைச்சர்களைப் போல. சபையில் உள்ளோர் கூறுவதைக் கேட்டு எளிதாக மனம் மாறிவிடும் அரசனைப்போல நீங்கள் இருக்க வேண்டாம்."

§ A group of laypeople who had studied the Abhidhamma together came to Ajaan Fuang to try out his version of mental training, but when he told them to sit, close their eyes, and focus on the breath, they immediately backed off, saying that they didn't want to practice concentration, for fear that they'd get stuck on jhana and end up being reborn in the Brahma worlds. He responded, "What's there to be afraid of? Even non-returners are reborn in the Brahma worlds. At any rate, being reborn in the Brahma worlds is better than being reborn as a dog."

அபிதம்மத்தை (திரிபிடகத்தின் மூன்றாம் பகுதி) ஒன்று கூடிப் படித்து வந்த இல்லறமக்கள் சிலர் அஜான் ஃபுவாங்கின் மனப் பயிற்சிமுறையை அறிந்து கொள்வதற்காக அவரிடம் வந்தனர். ஆனால் அவர் அவர்களை அமைதியாகக் கண்களை மூடி அமர்ந்து, மூச்சின் மீது கவனம் செலுத்தச் சொன்ன போது அவர்கள் பெரிதும் தயங்கினார்கள். மன ஒருமைப் பாட்டினை வளர்த்து அதனால் உண்டாகும் ஜான நிலை (ஆழ்ந்த மனநிலை) மீது பற்றுக் கொண்டால் பிரம்ம லோகத்தில் (மேல் உலகங்களில் ஒன்று) மறுபிறப்பெடுத்து விடுவோமோ என்ற அச்சம் அவர்களிடம் எழுந்தது. (அதாவது நிப்பான நிலையை இந்த வாழ்விலேயே அடையாமல் மறுபிறப் பெடுத்து விடுவோம் என்ற அச்சம்). அதற்கு அவர், "இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? அனகாமிதா (நான்கு ஞானப் படிகளில் மூன்றாவது. இந்த நிலையை அடைந்தோர் மண்ணுலகில் மறுபிறப் பெடுக்க மாட்டார்கள்) நிலையை அடைந்தவர்களும் பிரம்ம லோகத்தில் பிறப்பெடுக்கின்றனர். எப்படி இருந்தாலும் இந்த உலகில் நாயாகப் பிறப்பெடுத்து அல்லல் படுவதை விட பிரம்ம லோகத்தில் பிறப்பெடுப்பது மேல் அல்லவா?"

§ When Ajaan Fuang taught meditation, he didn't like to map things out in advance. As soon as he had explained the beginning steps, he'd have the student start sitting right in his presence, and then take the steps back home to work on there. If anything came up in the course of the practice, he'd explain how to deal with it and then go on to the next step.

Once a layman who had known more than his share of meditation teachers came to discuss the Dhamma with Ajaan Fuang, asking him many questions of an advanced nature as a way of testing his level of attainment. Ajaan Fuang asked him in return, "Have you had these experiences in your own meditation yet?"

"No, not yet."

"Then in that case I'd rather not discuss them, because if we discuss them when they're not yet a reality for you, they'll just be theories, and not the real Dhamma."

அஜான் ஃபுவாங் தியானம் கற்பிக்கும் போது, மாணவர்கள் செய்ய வேண்டியது அனைத்தையும் முன்கூட்டியே சொல்லி விட மாட்டார். துவக்கப் படிகளைக் கற்பித்தவுடன் மாணவரை அவர் அருகில் அமர்ந்து பயிற்சி செய்ய வைத்து, வீட்டிற்குச் சென்ற பின் பயிற்சியைத் தொடர்ந்து செய்யச் சொல்வார். தியானத்தின் போது எதேனும் மனத்தில் தோன்றினால் அதை எப்படிச் சமாளிப்பதென்று சொல்லித் தந்து அடுத்த படிக்குச் செல்வார்.

ஒரு சமயம், பல ஆசிரியர்களிடம் தியானம் கற்ற ஒரு இல்லறத்தார், அஜான் ஃபுவாங்கிடம் அறத்தைப் பற்றிக் கலந்துறையாட வந்தவர், அவரிடம் பல ஆழமான கேள்விகளைக் கேட்டார். அஜான் ஃபுவாங்கின் ஆன்மீக நிலையைச் சோதிக்கும் வகையில் கேட்கப் பட்ட கேள்விகளாவே அவை தோன்றின. அஜான் ஃபுவங் அவரிடம் கேட்டார், "இந்த அனுபவங்களை நீங்கள் சந்தித்திருக்கின்றீர்களா?"

"இல்லை, இன்னமும் இல்லை."

"அப்படியென்றால் அவற்றைப் பற்றிப் பேசாமல் இருப்பதே நல்லது, ஏனென்றால் இவ்வனுபவங்களைப் பெறுவதற்கு முன்னரே அவற்றைப் பற்றிப் பேசினால், அவை சித்தாத்தங்களாக இருக்குமே ஒழிய, உண்மையான அறமாக இருக்காது."

§ One meditator noticed that his practice under Ajaan Fuang was making quick progress, and so he asked what the next step would be. "I'm not going to tell you," Ajaan Fuang said. "Otherwise you'll become the sort of amazing marvel who knows everything before he meets with it, and masters everything before he's tried his hand. Just keep practicing and you'll find out on your own."

தியானிப்பவர் ஒருவர் தனது தியானத்தில் சிறப்பான முன்னேற்றம் அடைந்ததை அறிந்து அஜான் ஃபுவாங்கிடம் அடுத்து என்ன செய்வது என்று கேட்டார். அஜான் ஃபுவாங் அவரிடம், " நான் சொல்லப் போவதில்லை. சொல்லி விட்டால் ஒன்றைச் சந்திக்கும் முன்னரே அதைப் பற்றித் தெரிந்தவர் போலவும், ஒன்றைப் பழகும் முன்னரே அதனைச் செய்தவர் போலக் காட்சியளிக்கும் அதிசய மனிதராகக் காணப்படுவீர். பயிற்சி செய்து கொண்டே இருந்தால் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்."

§ "You can't plan the way your practice is going to go. The mind has its own steps and stages, and you have to let the practice follow in line with them. That's the only way you'll get genuine results. Otherwise you'll turn into a half-baked arahant."

"உங்கள் பயிற்சி இப்படித்தான் முன்னேற வேண்டும் என்று முன்னரே திட்டமிட முடியாது. மனத்திற்குப் படிகளும் காலக் கட்டங்களும் இருக்கின்றன. உங்கள் பயிற்சி அதற்கேற்றவாறு தொடர வேண்டும். நல்ல விளைவுகள் கிடைக்க அதுதான் ஒரே வழி. இல்லா விட்டால் நீங்கள் அரைகுறை அறவண அடிகளாக மட்டுமே மாறுவீர்கள்."

§ "Don't make a journal of your meditation experiences. If you do, you'll start meditating in order to have this or that thing happen, so that you can write it down in your journal. And as a result, you'll end up with nothing but the things you've fabricated."

"உங்கள் தியான அனுபவங்களைக் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டிருக்காதீர்கள். அப்படிச் செய்தால் ஏதாவது ஒரு அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தியானப் பயிற்சி செய்வீர்கள். எனென்றால் அதையும் எழுதி வைப்பதற்காக. இதன் விளைவாக நீங்கள் கற்பனை செய்து எழுதி வைத்ததைத் தவிர வேறு எதுவும் மிஞ்சாது."

§ Some people are afraid to meditate too seriously, for fear that they'll go crazy, but as Ajaan Fuang once said, "You have to be crazy about meditation if you want to meditate well. And as for whatever problems come up, there are always ways to solve them. What's really scary is if you don't meditate enough for the problems to come out in the open in the first place."

மக்கள் சிலர் தீவிரமாகத் தியானம் செய்யத் தயங்குகின்றனர். அப்படிச் செய்தால் பைத்தியம் பிடித்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர். ஆனால் அஜான் ஃபுவாங்க் ஒரு முறை சொன்னது போல, "நன்றாகத் தியானம் செய்ய வேண்டுமென்றால், தியானத்தின்மீது நீங்கள் பைத்தியம் கொண்டிருக்க வேண்டும். தியானத்தின் போது ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கு எப்படியும் தீர்வு கண்டு விடலாம். தியானம் செய்யாவிட்டால் பிரச்சனைகள் அமுங்கிக் கிடக்கும். அதைக் கண்டு தான் நாம் உண்மையில் அச்சம் கொள்ள வேண்டும்."

§ "Other people can teach you only the outer skin, but as for what lies deeper inside, only you can lay down the law for yourself. You have to draw the line, being mindful, keeping track of what you do at all times. It's like having a teacher following you around, in public and in private, keeping watch over you, telling you what to do and what not to do, making sure that you stay in line. If you don't have this sort of teacher inside you, the mind is bound to stray off the path and get into mischief, shoplifting all over town."

"மற்றவர்கள் வெளிப்புறத்தைப் பற்றித்தான் உங்களுக்குக் கற்பிக்க முடியும். ஆனால் ஆழமாக உள்ளே இருப்பதைப் பற்றி நீங்கள் மட்டுமே உணர்ந்து கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும். அறிநிலையோடு இருந்து ஒவ்வொரு கனமும் செய்து கொண்டிருப்பதைத் தெரிந்திருக்க வேண்டும். பொது இடங்களிலும், நீங்கள் தனிமையில் இருக்கும் போதும் உங்களை ஒரு ஆசிரியர் தொடர்வதைப் போல உங்களைக் கவனித்துக் கொண்டே வருகிறார், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று சீரான வழியில் உங்களைத் தொடர வைக்கிறார். உங்களுக்குள் இப்படிப் பட்ட ஆசிரியர் இல்லாவிட்டால், மனம் நிலைகுலைந்து குறும்பு செய்யத் தொடங்கி, ஊர் முழுவதும் திருட ஆரம்பித்து விடும்."

§ "Persistence comes from conviction, discernment from being mindful."

விடாப்பிடியாக ஈடுபட்டிருப்பது என்பது மனத்தின் திட நம்பிக்கையிலிருந்தே வருகிறது. விவேகம் நல்அறி நிலையிலிருந்து வருகிறது.

§ "Persistence in the practice is a matter of the mind, and not of your posture. In other words, whatever you do, keep your mindfulness constant and don't let it lapse. No matter what your activity, make sure the mind sticks with its meditation work."

"பயிற்சியைத் தொடர்ந்து செய்வது என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். அது உடலின் நிலை (உட்காருதல், படுத்திருத்தல், நடத்தல், நிற்றல்) சம்பந்தப்பட்டதல்ல. அதாவது நீங்கள் எதைச் செய்து கொண்டிருந்தாலும் மனக் கவனத்தைத் தொடர்ந்து செலுத்தி அதை விடுபடாமல் வைத்திருக்க வேண்டும். நீங்கள் எந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும், கவனிக்க வேண்டியதை மனம் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்."

§ "When you start out sitting in meditation, it takes a long time for the mind to settle down, but as soon as the session is over you get right up and throw it away. It's like climbing a ladder slowly, step by step, to the second floor, and then jumping out the window."

"தியானம் செய்ய உட்காரும் போது மனம் அமைதியடைய நீண்ட நேரம் ஆகும். ஆனால் தியானம் முடிந்ததும் ‘சடக்’கென்று எழுந்தால், கஷ்டப்பட்டுப் பெற்ற அமைதியை ஒரு நொடியில் குலைத்து விடுகிறோம். இது படிப்படியாக ஏணியில் ஒரு கட்டிடத்தின் இரண்டாம் மாடிக்கு ஏறிய பின், ஜன்னல் வழியே கீழே குதித்து விடுவதைப் போன்றது."

§ A woman army officer sat in meditation with Ajaan Fuang at Wat Makut until it seemed that her mind was especially blissful and bright. But when she returned home, instead of trying to maintain that state of mind, she sat around listening to a friend's woes until she herself started feeling depressed, too. A few days later she returned to Wat Makut and told Ajaan Fuang what had happened. He responded, "You took gold and traded it in for excrement."

ஒரு தரைப்படைப் பெண் அதிகாரி, வாட் மாகூட் (Wat Makut) விகாரையில் அஜான் ஃபுவாங்குடன் அமர்ந்து தியானம் செய்யும்போது தன் மனம் பிரகாசமாக இருப்பதை உணர்ந்தார். ஆனால் வீடு திரும்பியதும் அந்தப் பிரகாசமான மனநிலையைத் தொடர்வதற்குப் பதில், தன் தோழி ஒருவரின் பிரச்சனைகளை நீண்ட நேரம் கேட்டுக் கொண்டு இருந்தமையால் அவரது மனத்தில் சோர்வு உண்டானது. சில நாட்களுக்குப் பின் வாட் மாகுட் சென்று அஜான் ஃபுவாங்கிடம் நடந்ததைத் தெரிவித்தார். அவரது பதில், "வைத்திருந்த தங்கத்தைக் கொடுத்து விட்டுப் பதிலுக்குச் சாணத்தை பெற்றுக் கொண்டு விட்டாய்."

§ Another student disappeared for several months, and on her return told Ajaan Fuang, "The reason I didn't show up is that my boss sent me to night school for a semester, so I didn't have any time to meditate at all. But now that the course is over, I don't want to do anything but meditate — no work, no study, just let the mind be still."

She thought he'd be pleased to hear how intent she still was on meditating, but he disappointed her. "So you don't want to work — that's a defilement, isn't it? Whoever said that people can't work and meditate at the same time?"

மற்றொரு மாணவி, பல மாதங்களாக விகாரைக்கு வரவில்லை. பின் ஒரு நாள் வந்த அவர் அஜான் ஃபுவாங்கிடம், "நான் விகாரைக்கு வராததற்குக் காரணம், எனது மேல் அதிகாரி என்னைச் சில மாதங்களுக்கு இரவுப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டதுதான். அதனால் எனக்குத் தியானம் செய்ய நேரமே இல்லை. ஆனால் இப்போது படிப்பு முடிந்து விட்டமையால், எனக்குத் தியானம் செய்வதைத் தவிர வேறு எதையும் செய்ய விருப்பமில்லை - படிக்க விருப்பமில்லை, வேலை செய்ய விருப்பமில்லை. மனத்தை அமைதியாக்கவே விரும்புகிறேன். "

அஜான் புவாங் தனது ஆர்வத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவார் என்று அந்த மாணவி நினைத்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அஜான் ஃபுவாங் கூறிய பதில்: "வேலை செய்ய விரும்பவில்லையா? அதுவும் ஒரு மன மாசுதானே? வேலை செய்து கொண்டே தியானம் செய்ய முடியாது என்று யார் உனக்குச் சொன்னது?"

§ "Meditating isn't a matter of making the mind empty, you know. The mind has to have work to do. If you make it empty, then anything — good or bad — can pop into it. It's like leaving the front door to your home open. Anything at all can come strolling right in."

"தியானம் செய்வது என்பது மனத்தை வெறுமையாக்குவது என்பதல்ல என்று தெரியுமா? மனத்திற்கு வேலை கொடுக்க வேண்டும். அதனை வெறுமையாக்கி விட்டால் அதில் எது வேண்டுமானாலும் – நல்லதும், தீயதும் – நுழைந்து விடும். இது உங்கள் வீட்டுக் கதவைத் திறந்து வைத்திருப்பதைப் போல. யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து விடுவார்கள்."

§ A young nurse practiced meditation with Ajaan Fuang several days running, and finally asked him one day, "Why wasn't today's session as good as yesterday's?"

He answered: "Meditating is like wearing clothes. Today you wear white, tomorrow red, yellow, blue, whatever. You have to keep changing. You can't wear the same set of clothes all the time. So whatever color you're wearing, just be aware of it. Don't get depressed or excited about it."

ஒரு இளம் நர்ஸ் அஜான் ஃபுவாங்குடன் பல நாட்களாகத் தொடர்ந்து தியானம் செய்து வந்தார். ஒரு நாள் அவர் அஜான் ஃபுவாங்கிடம், "ஏன், இன்று தியானம் நேற்றையதைப்போலச் சிறப்பாக இல்லை?" என்று கேட்டார்.

அவர் பதில்: "தியானம் செய்வது துணிகளை உடுத்துவதைப் போல. இன்று வெள்ளை ஆடைகளை அணிகிறோம், நாளை சிவப்பு, மஞ்சல், நீலம் என்று பல வண்ண ஆடைகளை அணிகிறோம். ஒவ்வொரு நாளும் வேவ்வேறு ஆடைகள் அணிகிறோம். ஒரே ஆடையைத் தினந்தோறும் உடுத்தப் போவதில்லை. ஆக எந்த நிற ஆடையை அணிந்தாலும் அதை அறிந்திருக்க வேண்டும். அதனால் சோர்வு கொள்ளவும் வேண்டாம், குதூகலப் படவும் வேண்டாம்."

§ A few months later the same nurse was sitting in meditation when a sense of peace and clarity in her mind became so intense that she felt she would never have a bad mood infiltrate her mind again. But sure enough, bad moods eventually came back as before. When she mentioned this to Ajaan Fuang, he said, "Looking after the mind is like raising a child. There will have to be bad days along with the good. If you want only the good, you're in for trouble. So you have to play neutral: Don't fall in with the good or the bad."

சில மாதங்களுக்குப் பின் அதே நர்ஸ் தியானம் செய்து கொண்டிருக்கும்போது அவர் மனம் அமைதியாகவும், தெளிவாகவும் இருப்பதை உணர்ந்தார். ஆழமான அந்த உணர்வின் பின் இனிமேல் எப்போதும் மோசமான மனநிலையே உண்டாகாது என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் மோசமான மன நிலைகள் முன்போலவே மீண்டும் தோன்றின. இதைப்பற்றி அஜான் ஃபுவாங்கிடம் சொன்ன போது, அவர், "மனத்தைக் கவனிப்பது ஒரு குழந்தையைக் கவனிப்பது போல. சிலநாட்கள் பிரச்சனையே இருக்காது; சிலநாட்கள் தொந்தரவாகவே இருக்கும். நல்ல நாட்கள் மட்டுமே இருக்கவேண்டுமென்று நினைத்தால் பிரச்சனைதான் உண்டாகும். எனவே நடுநிலை வகிப்பதே நல்லது: நல்லதோடும் பற்றுக் கொள்ள வேண்டாம்; கெட்டதோடும் பற்றுக் கொள்ள வேண்டாம்."

§ "When the meditation goes well, don't get excited. When it doesn't go well, don't get depressed. Simply be observant to see why it's good, why it's bad. If you can be observant like this, it won't be long before your meditation becomes a skill."

"தியானம் நன்றாக இருந்தால் மிகவும் குதூகலமடைய வேண்டாம். மோசமாக இருந்தால் மனச்சஞ்சலமும் கொள்ள வேண்டாம். தெளிவாகக் கவனிக்க வேண்டியது: ஏன் தியானம் ஒருநாள் நன்றாக இருந்தது, மறுநாள் மோசமாக இருந்தது என்பதைத்தான். இது போலக் கவனமாக இருந்தாலே, விரைவில் தியானம் செய்வது ஒரு திறமையான கலையாகிவிடும் (நாம் திறமைசாலியாகி விடுவோம்)."

§ "Everything depends on your powers of observation. If they're crude and sloppy, you'll get nothing but crude and sloppy results. And your meditation will have no hope of making progress."

"எல்லாம் உங்கள் கவன சத்திகளைப் பொருத்தே இருக்கிறது. அவை கரடுமுறடாகப் பக்குவ மில்லாமல் இருந்தால், விளைவும் கரடுமுறடாகவே இருக்கும். பின் தியானத்தில் முன்னேறுவதும் கடினம்."

§ One day a young woman was sitting in meditation with Ajaan Fuang and everything seemed to go well. Her mind was clear and relaxed, and she could contemplate the elements in her body as he told her, step by step, with no problem at all. But the next day, nothing went right. After the session was over, he asked her, "How did it go today?"

She answered, "Yesterday I felt as if I were smart, today I feel like I'm stupid."

So he asked her further, "Are the smart person and the stupid person the same person or not?"

ஒரு நாள் ஒரு இளம்பெண் அஜான் ஃபுவாங்குடன் தியானம் செய்து கொண்டிருந்தார். தியானம் மிகச் சிறப்பாகச் சென்றது. அப்பெண்ணின் மனம் மிகவும் தெளிவாகவும் அமைதியாகவும் இருந்தது, தன் உடலின் பூதங்களை (மண், நீர், காற்று, வெப்பம் முதலியன) தனக்கு அவர் கற்பித்தப்படி தெளிவாகப் பிரதிபலிக்க முடிந்தது. ஆனால் அடுத்த நாளோ எதுவும் சரியாக அமையவில்லை.

தியானம் முடிந்த பின் அவர் மாணவியிடம், "இன்று தியானம் எப்படி இருந்தது," என்று கேட்டார்.

அப்பெண், "நேற்று நான் புத்திசாலியாக இருந்ததாகத் தோன்றியது, இன்று முட்டாளாக இருப்பதாக தோன்றுகிறது," என்று பதிலளித்தார்.

அஜான் ஃபுவாங் அவரைக் கேட்ட கேள்வி, "அந்தப் புத்திசாலியும், முட்டாளும் ஒரே நபரா இல்லை வேறு வேறா?"

§ A student came to complain to Ajaan Fuang that she had been meditating for years, and still hadn't gotten anything out of it. His immediate response: "You don't meditate to 'get' anything. You meditate to let go."

ஒரு மாணவி அஜான் ஃபுவாங்கிடம் தான் பல வருடங்கள் தியானம் செய்தும் எந்தப் பலனும் அடையவில்லை என்று முறையிட்டார். அஜான் ஃபுவாங்கின் உடனடிப் பதில், "தியானம் செய்வது எதையும் பெறுவதற்காக அல்ல. தியானம் செய்வது சுமந்து கொண்டிருக்கும் பாரங்களை இறக்கி வைக்கத்தான்."

§ The seamstress, after practicing meditation with Ajaan Fuang for several months, told him that her mind seemed more of a mess than it was before she began meditating. "Of course it does," he told her. "It's like your house. If you polish the floor every day, you won't be able to stand the least little bit of dust on it. The cleaner the house, the more easily you'll see the dirt. If you don't keep polishing the mind, you can let it go out and sleep in the mud without any qualms at all. But once you get it to sleep on a polished floor, then if there's even a speck of dust, you'll have to sweep it away. You won't be able to stand the mess."

தையல் வேலை செய்து வாழ்க்கை நடத்தும் மாணவர் ஒருவர் பல மாதங்களாக அஜான் ஃபுவாங்கிடம் தியானம் பயின்றபின், தான் தியானம் செய்வதற்கு முன் இருந்ததைவிடத் தனது மனம் மேலும் அழுக்கான நிலையில் (குழப்பத்தில்) இருப்பதாகக் கூறினார். "அது எதிர்பார்க்க வேண்டியதுதான்," என்று பதிலளித்தார் அஜான் ஃபுவாங். "இது உங்கள் வீட்டைப்போல. தினசரி வீட்டைப் பெருக்கித் துடைத்து வைத்திருந்தால், அதில் கொஞ்சமும் அழுக்குப் படிவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள். வீட்டைச் சுத்தம் செய்யச் செய்ய சிறிது குப்பை இருந்தாலும் அதை நம்மால் சகித்துக் கொள்ள முடியாது. மனத்தைத் தூய்மையாக்கவில்லையென்றால் அது எவ்வளவுதான் அழுக்குப் படிந்திருந்தாலும் நம்மைப் பாதிப்பதில்லை. ஆனால் சுத்தமான தரையில் படுத்துப் பழகி விட்டால், ஒரு துளி அழுக்கு இருந்தாலும் உடனே அதைப் பெருக்கித் தள்ள வேண்டும் என்று தோன்றும். கொஞ்சமும் அழுக்கைச் சகித்துக் கொள்ள முடிவதில்லை."

§ "If you get excited by other people's experiences in meditation, it's like getting excited by other people's wealth. And what do you gain from that? Pay attention to developing your own wealth instead."

"மற்றவரின் தியான அனுபவங்களைக் கண்டு நீங்கள் குதூகலமுற்றால், அது மற்றவர் செல்வத்தைக் கண்டு குதூகலமடைவது போலத்தான். அதனால் உங்களுக்கு என்ன இலாபம்? எனவே உங்கள் செல்வத்தை வளர்த்துக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துங்கள்."

§ "Good will and compassion, if they aren't backed up by equanimity, can cause you to suffer. That's why you need the equanimity of jhana to perfect them."

"நல்ல எண்ணம், கருணை, அவற்றோடு நிதானமும் கலந்திருக்காவிட்டால் உங்களுக்குத் துன்பம் உண்டாகலாம். அதனாலேயே 'ஜான' (ஆழ்ந்த மன ஒருமைப்பாடு) தியான நிலைகளினால் உள்ள நிதானம் அவசியம் தேவைப்படுகிறது."

§ "Your concentration has to be Right Concentration: just right, on an even keel, all the time. Whatever you do — sitting, standing, walking, lying down — don't let it have any ups and downs."

"உங்கள் மன ஒருமைப்பாடு சரியான மன ஒருமைப்பாடாக இருக்க வேண்டும்: எல்லா நேரத்திலும் சரி சமமான நிலையில் இருக்க வேண்டும். எதைச் செய்தாலும் - உட்காரும் போதும், நிற்கும் போதும், நடக்கும் போதும், படுத்திருக்கும் போதும் - மன ஒருமைப்பாட்டில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்."

§ "Concentration: You have to learn how to do it, how to maintain it, and how to put it to use."

"மன ஒருமைப்பாடு: அதை எப்படிச் செய்வதென்றும், எப்படிப் பராமரிப்பதென்றும், எப்படிப் பயன்படுத்துவ தென்றும் கற்றுக் கொள்ள வேண்டும்."

§ "Once you catch hold of the mind, it'll stay in the present, without slipping off to the past or future. That's when you'll be able to make it do whatever you want."

"நீங்கள் மனத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தபின், அது நிகழ் காலத்திலேயே இருக்கும். கடந்த காலத்திற்கோ, எதிர் காலத்திற்கோ அது நழுவிச் சென்று விடாது. அப்போதுதான் நீங்கள் விரும்புவதைச் செய்யும் வகையில் அதை நடத்தலாம்."

§ "When you get so that you catch on to the meditation, it's like a kite that finally catches the wind. It won't want to come down."

"தியானத்தோடு பற்றுக் கொள்வதென்பது, பட்டம் விடுவதைப் போல. காற்றினால் மேலே உயர்த்தப் பட்ட பட்டம், பின்னர் தரையிறங்க விரும்புவதில்லை."

§ One evening, after a work party at Wat Dhammasathit, Ajaan Fuang took his lay students up to the chedi to meditate. One woman in the group felt completely exhausted from all the work, but joined in the meditation anyway, out of deference to him. As she sat there, her awareness got weaker and weaker, smaller and smaller, to the point where she thought she was going to die. Ajaan Fuang happened to walk past and said, "There's no need to be afraid of death. You die with every in and out breath."

This gave her the strength to fight off her exhaustion, and to continue meditating.

ஒரு நாள் மாலை வாட் தம்மசாதிட் (Wat Dhammasathit) விகாரையில் பணி செய்ய வந்த ஆட்கள் வேலையை முடித்தபின், அஜான் ஃபுவாங் அவர்களைச் சேதியத்திற்கு தியானம் செய்ய அழைத்துச் சென்றார். அந்தக் குழுவிலிருந்த ஒரு பெண், வேலைப் பளுவின் காரணமாக மிகவும் களைத்திருந்தும், அஜான் ஃபுவாங் மீதிருந்த மரியாதையின் காரணமாகத் தியானம் செய்வதற்கு வந்தார். அங்கு அமர்ந்து தியானம் செய்யும்போது தனது மனக் கவனம் குறைந்து கொண்டே வந்து மிகவும் பலவீனப் பட்டு, ஒரு நிலையில் தான் இறந்துவிடப் போவதாக நினைக்கத் தோன்றியது. அப்போது எதேச்சையாக அருகில் நடந்து வந்த அஜான் ஃபுவாங் அவரிடம், "மரணத்திற்குப் பயப்பட வேண்டியதில்லை. ஒவ்வொரு உள்மூச்சும் வெளிமூச்சும் எடுக்கும்போது நாம் இறக்கிறோம்."

அவர் சொன்னது அந்த மாணவிக்கு ஊக்கமளித்தது. தனது சோர்வை மீட்டு அவர் தொடர்ந்து தியானம் செய்தார்.

§ "To meditate is to practice dying, so that you'll be able to do it right."

"தியானம் செய்வது இறப்பதற்குப் பயிற்சியளிப்பது போல. அது சரியான முறையில் இறப்பதற்குப் பயில் விக்கிறது."

* * * * * * *