காதல் பிறந்த கதை
ஆசிய ஜோதி
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
3. காதல் பிறந்த கதை
"அறிவின் செல்வரே! அமைச்சரே! நீவிர்
அசிதமா முனிவன் அந்நாள் உரைத்ததும்
கனாநூல் கற்றவர் கணித்துச் சொன்னதும்
அறிவீர் என்பதில் ஐயமொன்று இல்லை,
என்னுயி ரனைய என்மகன் உலகில்
என்னுயி ரனைய - என் உயிர் போன்ற
பகைக்குலம் வேரறப் பறித்துக் களைந்து,
மன்னர் மன்னனாய் மணிமுடி சூடித்
தரணி முழுவதும் தனியர சாளுவான்;
என்னுள் விருப்பமும் இதுவே யாகும்.
அன்றேல்,
ஆசையை அடியோடு அகழ்ந்து நீக்கி,
முற்றத் துறந்த முனிவ னாகி,
நாடு விட்டு நகரும் விட்டுக்
காட்டில் சென்று கடுந்தவம் புரிவான்;
பெறுதற் கரிய பெருந்திரு வெல்லாம்
அகழ்ந்து - அகழ்தல் – தோண்டுதல்; திரு – செல்வம்
இகழ்ந்து தவத்தால் எய்திடும் அந்த
இன்பம் யாதோ? யானெதும் அறியேன்.
ஆயினும்,
என்மகன் நோக்கம் இதுவே யாகும்;
அரண்மனைச் செல்வம் அனைத்திலும் ஆசை
சிறிதும் அவன்தன் சிந்தையில் இல்லை.
ஆதலின்,
நீள்நிலம் புரக்கும் நெறியின் மீது அவன்
உள்ளம் திரும்ப உபாயம் இதுவென
ஆய்ந்து நீவிர் அறைதல் வேண்டும்;
நீள்நிலம் - பரந்த நிலம்
நிலம் – பூமி; புரத்தல் – காத்தல்
உபாயம் – முறை, வழி; அறைதல் - சொல்லுதல்
விரும்பிடில் இந்த மேதினி முழுதுமே
ஆளுவான் இவனென்று அறிஞர் அந்நாள்
ஓதிய மொழியும் உண்மை மொழியாய்
நெடுநாள் இங்கு நிலைத்திடல் வேண்டும்,"
என்று மன்னன் இயம்பினன். அதுகேட்டு
மேதினி – பூமி
அமைச்சர் நாயகன் அறமுது கிழவன்
எழுந்து நின்று, "எம் இறைவனே, கேளாய்;
ஈதொரு சிறுநோய்; இந்நோய் நீங்கிடக்
காதலைப் போலொரு கைகண்ட மருந்துஇம்
மேதினி மீது வேறெதும் இல்லை.
மைந்தன் உள்ளம் மங்கையர் மையலில்
திளைத்து மூழ்கச் செய்திடல் வேண்டும்;
அண்ணலே! நின்மகன் அறியாச் சிறுவன்;
மங்கையர் மதிமுக வனப்பின் தன்மையும்
அவர், கருவிழி யாம்கூர்ங் கணையின் கடுமையும்
மையல் – காதல், காமமயக்கம், Infatuation of love
திளைத்தல் - மகிழ்தல், To rejoice
மதிமுக வனப்பின்: மதி – சந்திரன்; வனப்பு – அழகு
கருவிழி யாம்கூர்ங் கணையின் கடுமையும்
கருவிழியாம் - கண்; கூர்ங் கணை - கூரிய அம்பு (பெண்கள் கண்களைக் குறிக்கும்)
கடுமை - தப்பிக்க முடியாத கடுமை
அவர், அதரத் தூறும் அமுதின் இனிமையும்
இந்நாள் வரையிலும் ஈதுஎன அறியான்;
அதனால்,
மனதுக்கு இனிய மனைவிய ரோடு
தோழர் தோழியர் சூழ்ந்திட அவனை
அதரத் தூறும் அமுதின் இனிமையும் - முத்தத்தில் உள்ள இனிமை
அதரம் – உதடு
ஊறும் அமுது – எச்சில்
வாழ வைப்பதே மாண்புறு செயலாம்;
இரும்புத் தொடரையும் எறிந்து செல்லும்
ஆடவர் மனமெனும் மத்த யானைஓர்
மங்கை இட்ட மயிரிழை அதனுக்கு
அடங்கி நின்றிடும்; ஐயமொன்று இல்லை"
தொடர் – சங்கிலி
மயிரிழை - முடி
(பெண்ணின் அன்பு அனைத்தினும் வலிமை மிக்கது)
என்று கூறி இருந்தனன். இதனை
ஆமென்று அனைவரும் ஆமோ தித்தனர்.
அப்பால்,
அரசர்க் கரசன் அமைச்சரை நோக்கி,
"மைந்தனுக் குரிய மங்கையர் மணியினை
யாமே தேர்தல் இசைவில தாகும்;
காதலன் தன்னிரு கண்களால் கண்டு
தேர்ந்து தெளிவதே சீரிய முறையாம்;
மங்கைய ராகிய மலர்கள் நிரம்பிய
நந்த வனத்தில் நடுவே அவனை
நிறுத்தி, "ஐயா! நின்னுளம் விரும்பிய
பருவ மலரைப் பறித்துக் கொள்" எனில்
அவன், இன்பம் அறியா இளைஞன் ஆதலின்,
புன்னகை புரிந்து, புதுமலர் ஒன்றும்
தீண்டாது அப்பால், சென்றிடில் என்செய்வோம்?"
இசைவு - பொறுத்தம்
இசைவில - பொறுத்தமற்றது
என்று கூறினான். இவ்வுரை கேட்ட
அமைச்சருள் ஒருவன் அறிவில் சிறந்தோன்,
"அம்புவி ஆளும் அரச! கேண்மோ!
தொடுசரம் உடலைத் துளைத்திடும் மட்டுமே
முடங்குளைச் சீயம் முழங்கித் திரியும்;
அம்புவி - அம் + புவி - அழகிய உலகம்
கேண்மோ - கேட்பாயாக
தொடுசரம் - தொடுக்கப்பட்ட அம்பு
சரம் - அம்பு
முடங்குளை – பிடரி மயிர், சீயம் - சிங்கம்
மங்கையர் அழகிய மதிமுகம் கண்டு
மயங்கா மனிதர்இவ் வையகத்து இல்லை;
உதய குமரியை ஒத்தஓர் கன்னியின்
மைவிழி கண்டு மயங்குவன் நின்மகன்;
ஐயம் இல்லை; ஆதலின் அடியேன்
செப்பும் காரியம் செய்வது நலமாம்.
விரைவில் இங்கொரு விழாக்கொண் டாடுக;
விழாவுக் காகஇவ் வியனக ரத்துள
அழகிய கன்னியர்க்கு அழைப்பு விடுக்க;
அப்பால்,
உதய குமரி – பூரண சந்திரன்.
வியனக ரத்துள – வியன் + நகரம் – விரிந்த நகரம்
சாக்கிய நாட்டுத் தனிச்சிறப் புடைய
ஆடல் பாடல் அனைத்திலும் அவர்கள்
கற்ற திறனெலாம் காட்டச் செய்க.
செய்தபின்,
அழகில் இளமையில் ஆடல் பாடலில்
சிறந்தவர் தமக்குச் சிற்சில பரிசுகள்
நின், மைந்தன் கையால் வழங்கிடச் சொல்க,
பரிசுகள் பெறஅவன் பக்கம் வந்துசெல்
அழகி எவளால் அவனது திருமுகம்
வாட்டம் நீங்கி மலர்ச்சி பெறுமோ
அவளே ஐய! நம் அரசிளங் குமரன்
வாழ்க்கைக் குரிய மனைவி யாவாள்.
காதல் கொண்டவன் காதற் கண்ணால்
கண்டு தெரிந்த காரிகை யோடு
வாழ விரும்புதல் வையகத்து இயல்பாம்"
காரிகை – பெண்
என்று கூறி இருந்தனன். இதுவே
நன்று நன்றென நவின்றனர் யாவரும்
அப்பால்,
"திக்கெல்லாம் புகழும் திருவோ லக்க
மண்டபம் அதனில் மகிழ்ச்சி தரும்ஓர்
நவின்றனர் - நவில்- சொல்லுதல்
திக்கு - திசை
திருவோலக்க மண்டபம் – பேரவை மண்டபம், (இராஜ சபை)
காட்சி காணக் கருதினன் மன்னன்.
அதனால்,
இந்நாட் டுள்ள எழில்மிகு கன்னியர்
அனைவரும் நாளை அரண்மனைக்கு ஏகுமின்;
அழகிய கன்னியர்க்கு அரசிளங் குமரன்
ஏகுமின், ஏகுதல் – செல்லுதல்
பரிசுகள் பற்பல பரிவொடு வழங்குவன்;
வனப்பில் மிக்க மங்கையர் மணிஇப்
பாரெல்லாம் புகழும் பரிசினைப் பெறுவள்;
ஈதுஎம் இறைவன் இட்ட கட்டளை"
என்று மன்னவன் ஏவலர் ஒருநாள்
பரிவு – அன்பு
வனப்பில், வனப்பு - அழகு
இறைவன் – தலைவன்
பட்டண மெங்கும் பறைகள் சாற்றினர்.
அதுகேட்டு,
அந்நக ரத்துள அழகிய கன்னியர்
வைகறை எழுந்து மஞ்சனம் ஆடி
ஆடை அணிகள் அழகாய் அணிந்து
பறை – முரசுகொட்டி அறிவித்தல்
வைகறை – விடியற் காலம்.
மஞ்சனம் – நீராடுதல், குளித்தல்.
கூந்தல் வாரிக் கொண்டை முடித்து
மல்லிகை முல்லை மாலை சூடி
வடிவேல் விழிக்கு மையும் இட்டுத்
திருந்திய நெற்றியில் திலகமும் தொட்டுச்
சிற்றடி சிறந்திடச் செம்பஞ்சும் ஊட்டி,
வடிவேல் விழிக்கு - அம்பு போன்ற கண்களுக்கு
திருந்திய நெற்றியில் – ஒழுங்கு படுத்திய நெற்றியில்
செம்பஞ்சு – ஒரு பருத்தி வகை – செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு.
செம்பஞ்சால் பாதங்களில் படம் வரைதல்
மணவறை ஏறும் மங்கையர் போல
மன்னவன் கோயில்முன் வந்து கூடினர்.
அந்நாள்,
பொற்சிங் காதனம் பொலிவுற அமர்ந்த
அரசிளங் குமரனை அஞ்சன விழிகள்
பொற்சிங் காதனம் பொலிவுற - பொண்ணில் செய்யப்பட்ட சிம்மாசனம்
அஞ்சன விழிகள் - மையிட்ட விழிகள்
நிமிர்ந்து நோக்காது நிலத்தையே நோக்க,
வரிசையாய் மங்கையர் வந்து வந்து,
பரிசுகள் பெற்றுப் பணிந்துசெல் காட்சி,
யாவரும் நோக்கி இன்புறற்கு உரியதாம்.
வந்த கண்ட மங்கையர் உள்ளம்ஓர்
இன்புறற்கு - இன்பம் - உறுதற்கு (அடைதற்கு)
நிலையில் நில்லாது அலையச் செய்தது
திருவளர் செல்வன் திருமுகப் பொலிவோ!
அப்பால் யாதோ? அறிபவர் யாரே?
மன்னர் மகனோ, மனத்தில் சலனம்
யாதும் இன்றி இருந்தனன்; அவன் முகம்
மங்கையர் உள்ளம் ஒரு நிலையில் நில்லாது அலை
பாய்ந்து கொண்டிருந்தது. அதற்கான காரணத்தை யாரே அறிவர்?
சலனம் – அசைவு
சாந்தமும் அமைதியும் தண்ணிய அருளும்
தவமும் காட்சியே தந்தது; ஆயினும்,
அவன், கன்னியர்க்கு எட்டாக் கனியே ஆயினன்.
கூடி நின்றவர் குமரி ஒருத்தியை,
"இவள், அழகிற் சிறந்தவள்; ஐயமில்லை,
தண்ணிய அருளும் –கருணையுடைய அருளும்
அரசிளங் குமரன் அன்பிற்கு உரியாள்
இவளே யன்றிவேறு யாவரும் உளரோ?"
என்று புகழுரை இயம்பவே; அதனால்
மங்கை அவளும் மனந்தடு மாறி
நடுக்க முற்றஓர் நவியே போல
நவியே - சித்தம் கலைந்தவள் போன்று
அரியா சனத்தின் அருகில் சென்றும்
வழங்கும் பரிசினை வாங்கிடாது ஓடிச்
சேடிய ரோடு சேர்ந்து நின்றனள்.
அத்தனை ஜோதி! அத்தனை மகிமை!
அத்தனை தெய்வ அருட்கலை பொலிந்தது
சேடிய ரோடு - தோழிகளோடு,
அருட்கலை - அருள் பொதிந்த அழகு
அரசிளங் குமரன் அழகிய திருமுகம்!
இவ்வாறு அந்நகர் எழிலுறு மங்கையர்
ஒருவர்பின் ஒருவராய் உலகாள் மன்னவன்
மைந்தனைக் கண்டு வணங்கிச் சென்றனர்.
இருந்த பரிசுகள் யாவும் மீதி
எழிலுறு – அழகு படைத்த, gracefulness
உதவப் பட்டன – கொடுக்கப் பட்டன.
ஒன்றுமே யில்லாது உதவப் பட்டன.
அப்பால்,
அங்கையற் கண்ணி அழகின் செல்வி
திங்களைப் பழிக்கும் திருமுக விலாசினி
பங்கய மீதெழாப் பாக்கிய லட்சுமி
அங்கையற் கண்ணி - (அம் - அழகிய + கயல் - மீன் + கண்ணி – கண் படைத்தவள்) –
அழகிய மீன் போன்ற கண்களை உடையவள் (அன்னை மீனாட்சி போன்றவள்)
திங்களைப் பழிக்கும், திங்கள் - சந்திரன்
விலாசினி - பெண்
பங்கய மீதெழாப் பாக்கிய லட்சுமி - தாமரையில் வீற்றிருப்பவள் திருமகள்.
இவளோ தாமரை மீது வீற்றிராவிடினும் அவளையொத்த சிறப்புடையவள்,
யசோதரை என்னும் யெளவன குமாரி
நேரெதி ராக நிமிர்ந்து நோக்கி
வருவது கண்டு மன்னர் மகனும்
திடுக்கிட்டு உள்ளம் திகைப்புக் கொண்டனன்.
இதனை, பக்கம் நின்ற பலருங் கண்டனர்.
யெளவனம் - இளமை, யெளவனப் பருவம்
இவள் "எனக்குப் பரிசேதும் ஈவதற்கு இல்லையோ?"
என்று கூறி இன்னகை புரிந்தனள்.
"இருந்த பரிசுகள் யாவும் போயின;
ஈவதற்கு – கொடுப்பதற்கு
ஆயினும்
மாநகர் போற்றும் மங்கையர் மணியே!
இதனைப் பரிசாய் ஏற்றுக் கொள்" எனத்
தன், மார்பிற் கிடந்த மரகத மாலையைக்
கழற்றி யசோதரைக் கன்னியின் அழகிய
திருவரை சுற்றிச் சேர்ந்து கட்டினன்.
கட்டவே,
மரகதம் – பச்சைமணி, emerald
திருவரை சுற்றி – இடையைச் சுற்றி
கண்களும் கண்களும் கலந்து பேசின.
கண்களும் கண்களும் கலந்து
பேசின பேச்சில் பிறந்தது காதலே!
Which the King marking, called his Ministers:
“Bethink ye, sirs! how the old Rishi spake,”
He said, “and what my dream-readers foretold.
This boy, more dear to me than mine heart’s blood,
Shall be of universal dominance,
Trampling the neck of all his enemies,
A King of kings
and this is in my heart
Or he shall tread the sad and lowly path
Of self-denial and of pious pains,
Gaining who knows what good, when all is lost
Worth keeping; and to this his wistful eyes
Do stil incline amid my palaces.
But ye are sage, and ye will counsel me;
How may his feet be turned to that proud road
Where they should walk, and all fair signs come true
Which gave him Earth to rule, if he would rule?”
“Light of Asia”, by Sir Edwin Arnold - Book the Second
The eldest answered, “Maharaja! love
Will cure these thin distempers; weave the spell
Of woman’s wiles about his idle heart.
What knows this noble boy of beauty yet,
Eyes that make heaven forgot, and lips of balm?
Find him soft wives and pretty playfellows;
The thoughts ye cannot stay with brazen chains
A girl’s hair lighty binds.”
And all thought good,
But the King answered, “If we seek him wives,
Love chooseth oft-times with another eye;
And if we bid range Beauty’s garden round,
To pluck what blossom pleases, he will smile
And sweetly shun the joy he knows not of.”
Then said another, “Roams the barasingh
Until the fated arrow flies; for him,
As for less lordly spirits, some one charms,
Some face will seem a Paradise, some form
Fairer than pale Dawn when she wakes the world.
This do, my King! Command a festival
Where the realm’s maids shall be competitors
In youth and grace, and sports that Sàkyas use.
Let the Prince give the prizes to the fair,
And, when the lovely victors pass his seat,
There shall be those who mark if one or two
Change the fixed sadness of his tender cheek;
So we may choose for Love with Love’s own eyes,
And cheat his Highness into happiness.”
“Light of Asia”, by Sir Edwin Arnold - Book the Second
This thing seemed good; wherefore, upon a day
The criers bade the young and beautiful
Pass to the palace, for ’twas in command
To hold a court of pleasure, and the Prince
Would give the prizes, something rich for all,
The richest for the fairest judged. So flocked
Kapilavastu’s maidens to the gate,
Each with her dark hair newly smoothed and bound,
Eyelashes lustred with the
soorma-stick,
Fresh-bathed and scented; all in shawls
and cloths
Of gayest; slender hands and feet new-stained
With crimson, and tilka-spots
stamped bright.
Fair show it was of all those Indian girls
Slow-pacing past the throne with large black eyes
Fixed on the ground, for when they saw the Prince
More than the awe of Majesty made beat
Their fluttering hearts, he sate so passionless,
Gentle, but so beyond them. Each maid took
With down-dropped lids her gift, afraid to gaze;
And if the people hailed some lovelier one
Beyond her rivals worthy royal smiles,
She stood like a scared antelope to touch
The gracious hand, then fled to join her mates
Trembling at favour, so divine he seemed,
So high and saint-like and above her world.
Thus filed they, one bright maid after another,
The city’s flowers, and all this beauteous march
Was ending and the prizes spent, when last
Came young Yasodhara, and they that stood
Nearest Siddhàrtha saw the princely boy
Start, as the radiant girl approached. A form
Of heavenly mould; a gait like Parvati’s;
Eyes like a hind’s in love-time, face so fair
Words cannot paint its spell; and she alone
Gazed full folding her palms across her breasts
On the boy’s gaze, her stately neck unbent.
“Is there a gift for me?” she asked, and smiled.
“The gifts are gone,” the Prince replied, “yet take
This for amends, dear sister, of whose grace
Our happy city boasts;” therewith he loosed
The emerald necklet from his throat, and clasped
Its green beads round her dark and silk-soft waist;
And their eyes mixed, and from the look sprang love.
“Light of Asia”, by Sir Edwin Arnold - Book the Second
* * * * * *