எளிமையாகச் சொல்வதென்றால்..4

எளிமையாகச் சொல்வதென்றால்

In Simple Terms

108 அற உவமானங்கள்

போற்றுதற்குரிய அஜான் சா

108 Dhamma Similes by Ajahn Chah

55. The Millipede Top

When lots of us come to live together, it's easy to practice if our views are correct and in line with one another. When we're willing to bend and abandon our pride in the same way, we all come together at the level of the Buddha, Dhamma, and Sangha. You can't say that having a lot of monks interferes with your practice. It's kind of like a millipede. A millipede has lots of legs. When you look at it, you think that it's sure to get all confused with so many legs. But it walks. It walks back and forth, and there's really no confusion. It has its rhythm, its order.

It's the same with the Buddha's teachings: If you practice like a disciple of the Buddha, it's easy. In other words, you practice rightly, practice straightforwardly, practice to gain release from suffering, and practice correctly. Even if there are hundreds of us, thousands of us, however many of us, it doesn't matter. We can all fall into the same current.

மரவட்டை

பலரும் ஒன்று கூடிவாழும் இடத்தில், நமது கருத்துக்கள் ஒருவருக்கொருவர் உடன்பட்டிருந்தால் பயிற்சி செய்வது சுலபம். நமது அகம்பாவத்தை ஒன்று போல வளைத்துக் கைவிட விருப்பமிருக்கும் போது நாம் அனைவரும் புத்த, தம்ம சங்க அளவில் ஒன்று கூடுகிறோம். பல துறவிகள் இருப்பதால் உங்கள் பயிற்சி தடைப்படுகிறது என்று சொல்ல முடியாது. இது ஒரு மரவட்டையைப்போல. மரவட்டைக்குப் பல கால்கள் உண்டு. அதைப் பார்க்கும் போது கண்டிப்பாக அத்தனை கால்கள் இருப்பதால் அது தடுமாறிக் குழம்பிப் போய்விடும் என்று நினைக்கலாம். ஆனால் அது நடக்கிறது. முன்னும் பின்னும் நடக்கிறது. குழப்பம் ஏதும் இல்லாமல் நடக்கிறது. அதற்கென்று ஒரு தாளலயமும், ஒழுக்கமும் இருக்கிறது.

புத்தரின் போதனைகளும் அப்படித்தான்: புத்தரின் சீடர் வழியில் பயின்றால் அதைப் பயில்வது சுலபம். அதாவது சரியாகப் பயின்றால், நேரடியாகப் பயின்றால், துக்கத்திலிருந்து விடுபடுவதற்கென்று பயின்றால், முறையாகப் பயின்றால். நூற்றுக்கணக்கானோர் இருந்தாலும், ஆயிரக்கணக்கானோர் இருந்தாலும் எத்தனை பேர் இருந்தாலும் அதில் பிரச்சனை ஏதும் இல்லை. நாம் அனைவரும் ஒரே வழியில் செல்வோம்.

56. Sweeping Top

Our routines give us lots of strength. Wherever in the monastery you can do them - regardless of whether it's your own hut or someone else's: If it's dirty or messy, straighten it out. You don't have to do it for anyone's sake. You don't have to do it to impress anyone. You do it for the sake of your practice. When we sweep our huts, sweep our buildings, it's as if we sweep all the dirty things out of our hearts, because we're people who practice. I want each of us to have this attitude in our hearts. Then we won't have to ask for harmony or cooperation. It'll already be there.

பெருக்குதல்

நமது அன்றாட நடவடிக்கைகள் நமக்குப் பெரும் சக்தியைத் தருகின்றன. விகாரையில் எங்கு இருந்தாலும் அவற்றைச் செய்யலாம் - உங்களது குடிலாக இருந்தாலும், மற்றவர் குடிலாக இருந்தாலும்: அது குப்பை கூலங்களோடு அல்லது அங்கு தாறுமாறாகப் பொருட்கள் கிடந்தால், அவற்றை சுத்தப் படுத்துங்கள், சீர்ப் படுத்துங்கள். வேறு ஒருவருக்காக அதைச் செய்யத் தேவையில்லை. மற்றொருவருக்கு உங்கள் மீது நல்லெண்ணம் ஏற்படும் என்பதற்காகச் செய்யத் தேவையில்லை. உங்கள் பயிற்சிக்கெனச் செய்ய வேண்டும். உங்கள் குடில்களைப் பெருக்குவதும், நமது கட்டிடங்களைப் பெருக்குவதும் நமது உள்ளத்திலிருந்து அழுக்கைப் போக்குவது போல, ஏனென்றால் நாம் பயிற்சி செய்வோர். உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இந்த எண்ணம் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். பின் நாம் ஒற்றுமை, ஒத்துழைப்பு போன்றவற்றைக் கேட்கத் தேவையில்லை. அது ஏற்கனவே தோன்றியிருக்கும்.

57. Planting Peppers Top

The Buddha our Teacher said that the way things go is up to them. If we stick with our effort in the practice, we can't control whether it'll go quickly or slowly. It's like planting a pepper tree. The tree knows what it's doing. If we want it to grow fast, we have to know that that's an affair of delusion. If we want it to grow slowly, we have to know that that's an affair of delusion. Only when we actually plant it will we get the fruit that we want.

When we plant a pepper tree, our duty is to dig the hole, give the tree water, give it fertilizer, get rid of the insects for it. That's all. That's what depends on us, depends on our conviction. As for whether the peppers will appear or not, that's up to the tree. It's not up to us. We can't pull on the tree to make it grow.

மிளகு பயிரிடுவது

நமது ஆசானான புத்தர் காரியங்கள் நடைபெறுவது அவ்வவற்றைப் பொருத்தே இருக்கிறது என்றார். நமது பயிற்சியைத் தொடர்ந்து சரியாகச் செய்து வந்தாலும், பயிற்சியின் முன்னேற்றம் மெதுவாக இருக்குமா அல்லது வேகமாக இருக்குமா என்பது நமது கட்டுப் பாட்டில் இல்லை. இது ஒரு மிளகு மரத்தை நடுவது போல. மரத்திற்கு, தான் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அது வேகமாக வளர வேண்டும் என்று நாம் விரும்பினால், அது ஒரு அறியாமை சம்பந்தப்பட்ட செயல் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது மெதுவாக வளர வேண்டும் என்று நாம் விரும்பினால், அதுவும் ஒரு அறியாமை சம்பந்தபட்ட செயல் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மரத்தை நட்ட பின்பு தான் நாம் விரும்பும் பலன் நமக்குக் கிடைக்கும்.

ஒரு மிளகு மரத்தை நடும்போது, நமது கடமை குழி தோண்டி, மரத்திற்கு நீர் பாய்ச்சி, உரம் வைத்து, அதனைப் பாதிக்கும் புழு, பூச்சிகளை அப்புறப் படுத்துவது. அவ்வளவுதான் நம் பொறுப்பு, நமது விருப்பத்தை பொருத்தது. மிளகு தோன்றுமா தோன்றாதா என்பது மரத்தை பொருத்து இருக்கிறது. அது நம் கையில் இல்லை. அந்த மரத்தை இழுப்பதால் அது நீண்டு விரைவாக வளரப் போவதில்லை.

58. The Way to the Monastery Top

Virtue, concentration, and discernment: These three things the Buddha called a path. The path isn't the religion, and it's not what the Buddha really wanted, but they're the way we get there.

It's the same as your coming from Bangkok to Wat Nong Pah Pong. You didn't want the road coming here. You wanted to reach the monastery instead. But the road was needed for you to get here. The road coming here isn't the monastery. It's just the road to the monastery. You have to follow the road to get to the monastery.

Virtue, concentration, and discernment are the road to peace, which is what we really want.

விகாரைக்குச் செல்லும் வழி

ஒழுக்கம், ஒருக்கம் மற்றும் விவேகம்: இவை மூன்றையும் புத்தர் மார்க்கம் என்றார். பாதை மதம் அல்ல. புத்தர் இதை வேண்டவில்லை, ஆனால் மார்க்கம்தான் நாம் போக வேண்டிய இடத்துக்கு இட்டுச் செல்லும்.

பாங்கோக் நகரிலிருந்து இந்த வாட் நோங் பா போங்கிற்கு (விகாரையின் பெயர்) நீங்கள் வருவது போல. நீங்கள் வந்த சாலை உங்கள் விருப்பமல்ல. நீங்கள் விரும்பியது விகாரைக்கு வரவேண்டுமென்பது. ஆனால் இங்கு வருவதற்குச் சாலை தேவைப் பட்டது. இங்கு வரும் சாலை விகாரையல்ல. விகாரைக்கு இட்டுச் செல்லும் பாதை மட்டுமே. சாலையைத் தொடர்ந்து விகாரைக்கு வரலாம்.

ஒழுக்கம், ஒருக்கம் மற்றும் விவேகம் அமைதிக்கு எடுத்துச்செல்லும் மார்க்கம். நீங்கள் வேண்டுவது அமைதியைத்தான்.

59. Medicine Top

...It's like a doctor handing a bottle of medicine to a patient with a fever. On the outside of the bottle is a label telling the different diseases the medicine can cure. As for the medicine that cures the diseases, it's inside the bottle. If the patient spends all his time reading the label - even if he reads it a hundred times, a thousand times - he'll end up dying and never get any benefit out of the medicine. He'll then go around making a big fuss, complaining that the doctor is bad, the medicine can't cure the diseases it's claimed to cure, even though he never opened the cap on the bottle to take the medicine.

மருந்து

..காய்ச்சல் உள்ள நோயாளிக்கு மருத்துவர் ஒரு பாட்டில் மருந்து தருவது போல. பாட்டிலின் வெளியில் மருந்து குணப்படுத்தக்கூடிய நோய்கள் அச்சிடப்பட்டுள்ளன. அந்த நோய்களைக் குணப்படுத்தக்கூடிய மருந்து பாட்டிலின் உள்ளே உள்ளது. நோயாளி பாட்டிலின் வெளியே அச்சிடப் பட்டதை நீண்ட நேரம் படித்தாலும் - நூறு தடவை படித்தாலும், ஆயிரம் தடவை படித்தாலும், மருந்தைச் சாப்பிடாதவரை - அந்த மருந்தினால் எந்தப் பயனும் பெறாமல், இறந்தும் விடக் கூடும். ஆனால் நோயாளி, எல்லோரிடமும் முறையிடுகிறார். வைத்தியர் சரியில்லை, மருந்து சொன்னபடி எந்த நோயையும் குணப்படுத்தவில்லை என்று. உண்மையில் அவர் மருந்தை எடுக்க அந்தப் பாட்டிலின் மூடியைக்கூடத் திறக்கவில்லை.

60. Rubbing Fire Sticks Top

The practice is like a man rubbing fire sticks together. He's heard people say, "Take two pieces of bamboo and rub them together, and you'll get fire." So he takes two pieces of bamboo and rubs them together. But his heart is impatient. After rubbing them together a bit he wants there to be fire. His heart keeps pushing for the fire to come quickly, but the fire just won't come. He starts getting lazy, so he stops to rest. Then he tries rubbing the sticks together again for a little bit, and then stops to rest. Whatever warmth there was disappears, because the warmth isn't connected.

If he keeps acting like this, stopping whenever he gets tired - although just being tired isn't so bad: His laziness gets mixed in too, so the whole thing goes to pieces. He decides that there is no fire, he doesn't want fire after all, so he gives up. He stops. He won't rub the sticks anymore. Then he goes about announcing, "There is no fire. You can't get it this way. There is no fire. I've already tried."

குச்சிகளை உரசி தீ உண்டாக்குவது

ஒருவர் தீ உண்டாக்க இரண்டு குச்சிகளை உரசுவது போலத்தான் பயிற்சியும். "இரண்டு மூங்கில் குச்சிகளை எடுத்து, அவற்றை ஒன்றோடு ஒன்று உரசினால் தீ உண்டாகும்." என மற்றவர்கள் சொல்லக் கேள்விப்பட்ட ஒருவர், இரண்டு மூங்கில் குச்சிகளை எடுத்து அவற்றை உரசுகிறார். ஆனால் அவருக்குப் பொறுமை இல்லை. சிறிது நேரம் உரசிய பின் தீ பற்ற வேண்டும் என்று விரும்புகிறார். அவர் உள்ளம் விரைவில் தீ உண்டாக வேண்டும் என்று அவசரப்படுகிறது. ஆனால் தீ இன்னமும் உண்டாகவில்லை. சோம்பல் பட்டு உரசுவதை நிறுத்தி விடுகிறார். பின் மீண்டும் சிறிது நேரம் கழித்து மூங்கில்களை உரசத் தொடங்குகிறார். பின் மீண்டும் ஓய்வெடுக்கிறார். மூங்கிலில் உண்டான சூடும் அவர் ஓய்வெடுக்கும் போது மறைந்து விடுவதால் தீ உண்டாகக்கூடிய சூடு ஏற்படுவதில்லை.

இவ்வாறு அவர் நடந்து கொண்டால், களைப்பு ஏற்படும் போதெல்லாம் ஒய்வெடுத்துக் கொண்டால் - களைப்பாறுவதில் தவறில்லையென்றாலும், சோம்பலும் இதில் கலந்திருப்பதால் - அவரால் காரியத்தை முடிக்க முடிவதில்லை. இந்த வழியில் நெருப்பு உண்டாகாது என்ற முடிவுக்கு வந்து, நெருப்பே தேவை இல்லை என்றும் முடிவு செய்து முயற்சி செய்வதையே விட்டு விடுகிறார். மேலும் அவர் அக்குச்சிகளை உரசப் போவதில்லை. பின் எல்லோரிடமும், "நெருப்பேதும் இல்லை. இவ்வாறு நெருப்பைப் பெற முடியாது. நெருப்பில்லை. நான் ஏற்கனவே முயற்சி செய்து பார்த்து விட்டேன்," என்று கூறுகிறார்.

61. The Key of Meditation Top

Practice is like a key, the key of meditation. It doesn't matter what the lock is like, for we have the key to the lock in our hand. We don't care how tight the lock may be, for whenever we turn the key to open the lock we accomplish our purpose. If the lock doesn't have a key, we can't accomplish our purpose. Whatever's locked in the box, we can't get it out.

தியானம் என்ற சாவி

பயிற்சி ஒரு சாவியைப்போல, தியானம் என்ற சாவி. பூட்டு எப்படிப் பட்டதாக இருந்தாலும் சரி, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் நம்மிடம் சாவி உள்ளது. பூட்டு எவ்வளவு இறுக்கமானதாக இருந்தாலும் கவலையில்லை, ஏனென்றால் பூட்டைத் திறக்க சாவியைத் திருப்பும் போது நாம் செய்ய வேண்டியதைச் செய்து விடுகிறோம். பூட்டுக்கு சாவியில்லையென்றால் நாம் விரும்பியதைச் செய்ய முடியாது. பூட்டப் பட்டிருக்கும் பெட்டியிலிருந்து நாம் எடுக்க விரும்புவதை எடுக்கவும் முடியாது.

62. Hot and Cold Top

...It's the same as wherever fire is burning, wherever it's hot, that's where it goes out. Wherever it's hot, you make it cool right there. In the same way, nibbana lies in the same place as samsara, the round of wandering-on; samsara lies in the same place as nibbana.

Just as hot and cold lie in the same place: Cold lies where it's hot. When it gets hot, the cold disappears. When the cold disappears, it gets hot...

சூடும் குளிரும்

...நெருப்பு எரியும் இடத்தில், சூடிருக்கும் இடத்தில் தான் அது மறையவும் முடியும். சூடான இடத்திலேயே குளுமைப் படுத்த வேண்டும். அது போல நிப்பாணமும் சம்சாரத்திலேயே - பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலேயே - உள்ளது; சம்சாரமும் நிப்பாணம் இருக்கும் இடத்திலேயே உள்ளது.

சூடும், குளிரும் ஒரே இடத்திலிருப்பது போல: சூடு இருக்கும் இடத்தில் குளுமை உள்ளது. சூடாகும் போது குளுமை மறைகிறது. குளுமை மறையும் போது சூடு தோன்றுகிறது.

63. Against the Flow Top

To practice is to go against the flow: against the flow of the currents in our heart, against the flow of defilement. Anything that goes upstream against the flow is bound to be hard. If you row a boat upstream, it's hard. To build goodness and virtue is a little bit hard because we people have defilements. We don't want to do it. We don't want to be bothered. We don't want to build endurance. We want for the most part to let things flow in line with our moods. Like water: It flows in line with its ways. If we let things flow in line with the water, it's easy but it's not practice. With practice you have to resist. You have to resist defilement, resist your own heart, force your own heart, increase your powers of endurance. That's when your practice will go against the flow.

எதிர் நீச்சல்

நமது பயிற்சி நீரோட்டத்திற்கு மாறாக எதிர் நீச்சல் போடும் பயிற்சியாகும்: உள்ளம் போக விரும்பும் திசைக்கு எதிராக, மாசுகளுக்கு எதிராக, ஓட்டத்திற்கு எதிராகப் போக வேண்டிய பாதை கடினமாகத்தான் இருக்கும். ஓடத்தை நீரின் ஓட்டதிற்கு எதிராகச் செலுத்தத் துடுப்புப் போடுவது கஷ்டம் தான். நல்லது செய்வதும் ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வதும் கொஞ்சம் கஷ்டம் தான். ஏனென்றால் மக்களிடம் மாசுகள் உள்ளன. அதைச் செய்வதற்கு நாம் விரும்புவதில்லை. தொந்தரவுபட விரும்புவதில்லை. எதிர்ப்புச் சக்தியை வளர்க்க விருப்பமில்லை. நமது மனநிலைகளுக்கு ஒப்ப செயல்கள் நடக்க விரும்புகிறோம். நீரைப்போல: அது அதன் வழிக்குத் தகுந்தார்போல ஓடுகிறது. நீரோட்டத்தின் படி நாமும் செய்வது சுலபம், ஆனால் அது பயிற்சியாகாது. பயிற்சி செய்யும் போது எதிர்க்க வேண்டும். மாசுகளை எதிர்க்க வேண்டும், உள்ளத்தை எதிர்க்க வேண்டும், உள்ளத்தைக் கட்டுப் படுத்திச் சகித்துக் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் உங்கள் பயிற்சி ஓட்டத்திற்கு எதிராகச் செல்லும்.

64. The Cat Top

Defilements are like cats. If you give a cat something to eat whenever it wants, it'll keep coming back more and more often. But the day will come when it'll scratch you if you don't feed it. So you don't have to feed it. It'll keep meowing and meowing, but if you don't feed it for a day or two, it'll stop coming back.

It's the same with the defilements. If you don't feed them, they won't bother you. Your mind can then settle down and be still.

பூனை

மாசுகள் பூனைகளைப்போல. பூனை விரும்பும் உணவை வேண்டும்போதெல்லாம் அதற்குத் தந்தால், அது திரும்பத் திரும்ப அடிக்கடி உங்களிடமே வரும். ஆனால் அப்படிப் பழக்கப்பட்ட பூனைக்கு உணவைத் தரவில்லை என்றால் ஒரு நாள் உங்களை நகத்தால் கீறிப் பிராண்டி விடும். எனவே அதற்கு உணவளிக்கத் தேவையில்லை. அது மியோவ் மியோவ் என்று கூச்சலிட்டாலும், ஓரிரு நாட்களுக்கு உணவளிக்கவில்லை யென்றால், உங்களிடம் அது திரும்ப வராது.

மாசுகளும் அதுபோலத்தான். அதற்கு உணவளிக்கவில்லையென்றால் உங்களைத் தொந்தரவு செய்யாது. பின் உங்கள் மனம் அடங்கி அமைதியாகும்.

65. Work First, Wages Later Top

Some people come and practice to get nothing but pleasure. But what does pleasure come from? What is its cause? All forms of pleasure have to come following from pain. Only then can there be pleasure. Whatever we do: We have to work first before we get the wages to buy things, don't we? We have to work in the fields before we get rice to eat. Everything has to go through pain and suffering first.

வேலை முதலில், கூலி பின்னர்

சிலர் பயிற்சி செய்ய வருவது, இன்பத்தை நோக்கமாகக் கொண்டுதான். ஆனால் இன்பம் எங்கிருந்து வருகிறது? அதன் காரணம் என்ன? இன்பத்தின் எல்லாத் தோற்றங்களும் துன்பத்தின் பின்னரே வரும். அதன் பின் தான் இன்பம் தோன்றும். நாம் என்ன செய்தாலும்: முதலில் நாம் வேலை செய்தபின்தான் பொருட்கள் வாங்கச் சம்பளம் கிடைக்கிறது. அல்லவா? வயலில் வேலைசெய்த பின்னரே சாப்பிட அரிசி கிடைக்கிறது. எல்லாவற்றிலும் முதலில் துன்பமும், துயரமும் அனுபவிக்க வேண்டும்.

66. Eating Sugarcane Top

Have you ever eaten sugarcane? When you eat from the tip to the base, what is it like? The closer you get to the base, the sweeter it becomes — to the point where even when there's only an inch left, you don't want to throw it away. It seems such a waste. The ants want to eat it but you won't let them have it.

So let your practice be like that. Practice the Dhamma like a person eating sugarcane.

கரும்பைச் சுவைப்பது

நீங்கள் எப்போதாவது கரும்பு சாப்பிட்டிருக்கின்றீர்களா? நுனிக்கரும்பிலிருந்து அடிக்கரும்புவரை சாப்பிடும் போது, அது எப்படி இருந்தது? அடிக்கரும்புக்கு அருகில் வர வர. இனிப்பு அதிகரிக்கிறது - எந்த அளவிற்கு என்றால் ஒரு அங்குலம் மீதம் இருந்தால் கூட அதை வீசியெறிய மனம் வருவதில்லை. வீணாக்க விரும்புவதில்லை. எறும்புகள் அந்தக் கரும்பைத் தின்ன விரும்புகின்றன, ஆனால் உங்களுக்கு அந்தச் சிறு துண்டையும் எறும்புகளுக்கு விட்டுக் கொடுக்க மனம் வருவதில்லை.

எனவே உங்கள் பயிற்சியும் அதுபோலவே இருக்கட்டும். கரும்பு சாப்பிடுபவரைப்போல தம்மத்தையும் பயிலுங்கள்.

67. The Fence Top

As for the practice, start out by establishing your powers of endurance and then contemplate. Contemplate your activities, your comings and goings. Contemplate what you're up to. Whatever arises, the Buddha has us know all around. Whatever direction things come in from, he has us know all around. If we know all around, whatever comes in this way, we see it. Whatever comes in that way, we see it. Right we know. Wrong we know. Happy we know. Glad we know. We know all around.

But our minds, when they contemplate, aren't yet all around. We know just this side but leave that side wide open. It's like putting a fence around a field or around a house but it doesn't go all around. If we put it up just on that side, thieves will come in this side, the side that the fence hasn't gone around. Why is that? We haven't closed the gate. Our fence isn't yet good. So it's normal that they'll have to come through that opening. So we contemplate again, adding more fence, closing things off, continually.

Putting up a fence means establishing mindfulness and always being alert. If we do this, the Dhamma won't go anywhere else. It'll come right here. Good and bad, the Dhamma we should see and should know, will arise right here.

வேலி

பயிற்சியைப் பொருத்தவரை, உங்கள் சகிப்புத் தன்மையை முதலில் நிலை நாட்டுங்கள். பின் பிரதிபலியுங்கள். உங்கள் நடவடிக்கைகளையும், வருவதையும், போவதையும் பிரதிபலிக்க வேண்டும். நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதைப் பிரதிபலிக்க வேண்டும். எது தோன்றினாலும், புத்தர் அவற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ளுமாறு கற்பித்தார். எந்தத் திசையிலிருந்து வந்தாலும், அவற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ளச் சொன்னார். நமக்கு முழுமையாகத் தெரிந்தால் ஒரு திசையிலிருந்து எது வந்தாலும் அதைத் தெரிந்து கொள்வோம். வேறு திசையிலிருந்து எது வந்தாலும் அதையும் தெரிந்து கொள்வோம். சரியானதைத் தெரிந்து கொள்வோம். தவறானதையும் தெரிந்து கொள்வோம். மகிழ்ச்சியானதைத் தெரிந்து கொள்வோம். திருப்தியானதைத் தெரிந்து கொள்வோம். நாம் முழுமையாக அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.

ஆனால் நமது மனம், அவற்றைப் பிரதிபலிக்கும் போது, இன்னும் முழுமையாக இருப்பதில்லை. நமக்கு ஒரு பக்கமே தெரிகிறது. மற்ற பக்கத்தைத் திறந்து விட்டு விடுகிறோம். இது வயலையோ வீட்டையோ சுற்றி வேலி போடுவது போல. ஆனால் வீட்டைச் சுற்றி வேலி போடாமல் ஒரு பக்கம் மட்டுமே போட்டால், வேலி இல்லாத மறு பக்கத்திலிருந்து திருடர்கள் வரக்கூடும். ஏன் அப்படி? நமது வேலி சரியாகப் போடப் படவில்லை. வேலியில் உள்ள வாயிலை நாம் மூடவில்லை. திறந்திருப்பதால் திறந்த வழியில் திருடர்கள் வருவது நடக்கக் கூடியது தான். எனவே நாம் மேலும் பிரதிபலிக்க வேண்டும், மேலும் வேலியை ஒழுங்குபடுத்தி முழுமையாக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

வேலி போடுவதென்றால் மனக்கவனத்தை உறுதி செய்து விட்டு எப்போதும் தெரிந்த நிலையில் இருப்பதுதான். இவ்வாறு செய்தால் அறம் வேறு எங்கும் செல்லாது. இங்கேயே இருக்கும். நல்லதானாலும் தீயதானாலும், நாம் பார்க்க வேண்டிய அறம், தெரிந்து கொள்ள வேண்டிய அறம் இங்கேயே எழும்.

68. In the Shape of a Circle Top

In practicing, don't think that you have to sit in order for it to be meditation, that you have to walk back and forth in order for it to be meditation. Don't think like that. Meditation is simply a matter of practice. Whether you're giving a sermon, sitting here listening, or going away from here, keep up the practice in your heart. Be alert to what's proper and what's not.

Don't decide that it's okay to observe the ascetic practices during the Rains retreat and then drop them when the retreat is over. It's not okay. Things don't balance out in that way. It's like clearing a field. We keep cutting away, cutting away, and then stop to rest when we're tired. We put away our hoe and then come back a month or two later. The weeds are now all taller than the stumps. If we try to clear away the area we cleared away before, it's too much for us.

Ajaan Mun once said that we have to make our practice the shape of a circle. A circle never comes to an end. Keep it going continually. Keep the practice going continually without stop. I listened to him and I thought, "When I've finished listening to this talk, what should I do?"

The answer is to make your alertness akaliko: timeless. Make sure that the mind knows and sees what's proper and what's not, at all times.

வட்ட வடிவில்

பயிற்சியின் போது, உட்கார்ந்துதான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. அல்லது முன்னும் பின்னும் நடந்து கொண்டுதான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதுமில்லை. அப்படி நினைக்க வேண்டாம். தியானம் என்பது ஒரு பயிற்சி சம்பந்தபட்டது தான். போதனை தருபவராக இருந்தாலும், உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தாலும், இங்கிருந்து வெளியே செல்பவராக இருந்தாலும், உள்ளத்தில் பயிற்சியைத் தொடர வேண்டும். எது சரியானது, எது சரியானது இல்லை என்பதைத் தெரிந்து கொள்வதில் அக்கறையோடிருங்கள்.

துதங்க [அ] பயிற்சிகளை மழைக் காலத்தில் ஒதுங்கி இருக்கும் சமயங்களில் மட்டும் தொடர்ந்து விட்டு, ஒதுங்கி இருக்கும் சமயம் முடிந்த பின் அவற்றை விட்டு விடலாம் என்று முடிவெடுக்க வேண்டாம். அது சரியல்ல. அவ்வாறு நிகழ்வுகள் சமநிலையாவதில்லை. இது வயலில் களை யெடுப்பதைப் போல. நாம் களைகளை வெட்டிக் கொண்டிருக்கிறோம். களைப்பானவுடன் வெட்டுவதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கிறோம். அரிவாளை வைத்து விட்டு ஓரிரு மாதங்களுக்குப் பின் திரும்புகிறோம். ஆனால் இப்போது காட்டுச் செடிகள் முந்தையதைவிட வளர்ந்து விடுகின்றன. நாம் ஏற்கனவே களை பிடிங்கிய இடத்தில் மீண்டும் துவங்க வேண்டியுள்ளது. நம்மால் சமாளிக்க முடிவதில்லை.

அஜான் முன் [ஆ] நமது பயிற்சி ஒரு வட்டத்தின் வடிவில் இருக்க வேண்டும் என்று சொன்னார். வட்டம் என்றும் முடிவதில்லை. தொடர்ந்து பயிற்சியை நிறுத்தாமல் செய்து கொண்டிருக்க வேண்டும். அவர் சொல்வதைக் கேட்டபின் நான் நினைத்தது, "இந்தப் போதனையைக் கேட்ட பின், நான் என்ன செய்ய வேண்டும்?"

இதற்குப் பதில் நமது தெரிந்த நிலையை 'அகாளிகோ': காலவரையற்றதாகச் செய்து கொள்ள வேண்டும் என்பதே. மனத்திற்குச் சரி எது, தவறு எது என்பது எந்நேரத்திலும் தெரிந்திருக்க வேண்டும்.

மொ. ஆ. குறிப்பு:

[அ] மழைக்காலத்தில் துறவிகள் ஓர் இடத்திலேயே தங்கி இருப்பது புத்தரின் காலத்திலேயே தொடங்கிய வழக்கம்.

[ஆ] அஜான் முன் (1870-1949) தாய்லாந்தில் பிறந்த பௌத்தத் துறவி. அவர் 1893 ஆம் ஆண்டு துறவறம் மேற்கொண்டதிலிருந்து தாய்லாந்து, பர்மா, லாவோஸ் ஆகிய நாடுகளில் நாடோடியாக அலைந்து, பெரும்பாலும் வனவாசியாக வாழ்ந்து, தியானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் பெரும் அளவில் மாணவர்களை ஈர்த்தார். அவரும் அவரது ஆசிரியரான அஜான் ஸாவோ (1861-1941) வும் கம்மதானா (தியானம்) வன மரபினை நிறுவினர். அஜான் சாவின் மற்றொரு ஆசிரியர்.

69. Fires and Floods Top

The Buddha taught that this is the way the mind and body are. This is the way they'll continue to be. They won't be any other way. In other words, at first they arise, then they grow old, then they hurt, and then they die. This is such a genuine truth, grandma, that you're experiencing in the present. It's a noble truth. So look at it with discernment in order to see it, that's all.

Even if fire burns your house, even if water floods your home, have it go only as far as the house, only as far as your home. If fire burns, don't let it burn your heart. If water floods, don't let it flood your heart. Let it flood just the house. Let it burn just the house, which is something that lies outside your body. As for your heart, have it let go, for now's the proper time. It's time to let go.

நெருப்பும் வெள்ளமும்

மனமும், உடலும் இப்படிப்பட்டது தான் என்று புத்தர் கூறினார். தொடர்ந்தும் இப்படித்தான் இருக்கும். வேறு எப்படியும் இருக்காது. அதாவது முதலில் தோன்றும், பின் முதுமையடையும், பின் நோய்வாய்ப்படும், இறுதியில் இறந்து போகும். இது ஒரு பேருண்மை, பாட்டியாரே . இந்தப் பேருண்மையை நீங்கள் இக்கணத்தில் கவனித்த வண்ணம் இருக்கின்றீர்கள். இது ஒரு மேன்மையான உண்மை. உடலை மெய்யறிவோடு பார்த்து இதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் வெள்ளம் புகுந்து விட்டாலும் அல்லது வீடு தீப்பற்றி முற்றாக அழிந்திருந்தாலும் அல்லது வேறு எந்த ஆபத்து வந்தாலும் அது வீட்டைப் பற்றிய விவகாரமாக மட்டுமே இருக்கட்டும். வெள்ளம் வந்தால் அது உங்கள் மனத்தையும் அடித்துக்கொண்டு செல்ல அனுமதிக்காதீர்கள். தீப் பிடித்தால் அது உங்கள் உள்ளத்தையும் எரிக்க விட வேண்டாம். வீட்டோடு மட்டுமே அந்தப் பிரச்சினைகள் இருக்கட்டும். உங்களுக்குப் புறத்தில் உள்ள வீட்டை மட்டுமே அவை பாதிக்கின்றன. உலகப் பற்றுகளையெல்லாம் விட்டு விட உங்கள் மனதிற்கு அனுமதி அளிக்க வேண்டிய நேரம் இதுதான்.

70. Putting Down the Glass Top

Practice by letting go. Don't hold on. Or if you hold on, don't hold on tight. Do you understand not holding on? This glass here: We hold on to it to pick it up and look at it. When we know all about it, we put it down. That's called not holding on — in other words, holding on but not holding on tight. You hold on to take a look and to know, and then you put it down. You're at ease. It's the same with this...

கண்ணாடிப் பாத்திரத்தைக் கீழே வைப்பது

விட்டுவிடப் பயிற்சி செய்யுங்கள். பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். அல்லது பிடித்தாலும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள வேண்டாம். பிடித்துக் கொள்ள வேண்டாம் என்றால் புரிகிறதா? இந்தக் கண்ணாடிப் பாத்திரம் இங்கே: அதைப் பார்ப்பதற்காகப் பிடித்து எடுக்கின்றோம். அதைத் தெரிந்து கொண்டபின் அதைக் கீழே வைத்து விடுகிறோம். இதைத்தான் பிடித்துக் கொள்ளாமல் இருப்பது என்கிறேன் - அதாவது பிடித்தாலும் இறுக்கமாகப் பிடிக்காமல் இருப்பது. பார்ப்பதற்காகப் பிடித்து எடுக்கிறோம், பின் கீழே வைத்து விடுகிறோம். நீங்கள் சஞ்சலப்படாமல் இருக்கின்றீர்கள். இதுவும் அப்படித்தான். ..

71. The Poisoned Banana Top

I came to live in a monastery, ordained as a novice, when I was nine. I kept trying to practice, but I didn't understand much of anything in those days. I came to understand only when I was ordained as a monk. Oho! I saw the fear in everything. I looked at the sensuality with which people live, and instead of seeing it as fun as they did, I saw it more as suffering. It's like a custard banana. When we eat it, it's nice and sweet. We know the sweetness of its taste. But if we know that someone put poison in that banana, we don't care how sweet it is if we know that we'll die when we eat it, right? That's the way my views always were. As I was about to eat, I'd always see the poison placed inside it. That's how I kept pulling further and further away, to the point where I've stayed ordained for these many years. Once you see, that sort of thing doesn't tempt you to eat.

நஞ்சு கலந்த வாழைப்பழம்

நான் ஒரு இளந் துறவியாக (சிறுவயதில் ஏற்கும் துறவறம்) ஒன்பது வயதில் ஒரு விகாரையில் வாழ வந்தேன். பயிற்சி செய்யத் தொடர்ந்து முயன்றும் அக்காலத்தில் எதுவும் எனக்குப் புரியவில்லை. நான் துறவியாக ஆனபிறகுதான் எனக்குப் புரிந்தது. ஓகோ! எல்லாவற்றிலும் பயத்தைக் கண்டேன். மக்களின் புலனின்ப வாழ்க்கையைக் கண்டு அதை இன்பம் என்று பாராமல் அது மேலும் துக்கத்துக்கு வழிவகுக்கும் என்பதைக் கண்டேன். இது ஒரு வாழைப்பழத்தைப் போல. அதை உண்ணும் போது அது இனிப்பாகவும் நன்றாகவும் இருக்கிறது. அதன் சுவையிலுள்ள இனிப்பு நமக்குத் தெரிகிறது. ஆனால் அந்த வாழைப்பழத்தில் யாராவது நஞ்சைக் கலந்திருந்தால் அது எவ்வளவு இனிப்பாக இருந்தாலும் நமக்கு அதன்மேல் அக்கறை இருக்காது. ஏனென்றால் அதை உண்டால் நாம் இறந்து விடுவோம், இல்லையா? அதுபோலத்தான் என் கருத்துக்கள் எப்போதும் இருந்துள்ளன. நான் சாப்பிடத் துவங்கும் போது அதில் கலந்திருக்கும் நஞ்சை எப்போதும் காண்பேன். அவ்வாறு தான் நான் படிப்படியாக நீண்ட தூரம் செல்லமுடிந்து இவ்வளவு காலமாகத் துறவறம் பூண்டு இருக்க முடிந்தது. ஒருமுறை கண்டபின் இதுபோன்ற ஆசைகள் உங்களைச் சாப்பிடத் தூண்டாது.

72. Studying vs. Going into Battle Top

There have been some scholarly monks who've researched in the texts, who have studied a lot. I tell them to give the meditation a try. This matter of going by the book: When you study, you study in line with the texts, but when you go into battle, you have to go outside of the texts. If you simply fight in line with the texts, you'll be no match for the enemy. When things get serious, you have to go outside of the texts.

படிப்பதும் போருக்குச் செல்வதும்

திரிபிடகத்தைத் துல்லியமாக ஆராய்ந்த துறவிகள் சிலர் உள்ளனர். அவர்கள் அறிஞர்கள், மிகவும் கற்றவர்கள். அவர்களிடம் தியானம் செய்து பாருங்கள் என்று கூறுவேன். புத்தகப்படி செல்வது குறித்து: படிக்கும் போது புத்தகங்கள் சொல்வதைப் படிக்கின்றோம். ஆனால் போருக்குப் போகும் போது புத்தகங்களுக்கு வெளியே செல்ல வேண்டும். புத்தகங்கள் சொல்வதன்படி சண்டையிட்டால், எதிரிக்கு நீங்கள் ஈடு கொடுக்க முடியாது. சூழ்நிலை கடுமையாகும் போது நீங்கள் புத்தகங்களுக்கு வெளியே போய்விட வேண்டும்.