தம்மபதம் - நீதிபதி

19. தம்மட்ட வர்க்கம - நீதிபதி

DHAMMATTHA VAGGA – THE JUDGE

256-257

வழக்கில் தீர்ப்பளிப்பதனாலேயே ஒருவர் நீதிபதியாகமாட்டார். பண்டிதரான ஒருவர் மெய்யையும் பொய்யையும் ஆராய்ந்து பார்த்து, யோசனையோடு பக்ஷபாதமில்லாமல் நேர்மையாகத் தீர்ப்பளிக்கிறார். தர்மத்தினால் போற்றப்படுகிற அந்த அறிஞர் பண்டிதர் எனப்படுவார்.

To pass judgment hurriedly doesn't mean you're a judge. The wise one, weighing both the right judgment and wrong, judges others impartially — unhurriedly, in line with the Dhamma, guarding the Dhamma, guarded by Dhamma, intelligent: he's called a judge.

258-259

ஒருவர் அதிகமாகப் பேசுவதனாலேயே அறிஞர் ஆகமாட்டார். பொறுமையும் அன்பும் உடையவராய், அச்சமில்லாதவர் யாரோ அவரே, பண்டிதர் எனப்படுவார். ஒருவர் அதிகமாகப் பேசுகிறபடியினாலேயே தர்மத்தை அறிந்தவர் ஆகமாட்டார். தான் கேட்டது சிறிதளவாக இருந்தாலும் அதை மனத்தில் ஆழ்ந்து சிந்தித்துப் பதியவைத்து,

அதை உறுதியாகப் பிடித்திருப்பவரே தர்மத்தை அறிந்தவர் ஆவார்.

Simply talking a lot doesn't mean one is wise. Whoever's secure — no hostility, fear — is said to be wise.

Simply talking a lot doesn't maintain the Dhamma. Whoever — although he's heard next to nothing —

sees Dhamma through his body, is not heedless of Dhamma: he's one who maintains the Dhamma.

260-261

தன்னுடைய தலை மயிர் நரைத்துவிட்டதினாலேயே ஒருவர் தேரர் ஆகமாட்டார்.

அவருடைய வயதுமட்டும் முதிர்ந்து விட்டது. அவர் "வீணாக வளர்ந்தவர்" எனப்படுவார்.

A head of gray hairs doesn't mean one's an elder. Advanced in years, one's called an old fool.

உண்மையும் நேர்மையும் அஹிம்சையும் அடக்கமும் உள்ளவர் யாரோ, அந்தக் குற்றமற்ற அறிஞர் உண்மையாகவே தேரர் என்னும் பெயருக்கு உரியவர் ஆவார்.

But one in whom there is truth, restraint, rectitude, gentleness, self-control — he's called an elder, his impurities disgorged, enlightened.

262-263

பொறாமையும் வெறுப்பும் கபடமும் உள்ளவர்கள், அழகாக இருப்பதனாலேயோ அல்லத

இனிமையாகப் பேசுவதனாலேயோ சாது ஆக மாட்டார்கள்.

Not by suave conversation or lotus-like coloring does an envious, miserly cheat become an exemplary man.

இவைகளையெல்லாம் யாரொருவர் வேரோடு பிடுங்கி எறிந்து விட்டாரோ, பகைமையை விட்டவர் யாரோ அந்த அறிஞரே சாது எனப்படுவார்.

But one in whom this is cut through up-rooted wiped out — he's called exemplary, his aversion disgorged,

intelligent.

264-265

தான் மேற்கொண்ட (துறவுக்) கடைமையை விட்டு, பொய்யைப் பேசுகிற ஒருவர், தனது தலையை மழித்து விட்டதனாலேயே சமணர் (துறவி) ஆகமாட்டார். ஆசைகளையும் அவாவையும் விடாதவர் எப்படிச் சமணர் ஆவார்?

A shaven head doesn't mean a contemplative. The liar observing no duties, filled with greed and desire:

what kind of contemplative's he?

சிறிதும் பெரிதும் ஆகிய எல்லாவிதமான பாவங்களையும் அடக்கினவர் யாரோ அவரே சமணர் (துறவி) ஆவார். ஏனென்றால், அவர் எல்லாப் பாவங்களையும் அடக்கியிருக்கிறார்.

But whoever tunes out the dissonance of his evil qualities — large or small — in every way by bringing evil to consonance: he's called a contemplative.

266-267

பிறரிடம் பிச்சை கேட்பதனாலேயே ஒருவர் பிக்கு ஆகமாட்டார். தர்ம மார்க்கத்திலிருந்து தவறி நடக்கிறவரும் பிக்கு ஆகமாட்டார்.

Begging from others doesn't mean one's a monk. As long as one follows householders' ways, one is no monk at all.

புண்ணியம் பாவம் இரண்டினையும் விட்டுப் பிரமச்சரியங் காத்து, இவ்வுலகத்திலே தூய்மை யான வாழ்க்கை வாழ்கிறவர் யாரோ அவர் தான் பிக்கு என்று கூறப்படுகிறார்.

But whoever puts aside both merit & evil and, living the chaste life, judiciously goes through the world:

he's called a monk.

268-269

மூடத்தனமும் அறியாமையும் உள்ள ஒருவர் மெளன விரதம் பூண்டிருப்பதனாலேயே முனிவர் ஆகமாட்டார். அறிஞரான ஒருவர், தராசைத் தூக்கி நிறுத்தி எடை காண்பவர் போல, சீர்தூக்கிப் பார்த்து நல்லதை மட்டும் ஏற்றுக்கொண்டு, பாவங்களைத் தள்ளிவிடுகிறவர் யாரோ அவரே முனிவர் ஆவார். ஏனென்றால் இரண்டு உலகங்களையும் நிறுத்துப் பார்க் கிறவர் ஆகையினாலே அவர் முனிவர் எனப்படுவார்.

Not by silence does someone confused and unknowing turn into a sage. But whoever — wise, as if holding the scales, taking the excellent — rejects evil deeds: he is a sage, that's how he's a sage. Whoever can weigh both sides of the world: that's how he's called a sage.

270

உயிர்களை இம்சித்து வதை செய்கிறவர் ஆரியர் (உயர்ந்தவர்) ஆகமாட்டார். எல்லா உயிர்களிடத்திலும் அன்புள்ளவர் (அகிம்சையோடிருப்பவர்) ஆரியர் (மேலோர்) எனப்படுவர்.

Not by harming life does one become noble. One is termed noble for being gentle to all living things.

271-272

சீலத்தினாலும், நல்லொழுக்கத்தினாலும், அதிகமாகக் கற்றதினாலும், சமாதி நிலையில் இருப்பதனாலும், அல்லது ஏகாந்த வாழ்க்கை வாழ்வதனாலும், "சாதாரண மக்கள் அடையாத துறவு இன்பத்தை நான் அடைந்தேன்" என்று அறிவதாலும் மாத்திரம், ஓ பிக்குகளே! சாந்தியடைய முடியாது. ஆஸவங்களை ஒழித்தால் தான் சாந்தியடைய முடியும்.

Monk, don't on account of your precepts and practices, great erudition, concentration attainments, secluded dwelling, or the thought, 'I touch the renunciate ease that run-of-the-mill people don't know': ever let yourself get complacent when the ending of effluents is still unattained.