பொறுமை
பொறுமை
பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.
Patience
Adapted from a Dhamma talk by Ajahn Sona
English version follows the Tamil translation.
கேள்வி: தனது வாழ்க்கையில் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்பங்களைப் பற்றி அடிக்கடி வந்து புலம்பும் ஒருவரை எப்படிச் சமாளிப்பது? தனது வாழ்க்கை துன்பகரமானது என்பது அவர் கருத்து. அவர் வலிந்து சொல்வதை நாம் கேட்பது பயனுள்ளதா? அவர் மனத்தை மாற்ற நாம் முற்படவேண்டுமா? அல்லது அவரை அவர் தற்போது இருக்கும் சூழ்நிலையிலேயே விட்டு விட்டுப் பிறிதொரு சமயம் அதைப் பற்றி அவரிடம் பேசுவது சரியா.? எப்படிச் சமாளிப்பது என்பது எனக்குப் புரியவில்லை.
புத்தர் நீங்கள் பேசுவதற்கு முன் இரண்டு செய்திகளை ஆய்ந்து பார்க்கச் சொன்னார். ஒன்று, நாம் சொல்லப் போவது உண்மையா? அடுத்து, நாம் சொல்லப் போவது பயனுள்ளது தானா? ஆம் என்றால் நாம் அதைச் சொல்லி விடலாம். இந்த இரண்டில் ஒன்று ஒத்துப் போகா விட்டாலும் அதாவது சொல்ல நினைப்பது உண்மையாக இல்லாவிட்டாலோ, பயனுள்ளதாக இல்லாவிட்டாலோ அதைச் சொல்லாமல் இருப்பது நல்லது. உங்கள் கணக்குப்படி நீங்கள் சொல்வது பயனுள்ளதாகத் தோன்றா விட்டால் அவரிடம் ஏதும் பதிலுக்குச் சொல்லாமல் இருப்பதே நல்லது. ஆனால் அவர் பேசுவதைக் கேட்டாலே அவருக்குப் ஆறுதல் அளிக்கும் என்று தோன்றினால் அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்ளுங்கள். இது போன்ற சூழ்நிலைகளில் உங்கள் பொறுமை குலைந்து போவதாகத் தெரிந்தால் சில பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.
ஒரு சுவாரஸ்யமான கதை சொல்கிறேன். ராம் தாஸ் (ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளர்) ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பதை ஒருவர் கவனித்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண் வந்து அமர்ந்து ஒரு நீண்ட, சோர்வு உண்டாக்குகிற சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகள் கலந்த தனது வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர் ராம்தாஸைக் கவனித்தபடி இவ்வாறு நினைத்தார், "விரைவில் அவர் அந்தப் பெண்ணிடம், 'சொல்லவேண்டிய செய்திக்கு விரைந்து வாருங்கள், உங்கள் பிரச்சனை என்ன என்று கூறுங்கள்,' என்று சொல்லப்போகிறார்," என்று நினைத்தார். அந்தப் பெண் பேசிக் கொண்டே இருந்தார். ராம் தாஸும் பொறுமையாக இடைமறிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தார். இறுதியாக அந்தப் பெண் பேசி முடித்தார். இதுவரை ராம் தாஸ் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. கேட்டுக்கொண்டிருந்தவர், "ராம் தாஸ் என்ன தான் சொல்லப்போகிறாரோ? 'எப்படியோ அந்தப் பெண் தனது கதையைக் கூறி முடித்து விட்டார். அந்தப் பெண்ணுக்கு ஒரு சிறிய அறிவுரை கொடுத்து விட்டுக் கிளம்பி விடலாம்' என்று எண்ணிக் கொண்டிருப்பார்," என்று நினைத்தார். ஆனால் ராம் தாஸ் அமைதியாகச் சொன்னார், 'சரி! நீங்கள் சொன்னதை மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள்,' (சிரிப்பு). அவர் அந்தப் பெண்ணைத் தனது பிரச்சனையை இன்னொருமுறை கூறுமாறு அழைத்தார். அந்த பெண்ணும் மீண்டும் தன் நீண்ட கதையை முன்போலவே சொல்ல ஆரம்பித்தார். கேட்டுக் கொண்டிருந்தவருக்கு இது ஒரு நல்ல பாடமாக அமைந்தது. அந்தப் பெண்ணிடம் இது வரை யாரும் இப்படி மீண்டும் தன் பிரச்சனையைக் கூறுமாறு அழைத்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். 'சரி, சரி. சொல்ல வந்ததைச் சொல்லி முடியுங்கள்,; என்று எல்லோரும் அவசரப் படுத்தியிருப்பார்கள். ராம் தாஸ் மிகவும் பொறுமையுடன் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா நேரமும் தனக்கு இருப்பதாகத் தெரிவிக்கிறார். சொல்லவேண்டியதை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று அந்தப் பெண்ணிடம் தெரிவிக்கிறார். அந்த பெண்ணுக்கும் தன் கதையைப் பொறுமையாகக் கேட்க ஒருவர் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக இருந்திருக்கும்.
ஆக நீங்களும் பொறுமை இல்லாமல் இருப்பதாக உணர்ந்தால் இதனைப் பயிற்சி செய்யலாம். அதை (பொறுமை இழக்கச் செய்வதை) மீண்டும் செய்வோம். அந்தப் புலம் பெயர்ந்து வந்த நாட்டில் நடந்த கதையா? சரி, அதை மீண்டும் கேட்போம். அதை இசைப் பாடலாக அமைத்து விடுங்கள். ஓடுகிற நீரின் சத்தம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! அதைப் போலக் கேட்க வேண்டியதை அதே இனிமையுடன் கேளுங்கள்.
பல முறை இது போன்ற சிக்கலான சூழ்நிலைகளில் நாம் சிக்கித் தவித்திருக்கிறோம். மற்றவர் சொல்வதைக் கேட்க வேண்டியிருக்கிறது. உங்களுக்குள் பொறுமை குறைவதை உணரமுடிகிறது. ஏன் பொறுமை இழக்க வேண்டும்? பொறுமையை வளர்க்க இது ஒரு நல்வாய்ப்பு என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
பொறுமை என்பது காத்திருப்பது மட்டும் இல்லை. நீங்கள் காத்துக் கொண்டிருக்கலாம் அல்லது பொறுமையாக இருக்கலாம். பொறுமையாகக் காத்துக் கொண்டிருப்பதாக நீங்கள் நினைத்தால், அது பொறுமை இல்லை. பொறுமை என்பது தெளிவான, கலக்கமற்ற நீர் போன்றது. பொறுமை என்பது உங்களுக்குள் எந்த அழுத்தமும் (கொந்தளிப்பும், இறுக்கமும்) இல்லாதிருப்பது தான். ஏன் நீங்களே அப்படிச் செய்து கொள்ள வேண்டும்? ஏன் நீங்களே உங்களுக்குள் அழுத்தம் உண்டாக்க வேண்டும்? பொறுமையோடு இருப்பது என்றால் உங்களை ஒரு மிதியடியாய் எல்லோரும் உங்கள் மீது நடக்க விட வேண்டும் என்பதில்லை. அது எல்லையற்ற அன்பைச் சார்ந்தது. இல்லையா? அந்த அன்பு என்பது உங்களையும் சார்ந்தது தானே. ஒருவரை மற்றவர் மிதியடியாய்ப் பயன் படுத்த நாம் விட மாட்டோம். ஆகவே மற்றவர் நம்மை மிதியடியாய்ப் பயன்படுத்த ஏன் அனுமதிக்க வேண்டும்? மிதியடியாய் இருப்பது என்பது அளவில்லாத அன்பா? இல்லை. உங்கள் மீது அன்பு இருந்தால் மற்றவர் உங்களை மிதியடியாய்ப் பயன்படுத்த விட மாட்டீர்கள். சில சமயம் மக்கள் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி இருப்பார்கள். அவர்களுக்குத் திறமையுடன் நடந்து கொள்ளத் தெரிவதில்லை. எப்படிப் பேச வேண்டும் என்று தெரிவதில்லை. நீண்ட நேரம் பேசுவார்கள். அறிவிலிகளாக இருப்பார்கள். நீங்கள் நினைக்க வேண்டியது, 'ஆ! அவர்கள் நடத்தை எனக்குப் புரிகிறது. அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது தெரிகிறது. நான் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்.' அப்படித் திறந்த மனத்துடன் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். இப்படிப் பயிற்சி செய்து பாருங்கள். உங்கள் பிரச்சனைகளை மற்றவரிடம் சொல்வது சில சமயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சில சமயம் மற்றவர் துன்பங்களைக் கேட்க முடியாமல் எழுந்து சென்று விட்டீர்களென்றால் அதற்காக நொந்து போக வேண்டாம். நம்மையும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டுமல்லவா? இதில் தவறே இல்லை. உங்கள் நலத்தையும் கவனிக்காமல் இருக்க வேண்டாம். இவை நமது வாழ்க்கையைத் திறமையுடன் நடத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டிய செய்திகள்.
தமிழில் / Translation:
பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading
திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
* * * * * *
Transcribed from an audio tape available at birken.ca
Question: What do you think is the best way to handle a situation where somebody comes to you frequently talking about how terrible they have it (i.e. how difficult their life is) and its their perception of how terrible they have it. Is it more helpful to listen to it or try to change their mind or to leave them be in their situation and come back later. I am not sure how to deal with that.
The Buddha asked that always before you speak think of two categories particularly. One, Is what I am about to say true? And is what I am about to say beneficial? And then I say it. If either of those categories are missing, If it is not true I don't say it. If it is not beneficial I don't say it. So if it seems by your calculation it does not seem to benefit them then you say nothing. But if merely listening to it seems to benefit them then you listen. You can do some exercises with this yourself if you get impatient with this kind of thing.
Funny little scene this was somebody talking about Ram Dass having an interview with somebody. This woman came in and she went through this long, tedious, circumstantial kind of thing, a long list of .. on and on and on . This guy is watching Ram Dass and thinking, 'He is going to tell her to get to the point , cut to the chase,' you know. This is really going on and Ram Dass listens to it. Finally she comes to the end and Ram Dass hasn't said a word. And now he thinks, 'What the hell is he going to say? May be he is glad to get it over .. give a brief advice to her and get out.'' At the end of this Ram Dass says 'Lets go through this again.' (laughter) He invites her to go over it all over again. And she starts again...And it was an incredible lesson for this guy watching. And also I don't think anybody in her whole life had ever said that to her. They all kind of rushed her, 'Ok get to the point.' And he was saying I have all the vast time in the universe here. What you have to say, say it..Got all the time. It was good for the woman.
Also if you are impatient you can practice that. Lets do that again. That long story about what happened in the old country etc. lets hear that again. Turn that into music. Sound of the gurgling of a creek running by. Many times we are struck . You have to listen and you can feel the impatience coming up. What is that about? It is an opportunity to practice patience.
Patience is not just waiting. You are either waiting or you are patient. If you think you are waiting patiently, you are not patient. You are suffering. Patience is lucid, clear water. The lake is patience. Patience is just the absence of tension in you. Why would I do that to myself? Why would I make myself tense? It does not mean that you are a doormat to be walked on. That is loving kindness, isn't it? Loving kindness means for you as well. You wouldn't let somebody walk on somebody else so why would they walk on you? Is it loving kindness to be a door mat? No. If you have any goodwill towards yourself you don't let people manipulate you and so forth. Sometimes people have troubles, they are not very skillful, they don't know how to say this, they talk too long, they have no sense. And you say, 'I see that. I see who they are.' And you say to yourself, 'Let me be open.' An open spacious kind of listening. Try that therapy and see how it goes. That thing of telling other people your troubles is very healing sometimes. If you walk away because it has worn you down you have to be kind to yourself. I have to take care of myself here. It is completely all right. Don't neglect your own well being. It is part of the skill of life.
* * * * * *