சங்க வந்தனம்
சங்க வந்தனம் Sangha Vandana
Audio - Malgudi Shuba
Supaṭipanno bhagavato sāvaka-saṅgho,
Uju-paṭipanno bhagavato sāvaka-saṅgho,
Ñāya-paṭipanno bhagavato sāvaka-saṅgho,
Sāmīci-paṭipanno bhagavato sāvaka-saṅgho,
Yadidaṃ cattāri purisa-yugāni aṭṭha purisa-puggalā:
Esa bhagavato sāvaka-saṅgho —
Āhuneyyo pāhuneyyo dakkhiṇeyyo añjali-karaṇīyo,
Anuttaraṃ puññakkhettaṃ lokassāti.
The Saṅgha of the Blessed One's disciples who have practiced well,
the Saṅgha of the Blessed One's disciples who have practiced straightforwardly,
the Saṅgha of the Blessed One's disciples who have practiced methodically,
the Saṅgha of the Blessed One's disciples who have practiced masterfully,
i.e., the four pairs — the eight types — of Noble Ones:
That is the Saṅgha of the Blessed One's disciples —
worthy of gifts, worthy of hospitality, worthy of offerings, worthy of respect,
the incomparable field of merit for the world.
சுபடி பண்ணோ பகவதோ சாவக சங்கோ,
உஜு-படி பண்ணோ பகவதோ சாவக சங்கோ,
ஞாய-படி பண்ணோ பகவதோ சாவக சங்கோ,
சாமிஜி-படி பண்ணோ பகவதோ சாவக சங்கோ,
யதிதம் சட்டாரி புரிச யுகானி அத்த புரிச புக்கலா:
ஏச பகவதோ சாவக சங்கோ
ஆஹுனெய்யோ பாகுனெய்யோ தக்கினெய்யோ அஞ்சலி கரணியோ,
அனுத்தரம் புஞ்சங் கெத்தம் லோகஸ் ஸாதி
ஆசிர்வதிக்கப் பட்டவரின் சீடர்களின் சங்கம் சிறப்பாகப் பயிற்சி செய்துள்ளனர்
ஆசிர்வதிக்கப் பட்டவரின் சீடர்களின் சங்கம் நேர்த்தியாகப் பயிற்சி செய்துள்ளனர்
ஆசிர்வதிக்கப் பட்டவரின் சீடர்களின் சங்கம் முறையாகப் பயிற்சி செய்துள்ளனர்
ஆசிர்வதிக்கப் பட்டவரின் சீடர்களின் சங்கம் ஒழுங்காகப் பயிற்சி செய்துள்ளனர்
அதாவது நான்கு ஜோடிகள் - எட்டு வகையான - மேன்மையானோர்;
அவர்களே ஆசிர்வதிக்கப் பட்டவரின் சீடர்களின் சங்கம்.
அவர்கள் நன்கொடை பெறத் தகுதியானவர், அவர்கள் உபசரிக்கத் தகுதியானவர்கள், பரிசு பெறத் தகுதியானவர், மதிக்கத் தக்கவர்கள்.
உலகில் புண்ணியம் செய்ய ஒப்பில்லாச் சந்தர்ப்பம் இது.
*****
பாலி மொழிச் சொற் பொருள்
supaṭipanno: supaṭipanna சுபட்டி பண்ணோ = have well followed. சிறப்பாகப் (புத்தரின் போதனைகளை) பின் பற்றிய
The word paṭipanna படிபன்னா (followed பின் பற்றிய) paṭi- (towards). The prefix su- means "well".
bhagavato பகவதோ = to the Blessed One (who has good fortune, happiness, prosperity) ஆசீர்வதிக்கப்பட்டவருக்கு (மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செழிப்புள்ள) - புத்தரின் ஒரு விகடப் பெயர்
sāvakasaṅgho: sāvakasaṅgha சாவக சங்கோ = community of the disciples. சீடர்களின் சங்கம்
sāvaka சாவக = disciple. சீடர் Derived form the verb su- (to listen, to hear).
saṅgha சங்கம் = community. சங்கம் The community of the Buddha's followers. It is of two kinds: the saṅgha of lay followers and the saṅgha of monks and nuns. புத்தரின் போதனைகளைப் பின் பற்றுவோரின் சங்கம் இரு வகையானது:1. இல்லறத்தார் அடங்கிய சங்கம், 2. ஆண், பெண் துறவிகளின் சங்கம்.
ujupaṭipanno உஜு-படி பண்ணோ = have followed the straight [path]. நேர்த்தியாகப் (புத்தரின் போதனைகளை) பின் பற்றிய
uju உஜு = straight. நேர்த்தி
paṭipanna = see above.
ñāyapaṭipanno ஞாயபடி பண்ணோ = have followed the method. முறையாகப் (புத்தரின் போதனைகளை) பின் பற்றிய
A compound of:
ñāya ஞாய = method, way, logic. முறை
paṭipanna = see above.
sāmīcipaṭipanno சாமிஜி-படி பண்ணோ = correct in life ஒழுங்காகப் (புத்தரின் போதனைகளை) பின் பற்றிய.
sāmīci சாமிஜி = proper, right திறமையாக.
paṭipanna = see above.
yadidaṃ யதிதம் = that is, which is, as follows. அதாவது A compound of:
yad = that, which.
idaṃ = that.
cattāri: catur சட்டாரி = four. Nom.n.: cattāri. நான்கு
purisayugāni புரிச யுகானி pair of people. ஜோடிகள் A compound of:
purisa புரிச = man, person மனிதன்.
yuga யுக = pair, couple ஜோடி .
aṭṭha: aṭṭha அத்தா = eight எட்டு.
purisapuggalā புரிச புக்கலா : human character. மனித இயல்பு A compound of:
purisa = person, man. மனிதன்
puggala = person, character. இயல்பு
esa ஏச = this இது.
bhagavato பகவதோ = see above. மேல் காண்க.
sāvakasaṅgho: sāvakasaṅgha சாவக சங்கோ = see above. மேல் காண்க.
āhuneyyo ஆஹுனெய்யோ = worthy of offerings நன்கொடை பெறத் தகுதியானவர் . A ger. of the verb hu- (to offer, to sacrifice) with the prefix ā- (towards). Nom.Sg.m. = āhuneyyo.
pāhuneyyo பாகுனெய்யோ = worthy of hospitality உபசரிக்கத் தகுதியானவர்கள். A ger. of the verb hu- (to ofer, to sacrifice) with the prefixes pa- (strengthening) and ā- (towards). The related noun pāhuna-, N.m.: guest.
dakkhiṇeyyo தக்கினெய்யோ = worthy of gifts பரிசு பெறத் தகுதியானவர். A ger. of a verb dakkhiṇāti (to give gifts). This verb is derived from the word dakkhiṇā-, N.f.: gift, fee, donation.
añjalikaraṇiyo அஞ்சலி கரனியோ = worthy of salutation மதிக்கத் தக்கவர்கள் . A compound of:
añjali அஞ்சலி = reverence, salutation அஞ்சலி, வணங்குதல் (denoting the palms of hands placed side by side and raised to the head).
karaṇiya கரனியோ = should be done செய். A ger. of the verb kar- (to do).
anuttaraṃ அனுத்தரம் = highest உயர்விள்ளா . Literally: "to which there is no higher". It is composed of the word uttara- (uttara-, Adj.: higher) which is preceded by the negative prefix an-.
puññakkhettaṃ புஞ்சங் கெத்தம் = the field for [obtaining] merit. புண்ணியம் செய்ய வாய்ப்பு
It is a compound of:
puñña புஞ்ஞ = merit, meritorious action நல்லது செய்தல், புண்ணியம்.
khetta கெத்த = field, site, place. இடம், வாய்ப்பு
lokassa லோகஸ்ஸா = world உலகில்
விளக்கவுரை Based on this English Commentary
இந்த வரிகளில் சங்கத்தின் (புத்தரின் சீடர்களின்) பண்புகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிடப் பட்டிருக்கிறது. பௌத்த மதத்தின் "மூன்று இரத்தினங்களில்" அல்லது "மூன்று புகலிடங்களில்", இது மூன்றாவது.
சீடர்களின் சங்கம் புத்தர் காட்டிய பாதையைச் சிறப்பாகப் பயிற்சி செய்துள்ளனர்.
சீடர்களின் சங்கம் புத்தர் காட்டிய பாதையை நேர்த்தியாகப் பின் பற்றியுள்ளனர். இந்தப் பாதை நேராக நோக்கத்திற்கு எடுத்துச் செல்லும். பாதையுள் நுழைந்தால் வெளியேற வழி தெரியாது தவிக்கும் படி தயாரிக்கப்பட்ட வழி அல்ல. பாதை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. பாதையில் வளைவுகள் இல்லை. அரைகுறைப் பாதையும் இல்லை.
சீடர்களின் சங்கம் புத்தர் காட்டிய பாதையை முறையாகப் பயிற்சி செய்துள்ளனர். இந்தப் பாதையின் ஒவ்வொரு படியும் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவும் முறையோடும் பொது அறிவிற்கு உகந்ததாகவும் இருக்கிறது.
சீடர்களின் சங்கம் ஒழுங்காகப் பயிற்சி செய்துள்ளனர். சீடர்களுக்கான விதி முறைகள் 'விநைய' த்தில் (ஒழுக்க சட்டத் தொகுப்பு) கூறப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சீடரும் இவ்விதிமுறைகளின் மேலோங்கிய நியதிகளைப் பின் பற்றுதல் வேண்டும்.
சங்கத்தில் நால்வகை மனித ஜோடிகளும் எட்டு வகை மனித இயல்புகளும் இருக்கின்றன. பௌத்தக் கொள்கைப்படி ஞானம் பெறும் பாதையில் நான்கு காலக் கட்டங்கள் இருக்கின்றன.
முதலாவது 'சோதாபத்தி' (பாதையில் தொடர்ந்து செல்வது, ஓடையில் நுழைவது). இந்தக் கட்டத்தில் 'நிர்வான மோட்சம்' முதல் முறையாகக் கண நேரம் தெரிகிறது. நாம் மறு பிறப்பெடுக்கச் செய்யும் சில இடையூறுகள் உடைகின்றன.)
இரண்டாவது 'ஸகாதாகாமிதா' ('ஒரு முறை மட்டும் மறு பிறப்பெடுப்பவரின் நிலை'). இந்தக் கட்டத்தை அடைந்தவர் இன்னும் ஒரு முறை மட்டுமே மறு பிறப்பெடுப்பார். அந்தப் பிறப்பில் ஞானம் பெறுவார்.
மூன்றாவது 'அனாகாமிதா' (இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்). இந்த நிலை அடைந்தவர் இந்த உலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார். ஒரு வேலை இந்த வாழ்க்கையில் நோக்கத்தை அடைய வில்லையென்றால் மேல் லோகம் ஒன்றில் மறு பிறப்பெடுத்து அங்கு பயிற்சியை முடித்து நோக்கத்தை அடைந்து விடுவார்.
கடைசியாக நான்காவது நிலை 'அரஹத்தா' (அரஹந்தரின் நிலை). இது தான் பௌத்த மதத்தின் மேலோங்கிய நோக்கம். மனதைத் தூய்மை செய்து மறு பிறப்பெடுக்க வைக்கும் தடைகள் எல்லாம் உடைந்து விட்ட நிலை.
இவ்வாறு நான்கு நிலைகள் இருக்கின்றன. இந்த நான்கு நிலைகளை அடைந்தவரும் அடைய முயற்சிப்போருமாக நான்கு ஜோடி மக்களும் (முதல் நிலை அடைய முயற்சிப்போர், அடைந்தவர் , இரண்டாம் ...) அதாவது எட்டு இயல்புடைய மக்களும் இருக்கின்றனர்.
புத்தரின் சீடர்கள் இப்படியானவர்கள்.
அவர்களின் நற்குணங்களினால் நன்கொடை பெறத் தகுதியானவர்கள். சங்கத்தினருக்கு நன்கொடை(முக்கியமாக உணவும் மருந்தும்) தருவது புண்ணியம் மிகுந்த செயல்.
அவர்கள் உபசரிக்கத் தகுதியானவர்கள். தங்க இடமும், நோய் நொடியின் போது பிக்கு பிக்குனிகளைக் கவனிப்பதும் சிறந்த தானச் செயல்கள்.
அவர்கள் பரிசு பெறத் தகுதியானவர். விநயப்படி (புத்தர் வகுத்த ஒழுக்கச் சட்டங்கள்) -- உணவு, பானம், தங்க இடம், உடை, மருந்து போன்றவற்றைக் கொடுப்பவருக்குப் புண்ணியம் சேர்வது மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தானம் செய்யும் வாய்ப்பாகவும் அமைகிறது.
இந்த குணங்களால் அவர்கள் மதிக்கத்தக்கவர்கள். மற்றவர்களுக்கு உதாரணமாக உள்ளவர்கள். சங்கத்தினருக்கு மரியாதை செலுத்துவது புத்தருக்கும் அவரின் தர்மத்திற்கும் மரியாதை செலுத்துவதற்குச் சமம்.
உலகில் புண்ணியம் செய்ய ஒப்பில்லாச் சந்தர்ப்பம் இது. புத்தரின் சீடர்களான பிக்கு பிக்குனிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மேலோங்கிய புண்ணியம். நல்வினை செய்து அதன் பலன்களைப் பெற விரும்புவோர் சங்கத்தினரிடம் வந்து நல்வினை செய்யும் வாய்ப்பைப் பெறலாம்.