தம்மபதம் - ஆயிரம்

8. ஆயிர வர்க்கம் - ஆயிரம்

SAHASSA VAGGA – THOUSANTS

100-102

பொருளற்ற ஆயிரம் வார்த்தைகளைவிட, மன அமைதியைத் தருகின்ற பொருள் நிறைந்த ஒரு வார்த்தை மேலானது.

Better than if there were thousands of meaningless words is one meaningful word that on hearing brings peace.

மன அமைதியைத் தருகிற ஒரு செய்யுளானது பயனற்ற ஆயிரம் செய்யுளைவிட மேலானது.

Better than if there were thousands of meaningless verses is one meaningful verse that on hearing brings peace.

பயனற்ற ஆயிரம் செய்யுட்களைப் படிப்பதைவிட, மன அமைதியைத் தருகிற ஒரு செய்யுளைப் படிப்பது மிக மேலானது.

And better than chanting hundreds of meaningless verses is one Dhamma-saying that on hearing brings peace.

103-105

பதினாயிரக்கணக்கான வீரர்களைப் போர்க் களத்திலே வென்றவர், தன்னைத்தானே அடக்கி வென்றவர் ஆகிய இரண்டு வீரர்களில், பின்னவரே பெரிய வீரர் ஆவார்

Greater in battle than the man who would conquer a thousand-thousand men, is he who would conquer just one — himself.

மற்றவர்களை வென்று அடக்குவதைவிடத் தன்னைத்தானே வென்று அடக்குவது மேலானது.

தம்மைத் தாமே வென்று அடக்கமாக இருப்பவரைத் தேவர்களும், கந்தர்வரும், மாரனும், பிரமனும் கூட வெல்லமுடியாது.

Better to conquer yourself than others. When you've trained yourself, living in constant self-control, neither a deva nor gandhabba, nor a Mara banded with Brahmas, could turn that triumph back into defeat.

106-108

மாதந்தோறும் ஆயிரக்கணக்கான யாகங்களை நூறாண்டுகள் வரையில் செய்தாலும், தம்மைத் தாமே வென்று அடக்கிய பெரியோரை ஒரு நிமிஷம் வழிபடுவதனால் உண்டாகும் பலன், அந்நூறாண்டுகளாகச் செய்த யாக பலனை விட மேலானது.

You could, month by month, at a cost of thousands, conduct sacrifices a hundred times, or pay a single moment's homage to one person, self-cultivated. Better than a hundred years of sacrifices would that act of homage be.

ஒருவர் காட்டுக்குச் சென்று நூறாண்டுகளாக எக்கியத் தீயை வளர்த்து வந்தாலும் அவர், தன்னைத் தானே வென்று அடக்கிய பெரியார் ஒருவரை ஒரு நிமிஷம் வணங்குவாரானால், அதன் பலன் நூறாண்டு செய்த எக்கிய பலனை விட மேலானது.

You could, for a hundred years, live in a forest tending a fire, or pay a single moment's homage to one person, self-cultivated. Better than a hundred years of sacrifices would that act of homage be.

இவ்வுலகில் புகழும் புண்ணியமும் பெறுதற் பொருட்டு ஒருவர் ஒரு ஆண்டு வரையில் செய்யும் யாக எக்கிய பலனானது, ஞானி ஒருவரை வழிபடுவதனால் உண்டாகும் நன்மையில் கால் பாகத்துக்கும் ஈடாகாது.

Everything offered or sacrificed in the world for an entire year by one seeking merit doesn't come to a fourth. Better to pay respect to those who've gone the straight way.

109

ஞானத்தினாலும் வயதினாலும் மூத்த பெரியோர்களை எப்போதும் வணங்குகிறவர்களுக்கு ஆயுள், அழகு, இன்பம், ஆற்றல் ஆகிய நான்கும் உண்டாகின்றன.

If you're respectful by habit, constantly honoring the worthy, four things increase: long life, beauty, happiness, strength.

110-115

ஒழுக்கங்களுடன் தியானத்தைச் செய்கின்ற ஒருவருடைய ஒரு நாள் வாழ்க்கையானது,

ஒழுக்கங்கெட்ட, மனத்தை அடக்காத ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட மேலானது.

Better than a hundred years lived without virtue, uncentered, is one day lived by a virtuous person absorbed in jhana.

மன அடக்கம் இல்லாத அஞ்ஞானமுடைய ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட,

ஞானமும் தியானமும் உள்ள ஒருவருடைய ஒரு நாள் வாழ்க்கை, மேன்மை யுடையது.

And better than a hundred years lived undiscerning, uncentered, is one day lived by a discerning person absorbed in jhana.

முயற்சி இல்லாமல் சோம்பலோடு இருக்கிற ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட,

ஆற்றலோடும் ஊக்கத்தோடும் முயற்சி செய்கிற ஒருவருடைய ஒரு நாள் வாழ்க்கை மேன்மை யுடையது.

And better than a hundred years lived apathetic and unenergetic, is one day lived energetic and firm.

உலக இயற்கையில் நடைபெறுகிற ஆக்கம் அழிவுகளைக் காண்கிற ஒருவருடைய ஒரு நாளைய வாழ்க்கையானது, அவைகளைக் காணாத ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட மேலானது.

And better than a hundred years lived without seeing arising and passing away, is one day lived seeing arising and passing away.

பிறவா நிலையை (மோக்ஷத்தை)க் காண்கிற ஒருவருடைய ஒரு நாளைய வாழ்க்கையானது,

அவைகளைக் காணாத ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட மேலானது.

And better than a hundred years lived without seeing the Deathless state, is one day lived seeing the Deathless state.

உத்தம தர்மத்தை அறிந்த ஒருவருடைய ஒரு நாளைய வாழ்க்கையானது, அவ்வுத்தம தர்மத்தைக் காணாத ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட மேலானது.

And better than a hundred years lived without seeing the ultimate Dhamma, is one day lived seeing the ultimate Dhamma.