அட்டதண்ட சூத்திரம் Attadaṇḍa Sutta
சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home
Sn 4.15
அட்டதண்ட சூத்திரம்: வன்செயல் பற்றி
Attadaṇḍa Sutta: On Violence
Translated from the Pali by: Bhante Varada
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: பாந்தே வரதா
* * *
புத்தர்
வன்முறை பயத்தைத் தோற்றுவிக்கும்.
கலகங்களின் மத்தியில் உள்ள மக்களைப் பார்த்து நான் வருந்தினேன்.
அதனால் நான் பாதிக்கப் பட்டேன்.
The Buddha
Violence breeds fear.
Looking at people in conflict, I will tell you of my dismay,
How moved I was.
சிறிய குளத்தில் உள்ள மீன்களைப்போல
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு, மக்கள் வலியால் புரண்டு நெளிவதைக் கண்டேன்.
இதை அறிந்தவுடன் என்னுள் நடுக்கம் உண்டானது.
I saw people writhing,
Feuding with each another like fish in a small pool.
When I realised this, dread arose in me.
உலகம் முழுமையாகப் பயனற்றது.
ஒவ்வொரு பகுதியும் கொந்தளிப்பில் உள்ளது.
எனக்கென்று ஓர் இடம் தேடினேன்.
ஆனால் காலியாக உள்ள இடம் எங்கும் கிடைக்கவில்லை.
The world is entirely worthless.
Every quarter is in turmoil.
Wanting somewhere for myself,
I saw nowhere that wasn’t taken.
எங்கு நோக்கினும் போட்டி இருப்பதைக் கண்டு, நான் வெறுப்புற்றேன்.
பின் கண்ணுக்குத் தெரியாத ஓர் அம்பு,
மக்களின் உள்ளத்தில் ஊடுருவி இருப்பதைக் கண்டேன்.
Seeing nothing in the end but competition, I became disgusted.
Then I saw a spike,
Hard to see, embedded in people’s hearts.
இந்தத அம்பினால் பாதிக்கப்பட்ட ஒருவர் எல்லாத் திசைகளிலும் ஓடுகிறார் .
ஆனால் அதைப் பிடுங்கி எடுத்த பின் அவர் ஓடவும் இல்லை, கீழே விழவும் இல்லை.
A person affected by this spike rushes about in all directions.
But on pulling it out he neither rushes about nor falls away.
இப்போது பயிற்சி விதிகள் ஓதப்படுகின்றன:
Now follows the recitation of the training rules:
உலகில் பற்றுள்ள எதனையும் பின் தொடர வேண்டாம்.
புலன் இன்பங்களை விவேகத்துடன் கண்டபின்,
நிப்பாண நிலைக்காகப் பயிற்சி செய்யுங்கள்.
Whatever is binding in the world you should not pursue it.
Having wisely seen sensual pleasures,
You should train yourself for Nibbana.
ஒரு துறவி உண்மையைப் பேச வேண்டும்,
கர்வப்படாமல், ஏமாற்றாமல் இருக்க வேண்டும்;
கோள்மொழி பேசுவதைத் தவிர்த்தும்,
கோபம் கொள்ளாமலும் இருக்க வேண்டும்.
பேராசையையும், பொருள் ஈட்டும் மனோபாவத்தையும் கைவிட வேண்டும்.
A sage should be truthful,
Unassuming, and not deceitful;
He should be rid of malicious speech
And free of anger.
He should overcome greed and acquisitiveness.
தூங்கிவழிவதை, சுறுசுறுப்பற்ற நிலையை, சோம்பலை வெல்ல வேண்டும்.
அக்கறையற்று வாழக் கூடாது.
நிப்பாணமே நோக்கமாகக் கொண்டவர் அகந்தையுடையவராக இருக்கக் கூடாது.
He should conquer sleepiness, weariness and sloth.
He should not live negligently.
The man whose heart is set on Nibbana should not be arrogant.
தவறான பேச்சில் மூழ்கிவிடக் கூடாது,
மேலும் அழகிய உருவங்கள் மீது காமம் கொள்ளக் கூடாது.
அகம்பாவத்தை அடக்கி,
அவசர புத்தியோடு நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
He should not sink to false speech,
Nor should he cultivate lust for physical forms.
He should comprehend pride
And should abstain from impetuous behaviour.
சென்றதை நினைத்து ஏங்கக் கூடாது.
புதியதைக் கண்டும் குதூகலப்படக் கூடாது.
தொலைந்ததை நினைத்து வருந்தக் கூடாது
வரப்போவதினிடமும் கட்டுப்படக் கூடாது.
He should not be nostalgic about the past.
Nor relish what is new.
He should not grieve for what is lost
Nor be bound to whatever comes forth.
பேராசையை நான் 'பெரும் வெள்ளம்' என்கிறேன்.
காமத்தின் ஓட்டம் அந்தப் பெரும் வெள்ளத்திற்குச் சமம்,
காமப் பொருட்கள் இட்டுக்கட்டப்பட்ட கற்பனைகள் .
புலன் இன்பங்களைக் கடப்பதென்பது 'கடப்பதற்குக் கடினமான சேற்று நிலம்' போல.
I call greed the ‘great deluge’.
Lust I call the ‘torrent’.
Concocted religious teachings are the ‘foothold’.
Sense pleasure is ‘hard-to-cross mud’.
வாய்மை தவராதவராக,
முனிவர், பிராமணர், உயர்ந்த இடத்தில் நிற்கிறார்.
எதனோடும் பற்றற்றவரென்பதால்,
அவர் உண்மையிலேயே அமைதியானவர் எனப் போற்றப் படுகிறார்.
Not falling away from Truth,
The sage, the Brahman, stands on high ground.
Having detached from everything
He is truly called peaceful.
அவர் விவேகமுள்ளவர்.
தெளிவான ஞானம் கொண்டவர்.
வாய்மையை அறிந்தவரென்பதால் அவர் கட்டில்லாதவர்.
சரியான வழியில் உலகை அறிந்த அவர்
எவர் மீதும் பொறாமைப் படுவதில்லை.
He indeed is wise.
He is of perfect insight.
Having found Truth, he is untethered.
Wandering through the world in the right way
He does not envy anyone here.
புலன் சிற்றின்பங்களைத் தாண்டிச் செல்பவர்
- சிற்றின்பப் பற்றினைக் கைவிடுவது கடினமானது -
துயரமும் கவலையும் இல்லாதவர்.
தொடர்விருப்பங்களை நிறுத்திய அவர்
கட்டில்லாதவர்.
Whoever here transcends sensual pleasure -
An attachment hard to overcome -
Is free of sorrow and anxiety.
He has cut the stream of wishes.
He is free of bonds.
போனதைப் போக விடுங்கள்.
எதிர்காலத்தில் எதனையும் எதிர்பார்க்க வேண்டாம்.
இடையில் எதனோடும் பற்றுக் கொள்ளாவிடின்
அமைதியுடன் வாழ்வீர்கள்.
Let wither what is gone.
Let there not be for you anything to come.
If you do not grasp at what is in between
You will live at peace.
அருவம் (மனம்) உருவத்தில் (உடல்) விரும்பத்தக்கது ஏதும் காணாதவர்,
இல்லாததை நினைத்து ஏங்காதவர் [1]
உலகில் எதனையும் இழப்பதில்லை.
For whom there is nothing beloved in this body/mind complex
And who does not grieve because of what does not exist,(1)
He suffers no loss in the world.
"இது என்னுடையது" அல்லது
"இது பிறருடையது"
என்ற என்ணம் இல்லாதவர்,
பொருட் சொந்தம் கொண்டாடாதவர்.
அவர் எதற்கும் வருந்துவதில்லை, எதையும்
"என்னுடையதில்லை" என்று நினைத்தவராக.
For whoever there is no thought “This is mine”
Or “This belongs to others”,
Who has no feelings of possessiveness,
He does not grieve for anything, thinking:
“It is not mine”.
கொடுமை, பேராசை, காமம் இல்லாதவர்
எங்கும் மன அமைதியுடையவர்:
அவரைப்பற்றி என்னிடம் கேட்கும் போது,
அசைக்க முடியாதவருக்கான ஆசீர்வாதம் இதுவே என்பேன்.
Being free of cruelty, greed and lust,
And being everywhere tranquil:
When asked,
I say that these are the blessings for those who are unshakeable.
பேராசை இல்லாதவர்,
விவேகம் உள்ளவர்,
கன்மம் சேர்க்காதவர்.
புதிய கன்மங்கள் உருவாவதைத் தவிர்ப்பவர்
அப்படிப்பட்டவர் எங்கும் பாதுகாப்பைக் காண்கிறார்.
For a person without lust,
One of discernment,
There is no accumulation of kamma.
He abstains from initiating new kamma.
He sees safety everywhere.
ஒரு முனிவர் தன்னை மற்றவரோடு சமம், தாழ்ந்தவர், மேன்மையானவர் என்று ஒப்பிடாதவர்.
அமைதியானவர், சுயநலமில்லாதவர்
அவர் எதையும் பற்றுவதுமில்லை, விடுவதுமில்லை.
The sage does not speak of himself as someone equal, inferior or superior.
At peace, unselfish,
He neither clings nor relinquishes.
* * *
விளக்கம்:
Notes for Readers:
Note (1) what does not exist: socati in vv.851 and 944 refers to the past. See note to Verse 861.
இல்லாதது என்றால் இறந்தகாலத்தைக் குறிக்கும்.
* * *
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
© Details from English Source With gratitude to Bhante Varada for English source.
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.