மோஹராஜா-மாணவ-பூச்சா Mogharaja-manava-puccha

சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home

Sn 5.15

மோஹராஜா-மாணவ-பூச்சா: மோஹராஜர் கேள்வி

Mogharaja-manava-puccha: Mogharaja's Question

Translated from the Pali by: John D. Ireland

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: ஜான் D. அயர்லாந்து

* * *

போற்றுதற்குரிய மோஹராஜர்:

" இரண்டு முறை சக்கர் அவர்களைக் [1] கேட்டும் ஞானகண்ணுடையவர் எனக்குப் பதில் தரவில்லை. புனிதமுள்ள முனிவர் மூன்றாவது முறை கேட்கும் போது பதில் கூறுவார் என்று நான் கேள்வியுற்றேன். பெரும் புகழுடைய கோதமர் இந்த உலகைப் பற்றியும், மறுமையைப் பற்றியும், பிரம்ம உலகைப் பற்றியும் கொண்டுள்ள கருத்தைப் பற்றி எனக்குத் தெரியாது: உலகை எவ்வகையில் நாம் பார்வையிடும் போது, மரண அரசனால் (எமனால்) நம்மைக் காணமுடியாது?"

The Venerable Mogharaja:

"Twice have I asked Sakka [1] but the Seeing One has not answered me. I have heard a divine sage replies when asked a third time. I do not know the view of the greatly famous Gotama concerning this world, the next world and the Brahma-world with its deities. To him of supreme vision I have come with a question: how should one regard the world so that one is not seen by the King of Death?"

அண்ணல்:

"உலகை வெறுமை என்று காண், [2] மோஹராஜா, எப்போதும் கடைப்பிடியுடன்; ஆணவத்தை வேரொடு பிடிங்கி எறிந்தால் (தான் என்ற எண்ணத்தை அழித்தால்) மரணத்தை வென்று விடலாம். இவ்வாறு உலகைப் பார்வையிட்டால் மரண அரசனால் (எமனால்) நம்மைக் காண முடியாது."

The Lord:

"Look upon the world as empty,[2] Mogharaja, ever mindful; uprooting the view of self you may thus be one who overcomes death. So regarding the world one is not seen by the King of Death."

* * *

விளக்கம்:

Notes:

1. The name "Sakka" is used here as a title for the Buddha. It means, "a man of the Sakya clan." The Buddha is also sometimes called Sakyamuni, "the sage of the Sakyas."

"சக்கர்" என்பது புத்தரின் ஒரு பட்டப் பெயர். அது, "சாக்கிய குலத்தில் பிறந்தோன்" என்று பொருள் படும். புத்தர் சாக்கியமுனி, அதாவது "சாக்கியரின் முனி" என்றும் அழைக்கப் படுவார்.

2. In the Samyutta-nikaya (vol. iv, p. 54) the Venerable Ananda asks: "How is the world empty, venerable sir?" And the Lord replies: "Because, Ananda, it is empty of a self or what belongs to a self, therefore it is said, 'the world is empty.'"

The "world," here and elsewhere, is not to be understood in the way we usually think of it, but is defined as the five aggregates (khandha) of material form, feeling, perception, activities and consciousness, or as the eye and visible objects, the ear and sounds, etc., that is to say, the whole of our subjective and objective experience.

"உலகம் எவ்வாறு வெறுமையாகிறது, ஐயா?" என்று போற்றுதற்குரிய ஆனந்தர் கேட்டதற்கு புத்தர்: "ஆனந்தா, தான் என்றது இல்லாததால், அல்லது தனக்கு என்று ஒன்றும் இல்லாததால், உலகம் வெறுமையானது என்று கூறப் படுகிறது," என்றார்.

இங்கு "உலகம்" என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் கருத்தல்ல. அது ஐந்து கந்தங்கள் என்று விளக்கப் படுகிறது: உருவம், நுகர்ச்சி, மனக்குறிப்புகள், செய்கை மற்றும் உணர்வு. அல்லது கண்ணும், கண்காணும் பொருளும், காதும் ஓசைகளும்.... அதாவது அக, புற விவகாரத்தையும் குறிக்கும்.

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

©1983 Buddhist Publication Society See details English Source

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.