தம்மபதம் - பிரியமானவர்
16. பிரிய வர்க்கம - பிரியமானவர்
PIYA VAGGA – DEAR ONES
209
விரும்பத்தகாதவற்றில் விருப்பங்கொண்டு விரும்பத் தக்கவைகளை விலக்கித் தமக்குப் பிரிய மானவற்றைச் செய்து நல்லவற்றை விலக்குகிறவர்கள், நல்ல காரியம் ஒன்றையே செய்கிற வர்களைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள்.
Having applied himself to what was not his own task, and not having applied himself to what was, having disregarded the goal to grasp at what he held dear, he now envies those who kept after themselves, took themselves to task.
210-211
பிரியமானவற்றில் மனத்தைச் செலுத்தாதே. வெறுப்பானவற்றிலும் மனத்தைச் செலுத்தாதே.
பிரியமானதும் துக்கத்தைத் தருகிறது; வெறுப்புள்ளதும் துக்கத்தை உண்டாக்குகிறது.
ஆகையினாலே பிரியம் கொள்ளாதே. ஏனென்றால், பிரியமானவர்களைப் பிரியும் போது துக்கம் உண்டாகிறது. விருப்பும் வெறுப்பும் அற்றவர்களுக்குத் தளை (பற்று) இல்லை.
Don't ever — regardless — be conjoined with what's dear or undear. It's painful not to see what's dear or to see what's not. So don't make anything dear, for it's dreadful to be far from what's dear. No bonds are found for those for whom there's neither dear nor undear.
212-216
பிரியமானவைகளிலிருந்து துக்கம் உண்டாகிறது. விருப்புள்ளவைகளிலிருந்து அச்சமும் உண்டாகிறது. விருப்பத்தை முழுவதும் விட்டவர்களுக்குத் துக்கம் இல்லை; அச்சத்தைப் பற்றிப் பேச வேண்டியது என்ன இருக்கிறது?
ஆசை(பிரேமை)யிலிருந்து துன்பம் உண்டாகிறது; ஆசையிலிருந்து அச்சமும் உண்டாகிறது.
ஆசையிலிருந்து முழுதும் நீங்கினவர்களுக்குத் துன்பம் இல்லை; அச்சத்தைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?
வாஞ்சைகளிருந்து துன்பம் உண்டாகிறது; அச்சமும் உண்டாகிறது. வாஞ்சைகளை முழுவதும் நீக்கினவர்களுக்குத் துன்பம் இல்லை; அச்சத்தைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?
காமத்திலிருந்து துன்பம் உண்டாகிறது; அச்சமும் உண்டாகிறது. காமத்தை முற்றும் விட்டவர் களுக்குத் துன்பம் உண்டாவதில்லை; அச்சத்தைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?
பற்றுக்களினாலே (தண்ஹா) துன்பம் உண்டாகிறது; அச்சமும் உண்டாகிறது. பற்றுக்களை முற்றும் விட்டவர்களுக்குத் துன்பம் இல்லை; அச்சத்தைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?
From what's dear is born grief, from what's dear is born fear. For one freed from what's dear there's no grief
— so how fear?
From what's loved is born grief, from what's loved is born fear. For one freed from what's loved there's no grief — so how fear?
From delight is born grief, from delight is born fear. For one freed from delight there's no grief — so how fear?
From sensuality is born grief, from sensuality is born fear. For one freed from sensuality there's no grief — so how fear?
From craving is born grief, from craving is born fear. For one freed from craving there's no grief — so how fear?
217
சீலத்தையும் ஞானத்தையும் நேர்மையையும் உண்மையையும் உடையவர்களாய் தமது கடமையைச் செய்கிறவர்களை மக்கள் விரும்புகிறார்கள்.
One consummate in virtue & vision, judicious, speaking the truth, doing his own task: the world holds him dear.
218
நிர்வாண மோக்ஷத்தை நாடி, அதனைத் தன் மனத்தில் இருத்தி ஆசைகளை அறுத்தவர்,
'நீரோட்டத்தினால் மேலே இழுத்துச் செல்லப்பட்டவர்' (உத்தம் ஸோதோ) என்று கூறப் படுகிறார்.
If you've given birth to a wish for what can't be expressed, are suffused with heart, your mind not enmeshed
in sensual passions: you're said to be in the up-flowing stream.
219-220
நெடுநாலைக்குப் பின்னர் தொலைதூரத்தில் இருந்து வந்த ஒருவரை, அவரது சுற்றத்தாரும் நண்பரும் அன்பரும் நன்கு வரவேற்பது போலப் புண்ணியம் செய்தவர்கள் இவ்வுலகத்தை விட்டு மறு உலகத்திற்குச் செல்லும் போது, திரும்பி வந்தவனைச் சுற்றத்தார் வரவேற்பது போல, அவருடைய புண்ணியங்கள் அவர்களை வரவேற்கின்றன.
A man long absent comes home safe from afar. His kin, his friends, his companions, delight in his return.
In just the same way, when you've done good and gone from this world to the world beyond, your good deeds receive you — as kin, someone dear come home.