உவமானங்கள் 97-108

இது போலத்தான்

108 அற உவமானங்கள்

போற்றுதற்குரிய அஜான் சா

It’s Like This

1 0 8 D H A M M A S I M I L E S

Venerable Ajahn Chah

* * * * * *

97. பெரிதும் இல்லை சிறிதும் இல்லை Top

இங்குள்ள மணி: என்ன நினைக்கின்றீர்கள். இது பெரிதா, சிறிதா?

இல்லறத்தார் ஒருவரின் பதில்: "சிறியது, ஐயா."

ஓ, சிறியாதா? பெரிதாகத் தெரியவில்லையா? அப்படித்தான் உங்களுக்குத் தெரிகிறதா? இந்த மணி ஒரு பௌதிக விஷயம். அதைப் பற்றிய உங்கள் கருத்து ஒரு மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் ஒரு பௌதிக விஷயமும் , ஒரு மனம் சம்பந்தப்பட்ட விஷயமும் உள்ளன: உங்கள் மனம், உங்கள் நோக்கம். அவாவின் காரணமாக இந்த மணி பெரிதாகவும் ஆகலாம் சிறிதாகவும் ஆகலாம்.

இங்கு உட்கார்ந்திருக்கும் அனைவரும்: இந்த மணியைப் பார்க்கும் போது, பதில் சொல்வது கடினமாக இருக்கிறது. இது பெரியதா, சிறியதா என்று சொல்லமுடியவில்லை. ஏனென்றால் அதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வேறு ஏதும் இல்லை. இங்கு ஒரு பிச்சா பாத்திரத்தை (துறவிகள் உண்ணும் பாத்திரம்) வைத்தால் இந்த மணி சிறியதாகத் தோன்றுகிறது. இப்போது மணி பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் இந்தப் பிச்சா பாத்திரம் இல்லையென்றால், மணி பெரிதாகத் தோன்றுகிறது. ஏன் இப்படி? மணி சிறியதென்று நினைப்பவரெல்லாம் அது பெரிதாக இருந்தால் நல்லது என்று நினைக்கின்றனர். ஆக அந்த மணி (மனத்தில்) சிறியதாகிக்கொண்டே செல்கிறது. ஆனால் உண்மையில் இங்கு மணி மட்டும் இருந்தால் அது சிறியதும் இல்லை, பெரியதும் இல்லை. அதன் அளவுக்கு தகுந்தார்ப்போல இருக்கிறது. அது எப்படிச் சிறிதாகவோ பெரிதாகவோ ஆகிறது? அது பெரியதாக இருக்கவேண்டும் அல்லது சிறியதாக இருக்க வேண்டும் என்ற அவா தான் காரணம். மணி பெரியதும் இல்லை சிறியதும் இல்லை. அது உள்ளது உள்ளவாறே இருக்கிறது.

Neither Large nor Small

This bell here: Do you think it’s large or small?

[A layman answers: “Small, sir.”]

Small, eh? It’s not large? Hmm. Is that how you see it? This bell is a physical phenomenon. Your feeling about it is a mental phenomenon. There’s a physical phenomenon and a mental phenomenon: your mind, your intention. Craving can want to make this bell larger right now or smaller right now.

All of you sitting here: When you look at this bell, it’s hard to answer. You don’t know whether it’s large or small because there’s nothing else to measure it against. If you put an alms bowl right here, you’ll see that the bell is small. It’s not large any more. But if there’s no alms bowl, the bell is large. Why is it like that? Everyone who says the bell is small wants it to be larger than this, and so the bell gets smaller. But actually, if the bell stands here by itself, it’s not large and it’s not small. It’s just as much as it is. What makes it large or small, if not craving?—the desire for it to be smaller or larger. The bell itself is neither large nor small. It’s just the way it is.

98. ஏன்? Top

மனத்தின் நடவடிக்கைகள் அவற்றின் இயல்புக்குத் தகுந்தார்ப்போல இருக்க வேண்டும் என்பதை அறிந்தால், அவற்றை உள்ளது உள்ளவாறே விட்டு விடுவோம். அந்த மனத்தின் நடவடிக்கைகள் "ஏன்" என்று எவரையும் கேட்பதில்லை. பிரச்சனை என்னவென்றால் நாம் அவற்றோடு பற்றுக் கொள்கிறோம். இது ஓடும் தண்ணீரைப் போல.அது கால்வாயில் ஓடுகிறது. அதனோடு பற்றுக் கொண்டு, அது ஏன் ஓடுகிறது என்று கேட்டால், துக்கம் எழுவதற்கு இடம் கொடுக்கின்றீர்கள். அது தனது இயல்புக்குத் தகுந்தார்ப்போல ஓடுகிறது என்பதை அறிந்தால், அங்கு துக்கம் இல்லை.

Why?

When we understand that the movements of the mind have to be the way they are on their own, that’s the way they are. They don’t “why” anyone at all. The problem is that we latch onto things. It’s like water flowing. It flows along in its water way. If you latch onto it, asking why it flows, you give rise to suffering. If you understand that it flows in line with its own affairs, there’s no suffering.

99. நாயைப் பிடித்துக் கொள்வது Top

ஒன்றை உண்மையென நீங்கள் அறிந்து கொண்டாலும் அதனைப் பற்றிக் கொள்ள வேண்டாம். இது ஒரு நாயைப் போல: நாயின் காலை விடாமல் பிடித்துக் கொண்டால் அது அதன் தலையைத் திருப்பி உங்களைக் கடித்து விடும். அல்லது ஒரு பாம்பைப் போல. அதன் வாலை விடாமல் பிடித்துப் பாருங்கள். அது தன் உடலைத் திருப்பி வந்து உங்களைக் கடித்து விடும். எனவே பிடிப்பு வேண்டாம். விட்டு விடுங்கள். இறக்கி விடுங்கள். சம்பிரதாயப் பழக்க வழக்கங்களும் அப்படித்தான். நாம் சம்பிரதாயப் படி நடக்க வேண்டும், ஆனால் அவற்றோடு பற்றுக்கொள்ளக் கூடாது என்று நமக்கு கற்பிக்கப் படுகிறது. அவை இருப்பது பயன்படுத்துவதற்காக. வாழ்க்கையை வசதியாக வாழ்வதற்காக. அவை பற்றுக்கொள்வதற்காக இல்லை. துக்கமும் அழுத்தமும் உண்டாகும் வரை அவற்றை பிடித்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்குச் சரி எனப் பட்டவை: அவற்றோடு பற்றுக் கொண்டால், உங்கள் மனத்தை இரண்டாகப் பிரித்துக் கொள்கின்றீர்கள் - ஏனென்றால் உங்கள் பார்வை தவறான திசையில் சென்று விட்டது.

Grabbing Hold of a Dog

Even when you see that something is true, you can’t grab hold of it. It’s like a dog: Try grabbing hold of a dog’s leg without letting go, and it will turn around and bite you. Or a snake: Try grabbing hold of its tail, grabbing hold without letting go. It’ll simply bite you. So don’t hold on. Let it go. Put it down. It’s the same with conventions. We act in line with conventions, but we’re taught not to grab hold of them. They’re there to use, to provide us with conveniences so that we can live. They’re not there to grab hold of them, to latch onto them to the point of giving rise to suffering and stress. The things that you understand to be right: If you latch onto them, you separate your mind into two

parts—because your views have turned wrong.

100. தேனீக்கள் கூட்டைவிட்டுச் சென்றபின் Top

சாராம்சம் இல்லாததை அறியும் போது, எமனும் நம்மைப் பிடிக்க முடியாது. சாவு நம்மை நெருங்காது. ஏன்? ஏனென்றால் 'நாம்' என்று ஒன்றும் இல்லை. இருப்பதெல்லாம் உருவக் குவியலும், உணர்ச்சிக் குவியலும், மனக்குறிப்புகளின் குவியலும், தோற்றுவிக்கப்பட்டதன் குவியல்களும், விஞ்ஞானக் குவியல்களுமே. அவ்வளவு தான். பின் அந்த 'நபர்' எங்கே? அதோ அங்கிருக்கும் தேனீக் கூட்டைப் போல: தேனீக்களெல்லாம் கூட்டை விட்டுச் சென்றபிறகு அந்த கூட்டை நீங்கள் எடுக்க முற்பட்டால், தேனீக்களைத் தொடக் கூடுமா? இல்லை, ஏனென்றால் அந்தக் கூடு வெறுமையாக இருக்கிறது. தொடுவதெல்லாம் தேன்மெழுகு தான். உங்களுக்குத் தேனீக்கள் எங்கே சென்றன என்பது தெரியாது, ஏனென்றால் அவை இப்போது அங்கு வாழ்வதில்லை.

இப்படித்தான் புத்தர் கற்பித்தார். உங்கள் அபிப்பிராயங்களை இந்த 'நபரை' விட்டு வெளிக்கொண்டு வாருங்கள். பின் உங்களுக்குக் கேள்விகளே இருக்காது. கேள்விகள் மட்டும் தீர்ந்துவிடுவதில்லை, பதில்களும் இருப்பதில்லை. கேள்விகள் இல்லை. பதில் சொல்ல யாரும் இல்லை. அப்போது எல்லாம் ஓடிவிடுகிறது. எல்லாம் ஓடி விடுகிறது என்றால் என்ன தெரியுமா? "ஓடி விடுவது" என்றால் அங்கு ஒன்றும் இல்லை என்று பொருள்.

When the Bees Leave the Hive

When we see emptiness, the King of Death can’t catch up with us. Death can’t reach us. Why? Because there’s no “us.” There are just piles of form, piles of feelings, piles of perceptions, piles of fabrications, piles of consciousness, that’s all. So where’s the person? Like that beehive over there: If all the bees leave and you try to take the hive, will you touch any bees? No, because it’s empty. All you’ll touch will be the beeswax. You don’t know where the bees went, because they don’t live there anymore.

That’s how the Buddha taught. Take your views outside of “self” in that way, and you run out of questions. And not only do you run out of questions, there are also no answers. No questions. No one to answer the questions. That’s where everything runs out. You know what it’s like when things run out? “Running out” means there’s nothing there.

101. மலசலங்கழிக்கும் பானையில் உண்பது Top

பொருட்களுக்கு சாராம்சம் இல்லாததை அறிவதென்பது அங்கு ஒன்றும் இல்லை என்பதாகும். இதோ இங்கு எச்சில் துப்பும் பாத்திரம் இருக்கிறது. ஒரு கோப்பையும் தட்டும் தெரிகிறது, அங்கு மற்றொரு கோப்பையும் தட்டும் இருக்கின்றன. அவை அங்கு இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் சாராம்சம் இல்லாமல் இருக்கின்றன. வெறுமையானவை. இந்த எச்சில் துப்பும் பாத்திரத்திடம் அது என்ன என்று கேட்டால் அது பதில் தராது - ஏனென்றால் அது ஒன்றும் இல்லை. நீங்கள் எச்சில் துப்பும் பாத்திரமெனலாம், ஆனால் அது உங்களுடைய சம்பிரதாயப் பழக்கம் தான். அல்லது அதை ஒரு பானை என்று கூறலாம் - நீங்களாகவே வைத்துக்கொண்ட ஒரு வழக்கம் தான் அது. அதன் வாய்மை என்ன வென்றால் அதற்குச் சாராம்சம் ஏதும் இல்லை. ஆனால் நாம் அதனோடு பற்றுக்கொண்டு இறுக்கமாக பிடித்துக் கொள்கிறோம்.

உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். இரண்டு கோஷ்டி மக்கள் இருக்கின்றனர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு கோஷ்டியினர் புத்திசாலிகள், மற்றவர்கள் முட்டாள்கள். அவர்கள் சாமான் வாங்கக் கடைத் தெருவுக்கு செல்கின்றனர். முட்டாள் கூட்டத்தினருக்கு எதுவுமே தெரியாது. அதனால் சாதம் சமைக்க ஒரு மலசலங்கழிக்கும் பானையை வாங்கிக் கொண்டு வருகிறார்கள் - ஏனென்றால் அவர்கள் விவரம் தெரியாதவர்கள். புத்திசாலிகள் இதைப் பார்த்து அருவருப்படைகின்றனர். - "மலசலங்கழிக்கும் பானையை எப்படி சாதம் வடிக்கப் பயன் படுத்துவார்கள்? அருவருப்பாக இருக்கிறதே." அவர்களுக்கு ஏன் அருவருப்பாக இருக்கிறது? அந்தப் பானையோ புதிய பானை; பயன்படுத்தப்படாத பொருள், ஆகவே அது சாதாரணப் பானையைப் போல ஒன்று தான். இன்னமும் சுத்தமாக இருக்கிறது. பின் ஏன் அவர்கள் அருவருப்படைகின்றனர்? ஏனென்றால் அவர்கள் அது ஒரு மலசலங்கழிக்கும் பானை என்ற எண்ணத்தோடு பற்றுக் கொண்டு விட்டார்கள். அவ்வளவு தான். உண்மையில் அது சாதாரணப் பானை தான். தங்கள் கருத்துக்களோடு ஒட்டிக் கொண்டு விட்டதால் துக்கமும் அருவருப்பும் அனுபவிக்கின்றனர். ஆக இந்த இரண்டு கோஷ்டியினருள் யார் உண்மையிலேயெ அறிவாளிகள்? யார் அறிவிலிகள்? அந்தப் பானை ஒரு சாதாரணப் பொருள் மட்டுமே, ஒரு சாதரணப் பானை. அதை நம் சம்பிரதாயப் படி ஒரு மலசலங்கழிக்கும் பானை என்று வைத்துக் கொள்கிறோம். அதனால் மக்கள் அருவருப்படைகின்றனர். அதில் காய்கறிகளைப் போட்டால் அவர்கள் அருவருப்படைகின்றனர். சாதத்தைப் போட்டால் அவர்கள் அருவருப்படைகின்றனர் - ஏனென்றால் அவர்களுக்குத் தவறான பார்வை உள்ளது, அவர்கள் உலக வழக்கங்களோடு ஒட்டிக்கொண்டு விட்டவர்கள்.

Eating Out of the Shit-pot

To see things as empty means seeing that there’s nothing there. You see that this spittoon is there, you see a cup and a plate, and the cup and the plate are there. It’s not that they’re not there, but they’re there in emptiness. They’re empty. If you ask this spittoon what it is, it won’t answer you—because it’s not anything. You can call it a spittoon if you want, but it’s just your supposition. Or you could call it a pot—it’s still just a supposition that you’ve made. Its actuality is there’s nothing to it. But we grab onto it and hold onto it firmly.

I’ll give you an example. Suppose there are two groups of people: one group intelligent, the other group stupid. They go to buy things in the market. The stupid group doesn’t know anything, so they buy a shit-pot and use it to fix rice— because they don’t know anything at all. The intelligent people see that and they get disgusted—“How can they use a shit-pot as a rice-pot? It’s disgusting.” Why do they find it disgusting? The shit-pot is still new; it’s never been used, so it’s like an ordinary pot. It’s still clean. So why are they disgusted by it? Because they hold onto the idea that it’s a shit-pot, that’s all. Actually, it’s just an ordinary pot. They suffer and get disgusted because they cling to their ideas about it. So with these two groups of people, which one is really intelligent? Which one is really stupid? The pot is just an object, an ordinary pot that we suppose to be a shit-pot, so people get disgusted by it. If you put curry in it, they get disgusted. Put rice in it and they get disgusted—because of their wrong views, stuck on suppositions.

102. கத்தியின் பாகங்கள் Top

இதோ இங்கு உள்ள கத்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கூர்முனை ஒரு பக்கம், மழுங்கிய விளிம்பு பின் பக்கம். அதற்குக் கைப்பிடியும் உள்ளது – இவை அனைத்தும் கத்தியின் பாகங்கள். அதை எடுக்கும் போது, அதன் கூர்முனைப் பகுதியை மட்டும் எடுக்க முடியுமா? மழுங்கிய பகுதியை மட்டும் எடுக்க முடியுமா? அல்லது கைப்பிடியை மட்டும்? கைப்பிடி கத்தியின் கைப்பிடி. மழுங்கிய பகுதி கத்தியின் பின் பகுதி. கூர்மைப் பகுதி கத்தியின் கூர்மைப் பகுதி. கத்தியை எடுக்கும் போது கூர்ப்பகுதியும், பின் பகுதியும், கைபிடியும் சேர்ந்தே எடுக்கப் படுகிறது. கூர்ப்பகுதி மட்டும் பிளந்து கொண்டு கையோடு வருமா?

இதை ஒரு உதாரணமாகவே தந்துள்ளேன். நல்லதை மட்டுமே எடுக்க முயற்சிக்கும் போது, கெட்டதும் சேர்ந்தே வரும். நல்லது மட்டும் வேண்டும் என விருப்பப் படுகின்றீர்கள், கெட்டது வேண்டாம் என்கின்றீர்கள். நல்லது கெட்டது இரண்டும் இல்லாததைப் பற்றித் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை. அப்படி இருக்கும் போது ஒரு முடிவுக்கே வரமுடியாது. நல்லதை எடுக்கும் போது கெட்டதும் சேர்ந்தே வரும். அவை எப்போதும் ஒன்றாகச் சேர்ந்தே வரும். இன்பத்தை விரும்பினால் துன்பமும் சேர்ந்தே வரும். அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை.

The Parts of a Knife

This knife placed here: It has the edge of its blade, it has the back of its blade, it has its handle—all of its parts. When you lift it up, can you lift just the edge of the blade? Can you pick up just the back of the blade? Just the handle? The handle is the handle of the knife. The back of the blade is the back of the knife’s blade. The edge of the blade is the edge of the knife’s blade. When you pick up the knife, you also pick up its handle, the back of its blade, and the edge of its blade. Could it split off just the edge of its blade for you?

This is an example. When you try to take just what’s good, what’s bad comes along with it. You want just what’s good and to throw away what’s bad. You don’t learn about what’s neither good nor bad. When that’s the case, you won’t come to the end of things. When you take what’s good, what’s bad comes along with it. They keep coming together. If you want pleasure, pain comes along with it. They’re connected.

103. இரண்டுக்கும் நடுவில் இருப்பதைத் தெரிந்து கொள்வது Top

இது கூரைக்கு மேலே போவது போலவும் அல்லது தரைத்தளத்துக்கு வருவது போலவும். ஒருவர் மேலே ஏறினால் கூரைக்குச் சென்றுவிடுகிறார். கீழே வரும் போது தரைத் தளத்திற்கு வந்துவிடுகிறார். அவர் மீண்டும் கூரைமீது ஏறி விழுந்தால், அதே தரையினில் தான் வந்து விழுவார். இந்த அளவுக்குத்தான் பெரும்பாலானோர் அறிந்திருக்கின்றனர். இவ்விரண்டுக்கும் நடவில் இருப்பதைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஏனென்றால் அதை அளவிட ஏதும் இல்லை. இரண்டுக்கும் நடுவில் போய்ச் சேர்வதற்கோ, நிற்பதற்கோ ஒன்றும் இல்லையென்று அவர்கள் சொன்னால், அதை நாம் சுட்டிக் காட்ட முடியாது. நம்மால் சுட்டிக்காட்ட முடியாததற்கு காரணம் அதை குறிப்பதற்கு ஒன்றும் இல்லை.

நாம் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் பயிற்சியின் சம்பந்தமுடையவை. மாணவர்களுக்குப் பெரும்பான்மையாகப் புண்ணியம் எப்படி இருக்கும் என்றும், பாவம் எப்படி இருக்கும் என்றும், மரத்தில் எத்தனை இலைகள் இருக்கும், வேர்கள் எத்தனை இருக்கும் என்பதையும் அறியவே விரும்புகின்றனர். இது போன்ற சமாச்சாரங்களைத் தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பினால், புத்தர் உங்களை ஒரு முட்டாள் என்று தான் சொல்வார், ஏனென்றால் மரத்தின் ஓர் இலையைத் தெரிந்து கொண்டாலே போதும். இரப்பர் மரத்தின் எல்லா இலைகளும் ஒரே மாதிரிதான். வேர்களும் அதே போலத்தான். ஒரு வேரைத் தெரிந்து கொண்டாலே போதும்.

மக்களைத் தெரிந்து கொள்வதும் அதே போலத்தான். உங்களைத் தெரிந்து கொண்டால், அதுவே போதும். உலகில் உள்ள எல்லோரையும் தெரிந்து கொண்டது போலத்தான்.

Knowing In-between

It’s like going up on the roof or coming down to the floor. When someone climbs up there, he gets on the roof. When he comes down, he comes down to the floor. If he climbs up to the roof again and falls down, he falls down to the same floor. That’s all that most people know. No one knows being in-between because there’s nothing to measure it. When they say that in-between there’s no state of becoming, we can’t point it out. We can’t point it out because there’s nothing to mark it.

The questions we have to answer are the questions of the practice. Students for the most part want to know what merit looks like, what evil looks like, how many leaves there are on a tree, how many roots. If you want to know that sort of thing, the Buddha would probably say you’re stupid, because all you really need to know is a single leaf. Every leaf on a rubber tree is just the same. The same with the roots: All you need to see is a single root. It’s the same with knowing people. If you really know yourself, that’s enough. You know every person in the world.

104. அலுமாரி செய்யப்பட்டவுடன் Top

நாம் அனைவரும் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம் - சகிப்பு இல்லாத வரை சகித்துக் கொள்ளவேண்டும்.. அதாவது உண்மையைத் தெரிந்து கொண்டவுடன், விட்டு விட வேண்டும். விட்டு விட்ட பின் அமைதி எழுவதைக் காணலாம். அமைதி எழுந்தவுடன் பயிற்சி செய்யத் தேவையில்லை - ஏனென்றால் நீங்கள் பயிற்சியை முடித்து விட்டீர்கள்.

இது ஒரு அலமாரியைப் போல. முன்பு அது மரமாக இருந்தது, பின் ஒரு தேவையைப் பூர்த்தி செய்ய அலமாரி செய்ய வேண்டியதாயிற்று. மரமும் வெட்டப்பட்டுத் தேவையான வடிவில் செதுக்கப் பட்டது. ஏனென்றால் அந்த அலமாரி இன்னமும் தேவைப் பட்டது. அலமாரி செய்யப்பட்டு, அதன் மீது வார்னிஷ் பூசப்பட்டு, அது பளபளப்பாகப் பார்வைக்கு வைக்கப் படுகிறது. அத்தோடு வேலை முடிந்தது. அலமாரி செய்தவுடன் செய்ய வேண்டியது முடிந்தது. முன் அந்த அலுமாரி மரமாக இருந்தது; இப்போது, ஒரு அழகிய அலமாரி ஆனது. முதலில் அழகற்றதாக இருந்தது இப்போது அழகானதாக மாறியது என்று சொல்லலாம்.

நாம் அனைவரும் இது போலவே தான் சாதரணமானவர்களாக இருந்தோம். நாம் மட்டும் இல்லை - புத்தரும் கூட அப்படித்தான் இருந்தார். அவர் அறியாமையில் தான் தொடங்கினார். அப்படித்தான் அவர் தெரிந்து கொண்டார். எங்கெல்லாம் அழுக்கு உள்ளதோ அங்கெல்லாம் தூய்மையும் இருக்கும். அந்த இடத்தைச் சுத்தம் செய்தால் அந்தத் தூய்மை வேறெங்கிருந்தும் வருவதில்லை. எங்கெல்லாம் தொந்தரவு இருக்கிறதோ அங்கு அமைதியும் இருக்கும். எங்கெல்லாம் தவறு இருக்கிறதோ அங்கெல்லாம் சரியானதும் இருக்கும். இவை இரண்டிரண்டாகச் சேர்ந்தே உள்ளன. இரண்டும் ஒரே இடத்தில் உள்ளன. எங்கெல்லாம் பேராசை, வெறுப்பு, ஏமாற்றம் உள்ளதோ அங்கெல்லாம், பேராசையின்மை, வெறுப்பின்மை, ஏமாற்றமின்மையும் இருக்கும்.

When the Cabinet is Done

I want us all to have endurance—enduring until there’s no more endurance. In other words, as soon as you see the truth, you let go. When you let go, you see peace arising. When peace arises, you don’t have to practice—because you’ve finished practicing. It’s like a cabinet. Before, it was a tree, but there was a problem that required making a cabinet. The tree was cut and shaped because there was still a reason to make the cabinet. Once the cabinet is finished and we’ve coated it with shellac and put it on display, that’s the end of having to do anything. It ends right there in the cabinet. Before, this cabinet was a tree; now, it’s beautiful cabinet. We can say that what once wasn’t beautiful has turned into something beautiful.

It’s the same with all of us. All of us have been run-of-the-mill people. And not just us—even the Buddha was just the same. He started out ignorant. That’s how he came to know. Wherever there’s dirtiness, there’s cleanliness right there. When you wash that spot, the cleanliness doesn’t arise anywhere else. Wherever there’s disturbance, there’s peace right there. Wherever there’s wrongness, there’s rightness right there. They’re together, both of them, right there. Wherever there’s greed, aversion, and delusion, there’s lack of greed, lack of aversion, lack of delusion right there.

105. இது நமது விவகாரம் Top

இறுதியாக, போதனைகள் முடிந்துவிடுகின்றன. நிலைமைகளைத் தோற்றுவிக்கும் காரணிகள் தெரிந்து விட்டால், காரணிகளை விட்டு விடலாம். விளைவுகள் தெரிந்து விட்டால், விளைவுகளையும் விட்டுவிடலாம். பின் நிற்பதற்கு எங்கே இடம்? காரணிகளுக்கு மேலும், விளைவுகளுக்கு அப்பாலும் நிற்க வேண்டும். பிறப்புக்கு மேலும் மரணத்திற்கு அப்பாலும். அங்கு தான் நிற்க வேண்டும். எல்லாம் முடிந்த இடத்தில் நிற்க வேண்டும். மனம் அமைதியாக இருக்கிறது, நிலைமைகளைத் தோற்றுவிக்கும் காரணிகளுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் அப்பால் உள்ளது; பிறப்புக்கும் மரணத்துக்கும் அப்பால் உள்ள அமைதியில் உள்ளது; இன்பத்துக்கும் துன்பத்துக்கும் அப்பால் உள்ள அமைதியில் உள்ளது. இந்த அமைதியோடு நிற்கிறது. இங்கு வினையும் இல்லை; வினைப்பயனும் இல்லை.

வினைக்கு மேலும் வினைப்பயனுக்கு அப்பாலும் சென்ற பிறகு, நமது பயிற்சியின் முடிவிற்கு வந்துவிடுகிறோம். அங்கு தான் நமது குறிக்கோளை நிலைநாட்ட வேண்டும். ஆகவே தான் புத்தர் அதுவரை மட்டுமே கற்பித்தார். அதன் பின் நாம் பயிற்சி செய்தால் அது நமது சொந்த விவகாரம் தான். அதன் பின் நாம் செல்லும் இடம் நமது விவகாரமே. இது வரை மட்டுமே புத்தர் கற்பித்தார். அவரிடம் ஓர் ஓடமும் ஒரு துடுப்பும் இருக்கிறது, அதை நம்மிடம் தருகிறார்: ஓடத்தையும் துடுப்பையும் இரண்டையும் நமக்குத் தந்துவிட்டார். அதை வைத்துத் துடுப்புப் போட்டால் ஓடம் முன்னோக்கிச் செல்லும். துடுப்புப் போடாவிட்டால் ஓடம் இருக்கும் இடத்திலேயே இருக்கும். அது நமது விவகாரமே.

Our Own Affair

Eventually, the teachings run out. When you know causes, you let go of causes. When you know results, you let go of results. So where will you stay? Above causes and beyond results. Above birth and beyond death. That’s where you stay. You stay where everything is ended and runs out. The mind is at peace, away from causes and results; at peace away from birth and death; at peace away from pleasure and pain. It stays in peace like that. There are no causes and effects right there.

Once you’re above causes and beyond results, that’s the end point of what we’re practicing. We aim right there. That’s why the Buddha taught only that far. After that, what we practice is our own affair. Where we continue to go is our own affair. He taught only this far. He has a boat and an oar, and he gives it to us: both the boat and the oar. If we paddle with it, the boat will go forward. If we don’t paddle with it, the boat stays where it is. It’s our own affair.

106. கூண்டில் இருப்பது Top

நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும், இன்பத்தை உணர்ந்தாலும் துன்பத்தை உணர்ந்தாலும், அழுதாலும் சிரித்தாலும், இந்த உலகில் இருக்கும் வரை, இவையெல்லாம் ஒரு கூண்டுக்குள்ளேயே நடக்கின்றன. இந்த கூண்டைவிட்டுத் தப்பிக்க முடியாது. நாம் பணக்காரராக இருந்தாலும், கூண்டில் தான் இருக்கின்றோம். நாம் ஏழையாக இருந்தாலும், கூண்டில் தான் இருக்கின்றோம். அழுதாலும், கூண்டில் தான் இருக்கின்றோம். ஆடினாலும், கூண்டுக்குள்ளேயே ஆடுகிறோம். இது என்ன கூண்டு? பிறப்பு, மூப்பு, பிணி, சாக்காடு என்ற கூண்டு.

இது வீட்டில் வளர்க்கும் ஒரு புறாவைப்போல.அதன் பாடலைக் கேட்டு நாம் அதைப் புகழ்கிறோம். "என்ன அழகு, எனது புறாவின் ஓசை! என் புறாவிற்கு மென்மையான குரல் இருக்கிறது. என் புறாவிற்கு உயர்வான குரல் இருக்கிறது" - இப்படி அதைப் புகழ்கிறோம். ஆனால் அந்தப் புறா மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று யாரும் அதைக் கேட்பதில்லை. அதற்கு உண்ண உணவு தருகிறோம், குடிக்க நீர் தருகிறோம். ஆனால் எல்லாமே கூண்டுக்குள்ளேயே நடக்கிறது. அப்படியிருந்தும் புறா திருப்தியுடன் வாழ்கிறது என்று நாம் நினைக்கிறோம்.

இப்படி எப்பொழுதாவது நாம் நினைத்திருக்கிறோமா? யாராவது நமக்கு உணவும், நீரும் தந்து, ஒரு கூண்டுக்குள்ளே வைத்திருந்தால், நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? அது போலவே இந்த உலகிலும் நாம் கூண்டுக்குள்ளே தான் இருக்கிறோம். "இது என்னுடையது, இது என்னிடம் இருக்கிறது, எனக்கு அது இருக்கிறது" - இது போன்ற விஷயங்கள். ஆனால் நமது நிலைமையை அறிந்து கொள்வதில்லை. சொல்லப்போனால் நம்மையே ஆழமாகப் பார்க்காததால் அழுத்தத்தையும், துக்கத்தையும் தொடர்ந்து சேகரித்துக் கொள்கிறோம். இது புறாவின் நிலைமையை நாம் கவனிக்காதது போல. அதைப் பார்த்தால் நிம்மதியாக இருப்பது போலத்தான் தோன்றுகிறது. கொடுத்த உணவையும் நீரையும் உண்கிறது, அது மகிழ்ச்சியாக இருப்பதாக நாம் நினைக்கிறோம். நாமும் அது போலத்தான். நாம் எவ்வளவு தான் மகிழ்ச்சியோடும், வசதியோடும் வாழ்ந்தாலும், பிறந்த பின் நாம் வயோதிகம் அடையத்தான் வேண்டும்; வயதானவுடன் நோய் நொடியை அனுபவிக்கத்தான் வேண்டும். நோய்வந்தால் பின் மரணத்தைத் தழுவத்தான் வேண்டும். இது தான் துக்கம். இப்படித்தான் நாம் துக்கம் அனுபவிக்கின்றோம்.

In the Cage

Whether we’re happy or sad, feel pleasure or pain, cry or sing, as long as we’re in this world, these things happen in a cage. We don’t escape from the cage. Even if we’re wealthy, we’re in a cage. If we’re poor, we’re in a cage. If we cry, we’re in a cage. If we dance, we’re dancing in a cage. Which cage? The cage of birth, aging, illness, and death.

It’s like a mourning dove we keep in our home. We simply listen to its song and we praise it. “How pretty, the sound of my dove! My dove has a low voice. My dove has a high voice”—that sort of thing. We never ask the dove if it’s enjoying itself or not. We give it rice to eat and water to drink, but everything is in the cage. And yet we think that the dove is satisfied.

Have we ever stopped to think: If someone gave us rice and water and put us in a cage, would we be happy? In the same way, we’re caged in this world. “This is mine, I have this, I have that”—all kinds of things. But we don’t understand our own condition. Actually, we’re gathering stress and suffering into ourselves because we don’t look deeply into ourselves, in the same way that we don’t look deeply into the dove. It looks like it’s living comfortably. It can drink water and eat food, and we think that it’s happy. The same with us: Even though we live in extreme pleasure and comfort, once we’re born we’ll then have to grow old; when we’re old, we’ll then have to grow sick; when we’re sick, we’ll then have to die. This is suffering. This is the way we suffer.

107. கண்ணாடிப் பாத்திரத்தை நிரப்புவது Top

பிறந்த பின் மக்கள் என்ன நினைக்கின்றார்களென்றால், அவர்கள் பிறந்தபின்பும், இறக்க விருப்பப் படுவதில்லை. இப்படிச் சிந்திப்பது சரியா? இந்தக் கண்ணாடிப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீரை ஊற்றியும் அது நிரம்பாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் - அதில் நீரை ஊற்றிக் கொண்டே இருந்து அது நிரம்பக் கூடாதென்று நினைத்தால்- நாம் விருப்பப்படுவது சாத்தியமாகுமா? பிறந்த பின் மக்களின் நிலையும் இதுவே. பிறந்துவிட்டார்கள், ஆனால் இறக்க மறுக்கின்றனர். இது சரியான எண்ணமா? அப்படி நாம் நினைப்பது போல நடந்துவிட்டால், அதாவது பிறந்தவரெல்லாம் இறக்காமல் இருந்துவிட்டால், நாம் மேன் மேலும் துக்கம் அனுபவிப்போம். இந்த உலகத்தில் பிறந்தவரெல்லாம் இறக்காமல் இருந்தால் நாம் ஒவ்வொருவரும் மற்றவரின் மலத்தைத் தான் சாப்பிட வேண்டிய திருக்கும். தனிமையாக இருப்பதென்றால் எங்கு செல்வது?

இது இந்தக் கண்ணாடிப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரைப் போல: அதில் நீரை ஊற்றிக் கொண்டே இருந்தும் அது நிரம்பக் கூடாது என்று நினைப்பது சரியா? உலகமும் அது போலத்தான். சரியான முறையில் சிந்திக்கத் தெரிந்து கொள்ளுங்கள். இறக்காமல் இருக்க விருப்பம் கொள்ள முடியாது. இதுவே இயற்கையின் வழி. அப்படித்தான் இருக்க வேண்டும்.

Filling the Glass

The way that people think once they’re born is that, having been born, they don’t want to die. Is that the right way to think? Take this glass here. If we pour water into it and yet don’t want it to be full—if we keep on pouring water into it and yet don’t want to be full—can we get what we want? It’s the same with people once they’re born. Once they’re born, they don’t want to die. Is that kind of thinking right? If things could really be that way, with everybody born and not having to die, we’d suffer even more than we do now. If nobody born into this world ever died, we’d all be eating one another’s shit. Where could we go to get away?

It’s like the water in this glass: Can you keep on pouring it in without wanting the glass to be full? That’s the way it is with the world. Get things into perspective. You can’t want not to die. That’s the way it has to be.

108. மரணத்தை நினைவில் வைப்பது Top

நீங்கள் சட்டத்தை மீறியதன் காரணமாக இன்னும் ஏழு நாட்களில் உங்களைத் தூக்கில் இடப்போவதாகத் தெரிய வந்தால், உங்களுக்கு எப்படி இருக்கும்?

உங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஏழு நாட்களில் உங்களைத் தூக்கிலிடப் போகின்றார்கள், நீங்கள் என்ன செய்வீர்கள்? இதைப் பிரதிபலிக்க உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது இருக்கும் நிலையில், உங்களுக்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. பிறந்த உடனேயே மரண தண்டணை விதிக்கப் பட்டு விடுகிறது. ஒரே வித்தியாசம் எத்தனை நாட்கள் அல்லது ஆண்டுகள் உள்ளது என்பதுதான் தெரியவில்லை. ஏன், ஏழுநாட்களுக்குக் குறைவாகக் கூட இருக்கலாம். இதை உணர்ந்திருக்கின்றீர்களா? உங்களுக்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. உங்களைத் தூக்கில் இடப் போகின்றார்கள், ஆனால் அது உங்களுக்குத் தெரியவில்லை யென்றால் நீங்கள் எதுவும் உணரப் போவதில்லை. ஆனால் நீங்கள் சட்டத்தை மீறியதால் அதிகாரிகள் உங்களைப் பிடித்து ஏழு நாட்களில் தூக்கிலிடப் போகின்றார்கள் என்றால் - ஓ, எவ்வளவு துயரம் அனுபவிப்பீர்கள்?

இதுதான் மரணத்தை நினைவில் வைப்பது என்பது. மரணம் ஓரிரு நாட்களில் உங்களைத் தழுவப் போகிறது. இதை அறியாத வரை, நீங்கள் ஆறுதலாக இருக்கின்றீர்கள். இவ்வாறு நீங்கள் நினைக்க வேண்டும், அப்போதுதான் அறத்தை பயில்வதற்கான திடநம்பிக்கை உங்களுக்குக் கிடைக்கும். எனவே தான் புத்தர் மரணத்தை எந்நேரமும் நினைவில் வைத்திருக்கச் சொன்னார். சாதரணமாக மரணத்தைப் பற்றி நினைக்கும் போதே உங்களுக்கு அச்சம் ஏற்படுகிறது, எனவே நாம் அதைப் பற்றி நினைக்க விரும்புவதில்லை. அப்படியிருக்க நீங்கள் எப்படி முட்டாளாக இல்லாமல் இருக்க முடியும்? ஏற்கனவே அந்த நிலைமையில் விழுந்துவிட்டீர்கள், ஆனால் உங்கள் நிலைமையை நீங்கள் உணரவில்லை. எனவே ஆறுதளோடு இருக்கின்றீர்கள். ஆனால் அறிவோடு இருந்து மரணத்தை எல்லா நேரத்திலும் நினைவில் வைத்திருந்தால், ஒரு அவசரத்தோடு அபாயத்திலிருந்து தப்பிக்க முற்படுவீர்கள். எப்படி உங்களால் இப்படி உட்கார்ந்து கொண்டு ஏதும் செய்யாமல் இருக்கமுடிகிறது? நீங்கள் சட்டத்தை மீறியதன் விளைவாக இன்னும் ஏழு நாட்களில் உங்களைத் தூக்கில் இடப்போவதாகத் தெரியவந்தால் நீங்கள் ஏதும் செய்யாமல் இருப்பீர்களா? அவசர அவசரமாகத் தப்பிக்க வழி தேடுவீர்கள் அல்லவா?

Mindfulness of Death

If you were to break the law, and in seven days they were going to execute you, how would you feel? If you were sentenced to death, and in seven days they

were going to execute you, what would you do? I want you to reflect on this. As you are, you’re already sentenced to be executed, simply that you don’t know how many days you’ve got left. It might even be less than seven. Do you have a sense of this? You’re already sentenced to death. They’re going to have to execute you, but if you don’t know, you don’t feel anything. But if you were to break the law and the authorities were to catch you and execute you in seven days—oh, you’d really suffer.

This is mindfulness of death. Death is going to execute you in just a day or two. When you’re not aware of this, you relax. You have to think in this way so that you give rise to the conviction needed to practice the Dhamma. That’s why the Buddha has you practice mindfulness of death at all times. Normally, when you think of death, it scares you, so you don’t want to think about it. And when that’s the case, how can you not be stupid? You’ve already fallen into that condition, but you have no sense of yourself. So you relax. But if you come to your senses and contemplate mindfulness of death at all times, you’ll hurry up and make the effort to escape from danger. How can you just sit there? If you were to break the law and in seven days they were planning to execute you, could you simply take it easy? You’d have to hurry up and find a way out.

*** முற்றும் ***