மனத்தின் பிதற்றல்

மனத்தின் பிதற்றல்

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Chatter In the Mind

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

கேள்வி: நான் பேசவில்லையென்றாலும், வாயிலிருந்து வார்தைகள் வரவில்லையென்றாலும் என் மனத்தில் பல வார்த்திகள் இருக்கின்றன. மனம் அலப்பிக்கொண்டே இருக்கிறது. நிற்பதே இல்லை. அதை அமைதியாக்க முயற்சித்தால், மேலும் அதிக வார்த்தகளே மனத்தில் தோன்றுகின்றன. மனத்தின் பிதற்றல் அதிகமாகிறதே?

ஒரு வேடிக்கையான சொல்லுகை உண்டு, ' இந்த மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களை குணப்படுத்திவிடும், ஆனால் அதை எடுக்கும் போது ஒரு குரங்கை மட்டும் நினைக்கக்கூடாது.' செய்து பாருங்கள். முடியவே முடியாது. குரங்கை நினைக்காமல் இருக்க முடியாது. மனத்திடம் அன்பாக பேசவேண்டும். அதனிடம் அமைதி, அழகு, நிசப்தம், சாந்தம், தெளிவு ஆகியவற்றை பற்றி பேசுங்கள். இந்த பேச்சுத்தான் பேச்சினை முடிக்கும் பேச்சு. மாராக மனத்திடம், 'பேசாதே! மூடு! நிறுத்து, நிறுத்து. உனது பிதற்றலை நான் கேட்க விரும்பவில்லை!' என்று கூறினால் அது வேலையாகாது. நீங்கள் சொல்லி முடித்தவுடன் அது, 'இப்போ பேசலாமா?' என்று தான் கேட்கும் (சிரிப்பு).

முதல் பாடமாக நாம் எதை பற்றி எண்ணிக்கொண்டிருக்கக்கூடாது என்பதை பார்ப்போம். நமது நன்மைக்கு எது உகந்தது இல்லை? இது அனைவரும் தெளிவாக அறிவதில்லை. யாரொ தமக்கு செய்த தீவினையை நினைத்து சிலர் கோபத்தை அறைத்துக்கொண்டே இருக்கின்றனர். அல்லது உலகின் மீது கோபம். உலகை அசுத்தப்படுத்துபவர்கள் மீது கோபம். போர் முரசு கொட்டுபவர்கள் மீது கோபம். பிறரை அலட்சியப்படுதுபவர் மீது கோபம். நமக்கு பொல்லாத ஆத்திரம். இதை நினைத்து நினைத்து போங்கிக்கொண்டிருக்கிறோம். மேலும் இவற்றையெல்லாம் கண்டு நாம் கோபப்படவேண்டும் என்றும் நினைக்கின்றோம்.

இது பலருக்கு தெரிவதில்லை. நினைத்துப்பாருங்கள். நாம் தான் துக்கத்தை அனுபவிக்கிறோம். இந்த வெறுப்பு, கோபத்தை அறைத்துக்கொண்டிருப்பது எல்லாம் ஆறுதல் அற்ற அனுபவங்கள். இது தேவை இல்லை. உலகிற்கு எதுவும் செய்வதில்லை. இப்படி கோபப்படுவதால் உலகை சரிசெய்வதும் இல்லை. நம்மையும் சரி செய்வதில்லை.

ஆக இப்படி மனத்தில் கோபத்தை கிளரிக்கொண்டு இருக்கக்கூடாது. 'இது நல்ல கருத்தல்ல' என்று நமக்கு நாமே நினைவுப்படுத்திக்கொள்ளவேண்டும்.

இரண்டாவது பாடம் கற்பனைக்கோட்டளைக் கட்டுவது. பொருட்களை விரும்புவது. எனது லாட்டரி சீட்டு வெற்றிப்பெற்றால் நான் சிங்கப்பூர் சென்று வரலாம், பெரிய வீடு வாங்கலாம். இதையும் அதை கற்பனை செய்வது. 'ஆகா முன்காலத்திற்கு போக முடிந்தால் எப்படி இருக்கும். அப்போது எவ்வளவு நன்றாக இருந்தது.' உங்கள் அமைதியை கெடுக்கும் மற்றொரு வழி இது. போலீஸ்காரர் கதவை தட்டி, 'அமைதியை கெடுக்கின்றீர்கள்,' என்று சொல்ல வேண்டும் (சிரிப்பு). ஆனால் இதுவும் திறமையற்ற செயல் என்பது நமக்கு தெரிவதில்லை. கோபத்டைவிட கற்பனைக்கோட்டை கட்டுவது அந்தளவு பிரச்சனையில்லை என்றாலும் இது தொடர்ந்து ஒரு முழுமையான நிலைக்கு நம்மை கொண்டுசெல்வதில்லை. எப்போதுமே ஒரு முடிவில்லா தேவை இருப்பதாக நாம் உணர்கிறோம். இந்த கணத்தில் ஒரு திருப்தி இல்லாததாக உணர்கிறோம். வேறு எங்காவது செல்லவேண்டும், வேறு காலம் வரவேண்டும் அப்போதுதான் மகிழ்ச்சியடைவோம் என்றே நினைக்கின்றோம். உங்களை நீங்கள் கடனாலியாக்கிகொள்கின்றீர்கள். ஆக ஆசை என்பது ஒரு கடன் வாங்குவது போல. ஆசைக்கு உவமானம் இதுதான். இந்த கடனை அடைக்க வேண்டும். கற்பனை கோட்டைகளையும் ஆசையையும் நிறுத்திவிட்டால் கடனிலிரிந்து விடுபட்டது போலத்தோண்றும். 'ஆகா! கடன் இல்லாமல் இருப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது.' தேவை இருக்கும் போது கடன் படுகிறோம். கடனை கட்டிக்கொண்டே இருந்தாலும் கடனை அடைக்க முடிவதே இல்லை. இறுதியில் ஒரு நாள் இதை உணர்ந்து ஆசையை விடுகிறோம். உடனே கடனும் அடைக்கப்படுகிறது. இனி அது நமக்கு வேண்டாம். இப்போது முழுமையாகிவிட்டது போல உணர்கிறோம். விடுதலை பெற்றுவிட்டோம். எதிர் கணக்கு இல்லை. நீரில் மூழ்க்கி இருப்பதில்லை. மிதக்கிறோம். விரும்புவது எல்லாம் கிடைத்தாலும், உலக ஆசைகளை பூர்த்தி செய்தாலும் திருப்தி செய்வதில்லை. புத்தர், 'தங்கக் காசுகளாக மழைப் பெய்தாலும் அது நமக்கு போதாது,' என்றார். வேறு வழி என்னவென்றால் அசை படுவதை நிறுத்துதல். பின் வேண்டியது கிடைத்துவிடுகிறது, தெரிகிறதா? விரும்பாத போது நமக்குத்தேவையும் படுவதில்லை. இது வேண்டும் அது வேண்டும் என்று தோன்றுவதில்லை. குறைப்பாட்டை தோற்றுவிப்பது ஆசைபடுவதினால் தான். ஆசைபடுவது குறைப்பாட்டை உறுவாக்குகிறது.

கேள்வி: உலக நடவடிக்கைகளை கண்டு நாம் கோபப் படுவதையும் அப்படி கொபப்படக்கூடாது என்றும் கூறினீர்கள். ஆனால் உலகத்தில் நடப்பதைக் கண்டு பயமும் ஆழ்ந்த துயரமும் உண்டாகிறதே? மக்கள் ஒருவரை ஒருவர் கொண்றுக்கொண்டிருக்கின்றனர், அடித்துக்கொள்கிறார்கள், புண் படுத்திக்கொள்கிறார்கள் சில சமயம் நமது பெயரில் இதையெல்லாம் செய்கிறார்கள். பல கொடுரமான விஷயங்கள் உலகில் நடந்துக்கொண்டிருக்கிறது. இச்செயல்களைக்கண்டு துயரம் கொள்ளாமல் வேறு எப்படி எதிர்கொள்வது?

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள், 'துயரம் எப்படிப்பட்ட உணர்சியுடையது?' அந்த உணர்ச்சி உங்களுக்கு பிடித்திருக்கிறதா? இல்லை. இந்த சம்பவங்கள் காலத்தின் இறுதிவரையுமே சென்றுக்கொண்டிருக்கப்போகிறது. நீங்கள் துயரத்தின் முடிவுக்கு வரவே முடியாது. துயரத்தின் முடிவுக்கே வரமுடியாது எபதை நினைக்க வேதனையாகத்தான் இருக்கிறது... நீங்கள் எப்போதாவது துயரப்படவில்லையென்றால் உங்கள் கடமையிலிருந்து தவருகின்றீர்கள். இல்லையே? இது 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாளும், வருடத்தில் 365 நாட்களும் நடக்கப்போகிறது. மக்கள் கொடூரமான கஷ்டங்களை சந்திக்கின்றனர். ஆகவே எப்போதாவது நீங்கள் துயரமும் சோகமும் கொல்லவில்லையென்றால் உங்கள் கடமையில் தவருகின்றீர்கள் அல்லவா?

அல்லது இப்படி துயரப்படுவது வீன் வேலையாக இருக்கலாம். இப்படி துயரப் பட்டு எதிர்கொள்வது பயனே இல்லை. இதுவே உண்மை நிலை.

இப்படி துயரமும் சோகமும் கொள்வதில் எந்த பயனும் இல்லை. சொல்லப்போனால் நீங்கள் உலகில் உள்ள துயரத்தை அதிகரித்துவிட்டீர்கள். எனவே உங்கள் கடமை உலகில் உள்ள துயரத்தை மேலும் அதிகரிக்காமல் இருப்பது தான். யாராவது மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் இல்லையா? இப்படி எதிர்கொள்வது மிகவும் உற்சாகப்படுத்தும். நல்லது. துயரத்தில் மூழ்கி எதையும் செய்யமுடியாமல் நிலைகுழைந்துவிடமாட்டீர்கள். ஆனால் துயரத்தின் காரணமாகவோ கோபத்தின் காரணமாகவோ நாம் செய்யும் செயல்கள் நம்மை விரைவில் சோர்ந்துவடையச்செய்யும். அன்பினாலும் தயாளச்செய்கைகளினால் வரும் இன்பத்தின் காரணமாக செய்யப்படும் செயல்கள் நம்மை சோர்வடையவே செய்யாது. அதிக ஊக்கத்தைதான்கொடுக்கும். நாம் உலக விஷயங்களைப் பார்த்து நாம் அவற்றை கண்டுக்கொள்ளாமல், அனுதாபமில்லாமல், உணர்ச்சியல்லாமல் இருக்கப்போவதில்லை. நாம், நம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியாது. செய்ய முடிந்ததை தான் செய்யமுடியும். ஆகவே செய்ய முடிந்ததை ஏன் செய்து சந்தொஷப்படக்கூடாது? புதிது புதிதாக தாண தற்மங்களைச் செய்து அச்செய்கைகளினால் ஏன் மகிழ்ச்சியடையக்கூடாது ...' நல்ல காரியங்களை செய்வதில் மகிழுங்கள். பிடிக்க வில்லை என்றால் செய்ய வேண்டாம். மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே நற்காரியங்கள் செய்யுங்கள். இது ஒரு கண்டிப்புள்ள கடமை இல்லை. குற்ற உணர்சியோடு செய்வதில்லை. இது சந்தோஷமான கலைச் செயலுக்கு ஈடானது. ஆகவே நாம் அந்த உற்சாகத்தை கண்டுபிடிக்க வேண்டும். பின் பெரும் காரியங்களைச் செய்யலாம்.

கேள்வி: ஞானம் பெரவில்லை யென்றாலும் ஞானம் பெற்றது போல நடந்துக்கொள்ள சொல்லியிருக்கின்றீர்கள். அதே போல தாயாளகுணம் தோன்றாவிட்டாலும் தானம் செய்யவேண்டுமா?

கண்டிப்புள்ள கடமையாக செய்யவேண்டாம். சில சமயம் இசை (அதாவது மனசார செய்யும் விருப்பம்) இருக்காது. அப்போது உங்களை சோர்வடையும் செயல்களை தவிர மற்றவற்றை செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு தானச் செயல் செய்யலாம். என்ன செய்வது என்பதை நினைத்துப் பாருங்கள் - ஏழை ஆப்ரிக்க நாடுகளுக்கு தினசரி உணவு அனுப்பமுடியுமா? உங்களுக்கு வேண்டியது உங்கள் படுக்கையின் அருகில் ஒரு ஜாடி. அழகான ஜாடி. பின் தினசரி எவ்வளவு தர முடியும் என்று முடிவு செய்துக்கொள்ளுங்கள். ஒரு ரூபாயோ, நாலனாவாகவும் இருக்கலாம். சிறுவர் உட்பட எல்லொரும் சற்று காசு பொடமுடியும். காலையில் எழுந்தவுடன் முகத்தை கழுவிவிட்டு, சில முறை நீண்ட உள்மூச்சும் வெளிமூச்சும் எடுத்துவிட்டு ஒரு புண்ணகையுடன் உங்கள் தயைச்செயலை செய்யுங்கள். ஒரு ரூபாயை எடுத்து அந்த ஜாடியில் போடுங்கள். எங்கும் போக வேண்டியதில்லை. தயைச்செயல் செய்தாகிவிட்டது. மாதக் கடசியில் ஜாடியில் உள்ள காசினை ஒரு தகுதியான சேவை செய்கிற நிறுணத்தாருக்கு அணுப்பிவிடுங்கள். ..அல்லது ஆறு மாதங்களுக்கு பின், எப்படியானாலும் சரி... நாளின் ஆறம்பத்தில் ஒரு தாராள மனப்பான்மையுடன் மகிழ்சியோடு துவங்குகின்றீர்கள். நாளை துவங்குவது இது ஒரு நல்ல வழி. உலகில் எல்லாவற்றையும் செய்ய வேண்டியதில்லை. உங்களால் முடியாது. யாராலும் முடியாது. ஒன்றாக எல்லாம் செய்யவேண்டும் அல்லது ஏதும் செய்யக்கூடாது என்றில்லை. ஒன்றாக விட்டைவிட்டுச் சென்று எல்லாவற்றையும் தானமாக வழங்கிவிட்டு கல்கத்தா நகருக்கு சென்று அங்குள்ள தொழு நோயாளிகளிடம் வேலைசெய்யவேண்டும் அல்லது ஏதும் செய்யக்கூடாது. இவ்விரண்டுக்கும் இடையில் தான செயல்கள் செய்ய எத்தனை வேறுபட்ட வழிகள் இருக்கின்றன! உங்களுக்கு பிடித்த நிறுவனத்துடன் நீங்களும் சேர்ந்து வேலைசெய்யலாம். உதவும் கரங்கள், அனாதை இல்லங்கள் போன்ற நூற்றுக்கணகான சிறந்த நிறுவனங்கள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்த நிறுவனத்தாருடன் சேர்ந்து தொண்டு செய்யலாம். முடிந்ததை செய்யலாம். ஒவ்வொரு நாளும் செய்யக்கூடியது. நல்ல, மகிழ்ச்சி ஏற்படுத்துகிற, சிறந்த செயல்.

தூய்மையான தயாளச்செயல் செய்யும் வரை தாமதிக்கவேண்டாம். வரி குறையும் என்பதால் காசோலை அனுப்பி ஒரு தானச்செய்தாலும் பரவாயில்லை. களங்கிய தயாள என்றாலும் அது தயாளச் செயலே. ஒன்றும் செய்யாததைவிட பெரிது. பயிற்சி செய்கின்றீர்கள். ஒரு நாள் களங்கம் இல்லாததாகிவிடும். வாசித்தால் குண்ணகுடி வைத்தியனாதனைப்பொல வயலின் வாசிப்பேன் இல்லையென்றால் வாசிக்கமாட்டேன் என்றால் அவரைப்போல என்றும் வாசிக்கப்போவதில்லை. முதலில் சுலபமான பாடலில் தோடங்க வேண்டும். எங்காவது தொடங்கவேண்டும். நாளடைவில் பயிற்சி செய்ய செய்ய சிறப்புறலாம்.

புத்தர் தாயாள குணத்தின் பலன் உங்களுக்கு தெரிந்தால் ஒரு நாளும் அதைச் செய்யாமல் இருக்கமாட்டிர்கள் என்றார். குறைந்தது சில பருக்கை அரிசியினையாவது பறவைகளுக்கு எறும்புகளுக்கும் போடுவீர்கள் என்றார். ஒரு சிறு அளவு பறவைகளுக்கு போடுவதே மேன்மையான காரியம் என்கிறார். அதை செய்வதினால் உணடாகும் பலன் உங்களுக்கு தெரியவந்தால் அதை செய்யாமல் இருக்கமாட்டீர்கள். அதிக வேலையில்லை. சிறிய அளவு தயாளச் செயலானாலும் நல்லதே.

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

* * * * * *

Transcribed from an audio tape available at birken.ca

Chatter In the Mind

Q Even when I am not talking and there are no words coming out of my mouth, there are many words in my mind. It is chattering a lot, never shutting up. if I really want to keep silence inside, then even more words comes up and the chatter increases.

There is a funny little saying, 'Take this medicine. It will cure you but don't think of a monkey when you are taking it.' Try to do that. It is impossible. We have to sweet talk our mind. Talk to it about peace, lovely, stillness, serenity . This is talk that leads to the end of talk. Thiன்king this way, 'Dont't speak, just shutup, just shutup, I don't want to hear anymore from you' does not work. It has nothing to do and says, 'Can I talk now?'

The first lesson is what should I not dwell on. What is not conducive to my well being? It is not obvious to everybody. Some people are grinding away on this anger about somebody did something to them. Anger at the world. Anger at the polluters of the world, the war-mongers of the world, the inconsiderate people of the world, somebody abused you or something. We are mad. We are churning this over and we think we should be.

And it may not occur to many people that guess what, we are suffering. It is a very uncomfortable experience this ill-will aversion.and grinding away with this anger. Tthis is not necessary. You are not doing anything to the world at all. You are not fixing it by doing that (anger in the mind) or to yourself.

First thing is to say is don't do that. Lets not do that. learning to say, 'Not a good idea.'

Then the other one is fantasizing. Wanting things. Imagining what if i win the lottery, then I can go t Hawaii. I'll buy a big house and this and that . If only I can go back in time. Remember that boyfriend I had 15 years ago. That was so good, wonderful and on and on. That is another way of disturbing your peace. Should be a cop knocks at the door 'disturbing hte peace.' But it may not occur to us that is anything wrong. It is less problematic than anger but its endlessy creating a sense of incompletion. you feel that this moment is not adequate. You are not complete, you must go somehwere else, you must be some other time, some other place and then you will be happy. You are putting yourself in debt.. what we call making yourself in debt. So desire is debt. That is the simili for desire. And you are going to have to dischage this debt. When you stop fantazing and desiring you will feel like you just got out of debt. Wow it is nice to be out of debt. And when you are wanting you are in debt. You got to keep paying, paying, paying for that scenario that desire even if you pay pay and pay into that it is not settled. Until one day you finally get over it and then your debt is cancelled. You don't want that anymore. Now you are complete, you are free. You are not in a negative state. You are not below (water), you are boyant then. You can try to get all the things you want, you can fulfil your desires in the world but they notoriously never end. The Buddha says the rain can turn to gold and still you will not have enough. The other way is to stop wanting it and then you got it, you see. When you don't want it you don't lack it. You don't have lack. You create lack by wanting. To want is to lack.

Q. You raised the kind of anger at what is going on in the world. But there is also fear or grief. What is the right way of dealing with people killing each other and beating each other, hurting each other sometimes in your name. Some of the terrible things that are going on in the world. What is another way to respond to that other than feeling grief and ....

Well ask yourself, 'How does grief feel?' You like it? No. This is going to go on till the end of time. You are going to be never be out of grief. What a prospect... When you stop grieving you ae neglecting your duty to grieve, aren't you? This is always going on 24hrs a day, 7 days a week, 365 days a year. Terrible things are happening to people. So anytime you stop grieving or being sad you are neglecting your duty right? Or you know, maybe it is a waste of time. There is no benefit to it at all. And that is really actually true.

There is not benefit to it at all. You just added to the grief in the world. So you should regard as your duty not to add to the grief. So the worse it gets the better it feels. Not because it is bad but because the worse it gets the greater your obligation not to add to the grief in the world. Somebody has got to be happy. And it is very uplifting, very good. You will never get burnt out. Actions motivated by grief and anger will alwys burn you out. Actions motivated by love and the enjoyment of charitable actions will never burn you out. It will give you mor energy. So it is not like you are going to b apathetic or callous or indifferent. You are going to say, 'I cannot do everything, ofcourse. I can only do some things. So why don't I enjoy whatever i do and let me be motivated by enjoyment of the creative act of generosity etc.' Be creative, enjoy the creation of doing good things. Don't do it if you don't like it. If it is not joyful then don't do it. Refuse to. Go on strike. No more good actions until i enjoy it. So this is not a grim duty. This is not a guilt driven thing. It is some sort of enjoyable art form. That is what it is. So we have to find that motivation and then we will do great things, wonderful things with creativity.

Q. You also said if you are not enlightened act enlightedned. so if you are not feeling particularly generous be generous any way?

Don't do it as a grim duty. But sometimes the music won't be there. Go through the motions that won't burn you out. You can do one act of generosity everyday. You may think what am i am going to do - send a sandwich to Africa? All you havae to do is have a jar besides your bed. A nice jar. And decide what you can afford to give. If it is 25c a day, a penny every body can give something even a kid. First think you wake up in the morning take a few deep breaths, smile, wipe your face then do your act of generosity. Take a quarter and put it in the jar. You don't have to go anywhere, the act of generosity is done. At the end of the month whatever is in the jar you send them (to some charity) ...at the end of six months whatever. But the begining of the day is an act of sharing and trying to enjoy that. A good way to start the day, you don't have to do everything in the world. You can't, nobody can do it, nobody. Its not like all or nothing. Either I leave my house and home and give everything away go and work with the lepers of Kolkatta or I do nothing. There is hugh spectrum in between. Enjoyable all kinds of nice group actions, habitat for humanity, whatever appeals to you, whatever you like. It is just that bit of effort in the morning. There are all kinds of creative things. Let us make this easy make it reasonable make it possble. Don't make it outlandish. Something I can do everyday, very simple. Nice, cheerful, positive.

Don't wait till you feel perfect detachment or anything. Even when you think, 'I am going to get something back for this.. tax receipt..' Fine, go ahead. Do it even if it is tainted generosity. Do it. Don't wait until it is perfect generosity. It is generosity, it is great, you are working on it. It is practice. Refusing to play the piano until you can play Bethovan sonata, you will never play Bethovan. You have to start with 'ba ba black sheep' and it may not even be good but you have to start somewhere.

The Buddha said if you knew the results of generosity you wouldn't pass a day without throwing a little rice out to the birds or even the ants. He is saying you even throw a crumb of food out he back and feed the birds. If you knew the results that came out of that you would not pass a day without doing that. Doesn't take anything just that small.

* * * * * *