மரணத்தைப் பிரதிபலிப்பது

மரணத்தைப் பிரதிபலிப்பது

அஜான் சுசித்தோ

Reflecting on Death

Ajahn Sucitto

(excerpt from the book 'Kamma and the end of Kamma')

மரணம் என்ற உண்மையை நிதானமாகவும், அமைதியாகவும் எண்ணிப் பார்த்தோமானால் அது மனத்தை அமைதியாக்கவும், சீராக்கவும் உதவும். மனம் போனபடி, பேராசை கொண்டு வாழ மாட்டோம். மேலும் பிறர் மேல் அழுக்காறு (grudge) கொள்ள மாட்டோம். மரணத்தைப் பற்றிய கருத்துக்கள் இது போன்ற தீச்செயல்களில் உள்ள பற்றினை, அவற்றின் ஒட்டுந்தன்மையினைக் குறைத்து விடுகிறது. அதைப் பெற வேண்டும், இப்படி வாழ வேண்டும் என்ற நமக்குள் உள்ள அழுத்தங்கள் குறைந்து விடுகின்றன. ஏன்? அப்படியே கிடைத்தாலும் அவற்றை ஒரு நாள் விட்டு விட்டுத் தானே செல்ல வேண்டும்? உண்மையிலேயே நமது நேரமும், கவனமும் எதன் மீது செலுத்துவது சரி? மரணத்தின் மீது நாம் பிரதிபலிக்கையில் நமது செல்வம், வருவாய், சக்தி, மனத்தின் சுறுசுறுப்பு, நலம் எல்லாம் எல்லையுடையவை என்பதும், அவை படிப்படியாகக் குறைவன என்பதும் நமக்கு நினைவு படுத்தப் படுகிறது. ஆகவே இச்செல்வங்களை நமது வாழ்க்கையை மேம்படுத்த அல்லது சுதந்திரம் பெறப் பயன் படுத்தலாம். அல்லது கற்பனைக் கோட்டைகளைக் கட்டவும், பயனற்ற நோக்கங்களைப் பெறுவதிலும் செலவு செய்யலாம். ஆக நுண்ணறிவுடன் பயன் படுத்தினால் மனம் நல்ல நிலையில், தூய்மையாகவும், நிகழ்காலத்திலும் இருக்கும். பாரத்தை இறக்கிவிட நேரம் வந்து விட்டது என்பதை நினைவு படுத்தும்.

மரணத்தைப் பிரதிபலிப்பதன் மற்றொரு அணுகூலம் நம்மிடம் ஒரு நல்ல இயல்பு தோன்றுகிறது. அதுவே இரக்கம். தீச்செய்கைக்கும், துன்பத்துக்கும் ஒரு முக்கியமான காரணம் என்னவெனில் மற்றவர்களிடத்தில் கருணை இல்லாமல் போதல் தான். நவீன கால வாழ்க்கையில் தொலைக் காட்சிகளிலும், கேட்டு அறிந்ததனாலும் அல்லது நகரங்களின் கூட்டமான தெருக்களிலும் பொது இடங்களிலும் நாம் பல விதமான மனிதர்களைப் பற்றித் தெரிய வருகிறோம். அவர்களை 'மற்றவர்' - பிற தேசத்தார், பிற மாநிலத்தார், பிற மொழி பேசுவோர், பிற ஜாதியினர், பிற மதத்தவர் - என்று வேறு படுத்தி விடுகிறோம். அதனால் அவர்கள் பால் நமக்கு எந்த உணர்ச்சியும் இல்லாமல் போய்விடுகிறது. அல்லது ஏன்? அவர்கள் மீது ஐயப்பாடும் எழலாம். இப்படிப்பட்ட ஐயம் கொண்ட மனக்கருத்து இருக்கும்போது புறக்கணிக்கும் எண்ணங்களும், தீய, தீவிரவாத எண்ணங்களும் கூடத் தோன்ற இடம் இருக்கிறது. ஆனால் நம் எல்லோருக்கும் உள்ள பொது அனுபவங்களைப் பிரதிபலிக்கும் போது - அவர்களும் நம்மைப்போல வாழ்க்கையில் துன்பம், பிணி, இழவு மரணம் ஆகியவற்றைப் பொருட்படுத்த வேண்டும் என்பதைப் பிரதிபலிக்கும் போது - அவர்கள் மீது நமக்குக் கருணை பிறக்கின்றது.

If you consider the fact of death carefully and coolly, it helps to calm and steady the mind; you don’t get reckless or greedy, and don’t hold grudges. The perception of mortality causes some of the sticky stuff to lose its grip. Where’s the pressure to get, or to be, something when everything you get, you lose? What is really worthwhile giving time and attention to? The recollection of mortality also reminds us that our resources, our energy, mental agility and health are finite and dwindling. We can use our resources in a way that will enhance or free our lives, or we can waste the time in fantasies and frustrations. Used wisely then, the recollection of death keeps the mind in shape, clean and present. It tells us it’s time to put down the load.

Another positive quality that comes out of recollecting mortality is empathy. One of the greatest sources of affliction, and basis for negative kamma, is a loss of empathy with others. In modern urban life, we may experience many people through media stereotypes, or in the no-man’s land of busy streets and public places. People then become ‘other’ – other nationalities, other religions etc. – and we may feel either nothing, or mistrust, for them. In an emotional field with such a bias, indifference, and even brutality, finds room to breed. But if we consider our common ground – that like us, others have to endure stress, illness, bereavement and death – that helps to generate empathy.