விஜய சூத்திரம் Vijaya Sutta

சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home

Sn 1.11

விஜய சூத்திரம்: வெற்றி

Vijaya Sutta: Victory

Translated from the Pali by: Thanissaro Bhikkhu

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: தணிசாரோ பிக்கு

* * *

Whether walking, standing,

sitting, or lying down,

it flexes & stretches:

this is the body's movement.

நடக்கும்போதும், நிற்கும்போதும்

உட்கார்ந்திருக்கும்போதும் படுத்திருக்கும்போதும்,

அது வளைகிறது விரிகிறது:

இது தான் உடலின் இயக்கம்.

Joined together with tendons & bones,

plastered over with muscle & skin,

hidden by complexion,

the body isn't seen

for what it is:

filled with intestines, filled with stomach,

with the lump of the liver,

bladder, lungs, heart,

kidneys, spleen,

mucus, sweat, saliva, fat,

blood, synovial fluid, bile, & oil.

On top of that,

in nine streams,

filth is always flowing from it:

from the eyes : eye secretions,

from the ears : ear secretions,

from the nose : mucus,

from the mouth : now vomit,

now phlegm,

now bile.

from the body : beads of sweat.

And on top of that,

its hollow head is filled with brains.

நரம்பினாலும் எலும்பினாலும் இணைக்கப்பட்டு,

தசையினாலும் தோலினாலும் போர்த்தப்பட்டு,

நிறத்தினால் மறைக்கப்பட்டு,

உள்ளது உள்ளபடி

உடல் சரியாகப் பார்க்கப்படுவதில்லை:

குடலால் நிரப்பப்பட்டு, வயிற்றால் நிரப்பப்பட்டு,

கல்லீரல் வீக்கம் தெரிய,

சிறுநீர்ப்பை, நுரையீரல், இதயம்,

சிறுநீரகம், மண்ணீரல்,

சளி, வியர்வை, எச்சில், கொழுப்பு,

இரத்தம், எலும்பு சேரும் இடத்தில் உள்ள நீர், பித்தம், எண்ணெய்.

இது போதாதென்று,

ஒன்பது அருவிகளாக

அசுத்தம் ஒழுகிக் கொண்டே இருக்கின்றது:

கண்களிலிருந்து: கண்மலம்,

காதிலிருந்து: காதுமலம்,

மூக்கிலிருந்து: சளி

வாயிலிருந்து: சிலசமயம் வாந்தி,

சிலசமயம் கோழை,

சிலசமயம் பித்தம்.

உடலிலிருந்து: வியர்வைத் துளிகள்.

இது போதாதென்று,

குழிவுள்ள தலையில் கட்டிகட்டியாக

மூளையும் அடைக்கப்பட்டிருக்கிறது.

The fool, beset by ignorance,

thinks it beautiful.

But when it lies dead,

swollen, livid,

cast away in a charnel ground,

even relatives don't care for it.

Dogs feed on it,

jackals, wolves, & worms.

Crows & vultures feed on it,

along with any other animals there.

பேதமையால் சூழப்பட்ட முட்டாள்

உடலை அழகானதென்று நினைக்கின்றான்.

ஆனால் அது இறந்துகிடக்கும் போது,

புடைத்து, நீலநிறம் கொண்டு,

சுடுகாட்டில் கிடத்தப்பட்டிருக்கும்போது,

உறவினரும் அக்கறை காட்டுவதில்லை.

நாய்கள் அதை உண்ண,

நரிகளும், ஓநாய்களும் புழுக்களும்

காக்கைகளும் பிணந்தின்னிக் கழுகுகளும்,

அவற்றோடு அங்குள்ள மற்ற விலங்குகளும்

போட்டிபோட்டு உண்கின்றன

Having heard the Awakened One's words,

the discerning monk

comprehends, for he sees it

for what it is:

"As this is, so is that.

As that, so this."

Within & without,

he should let desire for the body

fade away.

With desire & passion faded away,

the discerning monk arrives here:

at the deathless,

the calm,

the undying state

of Unbinding.

விழிப்புற்றவரின் வார்த்தைகளைக் கேட்ட

விவேகம் உள்ள துறவி அதைப் புரிந்துள்ளார்,

உள்ளதை உள்ளபடி அறிந்துள்ளார்:

"இது இருந்தால் அது இருக்கிறது.

அது இருந்தால் இது இருக்கிறது. "

உள்ளும் வெளியும், (தன் உடல், மற்றவர் உடல்)

உடல் மீது உள்ள ஆசையை

மங்க விட வேண்டும்.

ஆசையும் பற்றும் மங்கிப் போக,

விவேகம் உள்ள துறவி இந்த நிலைக்கு வந்து சேர்கிறார்:

சாவற்ற,

அமைதியான,

நிப்பாண,

மாற்றமில்லா நிலை.

This two-footed, filthy, evil-smelling,

filled-with-various-carcasses,

oozing-out-here-&-there body:

Whoever would think,

on the basis of a body like this,

to exalt himself or disparage another:

What is that

if not blindness?

இந்த இரண்டு கால் கொண்ட, அழுக்குள்ள,

பல்வேறு தீ நாற்றங்கள் அடங்கிய,

இங்கும் அங்கும் கசியும் உடல்:

இப்படிப்பட்ட இயல்பு கொண்ட

தன் உடலைப் போற்றவும்

மற்றவர் உடலைத் தூற்றவும்

யார் தான் நினைப்பார்:

இதைக் கண்மூடித்தனம்

என்று சொல்லாமல்

வேறு என்ன சொல்வது?

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

©1996 Thanissaro Bhikkhu. See details English Source

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.