விதண்டாவாதம்

விதண்டைப் பேச்சு

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Frivolous Speech

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

விதண்டைப் பேச்சு என்பது என்ன?

நான்கு வகையான தவறான பேச்சு உள்ளன.

1. ஏமாற்றுப் பேச்சு அல்லது பொய்ப் பேச்சு.

நல் வாய்மை என்பது எட்டுக் கூறுகள் கொண்ட அட்டாங்க மார்க்கத்தில் ஒன்று. அட்டாங்க மார்க்கத்தின் பாதையில் தொடர்வதால் நாம் விடுதலை பெறுகின்றோம். எதிலிருந்து விடுதலை பெறுகிறோம்? நமது அறியாமையிலிருந்து விடுதலை பெறுகிறோம். நமது கோப தாபங்களிலிருந்தும், பற்றுகளிலிருந்தும் விடுதலை பெற்று ஓர் அமைதியான நிலையை அடைகிறோம். உங்கள் பேச்சில் பொய்மை இருக்குமானால் நீங்கள் அந்த அமைதி நிலைக்குப் போய்ச் சேர முடியாது. நாம் ஏன் பொய் பேசுகிறோம்? பெரும்பாலான நேரங்களில் நாம் பொய் பேசுவது நமது ஆணவத்தைக் காப்பாற்றத்தான். நாம் விரும்புவது கிடைப்பதற்கும், நம்மிடமிருப்பதை அல்லது நாம் விரும்புவதைக் கைவிடாமல் இருப்பதற்காகவும் பொய் பேசுகிறோம். பின்னர் அதுவே ஒரு பழக்கமாகவும் மாறி விடுகிறது. நம்மை அறியாமலேயே நாம் பழக்க தோஷத்தினால் பொய் பேசுகிறோம். அப்படி இருந்தால் நாம் அமைதி நிலைக்குப் போக முடியாது. வாய்மைக்குப் புறம்பாகப் பேசுவது நமது பற்றுகளின் காரணமாகத்தான்.

2. கடுமையான பேச்சு

அடுத்தது கடுமையான பேச்சு. காட்டமான பேச்சு, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, களங்கப் படுத்திப் பேசுவது, சத்தமிட்டுப் பேசுவது, இவையெல்லாம் கடுமையான பேச்சு என்ற தலைப்பில் சேரும். கோபம் என்ற எரிபொருளால் தூண்டப் பட்டதால் இப்படிப் பேச வைக்கின்றது. இப்படிப் பேசும் போது பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைப் பற்றியது மட்டும் அல்ல, இப்படிப் பேசுவதற்கான நோக்கம் என்ன என்பதை நாம் அறிய வேண்டும். நாம் அனைவருமே பேசும் போது பல நேரங்களில் தவறாகப் பேசுகிறோம். சென்னையிலிருந்து ஐம்பது கி.மீ தூரத்தில் இருப்பதாக ஒருவரிடம் கூறுகிறோம். உண்மையில் முப்பது கி.மீ தூரத்தில் தான் இருக்கின்றோம் என்றால் அது உண்மைக்கு மாறான பேச்சுத்தான். ஆனாலும் அது பொய் இல்லை. இப்படிப்பட்ட தவறான பேச்சை நம் வாழ்நாளின் இறுதி வரை கூறத்தான் போகிறோம். நாம் எல்லாவற்றையும் தெரிந்திருக்க முடியாது. ஆனால் நாம் பொய் சொல்ல வில்லை. வேண்டும் என்று தவறாகக் கூறவில்லை. பொய் என்பது வேண்டுமென்றே, தெரிந்தே ஏமாற்றுவதற்காகச் சொல்லப்படும் வார்த்தைகள். கடுமையான பேச்சு என்பது வேண்டுமென்றே ஒருவரைச் சிறுமைப் படுத்தும், சேதம் விளைவிக்கும் பேச்சு.

3. வம்புப் பேச்சு

மூன்றாவது வம்புக்காகப் பேசும் பேச்சு. மக்களைப் பிரிக்கும் பேச்சு. இங்கு உள்ளவரிடம் அங்கு உள்ளவர் குறைத்துப் பேசுகிறார் என்று சொல்வது, பின் அங்குள்ளவரிடம் இங்குள்ளவர் உங்களை மதிப்பதில்லை என்று கூறுவது போன்ற பேச்சுக்கள். பிரிக்க முயற்சிப்பது, பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரிப்பது. இது தான் வம்புப் பேச்சு என்பது.

4. விதண்டைப் பேச்சு

இறுதியாக விதண்டைப் பேச்சு. இந்த வகைப் பேச்சு சளசளவென்று அர்த்தமில்லாமல் உளரும் பேச்சு. பாலி மொழியில் விதண்டைப் பேச்சுக்கு 'சம்ப்பா பாலாபா' ( 'Sampha Palāpa') என்ற வார்த்தை உண்டு. கேட்பதற்கே இது பே பே பே என்று சொல்வதைப் போன்றுள்ளது. இல்லையா? விதண்டைப் பேச்சு என்றால் என்ன என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. விதண்டைப் பேச்சு என்றால் பொருளற்ற பேச்சு. இந்தப் பேச்சு எங்கு கொண்டு செல்கிறது? பறவைகளைப் போலக் கீச்சுக் கீச்சென்று பேசுகிறோமா? நம்முள் உள்ள உற்சாக சத்தியைக் குறைக்கப் பார்க்கிறோமா? அல்லது நாம் ஏதாவது சொல்ல முயற்சிக்கிறோமா?

இந்த நான்கு வகைகளும் தவறான பேச்சு எது என்பதை விளக்குகின்றன. இனி சரியான பேச்சு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முயல்வோம். சரியான பேச்சு என்றால் என்ன?

அது கருத்துள்ள பேச்சாக இருக்கும். பயனுள்ளதாக இருக்கும். திருப்திக்கும், ஆறுதலுக்கும், அமைதிக்கும் அது இட்டுச் செல்லும். அதுவே சரியான பேச்சு. ஆசைகளை, பொருள் சேர்ப்பதைப் போற்றிக் கொண்டு இராது அவற்றிடமிருந்து விடுதலை பெரும் வழியைப் பற்றிப் பேசுதல். உங்கள் பற்றுகளிடமிருந்தும், பொருள் சேர்க்க வேண்டும் என்ற வெறியிலிருந்தும் விடுபட வேண்டும் என்று உங்களை உந்தும் பேச்சு. உங்கள் பற்றுகளையும், ஆசைகளையும் துரத்திச் செல்வதால் அவை என்றென்றைக்கும் முடிவுக்கு வராது. நாம் நினைப்பதைவிட அண்மையிலேயே திருப்தி உள்ளது. அமைதியும் அதிக தூரத்தில் இல்லை. இந்த அமைதியைப் பெற உங்களுக்கு அதிகம் பொருட்களும் தேவையில்லை. எல்லாம் நிறைவு பெற்றபின் தான் அமைதியைத் தேடவேண்டும் என்றில்லை. ஆக இதைப் பற்றியெல்லாம் பேசுவது திருப்திக்கு, ஆறுதலுக்கு அமைதிக்கு எடுத்துச் செல்லும் பேச்சு. நட்புணர்வைப் புகழ்ந்து பேசும் பேச்சு. ஒற்றுமைக்கு இட்டுச் செல்லும் பேச்சு. அது மக்களைப் பிரிக்காது. நாம் மன அமைதியைப் பற்றிப் பேசும் போது, மன சாந்தத்தைப் பற்றிப் பேசுவது விதண்டைப் பேச்சுக்கு எதிரான பேச்சாகும்.

பெரும்பான்மையான விதண்டைப் பேச்சு நம் மனத்திலேயே உள்ளது. மனம் எப்போதும் தனக்குத்தானே பிதற்றிக் கொண்டே இருக்கும். நீங்கள் யாரோடும் பேசவில்லையென்றாலும் மனம் பிதற்றிக் கொண்டே இருக்கும். அது நம்மைக் களைப்படைய வைக்கிறது. விதண்டைப் பேச்சுக்கு ஒரு அறிகுறி - சோர்வடைதல். அருத்தமில்லாத பேச்சு தொடர்ந்து இருந்தால் நம்மைச் சோர்வடைய வைக்கும். மற்றவரிடத்தே பேசும் போது மட்டும் இல்லை, மனம் தனக்குத்தானே பேசும் பேச்சும் அப்படித்தான். ஓயாமல் தனக்குத்தானே பேசிக் கொள்வதால் மனம் சோர்வடைகிறது. விதண்டைப் பேச்சுப் பேசுபவரிடம் சென்று நீங்கள் வாயை மூடுங்கள் எனச் சொல்வது சரியல்ல. அது கடுமையான பேச்சாகிவிடும். அதே போல நீங்கள் உங்களிடமே பேசிக் கொண்டிருந்தாலும் உங்களையே கோபித்துக் கொள்ள வேண்டாம். மனம் பழக்க தோஷத்தினால் இப்படி எதை எதையோ நினைத்துப் பேசிக் கொண்டே இருக்கிறது. அதனிடம் கோபித்துக் கொள்ளாமல் வேறுவகையில் அதை உற்சாகப் படுத்த வேண்டும். சுற்றியுள்ள காற்றின் ஓசையைக் கேட்கச் சொல்லுங்கள். சத்தமில்லாமல் இருப்பது பற்றிப் பிரதிபலிக்கச் சொல்லுங்கள். புத்தரும், தான் புத்தர் ஆவதற்கு முன் அமைதிக்கும் ஆறுதலுக்கும் நம்மை எது இட்டுச் செல்லும் என்பதைப் பற்றிச் சிந்தித்தார். ஒரு நாள் தன் எண்ணங்களை இரண்டு கூறுகளாகப் பிரிக்கலாம் என்று நினைத்தார். ஒரு குவியலில் நல்ல எண்ணங்கள். நல்ல விளைவுகளுக்கு எடுத்துச் செல்லும் எண்ணங்கள்.

மற்ற கூறு திறமையற்ற எண்ணங்கள். அவை அமைதிக்கும் ஆறுதலுக்கும் எடுத்துச் செல்லாமல் வட்ட வடிவில் முடிவே இல்லாமல் இழுத்துச் செல்லும் எண்ணங்கள். அவை சில சமயம் இன்பத்துக்கும், சில சமயம் வெறுப்புக்கும் மாறி மாறி எடுத்துச் சென்று ஒரு அசௌகரியமான நிலையிலேயே உங்களை வைத்திருக்கும். சரி. எனது எண்ணங்களைத் திறமையற்ற குவியலிலிருந்து எடுக்காமல், திறமையான எண்ணக் குவியலிலிருந்து மட்டுமே எடுத்தால் என்ன என்று புத்தர் யோசித்தார். காலையிலிருந்து மாலை வரை நல்ல எண்ணங்களையே நினைக்க உறுதி கொண்டார். அவ்வாறே செய்தார். அவர் மனத்தை ஏற்கனவே நன்றாகப் பக்குவப் படுத்தியிருந்ததால் அவரால் இதனைச் செய்ய முடிந்தது. இதன் விளைவு அவருக்கு மிகவும் திருப்திகரமானதாக அமைந்தது. எதையோ கண்டு பிடித்து விட்டதாக அவருக்குப் பட்டது. தான் விரும்பும் எண்ணங்களை மட்டும் அவரால் தேர்ந்தெடுக்க முடிந்தது.

என்ன ஆச்சரியம் என்றால் சாதாரண மனிதனுக்குத் தனது மனதைக் கட்டுப் படுத்த வேண்டும் என்ற எண்ணமே தோன்றுவதில்லை. நம் மனம் தான் நாம் என்று நினைக்கின்றோம். அது தான் நான் என்று மனம் நம்மிடம் சொல்கிறது. 'மன்னிக்கவும், என்ன செய்ய, அது தான் நான். அப்படிப் பட்டவன் தான் நான்,' என்று நம்மால் ஏதும் செய்ய இயாலாதது போலப் பேசுகிறோம். ஆனால் எண்ணங்கள் வெறும் எண்ணங்களே. அவற்றை ஏன் நாம் தேர்ந்தெடுக்கக் கூடாது? ஏன் பழக்கப்பட்ட வழியிலேயே நாம் போகவேண்டும்? அவை, 'நாம்' இல்லையோ என்னவோ. நமது பழக்கங்கள் தானோ என்னவோ?

எனவே புத்தர் இப்படிச் செய்து இவ்வாறு நினைத்தார், 'இப்படி நல் எண்ணங்களைத் தேர்ந்தெடுத்தது எனக்கு நன்மை உண்டாக்கியது.' பின் அவர் நல்லெண்ணங்களையும் எந்நேரமும் நினைப்பதும் சில சமயம் களைப்படையச் செய்கிறது என்று உணர்ந்தார். எந்நேரமும் நினைத்துக் கொண்டிருப்பது, நினைப்பது நல்லெண்ணங்களாக இருந்தாலும்கூட அது களைப்படையச் செய்யும் என்று உணர்ந்தார். 'நான் ஏன் எண்ணங்களையே விட்டு விடக் கூடாது? அப்படிச் செய்ய முடியுமா?' என்று எண்ணிய அவர் அவ்வாறே செய்தார். அவர், 'முடியும்! இதைப் பற்றியும் அதைப் பற்றியும் நினைப்பதை விட்டு விட முடியும். நம்மிடம் நாமே பேசிக் கொள்வதை விட்டு விட முடியும். கருத்துக்கள் மனத்தில் தோன்றுவதையும் விட்டு விட முடியும். இவற்றை எல்லாம் விட்டு விட்டால் மேலும் அழகான பரந்த இடம் நம்முள் தோன்றுகிறது. அது தான் அமைதி,' என்பதை உணர்ந்தார்.

நாமும் போதிசத்துவரைப் போல நினைக்க வேண்டும். நாமும் எதை நினைக்கலாம், எதை நினைக்க வேண்டாம் என்பதைக் கருதிக் கொஞ்ச நேரம், ஒரு பதினைந்து நிமிட நேரம் மட்டும் முயற்சி செய்யாமல் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் முயன்று பார்க்க வேண்டும். எல்லா நேரமும் செய்ய முடியாமல் போகலாம். சில சமயம் செய்ய நினைத்ததை மறந்து விடுவோம். ஆனால் இப்படிச் செய்வதென்று உறுதி எடுத்துக் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்தால் நம் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் உருவாவதைப் பார்க்கலாம். எப்போதுமே இது ஒரு கடினமான வேலையாகவோ முயற்சி எடுத்துச் செய்ய வேண்டியதாகவோ இருக்காது. முதலில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் பழக்கப் பட்டவுடன் எளிதாகி விடும். திறனற்ற எண்ணங்கள் வலுக் குறைந்து விடுவதைக் காணலாம். கொஞ்ச காலத்துக்குப் பின் அவை மீண்டும் தோன்றினாலும் நீடிப்பதில்லை. திறமையான எண்ணங்கள் தாமாகவே தோன்றுவதையும் காணலாம். தொடர்ந்து செய்யும் பயிற்சி இது. ஆக இதுவே நல் பேச்சுக்குப் பின் உள்ள கருத்து. நாம் தவறாகப் பேசும் போது அது மனத்தைப் பாதிக்கும். பின் தனியாக இருக்கும் போதும் மனத்தில் அந்தப் பேச்சு தொடரும். அந்தப் பேச்சு எங்கிருந்து வந்தது? வாயிலிருந்தா? இல்லை. வாய்க்கு அறிவேது? இல்லை. அது உள்ளத்திலிருந்து வந்தது. உள்ளத்தில் நல்லெண்ணங்கள் இருந்தால் அதன் எதிரொலி தொடரும். ஆகவே இந்தப் பயிற்சியைத் தொடருங்கள். மனப்பூர்வமாக விரும்பாவிட்டாலும் நீங்கள் இவ்வாறு சொல்வது, நினைப்பது சரியே: 'நீ நலமாக இருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும். நான் நலமாக இருக்க வேண்டும்.' விருப்பமில்லாவிட்டாலும் நல்ல வார்த்தைகளைச் சொல்லக் கற்றுக் கொண்டால் அந்த வார்த்தைகளுக்குப் பின் உள்ள நல்லுணர்ச்சி தானாகவே வந்துவிடும்.

வாழ்க்கையில் நாம் ஒரு நாடகப் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறோம். உண்மையான நான் என்று ஒன்று இல்லை. நாடகம் முடிந்த பின் மேக்கப்பை எடுத்து விட்டு வீட்டுக்குச் செல்லும் நடிகரின் பாத்திரம் போன்றதல்ல வாழ்க்கையில் நாம் நடிக்கும் பாத்திரம். எல்லாம் நடிப்புத் தான். சில வேடங்கள் மற்றதைவிட நமக்குப் பிடித்திருக்கிறது. அவற்றை நாம் என்று நினைத்துக் கொள்கிறோம். 'அப்படித் தான் நான் உணர்கிறேன். அதுவே எனது உண்மையான உணர்ச்சிகள்.' என்கிறோம். உண்மையில் உண்மையான உணர்ச்சிகள் என்று ஒன்றும் இல்லை. பழக்க தோஷத்தினால் சில உணர்ச்சிகள் நமக்குச் சுகமாக இருக்கிறது. அவற்றை நாம் என்றோ நமதென்றோ நினைக்க வேண்டாம். எல்லாம் எந்நேரமும் மாறக்கூடும். ஆக இன்னமும் ஞானம் பெறாவிட்டால் ஞானம் பெற்றது போன்று நடிக்க வேண்டும். அதற்காக எல்லோரிடமும் சென்று தான் ஞானம் பெறுவிட்டதாகக் கூற வேண்டாம்! ஞானம் பெற்று விட்டதாகச் சொல்லி நம்மையும் மற்றவரையும் ஏமாற்றிக் கொள்ள வில்லை. ஆனால் அப்படி நடிப்பது நல்லது. அண்ணல் காந்தியைப் போல, அன்னை தெரேஸாவைப் போல நடிக்கலாம். அடுத்தமுறை வேலையில் யாரிடமோ பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் அன்னை தெரேஸா என்று நினைத்துக் கொள்ளுங்கள். அண்ணல் காந்தி என்று எண்ணிக் கொள்ளுங்கள். அந்தச் சூழ்நிலையில் அண்ணல் காந்தி என்ன செய்திருப்பார்? அவர் கழிவறைகளைக் கழுவினார். அவருக்கு அது பிரச்சனையாக இருக்கவில்லை. அவருக்கு அது செய்வது பிடித்திராவிட்டால் தன்னுடைய அடக்கத்தில் பிரச்சனை இருப்பதை உணர்ந்திருப்பார். நானும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு மற்ற பிரச்சனைகள் இருந்தன. ஆனால் அப்பிரச்சனைகளை அவர் மிகவும் நேர்மையாகச் சந்தித்தார்.

நற் பேச்சை நிர்ணயிப்பது எது?

ஒன்று, அது உண்மையாக இருக்க வேண்டும். இரண்டு, அது பயனுள்ளதாக இருக்கவேண்டும். மற்றபடி அது மனதுக்குப் பிடித்ததாகவோ, பிடிக்காததாகவோ இருக்கலாம். அதாவது சொல்ல நினைப்பது உண்மையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தால் அது கேட்பவருக்குக் கேட்கப் பிடிக்கவில்லையென்றாலும் கூட அதைச் சொல்லி விடலாம். கடுமையாகவோ, சத்தமிட்டோ சொல்லவில்லையென்றாலும் கேட்பவருக்கு அதைக் கேட்க விரும்பமில்லாமல் இருந்தாலும் சொல்லி விடலாம். சொல்வது இனிமையாக இருக்க வேண்டும் என்றில்லை. உண்மையாக இருக்க வேண்டும். பயனுள்ளதாக இருக்க வேண்டும். பயனுள்ளுதாக இல்லையென்றால் அது உண்மையாக இருந்தாலும் சொல்லக் கூடாது. அப்படிச் சொல்வதால் பயனேதும் விளையாது. ஆனால் பொய் பேசக் கூடாது. பயனுள்ளதாக இருந்தாலும் பொய் பேசக் கூடாது. சில சமயம் பொய் பேசுவது பயனுள்ளதாக இருக்கும். எனினும் பொய் பேசாதீர்கள்! சில சமயம் உண்மையாக இருக்கும். ஆனால் பயனுள்ளதாக இராது. 'ஆம் உண்மை தான், ஆனால் பயனில்லையே. அதனால் யாருக்குப் பயன்?' ஆகவே இரண்டும் சேர்ந்து இருக்க வேண்டும். பின் கேட்பவருக்குப் பிடிக்கவில்லையென்றாலும் சொல்வதில் தவறில்லை. அதுவே சரியான பேச்சு என்று கருதப்படும்.

சில சமயம் நாம் மக்கள் சம்பந்தப் பட்ட ஒரு சிக்கலான சூழ்நிலையில் இருக்க நேரிடலாம். அந்தச் சூழ்நிலையில் அவரிடம் நாம் என்ன சொல்லப் போகிறோம் என்பதை முன்கூட்டியே ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம். அவரிடம் என்ன சொல்வது? எப்படிச் சொல்வது? உங்களுக்கு ஒரு யோசனை கூறுகிறேன். என்ன சொல்வது என்று நினைத்துக் கவலைப் படுவதைவிட எந்த மனநிலையில் சொல்லப் போகிறோம் என்பதைத் தயார் செய்து கொள்ளுங்கள். நட்புணர்வான மனத்தைத் தயார் செய்து கொள்ளுங்கள். அந்தச் சிக்கலான சூழ்நிலையையும் அந்த மனிதரையும் ஒதுக்கி விடுங்கள். அவற்றை மனத்தில் கொண்டுவர வேண்டாம். உங்களுக்குப் பிடித்தவர்களை மனத்தில் கொண்டு வந்து மனத்தில் நட்புணர்வான நிலை உண்டான பின் அந்தச் சிக்கலான மனிதரைப் பற்றியும் அவரிடம் எப்படிப் பேசப் போகிறோம் என்பதையும் கற்பனை செய்து கொள்ளுங்கள். பின் நீங்கள் சொல்லப்போவது எதுவாக இருந்தாலும் அது உள்ளத்திலிருந்து வருவதாக இருக்கும். உள்ளம் நல்ல இடத்தில் இருப்பதால் வெளிவரும் வார்த்தைகளும் சரியானதாகவே இருக்கும். அவற்றை நீங்கள் நம்பலாம். பின் இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்ப்பதானாலும் பார்க்கலாம். பின் அந்தப் பிரச்சனைக்குரிய மனிதரைச் சந்திக்கும் போது நல்ல மனநிலையை ஒத்திகை பார்த்துக் கொண்டே செல்லுங்கள். தொடர்ந்து என்ன மனநிலையில் இருக்க விரும்புகின்றீர்களோ அதே மனநிலையை ஒத்திகை பாருங்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிய முடியாதென்றாலும் உங்கள் வார்த்தைகளும், மறுமொழியும் சரியானதாகவே இருக்கும். மனத்தை நல்ல நிலையில் வைத்துக் கொண்டால், உள்ளத்தை நல்ல இடத்தில் வைத்துக் கொண்டால் பின் சரியான வார்த்தைகள் தானாகவே தொடரும்.

அப்படி செய்ய முயற்சித்து, நட்புணர்வான உள்ளத்துடன் இருக்கமுடியாவிட்டால், பேசாமல் இருப்பதே நல்லதா?

ஆம். வேறு சமயம் பேசலாம் என்று காத்திருப்பது நல்லது.

சில சமயம் காத்திருக்க முடியாத சூழ்நிலை இருக்கலாம். ஒருவர் பதினைந்தாம் மாடியிலிருந்து குதிக்கப் போகிறார் என்றால், நமக்கு நல்ல மன நிலை இருக்கும் வரை காத்திருக்கமுடியாது. உடனே நாம் அக்கறை காட்டுவது போல நடித்தாலும் எதையாவது செய்தாக வேண்டும். நாம் ஞானம் பெற்றுவிட்டதாக நினைத்துப் பேச வேண்டும். நான் என்னையே ஏமாற்றிக் கொள்ளவில்லை. ஞானம் பெற்றவர் போல நடந்து கொள்வது (பிரச்சனைகளைத் தீர்க்க) ஒரு திறமையான வழி. உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். ஆனால் அவசரச் சூழ்நிலையாக இல்லா விட்டால் காத்திருந்து செயல்படுவதே நல்லது.

இது விஷயமாக வேறு சிந்தனைகளும் உண்டு. துறவற வாழ்க்கையில் ஒரு துறவி வேறு ஒரு துறவி தவறு செய்வதைக் கவனித்தால், அதாவது விநயப்படி (துறவிகளுக்கான ஒழுக்க விதிகள்) நடக்காவிட்டால் அவரை திருத்துவது அவர் கடமையாகும். சாதாரண இல்லறவாழ்க்கையில் பலரும் பலவாறு தவறு செய்கின்றபடியால் நாம் மற்றவர் செய்யும் தவறுகளனைத்தையும் திருத்திக் கொண்டிருக்க முடியாது. ஆனால் துறவற வாழ்க்கையில் இது எங்கள் கடமை. ஆனால் மற்றவரைத் திருத்துவதற்கு முன் அந்தத் தறவி தன்னை இக்கேள்விகளைக் கேட்டுக் கொள்ளவேண்டும்: 1. நான் நட்புணர்வுடன் பேசப் போகின்றேனா? இல்லையென்றால் பேசக்கூடாது. 2. நான் வாய்மைக்கு ஒப்பப் பேசுகிறேனா? 3. நானே இத்தவறுகளைச் செய்கிறேனா? நானும் இத்தவறுகளைச் செய்தால் முதலில் என்னைத் திருத்திக் கொண்ட பின்னரே மற்றவருக்கு அறிவுரை கூறவேண்டும். 4. இது சரியான நேரமா? திருத்தப்பட வேண்டியவர் கூட்டத்தின் மத்தியில் இருக்கிறாரா? வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறாரா? களைத்துப் போய் இருக்கிறாரா? இத்தகைய சூழ்நிலைகள் பேசுவதற்கான சரியான நேரமல்ல. இவற்றை யெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு பின்னர் பேசலாம்.

ஒரு வேலை நாம் பேசவேண்டிய மனிதர் எளிதில் கோபம் கொள்ளக் கூடியவராக இருக்கலாம். அவர் நல்ல மனநிலையில் இல்லாத போது அவரிடம் பேசி அவர் ஆத்திரம் அடைந்து நம்மிடம் சத்தம் போடலாம். நாம் நட்புணர்வான உள்ளத்துடன் பேசினாலும், உண்மையைப் பேசினாலும், பேசுவதற்குரிய சரியான நேரமானாலும், நாம் அத்தகைய தவறுகளைச் செய்யாதவராக இருந்தாலும் அவர் எரிமலையைப் போல வெடிக்கக் கூடும். அத்தகைய சூழ்நிலையில் நாம் நம்மையே இவ்வாறு கேட்டுக் கொள்ள வேண்டும்: 'என்னால் அவர் கோபத்தைச் சமாளிக்க முடியுமா? கருணையோடு அவர் பேசும் கடுமையான வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியுமா?'. இது முடியாவிட்டாலோ, விருப்பப்படா விட்டாலோ அப்போது நாம் அந்த நபரிடம் பேசாமலிருக்க நமக்கு அனுமதி உண்டு. அவரைத் திருத்த வேண்டியதில்லை. அப்படிப்பட்ட மனிதரைப் பௌத்த துறவற சங்கத்தில் சமாளிக்க வேறு வழிகள் உள்ளன. நான்கு துறவிகளுக்கு முன் அவரை நிறுத்தி அவர் அறிவுறை கேட்டு திருந்துவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் படுவார். அவர் மறுத்தால் மூன்று முறை அவர் கேட்டுக் கொள்ளப் படுவார். மூன்று முறையும் மறுத்தால் அவரைச் சங்கத்திலிருந்து நீக்க விதிமுறைகள் உள்ளன. ஆனால் இந்த அளவு செல்வது மிகவும் அறிய சூழ்நிலைகளில் தான். அடிக்கடி நடப்பதில்லை.

கேள்வி: 'நான் இந்த குற்றத்தைச் செய்யாது இருக்கின்றேனா?' என்ற நிபந்தனை பற்றி.. உண்மையைச் சொல்வதென்றால் மிகச் சில குற்றங்களைத் தான் நான் முழுமையாகச் செய்யா திருக்கின்றேன் என்று சொல்லமுடியும். நான் எந்தக் குற்றத்தையும் செய்வதே இல்லை என்று என்னால் கூறமுடியவில்லையே?

நீங்கள், ' நான் செய்வதை அறி நிலையோடு செய்கிறேனா? என்று நினைத்துப் பார்க்க வேண்டும். ஒருவரது தவறு தனது ஆடைகளின் மேல் போதிய கவனம் செலுத்தாதது போன்ற சிறு குற்றங்களாக மட்டுமே இருக்கலாம். முற்றத்தின் மத்தியில் அதை வீசி விட்டுச் சென்றிருக்கலாம். அத்தகைய தவற்றை நாமும் முன்பு செய்திருக்கக் கூடும். மீண்டும் அது போன்ற தவறுகளை இந்த வாழ்நாளில் செய்யக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் பொதுவாக இப்படி அக்கறையில்லாது இருக்காவிட்டால், செய்த போது அந்தத் தவற்றை அறிந்து இருந்தால், மறுபடியும் அடுத்த ஒரு மணிநேரத்தில் செய்யப்போவதில்லை என்றால் அது போதும்.

இதோ ஒரு அதிசயம்! இதை உங்கள் வாழ்க்கையிலும் கவனித்திருப்பீர்கள். ஒருவர் செய்யும் பிழையைக் கண்டித்த அடுத்த நாளே நாமும் அதே பிழையைச் செய்வது தான் (சிரிப்பு)! 'அட! கதவை ஏன் மூட வில்லை? எப்போதும் இப்படிக் கதவைத் திறந்து வைத்து விட்டே வருகிறாய்,' என்று ஒருவரைத் திட்டுகிறோம். அடுத்த நாள் மீண்டும் கதவு திறந்திருக்கிறது. முதலில் கோபம் வரும். ஆனால் கடைசியாக அதன் வழியே வந்தது நாம் தான் என்றுணர்ந்த பின், 'அய்யய்யோ! கதவைத் திறந்து வைத்தது நாம் தான்.' நாம் தெரிந்து கொள்வது, 'நானும் கதவை மூடாமல் தான் வந்திருக்கிறேன்!'

இது போன்ற மேன்மையான வழிகளில் (துறவிகள் மற்றவரைத் திருத்துமுன் பிரதிபலிப்பது) மற்றவரிடம் பழகுவதைத் தெரிந்து கொள்வது நல்லது.

கேள்வி: ஒரு பொய் சொல்வதனால் ஒருவரை அபாயத்திலிருந்து காப்பாற்ற முடியுமானால் பொய் சொல்லலாமா?

இது சம்பந்தமாகப் பல சுவாரஸ்யமான நன்னெறிக் கருத்துக்கள் உள்ளன. எப்போது நாம் பொய் சொல்லலாம்?

புத்தர், 'உயிரைக் காப்பதற்காகக் கூட, அது நம் உயிரானாலும் சரி, பிறர் உயிரானாலும் சரி, நாம் பொய் சொல்லக்கூடாது,' என்றார். அதோ உங்கள் கேள்விக்கு நேரடியான பதில் (சிரிப்பு). (ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - குறள், 131)

ஐரோப்பாவில் இமானுவேல் காண்ட் (Immanuel Kant)என்ற தத்துவ அறிஞர் இருந்தார். அவரும் புத்தரது நெறியைப் போன்ற ஒரு நன்னெறியை ஏற்றவர். அவர் எக்காரணத்தைக் கொண்டும் பொய் சொல்லக் கூடாது என்றும், எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்றும் கூறினார். இங்குதான் அவருக்கும் புத்தருக்கும் சற்று வேறுபாடு தோன்றுகிறது. புத்தர் கூறுவது, 'நான் எப்போதும் பொய் பேசமாட்டேன். ஆனால் நான் எப்போதும் உண்மையைப் பேசுவதுமில்லை.' இது எப்படி முடியும்? குழப்பமாகத் தோன்றுகிறதா? எக்காரணத்துக்காக வாய்மையைப் பேசுவதில்லை? உண்மையைப் பேசுவதற்கு எது தடையாக இருக்கும்? சரியான பேச்சுக்கு இரண்டு பாகங்கள் இருப்பதை நினைவில் கொள்க.

எப்போது புத்தர் உண்மையைப் பேசமாட்டார்?

அது பயனுள்ளதாக இல்லாவிட்டால் உண்மையைப் பேசமாட்டார்.

எனவே அவர், 'நான் எப்போதும் உண்மையைப் பேச மாட்டேன்,' என்கிறார். பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே நான் உண்மையைப் பேசுவேன். ஆனால் நான் எப்போதும் பொய் பேசுவதில்லை. பயனுள்ளதாக இருந்தாலும் பொய் பேசுவதில்லை. பயன் உள்ளதுக்கு மட்டுமே உண்மையைப் பேசுவேன். அதனால் பயனேதும் இல்லை என்றால் உண்மையைப் பேசுவதில்லை.

உதாரணமாக நாட்டில் இனக்கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் வீட்டில் ஒருவர் எதிரிகளிடமிருந்து தப்பிக்க மறைந்திருக்கிறார். அவருக்குத் தீங்கு செய்ய ஒரு கூட்டம் தேடிக் கொண்டிருக்கிறது. உங்களைக் கேட்கிறார்கள், 'அவனைப் பார்த்தாயா?' இமேனுவேல் காண்ட் அவர்களிடம் 'அதோ கட்டிலுக்கடியில் இருகிறான்.' என்றுஉண்மையைச் சொல்லிவிடுவார். புத்தர் கூற மாட்டார். சூழ்நிலைக் கேற்பப் பலவாறு பதில் கூறலாம். இது அறநெறி சம்பந்தப்பட்ட காலங்காலமாகக் கேட்கப்படும் கேள்வி. நீங்கள், 'அட என்னய்யா என்கிட்டப்போய் இதைக் கேட்கற,' என்று பதில் கூறலாம். அதாவது என் வீட்டில் இருப்பான் என்று நினைக்கின்றாயே என்று மிகைப்படுத்திப் பதில் கூறலாம். பின் கூட்டம் அடுத்த வீட்டுக்குப் போய்விடும். அச்சமயத்தில் என்ன சொல்வோம் என்று முன்கூட்டியே சொல்லமுடியாது என்றாலும் வாயில் பேசுவது உள்ளத்திலிருந்து வருவதால் உள்ளம் சரியான இடத்தில் இருந்தால் நாம் சொல்லப் போவதை அது நிர்ணயிக்கும்.

இரண்டாம் உலகப் போரில் நடந்த கதை ஒன்று. போரின் இறுதியில், ரஸ்யர்கள் பெர்லின் நகரைத் தாக்கும் போது அவர்கள் மிகவும் கோப வெறியோடு இருந்தார்கள். ஏனென்றால் நாஜிக்கள் சில ஆண்டுகளுக்கு முன் ரஸ்யாவைத் தாக்கிய போது மிகவும் கொடூரமாக அதைத் துவம்ஸம் செய்து விட்டனர். ரஸ்யர்களும் பெர்லினைத் தாக்கும்போது நாஜிக்களைவிடக் கடுமையற்று நடந்து கொள்ளவில்லை. பெர்லின் நகரைப் பிரித்தெடுத்து விட்டார்கள். பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன. அப்பாவி மக்கள் சுட்டுத் தள்ளப் பட்டனர், பெண்கள் கற்பழிக்கப் பட்டனர். ஒரு இளம் பெண், அவளுக்குப் பதினெட்டு வயது இருக்கும். அவள் தாய் ஊனமுற்றவள். அவர்கள் பெர்லின் நகரில் தங்கி இருந்தனர். அவர்களால் நகரைவிட்டு வெளியேற முடியவில்லை. தாயைக் கவனித்துக் கொள்ள அவள் மட்டுமே இருந்தாள். ரஸ்யர்கள் வீடு வீடாகச் சென்று எதிரிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். மக்களின் கூச்சலும், கதறல் ஒலியும் தெருவெங்கும் கேட்கிறது. பின் துப்பாக்கி வெடிச் சத்தமும் கேட்கிறது. அவளுக்குத் தெரியும் என்ன நடக்கப் போகிறதென்று. மூன்று ரஸ்யச் சிப்பாய்கள் துப்பாக்கிகளுடன் அவர்கள் வீட்டினுள் நுழைகின்றனர். பார்ப்பதற்குக் கொடூரமாகத் தோன்றுகின்றனர். அவர்கள் இப்பெண்ணைப் பார்க்கின்றனர். வயதான தாய் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். ஒருவன் வந்து அந்த இளம்பெண்ணைப் பலாத்காரமாகப் பிடிக்கிறான். அப்போது அவள் அவனிடம்,

'உனக்குத் தாய் இல்லையா?' என்று கேட்கிறாள்.

அவனுக்குச் சற்று தடுமாற்றம். அவளை விட்டு விடுகிறான். ' சரி நாம் போகலாம் வாங்க,' என்று தன் சகாக்களிடம் கூறி அடுத்த வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுகின்றான். ஆக நாம் உணர்ச்சியைத் தொடும்படி என்ன சொல்லப் போகிறோம் என்று முன்கூட்டியே தெரியாது. அவனுக்கு ஒரு தாய் இருந்தாள். அதை நினைவூட்டியது மட்டும் தான் அவனை நிறுத்தியிருக்க முடியும்.

அவள் சொன்னது தன் உள்ளத்தில் ஒரு அன்பான பகுதியிலிருந்து வந்தது. தன் உயிரைப் பணயம் வைத்து அவள் பெர்லினை விட்டு ஓடிப் போகாமல் தன் தாய்க்காகத் தங்கியிருந்தாள். ஆபத்தான செயல் என்றாலும் அவளுக்குத் தீங்கு ஏதும் விளையவில்லை.

சுலபமான காரியமாக இல்லாவிட்டாலும் பொய் பேசாமல் இருப்பதென்று முடிவு செய்து விட்டால் அது ஒரு உணர்ச்சியூட்டும் விளையாட்டைப் போலத்தான். ஆம்! வாழ்க்கைக்கு ஏகச் சுவை ஊட்டுகிறது. மாறிவிட்ட மனிதராகிவிடுகிறோம். நான் இப்போது வேறு விதிகளோடு விளையாடுகிறேன். ஆனால் இனிமேல் எப்போதும் வந்த வழியை (முன் செய்த காரியங்களை) மறைக்கத்தேவையில்லை. நான், 'நேற்று என்ன சொல்லி மழுப்பினேன்? நேற்று சொன்ன கதை என்ன?' என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. அதே சமயம் இனி நாம் செய்யும் காரியங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் செய்ததைப் பற்றி நாம் பொய் சொல்லப் போவதில்லை. நம் வாழ்க்கையை அது சற்றுப் பாதிக்கலாம். ஏனென்றால் தவறுசெய்திருந்தால் அதை நாம் மறுக்கப் போவதில்லை. இது நல்லதே.

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

* * * * * *

Transcribed from an audio tape available at birken.ca

What is considered frivolous speech?

It is one of the tricky areas to define. There are four categories of wrong speech.

1. Deceptive talk or lying

Right speech is one of the factors of the eight fold path. The eight fold path is a stream or path that you follow to liberation, freedom, release. From what? From your elusions and delusions. Your anger and your cravings, and to a state of ease and peace. You cannot get there if your speech is motivated by deception which would go back to why do we lie? Often it is to defend our ego. To get what we want not to lose what we have or like etc. Or it can become a habit. We don't even know. We just tend to speak deceptively because it has just become a habit so this has to go we can't get to a state of ease and peace and have all these attachments that causes to misrepresent reality as it is

2. Harsh Speech

The next category is harsh speech. That is hard language, very harsh name-calling, slurring, shouting, cutting type of language fuelled by anger. Remember this stuff it's not just the words in itself. You have to go back to its intention or motivation. So we are all making mistakes all the time in language, we are all misrepresenting reality but it is not intentional so if we tell somebody it is 50 miles from Kamloops but it's only 30. It is not a lie, it's inaccurate so we will be doing that till the end of our lives. We just can't know everything and we are often making mistakes but it's not a lie. It is not deliberate. Lie is intentional deception in full awareness. Harsh speech is an intentional attempt to belittle or harm etc. through speech.

3. Malicious Speech

The third category is malicious speech more or less divisive speech dividing people by telling this person over here that that person doesn't think much of them and then you go and tell that person thath that person doesn't think much of them. Attempting to divide, intention to divide. So malicious kind of talk. Attempting to divide.

4. Frivolous Speech

Then last category is frivolous speech. Thats just speech that babbles. In Pali the word for frivoulous speech or pointless speech or babbling speech is 'Sampha Palāpa'. Sounds like 'blah, blah, blah, blah,' so you start to get a sense of what frivolous speech is. A nice translation would be pointless speech. Where is this going? Are we just chirping like birds or trying to get rid of some energy or what? Or are we trying to go some where with this saying?

So maybe we can understand it more by thinking about what is right speech. The four categories are all about wrong speech. What is right speech?

It is full of good sense. It is beneficial. Conducing to contentment and ease and peace. That is right speech. Here instead of speaking in praise of ambition, and accumulation I am speaking in praise of getting free of your drives and cravings instead of just following and chasing and celebrating them. I am saying that you will never come to the end of them that way. It would be better to consider that contentment maybe closer at hand that you think. Peace may not be that far away. You don't need a lot of things to have this peace. You can start before you have everything. So if I speak about that I am speaking towards contentment and ease and peace. If I speak in praise of goodwill it tends towards harmony instead of dividing people. And then if we encourage one to enjoy the quiet of the mind, serenity of the mind then we are encouraging just the opposite of frivolous speech.

Most of the frivolous speech is in our mind isn't it babbling away all the time. Even if you not speaking to somebody the mind is chattering away. We do get weary of that. Thats another mark of frivolous speech - weariness. The constant continuous act of speech particularly of pointless speech is very tiring winds you down wears you down. Not only engaged with another person but just by yourself. The weariness comes from the mind chattering away to itself and just not shutting up. It is not a good idea to tell somebody who is babbling away to shut up. That's harsh speech. So don't be harsh to yourself either. the inner mind is running on nervous energy and habit energy and is chattering away sometimes just to keep itself company and so shutting it up shouting at it is not the way we have kind of say to it now wouldn't it be nice if we can just kind of lisen to the wind for while wouldn't it be nice if we could how would stillness silense sound. Would n't it be beautiful? You are encouraging it in that direction. You are encouraging your own mind. What would it be like to just listen to the silence. The Buddha himself before he was the Buddha he had to figure out methods to lead himself to peace and ease he decided he was sitting there one day what I am going to do divide my thoughts into two piles. one pile is wholesome has good results is wanted wished for.

The other one is unwholesome. it does not lead me to peace and ease it leads me in circles desires for instance sometimes pleasurable but leads me in cricles and endless chase and thoughts that are aversive and make me uncomfortable here and now. what if i just decide that i won't indulge in any of the unwholesome thought s and I will only select from the wholesome pile. if i make a commitment to that decide wholeheartedly to undertake them from morning to night. So he did. He was already advanced. he was able to direct his thoughts to that degree when I did that it was wonderful I thought I was on to something here. I had chosen what I was going to think.

It is amazing but it really does not occur to the ordinary person to control your mind. We tend to believe that our mind is us.Thats who I am and what it says is who I am. I am sorry about that, but that's who I am. But thought they are just thoughts. Why don't I choose them? Why don't I not go down the road that is familiar to me. Maybe it is not me. Maybe it is just a habit.

So the Buddha did this and thought, 'I really benefited. It was very very good.' And then he thought even to think wholesome thoughts every time would be wearisome. To be thinking all the time even if they are wholesome thoughts could be wearisome. 'What if I let go of thinking all together. Can I do that?' And he attempted to do that. And he said, 'Yes I can. I can let go of discursive thinking, the inner verbalizations, formulations of ideas. I can let go of that. I can experience an even more lovely kind of space. Peace.'

We can think like that, like the bodhisatva. What if I really start deciding to think what I want to think and what I don't want to think? I just don't try to do it for fifteen minutes and see how it goes. I kind of keep at it day after day after day after day. Maybe I won't be able to do it all the time or forget, but if I make this a kind of a brilliant idea in my life that I am going to continue this. And this is a very good idea because we can accomplish hugh transformations . It is not always work. It is not always a hugh struggle. It is always hardest at the first. but you get better at it and once it starts to become habitual it takes on a life of its own. The difficult thoughts, the unwholesome thoughts start to weaken. After a while they don't last as long, they are not as strong. The wholesome thoughts start to come automatically. It is just like a regular continuing practice. So that's the idea behind right speech. If you talk, if you converse in the wrong way, it is likely to have a lot of residual effect on the mind. When you try to be quiet and sit there, there is inner speech. Where does speech come from? Not from the mouth. The mouth has no intelligence. It comes out of the heart. Whatever you run through the heart it tends to pick up that resonance. Keep doing it. So even if you don't meant it, you say you think, may you be well, may you all be well, may I be well. What you say, you don't have to actually be totally sincere. You just have to say the lines. Learn to say the right thing and you will eventually get the feeling behind it.

It is all a kind of a play, isn't it? All of our life we are playing a role. There is no real you. You are not just an actor where you then you take off the makeup and go home. It is all an act. Certain acts you are more comfortable with than others. Presumably we take it as our self, our real self, our genuine self. Well that is the way I feel, that is my true feelings etc. No. You don't have any true feelings. You are comfortable with certain feelings because they are habitual. There is nothing essentially you in there. Tthey are all up for change, all of them. So if you are not enlightened, at least act enlightened. Act as if you are. Don't go around and tell everybody you are enlightened! You are not pretending you are enlightened but act as if you are enlightened . Act as if you are Gandhi or Mother Theresa. Next time you have an hastle in the office you are Mother Theresa. What would Gandhi do? Gandhi went and cleaned Toilets. He wouldn't have a problem with it. If he had a problem with it, he would see that he would have a problem with humility. I'd like to be like that. Honesty. He had his problems but he was so honest about it all.

The criteria for right speech is it is true, it is beneficial and then it could be pleasant or unpleasant. If it is true and beneficial you can say it even if it is unpleasant to hear. Does not have to be harsh or invlove shouting or anything like that but may not be what the person wants to hear. The criteria of being pleasant is not part of it. It is true and beneficial. It it is not beneficial even if it is true you don't say it. There is no benefit. But you don't lie. Even if it is beneficial you don't lie. Sometimes a lie is beneficial but you don't do that. Sometimes it is true but not beneficial. You say Its true its trus but who is going to benefit from it? So the two have to go together and then even if not what the person wants to hear it it is alright to say it. It is still right speech.

You have to kind of rehearse it a little bit ahead of time. If you are in a difficult situation dealing with people and so forth you find yourself having to rehearse. What am I going to say? I have a suggestion. Instead of preparing or worrying about the words prepare the mood, rehearse the mood that you want to speak in. Get yourself in a kindly mood. Put the situation or person aside. Don't bring it up. Bring up individuals or get in the company of individuals who make you feel friendly and warm and relaxed and only then once you have that sense then imagine the scene of having to deal with this particular person. Then the formulations of the words..is always coming from the heart and the heart is in the right place. Now you can trust those words. And you can even rehearse them again and again. And then when you go to meet the person rehearse the mood not the words. Rehearse the mood that you want to continue in. you can't anticipate everything that is going to happen but your response will always be right. get the mood in the right place heart in the right place and the words will follow.

Q If you try to do that and you can't come from a place of loving kindness it is better not to say anything?

Yes. Better to wait.

Sometimes you can't. Someone is about to jump of the 15th storey balcony you can't wait until you are in better frame of mind. So you have to going to act as if you cared. I am going to speak as if I was enlightened. I am not fooling myself about that. I am thinking it is a very good strategy to emulate the behavior of an enlightened person. Do as well as you can. But if it is not a pressing matter it is better to wait until the heart comes into the situation.

There are other considerations. In monastic life you are obliged as a monk to correct another monk if they are making mistakes or if they are not following the rules. In ordinary life people don't bother too many people doing all these things we can't just go around correcting people. In monastic life we are obliged to say something. Before you do you ask yourself 1. Do I speak with a heart of loving kindness? If not, don't speak. 2Do I speak in accordance with the facts? 3. Am I myself free from this fault? If not No more use correcting somebody else you better work on your situation. 4. And last is is this the right time? Are they middle of a bunch of people? Are they on the way to work? Tired or something else. It means the wrong time. If you can fulfil all those then it is the time to speak.

And then you say this person is very vey volcanic. And skittish and they are in a bad mood and if I speak they may shout at me and get angry. Even though I speak with a heart of loving kindness, saying what is accurate, it is the right time and place I am free from the fault myself still they can be very difficult. then one is supposed to check If one can honestly say I will enfure the anger out of compassion for them I will endure anger and harsh words out of compassion then you go ahead and speak. If you are not able or willing to endure this harsh reaction then you are allowed not to notorious difficult character you are allowed not to do the correction.

Eventually though for a person like that there are structures in the sangha again they will Eventually be brought in front of four monks and will be told you will have to make yourself open to criticism . And then they are asked upto 3 times. And if they still refuse there is another forum called banishment. You can't stay with us anymore. Because you are not open to reflection and criticism and so forth. You have refused even in a group up to 3 times we have asked you . It is kind of a last resort. it is not done very often.

Q: This one about, 'Am I free of this fault myself?' I mean frankly there are very few faults in the world that I could say that I am completely free off, that I don't ever do that ...

Well I think that, 'Am I mindful of it?' and so forth. It can be something as the person is not taking care of their robes and things like that. They leave it in the middle of the sala all the times and so forth. Maybe you have done that once and maybe you will do that again in your life. But if you are reasonably free, I am being mindful of that, I am not likely in an hour to do that. Thats good enough.

Its a miracle. have you noticed this in your life. You correct somebody about something and the next day you do it yourself. (laughter) You scold someone, 'What's the matter with you? Can't you close the door?' You are always doing this. But the next day the door is open. Oh Oh. It was you who left the door open. Suddenly you realize, 'I leave the door open too!'

It is nice to know these enlightened way of interactions.

Some advice from the Dao De Jing about choosing. If I have only a little sense I will stay on the main path.

Q. Can we tell a lie to save another person from harm?

There is all kinds of interesting morality around that and it a great topic for psychological discussion. When should you tell a lie?

The Buddha says not for the sake of lives, mine or yours do I tell a lie. So there you have it. (laughter)

There is a philosopher in European history called Immanuel Kant and he has a similar ethic. He said you should never tell a lie not for any circumstances. You should always tell the truth. So that is where he slightly deviates from the Buddha. the Buddha says, 'I never tell a lie. I don't always tell the truth.' Now how does that happen? Is that puzzling? What is the criteria when I do not tell the truth? What would prevent me from telling the truth? Remember that there are two parts of right speech. There are two critical central parts of right speech.

Why would he not tell the truth?

When it is not beneficial.

So he says I don't always tell the truth. I tell the truth only when it is beneficial. But I never tell a lie. Not for benefit. I don' tell a lie for benefit. I tell a truth for benefit. And I don't tell it when it is not beneficial.

If somebody comes here looking for somebody intending to harm him. Kant would tell him where the guy was. The Buddha would not say that. There are all kinds of things you might say. It is one of the classic questions. Ethical questions. You might say 'Yeah sure' in a exaggerated way and he may go away. What comes out of your mouth comes from the heart and if thats in the right area it may have a very profound effect.

There is a story frm the second world war. When the Russians invaded Berlin they were mad because the Nazi's had taken Russia apart. And the Russians were not any gentler than the Nazi's had been. They came in and really took Berlin apart. They were just shooting people and raping. And this young woman, she was 18 and her mother was an invalid. They are in Berlin. they couldn't leave. She is the only one looking after her mother. The Russians are going apartment after apartment. They hear screams and shots and she knows what is going to happen. Three of them come in, machine guns in hand, really rough looking. They see this 18 year old girl. There is her old mother in a wheel chair. And one of them comes over and grabs her. And she says to him,

'Don't you have a mother?'

And he.. he lets her go. 'Lets get out of here.' They went next door. So what you are inspired to say.. And he did have a mother. probably the only thing that might have stopped him.

What she said came from a place of loving kindness. She stayed risking her life. It was a dangerous thing to do but no harm came to her.

It is not easy to say but it is a thrilling game if you decide not to tell a lie. Its thrilling! It feels like there is a lot of more pizazz to life. Like you are a different person. I am playing by a different set of rules now. But I will never have to cover my tracks. I will never have to think, 'What did I say yesterday about that? What was my story yesterday?' I am going to be careful about what I do because I am not going to lie about what I did. It might put a crimp in your life because when it comes down to it you are not going to deny it. Thats good.

* * * * * *