பராபவ சூத்திரம் Parabhava Sutta

சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home

Sn 1.6

பராபவ சூத்திரம்: வீழ்ச்சி

Parabhava Sutta: Downfall

Translated from the Pali by Narada Thera

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: நாரத தேரர்

Translator's note: While the Mangala Sutta deals with the way of life conducive to progress and happiness, the Parabhava Sutta supplements it by pointing out the causes of downfall. He who allows himself to become tarnished by these blemishes of conduct blocks his own road to worldly, moral and spiritual progress and lowers all that is truly noble and human in man. But he who is heedful of these dangers keeps open the road to all those thirty-eight blessings of which human nature is capable.

(ஆங்கிலத்தில்) மொழிபெயர்த்தவர் குறிப்பு: மங்கள சூத்திரம் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் மகிழ்வுக்கும் வழி காட்டுவது போல, பராபவ சூத்திரம் வீழ்ச்சிக்கான காரணங்களைத் தருகிறது. இதில் குறிக்கப்பட்டுள்ள தவறான நடத்தைகளினால் கறைபட்டவன் உலக, தரும, ஆன்மீக முன்னேற்றத்துக்கான பாதையைத் தடை செய்து மனிதனின் மேன்மையான பண்புகளையும் மனிதத் தன்மையையும் குறைத்து விடுகிறான். அதே சமயம் இவற்றுள் உள்ள அபாயங்களைக் கவனித்து அக்கறையுடன் வாழ்பவன் மனிதத்தன்மைக்குச் சாத்தியமான முப்பத்து எட்டு ஆசீர்வாதங்களுக்கான பாதையைத் திறந்து வைத்தவனாகிறான்.

* * *

Thus have I heard. Once the Exalted One was dwelling at Anathapindika's monastery, in the Jeta Grove, near Savatthi.

நான் கேள்விப் பட்ட நிகழ்ச்சி இது. ஒரு முறை போற்றப்பட்டவர் (புத்தர்) சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் விஹாரையில் தங்கியிருந்தார்.

Now when the night was far spent a certain deity whose surpassing splendor illuminated the entire Jeta Grove, came to the presence of the Exalted One and, drawing near, respectfully saluted Him and stood at one side. Standing thus, he addressed the Exalted One in verse:

இரவு பல நாளிகைகள் கழிந்த பின்னர், அந்த ஜேதவனம் முழுவதையும் தன் ஒளியினால் பிரகாசமடையச் செய்த ஒரு தேவகுமாரன், புத்தபகவானை அணுகி அவரை மரியாதையுடன் வணங்கி ஒருபுறமாக நின்றான். அவ்வாறு நின்று அத்தேவகுமாரன் பாச் செய்யுளால் பின்வருமாறு கேட்டான்.

The Deity:

Having come here with our questions to the Exalted One, we ask thee, O Gotama, about man's decline. Pray, tell us the cause of downfall!

தேவன்:

போற்றப்பட்டவருக்குக் கேள்விகளுடன் வந்துள்ளோம்! கோதமரே மனிதனின் வீழ்ச்சியைப் பற்றிக் கேட்கிறோம். தயவு செய்து வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறவும்!

The Buddha:

Easily known is the progressive one, easily known he who declines. He who loves Dhamma progresses; he who is averse to it, declines.

புத்தர்:

1. முன்னேற்றம் அடைபவனைச் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். வீழ்ச்சி அடைபவனையும் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். அறத்தை விரும்புபவன் முன்னேறுகிறான். அறத்தை வெறுப்பவன் வீழ்ச்சி அடைகிறான்.

The Deity:

Thus much do we see: this is the first cause of one's downfall. Pray, tell us the second cause.[1]

தேவன்:

இதை நாம் அறிவோம்: வீழ்ச்சிக்கான முதற்காரணம் இதுவே. தயவு கூர்ந்து இரண்டாம் காரணத்தைக் கூறவும். [1]

The Buddha:

The wicked are dear to him, with the virtuous he finds no delight, he prefers the creed of the wicked — this is a cause of one's downfall.

புத்தர்:

2. தீயவர்கள் அவன் அன்புக்குரியவர்களாக உள்ளனர். ஒழுக்கமுள்ளவர்களைக் கண்டு அவன் மகிழ்ச்சி அடைவதில்லை. தீயவர்களின் நம்பிக்கைகளையே விரும்புகிறான் - ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

Being fond of sleep, fond of company, indolent, lazy and irritable — this is a cause of one's downfall.

3. தூக்கத்தை விரும்புகிறான், கூட்டத்தை விரும்புகிறான், சுறுசுறுப்பற்றவன், சோம்பேரி, சுலபமாக எரிச்சலடைபவன் - ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

Though being well-to-do, not to support father and mother who are old and past their youth — this is a cause of one's downfall.

4. வசதியிருந்தும் தந்தை தாயை அவர்கள் வயதான காலத்தில், அவர்கள் இளமை தாண்டிய பின்பு ஆதரிப்பதில்லை - ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

To deceive by falsehood a brahman or ascetic or any other mendicant — this is a cause of one's downfall.

5. ஒரு பிராமணனை அல்லது சன்னியாசியை அல்லது வேறு ஒரு துறவியைப் பொய் சொல்லி ஏமாற்றுவது - ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

To have much wealth and ample gold and food, but to enjoy one's luxuries alone — this is a cause of one's downfall.

6. நிறையச் சொத்திருந்தும், ஏராளமான பொன்னும், உணவும் வைத்திருந்தும் ஆடம்பர வாழ்வைத் தான் மட்டும் தனியாக அனுபவிப்பது - ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

To be proud of birth, of wealth or clan, and to despise one's own kinsmen — this is a cause of one's downfall.

7. பிறப்பை அல்லது செல்வத்தை அல்லது குலத்தைப் பற்றிப் பெருமைப் படுவது, ஒருவன் தன் உறவினர்களை இழிவு படுத்துவது - ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

To be a rake, a drunkard, a gambler, and to squander all one earns — this is a cause of one's downfall.

8. பெண்ணாசை கொள்வது (முறைதவறி நடப்பது), குடிகாரனாக இருப்பது, சூதாடுவது, சம்பாத்தியத்தை வீணாக்குவது - ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

Not to be contented with one's own wife, and to be seen with harlots and the wives of others — this is a cause of one's downfall.

9. தன் மனைவியோடு இல்லற வாழ்வில் திருப்தி அடையாமல், விலைமாதர்களுடனும் மற்றவர் மனைவிகளுடனும் காணப்படுவது - ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

Being past one's youth, to take a young wife and to be unable to sleep for jealousy of her — this is a cause of one's downfall.

10. இளமை தாண்டிய பின்னர், இளம் பெண்ணை மணம் புரிந்து கொண்டு பின் அவளின் மீது பொறாமையின் காரணமாக [தன்னைவிட ஒரு இளைஞனை விரும்புவாளோ என்ற எண்ணத்தினால்] தூங்க முடியாமல் தவிப்பது - ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

To place in authority a woman given to drink and squandering, or a man of a like behavior — this is a cause of one's downfall.

11. குடிப்பழக்கம் கொண்ட, ஊதாரித்தனமாக நடந்து கொள்ளும் ஒரு பெண்ணை அதிகார பதவியில் நியமிப்பது அல்லது அதே பண்புகள் கொண்ட ஒரு ஆணை அதிகாரப் பதவியில் வைப்பது - ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

To be of noble birth, with vast ambition and of slender means, and to crave for rulership — this is a cause of one's downfall.

12. வசதி இல்லாத போதும் அதீத ஆசை கொள்வது, சத்திரிய குலத்தில் பிறந்து சுயநலத்தின் காரணமாக (எட்டாத) அரசாட்சியை வெல்ல ஏங்குவது - ஒருவனின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணம்.

Knowing well these causes of downfall in the world, the noble sage endowed with insight shares a happy realm.

உலகில் வீழ்ச்சிக்கான இந்தக் (பன்னிரண்டு) காரணங்களை நன்கு அறிந்த மேன்மையான முனிவன் ஞானத்தோடு மகிழ்ச்சியான நிலையில் (நிப்பாண நிலையில்) வாழ்கிறான்.

* * *

Note

விளக்கம்

1. These lines are repeated after each stanza, with the due enumeration.

இந்த வரிகள் ஒவ்வொரு பத்திக்குப் பின்பும் கூறப்படுகிறது - தக்க எண்கள் மாற்றத்துடன்.

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

©1985 Buddhist Publication Society. See details English Source

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.