உவமானங்கள் 25-36

இது போலத்தான்

108 அற உவமானங்கள்

போற்றுதற்குரிய அஜான் சா

It’s Like This

1 0 8 D H A M M A S I M I L E S

Venerable Ajahn Chah

* * * * * *

25. திருடர்கள் Top

'ஹிரி', என்றால் வெட்கம், நாணம் ஆகியவற்றை அறிந்திருப்பது. 'ஒத்தாப்பா' என்றால் ஏசறுப்பது, தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்களைச் செய்வதற்குத் தயங்குவது. இந்தக் குணங்களே உலகைப் பாதுகாக்கின்றன. ஆனால் அவை பாதுகாப்பளிப்பதற்குக் காரணம் நாம் அவற்றைப் பயிற்சி செய்வதால் தான். அவற்றைப் பயிற்சி செய்யவில்லையென்றால், அவை எதையும் பாதுகாப்பதில்லை. சில மேற்கத்தியர்கள் நான் இவ்வாறு சொல்வதற்கு ஆட்சேபித்திருக்கின்றனர். அவர்கள் கேட்பார்கள்: "நீங்கள் தாய்லாந்தில் வாழ்கின்றீர்கள். தாய்லாந்து பௌத்த நாடு, பின் ஏன் அங்கு அத்தனை திருடர்கள் இருக்கின்றனர்?" அவர்கள் சொல்வதும் உண்மை தான். தாய்லாந்தில் ஏராளமான திருடர்கள் இருக்கின்றனர், ஆனால் மக்கள் தான் திருடர்களாக இருக்கின்றனர். அறம் திருடன் இல்லை. மேற்கத்திய நாடுகளிலும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். தாய்லாந்தில் மட்டும் திருடர்கள் இருக்கின்றனர் என்பதில்லை. திருடர்கள் எங்கும் இருக்கின்றனர். நலச் சட்டங்கள் இருக்கின்றன. ஒழுக்கமும் இருக்கின்றது. எனவே தாய்லாந்தில் திருடர்கள் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அறம் ஒரு திருடன் இல்லை.

மொ. ஆ. குறிப்பு:

'ஹிரி-ஒத்தாப்பா': திறமையான செயல்களைச் செய்யும்போது அவற்றோடு ஒத்து இருக்கும் இரட்டை உணர்ச்சிகள். இவையே "உலகைப் பாதுகாக்கின்றன".

'ஹிரி' என்றால் நம் சுய மரியாதையைக் கெடுக்கும் செயல் எதையும் செய்யாமல் தடுக்கும் நமது மனச்சாட்சி.

'ஒத்தாப்பா' என்றால் நமக்கும் மற்றவருக்கும் கேடு விளைவிக்கும் திறனற்ற செயல்களைச் செய்யாதிருக்க, நம்முள் தோன்றும் ஆரோக்கியமான பயம். Source

Thieves

Hiri, a sense of shame; and ottappa, a sense of compunction: These are qualities that protect the world. But they can protect the world only because we practice them. If we don’t practice them, they don’t protect anything. Some Westerners have called me on this. They say, “You live in Thailand. Thailand is a Buddhist country, so why does it have so many thieves?” I admit that it’s true. Thailand has lots of thieves, but it’s people who are thieves. The Dhamma isn’t a thief. It’s probably the same in the West. Not only in Thailand do we have dishonest people. They’re thieves. There are good laws, and morality is still good. So I admit that there are thieves in Thailand, but the Dhamma isn’t a thief.

26. குருடன் Top

போற்றுதற்குரிய ஐயா, வெள்ளை எப்படி இருக்கும்? அது வெள்ளை எழுமிச்சை போல இருக்கும். வெள்ளை எழுமிச்சை எப்படி இருக்கும்? அது வெளுத்த வானத்தைப் போல இருக்கும். வெளுத்த வானம் எப்படி இருக்கும்? இந்த கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் முடிவே இல்லை. ஏனென்றால் உங்களுக்கு உண்மை தெரியவில்லை. நீரில் வாழும் மீன் நீரைக் காணாததுபோல, மண்ணில் வாழும் மண்புழு, மண்ணைக் காணாததுபோல, உங்களையே நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையென்றால், வாய்மை விளங்கவில்லையென்றால், எழும்புக் கூட்டோடு வாழும் ஒருவர் எழும்புக் கூட்டைப் பார்த்துப் பயப்படுவது போலத்தான். ஏனென்றால் அவருக்கு வாய்மை தெரியவில்லை.

அறத்தைக் கேட்பது உங்களுக்கு ஏராளமான புண்ணியம் சேர்க்கிறது. இதன் காரணமாக காலில் முள் குத்தியிருப்பதை அறிகிறோம். காலில் உள்ள முள்ளைப் பார்த்தவுடன் எடுத்து விடுகிறோம். அறத்தைக் கேட்டும், அதனால் பயன் அடையாதோருக்குத் துக்கத்தின் காரணம் தெரிவதில்லை, அதன் முடிவு தெரிவதில்லை. அதன் முடிவுக்கு கொண்டு செல்லும் மார்க்கமும் தெரிவதில்லை. அதாவது துக்கத்தைப் பிரதிபலிக்காததால் அவர்கள் துக்கத்தை அறிவதில்லை.

The Blind Person

Venerable father, what is white like? It’s like white lime. What is white lime like? It’s like a pale sky. What’s a pale sky like? This never comes to an end because you don’t know the truth. Fish live in the water but don’t see the water. Earthworms live in the dirt but don’t see the dirt. Not seeing yourself, not knowing the truth, is like a person living with his skeleton and getting frightened by skeletons—because he doesn’t see the truth.

Listening to the Dhamma gives lots of merit in that it helps you to see that there’s a thorn in your foot. As soon as you see it, you take it out. The people who don’t benefit from listening to the Dhamma are those who don’t know the cause of stress, don’t know the cessation of stress, and don’t know the practices leading to the cessation of stress. In other words, they don’t really know suffering because they don’t contemplate it.

27. கூட ஓட வேண்டாம் Top

நாம் ஒரு பொருளின் மீது பிரதிபலிக்கும் அதே சமயத்தில் பிரச்சினைகளையும் தீர்த்தால் அதைத் தான் தியானம் எனலாம். உங்களையே அடிக்கடி கவனிக்க வேண்டும். மனத்தைத் தொடருங்கள். எளிதில் மனம் புண்படுகிறதா இல்லையா, எண்ணங்களால் கட்டப்படும் மனக் கோட்டைகள் இவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும். எளிமையாகச் சொல்லப் போனால் இவற்றோடு சேர்ந்து ஓட வேண்டாம். அவற்றின் வழியைத் தொடர வேண்டாம். அவை மனத்தில் உருவான எண்ணங்கள், அவ்வளவு தான். கட்டப்பட்டவை மேலும் கட்டுவது இயல்பு தான். இப்போது இது வேண்டும், பின் அது வேண்டும் என்று மனக்கோட்டை கட்டுவது மனத்தின் இயல்பே. படிப்படியாக மனத்தில் கட்டுக் கதைகள் கட்டப்படுவதை உன்னிப்பாகக் கவனியுங்கள். எது வானாலும், எது பற்றியதானாலும் அவை நிச்சயமற்றவை. இதைத் தெளிவாக அறிந்தால் உங்கள் சந்தேகங்கள் முடிவுக்கு வரும். எந்த எண்ணங்கள் எழுந்தாலும் அவை உறுதியற்றவை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றிற்குப் பொருள் தரா விட்டால் தானாகவே முடிந்துவிடும். முடியாவிட்டால் முடித்து விடுங்கள், அவ்வளவுதான். அவை மனத்தின் கட்டுக்கதை அவ்வளவுதான். சரியாகப் புரிந்து கொள்ளவில்லையென்றால் அவற்றை உண்மையென்று நினைத்து விடுவோம். சொல்லப்போனால், நமது எண்ணங்களும் கருத்துக்களும் உருவாக்கப்பட்டவை. உண்மையான ‘தெரிந்திருத்தல்’ இல்லை. ஆனால் அவற்றை அறிவு என்று நினைக்கிறோம். இந்த அறிவு பிடியை விடுவதில்லை. உண்மையான அறிவு நம்மை ஆட்கொள்வதில்லை.

Don’t run along

Meditation means contemplating in a way that solves problems at the same time. Look at yourself a lot. Keep track of the mind, your sensitivity, your thought-fabrications. Actually, all your thoughts are an affair of fabrication. To put it in simple terms, don’t run along with them. Don’t follow in line with them. They’re just an affair of mental fabrication. Fabrications fabricate things, now wanting this, now wanting that. Try to fix your attention on keeping track of their stages as they’re happening. Whatever they’re about, they’re all not for sure, each and every one. When you see this clearly, that will end your doubts. Whatever thoughts arise, know that they’re not for sure. Don’t go attaching meaning to them, and they’ll end on their own. When they don’t end, make them end, and that’s the end of the matter. They’re just an affair of fabrication. If we don’t understand, we’ll think that they’re an affair of discernment. Actually, our thoughts and ideas are all an affair of fabrication. They’re not genuine knowing. But we think that they’re knowledge. They’re knowledge that doesn’t let go. If knowledge is genuine, it lets go.

28. தியானம் என்ற உப்பு Top

தயாள குணமும் பண்பும் மாமிசத்தைப் போல. தியானம் உப்பைப் போல. மாமிசம் கெட்டுப் போகாமல் இருக்க அதன்மீது உப்பைத் தடவுகிறோம். தியானம் தான் உங்கள தயாள குணத்தைச் சரியாக்குகிறது, பண்பையும் சரியாக்குகிறது. அதனாலேயே தியானம் மிக மதிப்புடையது. தியானம் உத்தமமானது.

The Salt of Meditation

Generosity and virtue are like meat. Meditation is like salt. For the meat to keep without spoiling, you have to salt it. Meditation is what makes your generosity correct, makes your virtue correct. That’s why meditation is something of very high value. It’s the ultimate perfection.

29. மனத்திற்கு முழுமையான உணவு Top

ஒழுக்கம், ஒருக்கம் (மன ஒருமுகப்படுத்தல்), உன்னிப்பு - இவை நமது உணவு போல. ஒழுக்கம் உணவாக இருந்தால் அதை இனிப்பு எனலாம். ஆனால் அது கொழுமை இல்லா இனிப்பு. அதனோடு மன ஒருக்கத்தையும் சேர்த்தால் உணவில் சற்றுக் கொழுமை சேர்க்கப் படுகிறது. இப்போது உணவு இனிப்பாகவும் கொழுமையுடனும் இருக்கிறது. சுவையுள்ளதாகவும் இருக்கிறது. ஆனால் இனிப்பும் கொழுமையும் மட்டுமே இருந்தால் அந்த உணவு முழுமையாவதில்லை. அது நறுமணம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இம்மூன்றும் இருந்தால் உணவு முழுமையடைகிறது. அக உணவாக இருந்தாலும் புற உணவாக இருந்தாலும், அது முழுமையான உணவாகிறது: இனிப்பு, கொழுமை, நறுமணம். மூன்றும் இருந்தால் நன்றாகச் சாப்பிடத் தோன்றும். இதுவே நல்ல உணவு.

Complete Food for the Mind

Virtue, concentration, and discernment are like our food. If virtue were food, we’d say that it’s sweet but without any richness. If you add concentration, that adds some richness. Now it’s both sweet and rich. It’s good that way. But if all you have is sweet and rich, it’s still not complete. It has to be good-smelling, too. If you have all three, then the food is complete. Whether it’s inner food or outer food, it’s complete: sweet, rich, and good-smelling. It makes you want to eat your fill. That’s what it’s like.

30. கண்ணாடியை நகர்த்துவது Top

சமாதி என்றால் உறுதியாக மனத்தை ஒருமுகப்படுத்துதல். பாவனா (மனத்தைப் பேணுவது) அல்லது தியானம் என்றால் மனத்தில் ஒன்றைப் பற்றியே நினைத்திருப்பது. நீங்கள் பற்பல எண்ணங்களை மனத்தில் ஓடவிடத் தேவையில்லை. இந்தக் கண்ணாடியை எடுத்து இங்கு ஒரு நிமிடம் வைத்திருப்பது போல. பின் அதை எடுத்து அங்கு ஒரு நிமிடம் வைப்பது. வேறு ஏதும் செய்யாமல் திரும்பத் திரும்ப எடுப்பதும் பின் வைப்பதுமாக இருப்பது.

தியானம் செய்யும் போது மூச்சைக் கவனிக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் போதும், வெளிவிடும் போதும் அது நீண்ட மூச்சா அல்லது குறுகிய மூச்சா என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். அது எத்தகைய உணர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதைத் தெரிந்திருக்க வேண்டும். அழுத்தத்தோடு மூச்சு விட வேண்டாம். மனம் அமைதியடைந்தாலும், இல்லாவிட்டாலும் கவலை கொள்ளவேண்டாம். எவ்வளவு நேரம் கவனம் செலுத்த முடியுமோ அவ்வளவு நேரம் மூச்சின் மீது கவனம் செலுத்துங்கள்.

Moving the Glass

Samadhi means firm concentration. Bhavana, meditation, means making the mind have a single preoccupation. You don’t have to do a lot of things. It’s kind of like taking this glass and setting it here for a minute, then lifting it and setting it there for a minute. Lifting and setting it, back and forth like this, without doing anything else.

When you meditate, contemplate the breath. When the breath comes in and out, know whether it’s short or long. Whatever it feels like, be mindful. You don’t have to force it. Whether the mind gets quiet or not, don’t worry about it. Just keep at it as much as you can.

31. சாதம் இல்லாததைவிட மேலானது Top

மன ஒருக்கத்துடன் இருக்க முற்படும் போது, மனம் அமைதியாக இல்லையென்றாலும், தியானத்தில் உட்கார்ந்திருப்பதே நல்லது தான். இதையும் செய்யாதவரைவிட இது மேலானது. இது பசியோடு இருப்பதைப் போல. ஆனால் சாதம் மட்டுமே இருக்கிறது. அதனுடன் கலப்பதற்கு ஒன்றும் இல்லை. நமக்கு ஏமாற்றமாக இருந்தாலும் சாதமும் இல்லாததைவிட இது மேலானது என்கிறேன். வெள்ளைச் சாதத்தைச் சாப்பிடுவது எதையும் சாப்பிடாததைவிட மேலானது, இல்லையா? சாதம் மட்டுமே இருந்தால் இப்போதைக்கு அதைச் சாப்பிடுங்கள். எதையும் சாப்பிடாமல் இருப்பதைவிட இது மேலானது. இதுவும் அது போலத்தான்: எப்படித் தியானம் செய்வது என்பது பற்றிச் சிறிதே தெரிந்திருந்தாலும் அதைத் தொடர்வது நல்லது தான்.

Better Than No Rice

When you come to sit in concentration, then even if your mind isn’t yet quiet, simply sitting in the meditation posture is something good. It’s better than people who don’t even do that much. It’s like being hungry, but today there’s only rice, with nothing to go with it. We feel disgruntled, but I’d say that it’s better than having no rice at all. Eating plain rice is better than not eating anything, right? If all you have is plain rice, eat that for the time being. It’s better than not eating anything at all. The same with this: Even if we know only a little about how to practice, it’s still good.

32. கூண்டில் உள்ள கோழி Top

இது கோழியைக் கூண்டில் அடைத்து வைப்பது போல. ஒரே கூண்டில் இருக்கட்டும். கோழி கூண்டில் இருக்கும் போது அது வெளியே வர முடியாது, ஆனால் முன்னும் பின்னும் கூண்டுக்குள்ளேயே நடந்து கொண்டு இருக்கும். இப்படி முன்னும் பின்னும் நடப்பதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை, ஏனென்றல் கூண்டுக்குளேயே தான் அது முன்னும் பின்னும் நடந்து கொண்டிருக்கிறது.

நாம் மனக் கவனத்துடன், மனம் அசைவில்லாமல் இருக்கும் போது சில எண்ணங்கள் மனத்தில் தோன்றலாம். அந்த அசைவில்லா மனத்தில் எண்ணங்களை உணரும் போது அது நம்மைத் தொந்தரவு செய்வதில்லை. அசைவில்லா மனத்தில் உணரும் போதும், எண்ணும் போதும் பிரச்சனை ஏதும் இல்லை.

சிலர், அப்படி உணரும் போது அங்கு ஏதும் இருக்ககூடாது என்று நினைக்கின்றனர். அது தவறான கருத்து. அசைவில்லா மனத்தில் எண்ணங்களை உணர்வீர்கள் - ஆனால் அது உங்களைத் தொந்தரவு செய்யாது. மனம் அசைவில்லாமல் இருக்கிறது. பிரச்சனை இல்லை.

பிரச்சனை, கோழி கூண்டைவிட்டு வெளியேறும் போதுதான் உண்டாகிறது. உதாரணமாக நீங்கள் மூச்சின் மீது கவனம் வைத்திருக்கும் போது அவ்வப்போது அதை மறந்து விடுகின்றீர்கள். அதை மறந்துவிட்டு வீட்டுக்குச் செல்கின்றீர்கள், கடைத் தெருவிற்குச் செல்கின்றீர்கள் - வெகுதூரத்தில் உள்ளவை இவை. சில சமயம் அரை மணி நேரத்திற்குப் பின்னர் தான் மீண்டும் வருகின்றீர்கள் (மீண்டும் மூச்சைக் கவனிக்கின்றீர்கள்). இது தான் என்ன நடக்கின்றது என்பதையே தெரியாமல் இருப்பது என்பது. இது மிக முக்கியமானதால் கவனமாக இருக்கவும். இது முக்கியம். மனம் கூண்டைவிட்டுச் சென்று விட்டது. அதன் அசைவற்ற நிலையை விட்டு நீங்கி விட்டது. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தெரிந்த நிலையில் இருக்க வேண்டும். விட்டுச் சென்றதை அறிந்தவுடன் அதை மீண்டும் இழுத்துக் கொண்டு வாருங்கள் - இழுத்துக்கொண்டு வாருங்களென்றால் அதை உண்மையாகவே இழுத்துக்கொண்டு வருவதென்று அர்த்தம் இல்லை. எண்ணங்கள் எங்கு சென்றாலும், உணர்வது எது என்பதை மாற்றிக்கொள்வது பற்றியது தான். உங்கள் மனத்தை இங்கு வைத்திருக்க முற்பட்டால் அது இங்கேயே இருக்கும். மனக் கவனத்துடன் தெரிந்த நிலையில் இருந்தால் அது இங்கேயே இருக்கும். எங்கேயும் ஓடிவிடாது. மாற்றம் மனத்திலேயே உள்ளது. அங்கு செல்வதாகத் தோன்றினாலும், அங்கு செல்வதில்லை என்பதைக் கவனியுங்கள். மாற்றம் இங்கேயே உள்ளது. தெரிந்திருக்கும் நிலை நினைவுகொண்டபின், மீண்டும் உடனே இங்கு வந்துவிடுகிறது. இங்கிருந்து செல்வதில்லை. எல்லாம் இங்கேயே உணர்கிறோம்.

The Chicken in the Cage

It’s like having a chicken and putting it into a cage. Let it stay in just one cage. When the chicken’s in the cage, it won’t get out of the cage, but it will walk back and forth inside the cage. Its walking back and forth is no problem, because it’s walking back and forth in the cage.

It’s like the things we sense in the mind when we’re mindful and still. When we sense things in the stillness, it doesn’t disturb us. When we think and sense things in the stillness, it’s no problem.

Some people, when they sense things, don’t want there to be anything there. That’s wrong. There are things you’ll sense in the stillness—you’ll sense them, but they won’t annoy you. The mind is still. There’s no problem.

The problem is when the chicken leaves the cage. For example, you’re focused on the breath but then you forget. You go traveling to your home or into the market—way out there. Sometimes it takes half an hour to come back. That’s dying without knowing what’s happening. This is important, so be careful. This is important. The mind has left the cage. It’s left its stillness. You have to be careful. You have to be mindful. As soon as you’re aware that it’s left, you have to pull it back in—although to say that you pull it back in, you’re not really pulling it back in. Wherever your thoughts go, it’s just a matter of changing what you sense. When you get the mind to stay here, it stays here. As long as you’re mindful, it stays here. It doesn’t go anywhere. The change is right here in the mind. Notice that when it seems to go over there, it doesn’t really go. The change happens right here. As soon as your mindfulness remembers again, it’s immediately here. It doesn’t leave from here. Everything is sensed right here.

33. திறந்திருக்கும் ஒரே துளை Top

உள்ளத்தை உள்ளத்தில் மையப்படுத்துங்கள். தெரிந்திருக்கும் நிலை தொடர்ந்து இருக்க வேண்டும். அலைபாயும் எண்ணங்கள் அமைதியாகி, மனத்தில் அந்தத் தெரிந்திருக்கும் நிலை மட்டும் இருக்கட்டும்.

துச்சோ பொதில்லா வைப் போல: அவர் ஒரு புதிய துறவியிடம் அறம் கற்கச் சென்றார். துறவியும் ஒரு கரையான் புற்றிருக்கிறது. அதில் ஆறு துவாரங்கள். அதனுள் ஒளிந்திருக்கும் பல்லியைப் பிடிக்க வேண்டும். என்ன செய்வது? என்று கேட்டார். ஐந்து துவாரங்களை மூடிவிட்டு, ஒரு துளையை மட்டும் திறந்த நிலையில்விட்டு விட்டுக் காத்திருந்தால், பல்லி அந்தத் திறந்த துவாரத்தின் வழியேதான் வெளியே வரும். அப்போது அதைப் பிடித்துவிடலாம். அதாவது கண்களையும், காதுகளையும், மூக்கு, நாக்கு மற்றும் உடலை மறந்துவிட்டு உள்ளத்தில் மட்டுமே தெரிந்த நிலையில் இருங்கள். உள்ளத்தை உள்ளத்தில் மையப் படுத்துங்கள் என்பதன் பொருள் இதுவே.

அது போலத்தான் இன்றும்: உள்ளத்தில் மட்டுமே தெரிந்த நிலையில் இருப்பதென்றால் புலன் உணர்வுகளை அடக்கப் பயில வேண்டும். கண்களையும், காதுகளையும், மூக்கு, நாக்கு மற்றும் உடலையும், மனத்தையும் அடக்குங்கள். உடல் முழுவதையும் மறந்து விடுங்கள். உள்ளத்தில் மட்டுமே கவனம் இருக்கட்டும். இது தான் உள்ளத்தை உள்ளத்தில் மையப்படுத்துவதென்பது.

Only One Hole Open

Focus your heart in your heart. Make mindfulness continuous. Get the mind to calm down its preoccupations, leaving just awareness.

Like Tuccho Potthila: He went to learn the Dhamma from a novice. The novice taught him that there’s a termite nest with six openings. You want to catch the lizard hiding in the hollow inside the termite nest, so what do you do? You close off five of the holes and leave open only one hole, so that you can catch the lizard when it comes out. In

other words, leave your eyes, ears, nose, tongue, and body alone, and be aware right at the heart. That’s what it means to focus your heart in your heart.

The same today: To catch all your awareness and gather it in together, you have to practice restraint of the senses. You restrain your eyes, ears, nose, tongue,

body, and mind. Let go of the entire body, and simply be aware at the heart. This is called focusing your heart in your heart.

34. தண்ணீர்க் குடம் Top

ஒன்றை மனப்பாடம் மட்டும் செய்தால் சந்தேகங்கள் தொடர்ந்து இருக்கலாம். உண்மை தெரிந்து விட்டால் சந்தேகங்கள் முடிந்து விடுகின்றன.

ஒரே திறவு உள்ள இந்தத் தண்ணீர்க் குடத்தைப் போல. அந்தத் திறவின் வழியாகத்தான் தண்ணீர் வெளிவர முடியும். வேறு எப்படியும் தண்ணீர் எடுக்க முடியாது. திறவை வேறு திசையில் திருப்பினால் தண்ணீர் வெளியே வராது. திறந்த பகுதிக்கு நேராகச் செல்லுமாறு உங்களுக்கு ஒருவர் அறிவுரை தருகிறார். அந்தத் திறந்த பகுதிக்குச் செல்ல மனத்தில் முடிவெடுங்கள். வேறு பக்கம் திருப்பினால் குடத்திலிருந்து நீர் எடுக்க முடியாது. இந்த ஒரு திசையில் திருப்பினால் மட்டுமே நீர் வெளியே வரும். "ஓ, இப்படித்தான் நீர் வெளியே வருகிறது" என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

The Water Cooler

If you know something simply by memorizing it, there can still be doubts. If you know the truth, that’s the end of your doubts. It’s like this water cooler that

has only a single opening for the water to go out. It won’t go out any other way. If you tilt it in any other direction, the water won’t go out, for there’s no opening. And the advice you hear from this person here is for you to go right to that opening. Try to make your mind go right to that opening. If you try to pour the water out in another direction, it won’t come out, for there’s no opening. You have to pour it in this direction, and it will flow right out. “Oh. This is how it comes out.” That’s when you understand it.

35. நெருப்பை அறிவது Top

உண்மையை அறிந்த பின், உண்மையை ஒத்துக் கொள்வோம். துக்கம் விளைவிக்கும் காரணத்தை அறிந்தபின், துக்கம் துவங்குவது போல எங்கு தோன்றினாலும் அதைச் செய்வதில்லை, அதைச் சொல்வதில்லை. நாம் பயில்வது பயிற்சியைச் சரியாகச் செய்வதற்குத் தான். சரியாக செய்தால் துக்கம் எழாமல் இருக்கும். தவறை அறியாதவன் ஒரு தவறைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டு இருப்பவனைப் போல. அவன் நெருப்பை அறிவதில்லை. நெருப்பை அறிந்தவர் அதைத் தீண்ட முயல்வார்களா? யார் நெருப்பைத் தொட்டாலும் அதனால் அவர்கள் சுடப்படுகின்றனர். இதைத் தெரிந்தவர் யாரும் நெருப்பைத் தொடுவதில்லை.

மனம் நெருப்பைவிடச் சூடானது, ஆனால் யாருக்கும் அது சூடானது என்று தெரிவதில்லை. எனவே அதைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. அவர்களுக்குச் சரியற்ற தென்றால் அது மிகவும் சூடானது, எரிந்து கொண்டிருப்பது என்பது தெரிவதில்லை.அதனால் தான் மனிதர்கள் அதனோடு பற்றுக் கொண்டுள்ளனர் - சில சமயம் தெரிந்தும் செய்கின்றனர். அவர்கள் பேராசைக்கு அடிமைகள். நாம் அனைவரும்: நமக்கு அறம் தெரியவில்லையென்றால், நாம் அனைவரும் பேராசைக்கு அடிமைகளே.

Recognizing Fire

When we see the truth, we’ll admit the truth. When we see the cause that gives rise to stress, then wherever stress would arise, we don’t do that. We don’t say that. We practice so that our practice becomes correct, and stress won’t arise. It’s the same as when a person makes a mistake often because he doesn’t recognize mistakes. He doesn’t recognize fire. If people recognize fire, will they grab hold of it? No matter who grabs hold of it, they get burned. Once they know this, none of them will grab hold of fire.

The mind is hotter than fire, but nobody senses that it’s hot, and so they say that it’s nothing to worry about. They don’t know that whatever’s not correct is hot and burning. This is why human beings keep grabbing hold of it—sometimes even when they know better. They’re servants of craving. They’re slaves. All of us: If we don’t know the Dhamma, we’re all slaves to craving.

36. ஆசிரியரைத் தேடி Top

தியானம் எப்படிச் செய்வது என்று கற்றுக் கொள்ள விருப்பப் பட்டீர்களென்றால், தூய்மையானவரைத் தேடவேண்டும், தூய்மையான துறவிகள், அவர்கள் பேச்சுக்கு நிகராக நடத்தையிலும் ஈடுபடுவோரைத் தேட வேண்டும்: மிகக் குறைவானதுடன் திருப்தி அடைபவர்கள், துக்கத்திலிருந்து விடுபடப் பயிற்சி செய்பவர்கள், சம்சார சக்கரத்திலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள். இது உங்கள் பயிற்சியையும் ஊக்குவிக்கும். ஏனென்றால் மனத்திற்கு ஊக்கம் தந்து நம்பிக்கை உண்டாக்குகிறது. உங்களைப் போன்ற இல்லற மக்களாக இருக்கும் ஆசிரியர்கள் என்னை ..... எப்போதும் கவர்ந்ததே இல்லை. அவர்களுக்கு மனைவி, மக்கள், சொத்து உண்டு - தாறுமாறாக உலகப் பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மாலையில் தியானம் கற்றுத் தருகின்றனர். பின் காலையில் பீயரும் பிற மதுபானங்களையும் அருந்துகின்றனர். அவர்கள் சாதாரணமான மக்கள்.

நீங்கள் பள்ளியில் படிக்கும் போது, என்ன செய்வீர்கள்? உங்களைவிட அதிகம் தெரிந்த ஆசிரியரைத் தேடுவீர்கள் அல்லவா? அப்போது தான் அவரிடம் கற்கச் செல்வீர்கள். புத்தரின் போதனைகளைப் பயிலும் போது, தியானம் பயிலும் போது, குறைந்த, லேசான மாசுள்ளவரையே (மாசு - கிளேசங்கள், தூய்மையைக் கெடுப்பவை) நாடவேண்டும். அவர்கள் பெரும் அளவு மாசுக்களை விட்டு விட்டோர்களாவர்.

Looking for a Teacher

When you go looking for teachings on how to meditate, you have to look for people who are pure, monks who are pure, who really act in line with what they say: people who are content with little, who practice to gain release from suffering, to gain release from the cycle of wandering-on. This energizes your practice because it gives rise to a sense of conviction and inspiration. If the teachers are lay people like you, they… I’ve never felt inspired by them. They have spouses, children, belongings—they’re embroiled. In the evening they teach meditation and then in the morning they drink beer, drink alcohol. They’re just ordinary people.

When you study in school, what do you do? You look for teachers who know more than you do, right? Only then will you study with them. When you practice the Buddha’s teachings, when you practice meditation, you have to look for people with few defilements, light defilements—people who’ve been able to get out of their defilements to a good extent.

அடுத்து Next