நல்வாய்மை

அட்டாங்க மார்க்கம் முகப்பு

நல்வாய்மை (சம்மாவாசா)

Right Speech (Samma Vacha)

English

இது நான்கு அம்சங்களைக் கொண்டுள்ளது:

1. தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்.

அதாவது பொய் பேசாதிருத்தல். மாறாக வாய்மையையே பேச முயற்சி செய்ய வேண்டும்.

2. வம்புப் பேச்சு உரைக்காமல் இருத்தல்.

மக்களைப் பிரித்து அவர்கள் மத்தியில் பகைமையை உண்டாக்கும் நோக்கத்தோடு பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும். மாறாக மார்க்கத்தைப் பின்பற்றுவோர் எப்போதும் நட்புணர்வை வளர்க்கும் பேச்சையும், மக்களிடையே இணக்கம் உண்டாக்கும் பேச்சையுமே பேச வேண்டும்.

3. கடுமையான பேச்சு உரைக்காமல் இருத்தல்.

கோபமான, எரிச்சலூட்டும் பேச்சு, மக்கள் மனத்தைப் புண்படுத்தும் பேச்சு ஆகியவற்றைத் தவிர்த்தல் வேண்டும். மாறாக ஒருவரின் பேச்சு எப்போதும் மென்மையானதாகவும், அன்புடையதாகவும் இருத்தல் வேண்டும்.

4. விதண்டைப் பேச்சைத் தவிர்த்தல்.

இந்த வகைப் பேச்சு அர்த்தமற்று உளரும் வெட்டிப் பேச்சு. இதனைத் தவிர்க்க வேண்டும். மாறாகப் பொருள் பொதிந்த, கருத்துள்ள பேச்சையே பேசுதல் வேண்டும்.

மேற்கூறியவை பேச்சு என்ற சிந்தனா சக்தியில் (faculty) பொதிந்துள்ள அளப்பரிய வலிமையை எடுத்துக் காட்டுகிறது. உடம்போடு ஒப்பிடுகையில், நாக்கு சிறியதாக இருக்கலாம். ஆனால் நாம் பயன்படுத்துவதைப் பொருத்து அது மாபெரும் நன்மையையும், மிகப்பெரிய தீங்கையும் விளைவிக்கக் கூடியது. இங்கு நாம் கட்டுப்படுத்த வேண்டியது நாக்கை அல்ல, மனத்தைத்தான். ஏனென்றால் மனம் தான் நாக்கைப் பயன்படுத்துகிறது.