மஹா பரிநிப்பாண சூத்திரம் 5

முகப்பு முன்னுரை I II III IV V VI

மஹா பரிநிப்பாண சூத்திரம்

அத்தியாயம் ஐந்து - குசிநகரம் அடைந்தது

The Great Total Unbinding Discourse

Chapter 5 - At Kusinara

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் வண. தனிசாரோ பிக்கு

translated from the Pali by Thanissaro Bhikkhu

Source

ஜப்பான் Nanzo-in temple, Japan படம் ஆதாரம்

கடைசி ஓய்விடம்

Last Place of Rest

5.1. பின் பகவர் ஆனந்தரிடம்: "வா, ஆனந்தா, நாம் ஹிரஞ்ஞவதி (Hiraññavati ) ஆற்றின் அக்கரைக்குச் சென்று அங்கிருந்து குசிநகரின் அருகில் உள்ள மல்லர்களின் சால வனத்திற்குச் செல்வோம்." [1]

"நீங்கள் சொல்வது போலவே செய்வோம், அண்ணலே," என்று பகவருக்குப் பதிலுரைத்தார்

போ. ஆனந்தர்.

பின் பகவர், ஒரு பெரும் துறவி சங்கத்தாருடன் ஹிரஞ்ஞவதி ஆற்றின் மறுகரைக்குச் சென்று அங்கிருந்து குசிநகரம் அருகில் உள்ள மல்லர்களின் சால வனத்திற்குச்சென்றார்.

பின் அண்ணல் போ. ஆனந்தரிடம் கூறினார்: "ஆனந்தா, இந்த இரு சால மரங்களுக்கிடையே தலை வடக்கு நோக்கி உள்ளவாறு ஒரு மஞ்சம் (படுக்கை) அமைக்கவும். எனக்குக் களைப்பாய் இருக்கிறது. நான் சிறிது படுத்துக்கொள்ள விரும்புகிறேன்," என்றார். [2]

"நீங்கள் சொல்வது போலவே செய்கிறேன், அண்ணலே," என்று பகவருக்குப் பதிலுரைத்தார்

போ. ஆனந்தர்.

அண்ணல் கூறியவாறே தலைப்பக்கம் வடக்கு நோக்கியிருக்க ஒரு மஞ்சம் அமைத்தார். அண்ணல் சிங்கம் படுத்திருப்பதைப் போல வலது புறமாகச் சாய்ந்து ஒரு காலை மற்றொரு கால் மீது வைத்துக் கொண்டு கவனத்துடன், தெளிவான மனத்துடன் படுத்திருந்தார். [3]

Then the Blessed One with a large Saṅgha of monks went to the far shore of the Hiraññavati River, to Upavattana, the Mallans’ Sal Forest near Kusinārā. On arrival, he said to Ven. Ānanda, “Ānanda, please prepare a bed for me between the twin Sal trees, with its head to the north. I am tired and will lie down.”

Responding, “As you say, lord,” to the Blessed One, Ven. Ānanda prepared a bed between the twin Sal trees, with its head to the north. Then the Blessed One lay down on his right side in the lion’s sleeping posture, with one foot on top of the other, mindful and alert.

5.2. அப்பொழுது அந்த இரண்டு சால மரங்களும், பருவத்திற்கு முரண்பாடாக முழுமையாகப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. ததாகதருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அண்ணல் மீது பூ மழை பொழிந்தன. விண்ணுலகைச் சேர்ந்த தெய்வீகமான பூக்களும், சந்தன மரத்தூளும் அவர் மீது பொழிந்தன. வானுலக இசையும், பாடலும் கேட்டன. இவை எல்லாம் ததாகதருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடந்தவை.

Now on that occasion the twin Sal trees were in full bloom, even though it was not the time for flowering. They showered, strewed and sprinkled on the Tathāgata’s body in homage to him. Heavenly coral-tree blossoms fell from the sky, showering, strewing, and sprinkling the Tathāgata’s body in homage to him. Heavenly sandalwood powder fell from the sky, showering, strewing, and sprinkling the Tathāgata’s body in homage to him. Heavenly music was playing in the sky, in homage to the Tathāgata. Heavenly songs were sung in the sky, in homage to the Tathāgata.

5.3. "ஆனந்தா, இந்த சாலமரங்கள் பருவத்திற்கு முரண்பாடாக பூத்துக் குலுங்கி, ததாகதருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் மீது பூ மழை பொழிகின்றன. விண்ணுலகைச் சேர்ந்த தெய்வீகமான எரிமலர் பூக்களும் பொழிகின்றன. தெய்வீகமான சந்தன மரத்தூளும் விண்ணுலகிலிருந்து விழுகிறது. தெய்வீக இசையும் வானத்தில் வாசிக்கப்படுகிறது. ததாகதருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தெய்வீகப் பாடல்களும் வானத்தில் பாடப்படுகிறது.

ஒருபோதும் ததாகதர் இவ்வாறு கௌரவிக்கப்பட்டு, போற்றப்பட்டு, மதிக்கப்பட்டு, புகழ்ந்து, வழிபடப்பட்டதில்லை.

ஆனால் ஆனந்தா ஆண் துறவிகளும், பெண் துறவிகளும், இல்லற வாழ்விலுள்ள ஆண்களும், பெண்களும் அறத்துடன் ஒத்துச் செல்பவர்கள், அறம் காட்டும் வழியில் செல்பவர்கள், அறத்தைப் பயிற்சி செய்பவர்கள்: அப்படிப்பட்டவரே ததாகதரைக் கௌரவித்து, வணங்கி, உயர்வாகக் கருதி, அஞ்சலி செலுத்திப் புகழ்ந்து அவருக்கு மேலோங்கிய மரியாதை அளிக்கின்றனர்.

எனவே நீங்கள் பயிற்சி செய்து கொள்ளுங்கள்: 'நாங்கள் தம்மம் வழியாகத் தம்மத்தைப் பயிற்சி செய்வோம். அறத்தை ஊன்றிக் கவனித்து அறிந்து கொள்வோம். அறவழியில் வாழ்வோம்.' இப்படித்தான் நீங்கள் உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். [4]

Then the Blessed One said to Ven. Ānanda, “Ānanda, the twin Sal trees are in full bloom, even though it’s not the flowering season. They shower, strew, and sprinkle on the Tathāgata’s body in homage to him. Heavenly coral-tree blossoms are falling from the sky.… Heavenly sandalwood powder is falling from the sky.… Heavenly music is playing in the sky.… Heavenly songs are sung in the sky, in homage to the Tathāgata. But it is not to this extent that a Tathāgata is worshipped, honored, respected, venerated, or paid homage to. Rather, the monk, nun, male lay follower, or female lay follower who keeps practicing the Dhamma in accordance with the Dhamma, who keeps practicing masterfully, who lives in accordance with the Dhamma: That is the person who worships, honors, respects, venerates, and pays homage to the Tathāgata with the highest homage. So you should train yourselves: ‘We will keep practicing the Dhamma in accordance with the Dhamma, we will keep practicing masterfully, we will live in accordance with the Dhamma.’ That’s how you should train yourselves.”

தேவர்களின் துயரம்

The Grief of the Gods

5.4. அச்சமயம் போ. உபவாணர் பகவருக்கு அருகில் நின்று, அவருக்கு விசிறிக் கொண்டிருந்தார். பகவர் அவரை அங்கிருந்து போகச் சொன்னார். "என் முன் நிற்க வேண்டாம், போய் விடும் துறவியே." இதைக் கேட்ட போ. ஆனந்தருக்கு இந்த எண்ணம் தோன்றியது, "இப்போது நீண்ட நாட்களாகவே இந்த போ. உபவாணர் பகவருக்குப் பணிவிடை செய்து கொண்டு, அவர் அருகில் தங்கி, அவருடன் பயணம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கடைசி நேரத்தில், 'என் முன் நிற்க வேண்டாம், போய்விடும், துறவியே,' என்று கூறி அவரைப் போய்விடச் சொல்கிறாரே. எதனாலே, என்ன காரணத்திற்காக, பகவர் அவரிடம் 'என் முன் நிற்க வேண்டாம், போய்விடும் துறவியே,' என்று கூறி அவரைப் போய்விடச் சொல்கிறார்? போ. ஆனந்தர் பகவரிடம் "இப்போது நீண்ட நாட்களாகவே இந்த போ. உபவாணர் பகவருக்குப் பணிவிடை செய்து கொண்டு, அவர் அருகில் தங்கி, அவருடன் பயணம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கடைசி நேரத்தில், 'என்முன் நிற்க வேண்டாம், போய்விடும் துறவியே,' என்று கூறி அவரைப் போய்விடச்சொல்லியிருக்கின்றீர்கள். எதனாலே, என்ன காரணத்திற்காக, பகவர் அவரிடம் 'என்முன் நிற்க வேண்டாம், போய்விடும் துறவியே,' என்று கூறி அவரைப் போய்விடச் சொல்கின்றீர்கள்?"

5.5. "ஆனந்தா, பத்து உலக-பிரபஞ்சங் களிலிருந்தும், ஏராளமான தேவர்கள் பகவரைக் காண இங்கு வந்துள்ளனர். குசிநகரத்தின் அருகில் உள்ள இந்த மல்லர்களின் சால வனத்தைச் சுற்றிப் பன்னிரண்டு கல் தூரத்திற்கு ஒரு குதிரை வால் முடி எடுக்கும் இடமளவுகூட விட்டு வைக்காமல் உயர்ந்த தேவர்கள் இடம் பிடித்துள்ளனர். தேவர்கள் குறை கூறுகின்றனர் ஆனந்தா, 'நாங்கள் வெகு தூரத்திலிருந்து ததாகதரைக் காண வந்துள்ளோம் [5]. பற்பல காலத்திற்கு ஒரு முறைதான் ஒரு ததாகதர் - போற்றக்கூடியவர், சுயமாக விழிப்புற்றவர் - இந்த உலகில் தோன்றுகிறார். இன்றிரவு கடை ஜாமத்தில் ததாகதரின் பரிநிப்பாணம் நடைபெறப் போகிறது. ஆனால் இந்த மேன்மையான துறவி பகவர் முன் நின்று கொண்டு, வழியை மறைக்கின்றார். பகவரின் கடைசி நேரத்தில் அவரை எங்களால் பார்க்க முடியவில்லை."

“Ānanda, most of the devatās from ten world-systems have gathered in order to see the Tathāgata. For twelve leagues all around Upavattana, the Mallans’ Sal Forest near Kusinārā, there is not the space even of the tip of a horse-tail hair that is not occupied by eminent devatās. The devatās, Ānanda, are complaining, ‘We have come a long distance to see the Tathāgata.44 Only once in a long, long time does a Tathāgata, worthy and rightly self-awakened, arise in the world. Tonight, in the last watch of the night, the total unbinding of the Tathāgata will occur. And this eminent monk is standing in front of the Blessed One, blocking the way. We aren’t getting to see the Blessed One in his final hour.’”

5.6. "ஆனால், அண்ணலே, பகவர் அக்கறை காட்டும் அந்த தேவர்களின் நிலை எவ்வாறு உள்ளது?"

"ஆனந்தா, ஆகாச தேவர்கள் - ஆனால் அவர்கள் மனம் பூமியோடு கட்டுப் பட்டுள்ளது. [6] (அதாவது பற்றறுக்காதோர்) - தங்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு புலம்பு கின்றனர். கைகளைத் தூக்கிக் கொண்டு அழுகின்றனர். அவர்கள் கால்கள் வெட்டுண்டவர்கள் போலத் தரையில் விழுந்து, புரண்டு கொண்டு கதறுகின்றனர், 'அகாலமாக பகவர் பரிநிப்பாணம் அடையப் போகிறார்! அகாலமாக ததாகதர் பரிநிப்பாணம் அடையப் போகிறார்! அகாலமாக ஞானக் கண்ணுடையவர் உலகிலிருந்து மறைந்து விடுவார்!'

பின் பூமி தேவர்கள் - அவர்கள் மனம் பூமியோடு கட்டுப் பட்டுள்ளது - அவர்களும் தங்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு புலம்புகின்றனர். கைகளைத் தூக்கிக் கொண்டு அழுகின்றனர். அவர்கள் கால்கள் வெட்டுண்டவர்கள் போலத் தரையில் விழுந்து, புரண்டு கொண்டு கதறுகின்றனர், 'அகாலமாக பகவர் பரிநிப்பாணம் அடையப் போகிறார்! அகாலமாக ததாகதர் பரிநிப்பாணம் அடையப் போகிறார்! அகாலமாக ஞானக் கண்ணுடையவர் உலகிலிருந்து மறைந்துவிடுவார்!'

ஆனால் பற்றிலிருந்து விடுபட்ட தேவர்கள் உடன்பட்டு, பொறுமையாகக் கவனத்துடன் தெளிவான மனத்துடன்: "காரணங்களால் தோன்றுபவை எல்லாம் நிலையற்றவை. வேறு எப்படி எதிர்பார்க்க முடியும்?' என்கின்றனர். [7]

“Ānanda, there are devatās who perceive space to be earth. Tearing at their hair, they are weeping. Uplifting their arms, they are weeping. As if their feet were cut out from under them, they fall down and roll back and forth, crying, ‘All too soon, the Blessed One will totally unbind! All too soon, the One Well-Gone will totally unbind! All too soon, the One with Eyes [alternate reading: the Eye] will disappear from the world!’ Then there are devatās who perceive earth to be earth. Tearing at their hair, they are weeping. Uplifting their arms, they are weeping. As if their feet were cut out from under them, they fall down and roll back and forth, crying, ‘All too soon, the Blessed One will totally unbind! All too soon, the One Well-Gone will totally unbind! All too soon, the One with Eyes will disappear from the world!’ But those devatās who are free from passion acquiesce, mindful and alert: ‘Inconstant are fabrications. What else is there to expect?’

ஆனந்தரின் கவலை

Ananda's Concern

5.7. "முற்காலத்தில், அண்ணலே, எல்லாத் திசைகளிலும் வாழும் துறவிகள், மழைக்காலச் சங்கமத்தின் பின்னர், ததாகதரைக் காண வருவார்கள். அப்போது உள்ளத்தைக் கவரும் துறவிகளைக் காணவும், அவர்களுக்குப் பணிவிடை செய்யவும் முடிந்தது. ஆனால் பகவர் மறைந்த பின் உள்ளத்தைக் கவரும் துறவிகளைக் காணவும், அவர்களுக்குப் பணிவிடை செய்யவும் முடியாமல் போய்விடும்."

“In the past, lord, the monks in all directions, after ending the Rains retreat, came to see the Tathāgata. Thus we got to see and attend to the monks who inspire the heart. But now, after the Blessed One is gone, we won’t get to see or attend to the monks who inspire the heart.”

யாத்திரை செல்ல நான்கு இடங்கள்

Four Places of Pilgrimage

5.8. "ஆனந்தா, இந்த நான்கு இடங்கள் உள்ளன. நம்பிக்கை உள்ள ஒரு நல்ல இல்லறத்தார் காண்பதற்கு, அவருக்குப் பெரும் பக்தி உண்டாக்குவதற்கு, உணர்ச்சியூட்டுவதற்கு [8].

எந்த நான்கு?

'இங்கு ததாகதர் பிறந்தார்' என்ற இடம் - ஒரு நல்ல இல்லறத்தார் காண்பதற்கும், அவர் உணர்ச்சியூட்டப் படுவதற்கும் - முதல் இடம். [9]

'இங்கு ததாகதர் சுயமாக ஒப்புயர்வில்லா வீடுபேறு பெற்றார்' என்ற இடம் - ஒரு நல்ல இல்லறத்தார் காண்பதற்கும், அவர் உணர்ச்சியூட்டப் படுவதற்கும் - இரண்டாம் இடம். [10]

'இங்கு ததாகதர் தம்மச் சக்கரச் சுழற்சியைத் தொடங்கி வைத்தார்' என்ற இடம் - ஒரு நல்ல இல்லறத்தார் காண்பதற்கும், அவர் உணர்ச்சி ஊட்டப் படுவதற்கும் - மூன்றாம் இடம். [11]

'இங்கு ததாகதர் பரிநிப்பாணம் அடைந்தார்' என்ற இடம் - ஒரு நல்ல இல்லறத்தார் காண்பதற்கும், அவர் உணர்ச்சியூட்டப் படுவதற்கும் - நான்காம் இடம். [12]

இவையே - ஒரு நல்ல இல்லறத்தார் காண்பதற்கும், அவர் உணர்ச்சியூட்டப் படுவதற்குமான நான்கு இடங்கள். அவர்கள் நம்பிக்கையின் காரணமாக வருவார்கள். ஆனந்தா - ஆண் துறவிகள், பெண் துறவிகள், ஆண் இல்லறத்தார், மற்றும் பெண் இல்லறத்தார், 'இங்கு ததாகதர் பிறந்தார்', 'இங்கு ததாகதர் சுயமாக ஒப்புயர்வில்லா வீடுபேறு பெற்றார்', 'இங்கு ததாகதர் தம்மச்சக்கரச் சுழற்சியைத் தொடங்கி வைத்தார்', 'இங்கு ததாகதர் பரிநிப்பாணம் அடைந்தார்' ஆகிய இந்நான்கு இடங்களுக்கு நம்பிக்கையின் காரணமாக வருவார்கள்.

அப்படி யாத்திரை செய்கையில் ஒருவர் மரணம் எய்துவாரேயானால் - அவர் மனம் பிரகாசமாக இருந்து, நம்பிக்கையுடனும் இருந்தால் - அவர் உடல் சிதைவின் பின்னர், அவர் மரணத்தின் பின்னர் - அவர் மறுமையில் ஒரு நல்ல இடம் செல்வார், சொர்க்கலோகத்தில் மறுபிறப் பெடுப்பார்.

“Ānanda, there are these four places that merit being seen by a clansman with conviction, that merit his feelings of urgency and dismay [saṁvega]. Which four? ‘Here the Tathāgata was born’ is a place that merits being seen by a clansman with conviction, that merits his feelings of urgency and dismay. ‘Here the Tathāgata awakened to the unexcelled right self-awakening’… ‘Here the Tathāgata set rolling the unexcelled wheel of Dhamma’… ‘Here the Tathāgata totally unbound in the property of unbinding with no fuel remaining’ is a place that merits being seen by a clansman with conviction, that merits his feelings of urgency and dismay. These are the four places that merit being seen by a clansman with conviction, that merit his feelings of urgency and dismay. They will come out of conviction, Ānanda, monks, nuns, male lay followers, and female lay followers, to the spots where ‘Here the Tathāgata was born,’ ‘Here the Tathāgata awakened to the unexcelled right self-awakening,’ ‘Here the Tathāgata set rolling the unexcelled wheel of Dhamma,’ ‘Here the Tathāgata totally unbound in the property of unbinding with no fuel remaining.’ And anyone who dies while making a pilgrimage to these shrines with a bright, confident mind will, on the break-up of the body, after death, reappear in a good destination, a heavenly world.”

5.9. "அண்ணலே, பெண்களைப் பொருத்தவரையில் நாம் தொடர வேண்டிய பாதை என்ன?"

"பார்க்காமல் இருப்பது, ஆனந்தா."

"ஆனால் பார்வை உள்ள போது, நாம் தொடர வேண்டிய பாதை என்ன?"

"பேசாமல் இருப்பது, ஆனந்தா."

"ஆனால் நம்மிடம் பேசப்பட்டால், நாம் தொடர வேண்டிய பாதை என்ன?"

"கடைப்பிடியை (மனக்கவனத்தை) உறுதி செய்ய வேண்டும், ஆனந்தா." [13]

5.10. "அண்ணலே, ததாகதரின் உடலைப் பொருத்தவரையில் நாங்கள் செய்ய வேண்டியது என்ன?"

"ததாகதரின் ஈமச் சடங்குகளில் நீ தலையிட வேண்டாம். தயவுசெய்து ஆனந்தா, உண்மையான நோக்கத்திற்காகப் பாடுபடு. உண்மையான நோக்கத்திற்காக உறுதிசெய்து கொள். விவேகத்துடனும், ஆர்வத்துடனும், திடமாகவும் உண்மையான குறிக்கோளுக்காகவும் வாழ வேண்டும். ததாகதர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ள மெய்ஞ்ஞான மிகுந்த க்ஷத்திரியரும், மெய்ஞ்ஞானமுள்ள பிராமணரும், மெய்ஞ்ஞானமுள்ள இல்லறத்தாரும் இருக்கின்றனர். அவர்கள் ததாகதரின் ஈமச்சடங்குகளைக் கவனித்துக் கொள்வார்கள்."

5.11. "அண்ணலே, ததாகதரின் உடலைப் பொருத்தவரையில் அவர்கள் செய்ய வேண்டியது என்ன?"

"ஒரு சக்கரவர்த்தியின் [14] உடலுக்குச் செய்வதையே ஆனந்தா, ததாகதரின் உடலுக்கும் செய்ய வேண்டும்.

"அண்ணலே, சக்கரம் சுழற்றும் சக்கரவர்த்தியின் உடலைப் பொருத்தவரையில் என்ன செய்வார்கள்?"

"ஆனந்தா, சக்கரவர்த்தியின் உடலைச் சணல் துணியால் (linen) சுற்றுவார்கள். புதிய துணியால் சுற்றியபின், அதனைப் பரப்பப்பட்ட பருத்திப் பஞ்சினால் (teased cotton wool) [15] சுற்றுவார்கள். பருத்திப் பஞ்சினால் சுற்றியபின் அதனைப் புதிய சணல் துணியால் சுற்றுவார்கள். இவ்வாறு ஐநூறு தடவை சுற்றியபின், உடலை ஒரு இரும்பாலான எண்ணை தாங்கியில் வைத்து, அதனை இரும்பு மூடியால் மூடி முழுமையாக நறுமணமிக்க பொருட்களோடு தகனம் செய்வார்கள். பின் நான்கு பாதைகள் குறுக்கிடும் பெரும் சந்திப்பில், சக்கரவர்த்திக்கு ஒரு சேதியம் [16] கட்டுவார்கள். இப்படித்தான் சக்கரவர்த்தியின் உடலை அடக்கம் செய்வார்கள். சக்கரவர்த்தியின் உடலை அடக்கம் செய்யும் முறையையிலேயே ததாகதரின் உடலையும் அடக்கம் செய்ய வேண்டும், ஆனந்தா. ததாகதரின் சேதியமும் நான்கு பெரிய சாலைகள் சந்திக்கும் இடத்திலேயே கட்டப்பட வேண்டும். அவ்விடத்தில் பூ மாலை, அல்லது வாசனைத் திரவியம், நறுமணப் பொடி, வர்ணங்கள் [17] போன்றவற்றை நம்பிக்கையோடு வைப்பவர் அல்லது அங்கு வணங்குபவர் அவர்கள் மனத்தைத் தெளிவாக்கிக் கொள்வார்கள்: அது அவர்களின் நீண்ட நாள் நன்மைக்கும் மகிழ்ச்சிக்குமாகும்.

5.12. "நான்கு வகையானோர் சேதியம் கட்டத் தகுதியானவர்கள். எந்த நான்கு? ஒரு ததாகதர், போற்றத்தக்கவர், சரியான முறையில் சுயமாக விழிப்புற்றவர் அவர் சேதியம் கட்டத் தகுதியானவர்... ஒரு தனிப்பட்ட புத்தர்… ஒரு ததாகதரின் சீடர்... ஒரு சக்கரவர்த்தி ஆகியோர் சேதியம் கட்டத் தகுதியானவர்கள்.

எதன் காரணமாக ஒரு ததாகதர், போற்றத்தக்கவர், சரியான முறையில் சுயமாக விழிப்புற்றவர், அவர் சேதியம் கட்டத் தகுதியானவர்? (அங்கு செல்வோருக்கு இந்த எண்ணம் எழும் போது)

'இது ஒரு ததாகதரின் சேதியம். அவர் போற்றத்தக்கவர், சரியான முறையில் சுயமாக விழிப்புற்றவர்,' என்ற எண்ணம் பலரின் மனத்தைத் தெளிவாக்கும். மனத்தைத் தெளிவாக்கிய பின்னர் - அவர்கள் உடல் சிதைவுக்குப் பின்னர் - அவர்கள் மரணத்தின் பின்னர் - அவர்கள் நல்ல இடத்தில் மறுபிறப்பெடுப்பார்கள். சொர்க்கலோகத்தில் மறுபிறப்பெடுப்பார்கள். இதன் காரணமாக ஒரு ததாகதர், போற்றத்தக்கவர், சரியான முறையில் சுயமாக விழிப்புற்றவர் அவர் சேதியம் கட்டத் தகுதியானவர்.

“And for what reason is a Tathāgata, worthy and rightly self-awakened, worthy of a burial mound? (At the thought,) ‘This is the burial mound of a Tathāgata, worthy and rightly self-awakened,’ many people will brighten their minds. Having brightened their minds there, then, on the break-up of the body, after death, they will reappear in a good destination, a heavenly world. It is for this reason that a Tathāgata, worthy and rightly self-awakened, is worthy of a burial mound.

எதன் காரணமாக ஒரு தனிப்பட்ட புத்தர், [18] அவர் சேதியம் கட்டத் தகுதியானவர்?

'இது ஒரு தனிப்பட்ட புத்தரின் சேதியம்.' (இந்த எண்ணம்) பலரின் மனத்தைத் தெளிவாக்கும். மனத்தைத் தெளிவாக்கிய பின்னர் - அவர் உடல் சிதைவுக்குப் பின்னர், அவர் மரணத்தின் பின்னர் - அவர்கள் நல்ல இடத்தில் மறுபிறப் பெடுப்பார்கள், சொர்க்கலோகத்தில் மறுபிறப் பெடுப்பார்கள். இதன் காரணமாக ஒரு தனிப்பட்ட புத்தர் சேதியம் கட்டத் தகுதியானவர்.

எதன் காரணமாக ஒரு ததாகதரின் சீடர், அவர் சேதியம் கட்டத் தகுதியானவர்?

'இது ஒரு ததாகதரின் சீடரின் சேதியம்.' (இந்த எண்ணம்) பலரின் மனத்தைத் தெளிவாக்கும். மனத்தைத் தெளிவாக்கிய பின்னர் - அவர்கள் உடல் சிதைவுக்குப் பின்னர், அவர்கள் மரணத்தின் பின்னர் - அவர்கள் நல்ல இடத்தில் மறுபிறப் பெடுப்பார்கள். சொர்க்கலோகத்தில் மறுபிறப் பெடுப்பார்கள். இதன் காரணமாகத் ததாகதரின் சீடர் சேதியம் கட்டத் தகுதியானவர்.

எதன் காரணமாக ஒரு சக்கரவர்த்தி சேதியம் கட்டத் தகுதியானவர்?

'இது ஒரு சக்கரவர்த்தியின் சேதியம்.' (இந்த எண்ணம்) பலரின் மனத்தைத் தெளிவாக்கும். மனத்தைத் தெளிவாக்கிய பின்னர் - அவர்கள் உடல் சிதைவுக்குப் பின்னர், அவர்கள் மரணத்தின் பின்னர் - அவர்கள் நல்ல இடத்தில் மறுபிறப் பெடுப்பார்கள். சொர்க்கலோகத்தில் மறுபிறப் பெடுப்பார்கள். இதன் காரணமாகச் சக்கரவர்த்தி சேதியம் கட்டத் தகுதியானவர்.

"இவர்களே நான்கு வகையான சேதியம் கட்டத் தகுதாயனவர்கள்."

ஆனந்தரின் துயரம்

Ananda's Grief

5.13. பின் போ. ஆனந்தர் (அருகில் இருந்த) அவர் இருப்பிடம் சென்று, கதவு நிலவின் மேல் சாய்ந்து கொண்டு அழுதார்: "நான் இன்னமும் பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன், மேலும் செய்ய வேண்டிய பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் ஆசிரியரின் பரிநிப்பாணம் அருகில் வந்து விட்டது - எனக்கு மிகுந்த கருணை காட்டிய ஆசிரியர்!"

பின் பகவர் துறவிகளிடம் கேட்டார், "துறவிகளே, ஆனந்தர் எங்கே?"

"அண்ணலே ஆனந்தர் அவர் இருப்பிடம் சென்று, கதவு நிலவின் மேல் சாய்ந்தவாறு, அழுது கொண்டிருக்கிறார்: "நான் இன்னமும் பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன், மேலும் செய்ய வேண்டிய பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் ஆசிரியரின் பரிநிப்பாணம் அருகில் வந்து விட்டது - எனக்கு மிகுந்த கருணை காட்டிய ஆசிரியர்!"

பகவர் ஒரு துறவியை அழைத்து, "வாரும் துறவியே. என் பெயரைச்சொல்லி ஆனந்தரிடம், 'ஆசிரியர் அழைக்கிறார், நண்பரே,' என்று கூறவும்."

"அப்படியே செய்கிறேன், அண்ணலே," என்று பகவரிடம் விடையளித்த அந்தத் துறவி போ. ஆனந்தரிடம் சென்று, 'ஆசிரியர் அழைக்கிறார், நண்பரே." என்றார்.

"ஆகட்டும் நண்பரே," என்று அந்த துறவிக்குப் பதிலளித்த போ. ஆனந்தர் பகவரிடம் சென்று, அவருக்கு வணங்கி ஒரு புறமாக அமர்ந்தார்.

5.14. அவர் அமர்ந்ததும், பகவர் அவரிடம், "போதும் ஆனந்தா, வருந்தாதே. புலம்பாதே. நான் உனக்கு ஏற்கனவே கற்பித்துள்ளேன் அல்லவா?:

நமக்குப் பிடித்த சுகம் தரும் பொருட்களெல்லாம், அப்படி அல்லாமல் ஒருநாள் மாறிப் போய்விடும். நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் என்று. வேறு என்ன எதிர்பார்ப்பது? பிறந்தன இறக்கும், தோன்றின மறையும், உணர்ந்தன மறக்கும், அழியும் தன்மையுடையன அழியும். இவற்றைத் தடுக்க முடியாது. நீண்ட காலமாக ஆனந்தா, நீ ததாகதருக்குப் பணிவிடை செய்துள்ளாய். உதவிகரமாக இருந்து, மகிழ்ச்சியாக, முழுமனத்தோடு, அளவற்று - உடலால் நற்காரியங்கள் செய்துள்ளாய்; நல்லெண்ணத்தோடு பேசியுள்ளாய்...; உதவிகரமாக இருந்து, மகிழ்ச்சியாக, முழுமனத்தோடு, அளவற்று; நீ பெரும் புண்ணியம் சேர்த்துள்ளாய் - மனத்தால் நல்லெண்ணத்தோடு இருந்துள்ளாய்.

முயற்சியை மேற்கொள். விரைவில் மாசுகளை அகற்றி விடுவாய்." [19]

Responding, “As you say, my friend,” to the monk, Ven. Ānanda went to the Blessed One and, on arrival, having bowed down to him, sat to one side. As he was sitting there, the Blessed One said to him, “Enough, Ānanda. Don’t grieve. Don’t lament. Haven’t I already taught you the state of growing different with regard to all things dear and appealing, the state of becoming separate, the state of becoming otherwise? What else is there to expect? It’s impossible that one could forbid anything born, existent, fabricated, and subject to disintegration from disintegrating.

“For a long time, Ānanda, you have waited on the Tathāgata with bodily acts of good will, helpful, happy, whole-hearted, without limit; with verbal acts of good will… with mental acts of goodwill, helpful, happy, whole-hearted, without limit. You are one who has made merit. Commit yourself to exertion, and soon you will be without effluents.”

பகவர் ஆனந்தரை புகழ்வது

Praise of Ananda

5.15. பின் பகவர் துறவிகளுக்குப் போதித்தார், "துறவிகளே, கடந்த காலத்தில் போற்றத்தக்கவர், சரியான முறையில் சுயமாக விழிப்புற்ற பகவர்களிடம், எனக்கு ஆனந்தர் இருப்பது போல அவர்களுக்கு உத்தமமான பணிவிடை செய்வோர் இருந்தனர். எதிர் காலத்தில் போற்றத்தக்கவர், சரியான முறையில் சுயமாக விழிப்புற்ற பகவர்களிடம் எனக்கு ஆனந்தர் இருப்பது போல அவர்களுக்கு உத்தமமான பணிவிடை செய்வோர் இருப்பார்கள். ஆனந்தர் மெய்யறிவு உடையவர். அவருக்குத் தெரியும், 'இது தான் ததாகதரை அணுகவேண்டிய நேரம். இதுவே ஆண் துறவிகளுக்கான நேரம், இதுவே பெண் துறவிகளுக்கான நேரம், இதுவே ஆண் இல்லறத்தாருக்கான நேரம், இதுவே பெண் இல்லறத்தாருக்கான நேரம், இதுவே அரசர்களுக்கும், அவர்களது மந்திரிமார்களுக்குமான நேரம், இதுவே சமயவாதி களுக்கான நேரம், இதுவே சமயவாதிகளைப் பின்பற்றுவோருக்கான நேரம்.

Then the Blessed One addressed the monks, “Monks, those Blessed Ones who, in the past, were worthy ones, rightly self-awakened, had foremost attendants, just as I have had Ānanda. Those Blessed Ones who, in the future, will be worthy ones, rightly self-awakened, will have foremost attendants, just as I have had Ānanda. Ānanda is wise. He knows, ‘This is the time to approach to see the Tathāgata. This is the time for monks, this the time for nuns, this the time for male lay-followers, this the time for female lay-followers, this the time for kings and their ministers, this the time for sectarians, this the time for the followers of sectarians.

5.16. "இந்த நான்கு ஆச்சரியமான, வியப்பான பண்புகள் ஆனந்தரிடம் உண்டு. ஆனந்தரைக் காணக் கூட்டமாக ஆண் துறவிகள் வரும் போது, அவர்கள் ஆனந்தரைப் பார்ப்பதிலேயே பெருமகிழ்ச்சி அடைவார்கள். ஆனந்தர் அவர்களுக்குத் தம்மத்தைப் பற்றிப் பேசினால் அதிலும் அவர்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள். (அவர்களுக்குத் திருப்தி ஏற்படும்போது அவர் பேசுவதை நிறுத்தி விடுவார்.) அவர் பேசாமல் இருந்தால் அவர்கள் ஏமாற்றமடைவார்கள். ஆனந்தரைக் காணக் கூட்டமாகப் பெண் துறவிகள் வரும் போது... ஆனந்தரைக் காணக் கூட்டமாக ஆண் இல்லறத்தார் வரும் போது...ஆனந்தரைக் காணக் கூட்டமாகப் பெண் இல்லறத்தார் வரும் போது அவர்கள் ஆனந்தரைப் பார்ப்பதிலேயே பெருமகிழ்ச்சி அடைவார்கள். ஆனந்தர் அவர்களுக்குத் தம்மத்தைப் பற்றிப் பேசினால் அதிலும் அவர்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள். அவர் பேசாமல் இருந்தால் அவர்கள் ஏமாற்றமடைவார்கள். இவையே ஆனந்தரிடம் உள்ள ஆச்சரியமான, வியப்பான இயல்புகள்.

“There are these four amazing and astounding qualities in Ānanda. If a group of monks approaches to see Ānanda, they are gratified at the sight of him. If he speaks Dhamma to them, they are gratified with what he says. Before they are sated, he falls silent. If a group of nuns approaches to see Ānanda… If a group of male lay followers approaches to see Ānanda… If a group of female lay followers approaches to see Ānanda, they are gratified at the sight of him. If he speaks Dhamma to them, they are gratified with what he says. Before they are sated, he falls silent. These are the four amazing and astounding qualities in Ānanda.

"இந்த நான்கு ஆச்சரியமான, வியப்பான பண்புகள் ஒரு சக்கரவர்த்தியிடம் உண்டு. அவரைக் காணக் கூட்டமாக க்ஷத்திரியர்கள் வரும் போது... அவரைக் காணக் கூட்டமாகப் பிராமணர்கள் வரும் போது... அவரைக் காணக் கூட்டமாக இல்லறத்தார் வரும் போது... அவரைக் காணக் கூட்டமாகத் தியானிகள் வரும் போது… அவரைப் பார்ப்பதிலேயே பெரு மகிழ்ச்சி அடைவார்கள். அவர் பேசும்போது அவர்கள் பெரு மகிழ்ச்சி அடைவார்கள். அவர் பேசாமல் இருந்தால் அவர்கள் ஏமாற்றமடைவார்கள்.

There are these four amazing and astounding qualities in a wheel-turning monarch. If a group of noble warriors approaches to see him… If a group of brahmans approaches to see him… If a group of house-holders approaches to see him… If a group of contemplatives approaches to see him, they are gratified at the sight of him. If he speaks to them, they are gratified with what he says. Before they are sated, he falls silent.

"அது போலவே ஆனந்தரிடமும் இந்த நான்கு ஆச்சரியமான, வியப்பான பண்புகள் உண்டு. ஆனந்தரைக் காணக் கூட்டமாக ஆண் துறவிகள் வரும் போது... ஆனந்தரைக் காணக் கூட்டமாகப் பெண் துறவிகள் வரும் போது... ஆனந்தரைக் காணக் கூட்டமாக ஆண் இல்லறத்தார் வரும் போது… ஆனந்தரைக் காணக் கூட்டமாகப் பெண் இல்லறத்தார் வரும் போது அவர்கள் ஆனந்தரைப் பார்ப்பதிலேயே பெரு மகிழ்ச்சி அடைவார்கள். ஆனந்தர் அவர்களுக்குத் தம்மத்தைப் பற்றிப் பேசினால் அதில் அவர்கள் பெரு மகிழ்ச்சி அடைவார்கள். அவர் பேசாமல் இருந்தால் அவர்கள் ஏமாற்றமடைவார்கள். இவையே ஆனந்தரிடம் உள்ள ஆச்சரியமான, வியப்பான இயல்புகள்.

In the same way, monks, there are these four amazing and astounding qualities in Ānanda. If a group of monks… a group of nuns… a group of male lay followers… a group of female lay followers approaches to see Ānanda, they are gratified at the sight of him. If he speaks Dhamma to them, they are gratified with what he says. Before they are sated, he falls silent. These are the four amazing and astounding qualities in Ānanda.”

குசிநகரத்தின் கடந்த கால மகிமை

The Past Glory of Kusinara

5.17. இதைச் சொன்ன பிறகு போ. ஆனந்தர் பகவரிடம், "அண்ணலே, பகவர் இந்தச் சிறிய ஊரில், இந்தப் புழுதி நிறைந்த ஊரில், இந்தக் கிளை மாவட்டத்தில் பரிநிப்பாணம் அடைய வேண்டாம். பல பெரும் ஊர்கள் உள்ளன: சம்பா (Campā), இராஜகிருகம் (Rājagaha), சாவத்தி (Sāvatthī), சாகேத (Sāketa), கோசம்பி (Kosambī), பாரனாஸி (Bārāṇasī). பகவர் அவ்விடங்களில் பரிநிப்பாணம் அடைய வேண்டும். அவ்வூர்களில் பகவர் மீது அழ்ந்த நம்பிக்கையுள்ள பல செல்வம் படைத்த க்ஷத்திரியர்களும், பிராமணர்களும், இல்லறத்தாரும் உள்ளனர். அவர்கள் ததாகதரின் ஈமச்சடங்கினைச் செய்யட்டும்."

5.18. "அப்படிச் சொல்லாதே ஆனந்தா. அப்படிச் சொல்லாதே: 'இந்தச் சிறிய ஊர், இந்தப் புழுதி நிறைந்த ஊர், இந்தக் கிளை மாவட்டம், கடந்த காலத்தில், மஹா சுதஸ்ஸனா (Sudassana) என்ற மன்னன் வாழ்ந்த ஊராகும். அவன் ஒரு சக்கரவர்த்தி, நேர்மையாக ஆண்ட, நேர்மையான மன்னன். நாலாபக்கமும் வென்று, தன் நாட்டை ஸ்திரநிலையில் வைத்திருந்தான். ஏழு செல்வங்களையும் பெற்றிருந்தான். குசாவதி (Kusāvatī) என்று அழைக்கப்பட்ட இந்தக் குசிநகரமே அவன் தலைநகராக இருந்தது: கிழக்கிலிருந்து மேற்கு பன்னிரண்டு கல் தூரமும், வடக்கிலிருந்து தெற்கு ஏழு கல் தூரமும் கொண்டிருந்த குசாவதி நகர் வலிமையும், செல்வமும், பெரும் ஜனத்தொகையும், கூட்டங்களும், வசதியும் பெற்றிருந்தது. தேவர்களின் தலைநகரமான ஆலகமண்டம் (Ālakamandā) எப்படி வலிமையும், செல்வமும், பெரும் ஜனத்தொகையும், யாக்‌ஷர்கள் கூட்டங்களும் வசதியும் பெற்றிருந்தது போலவே; குசாவதியும் வலிமையும், செல்வமும், பெரும் ஜனத்தொகையும், கூட்டங்களும் வசதியும் பெற்றிருந்தது. பகலிலும் இரவிலும் இந்தப் பத்து ஓசைகளை இங்கு கேட்க முடிந்தது: யானைகளின் சப்தம், குதிரைகளின் சப்தம், வண்டிகளின் சப்தம், முரசின் சப்தம், பறைகளின் சப்தம், யாழின் சப்தம், பாடகர்களின் சப்தம், கைத்தாளங்களின் சப்தம், சேகண்டிகளின் (cymbals) சப்தம், பத்தாவதாக 'உண்! குடி! சிற்றுண்டி!' என்ற கூச்சலின் சப்தம்.

மல்லர்களின் புலம்பல்

Lamentation of the Mallas

5.19. "இப்போது ஆனந்தா, நீ குசிநகரம் சென்று குசிநகர மல்லர்களிடம், 'இன்றிரவு, கடை ஜாமத்தில், வாசிட்டர்களே, ததாகதரின் பரி நிப்பாணம் நடைபெறப் போகிறது. வெளியே வாருங்கள் வாசிட்டர்களே! வெளியே வாருங்கள் வாசிட்டர்களே! "நமது ஊரின் எல்லைக்குள்ளேயே ததாகதரின் பரி நிப்பாணம் நடந்தும், அவரின் கடைசி நேரத்தில் அவரைப் பார்க்க வில்லையே,' என்று பின்பு வருத்தப்பட வேண்டாம்," என்று கூறி வருக.’

"அப்படியே செய்கிறேன் அண்ணலே," என்று பகவருக்கு விடையளித்துவிட்டு, போ. ஆனந்தர் தன் கீழாடையைச் சரி செய்த பின் - தனது பிச்சா பாத்திரத்தையும், வெளியாடையையும் எடுத்துக் கொண்டு- தனியாகக் குசிநகரம் புறப்பட்டார்.

5.20. அப்போது குசிநகர மல்லர்கள் எதோ காரியத்திற்காக அவர்கள் வரவேற்புக் கூடத்தில் குழுமியிருந்தார்கள். போ. ஆனந்தர் அந்த வரவேற்புக் கூடத்திற்குச் சென்று இவ்வாறு அறிவித்தார். "வாசிட்டர்களே, இன்றிரவு, கடை ஜாமத்தில், ததாகதரின் பரி நிப்பாணம் நிகழப் போகிறது. வெளியே வாருங்கள் வாசிட்டர்களே! வெளியே வாருங்கள் வாசிட்டர்களே! "நமது ஊரின் எல்லைக்குள்ளேயே ததாகதரின் பரி நிப்பாணம் நடந்தும் அவரது கடைசி நேரத்தில் அவரைப் பார்க்க வில்லையே,' என்று பின்பு வருத்தப்பட வேண்டாம்."

5.21. போ. அனந்தர் கூறியதைக் கேட்ட மல்லர்களும், அவர்களது மக்கள், மனைவியர் உட்பட அனைவரும் அதிர்ச்சியும், துக்கமும் கொண்டனர். அவர்கள் மனம் சோகத்தில் ஆழ்ந்தது. அவர்களுள் சிலர் தங்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு புலம்பினர். கைகளைத் தூக்கிக் கொண்டு அழுதனர். அவர்கள் கால்கள் வெட்டுண்டவர்கள் போலத் தரையில் விழுந்து, புரண்டு கொண்டு கதறினர். 'விரைவில் பகவர் பரிநிப்பாணம் அடையப் போகிறார்! விரைவில் ததாகதர் பரிநிப்பாணம் அடையப்போகிறார்! விரைவில் ஞானக் கண்ணுடையவர் உலகிலிருந்து மறைந்து விடுவார்!'

பின் மல்லர்கள் அவர்கள் மக்கள், மனைவியர் உட்பட - அதிர்ச்சியும், துக்கமும் கொண்டு, மனம் சோகத்தில் ஆழ்ந்தவர்களாக - குசிநகரின் அருகில் உள்ள மல்லர்களின் சால வனத்திற்கு போ. ஆனந்தரிடம் சென்றனர்.

5.22. அப்போது இந்த எண்ணம் போ. ஆனந்தருக்கு எழுந்தது, "மல்லர்கள் ஒவ்வொருவராகப் பகவருக்கு மரியாதை செலுத்த அழைத்தால் அவர்கள் மரியாதை செலுத்தி முடிவதற்குள் இரவு முடிந்து விடும். எனவே அவர்களை ஒவ்வொரு குடும்பமாக அழைத்து, 'அண்ணலே, இப்பெயர் கொண்ட மல்லர், அவரது மக்கள், மனைவியருடனும், பணியாட்கள் நண்பர்களுடனும் பகவர் காலடியை வணங்குகின்றார்,' என்று அறிவிப்பதே சரி.'

ஆகவே போ. ஆனந்தர் மல்லர் குடும்பம் குடும்பமாகச் சீர்ப்படுத்தி அவர்களைப் பகவருக்கு மரியாதை செய்வதற்கு அழைத்து, 'அண்ணலே, இப்பெயர் கொண்ட மல்லர், அவர் மக்கள் மனைவியருடனும், பணியாட்கள் நண்பர்களுடனும் பகவர் காலடியை வணங்குகின்றார், என்று அறிவித்தார். அவ்வாறு போ. ஆனந்தர் மல்லர்கள் பகவரை முதல் ஜாமத்தின் முடிவிற்குள் மரியாதை செலுத்தி முடிக்க வைத்தார்.

Gandhāra School, Indian Museum, Kolkata படம் ஆதாரம் Bhante Anandajoti அனந்தஜோதி பிக்கு

கடைசியாகத் துறவறம் ஏற்றவர்

The Last Convert

5.23. அச்சமயத்தில், சுபத்திரர் என்ற நாடோடி குசிநகரம் அருகில் தங்கியிருந்தார். அவர் கேள்வியுற்றார், "இன்றிரவு, கடை ஜாமத்தில், தியானி கோதமரின் பரிநிப்பாணம் நடைபெறவுள்ளது. "இந்த எண்ணம் அவருக்குத் தோன்றியது: "மூத்த நாடோடி பெரியார்கள், கற்பிப்போருக்குக் கற்பித்தவர்கள், நீண்ட காலத்துக்கு ஒரு முறைதான் உலகில் - போற்றக் கூடிய, சுயமாக விழிப்புற்ற - ததாகதர்கள் தோன்றுவார்கள் என்று கூறக் கேட்டிருக் கின்றேன். இன்றிரவு, கடை ஜாமத்தில், தியானி கோதமரின் பரிநிப்பாணம் நடைபெறவுள்ளது. இப்போது என் மனத்தில் ஒரு சந்தேகம் இடம் பெற்றுள்ளது, ஆனால் தியானி கோதமர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளதால் அவரிடம் தம்மத்தைக் கேட்டு என் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்."

5.24. எனவே அவர் மல்லர்களின் சால வனத்திற்குச் சென்று போ. ஆனந்தரிடம், "மூத்த நாடோடிப் பெரியார்கள், கற்பிப்போருக்குக் கற்பித்தவர்கள், நீண்ட காலத்துக்கு ஒரு முறைதான் உலகில் போற்றக் கூடிய, சுயமாக விழிப்புற்ற - ததாகதர்கள் தோன்றுவார்கள் என்று கூறக்கேட்டிருக்கின்றேன். இன்றிரவு, கடை ஜாமத்தில், தியானி கோதமரின் பரிநிப்பாணம் நடைபெறவுள்ளது. இப்போது என் மனத்தில் ஒரு சந்தேகம் இடம் பெற்றுள்ளது, ஆனால் தியானி கோதமர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளதால் அவரிடம் தம்மத்தைக் கேட்டு என் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். போ ஆனந்தரே அவரைச் சந்திக்க என்னை அனுமதித்தால் நன்றாக இருக்கும்."

இதைக் கேட்டவுடன் போ. ஆனந்தர், 'போதும் நண்பர் சுபத்திரரே. பகவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம். பகவர் களைப்பாய் இருக்கிறார்."

இரண்டாம் முறை… மூன்றாம் முறை சுபத்திரர் என்ற நாடோடி போ. ஆனந்தரிடம், "போ.ஆனந்தரே அவரை சந்திக்க அனுமதித்தால் நன்றாக இருக்கும்." என்று கேட்டுக் கொண்டார்.

மூன்றாம் முறையும் போ. ஆனந்தர், 'போதும் நண்பர் சுபத்திரரே. பகவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம். பகவர் களைப்பாய் இருக்கிறார்." என்று அனுமதி மறுத்தார்.

5.25. பகவர் இந்த வார்த்தைப் பரிமாற்றத்தினைக் கேட்டு அவர் போ. ஆனந்தரிடம், "போதும் ஆனந்தா. அவர் வழியைத் தடுக்காதே. அவர் ததாகதரைச் சந்திக்கட்டும். அவர் எது கேட்டாலும் அறிவு பெறுவதன் காரணமாகவே இருக்கும். தொந்தரவு செய்வதற்காக இருக்காது. நான் அவருக்குத் தரும் பதிலையும் அவர் உடனே புரிந்து கொள்வார்."

எனவே போ. ஆனந்தர் சுபத்திரர் என்ற நாடோடியிடம், "செல்லுங்கள் நண்பர் சுபத்திரரே, பகவர் அனுமதிக்கின்றார்."

5.26. பின் சுபத்திரர் பகவரிடம் சென்று வாழ்த்துப் பரிமாற்றம் செய்து கொண்டு ஒரு புறமாக அமர்ந்தார். அப்போது, அவர் பகவரிடம், "அன்புடைய கோதமரே, இந்தத் தியானிகளும் பிராமணர்களும், ஒவ்வொருவரும் தங்கள் கூட்டத்தாருடன், தங்கள் சமூகத்துடன், தங்கள் கூட்டத்தின் ஆசிரியராக, மதிக்கப்பட்ட தலைவராக, பலராலும் புகழப்படுவோர் - அதாவது பூரனா கஸ்ஸப்பர் (Pūraṇa Kassapa), மக்காளி கோசாளர் (Makkhali Gosāla), அஜீத கேசகம்பளர் (Ajita Kesakambalin), பகுதா கச்சானர் (Pakudha Kaccāyana), சஞ்ஜய வேலத புத்திரர் (Sañjaya Velaṭṭhaputta) மற்றும் நிகந்த நாதபுத்திரர் (Nigaṇṭha Nāṭaputta) போன்றவர்கள்: அவர்கள் சொல்வது போல, அவர்கள் வீடு பேறு அடைந்தவர்களா? அல்லது வீடு பேறு அடையாதவர்களா? அல்லது அவர்களுள் சிலர் வீடு பேறு அடைந்தவரும் சிலர் வீடு பேறு அடையாமலும் உள்ளனரா?"

"போதும், சுபத்திரரே. இந்தக் கேள்வியை ஒரு புறம் வைத்து விடு: 'அவர்கள் சொல்வது போல, அவர்கள் வீடு பேறு அடைந்தவர்களா? அல்லது வீடு பேறு அடையாதவர்களா? அல்லது அவர்களுள் சிலர் வீடு பேறு அடைந்தவரும் சிலர் வீடு பேறு அடையாமலும் உள்ளனரா?'

நான் உனக்குத் தம்மத்தைப் போதிக்கின்றேன், சுபத்திரரே. கவனமாக கேட்கவும். நான் பேசுகிறேன்."

"அப்படியே ஆகட்டும், அண்ணலே," என்று பகவருக்குப் பதிலுரைத்தார் சுபத்திரர்.

சிங்கத்தின் கற்ஜனை

The Lion's Roar

5.27. பகவர் கூறினார், "எந்த ஒரு அறநெறியில் அல்லது ஒழுக்கத்தில், மேன்மையான அட்டாங்க மார்க்கம் அறிந்து கொள்ளப்பட வில்லையோ, முதல்… இரண்டாம்… மூன்றாம்… நான்காம் நிலையை [சோதாபத்தி, சஹதாகாமி, அனாகாமி, அரஹந்தர்] அடைந்த தியானிகளைக் காண முடியாது.

ஆனால் எந்த ஒரு அறநெறியில் அல்லது ஒழுக்கத்தில், மேன்மையான அட்டாங்க மார்க்கம் அறியப்படுகிறதோ அங்கு முதல்... இரண்டாம்… மூன்றாம்… நான்காம் நிலையை அடைந்த தியானிகளைக் காண முடியும்.

இந்த அறநெறியில், ஒழுக்கத்தில் மேன்மையான அட்டாங்க மார்க்கம் அறிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. இங்கேயே முதல்… இரண்டாம்… மூன்றாம்… நான்காம் நிலையை அடைந்த தியானிகளைக் காணலாம். மற்ற போதனைகளில் ஞானமுடைய தியானிகளைக் காண முடியாது. ஆனால் இங்கு துறவிகள் சரியாக வாழ்ந்தார்களேயானால், இந்த உலகம் அரஹந்தர்கள் அற்று வெறுமையாக இருக்காது.

திறமையான பண்புகளைத் தேடி, இருபத்து ஒன்பதாம் வயதில் துறவறம் மேற்கொண்டேன்.

துறவறம் மேற்கொண்டு ஐம்பதுக்கும்

மேலான ஆண்டுகள் கழிந்துள்ளன.

ஒழுங்கு முறையான தம்மத்திற்கு வெளியே

[முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை அடைந்த] தியானிகள் இல்லை.

மற்ற போதனைகளில் ஞானமுடைய தியானிகளைக் காண முடியாது.

இங்கு துறவிகள் சரியாக வாழ்ந்தார்களேயானால்,

இந்த உலகம் அரஹந்தர்கள் அற்று வெறுமையாக இருக்காது.

5.28. பின் சுபத்திரர் என்ற நாடோடி, "அருமை! அண்ணலே! அருமை! குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவது போல, பகவரும் - பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கியுள்ளீர்கள். பகவரிடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். தர்மத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். என்னைச் சங்கத்தில் சேர்த்துக் கொண்டு பகவரின் சீடனாகத் துறவிப் பட்டம் அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.'

5.29. "சுபத்திரா, மற்ற சமயப் பிரிவைச் சேர்ந்தவர் சங்கத்தில் சேர்வதற்கு, இந்தத் தம்மத்தையும், வினய விதிகளையும் கடைபிடிக்க அனுமதி கேட்கும் போது, அவர் நான்கு மாதங்கள் சோதனை நிலையில் இருக்க வேண்டும். நான்கு மாதங்களுக்குப் பின்னர் சங்கத் துறவிகள் திருப்தியடைந்தால் அவரைப் பிக்குவாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இதிலிருந்து ஒரு சிலருக்கு விதிவிலக்கு அளிப்பதும் உண்டு."

"அண்ணலே, அப்படியானால் நான் நான்கு வருடங்கள் சோதனை நிலையில் இருப்பேன். நான்கு வருடங்களுக்குப் பின் துறவிகள் திருப்தி அடைந்தால் என்னைப் பிக்குவாக அனுமதிக்கட்டும்."

பின் பகவர் ஆனந்தரிடம், "சரி ஆனந்தா, சுபத்திரருக்குத் துறவுப் பட்டத்தை அளி."

"அப்படியே ஆகட்டும், அண்ணலே," என்று பகவருக்குப் பதிலுரைத்தார் ஆனந்தர்.

5.30. பின் சுபத்திரர் போ. ஆனந்தரிடம், "ஆனந்தா, இது உங்களுக்கு லாபம். ஆசிரியர் முன்னிலையில் சீடருக்குத் துறவுப் பட்டம் அளிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு உங்களுக்குப் பெரும் லாபம் ஆனந்தா." [20]

பின் சுபத்திரர் என்ற நாடோடி புத்தர் முன்னிலையில் சங்கத்தில் அனுமதிக்கப் பட்டார். சங்கத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டார்.

துறவியாகிச் சில காலம் கழித்து, அவர் தனிமையுடனும் விலகியும் வாழ்ந்து, ஊக்கத்துடனும், ஆர்வத்துடனும், உறுதியுடனும் அந்தத் 'தன்னிகரில்லா நிலையை' அடைந்தார். அதுவே ஆன்மீக வாழ்வின் அடிப்படைக் குறிக்கோள். இதன் காரணமாகத்தான் மக்கள் இல்லறத்திலிருந்து துறவியாகின்றனர். அவரது உயர்ந்த அறிவினால் அவருக்குத் தெரிந்தது: 'பிறப்பு தீர்ந்தது. ஆன்மிக வாழ்வு முடிந்தது. செய்ய வேண்டியது செய்யப்பட்டு விட்டது. மேலும் இதன் காரணமாகச் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.' அவ்வாறு போ. சுபத்திரரும் ஒரு அருகரானார். பகவர் முன்னிலையில் சீடரானோரில் அவரே கடைசியானவர்.

* * *

விளக்கம் ஆதாரங்கள் (Source for the Notes):

(BA) Bhante Anandajoti அனந்தஜோதி பிக்கு காணொளி

(MW) The long Discourses of the Buddha - A translaton of the Dhigha Nikaya by Maurice Walshe

(TB) Thanisarro Bhikku

(SV-FS) Sister Vajirra, Fransis Story Source

[1] மல்லர்க்குச் சொந்தமான – பொழுது போக்கு மைதானம் (உபவத்தனை)

(MW) Or 'the recreation-ground (upavattana) belonging to the Mallas'.

[2] உரைகளின் படி: பாவையிலிருந்து குசிநகரம் சுமார் எட்டு கி.மீ தூரம். அந்தத் தூரத்தைச் சிரமத்துடன், இருபத்து ஐந்து இடங்களில் ஓய்வுக்காக உட்கார்ந்தவாறு நடந்து சால வனத்தை அந்திப்பொழுதில், கதிரவன் மறைந்த பின்னர் சென்றடைந்தார். இவ்வாறு மனிதனுக்கு வரும் நோய், அவன் உடல் நலத்தை அழித்து விடுகிறது. இந்த உண்மையைச் சுட்டிக் காட்டுவது போல பகவர் நெஞ்சை உருக்கும் இவ்வரிகளைக் கூறினார்: 'எனக்குக் களைப்பாய் இருக்கிறது. நான் சிறிது படுத்துக் கொள்ள விரும்புகிறேன்.' (SV-FS)

"From the town of Pava it is three gavutas (approx. five miles) to Kusinara. Walking that distance with great effort and sitting down at twenty-five places on the way, the Blessed One reached the Sala Grove at dusk when the sun had already set. Thus comes illness to man, crushing all his health. As if he wanted to point to this fact, the Blessed One spoke those words which deeply moved the whole world: 'I am weary, Ananda, and want to lie down.'

[3] இது வரை இந்தச் சூத்திரத்தில் புத்தர் படுக்கச் சென்றால் அதனை விவரிக்கும் போது இந்த வார்த்தைகள் அடங்கியிருக்கும், "எழுந்து கொள்ளும் எண்ணத்துடன் படுக்கச் சென்றார்." ஆனால் இப்போது பகவர் கடைசி முறையாகப் படுக்கச் சென்றதனால், இதே நிலையில் காலமாகப் போவதன் காரணமாக, அவர் எழுந்து கொள்ளும் எண்ணத்துடன் படுக்கச் செல்லவில்லை.

(TB) Up to this point in the sutta, the standard phrase describing the Buddha’s act of lying down to rest ends with the phrase, “having made a mental note to get up.” Here, however, the Buddha is lying down for the last time and will pass away in this posture, so he makes no mental note to get up.

[4] SN சங்யுத்த நிகாயம் 22:39 படி தம்ம வழியில் தம்மத்தைப் பயில்வது, தம்ம வழியில் நடந்து கொள்வது என்றால்:

உருவம் (form), நுகர்ச்சி (feelings), குறிப்பு (perception), சங்காரங்கள்/வினை (fabrications/volitional actions) மற்றும் உணர்வு (consciousness) ஆகியவற்றோடு வசப்படாமல் இருந்து மனத்தைப் பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் SN 22:40-41 படி ஐந்து கந்தங்களைத் துக்கம், நிலையாமை (அநிச்ச), சாரமின்மை (அநாத்ம) ஆகிய இயல்புகளோடு தொடர்ந்து பிரதிபலிக்க வேண்டும்.

(TB) SN 22:39 states: “For a monk practicing the Dhamma in accordance with the Dhamma, what accords with the Dhamma is this: that he keep cultivating disenchantment with regard to form, that he keep cultivating disenchantment with regard to feeling, that he keep cultivating disenchantment with regard to perception, that he keep cultivating disenchantment with regard to fabrications, that he keep cultivating disenchantment with regard to consciousness.” SN 22:40–41 add that this is to be done by remaining focused on stress, inconstancy, and not-self with regard to the five aggregates.

[5] மாமனிதரை நேரில் பார்ப்பது புண்ணியச் செயல் என்பது இந்தியாவின் வேத காலத்திலிருந்தே உள்ள மரபு ("தரிசனை"). தேவர்களும், இந்தச் சூத்திரத்தில் பின்னர் வருவது போல மனிதரும் புத்தர் தங்களைப் பார்ப்பதும், தாங்கள் புத்தரைப் பார்ப்பதும் புண்ணியச் செயலெனக் கருதினார்கள். (TB)

From Vedic times, it has been considered auspicious in India to gaze on a holy person or heavenly being, and to be gazed on by such a being as well. Here the fact that heavenly beings themselves want to gaze on the Buddha indicates the high regard they have for him (this is also the motive for their Great Meeting in DN 20); the phrase later in this paragraph, “the One with Eyes,” indicates that they also regarded his gaze as highly auspicious for them. Later passages in this discourse indicate that human beings have similar feelings about the auspiciousness of the Buddha’s gaze and the Buddha as an object of one’s own gaze. A great deal of the later history of Buddhism in India including devotional practice, Buddhology, meditation, practice, and even the architecture of monasteries, grew out of the continuing desire to have a vision of the Buddha and to be gazed on by the Buddha, even after his Parinibbāna.

It is sometimes assumed, based on a passage in SN 22:87, that the Pali Canon is uniformly negative toward this aspect of Buddhist tradition. There, Ven. Vakkali, who is ill, states that “For a long time have I wanted to come and see the Blessed One, but I haven’t had the bodily strength to do so,” and the Buddha comforts him, “Enough, Vakkali. Why do you want to see this filthy body? Whoever sees the Dhamma sees me; whoever sees me sees the Dhamma.” It should be noted, however, that the Buddha’s treatment of this topic is sensitive to the context. In SN 22:87, he is talking to a monk who (1) is too sick to come see the Buddha on his own strength; and (2) is on the verge of arahantship. Here in DN 16, however, the Buddha dismisses Ven. Upavāṇa so as to honor the desire of the devas who want to see him in his last hour; and he sends Ven. Ānanda into Kusinārā to inform the lay people there so that they too will be able to see him in his last hour. His motive here may be similar to that given for encouraging the building of a burial mound dedicated to him: seeing him will help human and heavenly beings brighten their minds, and that will be for their long-term welfare and happiness. Thus the attitudes expressed on this topic in the Pali Canon, when taken in their entirety, are more complex than is generally recognized.

போ. வக்காலி பற்றிப் படிக்க https://sites.google.com/site/budhhasangham/Home/wordsofthebuddha/march

[6] அவர்கள் மனம் பூமியோடு கட்டுப் பட்டுள்ளது. To be attached, as the mind to earthly things;

[7] பொதுவாகத் தேவர்கள் வீடு பேறு அடையாதவர்கள் என்றே கருதப் படுவார்கள். ஆனால் புத்தகோஷர் அவர் உரையில் இந்தத் (பற்றிலிருந்து விடுபட்ட) தேவர்களை அனாகாமி அல்லது அரஹந்தர் நிலையை அடைந்தவர்கள் என்று (விளக்கம் ஏதும் கூறாமல்) குறிப்பிடுகின்றார்.

Normally it is understood that devas are unenlightened, but DA here states - without further comment - that these are Non-Returners or even Arahants.

[8] Samvejaniyani: 'arousing samvega' ('sense of urgency': 'சம்வேக' உணர்ச்சி - வாழ்க்கை நிச்சயமற்றது. மனத்தை வளர்க்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசர உணர்ச்சி. (MW)

[9] இமய மலை அடிவாரத்திலும், கபிலவாஸ்துக்கு அருகிலும் உள்ள உலும்பினி (இன்றைய நேபாளத்தில் அசோகர் தூண் உள்ள இடம்) Lumbini (now Rummindei in Nepal). (MW)

[10] உருவேல - இன்றைய புத்த-கயா, (பிஹார் மாநிலம்) Uruvela (now Buddha Gaya in Bihar). (MW)

[11] இசிபத்தனை மான் பூங்கா. (இன்றைய வாரனாசி அருகில் உள்ள சாரனாத்) The deer-park at Isipatana (modem Samath) near Varanasi (Benares). (MW)

[12] குசிநகரம் Kusiniira. (MW)

[13] இந்தச் சிறிய உரையாடல் பிற்காலத்தில் சேர்க்கப் பட்டதாகத் தெரிகிறது.

This small passage seems arbitrarily inserted at this. (MW)

[14] சக்கரவர்த்தி (பாலி: சக்கவத்தின்) - உலகாலும் மன்னன். சக்கரவர்த்தி என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள்: சக்கரம் சுழற்றுபவன். எல்லா எதிரிகளையும் வீழ்த்தியதால் அவன் வண்டிக்கு (வண்டிச் சக்கரம் சுற்றுவதற்கு) எங்கும் தடையில்லை.

chakravartin, means 'the turner of a wheel.'

[15] விதைகளும் அழுக்கும் நீக்கப்பட்டு, கட்டி கட்டியாக இல்லாமல் பரப்பப்பட்ட பருத்திப் பஞ்சு

Teased cotton wool is loosened and spread out, has most of the dirt removed, and is no longer lumpy

[16] அடக்க மேடை burial mound.

[17] சந்தனம், நீரில் பிசையப்பட்ட காவிக்கல் பொடி போன்றவை

Probably sandalwood or ochre paste. (MW)

[18] தனிப்பட்ட புத்தர் என்பவரும் நிப்பாண நிலையை சுயமாக அறிந்தவர். ஆனால் அவர் மற்றவர்களுக்குப் போதிப்பதில்லை.

A 'private Buddha' who, though enlightened, does not teach. (Pacceka Buddha). (MW)

[19] அரஹந்தர், புத்தர் காலமானபின்னர் முதல், சங்கக் கூட்டம் சந்திப்பதற்கு முன்பு போ. ஆனந்தர் ஒரு அரஹந்தரானார் என்று கூறிப்பிடப் பட்டிருக்கிறது.

An Arahant. Aanda is said to have become an Arahant just before the first Council, after the Buddha's passing. (MW)

[20] பௌத்தமல்லாத சமயங்களில் கற்றதைச் சுபத்திரர் கூறுவதாக உரைகள் குறிப்பிடு கின்றன.

The commentary notes that Subhadda makes this statement based on non-Buddhist practices he knew from his previous sectarian affiliation.

* * *