ஆசிரியர் Teacher

Teacher

ஆசிரியர்

125

You are your own teacher. Looking for teachers can’t solve your own doubts. Investigate yourself to find the truth - inside, not outside. Knowing yourself is most important.

நீங்களே உங்களது ஆசான். ஆசிரியரைத் தேடிச் சென்று உங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள முடியாது. உண்மையைக் காண உங்களையே ஆய்ந்து பாருங்கள் – உள்ளே தேடுங்கள், வெளியே அல்ல. உங்களைத் தெரிந்து கொள்வது தான் அதி முக்கியமானது.

126

One of my teachers ate very fast. He made noises as he ate. Yet he told us to eat slowly and mindfully. I used to watch him and get very upset. I suffered, but he didn’t! I watched the outside. Later I learned that some people drive very fast but carefully; others drive slowly and have many accidents. Don’t cling to rules, to outer form. If you watch others at most ten percent of the time and watch yourself ninety percent of the time, your practice is okay.

என் ஆசிரியர் ஒருவர் மிக வேகமாகச் சாப்பிடுவார். சாப்பிடும் போது இரைச்சல் எழுப்புவார். ஆனால் எங்களை மட்டும் மெதுவாகமும், கவனத்தோடும் சாப்பிடச் சொல்வார். அவரைப் பார்க்கும் போது எனக்குத் துயரம் ஏற்படும். எனக்குத் தான் துயரம், அவருக்கு இல்லை. நான் வெளியே மட்டுமே பார்த்தேன். பிறகு தான் எனக்குப் புரிந்தது: ஒரு சிலர் வண்டியை மிக வேகமாக ஓட்டினாலும் கவனமாக ஓட்டுவார்கள்; மற்றவர்கள் மெதுவாக ஓட்டினாலும் பல விபத்துக்களுக்கு ஆளாவார்கள். ஆகவே சட்ட திட்டங்களுடனும், வெளி வடிவத்திடனும் ஒட்டிக் கொள்ளாதீர்கள். மற்றவரை அதிகபட்சம் பத்து சதவீத நேரம் கவனித்து உங்களைத் தொன்னூறு சதவிதம் கவனித்தால் உங்கள் பயிற்சி சரியானதே.

127

Disciples are hard to teach. Some know but don’t bother to practice. Some don’t know and don’t try to find out. I don’t know what to do with them. Why is it that humans have minds like this? Being ignorant is not good, but even if I tell them, they still don’t listen. People are so full of doubts in their practice. They always doubt. They want to go to Nibbana but they don’t want to walk the path. It’s baffling. When I tell them to meditate, they’re afraid, and if not afraid, then just plain sleepy. Mostly they like to do the things I don’t teach. This is the pain of being a teacher.

சீடர்களுக்குக் கற்பிப்பது கடினம். சிலருக்குத் தெரியும்; ஆனால் பயிற்சி செய்ய முயற்சிப்பது இல்லை. சிலருக்குத் தெரியாது; தெரிந்து கொள்ளவும் முயற்சிப்பதில்லை. அவர்களை என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை. ஏன் தான் அந்த மனிதர்களுக்கு இப்படிப்பட்ட மனம் இருக்கிறதோ? அறிவற்றிருப்பது சரியல்ல. ஆனால் நான் சொன்னாலும் அவர்கள் கேட்டுக் கொள்வதில்லை. மக்களுக்குத் தங்கள் பயிற்சியில் முழுக்க முழுக்கச் சந்தேகம் தான். எப்போதுமே சந்தேகம் தான். நிர்வாண மோட்சம் அடைய விருப்பம். ஆனால் பாதையில் நடக்க விருப்பமில்லை. இது மிகக் குழப்பமான நிலைதான். அவர்களைத் தியானம் செய்யச் சொன்னால் பயப்படுகிறார்கள். பயப்பட வில்லை என்றால் தூங்கி வழிகிறார்கள். நான் கற்றுக் கொடுக்காததையே பெரும்பாலும் அவர்கள் விரும்பிச் செய்கிறார்கள். ஆசிரியராய் இருப்பதன் தொல்லையே இது தான்.

128

If we could see the truth of the Buddha’s teaching so easily, we wouldn’t need so many teachers. When we understand the teachings, we just do what is required of us. But what makes people so difficult to teach is that they don’t accept the teachings and argue with the teacher and the teachings. In front of the teacher they behave a little better, but behind his back they become thieves! People are really difficult to teach.

புத்தரின் போதனைகளை இவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ளமுடியுமென்றால் நமக்கு இத்தனை ஆசிரியர்கள் தேவைப்பட்டிருக்காது. போதனைகளைப் புரிந்து கொண்டால் நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யலாம். மக்களுக்குச் சொல்லித் தருவது ஏன் கடினமாக உள்ளதென்றால் அவர்கள் போதனைகளை ஏற்றுக்கொள்ளாததாலும், ஆசிரியரிடமும் போதனைகளைப் பற்றியும் வாதிடுவதாலும் தான். ஆசிரியர் முன்னால் கொஞ்சம் ஒழுங்காக நடந்து கொள்கிறார்கள். அவரது முதுகுக்குப் பின்னால் திருடர்களாகி விடுகிறார்கள்! இத்தகைய மக்களுக்குச் சொல்லித் தருவது உண்மையிலேயே கடினமான செயல் தான்.

129

I don’t teach my disciples to live and practice heedlessly. But that’s what they do when I’m not around. When the policeman is around, the thieves behave themselves. When he asks if there are any thieves around, of course they all say there aren’t; that they’ve never seen any. But as soon as the policeman is gone, they’re all at it again. It was like that even in the Buddha’s time. So just watch yourself and don’t be concerned with what others do.

எனது சீடர்களிடம் கவனமற்ற முறையில் வாழவும், பயிற்சி செய்யுமாறும் சொல்வதில்லை. ஆனால் நான் இல்லாத நேரத்தில் அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். காவலர் (போலிஸ்காரர்) இருக்கும் போது திருடர்கள் ஒழுங்காக நடந்து கொள்கிறார்கள். திருடர்கள் அவ்விடத்தில் இருப்பதைப் பார்த்தீர்களா என்று காவலர் கேட்டால், இல்லை என்றுதான் கூறுவார்கள்; நாங்கள் யாரையும் பார்க்கவில்லை என்றுதான் கூறுவார்கள். ஆனால் காவலர் அப்பால் சென்ற பிறகு தங்கள் திருட்டுத் தொழிலை ஆரம்பித்து விடுகிறார்கள். புத்தரின் காலத்தில் கூட அதுதான் நடந்தது. எனவே உங்களையே கவனித்துக் கொள்ளுங்கள். மற்றவர் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய கவலையை விட்டு விடுங்கள்.

130

True teacher speak only of the difficult practice of giving up or getting rid of the self. Whatever may happen, do not abandon the teacher. Let him guide you, because it is easy to forget the Path.

உண்மையான ஆசிரியர்கள் "கைவிடு, தான் என்ற சுயத்தை அழி" என்ற கடினமான பயிற்சிகளைப் பற்றித்தான் பேசுவார்கள். என்ன நிகழ்ந்தாலும் ஆசிரியரை ஒதுக்கி விடாதீர்கள். அவர் உங்களுக்கு வழி காட்டட்டும். ஏனெனில் பாதை எளிதாக மறந்து போகும்.

131

Your doubts about your teacher can help you. Take from your teacher what is good, and be aware of your own practice. Wisdom is for you to watch and develop.

ஆசிரியரைப் பற்றிய உங்கள் ஐயங்கள் உங்களுக்கு உதவக் கூடும். ஆசிரியரிடம் இருந்து நல்லனவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியே உங்கள் பயிற்சியையும் கவனித்துக் கொண்டிருங்கள். நுண்ணறிவென்பது நீங்களே கவனித்து வளர்க்க வேண்டிய ஒன்றாகும்.

132

Don’t just believe in the teacher because he says a fruit is sweet and delicious. Taste it for yourself and then all the doubting will be over.

ஒரு பழம் இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கிறது என்று ஆசிரியர் சொன்னால் அதை அப்படியே நம்பி விடாதீர்கள். நீங்களே அதைச் சுவைத்துப் பாருங்கள். உங்கள் ஐயங்கள் அனைத்தும் அகன்று விடும்.

133

Teachers are those who point out the direction of the Path. After listening to the teacher, whether or not we walk the Path by practicing ourselves, and thereby reap the fruits of practice, is strictly up to each one of us.

ஆசிரியர்கள் பாதையின் திசையைச் சுட்டிக் காட்டுபவர்கள் தான். ஆசிரியர் சொல்வதைக் கேட்டுக் கொண்ட பிறகு, தொடந்து பயிற்சி மேற்கொள்வதும், அதனால் விளையும் பயன்களைப் பெற்றுக் கொள்வதும் நம் கையில் தான் உள்ளது.

134

Sometimes teaching is hard work. A teacher is like a garbage can that people throw their frustrations and problems into. The more people you teach, the bigger the garbage disposal problems. But teaching is a wonderful way to practice Dhamma. Those who teach grow in patience and in understanding.

சில சமயம் கற்பிப்பது கடினமான வேலையாக உள்ளது. ஆசிரியர் என்பவர், மக்கள் தங்களது தோல்விகளையும், பிரச்சனைகளையும் தூக்கி எறியப் பயன்படும் ஒரு குப்பைத் தொட்டியைப் போலத்தான். கற்பிக்கும் மக்கள் அதிகமாக அதிகமாகக் குப்பையை ஒழுங்குபடுத்தும் பிரச்சனையும் அதிகமாகும். ஆனால் தருமத்தில் பயிற்சி எடுப்பதற்கு ஒரு சிறந்த வழி கற்பிப்பதே. கற்பிப்பவர்களுக்குப் பொறுமையும், புரிந்து கொள்ளும் ஆற்றலும் அதிகரிக்கும்.

135

A teacher cannot really clear up our difficulties. He is just a source to investigate the Path. He can’t make it clear. Actually what he says is not worth listening to. The Buddha never praised believing in others. We must believe ourselves. This is difficult, yes, but that’s really how it is. We look outside but never really see. We have to decide to really practice. Doubts don’t disappear by asking others, but through our own unending practice.

ஒரு ஆசிரியரால் நமது பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. பாதையை ஆராய ஒரு ஆதாரமாக மட்டுமே அவர் இருக்கிறார். அவரால் பாதையைத் தெளிவு படுத்த முடியாது. அவர் சொல்வதைக் கேட்பது பயனற்றது என்று கூடச் சொல்லலாம். புத்தர் பிறரை நம்புவதை ஒருபோதும் பாராட்டிப் பேசவில்லை. நாம் நம்மையே நம்ப வேண்டும். இது கடினம் தான். ஆனால் இதுவே நமக்குள்ள ஒரே வழி. வெளியே பார்க்கிறோம், ஆனால் உண்மையில் நாம் பார்ப்பதில்லை. நாம் நேர்மையாகப் பயிற்சி செய்ய முடிவெடுக்க வேண்டும். மற்றவரைக் கேட்பதால் சந்தேகங்கள் தீர்வதில்லை. நாமாகவே தொடர்ந்து பயிற்சி செய்வதாலேயே ஐயங்கள் அகலும்.