december

புத்தரின் வார்த்தைகள்

புனித பௌத்த இலக்கியத்திலிருந்து தினசரி படிக்க வேண்டியவை

ஆங்கிலத்தில் வணக்கத்துக்குரிய எஸ். தம்மிக்கா

தமிழில் திரு தி. சுகுணன், எம். ஏ.

THE WORDS OF THE BUDDHA

Daily Readings from the Buddhist Scriptures

By Bhante S. Dhammika

டிசம்பர் 335-365 December

335. உலகில் இரண்டு விதமான மக்களைக் காண்பது அரிது. எந்த இரண்டு விதமான மக்கள்? முதலாமவர் உதவி செய்யும் எண்ணம் உடையவர். இரண்டாமவர் கிடைத்த உதவிக்கு நன்றி உடையவர்.

These two types of people are difficult to find in the world. What two? One who will do a favor first, and one who is grateful for a favor done.

A.I,87

336. உனக்கு நீயே ஒரு தீவாக இரு. உனக்கு நீயே அடைக்கலம் அளிப்பவனாக இரு. வேறெவற்றோடும் அடைக்கலம் கோராதே. இந்த அறம் உனக்குத் தீவாகவும் அடைக்கலம் தரும் இடமாகவும் இருக்கட்டும். ஒருவன் இதனை எப்படிச் செய்வது? ஒருவன் ஆழ்ந்து உடலை உடலோடும், உணர்ச்சிகளை உணர்ச்சிகளோடும், மனதை மனத்தோடும், எண்ணங்களை எண்ணங்களோடும் சிந்திக்கிறான். ஆர்வத்தோடும், தெளிவாகத் தெரிந்தும், கவனமாகவும் - உலகின் கவர்ச்சிகளையும் வெறுப்புகளையும் புறந்தள்ளிவிட்டு வாழ்கிறான். எவன் ஒருவன் இப்பொழுதும், நான் இறந்த பிறகும் இப்படி வாழ்கிறானோ அவன் மிக உயர்ந்த நிலையை அடைவான். ஆனால் அவர்கள் கற்றுக் கொள்வதற்கு ஆவல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

Be an island unto yourselves, be a refuge unto yourselves, take for yourselves no other refuge. Let the Dhamma be your island and your refuge. And how does one do this? Concerning this, one dwells contemplating the body in the body, feelings in feeling, mind in mind, and mental objects in mental objects, ardent, clearly conscious and mindful - having put aside the attraction and repulsion of the world. And those who live like this now and after I have passed away will attain the highest. But they must be anxious to learn.

D.II,101

337. வேகமாக ஓடும் ஆற்றை நோக்கிக்

கீழே சென்றவனை,

வெள்ளம் அடித்துச் செல்கிறது.

மற்றவனுக்கு ஆற்றைக் கடக்க

அவனா உதவி செய்யப் போகிறான்?

அதைப்போல அறம் பயிலாத ஒருவன்,

அறிஞர் பேருரை விளக்கம் கேளா ஒருவன்,

அறியாமையோடும், நிறைந்த ஐயத்தோடும்

இருக்கும் ஒருவனா மற்றவர்க்கு

அறத்தைத் தெளிவாக உணர வைக்கப் போகிறான்?

சிறந்த துடுப்பும் சுக்கானும் கொண்டுள்ள

திடமான படகில் செல்பவன்

மற்றவர்கள் ஆற்றைக் கடக்க உதவமுடியும்,

அது அவன் திறமையால், கருணையால், அனுபவத்தால்.

அதே வழியில் அறிவுடைய ஒருவன்

தன்னை வளர்த்துக் கொண்டவன்

படித்தவன், நிலையானவன், அறத்தை விளங்கிக் கொண்டவன்

மற்றவர் கவனமாகக் கேட்டால், அவர்களுக்கு அறத்தைத் தெளிவாக்குவான்.

ஆகையால் ஒருவன் சிறந்தவருடன் கூட்டுச் சேரவேண்டும்

அவர்கள் அறிஞராகவும் படித்தவராகவும் இருக்கட்டும்,

பொருளை உணர்ந்தவர்களாக இருக்கட்டும்,

வழியைப் பின்பற்றி அறத்தை அறிந்தவராக இருக்கட்டும்.

பின் அவன் மகிழ்ச்சியை அடைவான்.

How can someone who has gone down

To a swift-flowing river,

And who gets carried away by the current

Help others to cross?

Similarly, how can one who has not learned Dhamma,

Not listened to the explanations of the wise,

And who is ignorant and filled with doubt

Help others to realize it?

Just as one who has embarked on a sturdy boat

Well-equipped with and rudder and oars

Could help many others to cross

Because of his skill, thoughtfulness and experience,

In the same way, one who is wise

And who has developed himself,

Who is learned and stable, understanding Dhamma,

Could make others realize it, if they listen carefully.

Therefore, one should consort with the good

Those who are wise and learned,

Who understanding the meaning and,

Following the path and knowing Dhamma,

One will then attain happiness.

Sn.319-323

338. மெய்யறிவு நற்பண்பினால் தூய்மையடைகிறது. நற்பண்பு மெய்யறிவினால் தூய்மைபெறுகிறது. எப்போதும் ஒன்றிருக்கும் இடத்தில் மற்றதும் இருக்கும். பண்புடையவன் மெய்யறிவு உள்ளவனாக இருக்கின்றான். மெய்யறிவுடையவன் பண்புடையவனாக இருக்கின்றான். இரண்டும் சேர்ந்திருப்பது உலகிலேயே மிக மேன்மையானது.

Wisdom is purified by virtue, and virtue is purified by wisdom. Where one is, so is the other. The virtuous person has wisdom, and the wise person has virtue. The combination of virtue and wisdom is called the highest thing in the world.

D.I,84

339. மகிழ்ச்சியையும் துன்பத்தையும் துறந்து, முன்பிருந்த களிப்பும் வேதனையும் மறையும் போது ஒருவன் நான்காவது ஜான நிலையில் புகுந்து வாழ்கிறான். அந்நிலை மகிழ்ச்சிக்கும் வேதனைக்கும் அப்பாற்பட்டது. நிதானத்தாலும் கவனத்தாலும் தூய்மைப்படுத்தப்பட்டது. ஒருவன் அமர்ந்து, தோய்ந்து தன் உடல் முழுவதும் தெளிவான நிலையாலும், தூய்மையாலும் பரவி நிறைந்திருக்கிறான். ஒருவன் தலையிலிருந்து கால்வரை சுத்தமான வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டு அவன் உடலில் எந்தப் பாகமும் தொடப்படாமல் இருப்பதைப் போல அவன் தோய்ந்து தன் உடல் முழுவதும் தெளிவான நிலையாலும், தூய்மையாலும் பரவி நிறைந்திருக்கிறான்.

Giving up happiness and suffering and with the disappearance of former gladness and sorrow, one enters and abides in the fourth jhana which is beyond pleasure and pain and is purified by equanimity and mindfulness. One sits and suffuses, drenches, fills and permeates the whole body with that purity and clarity so that there is no spot in the entire body that is untouched by it. Just as if a man were to sit wrapped from head to foot in a pure white garment so that no part of his body was untouched by it - in the same way, one suffuses, drenches, fills and permeates the whole body so that there is no spot untouched.

D.I,75

340. உண்மையான மகிழ்ச்சியுடன் நாம் வாழ்கிறோம்,

வெறுப்பவரிடையே நாம் அன்பு செலுத்துகிறோம்.

வெறுப்பவரிடையே

நாம் நிறைந்த அன்புடன் வாழ்கிறோம்.

உண்மையான மகிழ்ச்சியுடன் நாம் வாழ்கிறோம்,

நோயுற்றவரிடையே நோயின்றி வாழ்கிறோம்.

நோயுற்றவரிடையே

நாம் முழு நலத்துடன் வாழ்கிறோம்.

உண்மையான மகிழ்ச்சியுடன் நாம் வாழ்கிறோம்,

பேராசைக் காரர்களிடையே நிறைவுடன் வாழ்கிறோம்

பேராசைக் காரர்களிடையே

நாம் மன நிறைவுடன் வாழ்கிறோம்.

Happily indeed we live,

Loving amidst the hating.

Amidst those who hate

We live full of love.

Happily indeed we live,

Healthy amidst the ailing.

Amidst those who are ill

We live in perfect health.

Happily indeed we live,

Content amidst the greedy.

Amidst those who are greedy

We live in contentment.

Dhp.197-199

341. கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றைத் தொடரக் கூடாது,

எதிர்காலத்திற்கும் ஆசைப்படக் கூடாது.

கடந்தவை இறந்துபோனவை, முடிந்துபோனவை,

எதிர்காலமோ இனிமேல்தான் வரவேண்டியது.

இன்றே, இப்பொழுதே, இங்கேயே நிகழ்வதைக்

கவனித்து நுண்ணறிவு பெறுபவன்,

அவற்றின் உண்மையான நிலையை அறிந்து,

இடம்பெயராமல், கலங்காமல் -

அந்த நுண்ணறிவை வளர்த்துக் கொள்ளட்டும்.

The past should not be followed after,

And the future not desired.

What is past is dead and gone,

And the future is yet to come.

But whoever gains insight into things

Presently arisen in the here and now,

Knowing them, unmoved, unshaken -

Let him cultivate that insight.

M.III,187

342. காட்டில் மரங்களின் வேர்களுக்கிடையே

அல்லது திறந்த இடங்களில்,

புத்த பெருமானை மனதில் நினைவு கொள்ளுங்கள்

அச்சமோ நடுக்கமோ வாரா.

அந்தச் சிறந்த, உயர்ந்த, மனிதரில் மேன்மையான

புத்தரை நினைக்க முடியாவிட்டால்,

பின் அறத்தை மனதில் நினையுங்கள்,

அது சரியாகப் போதிக்கப்பட்ட வழிகாட்டியாம்.

சரியாகப் போதிக்கப்பட்ட வழிகாட்டியான

அறத்தை நினைக்க முடியாவிட்டால்,

பின் சங்கத்தை நினைவு கொள்ளுங்கள்,

அது உலகில் ஒப்பிட முடியாத நன்மைகள் விளைவிக்கும்.

When in the forest amongst the roots of the trees

Or in the empty places,

Just call to mind the Buddha

And no fear of trembling will arise.

If you cannot think of the Buddha,

This best, this highest, this finest of beings,

Then call to mind the Dhamma,

The well taught guide.

If you cannot think of the Dhamma,

The well taught guide,

Then think of the Sangha,

That incomparable source of goodness in the world.

S.I,220

343. இதனை உற்றுக் கேள், விழிப்புடன் இருப்பவனே -

தூங்குபவர்கள் எழட்டும்.

தூக்கத்தைவிட விழிப்பே மேல்

விழிப்புடன் இருப்பவர் பயமின்றி இருப்பர்.

எவரெவர் விழிப்புடனும், கவனத்துடனும், நிதானத்துடனும்,

ஒருமுகத்துடனும், அமைதியுடனும், நுண்ணறிவுடனும்

சரியான நேரத்தில் அறத்தைப் படித்து,

ஒரே குறிக்கோளுடன் இருந்தால்

இருளைக் கடந்துவிடுவார்.

அதனால் எழுந்திரு, விழித்திரு.

ஆர்வமுடையவன், பகுத்தறிந்து தியானிக்கிறான்,

பிறப்பு இறப்பு என்ற தளையிலிருந்து விடுபடுகிறான்,

இந்த வாழ்க்கையிலேயே மிக உயர்ந்த மெய்யறிவைப் பெறுகிறான்.

Hearken to this, you who are watchful -

Those who sleep, let them awake.

Watchfulness is better than sleep.

The watchful are free from fear.

Whoever is watchful, mindful, composed,

Focused, gentle and insightful,

Studying the Dhamma at the right time and one-pointed,

They will overcome the darkness.

Therefore, rouse yourself and be watchful.

The ardent one, discriminating and meditating,

Cuts the bonds of birth and death

And attains the highest wisdom in this very life.

It.41-2

344. நான் உங்களுக்குச் சுமையைப் பற்றி, அதைப் பிடித்திருப்பது, சுமையைத் தாங்கிக் கொள்வது, அதைக் கீழே இறக்குவது பற்றிப் போதிக்கிறேன். சுமை என்றால் என்ன? அதற்கு விடை ஐந்து கந்தங்களோடு பற்றுக் கொள்வதுதான். எந்த ஐந்து? உருவம், நுகர்ச்சி, தோற்றுகை, சங்கற்பம், விஞ்ஞானம். இவற்றோடு பற்றுக் கொள்வதுதான் சுமை.

சுமைகளை எடுத்துக்கொள்வது என்றால் என்ன? அதன் விடை இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெயருடைய இன்னார் என்பது. அது தான் சுமையை ஏற்றுக்கொள்வது என்பதாம்.

சுமையைத் தூக்குவது என்பது என்ன? அது உணர்வுகளுக்காக ஏங்குவது. அதுவாக ஆவதற்கு ஏங்குவது. ஆன பிறகு ஆகாமல் மாற்றுவதற்காக ஏங்குவது. இதனைத்தான் சுமையைத் தூக்குவது என்கிறோம்.

சுமையை இறக்குவது என்றால் என்ன? ஆவலை உதறித்தள்ளுவது, அழிப்பது, அதிலிருந்து விடுதலைபெறுவது, ஆவலற்ற தன்மை. அதுதான் ஆவலை இறக்கி வைப்பதாம்.

சுமை என்பது நான் என்று கருதும் ஐந்து கந்தங்களாம்.

சுமையைக் கைப்பற்றுபவன் நான் என்று நினைக்கும் ஒருவராம்.

சுமையை ஏற்பதே உண்மையில் துன்பம்,

அதனைக் கிடத்துவதே மகிழ்ச்சியாம்.

இந்தப் பெருஞ்சுமையைக் கீழே கிடத்துபவன்

புதிய சுமையை ஏற்காமல் இருந்தால்,

அவனே ஆவலை வேரோடு களைந்தவன்.

அவனே முழுமையானவன், விடுதலை பெற்றவன்.

I will teach you the burden, the taking hold of it, the taking it up, and the putting it down. And what is the burden? The answer is the five clinging aggregates. What five? Body, feeling, perception, mental constructs and consciousness. This is the burden. And what is the taking hold of the burden? The answer is that it is the person of such-and-such a name, of such-and-such a village. This is the taking hold of the burden. And what is the taking up of the burden? It is that craving for sense pleasures, craving for becoming and craving for unbecoming - that is called lifting up the burden. And what is the putting down of the burden? It is the withering and fading of craving, the giving up of craving, the renouncing of it, freedom from it, the absence of it. That is the putting down of the burden.

The five aggregates are the burden.

The seizer of the burden is the person.

Taking it up is sorrow indeed,

And putting it down is happiness.

If one lays this heavy burden down

Without taking up a new one,

Then one has pulled out craving, roots and all.

That one is fulfilled and free.

S.III,25

345. ஒரு முறை மாலையில் தனிமையிலிருந்து எழுந்த அண்ணல் மேற்றிசையிலிருந்து வந்த சூரிய வெப்பம் தன் முதுகில் படுமாறு கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தார். அப்பொழுது போற்றுதற்குரிய ஆனந்தர் அண்ணலைப் பார்க்க வந்தார். அவருடைய கைகளால் அண்ணலின் கால்களைப் பிடித்து விட்டபடி கூறினார்: "விசித்திரம், அதிசயம். அண்ணலின் தோல் முன்பு போலத் தெளிவாக இல்லை. பளபளப்பாக இல்லை. அண்ணலின் கைகால்களெல்லாம் தளர்ந்து சுருங்கி விட்டன. அவர் உடல் கூன் விழுந்து வளைந்து விட்டது. அவருடைய ஐம்புலன்களும் மாறிவிட்டன."

அண்ணல் கூறினார்: "அப்படித்தான் ஆனந்தா. அது அப்படித்தான். இளமையில் முதுமையும், உடல் நலத்தில் நோயும், வாழ்க்கையில் மரணமும் இயல்பாகவே அமைந்துள்ளது."

Now, on one occasion, the Lord rose from solitude towards evening and sat warming his back in the westerly sunshine. Then, Venerable Ananda came to see the Lord, and while massaging his limbs with his hands he said: “It is strange, it is wonderful, how the Lord’s skin is no longer clear and radiant, how all his limbs are slack and wrinkled, how his body is stooped, and how his sense faculties have changed.”

The Lord replied: “So it is, Ananda, so it is. Old age is inherent in youth, sickness in health, and death in life”.

S.V,216

346. ஒரு சமயம் அண்ணல் துறவிகளிடம் கூறினார்: "முன்னொரு காலத்தில் கழைக் கூத்தாடி ஒருவன் ஒரு மூங்கிலை நட்டு அதன்மேல் ஏறி நின்றபடி தன் மாணவனை அழைத்து, 'சிறுவனே, நீ மூங்கில் மீது ஏறி வந்து என் தோல் மீது நில்.' என்றான்.

'நல்லது, ஐயா,' என்று கூறிய அச்சிறுவன் ஆசிரியர் கூறியவாறு செய்தான். பிறகு அந்த ஆசிரியன் கூறினான்: ' சிறுவனே இப்பொழுது நீ என்னைக் கவனித்துக் கொள், நான் உன்னைப் பாதுகாக்கிறேன். இருவரும் ஒருவரையொருவர் கவனித்தவாறு நம் வித்தையைச் செய்வோம். நமக்கு நல்ல ஊதியம் கிடைக்கும். பிறகு பாதுகாப்பாக அந்த மூங்கில் கம்பத்திலிருந்து கீழே இறங்கி வருவோம்.' என்றான்.

ஆனால் அந்த மாணவன்: 'இல்லை ஐயா, இல்லை! அது சரிவராது. நீங்களே உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். நான் என்னைக் கவனித்துக் கொள்கிறேன். நாம் நம்மை நாமே கவனித்துப் பாதுகாத்துக் கொண்டு நமது வித்தைகளைச் செய்வோம். நமக்கு நல்ல ஊதியம் கிடைக்கும். பிறகு பாதுகாப்பாக அந்த மூங்கில் கம்பத்திலிருந்து கீழே இறங்கி வருவோம். அதுவே சரியான வழி,' என்றான்.

அண்ணல் கூறினார்: " 'என்னை நான் பாதுகாத்துக் கொள்வேன்' என்று அந்த மாணவன் ஆசிரியரிடம் கூறியதைப் போலக் கவனமாக இருத்தலின் நான்கு அடித்தளங்களை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பொருள் என்னவெனில் 'நான் மற்றவர்களைப் பாதுகாப்பேன்,' என்பதும் தான். ஒருவன் தன்னைப் பாதுகாக்கும் போது அவன் மற்றவரையும் பாதுகாப்பான். மற்றவரைப் பாதுகாக்கும் போது தன்னையும் பாதுகாத்துக் கொள்வான். ஒருவன் தன்னைப் பாதுகாப்பதால் மற்றவர்களை எப்படிப் பாதுகாக்கிறான்? எப்படியென்றால் தியானத்தைத் திருப்பித் திருப்பிச் செய்வதாலும் அடிக்கடி பழக்கப்படுத்திக்கொள்வதாலும்தான். மேலும் ஒருவன் மற்றவர்களைப் பாதுகாப்பதால் எப்படித் தன்னைப் பாதுகாக்க முடியும்? பொறுமை, அடக்கம், தீங்கு செய்யாமை, அன்பு, கருணை ஆகியவற்றைக் கைகொள்வதால் தான்."

At that time, the Lord said to the monks: “Once upon a time, a bamboo acrobat set up his pole, called to his pupil, and said: ‘Now, my boy, climb the pole and stand on my shoulders.’

‘Alright, master,’ said the pupil, and he did as he was told. Then the master said: ‘Now, my boy, you protect me and I will protect you, and protected and watched by each other we will do our act, get a good fee, and come down safe and sound from the bamboo pole.’ But then the pupil said: ‘No master, no! That will not do. You look after yourself, and I will look after myself and thus watched and guarded each by himself, we will do our act, get a good fee, and come down safe and sound from the bamboo pole. That is the way to do it.’

Then the Lord said: “Just as the pupil said to the master: ‘I will protect myself’ so should you practice the four foundations of mindfulness, which also means: ‘I will protect others.’ Because by protecting oneself, one protects others and by protecting others, one protects oneself. And how does one protect others by protecting oneself? It is by the repeated and frequent practice of meditation. And how does one protect oneself by protecting others? It is by practicing patience, forbearance, harmlessness, love and compassion.”

S.V,169

347. ததாகதர் தேவைக்கு மேற்பட்டவற்றுடன் வாழமாட்டார். நிறைந்த வசதியான வாழ்க்கைக்கும் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டார். அவர் முயற்சியில் தடுமாறவும் மாட்டார். ததாகதர் முழுமையானவர், முழு அறிவு பெற்ற புத்த பெருமான் ஆவார். இறப்பற்ற அழியாமை என்னால் கண்டு பிடிக்கப்பட்டு போதிக்கப்படுகிறது. அதனால் அவ்வறத்தைக் காது கொடுத்துக் கேளுங்கள்.

The Tathagata does not live in abundance, he does not revert to the life of abundance, nor does he waver in his striving. The Tathagata is a perfected one, a fully enlightened Buddha. So give ear, for the Immortal has been discovered and I instruct, I teach the Dhamma.

Vin.IV,9

348. முட்டாள் வெற்றி கொண்டவனின் போதனைகளை

வெறுப்புடன் கேட்கிறான்.

நல் அறத்தில் வளரவில்லை

வயலில் அழுகிய விதைகளைப் பயிர் செய்தால் அது வளராததைப் போல.

ஆனால் வெற்றி கொண்டவனின் போதனையை

மகிழ்ச்சி நிறைந்த மனதுடன் கேட்பவன்

மாசுகளை ஒழித்ததால்,

அசைக்க முடியாத நிலையை உணர்ந்ததால்,

மிக உயர்ந்த அமைதி நிலையை அடைந்து -

அவன் சாந்தமாக, மாசுகளின்றி இருக்கிறான்.

The fool who listens to the Conqueror’s teachings

With a hostile mind

Does not grow in the good Dhamma

Any more than a rotten seed grows in a field.

But one who listens to the Conqueror’s teachings

With a joyful mind,

Having destroyed the defilements,

Having realized the unshakable state,

And attained the highest peace -

That one is cooled and without defilements.

Th.363-364*

349. ஆனந்தர் அண்ணலிடம் வந்து கூறினார்: "புனிதமான வாழ்க்கையின் பாதிப் பகுதி அழகான நட்பும், அழகான சம்பந்தமும், அழகான உறவும் தான்."

அண்ணல் பதிலிறுத்தார்: "அப்படிச் சொல்லாதே, ஆனந்தா! அப்படிச் சொல்லாதே! புனிதமான வாழ்க்கையின் முழுப்பகுதியும் இந்த அழகான நட்பும், இந்த அழகான சம்பந்தமும், இந்த அழகான உறவும் தான்."

Then Ananda came to the Lord and said: “Half of the holy life is beautiful friendship, beautiful association and beautiful intimacy.”

The Lord replied: “Say not so, Ananda, say not so! It is the whole of the holy life, not half, this beautiful friendship, this beautiful association, this beautiful intimacy.”

S.V,2

350. நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவை இல்லாத நிலை ஒன்று இருக்கிறது; முடிவற்ற அந்தரம், முடிவற்ற பிரக்ஞை, வெறுமை, அல்லது பிரக்ஞையும் இல்லாத பிரக்ஞை இல்லாமலும் இல்லாத மண்டிலங்கள் எதுவும் இல்லாத நிலை; அங்கு இந்த உலகமும் இல்லை, இந்த உலகிற்கு அப்பாற்பட்ட (சொர்க்கம், நரகம் போன்ற) உலகங்களும், இரண்டும் சேர்ந்த இடமும் இல்லை, கதிரவனும் இல்லை, தண்மதியும் இல்லை; பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை, காலமும் இல்லை. அதனால் மறைவும் இல்லை தோற்றமும் இல்லை. அது நாட்டப்படவும் இல்லை, அதில் சலனமும் இல்லை. அது எதையும் அடிப்படையாகக் கொண்டதுமில்லை. இது தான் துயரத்தின் முடிவு ஆகும்.

There is that state where there is not earth, water, fire or air; where there are not the spheres of infinite space, infinite consciousness, nothingness, or the sphere of neither-consciousness-nor-unconsciousness; where there is not this world, the world beyond or both together, no sun and no moon; where there is no coming to birth, no going to death, no duration and hence no falling or arising. It is not something fixed, it does not move, it is based on nothing. This indeed is the end of suffering.

Ud.80 -

351. ஆனந்தர் கேட்டார்: "அண்ணலே, மூன்று விதமான வாசனைப் பொருட்கள் இருக்கின்றன. அவை தம் மணத்தைக் காற்றுடன் சேர்ந்தே பரப்புகின்றன. காற்றை எதிர்த்துப் பரப்ப முடிவதில்லை. அவை வேரின் வாசனை, அகிற்கட்டையின் வாசனை மற்றும் பூக்களின் வாசனை. ஏதாவது ஒருவகை வாசனைப் பொருள் காற்றுடன் சேர்ந்து மட்டுமல்லாமல் காற்றுக்கு எதிராகவும் தன் மனத்தைப் பரப்புவதுண்டா?

அண்ணல் கூறினார்: "அப்படி ஒரு வாசனைப் பொருள் உண்டு, ஆனந்தா. எந்தக் கிராமத்திலோ மாவட்டத்திலோ ஒரு ஆணோ ஒரு பெண்ணோ புத்தம், தம்மம் மற்றும் சங்கத்திடம் சரணடைந்தவர்கள், ஐந்து நல்லொழுக்கப் போதனைகளைப் பின்பற்றுபவர்கள், எவரிடம் அன்பான குணம் இருக்கிறதோ, எவர் கஞ்சத்தனத்திலிருந்து விடுபட்ட உள்ளத்தோடு வீட்டில் வாழ்கிறாரோ, எவர் (எதையும் மூடி மறைக்காமல்) திறந்த கைகளுடன் வாழ்கின்றாரோ, எவர் ஒரு சலுகை கேட்கும் பொழுது மகிழ்ச்சியுடன் கொடுக்கின்றாரோ, எவர் பங்கிட்டுக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றாரோ அவரைப் பற்றித் துறவிகளும் அந்தணர்களும் உலகின் நான்கு பாகங்களிலும் புகழ்ந்து பாடுவர். கடவுளரும் கூட அவர்களைப் பற்றிப் புகழ்ந்து பாடுவர். இந்த வகையான வாசனைப் பொருளே தன் மணத்தைக் காற்றுடன் சேர்ந்தும் பரப்பும், அதை எதிர்த்தும் பரப்பும்."

Ananda asked: “Lord, there are three scents whose fragrance spreads with the wind but not against it. They are the root scent, the heartwood scent and the scent of flowers. Is there any sort of scent that spreads with the wind and against it also?”

The Lord said: “There is such a scent, Ananda. In whatever village or district there is a man or woman who has taken refuge in the Buddha, the Dhamma and the Sangha, who practices the five Precepts, who has a lovely nature, who lives at home with the heart free from stinginess, who is open-handed, delights in giving, being one to ask a favor of, one who delights in sharing, then monks and brahmins sing the praise of one like this in all the four quarters. Even the gods sing their praise. This is the sort of scent whose fragrance goes with the wind and against it also.”

A.I,225

352. ஐந்து கருவிகளிலிருந்து வரும் இசை,

ஒரே குறிக்கோளுடைய மனம்

பொருள்களைப் பற்றித்தரும் சரியான நுண்ணறிவைப் போல

மகிழ்ச்சியைக் கொடுக்க இயலாது.

Music from a five-piece ensemble

Cannot produce as much delight

As that of a one-pointed mind

With perfect insight into things.

Th.398*

353. மரப்பட்டை ஆடையை உடுத்தியிருந்த பாகியா துறவிகளைப் பார்த்துக் கேட்டான். "வணக்கம் ஐயா, அண்ணல், புனிதமான அவர், முழுமையாக எழுச்சி பெற்ற புத்த பெருமான், எங்கே தங்கியிருக்கிறார் ?"

"அண்ணல் பிச்சை-உணவு பெற்றுவர நகருக்குச் சென்றுள்ளார்."

உடனே பாகியா ஜேத வனத்தை விட்டு சாவத்தி சென்றான். அங்கு அண்ணல் பிச்சைக்காக நடந்து கொண்டிருந்தார். அவர் அழகாக இருந்தார், பார்ப்பதற்கு நன்றாகத் தோன்றினார். உணர்வுகள் அமைதியாக இருந்தன. மனத்தில் அமைதி இருந்தது. சாந்தமும், கட்டுப்பாடும் உடைய சரியான முறையில் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு யானையைப் போல் தோன்றினார். பாகியா அண்ணலிடம் சென்று கேட்டான்: "ஐயா, அண்ணல் எனக்கு அறத்தைப் போதிக்கட்டும். அவ்வறத்தால் எனக்கு நலனும் மகிழ்ச்சியும் நீண்ட நாள் நிலைக்கட்டும்." என்றான்.

"தவறான நேரத்தில் வந்திருக்கிறாய், பாகியா. நான் உணவுக்காக வந்திருக்கிறேன்."

இரண்டாம் முறையாக, மூன்றாம் முறையாகப் பாகியா அறத்தைப் போதிக்கும்படி மன்றாடிக் கேட்டான். எனவே அண்ணல் இணங்கிப் பதிலளித்தார்: "இப்படிப் பயிற்சியளித்துக் கொள்ள வேண்டும்.

பார்ப்பனவற்றில் பார்த்தவை மட்டுமே இருக்கவேண்டும்.

கேட்பனவற்றில் கேட்டவை மட்டுமே இருக்கவேண்டும்.

உணர்ந்தனவற்றில் உணர்ந்தவை மட்டுமே இருக்கவேண்டும்.

அறிந்தனவற்றில் அறிந்தவை மட்டுமே இருக்கவேண்டும்.

இவ்வாறு பயிற்சியளித்துக் கொண்டால் அதில் நான் என்ற கருத்து தொடர்பு கொள்ளாது. நான் என்ற கருத்து தொடர்பு கொள்ளாவிட்டால் நான் என்று ஒன்று அங்கே இருப்பதில்லை. நான் என்ற ஒன்று இல்லாத போது அது இங்கும் இருப்பதில்லை, அங்கும் இருப்பதில்லை இரண்டுக்கும் நடுவிலும் இருப்பதில்லை. அப்போது துக்கம் முடிவு பெறுகிறது (அதை அனுபவிக்க யாருமில்லை)."

அங்கேயே அப்போதே இந்தச் சுருக்கமான தம்ம போதனையின் காரணமாகப் பாகியாவின் மனம் மாசுகளிடமிருந்து விடுபட்டு அவன் சுதந்திரம் கண்டான்.

Bahiya of the Bark Garment asked the monks: “Tell me, good sirs, where is the Lord staying, he who is a Noble One, he who is a fully awakened Buddha?”

“The Lord has gone into the town to get alms-food.”

So Bahiya quickly left the Jeta’s Grove, went into Savatthi, and found the Lord in quest for alms-food. He was handsome, good to look upon, with senses calmed, tranquil in mind, composed and controlled like a well-trained elephant. Bahiya approached the Lord and asked: “Sir, teach me the Dhamma so that it will be for my welfare and happiness for a long time.”

“You have come at the wrong time, Bahiya. I am getting my alms-food.”

A second and a third time he asked, so the Lord answered: “This is how you must train yourself. When, in the seen there is just the seen, in the heard just the heard, in the sensed just the sensed and in the cognized just the cognized, then there will be no ‘thereby,’ and when there is no ‘thereby’ there will be no ‘therefore’ and when there is no ‘therefore’ there will be no here, no there, no midway in between. That is the end of suffering.” Then and there, because of this concise Dhamma teaching, Bahiya’s mind was freed from the defilements.

Ud.7

354. காலிகூதரின் மகனான போற்றுதற்குரிய பத்தியா அடிக்கடி காடுகளுக்குச் சென்று, அங்கு மரத்தடிகளிலும், தனிமையான இடங்களிலும் அமர்ந்து: "ஆகா, என்ன ஆனந்தம்! என்ன ஆனந்தம்! என்று கத்துவாராம்." அதனைக் கேட்ட பல துறவிகள்: "சந்தேகமின்றிப் போற்றுதற்குரிய பத்தியா அடிகள் புனிதத் துறவு வாழ்க்கையில் அமைதியின்றி இருக்கிறார். இல்லறவாழ்வில் இருந்த போது அரசாங்கச் சலுகைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். அதனை இப்பொழுது நினைக்கிறார் போலும்." என்று எண்ணினர். ஆகையால் அத்துறவிகள் அண்ணலிடம் சென்று இதனைக் கூறினர். அண்ணல் பத்தியாவைத் தன்னைப் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தார். பத்தியா வந்தவுடன்: "பத்தியா, நீ காடுகளுக்குச் சென்று, அங்கு மரத்தடிகளிலும் தனிமையான இடங்களிலும் அமர்ந்து: 'ஆகா, என்ன ஆனந்தம்! என்ன ஆனந்தம்!’ என்று கத்துவாயாமே . இது உண்மையா?" என்று கேட்டார்.

"அது உண்மைதான், அண்ணலே."

"ஏன் அப்படிச் செய்கிறாய்?"

“முன்பு நான் அரசாங்க வாழ்க்கை வாழ்ந்து மகிழ்ச்சியாக இருந்த பொழுது எனக்கு அரண்மனைக்குள்ளும், வெளியிலும், எல்லா இடங்களிலும் என்னைக் காவலர்கள் பாதுகாத்துக் கொண்டிருந்தனர். நான் சரியாகப் பாதுகாக்கப் பட்டிருந்தாலும் பயத்துடன் தான் வாழ்ந்தேன். ஆகுலப்பட்டுக் கொண்டிருந்தேன். கலங்கிக் கொண்டிருந்தேன். அஞ்சிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது நான் காட்டிலேயே வாழ்கிறேன். தனியொருவனாக இருக்கிறேன். பயமின்றி இருக்கிறேன். நம்பிக்கையுடன் இருக்கிறேன். அதனால் தான் நான் 'ஆகா, என்ன ஆனந்தம்! என்ன ஆனந்தம்!' என்று கத்துகிறேன்.”

Now, Venerable Bhaddiya, son of the Kaligodhas, used to go to the forest, to the roots of trees and to lonely spots, and while there, would often cry out: “Oh joy! Oh joy!” Now, a number of monks heard him do this and they thought: “Doubtless, Venerable Bhaddiya is discontented with the holy life, seeing as he enjoyed the happiness of royalty when he was a householder.” So those monks went to the Lord and told him of this, and he asked that Bhaddiya come to see him. When he came, the Lord said: “Bhaddiya, is it true as they say that you go to the forest, to the roots of the trees and to lonely spots, and that while there you often utter the cry: ‘Oh joy! Oh joy!’ ”

“It is true, sir.”

“And why do you do this?”

“Formerly, when I enjoyed the happiness of royalty, guards were set inside the palace, outside and even in the area beyond. Yet, although I was well guarded, I lived in fear, I was anxious, trembling and afraid. But now that I lived in the forest, all alone, I am without fear, I am assured, confident and unafraid. That is why I utter the cry: ‘Oh joy! Oh joy!’ ”

Ud.19

355. ஒரு பேரறிவு பெற்ற மனிதன் இயற்கையாகவே கருணையுடனும் அத்தகைய மனப்போக்குடனும் வாழ்கிறான். அவன் உயிரினங்கள் அனுபவிக்கும் துக்கங்களை நிவர்த்தி செய்ய விரும்புகிறான். அதற்காக அவன் தன் உடலையோ அல்லது உயிரையோ விட்டு விடக்கூடத் தயங்குவதில்லை. தன் குறிக்கோளை அடையும் வரை போராடி அந்த முயற்சியில் நீண்டகாலம் பெரும் சோதனைகளை யெல்லாம் அச்சமின்றியும் சோர்வடையாமலும் சந்தித்து, இப்பிறப்பில் உள்ள எல்லாத் துன்பங்களையும் ஏற்று, பிறர் நலனுக்காக உழைக்க விரும்புகிறான்.

An enlightened person is naturally endowed with a compassionate nature and disposition. He desires to alleviate the suffering that beings suffer, and is even willing to relinquish his own body or life to do so. Until he reaches his goal, he is willing to struggle and strive for a very long time on a course involving great hardship, without fear and without ever becoming disenchanted with all the suffering in the round of existence, all for the sake of the welfare of other beings.

Cp-a,278*

356. ஓர் உழவனுக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய மூன்று கடமைகள் உள. அவை எவை? அந்த உழவன் தன் நிலத்தை விரைவாக உழுது பரம்படிக்க வேண்டும். பிறகு விரைவாக விதைகளை விதைக்க வேண்டும். பின் விரைவாக நீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் அந்த உழவனுக்கு: "என்னுடைய பயிர்கள் இன்று முளைக்கத் தொடங்கட்டும். நாளை காய் பிடிக்கட்டும். அதன் மறுநாள் பழுக்கட்டும்." என்று கூறக்கூடிய மந்திரசக்தியோ அதிகாரமோ கிடையாது. இல்லை! காலப்போக்கில் அவை தானாகவே நடக்கும்.

அதே போல ஒரு துறவிக்கு மூன்று விதமான உடனடிக் கடமைகள் உள. அவை எவை? உயர்ந்த ஒழுக்கத்திற்கான, உயர்ந்த எண்ணத்திற்கான மற்றும் உயர்ந்த அறிவிற்கான பயிற்சி பெறல். ஆனால் அந்தத் துறவி: 'இன்று, நாளை அல்லது நாளை மறுநாள் மாசுகளிலிருந்து என் உள்ளம் விடுதலை அடையட்டும்.' என்று கூறக்கூடிய மந்திரசக்தியோ அதிகாரமோ கிடையாது. இல்லை! காலப்போக்கில் அவர் பயிற்சி பெறுவதால் அவை தானாகவே நடக்கும்.

ஆகையால் உங்களுக்கு நீங்கள் கீழ்கண்டவாறு பயிற்சியளித்துக் கொள்ள வேண்டும். 'நாம் வெகு ஆர்வத்துடன் இம்மூன்று கடமைகளையும் நிறைவேற்றப் பயிற்சி பெற வேண்டும்.' என்று எண்ண வேண்டும்.

There are three urgent duties of a farmer. What three? The farmer gets his fields well ploughed and harrowed quickly. Then he plants the seed quickly. Then he irrigates the field quickly. But the farmer has no magic power or authority to say: ‘Let my crops spring up today, let them ear tomorrow and on the following day let them ripen.’ No! In due time this will happen.

In the same way, there are these three urgent duties of a monk. What three? Undertaking the training in higher virtue, higher thought and higher wisdom. But he has no such magic power or authority to say: ‘Today, tomorrow or the next day, let my mind be free from the defilements.’ No! In due time this will happen as he undergoes training in these three things. Therefore, you should train yourselves like this: ‘We shall be keen to undertake the training in these three things.’ ”

A.I,229

357. அண்ணல் கூறினார்: "எவை உன்னுடையதல்லவோ அவைகளைத் தூக்கி எறிந்துவிடு. அவைகளைத் தூக்கி எறிவது உன்னுடைய நலனுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் தான். உன்னுடையதல்லாதவை எவை? உடல், நுகர்ச்சி, தோற்றுகை, சங்கற்பம், விஞ்ஞானம் ஆகியவை உன்னுடையவை அல்ல. ஆகையால் அவைகளைத் தூக்கி எறிந்துவிடு. அவைகளைத் தூக்கி எறிதலே உன்னுடைய நலனுக்கும் மகிழ்ச்சிக்காகவுமாம். இது, ஒருவன் ஜேத வனத்தில் இருக்கும் எல்லாப் புற்களையும், சிறு கிளைகளையும், குச்சிகளையும் ஒன்று சேர்த்து, அவைகளை எரித்தோ அல்லது அவன் அவைகளை என்ன செய்ய விரும்புகிறானோ அவ்வாறே செய்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள்: 'இம்மனிதன் நம்மைக் கூட்டுகிறான். எரிக்கிறான். நம்மை என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறானோ அவைகளையெல்லாம் செய்கிறான்.' என்று கூறுவீர்களா?

"இல்லை, அண்ணலே."

"ஏன்?"

"ஏன் என்றால். அது நாமல்ல. அவை நம்முடையவை அல்ல."

"அதேபோலத்தான் உன் உடல், நுகர்ச்சி, தோற்றுகை, சங்கற்பம், விஞ்ஞானம் ஆகியவையும் உன்னுடையதல்ல."

The Lord said: “That which is not yours - put it away. Putting it away will be to your welfare and happiness. And what is not yours? Body, feeling, perception, mental constructs and consciousness are not yours. So, put them away. Putting them away will be to your welfare and happiness. It is just as if a man should gather up, burn, or do whatever he wanted with all the grass, twigs and sticks here in Jeta Grove. Would you say: ‘This man is gathering us, he is burning us, he is doing what he wants with us?’ ”

“No, Lord.”

“And why not?”

“Because they are not ourselves, they are not us.”

“Even so, body, feeling, perception, mental constructs and consciousness are not yours.”

S.III,34

358. அப்பொழுது தேரா என்னும் ஒரு துறவி தனியாக வாழ்ந்து தனிமையான ஒரு வாழ்க்கையைப் போற்றி நடந்து கொண்டிருந்தார். அவர் கிராமத்திற்குத் தனியாகவே சென்றார். தனியாகவே திரும்பினார். தனியாகவே அமர்ந்தார். தனியாகவே நடந்தார். ஆகையால் பிற துறவிகள் அண்ணலிடம் சென்று அவரைப் பற்றிக் கூறினர். அண்ணலும் அத்துறவியைத் தன்னிடம் அனுப்புமாறு பணித்தார். அத்துறவி அண்ணலிடம் வந்தவுடன் அண்ணல் அவரைப் பார்த்து: "இவர்கள் கூறுவது உண்மையா? நீ தனிமையானதொரு வாழ்க்கை வாழ்ந்து அப்படிப்பட்ட வாழ்க்கையை புகழ்ந்து பாராட்டுகிறாயாமே?"

"அப்படித்தான், அண்ணலே."

"எப்படிப்பட்ட வழியில் நீ வாழ்ந்து அவ்வாழ்க்கையை ஆதரிக்கிறாய்?"

"நான் கிராமத்திற்குள் தனியாக நுழைகிறேன், தனியாகவே திரும்புகிறேன், தனியாகவே அமர்கிறேன், தனியாக நடக்கிறேன்."

"அது தனியாக வாழ்வதுதான், தேரா. ஆனால் இத்தனிமையான வாழ்க்கையை முழுமையாக்க ஒரு வழியிருக்கிறது. அதை நான் உனக்குக் கூறுகிறேன். கடந்த காலத்தைத் துறந்து விடவேண்டும். எதிர் காலத்தைத் தவிர்த்து விடவேண்டும். நிகழ்காலத்தில் இச்சையோ, பேராசையோ இல்லாமலிருந்தால் அந்தத் தனிமை வாழ்க்கை முழுமையான பூரணத்துவம் அடைகிறது."

At that time, a certain monk named Thera was living alone and commending such a life. He entered the village alone, he returned alone, he sat alone and walked alone. So a number of other monks went and told the Lord this, and he asked them to call Thera into his presence. When he came, the Lord asked him: “Is it true as they say that you are living quite alone and that you commend such a life?”

“That is so, Lord.”

“In what way do you live and commend?”

“I enter the village alone, I return alone, I sit alone and walk alone.”

“That is living alone, it is true, Thera. But I will tell you a way of bringing to perfection the solitary life. When the past is put away, when the future is given up and when there is no craving and desire in the present, then the solitary life has been perfected in full.”

S.II,283

359. நீங்கள் கீழ்கண்டவாறு நினைத்துக் கொண்டு உங்களுக்குப் பயிற்சி அளித்துக்கொள்ள வேண்டும்: 'நமக்கு உடை, உணவு, இருப்பிடம், மருந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாம் மன நிறைவுடன் வாழவேண்டும். கிடைத்தவையுடன் திருப்தியுடன் இருப்போம். அவை கிடைப்பதற்கு கண்ணியமற்ற செயலில் ஈடுபடமாட்டோம். நமக்கு உடையோ, உணவோ அல்லது அப்படிப்பட்ட பொருட்களோ கிடைக்கவில்லை என்றால் நாம் கலங்கத் தேவையில்லை. அப்படி அப்பொருட்கள் கிடைத்துவிட்டாலும் அவற்றுடன் ஒட்டிக் கொள்ளவோ மோகங் கொள்ளவோ அவசியம் இல்லை. அவைகளைப் பெறவேண்டி நாம் எந்தத் தவறுகளும் செய்யக்கூடாது. அவைகளிலிருக்கும் ஆபத்தை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அறிவுடன் செயலாற்ற வேண்டும்.' இப்படித்தான் உங்களுக்கே நீங்கள் பயிற்சி அளித்துக் கொள்ள வேண்டும்.

You should train yourselves like this, thinking: ‘We will be contended with whatever robes, food, shelter or medicine we get. We will be contented with what we get and do nothing unseemly in order to get these things. If we are not able to get robes, food and so on, we will not be perturbed, and if we do get them we will use them without clinging and infatuation, doing no wrong in order to get them, seeing the danger in them and being wise to escaping from it.’ This is how you should train yourselves.

S.II,194-5

360. இல்வாழ்க்கையிலிருந்து துறவு வாழ்க்கைக்கு

நான் சென்றதிலிருந்து

நான் இதுபோன்ற மரியாதைக்குறைவான அல்லது வெறுக்கத் தக்க

எண்ணங்களை எண்ணியதில்லை:

'அவர்கள் கொல்லப்படட்டும். அவர்களை வெட்டிக் கொலை செய்யட்டும்

அவர்கள் துன்பத்தை அனுபவிக்கட்டும்.'

இது போன்ற தீய எண்ணங்கள்

என் மனதில் வெகுநாட்களாகக் குறுக்கிட்டதேயில்லை.

அதற்கு மாறாக, எல்லையற்ற நல்ல வளர்ச்சியடைந்த

முறையான வழியில் பயிற்சி பெற்று

புத்த பெருமான் போதித்தபடி, அன்பான எண்ணங்கள்

என் மனதில் தோன்றியிருக்கின்றன.

நான் எல்லோருக்கும் நண்பன். எல்லோருக்கும் உதவுபவன்,

எல்லாப் பிராணிகளுக்கும் இரக்கம் காட்டுபவன்.

அன்பு நிறைந்த ஓர் உள்ளத்தை உருவாக்கி

எப்பொழுதும் தொல்லையின்மையால் மகிழ்ச்சியாக வாழ்பவன்.

என் உள்ளத்தை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறேன்

அதை அசையாமல், அசைக்க முடியாமல் வைத்திருக்கிறேன்.

நான் புனிதமான மன நிலையை வளர்த்துக் கொள்கிறேன்.

தீயவர்களால் இவை பயிர்ச்சி செய்யப் பட்டதல்ல.

Since I went forth

From home into homelessness

I have never been aware of having

Any ignoble or hateful thoughts, such as:

‘May they be killed. May they be slaughtered.

May they come to harm.’

Such thoughts have not crossed my mind

For a long time.

On the contrary, I am aware of thoughts of love,

Infinite and well-developed,

Practiced in due order

As taught by the Buddha.

I am a friend to all, a helper to all,

I am sympathetic to all beings.

I develop a mind full of love

And delight always in harmlessness.

I gladden my mind

I make it immovable and unshakable.

I develop the divine states

Not cultivated by evil people.

Th.645-649*

361. ஒருவனது உரையாடல்களிலிருந்து அவன் ஒரு பொருளைப் பற்றி விவாதிக்கத் தகுதி உள்ளவனா, அற்றவனா என்று புரிந்து கொள்ளலாம். ஒருவனைக் கேள்வி கேட்டோமேயானால் அக்கேள்வியை அவன் தவிர்த்து விட்டு, பேச்சை மாற்றினால், கோபம் காட்டினால், பகைமை காட்டினால் அல்லது சிடுசிடுப்பான முகத்துடன் இருந்தால் அவன் எதைபற்றியும் பேசுவதற்குத் தகுதியற்றவன். ஒருவன் இவை எவற்றையும் செய்யாவிட்டால் அவன் விவாதிக்கத் தக்கவன்.

மறுபடியும் ஒருவனின் உரையாடல்களிலிருந்து அவன் ஒரு பொருளைப் பற்றி விவாதிக்கத் தகுதி உள்ளவனா, இல்லையா என்று புரிந்து கொள்ளலாம். அவனைக் கேள்வி கேட்டால், அக்கேள்வியை அலட்சியப் படுத்திவிட்டுக் கேள்வி கேட்டவரையே திருப்பிக் கேள்வி மேல் கேள்விகள் கேட்டு, அவரைப் பார்த்துச் சிரித்து அவரிடம் தவறுகள் கண்டுபிடிக்க முயற்சிப்பவன், ஒரு பொருளைப் பற்றி விவாதிக்கத் தகுதியற்றவன். மேற்கண்டவைகளை எவன் ஒருவன் செய்யவில்லையோ அவனே ஒரு பொருளைப் பற்றி விவாதிப்பதற்குப் பொருத்தமானவனாவான்.

It can be understood by a person’s conversation whether or not he is competent to discuss things. If, on being questioned, a person evades the question, changes the subject, displays anger, malice or sulkiness, then he is incompetent to discuss things. If a person does not do these things, then he is competent to discuss. Yet again, it can be understood by a person’s conversation whether or not he is competent to discuss. If, on being asked a question, a person loads scorn on a questioner, beats him down, laughs at him and tries to catch him up when he falters, then he is incompetent to discuss things. If a person does not do such things then he is competent to discuss things.

A.I,197

362. புத்த பெருமான் மீது நம்பிக்கை வைப்பவர்கள் சிறந்தவைகளின் மீது நம்பிக்கை வைத்தவர்களாவார்கள். சிறந்தவைகளின் மீது நம்பிக்கை வைத்தவர்களின் பலனும், விடையும் சிறப்பாகவே அமையும்.

They who have faith in the Buddha have faith in the best, and for those who have faith in the best the result is the best.

A.II,34

363. வெட்டிவேர் வாசனைக்கு உரிய வேராகக் கருதுவதைப் போல, சிகப்பு சந்தன மரம் வாசனை தரும் மரமாகக் கருதுவதைப் போல, மலர்களில் மல்லிகை சிறந்த மணம் தரும் மலராகக் கருதுவதைப் போல, கௌதம சித்தார்த்தர் என்னும் புத்த பெருமான் போதித்த போதனைகள், உலகிலுள்ள இன்றைய போதனைகளிலேயே மிக உயர்வானதாம்.

As black gum is pointed to as the best of fragrant roots, as red sandalwood is pointed to as the best of fragrant woods, as jasmine is pointed to as the best of fragrant flowers, even so, the exhortations of the good Gotama are the highest of all teachings today.

M.III,6*

364. பிறக்காத நிலை, உருவாகாத நிலை, ஆக்க முடியாத நிலை, கூட்டுப் பொருள்களால் உண்டாக்கப்படாத நிலை என்று ஒன்று இருக்கிறது. பிறக்காத நிலை, உருவாகாத நிலை, ஆக்கப்படாத நிலை, கூட்டுப் பொருள்களால் உண்டாக்கப்படாத நிலை என்ற ஒரு நிலை இல்லையென்றால் இந்தப் பிறப்பிலிருந்து, உருவான நிலையிலிருந்து, ஆக்கப் பட்ட நிலையிலிருந்து, கூட்டுப் பொருள்களால் உண்டாக்கப்பட்ட நிலையிலிருந்து தப்பிக்க முடியாது. ஆனால் பிறக்காத நிலை, உருவாகாத நிலை, ஆக்கப்படாத நிலை, கூட்டுப் பொருள்களால் உண்டாக்க முடியாத நிலை என்ற நிலை ஒன்று இருப்பதால், பிறப்பிலிருந்து, உருவான நிலையிலிருந்து, ஆக்கப் பட்ட நிலையிலிருந்து, கூட்டுப் பொருள்களால் உண்டாக்கப் பட்ட நிலையிலிருந்து தப்புவதற்கு ஒரு வழியிருக்கிறது.

There is an Unborn, an Unbecome, an Unmade, an Uncompounded. If there were not this Unborn, Unbecome, Unmade, Uncompounded, then there would be no escape from the born, the become, the made, the compounded. But as there is an Unborn, an Unbecome, an Unmade, an Uncompounded, then there is an escape from the born, the become, the made, the compounded.

Ud.80

365. அண்ணல் மாகந்தியாவைப் பார்த்துக் கூறினார்: "குருடனாகப் பிறந்த ஒரு மனிதனை நினைத்துக் கொள். அவனால் வண்ணங்களையோ, வடிவத்தையோ காண இயலாது. சமமானதையோ, சமமற்றதையோ பார்க்க இயலாது. தாரகைகள், சூரியன், சந்திரன் ஆகியவற்றையும் காண இயலாது. அவன் கறைபடியாத தூய்மையான வெள்ளை நிறத் துணியின் அழகைப் பற்றி மற்றவர்கள் கூறக் கேட்டு, அதைத் தேட முற்படலாம். ஆனால் எவனோ ஒரு ஏமாற்றுக்காரன் ஒரு பசை நிறைந்த அழுக்கான கீழ்த் தரமான துணியைக் கொடுத்து: 'என் இனிய மனிதனே, இந்தத் துணி மிக அழகானது. கறை படியாத தூய வெள்ளை நிறத்துணி' என்று கூறினால் அதனை நம்பி அவன் அத்துணியை அணிந்து கொள்ளலாம். பிறகு அவனுடைய நண்பர்களும் உறவினர்களும் அவனுக்கு ஒரு மருத்துவனையோ அல்லது ஒரு அறுவை சிகிச்சை நிபுணனையோ ஏற்பாடு செய்து திரவமருந்து, பேதி மருந்து, களிம்பு முதலியன கொடுத்து அவன் கண்களுக்குச் சிகிச்சையை ஆரம்பிக்கலாம். இந்தச் சிகிச்சைகளின் பலனாக அவன் பார்வை பெற்று நன்றாகப் பார்க்கக் கூடிய நிலை வரலாம். அப்பொழுது அந்த அழுக்கான துணியைப் பார்த்ததும், அதன் மீது வைத்திருந்த ஆசையும், பற்றும் போய்விடும். அன்றிலிருந்து அத்துணியை அவனுக்குக் கொடுத்தவனை நண்பனாகவே ஏற்றுக் கொள்ள மாட்டான். அவனை எதிரியாகவே கருதவும் கூடும். அவன் இவ்வாறு நினைக்கலாம்: 'இந்த மனிதனால் நீண்ட நாட்களுக்கு நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன். ஏமாந்திருக்கிறேன்.'

அதே போல நான் உங்களுக்கு அறத்தைப் போதித்து 'இது தான் அந்த நலம். அது தான் நிர்வாண நிலை,' என்று கூறினால் நீங்கள் நலத்தை பற்றித் தெரிந்து கொள்ளலாம், நிர்வாண நிலையைக் காணலாம். அத்தகைய தெளிந்த பார்வையினால் ஐந்து கந்தங்கள் மீதான ஆசையும், பற்றும் விடுபட்டு விடலாம். நீங்கள் கீழ்க்கண்டவாறு கூட எண்ணலாம்: 'நீண்ட நாட்களுக்கு என் மனதால் நான் ஏமாற்றப் பட்டிருக்கிறேன். உடல், நுகர்ச்சி, தோற்றுகை, சங்கற்பம், விஞ்ஞானம் ஆகிய ஐந்து கந்தங்கள் மீதான பற்றின் காரணமாக ஏமாந்திருக்கிறேன். இந்தப் பற்றின் காரணமாக நான் ஆக இருக்கிறேன். நான் ஆக இருப்பதால் பிறப்பு வருகிறது. பிறப்பின் காரணமாக மூப்பும், மரணமும், கவலை, துன்பம், வேதனை, ஏக்கம் எல்லாம் இடம் பெறுகின்றன. இந்த முழுத் துன்பக் கூட்டத்திற்கும் இதுதான் மூலமாகும்.'

அண்ணலிடம் மாகந்தியா கூறினார்: 'எனக்கு நல்ல கௌதமர் அறத்தைப் போதித்தால், இனிமேல் நான் குருடனாக வாழமாட்டேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.'

And the Lord said to Magandiya: “It is like a man born blind, who cannot see either color or shape, the even or the uneven, the stars, the sun or the moon. He might hear someone speaking of the pleasure of a lovely, unstained, pure white cloth, and start searching for one. But someone might deceive him by giving him a greasy, grimy, coarse robe and say: ‘My good man, this is lovely, unstained, pure white cloth.’ The blind man might take it and put it on. Then his friends and relations might get a physician or surgeon to make medicine for him, potions, purgatives, ointments and treatment for his eyes. Because of this he might regain his sight and restore his vision. Then the desire and attachment he had for that greasy robe would go, he would no longer consider the man who gave it to him a friend. He might even consider him an enemy, thinking: ‘For a long time I have been defrauded, deceived and cheated by this man.’ Even so, if I were to teach you Dhamma, saying: ‘This is that health, this is that Nirvana,’ you might come to know health, you might see Nirvana. With the arising of that vision, the desire and attachment you had for the five clinging aggregates might go. You might even think: ‘For a long time I have been defrauded, deceived and cheated by the mind, by clinging to body, feeling, perception, mental constructs and consciousness. Conditioned by this clinging there was becoming; conditioned by becoming there was birth, conditioned by birth, old age, dying, grief, sorrow, suffering, lamentation and despair came into being. This is the origin of this whole mass of suffering.’ And Magandiya said to the Lord: “I have confidence that if the good Gotama were to teach me Dhamma, I could rise from my seat no longer blind.”

M.I,511