தம்மபதம் - தண்டணை

10. தண்ட வர்க்கம் - தண்டணை

DANDA VAGGA - The Rod

129-130

எல்லோரும் தண்டனைக்கு அஞ்சுகிறார்கள். எல்லோரும் மரணத்தை அஞ்சுகிறார்கள். மற்ற உயிர்களையும் தம்முயிர் போலவே கருதி, கொல்லாமலும் கொலைக்கு உடன் படாமலும் இருப்பாராக.

All tremble at the rod, all are fearful of death. Drawing the parallel to yourself, neither kill nor get others to kill.

எல்லோரும் தண்டனைக்கு அஞ்சுகிறார்கள். எல்லோருக்கும் வாழ்க்கை இனிமையானது.

மற்ற உயிர்களையும் உன் உயிரோடு ஒப்பிட்டு நோக்கி ஒன்றையும் கொல்லாதே; கொல்விக்கவும் உடன்படாதே.

All tremble at the rod, all hold their life dear. Drawing the parallel to yourself, neither kill nor get others to kill.

131-132

இன்பமாக வாழ விரும்புகிற உயிர்களை ஒருவர், தன் சுகத்தை மட்டும் விரும்பித் தண்டித்துத் துன்புறுத்தினால், அப்படிப்பட்டவர் இறந்த பிறகு சுகம்பெற மாட்டார்.

Whoever takes a rod to harm living beings desiring ease, when he himself is looking for ease, will meet with no ease after death.

சுகமாயிருக்க விரும்புகிற ஏனைய உயிர்களை ஒருவர், தம்முடைய சொந்த சுகத்தின் பொருட்டு, தண்டித்துத் துன்புறுத்தாது இருப்பாரானால், அவர் இறந்த பிறகும் சந்தோஷத்தை அடைகிறார்.

Whoever doesn't take a rod to harm living beings desiring ease, when he himself is looking for ease, will meet with ease after death.

133

யாரிடத்திலும் கடுஞ்சொற்களைப் பேசாதே. கடுஞ்சொல் பேசியவர் கடுஞ்சொற்களால் தாக்கப்படுவர்; சுடு சொற்கள், உண்மையாகவே, துன்பந் தருகின்றன. அடிக்கு அடி திருப்பி அடிக்கப்படும்.

Speak harshly to no one, or the words will be thrown right back at you. Contentious talk is painful, for you get struck by rods in return.

134

உடையுண்ட வெண்கலமணி ஓசையற்றிப்பது போல, நீ உன்னை அடக்கிக்கொண்டால்,

நிர்வாண மோக்ஷத்தை அடைந்தவன் ஆவாய். ஏனென்றால் வினைசெய்யும் தன்மை உன்னிடம் இல்லை.

If, like a flattened metal pot you don't resound, you've attained an Unbinding; in you there's found no contention.

135

இடையன் கோல்கொண்டு ஆனிரைகளைப் புற்றரைக்கு ஓட்டுவது போல, நரை திரையும் சாக்காடும் மனித ஆயுளை ஓட்டுகின்றன.

As a cowherd with a rod drives cows to the field, so aging and death drive the life of living beings.

136

ஆயினும் மூடன், தான் செய்யும் காரியத்தின் தன்மையை உணராமலே, தீயகாரியங்களைச் செய்கிறான். தன்னைத்தானே எரித்துக் கொள்வது போல, அவன் தன் செய்கையாலேயே துக்கத்தினால் எரிக்கப் படுகிறான்.

When doing evil deeds, the fool is oblivious. The dullard is tormented by his own deeds, as if burned by a fire.

137-140

தீமையற்றவரும் சாத்வீகமாக உள்ளவரும் ஆகிய நல்லவரைத் தண்டித்துத் துன்புறுத்து கிறவர்கள், இந்தப் பத்து நிலைகளை அடைவார்கள்:-

Whoever, with a rod, harasses an innocent man, unarmed, quickly falls into any of ten things:

அவர்கள் மிக்க வேதனையையாவது, நஷ்டத்தை யாவது, தேகத்துன்பத்தையாவது, துன்பத்தைத் தரும் நோயையாவது, மனமாறாட்டத்தையாவது; அரச தண்டனையையாவது, சுடுவது போன்ற நிந்தனையையாவது, சுற்றத்தாரை இழந்து விடுவதையாவது, பொருள் அழிவையாவது; தீப்பிடித்து வீடு எரிந்து போவதையாவது அடையப் பெறுவார்கள். மேலும் இறந்த பின்னர் அவர்கள் நரகத்தில் சென்று பிறப்பார்கள்.

Harsh pains, devastation, a broken body, grave illness, mental derangement, trouble with the government, violent slander, relatives lost, property dissolved, houses burned down. At the break-up of the body this one with no discernment, reappears in hell.

141-142

அம்மனமாகத் திரிந்தாலும், சடைத்தலையாக இருந்தாலும், அழுக்குடம்புடன் இருந்தாலும்,

பட்டினி நோன்பு நோற்றாலும், வெற்றுத்தரையில் படுத்தாலும், அழுக்கிலும் தூசியாலும் புரண்டாலும், காலில் நின்று தவம் செய்தாலும், இவர்கள் தமது ஐயங்களை நீக்கிகொள்ளாத வராயிருந்தால், இவை யாவும் அவரைத் தூய்மைப்படுத்த மாட்டா.

Neither nakedness nor matted hair nor mud nor the refusal of food nor sleeping on the bare ground nor dust and dirt nor squatting austerities cleanses the mortal who's not gone beyond doubt.

நல்லுடை உடித்தியவராக இருந்தாலும் (உடம்பை வருத்தி தவம் செய்யாமல் இருந்தாலும்)

அவர், சாந்தமும், அமைதியும், அடக்கமும், தூய்மையும் உடையவராய், உயிர்களைத் துன்புறுத்தாமல் இருப்பாரானால், அவரே பிராமணர் ஆவார்; (தீமைகளை விலக்கினவர்) அவரே சமணர் ஆவார்; (தீமைகளை வரவொட்டாமல் தடுத்தவர்) அவரே பிக்கு ஆவார்; (தீமைகளை நீக்கியும், தண்டித்தும், ஒழித்தும் விட்டவர் பிக்கு)

If, though adorned, one lives in tune with the chaste life — calmed, tamed, and assured — having put down the rod towards all beings, he's a contemplative a Brahman, a monk.

143

நன்கு வளர்க்கப்பட்ட குதிரையானது தன்மீது குறடா அடிவிழாதபடி நடந்து கொள்வது போல,

பழி பாவங்களுக்கு அஞ்சி நிந்தனைக்கு நாணி நல்வழியில் ஒழுகுவோர் மிகச் சிலர்.

Who in the world is a man constrained by conscience, who awakens to censure like a fine stallion to the whip?

144

குறடாவினால் அடியுண்ட நல்ல குதிரையப் போன்று, உற்சாகமாகவும் குற்றத்தைத் திருத்திக் கொள்பவனாகவும் இரு. மன உறுதியினாலும், தர்மத்தை ஆராய்வதினாலும், ஞானம் ஒழுக்கங்களை உடைமையினாலும் விழிப்புடன் இருப்பதினாலும் அளவற்ற துக்கங்களைப் போக்குவாயாக.

Like a fine stallion struck with a whip, be ardent and chastened. Through conviction virtue, persistence,

concentration, judgment, consummate in knowledge and conduct, mindful, you'll abandon this not-insignificant pain.

145

நீர்ப் பாசனக்காரர் நீரைச் செலுத்துகிறார்கள்; அம்புகளைச்செய்வோர் அம்புகளை அமைக் கிறார்கள்; தச்சர் மரங்களை வளைக்கிறார்கள். நல்லவர்கள் தம்மைத் தாமே அடக்குகிறார்கள்.

Irrigators guide the water. Fletchers shape the arrow shaft. Carpenters shape the wood. Those of good practices control themselves.