உபேக்கை தியானம்
உபேக்கை தியானம் (சம மன நிலை)
Upēkshā Bhāvanā
Equanimity meditation
ஆதாரம்: மஹாமெவ்நவ விகாரை (கனடா) துறவிகள் மொழிந்தது
Source: Monks at the Mahamevnawa Monastery, Markham, Canada.
English instructions follow Tamil translation
நாம் தினந்தோறும் சந்திக்கும் துன்பங்களையும் தொல்லைகளையும் கண்டு வருத்தப் படுகிறோம். இன்பமும் மகிழ்ச்சியும் தோன்றும் நேரங்களில் குதூகலிக்கின்றோம். இது போன்று வருந்தும், குதூகலப்படும் சமயங்களில் நாம் நொதுமலாக (விருப்புவெறுப்பில்லாமல்) இருப்பது உபேக்கையை வளர்த்துக் கொள்வதாகும். உபேக்கையைப் பயில்பவர், துன்புறும் போது புலம்புவதுமில்லை, இன்பம் நிகழும் போது குதூகலிப்பதுமில்லை. அவர்கள் இடுக்கணழியா (சம) மனநிலையோடு எல்லாவற்றையும் நுகர்கின்றனர். நாம் அனைவரும் எட்டு மாற்றங்களை வாழ்க்கையில் சமாளித்தே ஆக வேண்டும். இவற்றினால் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டுமானால் நாம் உபேக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த எட்டு மாற்றங்களாவன:
புகழ்ச்சி - இகழ்ச்சி;
கீர்த்தி - அவமானம்;
வெற்றி - தோல்வி;
இன்பம் - துன்பம்.
இந்த எட்டு நிலைகளாலும் ஈர்க்கப்படாமல் ஒரே மன நிலையோடு இவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும். இவை எட்டும் தூண்டில்கள் போல. அவற்றில் மாட்டிக் கொள்ளாமல் வாழ்வதே அறவாழ்வாகும்.
வாழ்க்கையில் நடைபெறக் கூடிய எட்டு மாற்றங்களால் வருந்தாமல் இருப்பதற்காகப் பாவனை (தியானம்) செய்து நாம் இந்த உபேக்கை என்ற பண்பை வளர்த்துக் கொள்ள முடியும்.
ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து இவ்வாறு நினைத்துக் கொள்ள வேண்டும்:
நான் இலாபம் அடையும்போது (அல்லது வெற்றி பெறும்போது) குதூகலப்படாமல் இருப்பேனாக.. நான் இழப்பு ஏற்படும்போது (அல்லது தோல்வியுறும்போது) துயரப்படாமல் இருப்பேனாக..
நான் புகழப்படும்போது குதூகலப்படாமல் இருப்பேனாக.. நான் இகழப்படும்போது துயரப்படாமல் இருப்பேனாக..
நான் கீர்த்தி பெறும்போது குதூகலப்படாமல் இருப்பேனாக.. நான் அவமானப்படும்போது வருந்தாமல் இருப்பேனாக..
நான் உடலின்பமுற்றதால் குதூகலப்படாமல் இருப்பேனாக.. நான் உடல் துன்பமுற்றதால் வருந்தாமல் இருப்பேனாக..
நான் மனம் இன்பமுற்றதால் குதூகலப்படாமல் இருப்பேனாக.. நான் மனம் துன்பமுற்றதால் வருந்தாமல் இருப்பேனாக..
நான் அமைதியாக இருப்பேனாக ...
இந்த வீட்டிலுள்ள அனைவரும்,
இலாபம் அடையும்போது (அல்லது வெற்றி பெறும்போது) குதூகலப்படாமல் இருப்பார்களாக.. இழப்பு ஏற்படும்போது (அல்லது தோல்வியுறும்போது) துயரப்படாமல் இருப்பார்களாக..
புகழப்படும்போது குதூகலப்படாமல் இருப்பார்களாக.. இகழப்படும்போது வருத்தப்படாமல் இருப்பார்களாக..
கீர்த்தி பெறும்போது குதூகலப்படாமல் இருப்பார்களாக.. அவமானப்படும்போது வருந்தாமல் இருப்பார்களாக..
உடல் இன்பம்பெறும்போது குதூகலப்படாமல் இருப்பார்களாக.. உடல் துன்பமுறும்போது வருந்தாமல் இருப்பார்களாக..
மனம் இன்பம் பெறும்போது குதூகலப்படாமல் இருப்பார்களாக.. மனம் துன்பமுறும்போது வருந்தாமல் இருப்பார்களாக..
இந்த வீட்டில் உள்ள அனைவரும் அமைதி காண்பார்களாக ...
பின் விரிவுபெறும் வட்டங்களாக அனைவருக்கும் இந்த நல்லெண்ணங்களைப் பரப்ப வேண்டும். கீழ் கண்ட அனைத்தையும் நினைத்து முடிக்க அரை மணி நேரம் பிடிக்கலாம். அதனால் கிடைக்கும் நேரத்திற்கேற்ப இதனைத் தக்கவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
நானும் இந்த ஊரில் வாழும் பிற உயிர்களும்...
நானும் இந்த மாநிலத்தில் வாழும் பிற உயிர்களும்....
நானும் இந்த நாட்டில் வாழும் பிற உயிர்களும்....
நானும் இந்த உலகில் வாழும் பிற உயிர்களும்....
நானும் பிற எல்லா உயிர்களும்,
இலாபத்தினால் (அல்லது வெற்றி பெற்றதால்) குதூகலப்படாமல் இருப்போமாக..
இழப்பினால் (அல்லது தோல்வியுற்றதால்) வருந்தாமல் இருப்போமாக..
புகழப்படுவதால் குதூகலப்படாமல் இருப்போமாக..
இகழப்படும்போது வருந்தாமல் இருப்போமாக..
கீர்த்தி பெற்றதால் குதூகலப்படாமல் இருப்போமாக..
அவமானப்பட்டதால் வருந்தாமல் இருப்போமாக..
உடல் இன்பம் பெற்றதால் குதூகலப்படாமல் இருப்போமாக..
உடல் துன்பமுற்றதால் வருந்தாமல் இருப்போமாக..
மனம் இன்பம் பெற்றதால் குதூகலப்படாமல் இருப்போமாக..
மனம் துன்பமுற்றதால் வருந்தாமல் இருப்போமாக..
நானும் பிற எல்லா உயிர்களும் அமைதி காண்போமாக ...
வடக்குத் திசையில் வாழும் எல்லா உயிர்களும்..
வடகிழக்குத் திசையில் வாழும் எல்லா உயிர்களும்..
கிழக்குத் திசையில் வாழும் எல்லா உயிர்களும்..
தென்கிழக்குத் திசையில் வாழும் எல்லா உயிர்களும்..
தெற்குத் திசையில் வாழும் எல்லா உயிர்களும்..
தென்மேற்குத் திசையில் வாழும் எல்லா உயிர்களும்..
மேற்குத் திசையில் வாழும் எல்லா உயிர்களும்..
வடமேற்குத் திசையில் வாழும் எல்லா உயிர்களும்..
மேல் திசையில் வாழும் எல்லா உயிர்களும்..
கீழ்த் திசையில் வாழும் எல்லா உயிர்களும்..
அனைத்துத் திசைகளிலும் வாழும் எல்லா உயிர்களும் அமைதி காண்பார்களாக.
In order to not get upset from the eight vicissitudes of life…
We sorrow when we face of our everyday sufferings and troubles. And we joy when we face the moments of pleasure and happiness. When we behave indifferently in front of such pleasure/joy or sufferings/troubles it is equanimity that we are cultivating. One who practices equanimity will not mourn when sufferings, troubles find that person. He will not get excited when pleasure, happiness find him. He/she will feel all with an indifferent mentality. What we all have to face is the eight vicissitudes of life. One shall cultivate equanimity in order to not to worry or sorrow from the eight vicissitudes of life.
The way to cultivate Upekkhā meditation…
May I not be joyful because of gain… May I not be sorrowful because of loss… May I not be joyful because of praise… May I not be sorrowful because of dishonor… May I not be happy because of fame… May I not be sorrowful because of disgrace… May I not be happy by bodily pleasure… May I not be sorrowful by bodily suffering… May I not be happy by mental pleasure… May I not be sorrowful by mental suffering… May I be peaceful…
May I not be delighted on gain.
May I not be grieved on loss.
May I not be delighted on praise.
May I not be grieved on blame.
May I not be delighted on fame.
May I not be grieved on disrepute.
May I not be delighted on bodily pleasures.
May I not be grieved on bodily displeasures.
May I not be delighted on emotional pleasures.
May I not be grieved on emotional displeasures.
May I live in peace.
May all beings in this house
not be delighted on gain.
not be grieved on loss.
not be delighted on praise.
not be grieved on blame.
not be delighted on fame.
not be grieved on disrepute.
not be delighted on bodily pleasures.
not be grieved on bodily displeasures.
not be delighted on emotional pleasures.
not be grieved on emotional displeasures.
May all beings in this house live in peace.
May I and all other beings in this city…
May I and all other beings in this province/state…
May I and all other beings in this country…
May I and all other beings in this world…
May I and all other beings…
May all beings in north…
May all beings in northeast…
May all beings in east…
May all beings in southeast…
May all beings in south…
May all beings in southwest…
May all beings in west…
May all beings in northwest…
May all beings in up direction…
May all beings in down direction…