அஜீத மாணவ பூச்சா Ajita-manava-puccha

சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home

Sn 5.1

அஜீத மாணவ பூச்சா: அஜீதரின் கேள்விகள்

Ajita-manava-puccha: Ajita's Questions

Translated from the Pali by: John D. Ireland

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: ஜான் D. அயர்லாந்து

* * *

[போற்றுதற்குரிய அஜீதர்:]

"உலகம் எதனால் சூழப் பட்டுள்ளது?

எதன் காரணமாக அது தெரியப்படவில்லை (பிரகாசிப்பதில்லை)? எதன் விளைவாக அது கறை படிந்துள்ளது? அதன் பெரும் ஆபத்தும் பயமும் என்ன?"

[The Venerable Ajita:]

"By what is the world enveloped? Because of what is it not known? With what do you say it is soiled? What is its great fear?"

[பகவர்:]

"உலகம் அறியாமையால் சூழப்பட்டுள்ளது, அஜீதா. தவறான திசையில் செலுத்தப்படும் விருப்பமும், கஞ்சத்தனமும், விவேகமற்றிருப்பதும் அதன் உண்மை நிலையை மறைத்து விடுகின்றன. ஏக்கங்கள் அதனைக் கறைப் படுத்துகின்றன. அதன் பெரும் அபாயமும், பயமும் துக்கம் – அழுத்தம்தான்.

[The Lord:]

"The world is enveloped by ignorance, Ajita. Because of wrongly directed desire and heedlessness it is not known (as it really is). It is soiled by longings and its great fear is suffering."

[அஜீதர்:]

"ஓடைகள் எல்லா இடங்களிலும் ஓடுகின்றன.[1] ஓடைகளைத் தடை செய்வது எவை? அவற்றை எப்படிக் கட்டுப் படுத்துவது? இறுதியில் அவற்றை எப்படித் தடுத்து நிறுத்துவது?"

[Ajita:]

"Everywhere flow the streams.[1] What is the obstruction for the streams, tell me the restricting of them, by what are they cut off?"

[பகவர்:]

"எந்த ஓடைகளானாலும், கடைப்பிடியே அவற்றைத் தடுத்துக் கட்டுப் படுத்துகின்றது. விவேகம் அவற்றை நிறுத்துகிறது."

[The Lord:]

"Whatever streams are in the world, it is mindfulness that obstructs them and restricts them, and by wisdom they are cut off."

[அஜீதர்:]

" விவேகமும், கடைப்பிடியும் தான்.

ஐயா, இப்போது அரு - உரு (அருவம் - மனம், உருவம் - உடல்)) இவற்றை விளக்குங்கள்: அது எப்போது முடிவுறும்?"

[Ajita:]

"It is just wisdom and mindfulness. Now mind-and-body, sir, explain this: where does it cease?"

[பகவர்:]

"உனது கேள்விக்குப் பதில் தருகிறேன் அஜீதா: உணர்வுகளின் முடிவில் தான் அரு-உரு முழுமையாக முடிகிறது,." [2]

[The Lord:]

"This question you have asked, Ajita, I will answer for you: where mind-and-body completely cease. By the cessation of consciousness they cease."[2]

[அஜீதர்:]

"முழுமையாகத் தம்மத்தை அறிந்தவர்கள், பயிற்சி மேற்கொண்டு வருபவர்கள், இங்குள்ள மற்றவர்கள், [3] இவர்களின் நடத்தைக்கான விதிமுறைகளை விளக்குங்கள்."

[Ajita:]

"Those who have fully understood the Dhamma, those who are training and the other individuals here,[3] explain their (rule of) conduct."

[பகவர்:]

"புலன் இன்பங்களின் மேல் வேட்கை கொள்ளாமல், தூய்மையான, அமைதியான [4] உள்ளத்துடன், ஒரு பிக்கு, கடைப்பிடியோடு துறவு செல்ல வேண்டும். எல்லாச் சூழலிலும் அவர் திறமையுடன் இருக்க வேண்டும்."

[The Lord:]

"Not craving for sensual pleasures and with a mind that is pure and tranquil[4] a bhikkhu should mindfully go forth, skillful in all situations."

* * *

விளக்கம்:

Notes:

1. "The streams" are cravings flowing out towards pleasurable and desirable objects in the world.

"ஓடைகள்" உலகில் இன்பமான செயல்கள் மீதும், ஆசையைத் தூண்டும் பொருட்களின் மீதும் உண்டாகும் வேட்கைகள்.

According to the Culaniddesa (Nd.II), the streams that "flow every which way" are the streams of craving, views, conceit, defilement, corruption, and ignorance that flow out the six sense media. The first two lines in Ven. Ajita's second set of questions (the first half-line in the Pali) is identical to the first half-line in Dhp. 340. [Thanissaro Bhikku]

ஓடைகள் என்பது வேட்கை, கருத்துக்கள், அகம்பாவம், கிலேசங்கள், அழுகல், அறியாமை ஆகிய ஆறு இந்திரியங்கள் வழியாக ஓடும் ஓட்டம்.

அஜீதரின் இரண்டாம் கேள்வியின் முதல் பகுதிக்கும் தம்மபதம் 340 க்கும் ஒற்றுமை உண்டு.

2. This question and answer refers to the doctrine of dependent-arising (paticca-samuppada). Where rebirth-consciousness (pati-sandhi-vinnana) does not arise there is no establishment of an individual (mind-and-body, namarupa) in a realm of existence, nor the consequent appearance of old age and death and the other sufferings inherent in life.

இந்தக் கேள்வியும் பதிலும், சார்பில் தோற்றம் (படச்ச சமுப்பாத) என்ற கோட்பாடு சம்பந்தப்பட்டது தான். உணர்ச்சி மீள அருவுரு மீளும்... அதனால் பிறப்புப் பிணி மூப்புச் சாக்காடு அவலம், அரற்றுக் கவலை, கையாறு என்றிக் கடையில் துன்பம் எல்லாம் மீளும். (மணிமேகலை 30)

3. "Those who have fully understood" are arahants (perfected ones) who have reached the highest goal. "Those who are training" are those noble beings (ariya) who are working towards and are assured of that goal. The other individuals are ordinary beings (puthujjana) who have not yet reached assurance.

"முழுமையாகத் தம்மத்தை அறிந்தவர்கள்" மேன்மையான நோக்கத்தை அடைந்த அருகதர்கள் (முழுமையானவர்கள், ஞானிகள்).

"பயிற்சி மேற்கொண்டுவருபவர்கள்" அந்த உன்னத நோக்கத்தை அடைய முயற்சி செய்யும் மேன்மையானோர். இவர்களும் கண்டிப்பாக நோக்கத்தை அடைந்து விடுவார்கள். (நான்கு படிகளில் முதல் படியை எட்டி விட்டவர்கள் இவர்கள்).

"மற்றவர்" சாதாரண மனிதர் (இல்லற மக்கள்). இவர்கள் இன்னமும் முதல் படியையே அடையவில்லை. (எனவே மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் மறுமையில் கீழ் உலகம் செல்லவும் வாய்ப்பு உண்டு.)

4. The word anavilo means pure, clear, tranquil, unagitated, unmuddied, etc. In the Dhammapada v. 82, the wise are compared to a deep lake with this quality.

பாலி மொழியில் 'அனவிளோ' என்றால் தூய்மையான, அமைதியான, களங்காத, குழப்பமடையாத..என்று பொருள். தம்மபதம் 82 - இல் விவேகமுள்ளவர்கள் இந்தப் பண்புகளைக் கொண்ட ஆழமான ஏரியோடு ஒப்பிடப் படுகின்றனர்.

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

©1983 Buddhist Publication Society See details English Source

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.