தம்மபதம் - துறவிகள்

25. பிக்கு வர்க்கம் - துறவிகள்

BHIKKHU VAGGA - MONKS

360-361

கண்ணை அடக்குவது நல்லது. காதை அடக்குவது நல்லது. மூக்கை அடக்குவது நல்லது. நாவை அடக்குவது நல்லது. உடம்பை அடக்குவது நல்லது. வாக்கை அடக்குவது நல்லது. எல்லாவற்றிலும் அடக்கமாக இருக்கிற பிக்குவானவர், எல்லாத் துக்கங்களிலிருந்தும் நீங்குகிறார்.

Restraint with the eye is good, good is restraint with the ear. Restraint with the nose is good, good is restraint with the tongue. Restraint with the body is good, good is restraint with speech. Restraint with the heart is good, good is restraint everywhere. A monk everywhere restrained is released from all suffering and stress.

362

கைகால்களையும் வாக்கையும் அடக்கி, எல்லாவற்றிலும் அடக்கத்தை உடையவராய்,

சமாதியில் (தியானத்தில்) இன்பம் அடைந்து, திருப்தியாகவும் அமைதியாகவும் தனிமை யாகவும் இருக்கிறவர் உண்மையான பிக்கு ஆவர்.

Hands restrained, feet restrained speech restrained, supremely restrained — delighting in what is inward,

content, centered, alone: he's what they call a monk.

363

நாவடக்கம் உள்ளவராய், இனிய சொற்களைப் பேசுகிறவராய், அடக்கமுள்ளவராய்,

தர்மோபதேசங்களைப் பாடம் சொல்லி உரைகூறுகிற பிக்குவின் வார்த்தைகள் இனிமையைத் தருகின்றன.

A monk restrained in his speaking, giving counsel unruffled, declaring the message and meaning: sweet is his speech.

364

தர்மோபதேசப்படி நடந்து, தர்மோபதேசத்தில் மனம் மகிழ்ந்து, தர்மோபதேசத்தை என்னேரமும் சிந்தித்துக் கொண்டு, தர்மத்தை மறவாமல் இருக்கிற பிக்கு, உண்மையில் தர்மத்திலிருந்து தவற மாட்டார்.

Dhamma his dwelling, Dhamma his delight, a monk pondering Dhamma, calling Dhamma to mind, does not fall away from true Dhamma.

365-366

பிக்குவாக உள்ள ஒருவர் தமது சொந்த லாபத்தை அலட்சியமாக எண்ணக்கூடாது. பிறருடைய ஊதியத்தைக் கண்டு பொறாமைப்படவும் கூடாது. மற்றவருடைய ஊதியத்தைக் கண்டு பொறாமைப் படுகிறவர் சமாதி (மன அடக்கம்) பெறமாட்டார்.

Gains: don't treat your own with scorn, don't go coveting those of others. A monk who covets those of others

attains no concentration.

பிக்கு ஒருவர், தன்னுடைய ஊதியம் சிறிதாக இருந்தாலும் அதை இகழாமல் இருப்பாரானால்,

தேவர்களும் அவரைப் புகழ்கிறார்கள். ஏனென்றால் அவருடைய வாழ்க்கை தூய்மையான தாகவும் ஊக்கமுள்ளதாகவும் இருக்கிறது.

Even if he gets next to nothing, he doesn't treat his gains with scorn. Living purely, untiring: he's the one that the devas praise.

367

எவ்விதத்திலும் அருவுருவை (நாமரூபங்களை) "என்னுடையது" என்று கருதாமலும் அவை உண்மையற்றவை என்று கருதி வருத்தம் அடையாமலும் இருக்கிற ஒருவர் பிக்கு எனப் படுவார்.

For whom, in name and form in every way, there's no sense of mine, and who doesn't grieve for what's not: he's deservedly called a monk.

368

மைத்ரீ பாவனை செய்து, புத்தருடைய உபதேசங்களில் இன்பம் அடைகிற பிக்கு ஆனவர்

எல்லாத் துன்பங்களிலும் நீங்கி சாந்தியாகிய உயர்ந்த நிலையை அடைகிறார்.

Dwelling in kindness, a monk with faith in the Awakened One's teaching, would attain the good state, the peaceful state: stilling-of-fabrications ease.

369

ஓ பிக்குவே! கப்பல் காலியாக இருக்கிறது. நீ ஓடத்தைச் செலுத்தச் சுலபமா யிருக்கிறது.

ராகத்துவேஷங்களை அறுத்து நிர்வாண மோக்ஷத்தைப் பெறுவாயாக.

Monk, bail out this boat. It will take you lightly when bailed. Having cut through passion, aversion, you go from there to Unbinding.

370

ஐம்புலன்களையும் ஐந்து ஸஞ்ஞோஜனங்களையும் நீக்கி, (சிரத்தை, வீரியம், ஸ்திதி, சமாதி, பஞ்ஞா என்கிற) பஞ்சேந்திரியங்களை வளர்ப்பாயாக. இப்படிப்பட்ட பிக்கு ஆனவர், பிறவிக் கடலைக் கடந்தவர் என்று சொல்லப்படுகிறார்.

Cut through five, let go of five, and develop five above all. A monk gone past five attachments is said to have crossed the flood.

371

பிக்குவே! சிந்தித்துப்பார். அசட்டையாயிராதே. காம எண்ணங்களில் உன் மனத்தைச் சுழல விடாதே. அசட்டைத்தனத்தினாலே, பழுக்கக் காய்ந்த நெருப்பைக்கக்கும் இரும்பு உருண்டை களை விழுங்காதே. அது சுடும்போது 'இது துக்கம்' என்று கதறாதே.

Practice jhana, monk, and don't be heedless. Don't take your mind roaming in sensual strands. Don't swallow — heedless — the ball of iron aflame. Don't burn & complain: 'This is pain.'

372

ஞானம் (அறிவு) இல்லாதவருக்குத் தியானம் (மன அடக்கம்) இல்லை. தியானம் இல்லா

வருக்கு ஞானம் இல்லை. யார் தியானமும் ஞானமும் உள்ளவரோ அவர், மோக்ஷத்தின் அருகில் இருக்கிறார்.

There's no jhana for one with no discernment, no discernment for one with no jhana. But one with both jhana and discernment: he's on the verge of Unbinding.

373-374

ஏகாந்த இடத்தில் வசித்து, மன அமைதி பெற்று, உலகத்தின் உண்மை நிலையைக் காண்கிற,

நற்காட்சி அடைந்துள்ள பிக்கு ஆனவர், மனிதரால் காண முடியாத இன்பத்தை அடைகிறார்.

A monk with his mind at peace, going into an empty dwelling, clearly seeing the Dhamma aright: his delight is more than human.

ஸ்கந்தங்களின் வளர்ச்சி, வீழ்ச்சிகளை எவ்வளவு நன்றாகச் சிந்தித்துப் பார்க்கிறாரோ அவ்வளவு அதிகமாக மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அடைகிறார். இதையறிந்தவர் பிறவாத் தன்மை அடைகிறார்.

However it is, however it is he touches the arising-and-passing of aggregates: he gains rapture and joy: that, for those who know it, is deathless, the Deathless.

375-376

பிக்குகளுக்கு அடிப்படையான வாய்மொழி இதுவாகும்: இந்திரியங்களை அடக்கு. திருப்தியாக இரு. (வினயபிடகத்தில் கூறப்பட்ட) பாதிமோக்க ஒழுக்கங்களைத் தவறாமல் நடத்து, ஊக்கத் தோடு இரு. தூய வாழ்க்கையுள்ளவரோடு நட்புக் கொள். வினயமாகவும் அன்பாகவும் இருக் கிறவர், மன மகிழ்ச்சியோடு துக்கத்தை நீக்குகிறார்.

Here the first things for a discerning monk are guarding the senses, contentment, restraint in line with the Patimokkha. He should associate with admirable friends. Living purely, untiring, hospitable by habit, skilled in his conduct, gaining a manifold joy, he will put an end to suffering and stress.

377

ஓ பிக்குகளே! மல்லிகைச் செடி வாடிய பூவை உதிர்த்து விடுவது போல, ஆசையையும் வெறுப் பையும் (ராகத்து வேஷங்களை) உதிர்த்து விடுங்கள்.

Shed passion and aversion, monks — as a jasmine would, its withered flowers.

378

உடல் அடக்கம், வாக்கு அடக்கம், மன அடக்கம் உடையவராய், இவற்றில் நன்கு பயின்று பாவங்களை நீக்கினவர் யாரோ அவர் "உபசந்தர்" என்று கூறப்படுகிறார்.

Calmed in body, calmed in speech, well-centered and calm, having disgorged the baits of the world, a monk is called thoroughly calmed.

379

பிக்குகளே! "நான்" என்கிறதை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். அதை நீங்களே நீக்குங்கள். பிறகு, நீங்களே உங்களைக் காத்துக்கொண்டு சுகமாக வாழ்வீர்கள்.

You yourself should reprove yourself, should examine yourself. As a self-guarded monk with guarded self, mind ful, you dwell at ease.

380

ஒருவர் தானே தனக்குப் புகலிடமாம். ஒருவர் தானே தனக்கு எதிர்கால வாழ்க்கையை நியமிக்கிறார். ஆகையினாலே, குதிரை வாணிகர் உயர்ந்த இனத்துக் குதிரையை அடக்குவது போல, நீ உன்னிடமுள்ள "நான்" என்பதை அடக்கு.

Your own self is your own mainstay. Your own self is your own guide. Therefore you should watch over yourself — as a trader, a fine steed.

381

மன உவகையோடு புத்தருடைய தர்மத்தில் உறுதியான நம்பிக்கை உடைய பிக்குவானவர்,

துக்கங்களை அறுத்து இன்பமான சாந்தி நிலையை அடைகிறார்.

A monk with a manifold joy, with faith in the Awakened One's teaching, would attain the good state, the peaceful state: stilling-of-fabrications ease.

382

புத்தருடைய உபதேசங்களில் மனத்தைச் செலுத்துகிற இளைய பிக்குவானவர், மேகத் திலிருந்து வெளிப்பட்ட வெண்ணிலாவைப் போன்று, உலகத்தில் ஒளிவிட்டு விளங்குகிறார்.

A young monk who strives in the Awakened One's teaching, brightens the world like the moon set free from a cloud.