மஹா பரிநிப்பாண சூத்திரம் 2
கப்பு முன்னுரை I II III IV V VI
மஹா பரிநிப்பாண சூத்திரம்
அத்தியாயம் இரண்டு - வைசாலிக்குச் சென்றது
The Great Total Unbinding Discourse
Chapter 2 - The Journey to Vesali
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்கள்
போ. வஜ்ஜிரா மற்றும் பிரான்ஸிஸ் ஸ்டோரி
translated from the Pali by
Sister Vajira & Francis Story
லாவோஸ் Wat Xieng Thong, Laos படம் ஆதாரம்
நான்கு மேன்மையான உண்மைகள்
The Four Noble Truths
2.1. பகவர் ஆனந்தரிடம் இவ்வாறு கூறினார்: "வா, ஆனந்தா, நாம் கோடிகாமத்திற்குச் (Kotigama) செல்வோம்."
"அப்படியே ஆகட்டும், அண்ணலே."
பின் ஒரு பெரும் பிக்கு சமூகத்துடன்பகவர் கோடிகாமத்தில் தங்கலானார்.
2.2. பின் பகவர் பிக்குகளுக்கு இவ்வாறு கூறினார்: "பிக்குகளே, நான்கு மேன்மையான உண்மைகளைத் தெளிவாக்கிக் கொள்ளாததால் பிறப்பு, இறப்பு என்ற சம்ஸார சுழலில் நீங்களும் நானும் ஒரு நீண்ட பயனம் மேற்கொண்டுள்ளோம். அந்த நான்கு உண்மைகள் எவை?
துக்கம்; துக்க உற்பத்தி; துக்க நிவாரணம்; மற்றும் துக்க நிவாரண மார்க்கம்.
ஆனால், இப்போது இவற்றை நாம் அறிந்து தெளிவாக்கிக் கொண்டுள்ளோம். தோற்றத்திற்கான விருப்பம் நீக்கப் பட்டுள்ளது, பவத்திற்கான காரணங்கள் அழிக்கப் பட்டுள்ளன. மேலும் பவம் தோன்றுவதற்கில்லை. (பவம் என்பது உண்டாகும் தன்மை)
And the Blessed One addressed the bhikkhus, saying: "Bhikkhus, it is through not realizing, through not penetrating the Four Noble Truths that this long course of birth and death has been passed through and undergone by me as well as by you. What are these four? They are the noble truth of suffering; the noble truth of the origin of suffering; the noble truth of the cessation of suffering; and the noble truth of the way to the cessation of suffering. But now, bhikkhus, that these have been realized and penetrated, cut off is the craving for existence, destroyed is that which leads to renewed becoming, and there is no fresh becoming."
2.3. இவ்வாறு பகவர் கூறினார். அந்த மகிழ்ச்சியானவர், ஆசான். மேலும் கூறியதாவது:
நான்கு பேருண்மைகளைக் காணாததால்
பிறப்பு, மறுபிறப்பு என்று ஒரு நீண்ட சோர்வான பாதையில் சென்றோம்.
அவற்றை அறிந்த பின், மறுபிறப்புக்கான காரணம் நீக்கப்பட்டு விட்டது,
துக்கத்தின் அடிவேர் பிடுங்கப்பட்டு விட்டது; அதனால் மறுபிறப்பும் முடிவுற்றது.
2.4. மேலும் கொடிகாமத்தில் பகவர் பிக்குகளுக்கு அடிக்கடி தந்த அறிவுரையானது:
"ஒழுக்கம் (சீலம்) இப்படிப்பட்டது; மனஒருமைப்பாடு (சமாதி) இப்படிப்பட்டது; மெய்ஞ்ஞானம் (பஞ்ஞா) இப்படிப்பட்டது. நல்லொழுக்கம் படிந்த மனஒருமைப்பாட்டிற்குப் பெரும் பேறும் நன்மையும் கிடைக்கும்; மனஒருமைப்பாடு படிந்த மெய்ஞ்ஞானத்திற்கு பெரும் பேறும் நன்மையும் கிடைக்கும்; மெய்ஞ்ஞானம் படிந்த கறையற்ற மனம், காமம், பவம், அறியாமை ஆகியவற்றிலிருந்து முழுமையாக விடுபட்டு விடும்."
2.5. பகவர் கோடிகாமத்தில் விரும்பிய நாட்கள் இருந்த பிறகு அவர் போற்றுதற்குரிய ஆனந்தரிடம்: "வா, ஆனந்தா, நாம் நதிகாவிற்குச் (Nadika) செல்வோம்."
"அப்படியே ஆகட்டும், அண்ணலே."
பின் ஒரு பெரும் பிக்கு சமூகத்துடன் பகவர் நதிகாவில் செங்கல் வீட்டில் [1] தங்கலானார்.
குறிப்பாக பெற்ற நான்கு பேறுகள்
The Four Specific Attainments
2.6. பின் போற்றுதற்குரிய ஆனந்தர் பகவரை அனுகி, அவரை மரியாதையுடன் வணங்கி ஒரு புறமாக அமர்ந்தார். பின் அவர் பகவரிடம்: "அண்ணலே, இங்கு நதிகாவில் பிக்கு சல்ஹரும் (Salha) பிக்குணி நந்தரும் (Nanda) காலமாகிவிட்டனர். அதுபோல இல்லறத்தார் சுதத்தரும் (Sudatta) இல்லறப் பெண்மணி சுஜாதரும் (Sujata) காலமாகிவிட்டனர்; அதுபோல இல்லறத்தார் ககுத்தர் (Kakudha), கலிங்கர் (Kalinga), நிகத்தர் (Nikata), கதிசப்பர் (Katissabha), துத்ஹர் (Tuttha), சன்துத்தர் (Santuttha), பத்தர் (Bhadda) மற்றும் சுபத்தர் (Subhadda) ஆகியோரும் காலமாகியுள்ளனர். அவர்களின் விதி என்ன அண்ணலே? அவர்கள் மறுமையில் எங்கு பிறந்தனர்?
2.7. "ஆனந்தா, பிக்கு சல்ஹர் மாசுக்களை அழித்துவிட்டு, மாசுகலற்று, விடுபட்ட மனத்துடன், மெய்ஞானத்தால் விடுவிக்கப்பட்ட மனத்துடன், தாமே அறிந்து, நேரடியாக உணர்ந்து வாழ்ந்தார். அவர் இந்த வாழ்விலேயே நிப்பாண நிலையை அடைந்துவிட்டவர். (அறஹந்தர் Arahant) [2]
"பிக்குணி நந்தர் முதல் ஐந்து கீழான தளைகளை [3] அழித்துவிட்டார் (புலனுலகுக்கு பற்றுக் கொள்ள வைக்கும் ஐந்து தளைகள்). அவர் தூய தேவ உலகில் (in the Pure Abodes) மறுபிறப்பெடுத்துள்ளார். அங்கேயே இருந்து பூரண விடுதலை (நிப்பாணம்) பெறுவார். அவர் அந்த உலகிலிருந்து திரும்பமாட்டார். " ( அனாகாமி நிலை non-returner)
"ஆனந்தா, இல்லறத்தார் சுதத்தர் மூன்று தளைகளை அழித்து விட்டு (ஆத்துமா நம்பிக்கை -தொடர்ந்து மாற்றமில்லா 'நான்' இருப்பதாக உள்ள நம்பிக்கை, ஐயம், சாங்கியம், சடங்குகள் ஆகியவற்றை தவறாகப் புரிந்து கொள்ளல்) மேலும் காமம், வெகுளி, மயக்கம் ஆகியவற்றின் பலத்தையும் குறைத்துள்ளபடியால் ஒருமுறை மட்டுமே மறுபிறப்பெடுப்பார். அவர் ஒரு முறை மட்டுமே மறுபிறப்பெடுத்து அந்தப் பிறப்பு முடிவதற்குள் துக்க முடிவைக் காண்பார். (ஸகாதாகாமி once-returner)
"ஆனந்தா, இல்லறப் பெண் சுஜாதா மூன்று தளைகளை அழித்து விட்டு 'சோதாபத்தி' நிலையை அடைந்து விட்டார் (ஓடையில் நுழைவது stream-enterer). கீழான பிறப்புகளில் (அசுர, பூத, மிருக, நரக உலகங்களில்) பிறப்பதிலிருந்து தப்பித்து விட்டார். அவர் ஞானம் பெறுவது உறுதி.
"ஆனந்தா, இல்லறத்தார் ககுத்தர் ஐந்து கீழான தளைகளை அழித்து விட்டார். அவர் தூய தேவ உலகில் (in the Pure Abodes) மறுபிறப்பெடுத்துள்ளார். அங்கேயே இருந்து பூரண விடுதலை (நிப்பாணம்) பெறுவார். அவர் அந்த உலகிலிருந்து திரும்ப மாட்டார். " ( அனாகாமி நிலை non-returner)
"அதுபோலவே கலிங்கர் (Kalinga), நிகத்தர் (Nikata), கதிசப்பர் (Katissabha), துத்ஹர் (Tuttha), சன்துத்தர் (Santuttha), பத்தர் (Bhadda) மற்றும் சுபத்தர் (Subhadda) ஆகியோரும் மேலும் நதிகாவிலுள்ள ஐம்பது இல்லறத்தாரும். மேலும் நதிகாவில் இறந்த தொண்ணூறுக்கும் மேலான இல்லறத்தார் மூன்று தளைகளை அழித்து மேலும் காமம், வெகுளி, மயக்கம் ஆகியவற்றின் பலத்தையும் குறைத்துள்ளபடியால் ஒருமுறை மட்டுமே மறுபிறப்பெடுப்பார்கள். அந்தப் பிறப்பு முடிவதற்குள் துக்க முடிவைக் காண்பார்கள். (ஸகாதாகாமி once-returner)
"மேலும் ஆனந்தா, நதிகாவில் இறந்த ஐநூறுக்கும் மேலான இல்லறதார் மூன்று தளைகளை முழுமையாக அழித்து விட்டு 'சோதாபத்தி' நிலையை அடைந்துவிட்டார்கள். கீழான பிறப்புகளில் (அசுர, பூத, மிருக, நரக உலகங்களில்) பிறப்பதிலிருந்து தப்பித்து விட்டார்கள். அவர்கள் ஞானம் பெறுவது உறுதி.
தம்மம் பிரதிபளிக்கும் கண்ணாடி
The Mirror of the Dhamma
2.8. "ஆனந்தா, மனிதர்கள் இறப்பது என்பது ஆச்சரியமான விஷயமே அல்ல. ஆனால் ஒவ்வொரு இறப்பின் பின்னரும் நீ ததாகதரிடம் வந்து இவ்வாறு அவர்களின் மறுமையைப்பற்றிக் கேட்பாயானால் அது அவருக்குத் தொந்தரவாக இருக்கும். எனவே ஆனந்தா, தம்மத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியைப் பற்றி ஒரு போதனையைத்தருகிறேன். இந்தப் போதனையை அறிந்த மேன்மையான சீடர், விருப்பப்பட்டால் அவர்களே தங்களைபற்றிச் தெரிந்து கொள்ளலாம்: 'எனக்கு இனிமேல் கீழுலகங்களில் பிறப்பில்லை. நரகத்திலோ, மிருகமாகவோ பூதமாகவோ அல்லது வேறு எந்தத் துயரம் உள்ள உலகத்திலோ நான் மறுபிறப்பெடுக்கப்போவதில்லை. நான் ஒரு 'சோதாபத்தி' (ஓடையில் நுழைவது stream-enterer) கீழான பிறப்பிலிருந்து தப்பித்து விட்டேன். ஞானம் பெறுவது உறுதி.'"
"But truly, Ananda, it is nothing strange that human beings should die. But if each time it happens you should come to the Tathagata and ask about them in this manner, indeed it would be troublesome to him. Therefore, Ananda, I will give you the teaching called the Mirror of the Dhamma, possessing which the noble disciple, should he so desire, can declare of himself: 'There is no more rebirth for me in hell, nor as an animal or ghost, nor in any realm of woe. A stream-enterer am I, safe from falling into the states of misery, assured am I and bound for Enlightenment.'"
2.9. "ஆனந்தா, அது என்ன 'தம்மத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி'? அதை அறிந்த மேன்மையான சீடர் தம்மைப் பற்றி இவ்வாறு எப்படிச் சொல்லிக் கொள்ள முடிகிறது? [4]
"And what, Ananda, is that teaching called the Mirror of Dhamma, possessing which the noble disciple may thus declare of himself?
"ஆனந்தா இவ்வாறு தான் இனிமேல் கீழான பிறப்பெடுக்கபோவதில்லை என்று சொல்லிக் கொள்ளும் மேன்மையான சீடர் புத்தர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார்:
'பகவர் ஒரு அரஹந்தர். சுய முயற்சியினால் முழுமையாக விழிப்புற்றவர், முழுமையான அறிவும் நடத்தையும் கொண்டவர், நல்ல வழியில் சென்ற மகிழ்ச்சியானவர், பிரபஞ்சத்தை அறிந்தவர், கற்பிக்கக்கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆசிரியரானவர்; விழிப்புற்றவர்; ஆசிர்வதிக்கப்பட்டவர்.'
"In this case, Ananda, the noble disciple possesses unwavering faith in the Buddha thus: 'The Blessed One is an Arahant, the Fully Enlightened One, perfect in knowledge and conduct, the Happy One, the knower of the world, the paramount trainer of beings, the teacher of gods and men, the Enlightened One, the Blessed One.'
அந்த மேன்மையான சீடர் தம்மம் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார்: 'பகவர் அவர் தம்மத்தை நன்கு விவரமாக விளக்கிக் கூறியிருக்கிறார். இப்போதே இங்கேயே காணக்கூடிய தம்மம், கால வரையற்றது . அனைவரையும் வரவேற்று, பார்த்து அறிந்து கொள்ள அழைக்கிறது ஆன்மீகத்தை வளர்க்கிறது, அறிவுள்ளவர் தாங்களாகவே புரிந்து கொள்ளக் கூடியது.'
"He possesses unwavering faith in the Dhamma thus: 'Well propounded by the Blessed One is the Dhamma, evident, timeless, inviting investigation, leading to emancipation, to be comprehended by the wise, each for himself.'
அந்த மேன்மையான சீடர் சங்கத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளார்:
'பகவரின் சங்கம் சிறப்பாகப் பயிற்சி செய்துள்ளனர், நேர்த்தியாகப் பயிற்சி செய்துள்ளனர், முறையாகப் பயிற்சி செய்துள்ளனர், ஒழுங்காகப் பயிற்சி செய்துள்ளனர்: அதாவது நான்கு ஜோடிகள் - எட்டு வகையான - மேன்மையானோர்; அவர்களே ஆசிர்வதிக்கப் பட்டவரின் சங்கம். அவர்கள் நன்கொடை பெறத் தகுதியானவர்கள், அவர்கள் உபசரிக்கத் தகுதியானவர்கள், பரிசு பெறத் தகுதியானவர்கள், மதிக்கத் தக்கவர்கள். உலகில் புண்ணியம் செய்ய ஒப்பில்லாச் சந்தர்ப்பம் இது.'
"He possesses unwavering faith in the Blessed One's Order of Disciples thus: 'Well faring is the Blessed One's Order of Disciples, righteously, wisely, and dutifully: that is to say, the four pairs of men, the eight classes of persons. The Blessed One's Order of Disciples is worthy of honor, of hospitality, of offerings, of veneration — the supreme field for meritorious deeds in the world.'
'மேலும் அந்தச் சீடர் மேன்மையானோர் போற்றும் நற்பண்புகளை உடையவராவார். அவை முழுமையானவை, பிழையற்றவை, கறைபடியாதவை, தூய்மையானவை. அறிவுடையவர் போற்றுபவை, (உலக நிகழ்ச்சிகளால்) பாதிக்கப்படாதவை மன ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை.'
"And he possesses virtues that are dear to the Noble Ones, complete and perfect, spotless and pure, which are liberating, praised by the wise, uninfluenced (by worldly concerns), and favorable to concentration of mind.
"இதுவே அனந்தா, 'தம்மத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி' என்ற போதனை. இதைக் கொண்டு மேன்மையான சீடர் தங்களைப்பற்றி இதனைத்தெரிந்து கொள்ளலாம்: 'எனக்கு இனிமேல் கீழுலகங்களில் பிறப்பில்லை. நரகத்திலோ, மிருகமாகவோ பூதமாகவோ அல்லது வேறு எந்த துயரம் உள்ள உலகத்திலோ நான் மறுபிறப்பெடுக்கப் போவதில்லை. நான் ஓடையில் நுழைந்தவன் (சோதாபத்தி stream-enterer) கீழான பிறப்பிலிருந்து தப்பித்து விட்டேன். ஞானம் பெறுவது உறுதி.'"
"This, Ananda, is the teaching called the Mirror of the Dhamma, whereby the noble disciple may thus know of himself: 'There is no more rebirth for me in hell, nor as an animal or ghost, nor in any realm of woe. A stream-enterer am I, safe from falling into the states of misery, assured am I and bound for Enlightenment.'"
2.10. மேலும் நதிகாவில், அந்தச் செங்கல் வீட்டில் பகவர் பிக்குகளுக்கு அடிக்கடி தந்த அறிவுரையானது: "ஒழுக்கம் (சீலம்) இப்படிப்பட்டது; மனஒருமைப்பாடு (சமாதி) இப்படிப்பட்டது; மெய்ஞ்ஞானம் (பஞ்ஞா) இப்படிப்பட்டது. நல்லொழுக்கம் படிந்த மனஒருமைப்பாட்டிற்கு பெரும்பேறும் நன்மையும் கிடைக்கும்; மனஒருமைப்பாடு படிந்த மெய்ஞ்ஞானத்திற்கு பெரும்பேறும் நன்மையும் கிடைக்கும்; மெய்ஞ்ஞானம் படிந்த கறையற்ற மனம், காமம், பவம், அறியாமை ஆகியவற்றிலிருந்து முழுமையாக விடுபட்டு விடும்."
2.11. பகவர் நதிகாவில் விரும்பிய நாட்கள் இருந்த பிறகு அவர் போற்றுதற்குரிய ஆனந்தரிடம்: "வா, ஆனந்தா, நாம் வைசாலி (Vesali) செல்வோம்."
"அப்படியே ஆகட்டும், அண்ணலே."
பின் ஒரு பெரும் பிக்கு சமூகத்துடன் பகவர் வைசாலில் அம்பபாலியின் மாந்தோப்பில் தங்கலானார்.
நற்கடைப்பிடியும் தெளிவான அறிதலும்
Mindfulness and Clear Comprehension
2.12. பின் பகவர் துறவிகளிடம், "தெளிவான அறிதலோடு கவனத்துடன் வாழவேண்டும் துறவிகளே; நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இது," என்றார்.
Then the Blessed One addressed the bhikkhus, saying: "Mindful should you dwell, bhikkhus, clearly comprehending; thus I exhort you.
"பிக்குகளே, ஒரு பிக்கு எவ்வாறு கவனத்துடன் இருப்பது?
இங்கே பிக்கு ஒருவர், ஆர்வத்துடன் பொருள்களைத் தெளிவாக அறிந்து, கடைப்பிடியோடு,
உடலின் சேட்டைகளை, உடல்மீது விருப்போ வெறுப்போ இன்றி அவதானித்துக் கொண்டிருக்க வேண்டும்.
வேதனை (உணர்ச்சி) உலகத்தில் விருப்போ வெறுப்போ இன்றி அவற்றை அவதானித்துக் கொண்டிக்க வேண்டும்.
மன உலகத்தில் விருப்போ வெறுப்போ இன்றி, சித்தவிருத்திகளை அவதானித்துக் கொண்டிக்க வேண்டும்.
மானசிகப் பொருள்கள் மீது விருப்போ வெறுப்போ இன்றி அவற்றை அவதானித்துக் கொண்டிக்க வேண்டும்.
இவ்வாறு வாழும் துறவி கவனத்துடன் (கடைப்பிடியுடன் - செய்யும் காரியத்தை கடைபிடித்திருப்பது) வாழ்கிறார் எனலாம்.
"And how, bhikkhus, is a bhikkhu mindful? When he dwells contemplating the body in the body, earnestly, clearly comprehending, and mindfully, after having overcome desire and sorrow in regard to the world; and when he dwells contemplating feelings in feelings, the mind in the mind, and mental objects in mental objects, earnestly, clearly comprehending, and mindfully, after having overcome desire and sorrow in regard to the world, then is he said to be mindful.
2.13 "பிக்குகளே, ஒரு பிக்கு எவ்வாறு தெளிவான அறிதலோடு இருப்பது? 'பிக்குவானவர் முன்னே செல்லும்போதும், பின்னே செல்லும்போதும், நேராகப் பார்க்கும்போதும், பக்கத்துக்குப் பக்கம் பார்க்கும் போதும், குனியும்போதும், நிமிரும் போதும், சீவரம் அணியும்போதும், பாத்திரம் எடுத்துச் செல்லும்போதும், உண்ணும் போதும், குடிக்கும் போதும், மெல்லும்போதும், சுவைக்கும்போதும், மலசலவிமோசனஞ் செய்யும்போதும், நடக்கும் போதும், இருக்கும் போதும், நிற்கும் போதும், உட்கார்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும் போதும், தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும், பேசும்போதும், பேசாதிருக்கும்போதும், இவை எல்லா விஷயங்களிலும் அவர் முழு அவதானமுடையவராக இருக்கின்றார். இவ்வாறு அவர் தெளிவான அறிதலோடு வாழ்கின்றார்.
"And how, bhikkhus, does a bhikkhu have clear comprehension? When he remains fully aware of his coming and going, his looking forward and his looking away, his bending and stretching, his wearing of his robe and carrying of his bowl, his eating and drinking, masticating and savoring, his defecating and urinating, his walking, standing, sitting, lying down, going to sleep or keeping awake, his speaking or being silent, then is he said to have clear comprehension.
"தெளிவான அறிதலோடு, கவனத்துடன் வாழவேண்டும் துறவிகளே; நான் உங்களுக்கு தரும் அறிவுரை இது." [5]
"Mindful should you dwell, bhikkhus, clearly comprehending; thus I exhort you."
அம்பபாலியும் லிச்சவியரும்
Ambapali and the Licchavis
2.14. பின் அம்பபாலி என்னும் கணிகை இவ்வாறு தெரியவந்தாள்: "புத்தர் வைசாலி வந்திருப்பதாகவும் தற்போது தனது மாந்தோப்பில் தங்கியிருப்பதாகவும் கூறுகின்றனர்."
அவள் பல அருமையான வண்டிகளை வரவழைக்கக் கட்டளையிட்டாள். பின் அதில் ஒன்றில் ஏறி, மற்ற வண்டிகளோடு வைசாலியிலிருந்து தனது மாந்தோப்பு நோக்கிச் சென்றாள். வண்டி போகக் கூடிய தூரம் சென்றபின் இறங்கி; நடந்த வண்ணம் பகவரை அணுகி அவருக்கு மரியாதை செலுத்தி வாழ்த்துப் பரிமாற்றம் செய்து கொண்டு ஒருபுறமாக அமர்ந்தாள். பகவர் அம்பபாலி என்ற கணிகைக்குத் தம்ம போதனை நிகழ்த்தி அவளை ஊக்குவித்து, பலப்படுத்தி, மகிழ்வித்தார்.
அதன் பின்னர் அம்பபாலி என்ற கணிகை பகவரிடம்: "அண்ணலே! பகவர் எனது அழைப்பை ஏற்றுத் தாங்களும் பிக்கு சங்கத்தாரும் நாளைய உணவு தானத்திற்கு எனது இல்லத்துக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றால். பகவர் மௌனமாக இருந்து தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.
பகவர் அழைப்பை ஏற்றுக் கொண்டார் என்பது உறுதியானதும் தனது இருக்கையிலிருந்து எழுந்து, மரியாதையுடன் வணங்கி, தனது வலது பக்கமாக அவர் இருக்க அங்கிருந்து புறப்பட்டாள்.
2.15. பின் வைசாலியில் உள்ள லிச்சவியர் இவ்வாறு தெரியவந்தனர்: "புத்தர் வைசாலி வந்திருப்பதாகவும் தற்போது அம்பபாலியின் மாந்தோப்பில் தங்கியிருப்பதாகவும் கூறுகின்றனர்." அவர்கள் பல அருமையான வண்டிகளை வரவழைத்து, ஒவ்வொருவரும் ஒன்றில் ஏறி, மற்ற வண்டிகளோடு வைசாலியிலிருந்து வெளியே சென்றனர். லிச்சவியருள் சிலர் நீல நிற ஆடைகளும் ஆபரணங்களும் அணிந்திருந்தனர். நீல நிற ஒப்பனைப்பொருட்களையும் பூசிக்கொண்டிருந்தனர். [6] மற்றவர்கள் மஞ்சல் நிறத்திலும், சிவப்பு, வெள்ளை நிற ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்திருந்தனர்.
2.16. தற்செயலாக அம்பபாலி அந்த இளைய லிச்சவியர்கள் அருகாக தனது வண்டியில் வர, வண்டி அச்சோடு அச்சாக, சக்கரத்தோடு சக்கரமாக, நுகத்தடியோடு நுகத்தடியும் இணையாக ஒருசேர ஓட்டிக் கொண்டு வந்தனர். இதன் காரணமாக லிச்சவியர்: "எங்களுக்கு இணையாக ஏன் இப்படி ஓட்டிக் கொண்டு வருகிறாய், அம்பபாலி?" என்று கேட்டனர்.
"இப்படித்தான் இளவரசர்களே. வேறெப்படியும் இல்லை! பகவர் என் அழைப்பை ஏற்று நாளை எனது உணவு தானத்திற்காகத் தனது பிக்கு சங்கத்துடன் வருகிறார்!"
"உணவு தானத்தை விட்டுவிடு அம்பபாலி, நூறாயிரம் தருகிறோம்!"
ஆனால் அவள்: "ஐயன்மீர், வைசாலி நகரோடு அதைச் சுற்றியுள்ள, வைசாலிக்குக் கப்பம் கட்டும் நிலங்களையும் நீங்கள் தந்தாலும், இந்த முக்கியமான உணவு தானத்தை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்."
இதைக் கேட்ட லிச்சவியர்கள் தங்கள் விரல்களைச் சொடுக்கி, (சற்று போலிச்) சினத்துடன்: "பார்த்தீரா நண்பர்களே! இந்த சின்ன மாங்காய் நம்மைத் தோற்கடித்து விட்டாள்! இந்த சின்ன மாங்காய் நம்மை முழுமையாக விஞ்சி விட்டாள்!" ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அம்பபாலியின் தோப்பை நோக்கிச் சென்றனர். [7]
2.17. தூரத்திலிருந்து லிச்சவியர் வருவதைக் கண்ட பகவர் பிக்குகளிடம், "உங்களுள் எவரெல்லாம் முப்பத்தி மூன்று தேவர்களை இதுவரை காணாதவர்களோ, அவர்களெல்லாம் இந்த லிச்சவியர் கூட்டத்தைப் பாருங்கள். கண்கொள்ளாக் காட்சி இது. ஏனென்றால் இவர்களை முப்பத்தி மூன்று தேவர்களோடு ஒப்பிடலாம்."
2.18. பின் லிச்சவியர்கள் தங்கள் வண்டிகள் செல்லக் கூடிய தூரம் வரை சென்றபின் இறங்கி நடந்த வண்ணம் பகவரை அணுகி, அவருக்கு மரியாதை செலுத்தி வாழ்த்துப் பரிமாற்றம் செய்த பின் ஒருபுறமாக அமர்ந்தனர். பகவர் லிச்சவியர்களுக்கு தம்ம போதனை நிகழ்த்தி அவர்களை ஊக்குவித்துப் பலப்படுத்தி மகிழ்வித்தார்.
அதன் பின்னர் லிச்சவியர்கள் பகவரிடம்: "அண்ணலே! பகவர் எங்களது அழைப்பை ஏற்று தாங்களும் பிக்கு சங்கத்தாரும் சேர்ந்து நாளைய உணவு தானத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்."
பகவர், "நாளைய உணவுக்காக அம்பபாலி என்ற கணிகையின் அழைப்பை நான் ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டேன்," என்று பதிலளித்தார்.
இதைக் கேட்ட லிச்சவியர்கள் தங்கள் விரல்களைச் சொடுக்கி (சற்று போலிச்) சினத்துடன்: "பார்த்தீரா நண்பர்களே! இந்த சின்ன மாங்காய் நம்மைத் தோற்கடித்து விட்டாள்! இந்த சின்ன மாங்காய் நம்மை முழுமையாக விஞ்சி விட்டாள்!" பின் லிச்சவியர்கள் பகவரின் வார்த்தைகளை அங்கீகரித்தவர்களாக, பெரு மகிழ்ச்சியுடன் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து, மரியாதையுன் வணங்கி, அவர்களது வலது பக்கமாகப் பகவர் இருக்க, அங்கிருந்து விடைபெற்றனர்.
2.19. பின் இரவு கழிந்ததும், அம்பபாலி என்ற கணிகை பல வகையான விரும்பத்தக உணவுகளை, கடினமான மற்றும் மிருதுவான உணவுகளைத் தனது தோப்பில் தயாரித்து பகவரிடம் சென்று அறிவித்தாள்: "நேரம் வந்து விட்டது அண்ணலே, உணவு அருந்த வாருங்கள்." பின் பகவர் முற்பகல் நேரத்தில் எழுந்து, தனது பிச்சாபாத்திரத்தையும் மேலுடையையும் எடுத்துக்கொண்டு சங்கத்தினருடன் அம்பபாலியின் இருப்பிடம் சென்று அவருக்கென்று அமைக்கப் பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். அம்பபாலி தானே புத்தர் தலைமையிலிருந்த சங்கத்தாரைக் கவனித்து விரும்பத்தக உணவுகளை, கடினமான மற்றும் மிருதுவான உணவுகளைப் பரிமாறினாள்.
பகவர் உண்பதை முடித்து பாத்திரத்திலிருந்து கையை எடுத்த பிறகு, அம்பபாலி என்ற கணிகை தாழ்வான இருக்கையில் ஒரு புறமாக அமர்ந்து பகவரிடம், "புத்தரின் தலைமையிலுள்ள இந்த சங்கத்தாருக்கு இந்த மாந்தோப்பைத் தானமாக அளிக்கின்றேன்," என்றாள். பகவர் அந்த தோப்பினை ஏற்றுக்கொண்டார். பின் பகவர் அம்பபாலி என்ற கணிகைக்கு தம்ம போதனை நிகழ்த்தி அவளை ஊக்குவித்து, பலப்படுத்தி, மகிழ்வித்தார். அதன் பின் தன் இருக்கையிலிருந்து எழுந்து அங்கிருந்து விடைபெற்றார்.
2.20. மேலும் வைசாலியில், அம்பபாலி தோப்பில் பகவர் பிக்குகளுக்கு அடிக்கடி தந்த அறிவுரையானது: "ஒழுக்கம் (சீலம்) இப்படிப்பட்டது; மனஒருமைப்பாடு (சமாதி) இப்படிப்பட்டது; மெய்ஞ்ஞானம் (பஞ்ஞா) இப்படிப்பட்டது. நல்லொழுக்கம் படிந்த மனஒருமைப்பாட்டிற்கு பெரும்பேறும் நன்மையும் கிடைக்கும்; மனஒருமைப்பாடு படிந்த மெய்ஞ்ஞானத்திற்கு பெரும்பேறும் நன்மையும் கிடைக்கும்; மெய்ஞ்ஞானம் படிந்த கறையற்ற மனம், காமம், பவம், அறியாமை ஆகியவற்றிலிருந்து முழுமையாக விடுபட்டு விடும்."
2.21. பகவர் அம்பபாலி தோப்பில் விரும்பிய நாட்கள் இருந்த பிறகு அவர் போற்றுதற்குரிய ஆனந்தரிடம்: "வா, ஆனந்தா, நாம் பேளுவ (Beluva) கிராமத்துக்குச் செல்வோம்" என்றார்.
"அப்படியே ஆகட்டும், அண்ணலே."
பின் ஒரு பெரும் பிக்கு சமூகத்துடன் பகவர் பேளுவ (Beluva) கிராமத்தில் தங்கலானார்.
பகவருக்கு உண்டான கடுமையான நோய்
The Blessed One's Deadly Sickness
2.22. அச்சமயம் பகவர் பிக்குகளிடம்: "பிக்குகளே, நீங்கள் புறப்படுங்கள். வைசாலி அருகில் நீங்கள் வரவேற்கப்படும் இடங்களுக்குச் சென்று, தெரிந்தவர்கள் நண்பர்கள் ஆகியோர் மத்தியில் மழைக்காலத்தைக் கழியுங்கள். நான் இந்த மழைக்காலத்தை இங்கேயே, பேலுவ கிராமத்திலேயே இருக்கப்போகிறேன்." (மழைக்காலத்தில் துறவிகள் ஒரே இடத்தில் தங்கியிருப்பது பௌத்த மரபு)
"அப்படியே ஆகட்டும், அண்ணலே," என்று பதிலுரைத்தனர் பிக்குகள்.
2.23. ஆனால் மழைக்காலம் தொடங்கிய போது, பகவருக்குக் கடுமையான நோய் உண்டானது. பல கூர்மையான வலியும், மரணவேதனையும் உண்டானது. அவற்றைப் பகவர் நிதானமாக மனங்கலங்காமல் உள்ளதை உள்ளபடி பார்த்தவாறு சகித்துக்கொண்டார்.
பின் இந்த எண்ணம் பகவருக்குத் தோன்றியது: "எனக்குத் தொண்டு செய்தவர்களிடம் உரைக்காமல், பிக்கு சமூகத்திடம் விடைபெறுவதற்கு முன்பு நான் இறுதியாக மறைவது பொருத்தமாகாது. எனவே இந்த நோயை மனவலிமை கொண்டு அடக்கி, உயிர்ச்செயற்றொடரைக் காப்பாற்றித் தொடர்ந்து வாழவேண்டும்."
பின் பகவர் அந்த நோயை தனது மனவலிமையோடு அடக்கி, உயிர்ச்செயற்றொடரைக் காப்பாற்றி தொடர்ந்து வாழ்ந்தார்.
2.24. பகவர் நோயிலிருந்து குணமடைந்தார்; குணமடைந்தபின் தனது குடிலிலிருந்து வெளிவந்து அவர் குடிலின் முன் தனக்கென்று அமைக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். போ. ஆனந்தர் பகவரிடம் சென்று மரியாதையுடன் வணங்கி ஒரு புறமாக அமர்ந்து பகவரிடம்: "அண்ணலே, பகவர் தொல்லைப்படாமல் இருப்பதைக் காண்பது எனது பாக்கியம்! பகவர் முழுமையாகக் குணமடைந்ததைக் காண்பதற்கு நான் கொடுத்து வைத்தவன்! உண்மையில் அண்ணலே, பகவரின் நோயைக்கண்டு எனது உடல் ஒரு கொடியைப் போலப் பலவீனமாகிவிட்டது. சுற்றிலும் இருண்டு விட்டது. எனது புலன்களும் என்னைக் கைவிட்டுவிட்டன. ஆனாலும் பகவர் பிக்கு சங்கத்தைப் பற்றி ஏதேனும் கூறாமல் பரிநிப்பாணம் அடைய மாட்டர் என்ற நம்பிக்கை சற்று இருந்தது." [8]
2.25. இப்படிக் கூறிய ஆனந்தரிடம் பகவர் இவ்வாறு பதிலளித்தார்: "பிக்கு சமூகம் வேறென்ன என்னிடமிருந்து எதிர்பார்க்கின்றனர், ஆனந்தா? வெளிப்படையான அல்லது மறைமுகமான போதனைகளென்று பாகுபாடு செய்யாமல் தம்மத்தைப் போதித்திருக்கின்றேன்; பொத்தி வைத்த கையைக்கொண்ட ஆசிரியர் சில விஷயங்களை மறைத்து வைத்திருப்பது போல, கடைசி வரை மறைந்துள்ள போதனைகள் எதுவும் என்னிடம் இல்லை, ஆனந்தா. எவரொருவர் ஒரு பிக்கு சங்கத்தைத் தான் தான் தலைமை தாங்க வேண்டும் என்றோ அல்லது சங்கம் தன்னை நம்பியிருக்க வேண்டும் என்று நினைக்கின்றாரோ அவர் தான் அவர்களை மதித்து அறிவுரைகளைக்கூற வேண்டியிருக்கும். ஆனால் ததாகதருக்கு அத்தகைய எண்ணம் - நான் தான் சங்கத்தலைவனாக இருக்கவேண்டும், சங்கம் என்னைத்தான் நம்பியிருக்கவேண்டும் - என்ற எண்ணம் இல்லை. அதனால் பிக்குசங்கத்தைப் பற்றி மேலும் என்ன அறிவுரைகளைக் கூறுவது?
"நான் இப்போது மெலிந்துவிட்டேன் ஆனந்தா. முதுமையும், அதிக வயதையும் எட்டி விட்டேன். இது எனது எண்பதாவது வருடம். எனது வாழ்வு முடிந்து விட்டது. ஆனந்தா, ஒரு பழைய வண்டி கஷ்டப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டு ஓட்டப்படுவது போல ததாகதரின் உடலும் ஆதரவுகளோடு (ஊன்றுகோல் முதலியன) தான் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ததாகதர் புறப் பொருட்களை மனத்தில் கொள்ளாமல், சில உணர்ச்சிகள் மறைந்து மன ஒருமைப்பாட்டில் இருக்கும் போது மட்டுமே இந்த உடல் தொல்லை தராமல் வசதியாக இருக்கிறது. (ஆழ்ந்த மனஒருமைப்பட்டில் - தியான நிலையில் மட்டுமே உடல் வலி தெரிவதில்லை என்கிறார்.)
2.26. "எனவே ஆனந்தா, உங்களுக்கு நீங்களே தீவாக [9] இருக்க வேண்டும், உங்களுக்கு நீங்களே அடைக்கலமாக இருக்க வேண்டும். புற அடைக்கலம் தேட வேண்டாம்; தம்மம் உங்கள் தீவாகட்டும், தம்மம் உங்கள் அடைக்கலமாகட்டும், வேறு அடைக்கலம் தேடவேண்டாம்.
"Therefore, Ananda, be islands unto yourselves, refuges unto yourselves, seeking no external refuge; with the Dhamma as your island, the Dhamma as your refuge, seeking no other refuge.
"ஆனந்தா ஒரு பிக்கு தனக்குத்தானே ஒரு தீவாக இருக்கின்றார், ஒரு அடைக்கலமாக இருக்கின்றார், வேறு புற அடைக்கலம் தேடவில்லை; தம்மம் அவருக்குத் தீவாக இருக்கிறது, தம்மம் அவருக்கு அடைக்கலமாக இருக்கிறது, அவர் வேறு அடைக்கலம் நாடவில்லை என்று எவ்வாறு கூறுவது?"
"And how, Ananda, is a bhikkhu an island unto himself, a refuge unto himself, seeking no external refuge; with the Dhamma as his island, the Dhamma as his refuge, seeking no other refuge?
ஒரு பிக்கு உடலை உடலினால் கவனித்து, ஆர்வத்துடன் பொருள்களைத் தெளிவாக அறிந்து, கடைப்பிடியோடு, உடலின் சேட்டைகளை, உடல்மீது விருப்போ வெறுப்போ இன்றி அவதானித்துக் கொண்டிருந்தால்,
வேதனை (உணர்ச்சி) உலகத்தில் விருப்போ வெறுப்போ இன்றி அவற்றை அவதானித்துக் கொண்டிருந்தால்,
மன உலகத்தில் விருப்போ வெறுப்போ இன்றி, சித்தவிருத்திகளை அவதானித்துக் கொண்டிருந்தால்,
மானசிகப் பொருள்கள் மீது விருப்போ வெறுப்போ இன்றி அவற்றை அவதானித்துக் கொண்டிருத்தால்
அப்போது உண்மையில் ஒரு பிக்கு தனக்குத்தானே ஒரு தீவாக இருக்கின்றார், ஒரு அடைகலமாக இருக்கின்றார், வேறு புற அடைக்கலம் தேடவில்லை; தம்மம் அவருக்குத் தீவாக இருக்கிறது, தம்மம் அவருக்கு அடைக்கலமாக இருக்கிறது, அவர் வேறு அடைக்கலம் நாடவில்லை என்று கூறலாம்.
"When he dwells contemplating the body in the body, earnestly, clearly comprehending, and mindfully, after having overcome desire and sorrow in regard to the world; when he dwells contemplating feelings in feelings, the mind in the mind, and mental objects in mental objects, earnestly, clearly comprehending, and mindfully, after having overcome desire and sorrow in regard to the world, then, truly, he is an island unto himself, a refuge unto himself, seeking no external refuge; having the Dhamma as his island, the Dhamma as his refuge, seeking no other refuge.
"ஆனந்தா, இப்போது நான் உயிருடன் இருக்கும்போதும், நான் மறைந்தபின்பும் என்னுடைய பிக்குகளில் எவரெல்லாம் தங்களுக்குத் தாங்களே ஒரு தீவாக இருக்கின்றனரோ, ஒரு அடைக்கலமாக இருக்கின்றனரோ, வேறு புற அடைக்கலம் தேடவில்லையோ, தம்மம் அவருக்குத் தீவாக இருக்கின்றதோ, தம்மம் அவருக்கு அடைக்கலமாக இருக்கின்றதோ, அவர் வேறு அடைக்கலம் நாடவில்லையோ: அவர்கள் கற்க ஆர்வம் கொண்டிருந்தால், அவர்கள் தான் உச்சத்தை அடைவார்கள்.
"Those bhikkhus of mine, Ananda, who now or after I am gone, abide as an island unto themselves, as a refuge unto themselves, seeking no other refuge; having the Dhamma as their island and refuge, seeking no other refuge: it is they who will become the highest, if they have the desire to learn."
* * *
விளக்கம் ஆதாரங்கள் (Source for the Notes):
(MW) The long Discourses of the Buddha - A translaton of the Dhigha Nikaya by Maurice Walshe
(TB) Thanisarro Bhikku
[1] "நதிகாவில் செங்கல் வீட்டில்" - பெரும்பாலான வீடுகள் மரத்தில் செய்யப்படிருந்தன. எனவே வேறுபட்டிருந்த இந்த வீட்டிற்கு இவ்வாறு பெயர் சூட்டப்படிருந்தது. Most buildings being of wood, this was exceptional, hence its name. (MW)
[2] The stage of arahatship, the last of the four stages of deliverance. The next three paragraphs refer to disciples on the three lower stages, respectively, the non-returner, once-returner, and stream-enterer (anagami, sakadagami, sotapanna).
பௌத்தக் கொள்கையின்படி ஞானம் பெறும் பாதையில் நான்கு நிலைகள் இருக்கின்றன.
முதலாவது 'சோதாபத்தி' (ஓடையில் நுழைவது stream-enterer). இந்தக் கட்டத்தில் 'நிர்வாண மோட்சம்' முதல் முறையாகக் கண நேரம் தெரிகிறது. நாம் மறு பிறப்பெடுக்கச் செய்யும் சில இடையூறுகள் உடைகின்றன.
ஓடையில் நுழைந்தவர்: ஓடை நீர் எப்படி இறுதியில் கடலில் கலப்பது உறுதியோ, அதே போல இந்த நிலையை அடைந்தவர் நிப்பாணம் அடைவதும் உறுதி. The Pali Canon recognizes four levels of Awakening, the first of which is called stream entry. This gains its name from the fact that a person who has attained this level has entered the "stream" flowing inevitably to nibbana. He/she is guaranteed to achieve full awakening within seven lifetimes at most, and in the interim will not be reborn in any of the lower realms. (TB)
இரண்டாவது 'ஸகாதாகாமிதா' ('ஒரு முறை மட்டும் மறு பிறப்பெடுப்பவரின் நிலை' once-returner). இந்தக் கட்டத்தை அடைந்தவர் இன்னும் ஒரு முறை மட்டுமே மறு பிறப்பெடுப்பார். அந்தப் பிறப்பில் ஞானம் பெறுவார்.
மூன்றாவது 'அனாகாமிதா' (இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார் (non-returner). இந்த நிலை அடைந்தவர் இந்த உலகில் மறுபிறப்பெடுக்க மாட்டார். ஒரு வேலை இந்த வாழ்க்கையில் நோக்கத்தை அடைய வில்லையென்றால் மேல் உலகம் ஒன்றில் மறுபிறப்பெடுத்து அங்கு பயிற்சியை முடித்து நோக்கத்தை அடைந்து விடுவார்.
கடைசியாக நான்காவது நிலை 'அரஹத்தா' (அரஹந்தரின் நிலை). இது தான் பௌத்த மதத்தின் மேலோங்கிய நோக்கம். மனதைத் தூய்மை செய்து மறு பிறப்பெடுக்க வைக்கும் தடைகள் எல்லாம் உடைந்து விட்ட நிலை. இவர்கள் எந்த உலகிலும் மறு பிறப்பெடுக்கமாட்டார்கள்.
[3] பத்து தளைகள் 10 fetters Source (TB)
Sanyojana Sutta: Fetters (saṃyojana: Fetter that binds the mind to the cycle of rebirth )
"There are these ten fetters. Which ten? Five lower fetters & five higher fetters. And which are the five lower fetters? Self-identity views, uncertainty, grasping at precepts & practices, sensual desire, & ill will. These are the five lower fetters. And which are the five higher fetters? Passion for form, passion for what is formless, conceit, restlessness, & ignorance. These are the five higher fetters. And these are the ten fetters."
சன்யோஜணா சூத்திரம்: தளைகள்
(பிறப்பு, இறப்பு, மறுபிறப்பென்ற சம்சார சக்கரத்தினுடன் மனத்தைக் கட்டி வைக்கும் தளைகள்)
"பத்து தளைகள் உள்ளன. எந்தப் பத்து? ஐந்து கீழான தளைகள் மற்றும் ஐந்து மேலான தளைகள்.
ஐந்து கீழான தளைகள் எவை?
1. ஆத்துமா நம்பிக்கை (தொடர்ந்து மாற்றமில்லா 'நான்' இருப்பதாக உள்ள நம்பிக்கை,)
2. ஐயம்,
3. சாங்கியம், சடங்குகள் ஆகியவற்றைத் தவறாகப் புரிந்து கொள்ளல்
4. காமம் (ஆசை)
5. வெகுளி (வெறுப்பு)
ஐந்து மேலான தளைகள் எவை?
6. உருவங்கள் (ரூப) மீது பற்று,
7. அருவங்கள் (அரூப) மீது பற்று,
8. அகம்பாவம்,
9. அமைதியின்றியிருத்தல்,
10. அறியாமை.
இவையே பத்து தளைகள்.
[4] "தம்மைத் தாமே சோதித்துக் கொள்ள உதவும் கண்ணாடி" (MW)
[5] பகவர் துறவிகளுக்கு இங்கு மனக்கவனத்தை வலியுறுத்துவதற்குக் காரணம் விரைவில் அவர்கள் அழகிய அம்பபாலியை சந்திக்கப் போவதன் காரணமாக என்பது புத்தகோஷர் (5ஆம் நூற்றாண்டு) திக நிகாயத்திற்கு எழுதிய சுமங்கலவிலாசினி என்ற உரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. Mindfulness is stressed here because of the approaching encounter with the beautiful Ambapali. (MW)
[6] ஆண்களும் வேவ்வேறு நிற முகப்பூச்சுகளை பூசிக்கொண்டிருந்தனர். Men wore cosmetics of various colours. (MW)
[7] அம்பபாலி என்ற பெயரில் உள்ள அம்ப என்றால் மா, பாலி என்றால் பாதுகாப்பவர். அம்பகா என்றால் பெண். (MW)
A play on amba 'mango' and arnbaka 'woman'. Her name means 'mango-guardian'.
[8] அதாவது தனக்குப் பின்னர் பிக்கு சங்கத்திற்கு யார் தலைமைப் பொருப்பேற்பார் என்ற சந்தேகம் ஆனந்தருக்கும் வேறு பலருக்கும் இருந்திருக்கலாம். அதைப் பற்றி புத்தர் எதேனும் சொல்லாமல் பரி நிப்பாணம் அடைய மாட்டார் என்று பொ. ஆனந்தர் நினைத்திருபார் போலும். "The Lord will not attain final Nibbana until he has made some statement about the order of monks." (MW)
[9] கப்பல் கடலில் மூழ்கிவிட்டால் அதிலிருந்து தப்பிக் கடலில் தவித்துக் கொண்டிருக்கும்
மாலுமிகளுக்கு ஒரு தீவு அடைக்கலமாவதைபோல சம்சார சுழலில் தவித்துக்கொண்டிரும் நமக்கு தம்மமே, நமது பக்குவப்படுத்தப்பட்ட மனமே ஒரு தீவு போன்ற அடைக்கலமாகட்டும் என்கிறார்.
Dipa = Sanskrit. dvipa 'island' rather than Sanskrit. dipa 'lamp'.
But we do not really know whether the Buddha pronounced the two words alike or not! In the absence of such knowledge, it is perhaps best not to be too dogmatic
about the meaning. In any case, it is just 'oneself' that one has to have as one's 'island' (or lamp), not some 'great self' which the Buddha did not teach. (MW)
தீப என்று பகவர் பாலி மொழியில் கூறிய வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் துவீப (தீவு) என்றும் தீப (விளக்கு) என்றும் பொருள் படும் என்பதால் சிலர் 'உங்களுக்கு நீங்களே விளக்காக இருக்கவேண்டும்' என்றும் மொழிபெயர்த்துள்ளனர். எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி. பகவர் இங்கு நமக்கு நாமே தீவாக (அல்லது விளக்காக) இருக்க வேண்டும் என்கிறார். இங்கு நாம் என்பது ஒரு ஆத்துமா'வைக் குறிக்கவில்லை. அப்படிப்பட்ட போதனையை (நாம் = சிறு ஆத்துமா, கடவுள் = பெரும் ஆத்துமா போன்ற போதனைகளை) பகவர் போதிக்கவில்லை.
* * *